Friday, August 31, 2012

சோதனை மேல் சோதனை! போதுமடா சாமி!



சோதனை மேல் சோதனை! போதுமடா சாமி!

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!
காசுலகண் இல்லையின்னா கைமேலே சொம்பு!
மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!

துட்டை மிகத் துச்சமென்று நீ போட்டது!-பெரும்
பட்டை அது நெற்றியின்மேல் யார் போட்டது?
மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!


ஆகாயமார்க்கத்திலே அடிபோகுது-அதை
      அழகாக ஏணிவைச்சு ஜனம்வாங்குது
ஆராச்சும் டூப்புவிட்டா பணங்காசையே-கொண்டு
      ஜோராத்தான் கொடுத்துப்புட்டு தினமேங்குது
அடிமாடு பால்கறக்கும் என நம்புது-பின்னால்
      படிநூறு தினமேறி மனம்வெம்புது

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!

போகாத ஊருக்கெல்லாம் வழி தேடுவார்-சிலர்
      பொய்களுக்கும் உண்மையைப்போல் உறைபோடுவார்
பாகாய்த்தான் பல்லிளித்துப் பலர்பேசுவார்- உங்கள்
      பைபார்த்துத் தந்திரமாய் வலைவீசுவார்
பணங்காசு கொல்லையிலே பழங்காய்க்குமா?
சுணங்காமல் பலமடங்கு பணம்வாய்க்குமா?

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!
காசுலகண் இல்லையின்னா கைமேலே சொம்பு!
மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு!


14 comments:

MARI The Great said...

சோதனை மேல் சோதனை போதுமட சாமி - இந்த பாடல் மெட்டில் படித்து பார்த்தால் செம காமெடியா இருக்கு! :)

btw, கவிதை (?) செம!

சக்தி கல்வி மையம் said...

நக்கல்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா..ஹா...

சேலம் தேவா said...

ஈமூ ஸ்பெஷலா..?! :)

கும்மாச்சி said...

ஹா ஹா செம கலக்கல் சேட்டை.

Kannan.s Space said...

மசாலா கம்மி! முதல்ல calloquial ஆரம்பிச்சு அப்புறம் இலக்கியமா போகுதே? நல்லா சூடா மலாய் போட்டு ஸ்டிராங்கா ஒண்ணு போடு.... சேட்டை!

அன்புடன் கடலூர் கண்ணன்.

பட்டிகாட்டான் Jey said...

சேட்டை அண்ணே, இந்த பாட்டை அடிக்கடி மீள்பதிவா போடவேண்டியதுவரும்போல அந்தளவு நம்ம மக்களுக்கு விழிப்புணர்வு ஜாஸ்தி , ஆசை ரொம்ப கம்மி.....

பால கணேஷ் said...

அந்தப் பாடலில் மெட்டில் பாடிப் பார்த்தால் அப்படியே பொருந்துகின்றன வரிகள். ஊசிக் குத்தலாய் அழகாய் சொல்லியிருக்கீங்க.

ரிஷபன் said...

ஆராச்சும் டூப்புவிட்டா பணங்காசையே-கொண்டு
ஜோராத்தான் கொடுத்துப்புட்டு தினமேங்குது

கலக்கல் ...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பாடல். நம்ம மக்கள் திருந்துவாங்க?... ஹூம்...

Rasan said...

// ஆராச்சும் டூப்புவிட்டா பணங்காசையே-கொண்டு
ஜோராத்தான் கொடுத்துப்புட்டு தினமேங்குது
அடிமாடு பால்கறக்கும் என நம்புது-பின்னால்
படிநூறு தினமேறி மனம்வெம்புது

மோசடி மேல் மோசடி! ஆசையினால் வம்பு! // உண்மை தான் தொடருங்கள் நண்பரே.

settaikkaran said...

//@ வரலாற்று சுவடுகள்
btw, கவிதை (?) செம!//

கவிதையா? நானா? :-((((
மிக்க நன்றிங்க! :-)

//@ வேடந்தாங்கல் - கருண்
நக்கல்..//

மிக்க நன்றிங்க! :-)

//@ நண்டு @நொரண்டு -ஈரோடு
ஹா..ஹா...//
மிக்க நன்றிங்க! :-)

//@ சேலம் தேவா
ஈமூ ஸ்பெஷலா..?! :)//

கிட்டத்தட்ட...! :-)
மிக்க நன்றிங்க! :-)

//@ கும்மாச்சி
ஹா ஹா செம கலக்கல் சேட்டை.//

ஆஹா! மிக்க நன்றி! :-)

//@ esskae59
மசாலா கம்மி! முதல்ல calloquial ஆரம்பிச்சு அப்புறம் இலக்கியமா போகுதே? நல்லா சூடா மலாய் போட்டு ஸ்டிராங்கா ஒண்ணு போடு.... சேட்டை! அன்புடன் கடலூர் கண்ணன்.//

அப்படீங்கறீங்க? சரி, அடுத்தது மசாலாவாத்தான் இருக்கும். கடலூருக்கு ஒரு டீ பார்சல்....! :-) மிக்க நன்றி!

//@ பட்டிகாட்டான் Jey
சேட்டை அண்ணே, இந்த பாட்டை அடிக்கடி மீள்பதிவா போடவேண்டியதுவரும்போல அந்தளவு நம்ம மக்களுக்கு விழிப்புணர்வு ஜாஸ்தி , ஆசை ரொம்ப கம்மி.....//

ஆஹா, உங்க பகடி கூட அசத்தலா இருக்கே! மிக்க நன்றிங்க! :-)

//@ பால கணேஷ்

அந்தப் பாடலில் மெட்டில் பாடிப் பார்த்தால் அப்படியே பொருந்துகின்றன வரிகள். ஊசிக் குத்தலாய் அழகாய் சொல்லியிருக்கீங்க.//

வாங்க கணேஷ்ஜீ! வழக்கம்போல பூஸ்ட் தரும் உங்களது பாராட்டு! மிக்க நன்றி :-)

//@ ரிஷபன்
கலக்கல் ...//

மிக்க நன்றி :-)

//@ வெங்கட் நாகராஜ்

சிறப்பான பாடல். நம்ம மக்கள் திருந்துவாங்க?... ஹூம்...//

திருத்தணும்னா எழுதுறோம் வெங்கட்ஜீ? :-)
மிக்க நன்றி:-)

//@ Rasan said...
உண்மை தான் தொடருங்கள் நண்பரே.//

மிக்க நன்றி நண்பரே! :-)

kaialavuman said...

பிரதமா!!
மந்திரி ஊழல் செஞ்சா பிரதமரட முறையிடலாம்; அந்த பிரதமரே ஊழல் செஞ்சா......

[மாமா! நமக்குச் சோதனை வந்தா கடவுள்ட முறையிடாலாம்; அந்த கடவுளுக்கே சோதனை வந்தா... என்பது போல படிக்கவும்!}

Unknown said...

விழிப்புணர்வு கவிதை ,நன்றி