Friday, July 22, 2011

கேப்டனுக்கு ஜே!


"அப்பனே முருகா!" என்று கைகூப்பியபடி, சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த ’ராணி முத்து’ கேலண்டர் முருகனைப் பார்த்தபடியே கண்விழித்தார் கேப்டன்தாஸ்! (தே.மு.தி.க-வில் சேர்வதற்கு முன்னர் இயற்பெயர் மாசிலாமணி!). ஒவ்வொரு நாளும், கடவுள் படத்தையோ அல்லது ஏதாவது அழகான பொருளையே முதலில் பார்த்துவிட்டுத்தான் கண்விழிப்பார். இதனாலேயே அவர் தனது அறையில் முகம்பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அவரது மனைவியும் அறைக்கு காப்பி கொண்டு வருவதில்லை.

வழக்கப்படி எழுந்தவர், தினசரிக் காலண்டரில் தேதி கிழித்து விட்டு அன்றைய தினம், அவரது ராசிக்கென்று என்ன பலன் போட்டிருக்கிறது என்று பார்த்தார். "சோதனை"

"ஆஹா, இன்றைக்கு எந்த வில்லங்கத்திலும் மாட்டிக்கொள்ளக் கூடாது. யாரிடமும் கோபித்துக் கொள்ளக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும், " என்று மனதுக்குள் எண்ணியபடியே பாத்ரூமுக்குள் நுழைந்தவர், அடுத்த வினாடியே மனைவியை அழைத்தார்.

"பாமா, என்னோட டூத் பிரஷ், பேஸ்ட் எங்கே?"

"அதெல்லாம் இல்லீங்க!" மனைவியின் குரல் கேட்டது. "பாருங்க, நிறைய வேப்பங்குச்சி வச்சிருக்கேன். அதாலே பல்லை வெளக்கிட்டு வாங்க!"

"என்னது?" என்று குரலை உயர்த்தியவர் சட்டென்று நிதானத்துக்கு வந்தார். "பொறுமை! பொறுமை! இன்னிக்கு சோதனைன்னு போட்டிருக்கு! பேசாம இருக்கணும்!"

பல்லை விளக்கிவிட்டு, டைனிங் டேபிளுக்கு வந்தார் கேப்டன்தாஸ். "பாமா, காப்பி கொண்டா!"

"காப்பி இல்லீங்க! வெளக்கெண்ணை தானிருக்கு!"

’ரெண்டும் ஒண்ணுதானே!’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டவர், "வேண்டாம், நான் வெளியிலே போயி சாப்பிட்டுக்கறேன்! ஏய் டிரைவர்...!"

"டிரைவர் இன்னிக்கு லீவாம்! தோட்டக்காரன்தான் வண்டியோட்டுவாரு!"

"என்னது?" என்று வெகுண்டெழுந்த கேப்டன்தாஸ், "பொறுமை! பொறுமை!!" என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். "யாரும் வேண்டாம். நானே ஓட்டிக்கிட்டுப்போறேன்!"

காரை நெருங்கியபோது தோட்டக்காரன் ஓடிவந்தார். "சார் சார், வண்டி எடுக்கப்போறீங்களா? டாங்க் காலியாயிருச்சு சார்!"

"முருகா!" என்று பல்லைக் கடித்தார் கேப்டன்தாஸ். "எப்பவும் ஒரு கேன்-லே பெட்ரோல் வச்சிருக்கச் சொல்லியிருக்கேனே. அதை எடுத்திட்டு வா போ!"

"கேன்-லே பெட்ரோல் இல்லை சார்; பினாயில் தான் இருக்கு, பரவாயில்லையா?"

"நான் நடந்தே போறேன்," என்று கிளம்பினார் கேப்டன்தாஸ். ’சே! காலங்கார்த்தாலே மூடைக் கெடுக்கிறாங்க! கடை வேறே பத்து மணிக்குத்தான் திறக்கும்."

தெருவில் இறங்கியதும் பிள்ளையார் கோவில் குருக்கள் எதிரே வருவதைக் கண்டார்.

"வணக்கம் சாமி! இன்னிக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு சாமி! மனசே சரியில்லை," என்று காலைத்தொட்டு வணங்கினார். "ஆசீர்வாதம் பண்ணுங்க சாமி!"

"ஆசீர்வாதமெல்லாம் இல்லை," என்ற குருக்கள். "நீ நாசமாப் போக, மண்ணாப் போக, உருப்படாமப் போக!" என்று சாபமிட்டு விட்டுக் கிளம்பினார்.

கேப்டன்தாஸ் நொந்து நூலாகி விட்டார். தெருமுனை டீக்கடைக்குப் போய் அமர்ந்தார்.

"தம்பி, சூடா ஒரு காப்பி போடுப்பா!"

"ஜில்லுன்னு டீ தான் இருக்கு!" என்று சட்டென்று பதில் வந்தது.

"என்னாய்யா நடக்குது இங்கே? போற இடமெல்லாம் எடக்குமடக்காவே பதில் சொல்றீங்க! நான் யாரு தெரியுமா? எங்க தலைவரு கேப்டன்கிட்டே சொல்லி என்ன பண்ணுறேன்னு பாருங்க!" என்று இரைந்தார் கேப்டன்தாஸ்.

"சும்மாயிருங்க சார்! உங்க கேப்டன் மட்டும் என்ன ஒழுங்கா? சமச்சீர் கல்வியைப் பத்தி அவரு என்ன சொல்லியிருக்காருன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே?"

"அப்படியென்னையா சொல்லிட்டாரு?"

"குதிரை கிடைக்கலேன்னா கழுதைன்னு சொன்னாரா இல்லையா?" அதைக் கேட்டுக்கிட்டு நாங்களே சும்மாயிருக்கோம். காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் பொத்துக்கிட்டு வருதாக்கும்?"

கேப்டன்தாஸ் வாயடைத்து நின்றார்.

17 comments:

test said...

செம்ம கலக்கல் பாஸ்! :-)

test said...

கேப்டனோட படமும் சூப்பர்!
ஒருவேளை கேப்டன் இன்னும் ஸ்டெடி ஆகலையோ?

A.R.ராஜகோபாலன் said...

ஹலோ எங்க ஆரம்பிச்சி எங்க கொண்டாந்து முடிக்கிரிக......
என்ன விளையாட்டு இது

மனம் மிகிழ ரசித்தேன் நண்பா

ஷர்புதீன் said...

//காப்பியில்லே, டீ தான் இருக்குன்னு சொன்னா உங்களுக்கு மட்டும் பொத்துக்கிட்டு வருதாக்கும்?"//

:-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை தான். ஏதோ சொல்லி எங்கேயே எப்படியோ கொண்டுபோய் முடிச்சுட்டீங்களே!

சபாஷ்.

ரிஷபன் said...

இனிமே ஏதாச்சும் சொல்லுவீங்களா.. சொல்லுவீங்களான்னு யாரோ யாரையோ அடிக்கிற சத்தம் கேக்குது..

சேலம் தேவா said...

இந்தளவுக்கு இவரு பேசறதே பெரிய விஷயம்..!!

rajamelaiyur said...

Kalakkal comedy

இராஜராஜேஸ்வரி said...

"குதிரை கிடைக்கலேன்னா கழுதை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வேளை “புள்ளி விவர”மெல்லாம் சொல்லாம விட்டாரே....

வழமைபோல நல்ல செய்தி...

பெசொவி said...

//"குதிரை கிடைக்கலேன்னா கழுதை//

டாகுடரே சொல்லிட்டாரு, எனவே, சேட்டை போஸ்ட் போடாத சமயம் என் ப்ளாகையாவது படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஆஆஆஆஆஆங்!

Sivakumar said...

பெட்ரோலுக்கு பதில் பினாயில். விலைவாசியை பார்த்தால் அதையும் யூஸ் பண்ணும் நிலை வரலாம். கழுதை, கேப்டன், காலால் உதை. சூப்பர் காம்பினேஷன்.

Karthikeyan Rajendran said...

சும்மா போட்டு தாக்கறீங்க போல இருக்கே!

settaikkaran said...

//ஜீ... said...

செம்ம கலக்கல் பாஸ்! :-)//

மிக்க மகிழ்ச்சி நண்பரே!

// கேப்டனோட படமும் சூப்பர்!//

அதுக்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். :-(

//ஒருவேளை கேப்டன் இன்னும் ஸ்டெடி ஆகலையோ?//

அப்படித்தான் தோணுது. இன்னும் பக்குவப்படணும். மிக்க நன்றி நண்பரே!

//A.R.ராஜகோபாலன் said...

ஹலோ எங்க ஆரம்பிச்சி எங்க கொண்டாந்து முடிக்கிரிக......என்ன விளையாட்டு இது//

கேப்டனோட அறிக்கையை வாசிச்சபோதும் எனக்கு இதே கேள்விதான் வந்திச்சு! என்ன விளையாடறாங்களா...?

//மனம் மிகிழ ரசித்தேன் நண்பா//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!!!

//ஷர்புதீன் said...

:-)//

மிக்க நன்றி நண்பரே!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை தான். ஏதோ சொல்லி எங்கேயே எப்படியோ கொண்டுபோய் முடிச்சுட்டீங்களே!//

இது கேப்டன் ஸ்டைல்! எதையாவது ஏப்பைசாப்பையா அறிக்கை விட்டு ஜனங்களைக் குழப்புறது. :-)

//சபாஷ்.//

மிக்க நன்றி! :-)

//ரிஷபன் said...

இனிமே ஏதாச்சும் சொல்லுவீங்களா.. சொல்லுவீங்களான்னு யாரோ யாரையோ அடிக்கிற சத்தம் கேக்குது..//

அது கேட்குதோ இல்லை. தெரியாத்தனமா ஓட்டுப் போட்டுத் தொலைச்சிட்டோமேன்னு நிறைய பேரு தலையிலே அடிச்சுக்கிற சத்தம் கேட்குது இப்பல்லாம்...

மிக்க நன்றி ! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

இந்தளவுக்கு இவரு பேசறதே பெரிய விஷயம்..!!//

Nothing is better than nonsense-ன்னு ஆங்கிலத்துலே சொல்வாங்க நண்பரே! விஷயத்தோட தீவிரம் புரியாம, ஒப்புக்கு அறிக்கை விடுறதெல்லாம் கேலிக்கூத்தா தெரியுதே! மிக்க நன்றி!

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal comedy//

மிக்க நன்றி நண்பரே!

//இராஜராஜேஸ்வரி said...

"குதிரை கிடைக்கலேன்னா கழுதை//

குதிரையும் காணோம்; கழுதையும் காணோம். :-(

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல வேளை “புள்ளி விவர”மெல்லாம் சொல்லாம விட்டாரே....//

அதுவும் நடக்கும் சீக்கிரம்! :-)))

//வழமைபோல நல்ல செய்தி...//

மிக்க நன்றி வெங்கட்ஜீ! :-))

//பெசொவி said...

டாகுடரே சொல்லிட்டாரு, எனவே, சேட்டை போஸ்ட் போடாத சமயம் என் ப்ளாகையாவது படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஆஆஆஆஆஆங்!//

வந்தேன்; பார்த்தேன்; பின்னூட்டமும் போட்டிருக்கிறேன். விரைவில் நிறைய நேரம் ஒதுக்கி இன்னும் நிறைய பதிவுகளை வாசிக்க விரும்புகிறேன். நன்றி நண்பரே! :-)

//! சிவகுமார் ! said...

பெட்ரோலுக்கு பதில் பினாயில். விலைவாசியை பார்த்தால் அதையும் யூஸ் பண்ணும் நிலை வரலாம். கழுதை, கேப்டன், காலால் உதை. சூப்பர் காம்பினேஷன்.//

கேப்டனுக்கு பிரச்சினைகளை அணுகத் தெரியவில்லை என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இது வருந்தத்தக்கது என்பதோடு, ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.

மிக்க நன்றி நண்பரே! :-)

//! ஸ்பார்க் கார்த்தி @ said...

சும்மா போட்டு தாக்கறீங்க போல இருக்கே!//

ஐயையோ, தாக்குறதெல்லாம் வராதுங்க. நக்கல், நையாண்டியோட சரி! :-)
மிக்க நன்றி நண்பரே! அடிக்கடி வாங்க!

middleclassmadhavi said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவு...

settaikkaran said...

//middleclassmadhavi said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பதிவு...//

மிக்க நன்றி! :-)