செய்தி:
சென்னை: 50 இளைஞர்களைமணந்து அவர்களை ஏமாற்றிய கேரள அழகி பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள்குவிந்து வருகிறது.
இதை வாசித்ததும் என் மனதில் தோன்றிய பாட்டு இது.
இதை “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது” என்ற மெட்டில் பாடிப்பார்க்கவும்!
அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்
முடிச்சுப்போட்டீங்க மிகவும் ஜாலியா!
அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்
முடிச்சுப்போட்டீங்க மிகவும் ஜாலியா!– இன்று
அடிச்சுப்புரண்டு கதறும்போது
ஊரில் கேட்கிறார்-இதுதான் ஜோலியா?
உங்க வாழ்க்கை கேலியா?
'லாயர்' (Lawyer) என்ற பொய்யைச் சொல்லி
லவட்டினாளே காசை – அவள்
'லைய்யர்' (Liar) என்று தெரிந்தபின்னே
எதுக்கு இன்னும் மீசை?
இருநிமிட நூடுல்ஸ்போல் திருமணங்கள் பண்ணி
தெருவோரம் புலம்புகிறார் தவறினை எண்ணி!
இவர் அலம்பல் தந்தது பெரும் புலம்பல் வந்தது
(அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்)
பெண்ணைக் கண்ட மாத்திரத்தில்
இளிக்கிறார்கள் பல்லை – இங்கு
பெரும்படிப்பைப் படித்தவர்க்கும்
ஜொள்ளினாலே தொல்லை!
பொறுக்காமல் அலைபவரை இலக்காக்கிச் சாய்த்து
பொருளெல்லாம் சுருட்டிடுவார் பலரிங்கு ஏய்த்து
இவர் நேற்று மாப்புதான்! இன்று சூப்பர் ஆப்புதான்!
(அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்)
காதலென்னும் பொய்வலையில்
வீழ்த்திவிட்டாள் நைசா- இப்போ
கடலினிலே கருப்பட்டிபோல்
கரைஞ்சுபோச்சு பைசா!
கல்யாணம் டி-ட்வெண்ட்டி மேட்சு போல ஆச்சே!
கைக்காசு திரும்பிடலாம் கவுரவம் போச்சே!
அவர் மனசு வெம்புது! தலைக் கணக்கு அம்பது!
(அவசரத்தில் கிடைச்ச கழுத்தில்)
Tweet |
15 comments:
அண்ணாச்சி....கலக்கல் பாட்டு போங்க..., சினிமால எழுதுங்க...
வாவ். அதே மெட்டுக்கு வார்த்தைகள் பொருந்துகின்றன..அர்த்தத்துடன்.
btw, how dare she is !!!
:):):) நல்லாயிருக்குங்க
பிரமாதம்! பின்புலத்தையும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே? விவரம் என்னானு தெரிஞ்சிருக்கும்.
நேற்றே செய்தி படித்தேன்.
வியந்து போனேன்.
இன்று கவிதை படித்தேன்.
கலங்கிப்போனேன்.
அருமை அருமை அருமை.
வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
vgk
நகைச்சுவை ஊடே நல்ல படிப்பினை
பாட அகச்சுவை காண அவலமே நாட
அருங்கவி இதுவே! அருமை!
அருமை!
செய்தி படிக்கவில்லை. இருந்தால் என்ன. சாதாரணமாக ஒரு ஆண் இப்படிப் பல திருமணங்கள் செய்வது குறித்து செய்திகள் படித்ததுண்டு. காலம் மாறுகிறது. ஆணுக்குப் பெண் சோடை இல்லை.
இவர் நேற்று மாப்புதான்! இன்று சூப்பர் ஆப்புதான்..
super
நல்ல சேட்டை.... கவிதையிலும் கலக்கறீங்களே சேட்டை....
சேட்டை கலக்கல் பாட்டு.
பெரும்படிப்பைப் படித்தவர்க்கும்
ஜொள்ளினாலே தொல்லை!
பாடல் அருமை நன்பரே
காலமடி காலம் கலிகாலமடி காலம்.பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.
நேற்று பதிவர் மாநாட்டில் உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
முதல் வருகை சேட்டை தளத்துக்கு..
பாடல் அருமை....
Super.,
சிரிப்பை அடக்க முடியல....சூப்பர் பாட்டு.... பாவம் மாட்டினவன் பாடு...
Post a Comment