"வாங்க டாக்டர்! எங்கே வராம இருந்திடுவீங்களோன்னு பயந்திட்டிருந்தேன்,’ என்று வாயை சித்தூர் செக்-போஸ்ட் போலத் திறந்தபடி வரவேற்றாள் சேட்டை டிவியின் நிகழ்ச்சி இயக்குனர் பவி என்ற பாவாத்தா.
"இந்தவாட்டியாவது யாராவது போன் பண்ணி கேள்வி கேட்பாங்களாம்மா?" என்று சந்தேகத்துடன் கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம். "போனவாட்டி சும்மா போகக்கூடாதேன்னு பூசணிக்காய் கொழுக்கட்டை செய்வது எப்படின்னு புரோகிராம் பண்ணிட்டு போனேன். ஞாபகமிருக்கா?"
"அப்படியெல்லாம் ஆயிடக்கூடாதுன்னுதான் எங்க ஆளுங்களையே ரெடிபண்ணி அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தர் போன் பண்ணுறா மாதிரி செட்-அப் பண்ணியிருக்கோம் டாக்டர்! பேட்டியை ஆரம்பிக்கலாமா டாக்டர்?"
"ஆல்ரைட்! ஸ்டார்ட் பண்ணுங்க!"
"வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டிவியின் "இன்னாபா நல்லாகீறியா?" நிகழ்ச்சி! இன்று நமது நேயர்களின் தொலைபேசிக் கேள்விகளுக்கு பதிலளிக்க வந்திருக்கிறார் பிரபல மகளிர் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர்.குஜலகுமுதா...ஓ ஸாரி..டாக்டர் குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம்! வணக்கம் டாக்டர்!"
"வணக்கம் பாவி, ஓ ஸாரி, வணக்கம் பவி!"
"இதோ நேயரோட முதல் அழைப்பு வந்திருச்சே! ஹலோ, சேட்டை டிவி! யாரு பேசறீங்க?"
"வணக்கம்! நான் புளியந்தோப்புலேருந்து வனஜா பேசறேங்க! டாக்டர் இருக்காங்களா?"
"சொல்லுங்க வனஜா! என்ன சந்தேகம் உங்களுக்கு?"
"ஐயோ, எனக்கு சொல்லவே கூச்சமாயிருக்குதுங்க டாக்டர்! கொஞ்ச நாளா என் புருசன் நடவடிக்கை ஒண்ணும் சரியில்லீங்க டாக்டர்! காலையிலேருந்து அடிக்கடி வாந்தியெடுக்கிறாரு, தலை சுத்துதுன்னு சொல்லுறாரு!"
"ஹலோ வனஜா! இது பெண்கள் சம்பந்தப்பட்ட...," என்று எதையோ சொல்ல வந்த பவியை இடைமறித்தார் டாக்டர்.
"வனஜா, உங்க புருசன் நேத்து என்ன சாப்பிட்டாரு?"
"ஒரு குவார்ட்டரும் மிக்சிங்குக்கு வாட்டரும்..!"
"அதுதான் காரணமாயிருக்கும். ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு கொடுங்க, சரியாயிடும்!"
"ஐயையோ, டாக்டர்! முழுசாக் கேளுங்க! இன்னிக்குக் காலையிலே அவரு திருட்டுத்தனமா சாம்பலை சாப்பிட்டதை என் கண்ணாலே பார்த்தேன்! வயிறு வேறே உப்பிக்கிடக்குது! ஊரு இருக்கிற இருப்புலே ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிருச்சோன்னு பயமாயிருக்கு டாக்டர்!"
"பயப்படாதீங்கம்மா! சதா பாரும் பீருமா இருக்கிறவங்க வயித்தைப் பாத்தா வாயும் வயிறுமா இருக்காங்களோன்னு சந்தேகம் வர்றது சகஜம்தான். அனேகமா நேத்து கடையிலே சைட்-டிஷ் சரியாக் கிடைக்காததுனாலேயோ, காலையிலே ஒருவேளை நீங்க டிபனுக்கு ரவா உப்புமா பண்ணினதுனாலேயோ சாம்பல் சாப்பிட்டிருப்பாரு! கவலைப்பட ஒண்ணுமில்லீங்க!"
வனஜாவோடு பேசி முடித்ததும் பவி சிரித்தாள். "என்ன டாக்டர், முத கேள்வியே வில்லங்கமாயிருக்கே? எங்கேயாவது ஆம்பிளைங்களுக்கு மசக்கை வருமா?"
"ஏன் வராது? ஆம்பிளைங்களும் கர்ப்பம் தரிக்கலாம் தெரியுமா? ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாலே ஓப்ரா வின்ஃப்ரே ஷோவுலே ஒரு கர்ப்பஸ்திரீ..சாரி, ஒரு கர்ப்பப்புருஷன் வந்து பேட்டி கொடுத்தாரே? "ஜூனியர்" படத்துலே நம்ம ஆர்னால்டு ஷ்வார்ஸ்னேகர் கூட ஒரு புள்ளை பெத்துக்கிறா மாதிரி கதை வந்துதே! ஆம்பிளைங்களும் பிள்ளை பெத்துக்க விஞ்ஞானத்துலே வாய்ப்பு இருக்கு; ஆனா, அது பெரும்பாலும் அவங்க உயிருக்கே ஆபத்தா முடியும்னு விஞ்ஞானிங்க சொல்றாங்க!
"சரி டாக்டர், அடுத்த நேயரோட சந்தேகத்தைக் கேட்போமா?"
"ஹலோ, சேட்டை டிவியா? நான் வரதராஜபேட்டையிலேருந்து உலகம்மா பேசறேன் டாக்டர்! எங்க பாட்டிக்கு எழுபது வயசாகுது. இப்பப்போயி முழுகாம இருக்குது!"
"அடடா, அவங்களை உடனே ஒரு நல்ல டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போங்க!"
"அப்ப சரிங்க, மிச்சத்தையும் அந்த நல்ல டாக்டர் கிட்டேயே கேட்டுக்கிறேன்!" இணைப்பு சட்டென்று துண்டிக்கப்பட்டது.
"டாக்டர், இங்கே என்ன நடக்குது?" பவியின் முகத்தில் பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது. "ஒருத்தர் புருசன் வாயும் வயிறுமா இருக்கிறதா சொல்றாங்க. இன்னொருத்தர் பாட்டி முழுகாம இருக்கிறதா சொல்றாங்க!"
"உலகத்திலேயே அதிகமான வயசுலே பிள்ளை பெத்த பாட்டி நம்ம நாட்டுலே தான் இருக்காங்க தெரியுமா? அதுவும் ஒண்ணு இல்லே, ஒரே பிரசவத்துலே மூணு பிள்ளை பெத்தாங்க அந்தப் பாட்டி! ராஜோதேவின்னு பேரு; ராஜஸ்தானிலே இருக்காங்க!"
"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!"
"எத்தனை நாளா? சொல்லவேயில்லை..?"
"அட நீங்க வேறே, புதுசு புதுசா திடுக்கிடும் தகவலா சொல்றீங்களா, அதிர்ச்சியா இருக்குன்னு சொன்னேன்! அடுத்த கேள்விக்குப் போகலாமா?"
"ஓ.எஸ்!"
"டாக்டர்! நான் வத்தலக்குண்டுலேருந்து திரிபுரசுந்தரி பேசறேன்! எனக்கு மகப்பேறு பத்தி நிறைய சந்தேகம் இருக்கு டாக்டர்!"
"ஒவ்வொண்ணா கேளுங்கம்மா!"
"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"
"என்..என்னது? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது? ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்?"
"ஓஹோ! அடுத்த சந்தேகம் டாக்டர், ஒரு அறுபது வயசுப் பாட்டி ஒரே வருசத்துலே ரெண்டு குழந்தை பெத்துக்க முடியுமா?"
"என்னது?" டாக்டர் அதிர்ந்தார். "ஒரே பிரசவத்துலே ரெண்டு பொறக்கலாம். மத்தபடி....!"
"அடுத்த சந்தேகம் டாக்டர்! ஒரு வருசத்துலே ஒருத்தருக்கு 24 குழந்தைங்க பொறக்க வழியிருக்கா டாக்டர்?"
"பவி! டெலிபொனை கட் பண்ணுங்க," என்று கோபத்துடன் கூறினார் டாக்டர். "கேள்வி கேட்க என்ன ஆளு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க? ஒருத்தராவது உருப்படியா கேட்குறாங்களா?"
"ஐயோ, இவங்க நான் செட்-அப் பண்ணினவங்க இல்லை!" பவி அலறினாள். "அவங்களாயிருந்தா இதை விட கேவலமா கேட்டிருப்பாங்க!"
"திரும்ப மணியடிக்குது!" என்று டாக்டர் கால்களை சீட்டின் மீது வைத்துக் கொண்டு பின்வாங்கினார். "திரும்ப ஒரு வருசத்துலே இருபத்தி நாலு குழந்தை பெத்துக்க முடியுமா? ஒரே பிரசவத்துலே முப்பது குழந்தை பொறக்குமான்னு கேட்கப்போறாங்க!"
"இருங்க டாக்டர், என்னதான் கேட்குறாங்கன்னு பார்க்கலாமே? ஹலோ, சேட்டை டிவி பவி!"
"என்னங்க பொசுக்குன்னு கட் பண்ணிட்டீங்களே? ஒரு விபரம் தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்டா, இப்படியா அலட்டிக்குவீங்க?"
"இதோ பாருங்கம்மா திரிபுரசுந்தரி, டாக்டர் கிட்டே பேசறதுக்காக நிறைய பேரு காத்திட்டிருப்பாங்க! இந்த விளையாட்டுக்கெல்லாம் இப்போ நேரமில்லை!"
"யாரும்மா விளையாடுறாங்க? நீங்க பேப்பரே படிக்கிறதேயில்லையா?"
"என்னது பேப்பர்லே...?"
"ராஜஸ்தான்லே 32 ஆம்பிளைங்களுக்குக் குழந்தை பொறந்திருக்குதாம்! டைம்ஸ் ஆஃப் இந்தியாவை வாசியுங்க தெரியும்!"
"என்னது?"
"ஆமாம்மா, அதுவும் ஒரே ஆம்பிளைக்கு நிறைய வாட்டி குழந்தை பொறந்திருக்குதாம்!"
"ஓ காட்!"
"இதுக்கே காட்-னா எப்படி? சொல்றேன் கேளுங்க, அதே ஆஸ்பத்திரியிலே ஒரு அறுபது வயசுப் பாட்டிக்கு ஒரே வருசத்துலே ரெண்டு பிரசவம் ஆகி, ரெண்டு குழந்தை பொறந்திருக்குதாம். அப்புறமா, சீதான்னு ஒரு ஒருத்தருக்கு ஒரே வருசத்துலே 24 குழந்தை பொறந்திருக்குதாம்! தெரியுமா?"
"டாக்டர், என்ன கண்றாவி இது?" பவி பதறினாள்.
"இன்னும் இருக்கும்மா கண்றாவி! அந்த ஆஸ்பத்திரி வார்டு சூபர்வைசருக்கே ஒரு வருசத்துலே 11 குழந்தை பொறந்திருக்குதாம். இதுக்கு என்ன சொல்றீங்க?"
"பவி, நான் கெளம்பறேன்!" டாக்டர் எழுந்து கொண்டார். "பொதுவா சேட்டை டிவிக்கு வந்திட்டுப் போனாலே, திரும்ப எம்.பி.பி.எஸ்-லேருந்து படிக்கணும் போலத்தோணும். இன்னிக்கு திரும்ப எல்.கே.ஜிலேருந்து படிக்கணும் போலிருக்கு! ஆளை விடு, நான் போறேன்!"
"யெம்மா திரிபுரசுந்தரி, டாக்டர் எஸ் ஆயிட்டாங்க," என்று இணைப்பைத் துண்டித்தாள் பவி. அடுத்த கணமே மீண்டும் மணியடித்தது. ’அட, நம்ம ஆளு இப்பத்தான் கேள்வி கேட்க போன் பண்ணுறாங்களா?’ என்று சலித்தபடியே பேசினாள் பவி.
"ஹலோ!"
"ஹலோ! சேட்டை டிவியா? நான் சோளிங்கநல்லூரிலேருந்து சொரிமுத்து பேசறேங்க டாக்டர்! ’ராணா’ எப்போ ரிலீஸ் ஆகும் டாக்டர்?"
"ராணாவா?" பவி பல்லைக்கடித்தாள். "சேட்டை டிவிக்காரங்களையெல்லாம் உள்ளே போட்டாத்தான் அதை ரிலீஸ் பண்ணுவாங்களாம்."

Tweet |
14 comments:
///"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"
"என்..என்னது? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது? ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்?"/// ஹஹஹா என்ன கொடும சரவணன் )))
வணக்கம் சகோ,
//என்று வாயை சித்தூர் செக்-போஸ்ட் போலத் திறந்தபடி வரவேற்றாள் சேட்டை டிவியின் நிகழ்ச்சி இயக்குனர் பவி என்ற பாவாத்தா.//
அவ்....தொகுப்பாளினிகளின் இன்றைய நிலமையினை- அவலமாய்த் தமிழை உச்சரிக்கும் ஒரு சிலரை நையாண்டி செய்யும் அருமையான உவமை.
குமுதகுஜலாம்பா குஞ்சிதபாதம்//
எங்கே ஐயா இப்படிப் பெயர்கள் தேடி எடுக்கிறீங்க..
கலக்கல் பெயர்.
"அப்படியெல்லாம் ஆயிடக்கூடாதுன்னுதான் எங்க ஆளுங்களையே ரெடிபண்ணி அஞ்சு நிமிசத்துக்கு ஒருத்தர் போன் பண்ணுறா மாதிரி செட்-அப் பண்ணியிருக்கோம் டாக்டர்! பேட்டியை ஆரம்பிக்கலாமா டாக்டர்?"//
அடடா...இது கூட நல்லா இருக்கே.
பிரபல நடிகர் ஒருவரின் தொலைக்காட்சியிலும் இப்படியான செட் அப் பேட்டிகள் இடம் பெறுவதைப் பார்த்திருக்கிறேன்.
ஹா..ஹா...
"ஹலோ வனஜா! இது பெண்கள் சம்பந்தப்பட்ட...," என்று எதையோ சொல்ல வந்த பவியை இடைமறித்தார் டாக்டர்.
"வனஜா, உங்க புருசன் நேத்து என்ன சாப்பிட்டாரு?"
"ஒரு குவார்ட்டரும் மிக்சிங்குக்கு வாட்டரும்..!"//
பாஸ்...இந்த வரிகள் செம டச்சிங்.
தொகுப்பாளினிகள் எப்போதும் பேட்டி கொடுப்பவரைப் பேசவிடாது தமது விவேகத்தைக் காட்டுவதில் தான் குறியாக இருப்பார்கள்.
அதனைச் சுட்டியிருக்கிறீங்க.
சூப்பர்.
"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"//
ஹையோ...ஹையோ..என்ன ஒரு டெரர் தனம்.
டீவித் தொகுப்பாளினிகள் பற்றிய நையாண்டியுடன் கூடிய, தொகுப்பினை ரசித்தேன். கூடவே குதர்க்கமான கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளினிகளுக்கு பதிவின் மூலம் செம கடி கடிச்சிருக்கிறீங்க.
//"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!"
"எத்தனை நாளா? சொல்லவேயில்லை..?"//
சூப்பர் பாஸ்! :-)
கலக்கல் பாஸ்! :-)
//பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது.//
நல்ல எ.கா. :)
ஆம்பளைங்க கர்ப்பம்.. அடிவயித்தை கலக்காதீங்க சேட்டை!!
ஒரே சிரிப்பு. டி.வி நிகழ்ச்சிகளில் வரும் மருத்துவப்பேட்டிகளை, கிண்டலடித்து படு ஜோரா எழுதியிருக்கீங்க!
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.
கந்தசாமி. said...
\\\///"ஒரு வருசத்துலே குத்துமதிப்பா எத்தனை குழந்தை பெத்துக்கலாம் டாக்டர்?"
"என்..என்னது? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு கேட்குறா மாதிரியிலே இருக்குது? ஒருத்தரு ஒரு வருசத்துலே ஒரு குழந்தைதான் பெத்துக்க முடியும். இதுலென்ன சந்தேகம்?"///\\\
ஹஹஹா என்ன கொடும சரவணன் )))//
வாங்க நண்பரே! வருகைக்கு நன்றி!
//நிரூபன் said...
அவ்....தொகுப்பாளினிகளின் இன்றைய நிலமையினை- அவலமாய்த் தமிழை உச்சரிக்கும் ஒரு சிலரை நையாண்டி செய்யும் அருமையான உவமை.//
ஹிஹி! நீங்களும் வெறுத்திட்டீங்களா?
//எங்கே ஐயா இப்படிப் பெயர்கள் தேடி எடுக்கிறீங்க..கலக்கல் பெயர்.//
புதுசு புதுசா பேரு போடணும். இல்லாட்டி அந்தப் பேரு உள்ளவங்க கேஸ் போட்டிட்டா...?
//அடடா...இது கூட நல்லா இருக்கே. பிரபல நடிகர் ஒருவரின் தொலைக்காட்சியிலும் இப்படியான செட் அப் பேட்டிகள் இடம் பெறுவதைப் பார்த்திருக்கிறேன். ஹா..ஹா...//
அப்படியா? நான் குத்துமதிப்பாச் சொன்னது நெசம்தானா? நன்றி! :-)
//பாஸ்...இந்த வரிகள் செம டச்சிங். தொகுப்பாளினிகள் எப்போதும் பேட்டி கொடுப்பவரைப் பேசவிடாது தமது விவேகத்தைக் காட்டுவதில் தான் குறியாக இருப்பார்கள். அதனைச் சுட்டியிருக்கிறீங்க. சூப்பர்.
ரொம்ப நுணுக்கமா வாசிச்சிருக்கீங்கன்னு தெரியுது. மகிழ்ச்சியா இருக்குது.
//ஹையோ...ஹையோ..என்ன ஒரு டெரர் தனம்.//
டச் பண்ணியிருக்கிற மேட்டர் அப்படியாச்சே? :-)
//டீவித் தொகுப்பாளினிகள் பற்றிய நையாண்டியுடன் கூடிய, தொகுப்பினை ரசித்தேன். கூடவே குதர்க்கமான கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளினிகளுக்கு பதிவின் மூலம் செம கடி கடிச்சிருக்கிறீங்க.//
இந்த மேட்டரை சேட்டை டிவி பேட்டி மூலமா சொன்னாத் தான் சரியா வரும்னு தோணிச்சு! அது உங்களுக்குப் பிடிச்சிருக்குங்குறதே ரொம்ப மகிழ்ச்சி சகோதரம்! வழமை போல நிறைய நேரமெடுத்து, பொறுமையா, அருமையா பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி! :-)
//ஜீ... said...
\\\//"எனக்குத் தலை சுத்துது டாக்டர்!" "எத்தனை நாளா?சொல்லவேயில்லை..?"//\\\
சூப்பர் பாஸ்! :-)//
நன்றி நண்பரே! :-)
//கலக்கல் பாஸ்! :-)//
மிக்க மிக்க நன்றி நண்பரே! :-)
//சேலம் தேவா said...
\\\//பொறுப்பேற்ற அன்றே மாற்றல் உத்தரவு வாங்கிய தமிழக அரசு அதிகாரியின் அதிர்ச்சி தென்பட்டது.//\\\
நல்ல எ.கா. :)//
எதையும் தேட வேண்டிய அவசியத்தையே அவங்க வைக்குறதில்ல்லை. மிக்க நன்றி நண்பரே! :-)
//! சிவகுமார் ! said...
ஆம்பளைங்க கர்ப்பம்.. அடிவயித்தை கலக்காதீங்க சேட்டை!!//
என்னது, அடிவயித்துலே கலக்கமா? எப்போலேருந்து...? :-))
மிக்க நன்றி நண்பரே!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ஒரே சிரிப்பு. டி.வி நிகழ்ச்சிகளில் வரும் மருத்துவப்பேட்டிகளை, கிண்டலடித்து படு ஜோரா எழுதியிருக்கீங்க!//
வாங்க ஐயா, மொக்கை போடுறதுன்னாலே டிவியைப் பத்தித்தானே யோசிக்கத் தோணுது! :-)
மிக்க நன்றி ஐயா!
Post a Comment