முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அந்த மூன்றெழுத்துக்கள் எவையெவை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், அது ’மொ-க்-கை’ என்று முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது அல்லவா? இப்படியொரு திடீர் ஒப்புதல் வாக்குமூலத்தைச் சொல்லவேண்டி வந்ததற்கு என்ன காரணம்?
சகோதரி புதுகைத்தென்றல் "முத்தான மூன்று" என்ற பெயரில் ஒரு தொடர்பதிவு எழுதி என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து அதைத் தொடரச் சொல்லி அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவருக்கு முதற்கண் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (அண்மைக்காலமாக, ஆளில்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கிற எனக்கு என்ன கசக்கவா போகிறது?)
ஒரு சிக்கல்! எண் மூன்றைக் குறித்து ஒரு முன்னுரை மாதிரி எழுதலாம் என்றால், மூன்றுடன் சம்பந்தப்பட்ட எல்லாத்தகவல்களையும், இதற்கு முன்பு எழுதிய புண்ணியவான்கள் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். புதிதாய்ச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றாலும், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா?
மூன்று! இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்! (நல்ல வேளை, ராமானுஜம் உயிரோடு இல்லை!)
1. விரும்பும் 3 விஷயங்கள்
1. கையில் செய்தித்தாளுடன் ஜன்னலோர இருக்கையில் இரயில் பயணம்
2. இளையராஜாவின் இசை
3. சின்னக்குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்வது.
2.விரும்பாத 3 விஷயங்கள்
1. சென்னையில் ஆட்டோ பயணம்
2. சாமியார்கள், ஜோசியம், வாஸ்து இத்யாதிகள்....
3. வாகனம்/பேனா இரவல் கொடுப்பது
3.பயப்படும் 3 விஷயங்கள்
1. அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகளுடன் சினேகம்
2. பான்பராக் போடுபவர்கள் பக்கத்தில் அமர்வது.
3. எஸ்கலேட்டரில் ஏறுவது / இறங்குவது*
(*இது குறித்து ஒரு இடுகை எழுத உத்தேசம்)
4.புரியாத 3 விஷயங்கள்
1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்
2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது
3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது
5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
1. காலாவதியாகிவிட்ட கணினி
2. அன்னை காளிகாம்பாள் படம்
3. ஆசைப்பட்டு வாங்கி தூசடைந்த ஒரு டைரி
6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
1. நாகேஷ் நகைச்சுவை
2. சில அரசியல்வாதிகளின் அறிக்கைகள்
3. டைம்ஸ் நௌ-வில் அருணாப் கோஸ்வாமியின் கூச்சல்
7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
1. ஜெயமோகனின் ’ரப்பர்’ வாசிப்பு
2. அடுத்து என்ன மொக்கை போட? -யோசனை
3. கூகிள் ப்ளஸ் புண்ணியத்தில் நிரம்பியிருக்கிற மின்னஞ்சல் பெட்டியைக் காலி செய்தல் (சும்மா இருக்கவே முடியாதா இவங்களாலே?)
8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
1. ஒரு சொந்தவீடு
2. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.
3. புகைபிடிப்பதை நிறுத்துவது.
9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
1. இம்மென்றால் இடுகை; ஏன் என்றால் ஏகடியம்
2. எளிதில் நட்புகொள்வது.
3. நம்பி ’பல்பு’ வாங்குவது
10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
1. போட்டோஷாப் / கோரல் ட்ரா
2. தெலுங்கு & குஜராத்தி
3. அவமானங்களைச் சகித்துக் கொள்ளுதல்
11.பிடித்த 3 உணவு விஷயங்கள்
1. மெரீனாவில் மிளகாய் பஜ்ஜி / சுக்குக்காப்பி
2. ரத்னா கபே இட்லி சாம்பார்
3. அதிகாலை டிகிரி காப்பி
12.கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
1. பந்தாவுக்காகப் பேசுகிற ஆங்கிலம்
2. கலைஞர் டிவியில் வரும் "தமிழர்களே...தமிழர்களே..!"
3. தனியார் வங்கிகள் கைபேசியில் அழைத்துப் பண்ணுகிற அலப்பறை (லோன் வேணுமா?)
13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
1. பூமாலை வாங்கிவந்தான் பூக்கள் இல்லையே
2. சின்னச் சின்ன ரோஜாப்பூவே
3. பூவில் வண்டுகூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
14.பிடித்த 3 படங்கள்:
1. மூன்றாம் பிறை
2. மூன்றுமுகம்
3. த்ரீ இடியட்ஸ்
(எப்படி? "மூன்று" வந்திருச்சா?)
15.இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
1. என்னைப் புரிந்து கொண்டவர்களின் அன்பு
2. பிள்ளைப்பிராயத்து ஞாபகங்கள்
3. (இனிமேல்) சில மருந்து/மாத்திரைகள்
16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:
1. அட்ரா சக்க - சி.பி.எஸ்
2. "ஸ்டார்ட் மியூசிக்-பன்னிக்குட்டி ராம்சாமி"
3. "பாகீரதி"-எல்.கே
சி.பி.எஸ்ஸும் எல்.கேயும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். பானா ராவன்னாவிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான அனுமதி வராவிட்டாலும், உரிமையோடு அழைத்திருக்கிறேன்.
மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

Tweet |
32 comments:
//10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
1. போட்டோஷாப் / கோரல் ட்ரா//
http://tamilpctraining.blogspot.com/
இந்த தளம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
பதிவு அருமை, அழகு! (மூன்று வார்த்தைகளும் மூன்று எழுத்தில்!)
மூன்று என்னும் எண்ணின் இன்னொரு சிறப்பு, எழுத்திலும் எண்ணிக்கை மூன்று!! :-))
//மூன்று! இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்!///
எப்பூடி பாஸ்! புல்லரிக்குது! :-)
அட்டகாசம்! :-)
பதில்கள் நன்று.
அதெல்லாம் பன்னி டாப்பா எழுதுவாப்ல... அப்படி எழுதலைனா ரியாத்ல வச்சி ரிவீட் அடிச்சிடலாம்...:)
ஹிஹி கலக்கல் மூணு மொக்கை தானை தலைவா!!!
அப்பாடி சி பி ஒரு பதிவு கிடைச்சிருச்சேன்னு சந்தோசமா ஓகே சொல்லி இருப்பாரு ஹிஹி
//மூன்று! இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்!///
அதைவிட இன்னொரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது, சேட்டை!
"3" இப்படி எழுதக் கூடிய ஒரே எண் மூன்றுதான்
:)
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
அழைப்பிற்கு நன்றி அண்ணே. முதல்ல பெரியப்பா எல் கே எழுதட்டும் , அப்புறமா எங்கண்னன் ராம்சாமி. கடைசியா நான் ஹி ஹி .. யூத்னா லாஸ்ட் ஹி ஹி
எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் என்னை கூப்பிட்டதற்கு நன்றி சேட்டை!
////சி.பி.எஸ்ஸும் எல்.கேயும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். பானா ராவன்னாவிடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமான அனுமதி வராவிட்டாலும், உரிமையோடு அழைத்திருக்கிறேன்.///////
உங்களுக்கு இல்லாத உரிமையா சேட்டை? ஒரு சின்ன குழப்படில மெயில் ரிப்ளை பண்ண மறந்துட்டேன் அதான்... ஹி..ஹி.....!
எல்லா மூணுமே நல்லாருக்கு சேட்டை.... !
இது செம கலக்கல்....!
/////4.புரியாத 3 விஷயங்கள்
1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்
2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது
3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது////
”முத்தான மூன்று” - நல்ல பதில்கள் சேட்டை.
வணக்கம் சகோ,
//3.பயப்படும் 3 விஷயங்கள்
1. அறிவுஜீவிகள் / இலக்கியவாதிகளுடன் சினேகம்
2. பான்பராக் போடுபவர்கள் பக்கத்தில் அமர்வது.
3. எஸ்கலேட்டரில் ஏறுவது / இறங்குவது*
(*இது குறித்து ஒரு இடுகை எழுத உத்தேசம்)//
ஆகா...முத்தான மூன்று விடயங்களின் பின், நமக்கு ஒரு எஸ்கலேட்டர் பற்றிய காமெடிப் பதிவும் காத்திருக்கிறது போலிருக்கே.
4.புரியாத 3 விஷயங்கள்
1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்
2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது
3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது//
அண்ணாச்சி யாருக்கோ உள் குத்துப் போடுறாரே...
ஹி...ஹி...
8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
2. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.//
அடிங்....கொய்யாலா..
ஸ்ரேயாவிற்கென்றோர் தனி ப்ளாக் தொடங்கி வருசக் கணக்கா அதில் எழுதாமல் இருக்கிறீங்க சகோ, இதனை விட வேறு ஓர் சாதனை வேண்டியா கிடக்கு.
அவ்..அவ்...
10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
1. போட்டோஷாப் / கோரல் ட்ரா//
ஸப்பா...முடியலை. உங்கள் ஒவ்வோர் பதிவுகளைப் பார்க்கையிலும் கோரல் ட்ரா முடித்தவர் போல இருக்கின்றனவே. இதற்கான காரணம் உங்கள் பதிவுகளில் வரும் படங்கள்.
இதுக்கும் மேலே கற்றுக் கொண்டால் நமக்குத் தான் விருந்து. காரணம் இன்னும் பல காத்திரமான மொக்கைப் பதிவுகள், படங்களோடு அசத்தலாக வருமே.
முத்தான மூன்று விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க. சிபியும்,
உங்களின் ரசனைகளை ரசித்தேன் பாஸ்.
சேட்டைக்கு கோரல், போட்டோசாப் கற்றுத்தர நான் ரெடி
//மூன்றாம் பிறை
மூன்றுமுகம்
த்ரீ இடியட்ஸ் //
மூணு படம் கேட்டா மூணாவே சொல்லிடிங்களே...
//சேலம் தேவா said...
http://tamilpctraining.blogspot.com/
இந்த தளம் உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.//
மிக்க நன்றி நண்பரே! அவசியம் சென்று பார்ப்பேன். :-)
//middleclassmadhavi said...
பதிவு அருமை, அழகு! (மூன்று வார்த்தைகளும் மூன்று எழுத்தில்!)
மூன்று என்னும் எண்ணின் இன்னொரு சிறப்பு, எழுத்திலும் எண்ணிக்கை மூன்று!! :-))//
பார்த்தீங்களா? இது எனக்குத் தோணலே! :-))
நன்றி! நன்றி! நன்றி! ( ’நன்றி’க்கும் மூன்று எழுத்துக்கள் தான்!)
//ஜீ... said...
\\/மூன்று! இந்த எண்ணுக்கு ஒரு அபூர்வமான முக்கியத்துவம் இருக்கிறது. அது என்னவென்றால், இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்!///\\\
எப்பூடி பாஸ்! புல்லரிக்குது! :-)//
பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது என்று போட்டிருக்கிறேனே? :-)
// அட்டகாசம்! :-)//
மீண்டும் மீண்டும் நன்றி நண்பரே!
//Jey said...
பதில்கள் நன்று.//
மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)
//அதெல்லாம் பன்னி டாப்பா எழுதுவாப்ல... அப்படி எழுதலைனா ரியாத்ல வச்சி ரிவீட் அடிச்சிடலாம்...:)//
ரியாத்-லே ரிவிட்டு! ஆஹா, பானா ராவன்னாவுக்கு அடுத்த இடுகைக்கு தலைப்பே கிடைச்சிருச்சு போலிருக்குதே! :-)
//மைந்தன் சிவா said...
ஹிஹி கலக்கல் மூணு மொக்கை தானை தலைவா!!!//
இப்போதைக்கு இம்புட்டுத்தேன்! :-))
//அப்பாடி சி பி ஒரு பதிவு கிடைச்சிருச்சேன்னு சந்தோசமா ஓகே சொல்லி இருப்பாரு ஹிஹி//
அவரு பி.சியிலே எவ்வளவு Draft வச்சிருக்கிறாரோ? வரிசைப்படி தானே வரணும்? :-)
மிக்க நன்றி நண்பரே!
//பெசொவி said...
"3" இப்படி எழுதக் கூடிய ஒரே எண் மூன்றுதான் :)
ஆஹா, இது படுதூக்கலா இருக்குதே! மிக்க நன்றி நண்பரே!
//இராஜராஜேஸ்வரி said...
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி சகோதரி!
//சி.பி.செந்தில்குமார் said...
அழைப்பிற்கு நன்றி அண்ணே. முதல்ல பெரியப்பா எல் கே எழுதட்டும் , அப்புறமா எங்கண்னன் ராம்சாமி. கடைசியா நான் ஹி ஹி .. யூத்னா லாஸ்ட் ஹி ஹி//
அப்போ முதல்லே எழுதின நானு தாத்தாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :-)
மிக்க நன்றி தல! அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எழுதுவதற்கு மேட்டர் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் என்னை கூப்பிட்டதற்கு நன்றி சேட்டை!//
யாருக்கு, உங்களுக்கா? ஆனாலும் இம்புட்டுத் தன்னடக்கம் ஆவாது சொல்லிப்புட்டேன்.
//உங்களுக்கு இல்லாத உரிமையா சேட்டை? ஒரு சின்ன குழப்படில மெயில் ரிப்ளை பண்ண மறந்துட்டேன் அதான்... ஹி..ஹி.....!//
பரவாயில்லை பானா ராவன்னா! நானும் தப்பான ஐ.டிக்கு மடல் அனுப்பிட்டேனோன்னு கூட யோசிச்சேன். all is well that ends well.
//எல்லா மூணுமே நல்லாருக்கு சேட்டை.... ! இது செம கலக்கல்....!
/////4.புரியாத 3 விஷயங்கள்
1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்
2. எல்லா நெடுந்தொடர்களிலும் நாயகி ஜெயிலுக்குப் போவது
3. மனிதர்கள் நாய்களிடம் ஆங்கிலத்தில் பேசுவது////
ரொம்ப ரொம்ப நன்றி பானா ராவன்னா. உங்க இடுகை உங்க ஸ்டைல்லே இதை விட பிரமாதமா வரும்னு தெரியும். ஆவலோடு காத்திட்டிருக்கேன்.
வெங்கட் நாகராஜ் said...
”முத்தான மூன்று” - நல்ல பதில்கள் சேட்டை.//
மிக்க நன்றி வெங்கட்ஜீ! நீங்க ஆரம்பிச்ச சங்கிலித்தொடர் தான் இது! :-))
//நிரூபன் said...
வணக்கம் சகோ,//
வாங்க சகோதரம்!
ஆகா...முத்தான மூன்று விடயங்களின் பின், நமக்கு ஒரு எஸ்கலேட்டர் பற்றிய காமெடிப் பதிவும் காத்திருக்கிறது போலிருக்கே.//
எழுதணும் என்ற எண்ணம் ரொம்ப நாளாவே இருக்குது. சீக்கிரம் எழுதுவேன். கண்டிப்பா காமெடிதான்! :-))
(1. வலையுலக திடீர் நட்புகளும் திடீர் கோபங்களும்)
//அண்ணாச்சி யாருக்கோ உள் குத்துப் போடுறாரே...ஹி...ஹி...//
இல்லை சகோதரம்! நிஜமாகவே புதிராய் இருப்பதால் தான் எழுதினேன். நோ உள்குத்து- யாரும் தவறாய் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
(. ஸ்ரேயாவைப் பற்றி எழுதாமல் இருப்பது.//)
அடிங்....கொய்யாலா..ஸ்ரேயாவிற்கென்றோர் தனி ப்ளாக் தொடங்கி வருசக் கணக்கா அதில் எழுதாமல் இருக்கிறீங்க சகோ, இதனை விட வேறு ஓர் சாதனை வேண்டியா கிடக்கு.அவ்..அவ்...
அதை ஆரம்பிச்சபோது சக-ஆசிரியர்களாய் வருகிறோம் என்று சொன்ன இரண்டு பேர் கோவிச்சுக்கினு போயிட்டாங்க. அதுனாலே தான்...! :-((
போட்டோஷாப் / கோரல் ட்ரா//) -ஸப்பா...முடியலை. உங்கள் ஒவ்வோர் பதிவுகளைப் பார்க்கையிலும் கோரல் ட்ரா முடித்தவர் போல இருக்கின்றனவே. இதற்கான காரணம் உங்கள் பதிவுகளில் வரும் படங்கள்.//
இப்போது ஒரு நண்பரின் உதவியுடன் சிலபல சில்மிஷங்களைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் போட்டோ-ஷாப் போல் வருவதில்லை. அதனால் தான்...
//இதுக்கும் மேலே கற்றுக் கொண்டால் நமக்குத் தான் விருந்து. காரணம் இன்னும் பல காத்திரமான மொக்கைப் பதிவுகள், படங்களோடு அசத்தலாக வருமே.//
உங்களுக்குத் தெரியாததல்ல. presentation என்பதில் என்னை விட மூத்த பதிவர்கள் எவ்வளவு அக்கறை செலுத்துகிறார்கள் என்று. அவர்களின் வழியைத்தான் நானும் பின்பற்ற முயல்கிறேன் - எனது வழியில்! :-))
//முத்தான மூன்று விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க. சிபியும்,
உங்களின் ரசனைகளை ரசித்தேன் பாஸ்.//
மிக்க நன்றி சகோதரம்! உங்களது வருகையும் உற்சாகமூட்டும் பின்னூட்டமும் எனக்கு டானிக் மாதிரி!
//geeyar said...
சேட்டைக்கு கோரல், போட்டோசாப் கற்றுத்தர நான் ரெடி//
மிக்க நன்றி! எங்கே, எப்போது, எப்படி என்று சொல்லுங்க! :-))
//...αηαη∂.... said...
//மூன்றாம் பிறை மூன்றுமுகம் த்ரீ இடியட்ஸ் //
மூணு படம் கேட்டா மூணாவே சொல்லிடிங்களே...//
ஹிஹி! சும்மா ஒரு ஃப்ளோவுலே வந்திருச்சு. மிக்க நன்றி நண்பரே! :-))
// இரண்டுக்கும் நான்குக்கும் இடையே வருகிற ஒரே எண் ’மூன்று’ மட்டும் தான்!//
ஆஹா!!!.. இந்த அரிய கண்டுபிடிப்புக்காகவே உங்களுக்கு யெஸ்பல் பரிசு கொடுக்கலாம்.(எப்பவும் நோபல் பரிசேதான் வாங்கணுமா??..)
தொடர்ந்ததற்கு நன்றி
பக்கத்துலேயே உக்காந்து இந்தப் பதிவை படிச்ச என் பொண்ணுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. :))
சென்னையில் ஆட்டோ பயணம்//
ரொம்பவே பெம்மான விஷயம் இது.
தெலுங்கு & குஜராத்தி//
தெலுங்கு கத்துக்க நான் வேணா ஹெல்ப் செய்யட்டுமா ??:))
எங்கே, எப்போது, எப்படி?
I think you can easily pick up. when you & me free, we can meet with team viewer and gtalk.
பதில்கள் அருமை சேட்டை
//புதுகைத் தென்றல் said...
தொடர்ந்ததற்கு நன்றி! பக்கத்துலேயே உக்காந்து இந்தப் பதிவை படிச்ச என் பொண்ணுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. :))//
அழைத்ததற்கு நன்றி! சிரித்த உங்கள் பொண்ணுக்கும் நன்றி! :-)
//தெலுங்கு கத்துக்க நான் வேணா ஹெல்ப் செய்யட்டுமா ??:))//
30 நாட்களில் தெலுங்கு புத்தகம் வாங்கிட்டேன். சந்தேகம் வந்தா கேட்குறேன் டீச்சர்! :-)
மிக்க நன்றி!
//geeyar said...
எங்கே, எப்போது, எப்படி? I think you can easily pick up. when you & me free, we can meet with team viewer and gtalk.//
ஒரு பயணம் இருக்கிறது. திரும்பி வந்ததும் தனிமடல் அனுப்புகிறேன். மிக்க நன்றி! மிக்க நன்றி!! :-)
//Riyas said...
பதில்கள் அருமை சேட்டை//
மிக்க நன்றி நண்பரே!
Post a Comment