Tuesday, March 15, 2011

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்


வரலாற்றுச்சுருக்கம்: ஆந்தைக்குளம் என்னும் சிற்றூரில் அவதரித்த திருவாளர் ஐயாக்கண்ணு, பில் கேட்ஸ் எழுதிய ஒரு கடிதத்தை எதிர்மறையாகப் புரிந்துகொண்டு, அமெரிக்காவுக்குச் சென்று மைக்ரோஸாஃப்டில் பணிபுரிய ஆசைப்படுகிறார். ஆனால், சென்னைக்கு வந்த அவருக்கு விசா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

இனி.....!

"அமெரிக்கா ஒரு அறிவாளியை இழந்திருச்சு அண்ணாச்சி," களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவுக்கு ஆறுதல் சொன்னான். "அப்படி அவங்க என்ன கேட்டு நீங்க தப்பா பதில்சொல்லிட்டீய அண்ணாச்சி?"

"அத ஏம்லே கேக்க? சிங்கிளா-ன்னு கேட்டாக. சரி, சிங்கிள் டீ கொடுப்பாகளோன்னு நெனச்சுக்கிட்டுகட்டிங்னு சொல்லிப்போட்டேம். விசா கெடயாதுன்னு சொல்லிட்டாக!" என்று விசனப்பட்டுக்கொண்டார் ஐயாக்கண்ணு.

"ஐயையோ அண்ணாச்சி! ஒங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சான்னு தெரிஞ்சுக்கத்தான் சிங்கிளா-ன்னு கேட்டிருக்காக!" என்று விளக்கினான் கருமுத்து. "ஒண்டிக்கட்டையா இருந்தா இங்கிலீஷுலே சிங்கிள்; கல்யாணம் ஆயிருச்சுன்னா மேரீட்(Married)-னு சொல்லணும்."

"இந்த எளவெல்லாம் எனக்கு என்னலே தெரியும்?" ஐயாக்கண்ணு சலித்துக்கொண்டார். "அது போவட்டும். என்னலே ஆட்டோ போய்க்கிட்டேயிருக்கு? இப்போ எங்க போறோம்?"

"கடியப்பட்டணம் கந்தப்பனைப் பார்க்க!" என்று பதிலளித்தான் கருமுத்து. "அவரு மனசு வச்சா நீங்க அமெரிக்காவென்ன, அம்பாசமுத்திரத்துக்கே போவலாம்!"

கருமுத்து இவ்வளவு நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில், தனது அலுவலகத்தில் கடியப்பட்டணம் கந்தப்பன் மிகுந்த கோபத்தில் ஆழ்ந்திருந்தார்.

"தமிள்நாட்டுலே இத்தனை கட்சியிருந்தும், எனக்கு ஒருத்தனும் சீட் தரமாட்டேன்னுட்டானே?" என்று காலேஜ்பீடியை உறிஞ்சியவாறே புகைந்தார். "நாமளே கட்சி ஆரம்பிச்சு மூன்னூத்தி நாற்பத்தி ரெண்டு தொகுதியிலேயும் ஆளை நிறுத்திருவோம். அப்பத்தான் நம்ம பலம் புரியும்!"

"அண்ணே, மொத்தமே தொகுதி இருநூத்தி முப்பத்தி நாலுதாண்ணே!" என்று கூறியவாறே, சந்தடி சாக்கில் தலைவரின் பீடிக்கட்டிலிருந்து ஒன்றை உருவினான் கொக்கிரகுளம் கோவிந்தன்.

"இப்போ குறைச்சிட்டாங்களா?" என்று கந்தப்பன் அசடுவழியக் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அலுவலகத்தில் இருவர் நுழைவதைக் கவனித்தார். "யாரோ வர்றாங்க, என்னான்னு போய்க்கேளு!"

கொக்கிரகுளம் கோவிந்தன் எழுந்து வரவேற்கப்போனபோது, ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணுவும் களக்காடு கருமுத்துவும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

"அண்ணாச்சி! இப்பம் நாம பாக்கப்போற ஆளு எந்தக் கட்சிலயும் இல்லே,"ஐயாக்கண்ணுவின் காதில் கிசுகிசுத்தான் களக்காடு கருமுத்து. "ஆனா, எல்லாக் கட்சிலேருந்தும் பொட்டி வாங்கிருவாரு!"

"ஓஹோ! சுருட்டு ரொம்ப குடிப்பாரோ?" ஐயாக்கண்ணு புரியாமல் வினவினார்.

"அட தீப்பொட்டியில்லே அண்ணாச்சி; பணப்பொட்டி!" என்றான் கருமுத்து. "இவுரு கிட்டே ஒரு கடுதாசி வாங்கிப்புட்டோமுன்னா டெல்லிக்குப்போயி மிசா வாங்கிரலாம்."

"லேய் அது மிசா இல்லே மக்கா; விசா!" என்று திருத்தினார் ஐயாக்கண்ணு. "இதுதாம்லே கடேசி. இங்கண சோலி நடக்கலீண்ணா, நான் ஊருக்குப்போயி செங்கச்சூளையையும் ஓட்டு ஃபேக்டரியும் கவனிச்சுக்கிடுதேன். அமெரிக்காயாவது பேரிக்காயாவது..."

"என்ன அண்ணாச்சி, இப்புடிப் பொசுக்குண்ணு சொல்லிப்புட்டீயளே! அமெரிக்காவுக்குப் போயி காசை எண்ணுவீயளா ஆந்தைக்குளத்துக்குப் போயி செங்கலையும் ஓட்டையும் எண்ணிட்டிருப்பீயளா?"

இருவரும் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டிருந்தபோதே, கொக்கிரகுளம் கோவிந்தன் இடைமறித்தான்.

"யாருங்க நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?"

"இவரு பேரு ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. தலைவரைப் பார்க்க வந்திருக்கோம்," என்று களக்காடு கருமுத்து அறிமுகப்படுத்தியதும், கோவிந்தன் அவரை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். பிறகு...

"உட்காருங்க, போய் சொல்லிட்டு வர்றேன்!" என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக கந்தப்பனை நோக்கி விரைந்தான்.

"அண்ணே! நம்ம கட்சி சார்பா போட்டியிட முத வேட்பாளர் கிடைச்சாச்சு! அதோ முட்டக்கோசை முழுசா முழுங்கினது மாதிரி முழிச்சிட்டிருக்காரே, அவரு பேரு ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு!"

"யாரு அந்த வழுக்கைத்தலையா? பார்த்தா முள்ளம்பண்ணித்தோலிலே வடிகட்டுன முட்டாளாட்டம் இருக்காரு!"

"அந்த மாதிரியாளுங்கதான் நமக்கு சரிவரும் அண்ணே!" என்று காதில் கிசுகிசுத்தான் கோவிந்தன். "விபரமுள்ளவன் எவனாவது நம்ம கட்சிக்கு வருவானா?"

"என்னது?"

"அதாவது, விபரமுள்ளவன் நம்ம கட்சிக்கு வந்தா, சீக்கிரமே தொழில் கத்துக்கிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சிருவான். நம்ம ஓட்டு பிரிஞ்சிரும். இந்த மாதிரி ஆசாமின்னா, உடல் மண்ணுக்கு, குடல் பீருக்குன்னு கோஷம் போடுவானுங்க. என்ன சொல்றீங்க?"

"அதுவும் சரிதான்!"

"அண்ணே! போதாக்குறைக்கு அந்தாளுக்கு ஊரு முழுக்க ஓட்டு இருக்கும்போலிருக்கு. நான் போகும்போது ஓட்டைப்பத்திக் கிசுகிசுன்னு பேசிட்டிருந்தாங்க!"

"அப்படியா? ஓண்ணு பண்ணுவோம்! அவங்களை ஒரு நல்ல பாருக்குக் கூட்டிட்டுப்போயி தண்ணி வாங்கிக்கொடுத்து அப்படியே அமுக்கிரலாம்!"

அடுத்த கணமே கடியப்பட்டணம் கந்தப்பனும் கொக்கிரகுளம் கோவிந்தனும் ஐயாக்கண்ணுவை நெருங்கினர்.

"வாங்க ஐயா!" என்று கும்பிட்டார் கந்தப்பன். "மனு கொடுக்கவா வந்திருக்கீங்க? ஜீப்புலே ஏறுங்க; பேசிட்டே போலாம்!" என்று வாசலை நோக்கி விரையவும், ஐயாக்கண்ணு வழக்கம்போல பேந்தப் பேந்த விழித்தார்.

"என்னலே, ஜீப்புலேயே அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாகளோ?"

"பேசாம வாங்க அண்ணாச்சி!" என்று கருமுத்து ஐயாக்கண்ணுவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று ஜீப்பில் அமரவைக்கவும், கந்தப்பனின் ஜீப் நகரின் பிரபலமான பாரை நோக்கி விரைந்தது. இறங்கி உள்ளே நுழைந்ததும், ஐயாக்கண்ணு சற்று மிரண்டு போனார்.

"லே கருமுத்து, என்ன மக்கா ஒரே இருட்டாயிருக்கு? வெனையை வெலை கொடுத்து வாங்கிப்புட்டமா?"

"பயராதீங்க அண்ணாச்சி! இது பெரிய மனுசங்க வாற எடமில்லா? இருட்டாத்தான் இருக்கும்!" என்று ஆசுவாசப்படுத்தினான் கருமுத்து.

நால்வரும் ஒரு மேஜையில் அமர்ந்ததும், பார் சிப்பந்தி அவர்களை நெருங்கி ஆர்டர் கேட்கத்தொடங்கினார்.

"சிங்கிள் லார்ஜ் நெப்போலியன்!" என்றார் கந்தப்பன்.

"சிங்கிள் லார்ஜ் ஜானி வாக்கர்!" என்றான் கோவிந்தன்.

மீண்டும் சிங்கிள்....! இம்முறை ஐயாக்கண்ணு சொதப்பத்தயாராயில்லை. ஏற்கனவே கருமுத்து விளக்கியிருந்ததால், அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பார் சிப்பந்தியிடம் சொன்னார்.

"மேரீட் லார்ஜ் ஐயாக்கண்ணு!"

"வாட்?" என்று குழம்பினார் சிப்பந்தி.

"என்னங்க ஐயா, எதுக்கு உங்க பேரைச் சொல்றீங்க? என்ன குடிக்கப்போறீங்கன்னு சொல்லுங்க!" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கோவிந்தன் விளக்கினான். ஒருவழியாக, கருமுத்துவே ஆர்டர் கொடுத்து முடித்ததும், ஐயாக்கண்ணுவும் கந்தப்பனும் அரசியல் குறித்து உரையாடத்தொடங்கினார்கள்.

"ஐயாக்கண்ணு! என்னவோ ஓட்டைப் பத்திப் பேசிட்டிருந்தீங்களாமே? உங்களாலே எவ்வளவு ஓட்டைத் தேத்த முடியும்?" என்று விஷயத்துக்கு வந்தார் கந்தப்பன்.

"என்ன அப்படிக் கேட்டுப்புட்டீய? எங்கூரு மட்டுமில்லே, சுத்துப்பட்ட பத்துப்பட்டியிலேயும் ஐயாவுக்குத் தெரியாம ஒருபய ஓட்டை மாத்த மாட்டான் தெரியுமா?" என்று கருமுத்து விளக்கவும், கந்தப்பன் அசந்துபோனார்.

"அப்படியா? கடைசியா எத்தனை ஓட்டை மாத்தியிருப்பீங்க அண்ணாச்சி?" என்று சற்று பணிவுடனும் பயத்துடனும் கேட்டார் கந்தப்பன்.

"கடைசியா...., எப்படியும் ஒரு அம்பதுலேருந்து அறுபதினாயிரம் ஓட்டை மாத்தியிருப்போம்!" என்று பெருமிதத்துடன் சொன்னார் ஐயாக்கண்ணு.

"அடேங்கப்பா, அப்போ நீங்க ஒருவார்த்தை சொல்லிட்டா ஓட்டுக்குப் பஞ்சமேயிருக்காதுன்னு சொல்லுங்க!" என்று வியப்புடன் கேட்டார் கந்தப்பன். "இப்படியொருத்தரைத் தான் நான் தேடிட்டிருந்தேன்!"

"அது போகட்டும் அண்ணாச்சி, ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கேப்பீங்க?" என்று கிசுகிசுப்பாகக் கேட்டான் கோவிந்தன்.

"உங்களுக்கு எம்புட்டு வேணும்?"

"மொத்தமும் எங்களுக்கே வேணும் அண்ணாச்சி! ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் தர்றேன். போதுமா?"

"..நூறா...?" ஐயாக்கண்ணு அயர்ந்துவிட்டார். "எதுக்கு அம்புட்டு?"

கருமுத்து இடைமறித்தான். "சரி, அண்ணாச்சி ஏற்பாடு பண்ணிருவாரு! முதல்லே ஒரு பொட்டிக்கு ஏற்பாடு பண்ணிருங்க!"

"அதுக்கென்ன, இன்னிக்கே பண்ணிருவோம்!"

ஐயாக்கண்ணு கருமுத்துவின் காதைக்கடித்தார். "லேய் கோட்டிப்பயமக்கா, அம்புட்டு ஓட்டையும் ஒரு பொட்டியிலே எப்படிலே...? என்னலே பெனாத்துகே...?"

"அண்ணாச்சி! அவுக சொல்லுறது வேறே; நீங்க பேசுறது வேறே! வலிய வர்ற சீதேவியை விட்டுப்புடாதீக! பேசாம தலையாட்டிட்டிருங்க! நடக்குறதப் பாருங்க!"

"அண்ணாச்சி!" கோவிந்தன் பேச ஆரம்பித்தான். "நீங்க எங்க கட்சியிலே இணைஞ்சது பத்தி பேப்பரிலே செய்தி கொடுக்கணும். உங்க போட்டோ இருக்குமா?"

சற்றே தயங்கினாலும், அருகிலிருந்த கருமுத்து ஜாடை காட்டவே, ஐயாக்கண்ணு தன்னிடமிருந்த ஒரே ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்தார்.

"நல்லாயிருக்கே படம்!" கந்தப்பன் படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். "இம்புட்டு மாடு வளர்க்கறீங்களா அண்ணாச்சி? ஒரு பெரிய பண்ணையே வச்சிருப்பீங்க போலிருக்குதே!"

"ஆமா," என்று புன்னகைத்தார் ஐயாக்கண்ணு. "பத்திரிகையிலே போடுறதாயிருந்தா மறக்காம கீழே ஒரு குறிப்பு போடணுமுன்னு சொல்லுங்க! படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்."

தொலைக்காட்சியில் பாடல் ஒலித்தது: "சிங்கமொன்று புறப்பட்டதே!"

(தொடரும்)

62 comments:

Pranavam Ravikumar said...

மிகவும் அருமை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்... நடத்துங்க..

சக்தி கல்வி மையம் said...

நல்லா இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹ ஹா ஹா...
ஒரு நல்ல காமெடி சினிமா பார்த்த பீலிங்.....

சி.பி.செந்தில்குமார் said...

கடைசில பஞ்ச்சிங்கா ஒரு பாட்டை போட்டு விட்டீங்களே.. ஹா ஹா சிரிச்சு மாளலை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படு ஜோராக்கொண்டு போனீங்க. சடர்ன்னா ப்ரேக் போட்டு முடிச்சுட்டீங்களேன்னு தோணுது.

மிகவும் ரசித்த வரிகள்:

//"என்னலே, ஜீப்புலேயே அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாகளோ?"//


//மீண்டும் சிங்கிள்....! இம்முறை ஐயாக்கண்ணு சொதப்பத்தயாராயில்லை. ஏற்கனவே கருமுத்து விளக்கியிருந்ததால், அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பார் சிப்பந்தியிடம் சொன்னார்.

"மேரீட் லார்ஜ் ஐயாக்கண்ணு!"//

//"அண்ணாச்சி! அவுக சொல்லுறது வேறே; நீங்க பேசுறது வேறே! வலிய வர்ற சீதேவியை விட்டுப்புடாதீக! பேசாம தலையாட்டிட்டிருங்க! நடக்குறதப் பாருங்க!"//

//படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்.//

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்க.........

Yoga.s.FR said...

சேட்டைக்காரனா,கொக்கா?அறுபதாயிரம் "ஓட்டுக்கும்" ஐநூறுப்படி????????????அப்பா,இப்பவே கண்ணக் கட்டுதே?(வடை தான் இல்லைன்னுட்டீங்க,ஒரு சிங்கிள் டீயாவது...............?!"செந்தில் பாணியில் படிக்கவும்")

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே ஒரு டவுட்.. அய்யாக்கண்னு என்பது பெயர்ச்சொல்லாக வரும்.. ஐயா என்பது மரியாதைக்குரிய சொல்லாக (சார்) வரும்.. ஐயாக்கண்ணு என வருமா? ( பப்ளிஷ்க்கு அல்ல)

வை.கோபாலகிருஷ்ணன் said...

படு ஜோராக்கொண்டு போனீங்க. சடர்ன்னா ப்ரேக் போட்டு முடிச்சுட்டீங்களேன்னு தோணுது.

மிகவும் ரசித்த வரிகள்:

//"என்னலே, ஜீப்புலேயே அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போயிருவாகளோ?"//


//மீண்டும் சிங்கிள்....! இம்முறை ஐயாக்கண்ணு சொதப்பத்தயாராயில்லை. ஏற்கனவே கருமுத்து விளக்கியிருந்ததால், அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பார் சிப்பந்தியிடம் சொன்னார்.

"மேரீட் லார்ஜ் ஐயாக்கண்ணு!"//

//"அண்ணாச்சி! அவுக சொல்லுறது வேறே; நீங்க பேசுறது வேறே! வலிய வர்ற சீதேவியை விட்டுப்புடாதீக! பேசாம தலையாட்டிட்டிருங்க! நடக்குறதப் பாருங்க!"//

//படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்.//

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்க.........

சி.பி.செந்தில்குமார் said...

>>>உடல் மண்ணுக்கு, குடல் பீருக்குன்னு கோஷம் போடுவானுங்க. என்ன சொல்றீங்க?"


ada.. அட,,, புதுசா இருக்கே.. நோட் பண்ணிக்கறேன்.. ஹி ஹி உடல் மண்ணுக்கு குடல் ஜின்னுக்கு அப்படின்னா இன்னும் எதுகை மோனையா இருக்கும்னு நினைக்கறேன்

sudhanandan said...

கிளப்புங்க அப்பு கிளப்புங்க

பொன் மாலை பொழுது said...

// "லேய் கோட்டிப்பயமக்கா,//

இது எந்த பகுதி வசவு சேட்டை? பல நேரங்களில் ராஜ் நாராயணின் கதைகளில் இந்த வசவை படித்ததுண்டு.

Philosophy Prabhakaran said...

வெல்டன் சேட்டை... ஆனால் இடுகையின் இறுதியில் சரிவர முடிக்காமல் விட்டது போல இருக்கிறது... அய்யாக்கண்ணுவை வைத்து இன்னும் கொஞ்சம் விளையாடியிருக்கலாம்...

Anonymous said...

புது கேரக்டரை வரவேற்கிறோம்

Anonymous said...

அய்யாக்கண்ணு கலக்கட்டும் எங்களை சிரிப்பு கடலில் மூழகடிக்கட்டும்

Anonymous said...

ஆனா, எல்லாக் கட்சிலேருந்தும் பொட்டி வாங்கிருவார//
எந்த வரியும் சோடை போகலை

சௌமியா said...

சேட்டை, இன்னும் சிரித்துக் கொண்டேயிருக்கிறேன். இதன் லிங்க்-ஐ வலைப்பூக்கள் இல்லாத எனது நட்புக்களுக்கும் அனுப்பப் போகிறேன். Hope you won't mind. :-))

கலக்குங்க, கலக்குங்க, கலக்கிட்டே இருங்க...!

எல் கே said...

யப்பா முடியலை சேட்டை. பட்டாசு கிளப்புங்க

middleclassmadhavi said...

சிலேடை வார்த்தைகளின் சிலம்பாட்டம்!! :))

sathishsangkavi.blogspot.com said...

சும்மா நச்சுன்னு இருக்கு...

Unknown said...

kalakkal sir, akmark settai sir pathivu:-)))))) sema comedy..

நிரூபன் said...

வணக்கம் நவரசங்கள் கலந்து, நடை முறை அரசியலின் ஒரு சில பகுதிகளை வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள். உங்கள் நகைச்சுவைகள் அருமை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

Ram said...

காமெடி சேட்டை காமெடி

Unknown said...

கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
இது கூட டெம்ளேட் கமெண்டு தான்

Unknown said...

அசத்தல் வரிகள்..

//அதோ முட்டக்கோசை முழுசா முழுங்கினது மாதிரி முழிச்சிட்டிருக்காரே, அவரு பேரு ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு!"//
//விபரமுள்ளவன் நம்ம கட்சிக்கு வந்தா, சீக்கிரமே தொழில் கத்துக்கிட்டு புதுக்கட்சி ஆரம்பிச்சிருவான். //
//.....படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு//

Unknown said...

சுகமாய் தொடரட்டும்..

சிநேகிதன் அக்பர் said...

மற்ற தொகுதிக்கு பதிவுலகத்திலிருந்து ஆள் அனுப்புவோமா :)

ரிஷபன் said...

ஐயாக்கண்ணு.. உங்கள என்னால கூட காப்பாத்த முடியாது சேட்டைகிட்ட இருந்து..

vasu balaji said...

மேரீட் லார்ஜ் அய்யாக்கண்ணு:)))
சேட்டை ஆன் த ராக்ஸ்=))))))

settaikkaran said...

//Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

மிகவும் அருமை!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சமுத்ரா said...

:) //

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...

ம்... நடத்துங்க..//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வேடந்தாங்கல் - கருன் said...

நல்லா இருக்கு...//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹ ஹா ஹா...ஒரு நல்ல காமெடி சினிமா பார்த்த பீலிங்.....//

இது குறுந்தொடர் மாதிரி இன்னும் வரும். :-)
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

கடைசில பஞ்ச்சிங்கா ஒரு பாட்டை போட்டு விட்டீங்களே.. ஹா ஹா சிரிச்சு மாளலை...//

ஆமாம் தல! அரசியல்லே என்ட்ரீ ஆவுறாரே? :-)
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

படு ஜோராக்கொண்டு போனீங்க. சடர்ன்னா ப்ரேக் போட்டு முடிச்சுட்டீங்களேன்னு தோணுது.//

இல்லீங்க! இதுலே "தொடரும்"னு கடைசியிலே போட மறந்திட்டேன். உங்களைப் போல சிலர் குறிப்பிட்டதால் திருத்தியிருக்கிறேன். இது தொடரும்!

//வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்க.........//

தேர்தல் சீசனாச்சே! கண்டிப்பா தொடரும்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Yoga.s.FR said...

சேட்டைக்காரனா,கொக்கா?அறுபதாயிரம் "ஓட்டுக்கும்" ஐநூறுப்படி????????????அப்பா,இப்பவே கண்ணக் கட்டுதே?//

அவசரப்படாதீங்க! இது முதல் எபிசோட் தான்! போகப்போக நிறைய இருக்கு!

//(வடை தான் இல்லைன்னுட்டீங்க,ஒரு சிங்கிள் டீயாவது...............?!"செந்தில் பாணியில் படிக்கவும்")//

ஐயாக்கண்ணுவுக்கு ஓட்டுப்போட்டா எல்லாருக்கும் ஒரு டீ பாய்லர் இலவசமாகத் தரப்படும்! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே ஒரு டவுட்.. அய்யாக்கண்னு என்பது பெயர்ச்சொல்லாக வரும்.. ஐயா என்பது மரியாதைக்குரிய சொல்லாக (சார்) வரும்.. ஐயாக்கண்ணு என வருமா? ( பப்ளிஷ்க்கு அல்ல)//

இருக்கலாம் தல. அவ்வளவா இலக்கணம் தெரியாது. ஆனா, இன்னொருத்தர் சாட்-லே இதைச் சுட்டிக்காட்டினாரு! ஐயாக்கண்ணுவுக்கு நியூமராலஜிலே நம்பிக்கை காரணமா இப்படி வச்சிருப்பார் போலிருக்குது! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

>>>உடல் மண்ணுக்கு, குடல் பீருக்குன்னு கோஷம் போடுவானுங்க. என்ன சொல்றீங்க?"

ada.. அட,,, புதுசா இருக்கே.. நோட் பண்ணிக்கறேன்.. ஹி ஹி உடல் மண்ணுக்கு குடல் ஜின்னுக்கு அப்படின்னா இன்னும் எதுகை மோனையா இருக்கும்னு நினைக்கறேன்//

யார் யாருக்கு எது புடிச்சிருக்கோ, அதை வச்சுக்கலாமே? :-))
ஆனா, நீங்க சொன்னது இன்னும் நல்லாயிருக்கு தான்!

settaikkaran said...

//sudhanandan said...

கிளப்புங்க அப்பு கிளப்புங்க//

மிக்க நன்றி! கிளப்பிருவோம்! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

// "லேய் கோட்டிப்பயமக்கா,// இது எந்த பகுதி வசவு சேட்டை? பல நேரங்களில் ராஜ் நாராயணின் கதைகளில் இந்த வசவை படித்ததுண்டு.//

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சகஜமானது. கரிசல்காட்டு எழுத்தாளரின் கதையில் வருவதில் வியப்பில்லை! :-)

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

வெல்டன் சேட்டை... ஆனால் இடுகையின் இறுதியில் சரிவர முடிக்காமல் விட்டது போல இருக்கிறது... அய்யாக்கண்ணுவை வைத்து இன்னும் கொஞ்சம் விளையாடியிருக்கலாம்...//

முதலிலேயே "தொடரும்" என்று போடாமல் விட்டுவிட்டேன் நண்பரே! இப்போது சரிசெய்து விட்டேன். ஐயாக்கண்ணு வாராவாரம் வருவார்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

புது கேரக்டரை வரவேற்கிறோம்//

புது கேரக்டர் இல்லை நண்பரே! இதுதான் நான் ஆரம்பத்தில் உருவாக்கிய கதாபாத்திரங்களில் எனக்கே மிகவும் பிடித்தமானவர்! :-)

//அய்யாக்கண்ணு கலக்கட்டும் எங்களை சிரிப்பு கடலில் மூழகடிக்கட்டும்//

உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தொடர்ந்து எழுத முயல்வேன்.

//எந்த வரியும் சோடை போகலை//

மிக்க நன்றி நண்பரே! :-))

settaikkaran said...

//சௌமியா said...

சேட்டை, இன்னும் சிரித்துக் கொண்டேயிருக்கிறேன். இதன் லிங்க்-ஐ வலைப்பூக்கள் இல்லாத எனது நட்புக்களுக்கும் அனுப்பப் போகிறேன். Hope you won't mind. :-))//

வாங்க மேடம்! உங்களுக்குப் பிடித்திருப்பது இருக்கட்டும்; அதை பிறருக்கு சிபாரிசு செய்வதாகச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

// கலக்குங்க, கலக்குங்க, கலக்கிட்டே இருங்க...!//

மிக்க நன்றி மேடம்!

settaikkaran said...

//எல் கே said...

யப்பா முடியலை சேட்டை. பட்டாசு கிளப்புங்க//

மிக்க நன்றி கார்த்தி! :-))

settaikkaran said...

//middleclassmadhavi said...

சிலேடை வார்த்தைகளின் சிலம்பாட்டம்!! :))//

ஆஹா! அடுக்குமொழியில் பாராட்டியமைக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சங்கவி said...

சும்மா நச்சுன்னு இருக்கு...//

ஆஹா! மிக்க நன்றி நண்பரே! :-))

settaikkaran said...

//இரவு வானம் said...

kalakkal sir, akmark settai sir pathivu:-)))))) sema comedy..//

மிக்க நன்றி நண்பரே - உங்கள் தொடரும் கருத்துக்களுக்காக...! :-)

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் நவரசங்கள் கலந்து, நடை முறை அரசியலின் ஒரு சில பகுதிகளை வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள். உங்கள் நகைச்சுவைகள் அருமை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.//

தளராமல் பல வலைப்பூக்களுக்குச் சென்று தாராளமாகப் பாராட்டுகிற உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் நண்பரே! :-))

settaikkaran said...

//தம்பி கூர்மதியன் said...

காமெடி சேட்டை காமெடி//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//மைந்தன் சிவா said...

கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
இது கூட டெம்ளேட் கமெண்டு தான்//

அதற்கென்ன நண்பரே! நீங்கள் வந்து பின்தொடரத்தொடங்கியிருப்பதே பெருமகிழ்ச்சி! எப்போது வேண்டுமானாலும் கமெண்டுங்கள்! :-))

மிக்க நன்றி நண்பரே

settaikkaran said...

//பாரத்... பாரதி... said...

அசத்தல் வரிகள்..//

முழுமையாக ரசித்துப்படித்திருக்கிறீர்கள் என்பதை மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ள் முடிகிறது.

// சுகமாய் தொடரட்டும்..//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

மற்ற தொகுதிக்கு பதிவுலகத்திலிருந்து ஆள் அனுப்புவோமா :)//

அண்ணே! வேட்பாளர்களை நீங்க தேர்வு செய்து அனுப்புங்களேன்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//ரிஷபன் said...

ஐயாக்கண்ணு.. உங்கள என்னால கூட காப்பாத்த முடியாது சேட்டைகிட்ட இருந்து..//

அவ்வளவு கொடுமை பண்ணிட்டேனா எங்கூருக்காரருக்கு...? :-))
மிக்க நன்றி! :-))))

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

மேரீட் லார்ஜ் அய்யாக்கண்ணு:)))
சேட்டை ஆன் த ராக்ஸ்=))))))//

பின்னூட்டத்திலே கூட ஐயாவோட "பஞ்ச்" காணக்கிடைக்கிறது பாருங்களேன்! :-)
மிக்க நன்றி ஐயா!

Anonymous said...

கதைப்பாத்திரங்களை அருமையாக படைத்தும், அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பை சமமாக பகிர்ந்துள்ளது கதையோட்டத்தை விறு விறுப்பாக்கி உள்ளது.

ஹ ர ணி said...

இயல்பான நகைச்சுவை. எல்லாம் மறந்து ரசிக்க முடிகிறது. தவிரவும் யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை எழுத திறன் வேண்டும். உங்களுக்கிருகிறது. வாழ்த்துக்கள்.

Arun Ambie said...

//"பத்திரிகையிலே போடுறதாயிருந்தா மறக்காம கீழே ஒரு குறிப்பு போடணுமுன்னு சொல்லுங்க! படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்."//
இந்தக் குசும்புதான் ஹைலைட்.... சூப்பர்!!

settaikkaran said...

//"குறட்டை " புலி said...

கதைப்பாத்திரங்களை அருமையாக படைத்தும், அவர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பை சமமாக பகிர்ந்துள்ளது கதையோட்டத்தை விறு விறுப்பாக்கி உள்ளது.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//Harani said...

இயல்பான நகைச்சுவை. எல்லாம் மறந்து ரசிக்க முடிகிறது. தவிரவும் யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை எழுத திறன் வேண்டும். உங்களுக்கிருகிறது. வாழ்த்துக்கள்.//

தாராளமாகப் பாராட்டி உற்சாகமூட்டியதற்கும் வருகைக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Arun Ambie said...

//"பத்திரிகையிலே போடுறதாயிருந்தா மறக்காம கீழே ஒரு குறிப்பு போடணுமுன்னு சொல்லுங்க! படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்."//

இந்தக் குசும்புதான் ஹைலைட்.... சூப்பர்!!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

பெசொவி said...

//படத்துலே நட்டநடுப்புலே இருக்கிறவருதான் ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு. மத்ததெல்லாம் எருமை மாடுன்னு கண்டிசனா போட்டிரணும்."
//

settai rocks!!!!!!!1