Monday, August 22, 2011

ரௌத்திரம் - பௌத்திரம்

கிராமத்தில் தாத்தா (பிரகாஷ்ராஜ்) வெறும் முட்டியால் சிலபலரை சின்னாபின்னமாக்குவதைப் பார்த்த பேரன் வளர்ந்து பெரியவனாகி, நகரத்தில் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து.....(என்னாது, மீதிக்கதை புரிஞ்சிருச்சா? இருங்க, இருங்க ஸ்தூ! ஸ்தூ!! ரொம்ப நாளைக்கப்புறம் ஸ்ரேயா படம் போட்டு எழுதியிருக்கேனில்லா? அவசரப்பட்டு ஓடினா எப்படீண்ணேன்?)

திறமையும் இளமையுத்துடிப்பும் உள்ள ஜீவா கதைகளையும் பாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் முன்னர் செக்கு எது, சிவலிங்கம் எது என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு உரைகல் - ரௌத்திரம்! அவரது நல்ல நேரம், ஒரு டம்மி கதாநாயகியாலும், பெரிதாகக் குறிப்பிடும்படி வாய்ப்பில்லாத மற்ற கதாபாத்திரங்களாலும், படத்தில் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கஷ்டம்! ஒரு கட்டத்தில் அதுவும் லேசாய் அலுப்புத்தட்டத் தொடங்குகிறது.

அவரு பார்க்கிற பார்வையாகட்டும்; வசனத்தை அடிக்குரலிலேருந்து நிறுத்தி நிதானமாப் பேசுறதாகட்டும் - பார்க்கிறவங்களுக்கு படத்தோட பேரு "ரௌத்திரம்" தானா அல்லது "பௌத்திரமா (constipation)" என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரி gimmicks தான் நடிப்பு என்ற முடிவுக்கு ஜீவாவும் வந்து விடுவாரோ என்று தோன்றுகிறது.

பாதகம் செய்வோரைக் கண்டால் பயந்திடாத கதாநாயகன். ரவுடிகளோடு ரவுடியாய் சண்டை போடுகிறவனிடம் மனதைப் பறிகொடுக்கிற படித்த நகரத்துக்காதலி! விர்ருவிர்ரென்று ஆகாயவிமானம் நீங்கலாக அனைத்து வாகனங்களிலும் சீறி வந்து அநியாயம் இழைக்கும் வில்லன்கள். "உவ்வ்வ்வே....ஊவ்வ்வ்வ்வ்! ஆவ்வூ!" என்று சத்தமிட்டபடி நியூட்டனின் விதிகளை மீறிப் பறந்து விழும் வில்லனின் கையாட்கள்! ’யோவ், படத்துலே ஒரு ஹீரோயின் போட்டிருக்கோமய்யா," என்று தயாரிப்பாளர் ஞாபகப்படுத்திய கருமத்துக்காக ’போனால் போகிறது,’ என்று டூயட் பாடல்கள். பாசத்தைப் பிழியும் மிக்சர்களாய் அப்பா,அம்மா, தங்கை! சாமீ, இன்னும் எத்தினி நாளைக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியலியே! ஆனால், ஜீவாவின் அப்பாவாக வருபவர் மனதில் நிற்கிறார்!

ஸ்ரேயா இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. (எதிர்பார்த்துப் போனால்தானே ஏமாறுவதற்கு?) ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது. எனவே வண்ண வண்ண சுடிதார்களுடன், குல்பி சிரிப்புடன் அவ்வப்போது வந்து, வழக்கம் போல டுயட் பாடிவிட்டுப் போகிறார்.

இந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரவுடிக்கும்பல்கள், யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்பதைக் குழப்பமில்லாமல் சொல்பவர்களுக்கு ஒரு டப்பா டைகர்பாம் பரிசாக வழங்கலாம். இந்திய ராணுவத்திடம் கூட இருக்குமா என்று சந்தேகப்படும்படியான ஆயுதங்களையெல்லாம் வைத்துக்கொண்டிருக்கிற ரவுடிகள், கதாநாயகனின் கையாலே அடிபட்டுச் சுருண்டு விழுவது, இயக்குனர் தன் கையிலிருக்கிற பூ மற்றும் ரசிகர்களின் காதுகளின் மீது வைத்திருக்கிற அபார நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இசையைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்றாலும் "மாலை மயங்கும்" ஓசியில் பாப்கார்ன் கிடைத்த ஆறுதலைத் தருகிறது. (ஸ்ரேயா படு க்யூட்டாகத் தெரிகிறார்!) இப்போதெல்லாம் படுதிராபையான படங்களைக் கூட ஒளிப்பதிவாளர்கள் ஒப்பேற்றி விடுவதற்கு ரௌத்திரமும் இன்னொரு உதாரணம். ஆங்காங்கே கொஞ்சம் கணிசமாய்க் கத்திரி போட்டிருந்தால் படத்தில் எடிட்டிங் என்ற ஒரு கெரகம் இருக்கிறது என்றாவது உறைத்திருக்கும். வசனகர்த்தா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்ததாக விஜய்காந்த் படத்துக்கு வாய்ப்பு கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருக்கிறது. ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடுகிற படத்தில் வசனத்தையாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

ரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். (வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்-சில் படம்பார்க்காத குறையும் தீர்ந்தது.)

சிபாரிசு: இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு, பேசாமல் அண்ணா ஹஜாரேயின் அறிக்கைகளையாவது வாசிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவாவது முடியும்.

47 comments:

Unknown said...

நல்ல படத்த விமர்சனம் பண்றதுக்கு பதிலா இந்த மாறி படத்த பத்தி சொல்லி காச மிச்சபடுதிரிங்க.. நன்றி Castro Karthi

Anonymous said...

நீங்க திரைவிமர்சனமும் போடுவீங்களா? ஆச்சர்யம். அன்னா மீது தங்களுக்கு இருக்கும் கொலைவெறிக்கு 144 போட்டாலும் பயன் இல்லை போல..:)

Anonymous said...

அருமையான விமர்சனம் சேட்டை..பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க...

நிரூபன் said...

வலையுலகில் முதன் முறையாக, முழுக்க முழுக்க காமெடி கலந்த விமர்சனத்தை ரசித்தேன்.
வித்தியாசமான முயற்சியாக,
விமர்சனத்தைக் காமெடி கலந்து எழுதியுள்ளதோடு,
எங்கள் பாக்கட் Money ஐச் சேவ் பண்ண உதவிய சகோதரமே!
நீங்கள் வாழ்க.

Philosophy Prabhakaran said...

// ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது //

செம நக்கல்...

Philosophy Prabhakaran said...

தல... பொத்துக்கிட்டு வர்றதுக்கு பேர் தான் ரெளத்திரம்...

Mathuran said...

நல்ல விமர்சனம்

rajamelaiyur said...

I already wasted 50 rs

Chitra said...

ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது.


...... இதை ஆட்டோ பின்னாலேயே எழுதி வைக்கலாமே..... கல்வெட்டு brand கமென்ட்.... சூப்பர்!

Chitra said...

வர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.


...... ultimate finishing touch punch!!!! சான்சே இல்லை.... நல்லா சிரிச்சேன்.

சேலம் தேவா said...

//ரௌத்திரம்-பௌத்திரம்//

குட் காம்பினேஷன்... :)

அம்பாளடியாள் said...

வர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

இந்த பஞ்சு டயலக் சூப்பரா இருக்கு அண்ணாச்சி.... வாழ்த்துக்கள் .நன்றி
பகிர்வுக்கு .....

இந்திரா said...

//ரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். //


வந்துச்சுங்கய்யா.. வந்துச்சு..

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு, பேசாமல் அண்ணா ஹஜாரேயின் அறிக்கைகளையாவது வாசிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவாவது முடியும். >>>

இம்புட்டு மோசமாவா இருக்கு படம்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் ஏழாவது நானே

test said...

//மொத்தம் எத்தனை ரவுடிக்கும்பல்கள், யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்பதைக் குழப்பமில்லாமல் சொல்பவர்களுக்கு ஒரு டப்பா டைகர்பாம் பரிசாக வழங்கலாம்//
சூப்பர் பாஸ்! :-)

பாஸ் உங்க நக்கல், நையாண்டி எல்லாம் படிக்கும்போது தலைவர்(சுஜாதா) ஞாபகம் வருது!

Unknown said...

அசத்தல் விமர்சனம்

மொக்கை படத்தை இப்படி கூட விமர்சிக்கலாமா!!??

விமர்சித்த விதம் அருமை

Unknown said...

எனக்கு படம் பிடித்திருந்தது, உங்களது விமர்சனமும் :-)

Unknown said...

அருமையான விமர்சனம் நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

:) நல்ல வேளை. இங்கே படம் பார்க்க திரை அரங்க வசதி இல்லை.

M.R said...

இயக்குனர் தன் கையிலிருக்கிற பூ மற்றும் ரசிகர்களின் காதுகளின் மீது வைத்திருக்கிற அபார நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தங்களின் கை வண்ணம் தெரிகிறது இந்த வரிகளில் அதனால் தான் படத்தை பாதி பார்க்கும் பொழுதே எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் வேண்டாம் என்று

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா டிஸ்கி செம நக்கல்

Rule said...

HAA HAA!!!!! Nethi Adi

மதுரை சரவணன் said...

ungalaala thaan ippadi udaiththu vimarsanam panna mudiyum..vaalththukkal

Unknown said...

"ஸ்ரேயா இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. (எதிர்பார்த்துப் போனால்தானே ஏமாறுவதற்கு?) ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது."

சேட்டையின் சேட்டை :-)))))))))))))))

settaikkaran said...

//Castro Karthi said...

நல்ல படத்த விமர்சனம் பண்றதுக்கு பதிலா இந்த மாறி படத்த பத்தி சொல்லி காச மிச்சபடுதிரிங்க.. நன்றி Castro Karthi//

ஏதோ நம்மாலான சமூகசேவை; கொஞ்சம் பணவீக்கம் குறையட்டுமே! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

நீங்க திரைவிமர்சனமும் போடுவீங்களா? ஆச்சர்யம். அன்னா மீது தங்களுக்கு இருக்கும் கொலைவெறிக்கு 144 போட்டாலும் பயன் இல்லை போல..:)//

ஹிஹி! சினிமா குறித்தும் நிறையவே எழுதியிருக்கிறேனே! :-))
அண்ணா ஹஜாரேயைப் பற்றி விமர்சித்ததுபோல யாரையும் விமர்சித்ததில்லை; காரணம், அவர் ஒரு தலைமுறையையே ஏய்க்கப் பார்க்கிறார்.
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரெவெரி said...

அருமையான விமர்சனம் சேட்டை..பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க...//

ஆமாங்க, நான் ஸ்ரேயா ரசிகன்; போகலேன்னா உம்மாச்சி கண்ணைக் குத்தும். :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//நிரூபன் said...

வலையுலகில் முதன் முறையாக, முழுக்க முழுக்க காமெடி கலந்த விமர்சனத்தை ரசித்தேன்.//

விமர்சனம் காமெடியா இருக்குதா? படம் பார்த்த அனுபவம் பெரிய டிராஜடி சகோ! :-)

//வித்தியாசமான முயற்சியாக, விமர்சனத்தைக் காமெடி கலந்து எழுதியுள்ளதோடு, எங்கள் பாக்கட் Money ஐச் சேவ் பண்ண உதவிய சகோதரமே! நீங்கள் வாழ்க.//

சரியாப்போச்சு, அப்போ இனிமேல் உங்க காசை மிச்சம்பிடிக்க இது மாதிரி நிறைய தியாகங்கள் பண்ணலாமுன்னு சொல்லுங்க! :-)
மிக்க நன்றி சகோ!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

செம நக்கல்...//

அதை வச்சுத்தானே கடையை ஓட்டிக்கினுகீறேன்! :-)

//தல... பொத்துக்கிட்டு வர்றதுக்கு பேர் தான் ரெளத்திரம்...//

வந்திச்சு, படம் பார்த்திட்டிருக்கும்போதே! :-)
மிக்க நன்றி நண்பா!

settaikkaran said...

//மதுரன் said...

நல்ல விமர்சனம்//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

I already wasted 50 rs//

அடடா, நானு 120 வேஸ்ட் பண்ணிட்டேன்.
நன்றி! :-)

settaikkaran said...

//Chitra said...

...... இதை ஆட்டோ பின்னாலேயே எழுதி வைக்கலாமே..... கல்வெட்டு brand கமென்ட்.... சூப்பர்!//

நல்ல ஐடியாதான், ஆனா RTO ஆட்சேபிப்பாராமே? :-)

//...... ultimate finishing touch punch!!!! சான்சே இல்லை.... நல்லா சிரிச்சேன்.//

மிக்க மகிழ்ச்சி! நம்மாலே முடிஞ்சது நாலு பேரைச் சிரிக்க வைக்கறதுதான். இது தொடர்ந்தாலே போதும்! நன்றி சகோதரி! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

//ரௌத்திரம்-பௌத்திரம்//
குட் காம்பினேஷன்... :)//

நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//அம்பாளடியாள் said...

இந்த பஞ்சு டயலக் சூப்பரா இருக்கு அண்ணாச்சி.... வாழ்த்துக்கள் .நன்றி பகிர்வுக்கு .....//

பஞ்சு டயலாக்கா? ஆஹா, இது வேறயா? எது எப்படியோ, பிடிச்சிருந்தா சரிதான். மிக்க நன்றி சகோதரி! :-)

settaikkaran said...

//இந்திரா said...

//ரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். // வந்துச்சுங்கய்யா.. வந்துச்சு..//

வரலேன்னா இதே மாதிரி இன்னொரு படம் எடுத்திருவாய்ங்களே! :-)
மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

இம்புட்டு மோசமாவா இருக்கு படம்...//

ஆமாங்க, வெறுத்திட்டேன்! :-(

//தமிழ்மணம் ஏழாவது நானே//

மிக்க நன்றி! :-) டபுள் தேங்க்ஸ்! :-)

settaikkaran said...

//ஜீ... said...

சூப்பர் பாஸ்! :-) பாஸ் உங்க நக்கல், நையாண்டி எல்லாம் படிக்கும்போது தலைவர்(சுஜாதா) ஞாபகம் வருது!//

தலைவர் புத்தகம் ரெண்டு மூணு வாங்கி புரட்டாமலே வச்சிருக்கேன். எப்போ நல்லகாலம் பொறக்குமோ? :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அசத்தல் விமர்சனம் மொக்கை படத்தை இப்படி கூட விமர்சிக்கலாமா!!??//

விமர்சனத்தையும் மொக்கையாக்கிட்டா, எல்லாரும் படத்துக்கே போயிருவாங்களே? :-)
//விமர்சித்த விதம் அருமை//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//இரவு வானம் said...

எனக்கு படம் பிடித்திருந்தது, உங்களது விமர்சனமும் :-)//

ரசனை வித்தியாசப்படுவது இயல்புதானே? மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//விக்கியுலகம் said...

அருமையான விமர்சனம் நன்றி!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

:) நல்ல வேளை. இங்கே படம் பார்க்க திரை அரங்க வசதி இல்லை.//

வெங்கட்ஜீ! தில்லியிலே தான் என்டெர்டெயின்மென்டுக்கு என்னென்னமோ நடக்குதே, ராம்லீலா மைதானத்துலே...! :-)
நன்றி!

settaikkaran said...

//M.R said...

தங்களின் கை வண்ணம் தெரிகிறது இந்த வரிகளில் அதனால் தான் படத்தை பாதி பார்க்கும் பொழுதே எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் வேண்டாம் என்று//

அப்படீன்னா, DVD யா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா டிஸ்கி செம நக்கல்//

தல, சினிமா விமர்சனம் எழுதுவது எப்படீன்னு ஒரு இடுகை போடுங்க! என்னை மாதிரி கொஞ்சம் பேரும் கத்துக்கலாமில்லே?
நன்றி!

settaikkaran said...

//Rule said...

HAA HAA!!!!! Nethi Adi//

Thank You!

settaikkaran said...

//மதுரை சரவணன் said...

ungalaala thaan ippadi udaiththu vimarsanam panna mudiyum..vaalththukkal//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//ஜோ said...

சேட்டையின் சேட்டை :-)))))))))))))))//

வாங்க ஜோ! மிக்க நன்றி! :-))