26-08-2012 அன்று நிகழ்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா, எனது வலையுலகப் பிரவேசத்துக்குக் கிடைத்த ஒரு அங்கீகார முத்திரை என்றே கருதுகிறேன். தமிழ் வலையுலகத்தில் தமக்கென்று இடம்பிடித்திருக்கும் எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் ‘ நிறைகுடம் நீர் தளும்பலில்’ என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய், அனைவரிடமும் சரளமாகப் பேசிப் பழகிய விதமும், என்னிடம் காட்டிய அன்பும் கரிசனமும் நேற்றைய பொழுதை நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இனிவரும் நாட்களில் என்னால் நினைவுகூர முடியும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களைச் சந்தித்து உரையாடும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. எவர் பெயரைச் சொல்வது? எவரை விடுவது? அனுபவத்தில் பழுத்த பதிவர்கள் தொடங்கி, அண்மையில் ஆர்வத்துடன் எழுத வந்திருக்கும் பதிவர்கள் வரை அத்தனைபேரும் என்மீது அன்புமழை பொழிந்து, அதில் நனைந்து, ஜலதோஷம் பிடித்து, இந்த நிமிடம் வரை நான் தும்மிக் கொண்டிருக்கிறேன். ஆச்ச்ச்ச்ச்ச்ச்!
இப்படியொரு நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவதென்பது எளிதான காரியமல்ல! இதற்காக எத்தனை நாள், எத்தனை பேர் ஊண் உறக்கமின்றி அலைந்து திரிந்திருப்பார்கள் என்பதை இப்போது எண்ணினாலும் மெய்சிலிர்க்கிறது. அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வார்த்தைகளை இனிமேல் புதிதாகக் கண்டுபிடித்தால்தான் உண்டு. இவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டு, திட்டமிட்டபடியே செயலாற்றி, சற்றும் காலதாமதமின்றி, குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிப்பதென்பதெல்லாம் கற்பனைக்கெட்டாத செயல்! அதை நடத்திக்காட்டியிருக்கிற விழாக்குழுவினர்களை அஹமதாபாத் இண்டியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்-டில் அழைத்து சொற்பொழிவு ஆற்றச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு திறமையான நிர்வாகம்! செயலாற்றும் திறன்! ஒருங்கிணைப்பு! அர்ப்பணிப்பு!
அன்புள்ளங்களே! உங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல ஆரம்பித்தால், அடுத்த சந்திப்பு வரைக்கும் நீள்கிற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, விழாக்குழுவினர், பங்கேற்ற பதிவர்கள், அவர்களுடன் வந்த பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர் ஆகிய அனைவருக்கும் ஒரு எட்டு மணி நேரத்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தமைக்காக எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் என்னையும் மேடையேற்றி அழகுபார்த்த உங்கள் அனைவருக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(டி-சர்ட்டும் ஜீன்ஸும் போட்டுக்கொண்டு, திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களிடமிருந்து சகோ. தென்றல் சசிகலாவின் “தென்றலின் கனவு” நூலைப் பெற்றுக்கொள்ளும் வாலிபன் யாரென்று தெரிகிறதா..? ஹிஹிஹி!)
நன்றி! வணக்கம்!
நன்றி: திரு.உலகநாதன் முத்துக்குமாரசாமி - புகைப்படத்துக்காக!
பி.கு.01: எனது சூழ்நிலையைப் பொறுத்து, இனி இதுபோன்ற சந்திப்புகள் எங்கு நிகழ்ந்தாலும் கட்டாயம் வர முயற்சி செய்வேன்.
பி.கு.02 எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்.
Tweet |
58 comments:
அருமையான பதிவு.
உங்களை நான் உங்கள் தயவால் நான்கு நாட்கள் முன்பே பார்த்து விட்டேன், என் மின்னஞ்சல் மூலம், மிகப்பெரிய புகைப்படம் + தொலைபேசி எண்ணுடன்.
அதை மட்டும் தாங்கள் அனுப்பியிருக்காவிட்டால், இந்தப் திருவிழாவுக்கு நேரில் கலந்துகொள்ள முடியாது போன வருத்தம் மேலும் எனக்கு அதிகரித்திருக்கும்.
நன்றி,
அன்புடன்
VGK
அருமையான பதிவு.
/////////எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்//////அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ
தங்கள் எழுத்தை வைத்து நீங்கள் இன்னும் இளைய வயதானவர் என்று நினைத்திருந்தேன். (இப்போதும் நீங்க இளமையாக தான் உள்ளீர்கள்).
தங்கள் புகைப்படத்தைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களை சந்திக்க முடியாததில் வருத்தமே!
ஒரு இருபது இருபத்தஞ்சு வயசுல இருப்பீங்கன்னு பார்த்தா, அறுபது அறுபத்தஞ்சுல இருக்கீங்களே :-)))))
தோற்றம் பற்றியும் வயது பற்றியும் அதிகமாகச் சிந்திக்க வேண்டாம். என்னைப் பாருங்கள் 74 வயதிலும் இளமையாக அழகாக( ? ) இல்லையா.
DO NOT THINK ABOUT YOUR CHRONOLOGICAL AGE. YOU ARE AS YOUNG AS YOU THINK YOU ARE. வாழ்த்துக்கள்.
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சேட்டைக்காரன் சார்
நான் கற்பனையில் நினைக்காத சேட்டைக்காரன் தான்.. ஆனாலும் நீங்க வந்து பேசிய பிறகு மொத அரங்கையும் சிரிக்க வைத்து விட்டீர்கள்.. எழுத்து போல உங்கள் பேசும் கல கல.. (நேரலையில் தான் பார்த்தேன்)
சேட்டை சார்.
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...
நேற்று உங்கள் பேச்சை கேட்டேன் சகோ.சேட்டை ம்ம்மம்ஹூம்.... சகோ. நாஞ்சில் வேணு...!
//இலக்கிய உலகுக்கு நீங்கள் ஆற்றி வரும் சேவை....// ஆரம்பமே அமர்க்களம்..! அசத்திட்டீங்க சகோ..! தொடர்ந்து சேட்டை செய்து அசத்த வாழ்த்துகள்..! நாகேஷ் தோற்றம் பொருத்தமாத்தான் இருக்கு...! :-))
எனக்குத் தெரியும் அந்த யூத் யாருனு..
ஹிஹி.
பகிர்விற்கு நன்றி சேட்டை.
//எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்.//
அப்டிலாம் நினைக்கல...நீங்க உங்க அதிரடியை தொடருங்க... :)
//எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்.//
ஸ்ரேயால்லாம் முதியோர் ஆசிரமத்துக்கு அப்ளிகேஷன் போட்டுக்கிட்டிருக்கிறதா கேள்வி.
யூத்தா காட்டிக்க நினைச்சு ..ஊஹூம்.
இன்னம் யூத்தா ரோசிங்க ப்ரதர்
ஸ்ரேயா பத்தி பதிவு எழுதுங்க தடை எல்லாம் இல்ல. :))
(என் வலைப்பூவில் இன்றைய ஹைதை பிரியாணிகட்டாயம் படிங்க)
உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி ஐயா. உங்கள் Profile படத்தில் பெயர் மற்றும் போட்டோ இன்று மாறி உள்ளது கண்டு மகிழ்ந்தேன்
Asathala irukku thalaivaa
அண்ணா... நீங்கள் மேடையேறிய அந்த மகத்தான தருணத்தில்ல் நானும் உடனிருந்தேன் என்பதையே எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். விழாவிற்கு வருகைதந்து முகம் காட்டி, மனதையும் காட்டி எங்களை பெருமைப்படுத்தின உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
அண்ணா ஒரு சிலமுறை நீங்கள் என்னிடம் பேசியபோது மிக மகிழ்ந்தேன்...
நிச்சயம் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை...
நான் சந்திக்க விரும்பியதில் நீயும் ஒருவன் என்று என்னை அனைத்தபோது என் ஆனந்தத்தை சொல்ல வார்த்தையில்லை...
மீண்டும் சந்திப்போம் அண்ணா...
//எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்.//
உண்மையிலேயே நீங்க சேட்டைக்காரன் தான். எல்லாரையும் இத்தனை நாள் யூத்துன்னு நம்பவச்சிட்டிங்களே?
ஹி ஹி ... இனிமே நீங்க பத்மினி, சரோஜாதேவி பத்தித் தான் எழுதணும். ஆமா !!!
சேட்டை உங்களை நேரலையில் பார்த்தேன். நேரிலும் உங்களது கலகலப்பிற்கு குறைவில்லை. உங்களது துள்ளல் எழுத்து தொடரட்டும், ஸ்ரேயா படமும் போடுங்க பாஸ், இதற்கு நரை மூப்பெல்லாம் கிடையாது.
ரொம்ப மகிழ்ச்சி சார் ...
அப்படியே பவர் ஸ்டார் மாதிரி இளமையா இருக்கீங்கண்ணே
அப்படியே பவர் ஸ்டார் மாதிரி இளமையா இருக்கீங்கண்ணே
அகம் கண்டோம் அன்று
முகம் கண்டேன் இன்று
இனிகாண்போம் நன்று
ஹா.ஹா...ஸ்ரேயா அதிர்ஷ்டசாலிதான். தங்களுடன் அளவளாவியதில் மகிழ்ந்தேன்.
விழாவில் தங்களை சந்திச்சதில் ரொம்ப ம்கிழ்ச்சி சார்
அற்புதம்.
Profile படம் மாறி விட்டது! உங்கள் மற்றும் எங்கள் அபிமான நாகேஷ் மாறியது கொஞ்சம் வருத்தம்தான்!!! :)))
நான் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நீங்க நிறுத்திட்டீங்க... ஆனா உங்களோட "ஏழாம் அறிவு" விமர்சனத்த மட்டும் ஒரு ஏழு தடவ படிச்சுருப்பேன்... சரியான புறநானூற்று வரிகளை மேற்கோள் காட்டியிருப்பீங்க... உங்களின் கடும்பாக்கள் படிச்சப்பின்தான் சமந்தாவுக்கு நா ஒரு வெண்பா எழுதுனேன்... நீங்க பதிவுலகில் இல்லாத நாட்களில் உங்கள் தளத்தை அதிகம் விசிட்டிய ஆள் நானாய்த்தான் இருக்கும்.. நேற்று உங்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி...
ப்ளாக்கில் பார்க்க முடியாத உங்கள் முகத்தை (சில நாட்கள் முன்பு வரை) நேரில் பார்த்து,பக்கத்திலமர்ந்து அளவளாவியது நான்தானா என்று இந்நொடி வரை என்னாலேயே நம்ப முடியவில்லை சேட்டை சார்! விழாவில் உங்கள் பேச்சிலும் அந்த குறும்பு ஓடியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள் 26.8.12.
நான் மிக சந்திக்க விரும்பியவர்களில் முக்கியமானவர் நீங்கள். உங்கள் படம் பார்த்து மிக மகிழ்ந்தேன். வாசிப்பவர்கள் எப்போதும் எழுத்தைத்தான் பார்க்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா.. பார்க்க மிக அடக்கமாய் தோற்றம் எழுத்தில் சுனாமி.. சேட்டை தொடரட்டும்..
எனது முன்வழுக்கையையும், நரையையும் நேற்று எல்லாருக்கும் காட்டிவிட்டேன் என்பதற்காக, இனி ஸ்ரேயாவைப் பற்றி எழுத மாட்டேன் என்று யாரும் பகல்கனவு காண வேண்டாம்.
//////////////////////
இல்லைங்க அப்படியெல்லாம் கனவு காணமாட்டோம்..? நீங்க எழுதலைன்னாத்தான் வருத்தப்படுவோம்!
சேட்டையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிய பதிவர் மாநாட்டிற்கு நன்றிகள்.
உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்! :)
வாழ்த்துக்கள். ஸ்ரேயாவுக்கு (யாரது?) உங்களை அடையாளம் காட்டியாச்சு.
முழு வழுக்கையா? விளையாடறீங்களா? :-)
முதன் முதலாக நேரலையில் உங்கள் முகம் பார்த்த போது வியந்தே போனேன்! வியப்பில் இருந்து இன்னும் மீளாமலே இருக்கிறேன்!
profile update செய்தமை நன்று!
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்...
நன்றி... வாழ்த்துக்கள்...
Superunga!!
சில நிமிடங்களே தங்களுடன் பேசம் முடிந்தது ஆயினும்
தங்கள் மனம் திறந்த பேச்சு வெகு நாட்கள் பழகிய
மன உணர்வைத் தந்தது.தொடர்ந்து சந்திப்போம்
சில நிமிடங்களே தங்களுடன் பேசம் முடிந்தது ஆயினும்
தங்கள் மனம் திறந்த பேச்சு வெகு நாட்கள் பழகிய
மன உணர்வைத் தந்தது.தொடர்ந்து சந்திப்போம்
நாகேஷ் மாதிரியே தான் இருக்கீங்க :)
சேட்டை, உங்களை தில்லியிலேயே சந்தித்திருக்க வேண்டியது... மிஸ் செய்து விட்டேன். இப்போது சென்னையிலும்!
எனி வே, அடுத்த சென்னை வருகையின் போது நிச்சயம் உங்களைச் சந்திக்க வேண்டும்....
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
இனிய நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி..
பார்த்ததில் மகிழ்ச்சி...என்ன பேசத்தான் முடியல....
வாழ்த்துக்கள் சேட்டை...எப்பவும் போல போய்யா..வாய்யான்னு கூப்பிடலாமா வேண்டாமா...அவ்வ்
நோ கமெண்ட்ஸ்
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!!! உங்களின் முகத்தை காண ஆர்வத்துடன் வந்து அசந்துவிட்டேன்...இவ்வளவு இளமையானவரா என்று!! உங்களின் துரு துரு பார்வை வேகம் நீங்கள் மார்கண்டேயன் தான்! கண்டிப்பா உங்கள் இளமைக்கு ரகசியம் இருக்கும் சொல்லுங்க சார் (ஷ்ரேயா தானே)....
@வை.கோபாலகிருஷ்ணன்
@ஆட்டோமொபைல்
@Abdul Basith
@G.M Balasubramaniam
@r.v.saravanan
@ஹாரி பாட்டர்
@வேடந்தாங்கல் - கருண்
@தமிழ்வாசி
@~முஹம்மத் ஆஷிக் citizen of world~
@இந்திரா
@சேலம் தேவா
@சித்தூர்.எஸ்.முருகேசன்
@புதுகைத் தென்றல்
@மோகன் குமார்
@கவி அழகன்
@பால கணேஷ்
@சங்கவி
@ஹாலிவுட்ரசிகன்
@கும்மாச்சி
@அரசன் சே
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@புலவர் சா இராமாநுசம்
@! சிவகுமார் !
@ராஜி
@ஸ்ரீராம்.
@மயிலன்
@Raghavan Kalyanaraman
@ரிஷபன்
@வீடு சுரேஸ்குமார்
@வெங்கட ஸ்ரீநிவாசன்
@சுரேகா
@அப்பாதுரை
@வரலாற்று சுவடுகள்
@திண்டுக்கல் தனபாலன்
@Ramani
@சுபத்ரா
@வெங்கட் நாகராஜ்
@இராஜராஜேஸ்வரி
@அமைதிச்சாரல்
@கோவை நேரம்
@கே. பி. ஜனா...
@விக்கியுலகம்
@எல் கே
@சமீரா
விழாவில் நான் சந்தித்து உரையாடிய பதிவுலக அன்புள்ளங்களுக்கும், குன்றாத எனது இளமை(?!) யைப் பாராட்டிய ரசனையுள்ள நட்புகளுக்கும், எனது இளமையின் ரகசியம் உங்களது நட்பு என்பதைச் சொல்லிக் கொண்டு, எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படி நான் தொடர்ந்து ஸ்ரேயாவைப் பற்றி எழுதுவேனோ, அதே போல அனைவரும் முன்போலவே என்னை சேட்டை, வா, போ என்று உரிமையோடு அழைப்பதையே நான் விரும்புகிறேன். காரணம், நான் இன்னும் யூத் தான்! :-)))))
வருகை புரிந்த அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கத்துடன் பல்லாயிரம் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
@Prabu Krishna
@cheena (சீனா)
விழாவில் நான் சந்தித்து உரையாடிய பதிவுலக அன்புள்ளங்களுக்கும், குன்றாத எனது இளமை(?!) யைப் பாராட்டிய ரசனையுள்ள நட்புகளுக்கும், எனது இளமையின் ரகசியம் உங்களது நட்பு என்பதைச் சொல்லிக் கொண்டு, எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படி நான் தொடர்ந்து ஸ்ரேயாவைப் பற்றி எழுதுவேனோ, அதே போல அனைவரும் முன்போலவே என்னை சேட்டை, வா, போ என்று உரிமையோடு அழைப்பதையே நான் விரும்புகிறேன். காரணம், நான் இன்னும் யூத் தான்! :-)))))
வருகை புரிந்த அனைவருக்கும் இருகரம் கூப்பி வணக்கத்துடன் பல்லாயிரம் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
பதிவர் விழாவில்
பார்த்தேன்
பேச்சை ரசித்தேன்
நேரலையில்தான் விழா நிகழ்ச்சிகளை ரசித்தேன். உங்கள் எழுத்துக்கு நாங்கள் எப்பவுமே ரசிகர்கள்தான். உங்கள் எழுத்துக்கள் எப்போதும் யூத்தானவையே....தொடருங்கள் ரசிக்க காத்திருக்கிறோம்.
@அ. வேல்முருகன்
@கடம்பவன குயில்
உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
??? :-/
எல்லாஞ்செரி எதுக்கு வயசானவர் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு வந்தீங்கன்னுதான் புரியல :))
சந்தித்ததில் மகிழ்ச்சி சேட்டைக்காரரே :))
நல்வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம் said...
அகம் கண்டோம் அன்று
முகம் கண்டேன் இன்று
இனிகாண்போம் நன்று
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அருமையான வரிகள்!!!
@அகல்விளக்கு – உங்கள் பின்னூட்டம் புரியலேன்னாலும், வருகைக்கு மிக்க நன்றி!
@♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
எல்லாஞ்செரி எதுக்கு வயசானவர் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு வந்தீங்கன்னுதான் புரியல :))//
மேக்-அப் போட்டா மாதிரியா இருந்தேன்? பேக்-அப் சொன்னதுக்கப்புறம் கலைச்சா மாதிரியில்லே வந்தேன்?
//சந்தித்ததில் மகிழ்ச்சி சேட்டைக்காரரே :))//
எனக்கும்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
@ஆர்.வி. ராஜி
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி! :-)
அது சரி உங்கள் இளைமையின் ரகசியம் என்ன?.(பதில்: நகைச்சுவைதான் சார்)
நீங்க நகைச்சுவையா எழுதி எங்களை சந்தோஷமா வைங்க சார்.
அன்பின் சேட்டைக்காரன் - அறிமுகமான்வரை மீண்டும் அறிமுகப் படுத்திக் கோண்டேன் - நானே யூத் தான் - யூத் மாதிரி எழுதறதில்ல- அவ்ளோ தான் - வாழ்க வளமுடன் சேட்டைக்காரன் - நட்புடன் சீனா
Post a Comment