Sunday, March 20, 2011

வீட்டுக்கு வீடு வாசப்படி

"ஆரம்பிச்சிட்டீங்களா? காலைலே எழுந்திரிச்சதும் காளைமாடு கழநீரு குடிக்கிறாமாதிரி காப்பியை உறிஞ்ச வேண்டியது, கையிலே பேப்பரை எடுத்து வச்சுக்கிட்டு பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குப் படிக்கிறா மாதிரி படிக்க வேண்டியது. வயசாச்சே தவிர கொஞ்சமாவது பொறுப்பிருக்கா? சுறுசுறுப்பா போயி காய்கறி வாங்கிட்டு வருவோம், சமையலுக்கு ஒத்தாசையா நறுக்கிக் கொடுப்போமுன்னு தோணுதா மனுசனுக்கு?"

சமையலறையிலிருந்தவாறே, புடவைகட்டிய சித்துவைப்போல பொளந்துகட்டிக்கொண்டிருந்த மனைவி பார்வதியின் கமெண்டரியைக் கேட்டு எரிச்சலுற்ற ஜம்புநாதன், பையை எடுத்துக்கொண்டு தோளில் ஒரு துண்டைப்போட்டுக்கொண்டு காய்கறி வாங்கக்கிளம்பினார். அவரது மனசாட்சி தொண்டையைச் செருமிக்கொண்டு எஃப்.எம்.ரேடியோ போலப் பேச ஆரம்பித்தது:

"அவ எவ்வளவு திட்டினாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. இன்னும் கொஞ்சநாளைக்கு அவ மனசு நோகும்படியா எதையும் செய்யக்கூடாது. கொஞ்சநாள்தானே...இன்னும் கொஞ்சநாள் தானே...?" பெருமூச்சுடன் வெளியேறினார் மனைவியிடம் டோஸ் வாங்கி சொம்புநாதனாகிய ஜம்புநாதன்.

அவர் வெளியேறியதும் பார்வதியின் கவனம் கால்முதல் தலைவரை போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த மகள் சொர்ணாவின் மீது திரும்பியது.

"அடியேய் சின்னவளே! மணி ஏழாகப்போகுது. இன்னும் என்னடி தூங்கிட்டிருக்கே? நாளைக்கு இன்னொருவீட்டுக்குப் போறவ இப்படியா இருக்கிறது? உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும். ஆம்புள மாதிரி கொர்கொர்னு கொறட்டை விட்டுக்கிட்டு....! எழுந்திரு சோம்பேறி!"

"இன்னிக்கு சண்டே தானேம்மா....ஏம்மா இப்படி..?" என்று தூக்கக்கலக்கத்தில் புரண்டு, கோபத்தோடு கண்விழித்த சொர்ணாவுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.

"சண்டேயன்னிக்கு சண்டை போடக்கூடாதுன்னு இண்டியன் பீனல்கோடுலே சொல்லியிருக்காங்களா? எழுந்திருடீ!"

சொர்ணாவின் தூக்கம் கலைந்துபோகவும், குறட்டைவிட்டுக்கொண்டிருந்த அவளது மனசாட்சி கொசுக்கடி பட்டதுபோல விசுக்கென்று விழித்துக்கொண்டது.

"திட்டினால் திட்டட்டும். பதிலே சொல்லக்கூடாது. இன்னும் கொஞ்ச நாட்கள்தானே? அம்மா எவ்வளவு கோபப்பட்டாலும் எதிர்த்துப் பேசக்கூடாது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் கொஞ்சநாட்களுக்குத் தானே?"

ஆனால், அசோக் முன்கோபக்காரனாச்சே! அடுத்து அம்மா அவனைத்தானே எழுப்புவாள்?

"டேய் கடன்காரா, ராத்திரி முழுக்க கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கொள்ளுதின்ன கோவேறு கழுதை மாதிரி இக்கிக்கிக்கின்னு இளிக்க வேண்டியது. காலையிலே பத்துமணிவரைக்கும் கும்பகர்ணன் மாதிரி தூங்க வேண்டியது. இப்புடியிருந்தா சரஸ்வதி எப்படிரா அண்டுவா?"

"சும்மாயிரும்மா!" அசோக் முணுமுணுத்தான். "நேத்து ராத்திரி முச்சூடும் சரஸ்வதியோடத்தான் சாட் பண்ணிட்டிருந்தேன். செல்போன் நம்பர் கூடக் கொடுத்திருக்கா தெரியுமா?"

"அடப்பாவி, இது வேறே நடக்குதா, உருப்பட்டா மாதிரித்தான்!" என்று மகனின் தலையில் ஒரு குட்டு வைத்ததும், அசோக் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். ஆத்திரம் கொப்பளித்த அதே நேரத்தில், அவனது மனசாட்சியும் ஐ.ஜியின் ஜீப்பைப் பார்த்ததும் சல்யூட் அடிக்க எழுந்திருக்கிற சார்ஜண்டைப் போல வீறுகொண்டது.

"ஊஹும்! ஆத்திரம் கோபம் எதுவாயிருந்தாலும் ஒரு அஞ்சுநிமிஷம் தள்ளிப்போடுன்னு காதலன் படத்துலே பிரபுதேவா சொல்லியிருக்காரு! அதைப் பின்பற்றினா நமக்கும் ஒரு நயன்தாரா கிடைக்காமப் போகலாம்; ஆனா கோபப்படுறது பயன்தாரா..." என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.

ஜம்புநாதன் பைநிறைய காய்கறியும் இரண்டுதோள்களிலும் விசிறிமடிப்பு அங்கவஸ்திரத்துக்குப் பதிலாக புடலங்காய்களுடனும் வீட்டுக்குத் திரும்பியபோது, கூட்டணியிலிருந்து கடைசிவினாடியில் கழற்றிவிடப்பட்ட உதிரிக்கட்சியின் அலுவலகம்போல, வீடே அமைதியாக இருந்தது.

"புடலங்காயா? ஆ வூன்னா ஒரு புடலங்காயை வாங்கிட்டு வந்திருவீங்களே? அத வச்சு அரைக்காம என்னத்தைப் பண்ணறது?" என்று கணவன் மீது எரிந்து விழுந்தார் பார்வதி.

"ஒரு சேஞ்சுக்கு புடலங்காய் போட்டு ஒரு ரசம் வையேன்!"

"புடலங்காய் போட்டு ரசமா? பண்ணறேன், கூடவே புதீனா போட்டு ஒரு பாயாசமும் பண்ணறேன். எல்லாம் என் தலையெழுத்து. ஒழுங்கா ஒரு வெந்நீர்கூட வைக்கத்தெரியாத மனிசன்!"

ஜம்புநாதன் ஆட்டமிழந்த கிரிக்கெட் வீரரைப் போல தலையைக் குனிந்தவாறே, சத்தமின்றி காய்கறிகளை சமையலறையில் வைத்துவிட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்த மகன், மகளுடன் சேர்ந்து கொண்டார்.

"டாடி, அம்மா காலைலேருந்து ரொம்பத் திட்டுறாங்க!" என்று பரிதாபமாகச் சொன்னாள் சொர்ணா.

"என் தலையிலே எப்படிக் குட்டியிருக்கான்னு பாருங்கப்பா!" என்று அம்மா தன் தலையில் குட்டியதுபற்றி அப்பாவிடம் முறையிட்டான் அசோக். "என்னிக்காவது உங்க தலை இப்படி வீங்கியிருக்கா?"

"வீங்காட்டி என்ன, வழுக்கை விழுந்திருச்சே போதாதா?" என்று குமுறலுடன் சொன்னாள் சொர்ணா.

"கொஞ்சநாள் தாண்டா! எல்லாமே கொஞ்சநாளைக்குத்தாண்டா...," என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னார் ஜம்புநாதன்.

"என்னது கொஞ்சநாள்?" என்று சமையலறையிலிருந்து பார்வதி குரல்கொடுத்தாள்.

"இல்லை, இன்னும் கொஞ்ச நாளிலே சொர்ணாவும் சமையல் பண்ணக் கத்துக்குவா. உனக்கு ஒத்தாசையா இருக்குமுன்னு சொன்னேன்!" என்று வாய்தவறிச் சொன்ன ஜம்புநாதன், மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் தன் கால்விரல்களை வாழ்க்கையில் முதல்முதலாக எண்ணிப்பார்க்கத்தொடங்கினார்.

"ஓஹோ! இன்னும் கொஞ்சநாள் கழிச்சுத்தான் கத்துக்குவாளோ? அடியேய் , வந்து இந்த கீரையை ஆய்ஞ்சுகொடு! இந்த வெண்டைக்காயை நறுக்கு!" என்று பார்வதி உத்தரவிடவும், போட்டுக்கொடுத்த அப்பாவை சொர்ணா, சொர்ணாக்காவைப் போல முறைத்தபடியே கிளம்பினாள்.

"பார்வதி, நான் வேண்ணா உனக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணட்டுமா?" என்று கனிவுபொங்கக் கேட்டார் ஜம்புநாதன்.

"ஒண்ணும் வேண்டாம். மசக்கைக்காரி மாதிரி உக்காந்திட்டிருக்காம காலாகாலத்துலே குளிச்சிட்டு வந்து டிபனைச் சாப்பிடுங்க!"

"அதுவும் சரிதான்," என்று முணுமுணுத்தார் ஜம்புநாதன். "நீ பண்ணுற டிபனைச் சாப்பிடறதை விட பெரிய ஒத்தாசை வேறே என்ன இருக்க முடியும்?"

"மெதுவாப் பேசுங்கப்பா! அம்மா காதுலே விழப்போவுது!" என்று எச்சரித்தான் அசோக். "ஏற்கனவே இன்னிக்கு டிபன் ஜவ்வரிசி உப்புமாவாம்!"

"ஜவ்வரிசி உப்புமாவா? அதைச் சாப்பிட ஏழு ஜென்மத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணுமேடா!"

"நெஜமாவா அப்பா?"

"ஆமாம். செத்துச் செத்துப்பொழைச்சாத்தானே ஏழு ஜென்மம் எடுக்கலாம்?"

காலரா தடுப்பூசி முகாமுக்குப் போய்க் காத்திருப்பவர்கள் போல, ஜம்புநாதனும் அசோக்கும் முகத்தில் எவ்வித எக்ஸ்பிரஷனும் இல்லாமல் சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு, ஜம்புநாதன் மனதைத் தேற்றிக்கொண்டு பானிபட் போருக்குக் கிளம்புகிறவரைப்போல, துண்டை எடுத்து வீசியவாறு பாத்ரூமை நோக்கி நடந்தார். குளித்துத் தயாரானவர் டைனிங் டேபிளில் அமர்வதற்கு முன்னர் பாலகணபதியிலிருந்து பாடீகார்டு முனீஸ்வரன் வரைக்கும் எல்லா தெய்வங்களையும் தொழுதுவிட்டு உப்புமா சாப்பிட உட்கார்ந்தார்.

"அப்பா, நான் குளிக்கக் கிளம்பறேன்," என்று அசோக் சொன்னபோது அவர் எதையும் சொல்லுகிற நிலைமையில் இல்லை என்றாலும் கமல்ஹாசனைப்போல கண்களாலேயே அனுமதி வழங்கினார். குளித்துக்கொண்டிருந்தவனுக்கு, இந்த உப்புமாவுக்கு ஐ.நா.சபை மூலம் உலகளவிலே பரவலான தடையுத்தரவு கொண்டுவர டிவிட்டரில் ஒரு சுட்டிதொடங்க வேண்டும் என்று தோன்றியது.

ஒருவழியாக, எல்லாரும் குளித்து, டிபன் சாப்பிட்டு, பெரிதாகச் சொல்லிக்கொள்ளுகிற மாதிரி எவ்வித விபரீத பின்விளைவுகளும் ஏற்படாமல், சொர்ணாவும் பார்வதியும் சமையலையும் முடித்து அக்கடாவென்று உட்கார்ந்து ஆசுவாசப்பட்டனர்.

"என்னங்க? இன்னிக்கு ஜவ்வரிசி உப்புமாவை வித்தியாசமாப் பண்ணியிருந்தேனே, கவனிச்சீங்களா?" என்று ஆசையோடு கணவரைக் கேட்டாள் பார்வதி.

"அதை இப்போவே சொல்லணுமா? நாளைக்கு லீவு போடாம இருந்தா சொல்லலாமுண்ணு இருந்தேன்," என்றார் ஜம்புநாதன்.

"கேலிபண்ணாம சொல்லுங்க," என்று பார்வதி கெஞ்சவும், "இன்னும் கொஞ்ச நாள்...," என்பது ஜம்புநாதனுக்கு ஞாபகம் வந்தது.

"உண்மையைச் சொல்லட்டுமா?" என்று கிரீடம் ராஜ்கிரணைப் போல நாத்தழுதழுத்த ஜம்புநாதன்,"இன்னிக்கு உப்புமாவைச் சாப்பிடும்போது எங்கம்மா ஞாபகம் வந்தது." என்றார்.

"எனக்கும் பாட்டி ஞாபகம் வந்ததும்மா," என்று ஒத்து ஓதினான் அசோக்.

"ஏண்டி சொர்ணா, நீ ஏண்டி எதுவும் சொல்ல மாட்டேங்குறே?" என்று மகளை வினவினாள் பார்வதி.

"எனக்கு இன்னிக்கு என்னவோ செத்துபோனவங்க ஞாபகமெல்லாம் வரலே!" என்று உண்மையை உடைத்தாள் சொர்ணா. "ஆனா, ஒருவாட்டி நீ ராய்ச்சூர் ரவா உப்புமான்னு பண்ணினியே, அன்னிக்கு கண்டசாலா கனவுலே வந்து உலகே மாயம் வாழ்வே மாயம்னு பாடினாரு!"

"நல்ல பாட்டு!" என்று சொன்ன ஜம்புநாதன் உடனே திருத்தினார். "நல்ல உப்புமா!"

"என்னாச்சு உங்க மூணு பேருக்கும்? நார்மலா உங்கப்பா காப்பியைச் சாப்பிட்டுட்டே தண்ணியா இருக்கு, டிகிரி காப்பி மாதிரியில்லேன்னு ஆயிரம் நொள்ள சொல்லுவாரு. இன்னிக்கு ஒண்ணுமே சொல்லலே! என்ன விஷயம்?" பார்வதிக்கு ஏதோ பொறிதட்டியது.

"அப்படீன்னா காலையிலே நீ கொடுத்தது காப்பிதானா?" என்று வாய்தவறிக்கேட்டுவிட்டார் ஜம்புநாதன்.

"சரியாப்போச்சு!" என்று தலையிலடித்துக்கொண்டாள் பார்வதி. "இந்த வீட்டுலே கொஞ்ச நாளா என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலே! ஒரே மர்மமாயிருக்கு! சொல்லப்போறீங்களா இல்லியா?"

"கோவிச்சுக்காதே பார்வதி," என்று குழைந்தார் ஜம்புநாதன். "இதுக்கு மேலேயும் உன்கிட்டே மறைக்கிறது சரியில்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச நாளிலே...."

"அப்பா..ப்ளீஸ்..வேண்டாம்பா," என்று இடைமறித்தாள் சொர்ணா. "விளைவு விபரீதமாயிடும்!"

"ஆமாம்பா!" என்று ஆமோதித்தான் அசோக்.

"உண்மையைச் சொல்லப்போறீங்களா இல்லையா?" என்று கர்ஜித்தாள் பார்வதி.

"சொல்லறேன் பார்வதி சொல்றேன்," என்று குரலைத்தாழ்த்தினார் ஜம்புநாதன். "இன்னும் ரெண்டு நாளிலே கிரிக்கெட் வேர்ல்டு கப் குவார்ட்டர் ஃபைனல்ஸ் ஆரம்பிக்கப்போகுது. அதுனாலே, நீ இனிமே உன்னோட மெகாசீரியலைப் பார்க்கிறதுக்கு கீழ்வீட்டுக் கோமுப்பாட்டி வீட்டுக்குப் போயிரு. கொஞ்ச நாளைக்குத்தான்...ஃபைனல்ஸ் முடிஞ்சதுக்கப்புறம் நீ முன்னைப்போல நம்ம வீட்டுலேயே எல்லா சீரியலும் பார்க்கலாம். இதை உன்கிட்டே நேரடியா எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் முழிச்சிட்டிருந்தோம். இன்னிக்குக் காலையிலே கூட சொல்லியிருப்போம். ஆனா, தொண்டையிலே இன்னும் ஜவ்வரிசி உப்புமா ஜிவ்வுன்னு நின்னுக்கிட்டிருக்கு! இப்போ நீயே கேட்டதுனாலே சொல்லிட்டோம். எங்களுக்காக நீ இந்தத் தியாகத்தை செய்வியா பார்வதி?"

"இவ்வளவு தானா?" என்று சிரித்தாள் பார்வதி. "இதை வெளிப்படையாக் கேட்டிருக்கலாமே? உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம். உங்களுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியாதா?"

’அப்புறம் ஏன் இன்னிக்கு ஜவ்வரிசி உப்புமா?’ என்ற கேள்வி நாக்கின் நுனி வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டார் ஜம்புநாதன்.

"நீங்க தாராளமா கிரிக்கெட் பாருங்க! நான் கோமுப்பாட்டி வீட்டுக்குப் போயி சீரியல் பார்க்கிறேன். சரியா?"

அழைப்புமணி ஒலித்தது. பார்வதி எழுந்து சென்று கதவைத் திறந்தபோது, பக்கத்துவீட்டு, எதிர்வீட்டுப் பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

"பார்வதி ஆன்ட்டி! ஒரு சின்ன ஹெல்ப்! எங்க வீட்டு ஆம்பிளைங்கெல்லாம் டிவியிலே கிரிக்கெட் தான் பார்ப்பாங்களாம். சரி, கோமுப்பாட்டி வீட்டுலே சீரியல் பார்த்துக்கலாமுன்னு நினைச்சா, அவங்களும் கிரிக்கெட் முடியுற வரைக்கும் சீரியல் பார்க்க மாட்டாங்களாம். தயவு செய்து உங்க வீட்டுலேயே நாங்கல்லாம் சீரியல் பார்க்கலாமா?"

ஜம்புநாதன், அசோக், சொர்ணா மூவருக்கும் ஜவ்வரிசி உப்புமா தன் வேலையைக் காட்டத்தொடங்கியது.

50 comments:

நிரூபன் said...

"அடியேய் சின்னவளே! மணி ஏழாகப்போகுது. இன்னும் என்னடி தூங்கிட்டிருக்கே? நாளைக்கு இன்னொருவீட்டுக்குப் போறவ இப்படியா இருக்கிறது? உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும். ஆம்புள மாதிரி கொர்கொர்னு கொறட்டை விட்டுக்கிட்டு....! எழுந்திரு சோம்பேறி!"//

வணக்கம் சேட்டை, எப்படி நலமா?
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, இறுதியாக எங்கள் வீடுகளில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளை உங்கள் அனுப்வம் மூலம் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் படித்து முடியவில்லை. தங்களின் ஆந்தைக் குளம் ஐயாக் கண்ணிற்கு பின்னூட்டம் எழுதிவிட்டுத் தூங்கி விட்டேன். காலையில் பின்னூட்டப் பெட்டியைப் பார்த்தேன். அது Reload ஆக மாட்டேங்குது. மீண்டும் அந்தப் படிவைப் படித்து விட்டுச் சந்திக்கிறேன்.

நிரூபன் said...

"சண்டேயன்னிக்கு சண்டை போடக்கூடாதுன்னு இண்டியன் பீனல்கோடுலே சொல்லியிருக்காங்களா? எழுந்திருடீ!"//

ஆகா she is be rude.
என்ன ஒரு கண்டிப்பு.

நிரூபன் said...

"சும்மாயிரும்மா!" அசோக் முணுமுணுத்தான். "நேத்து ராத்திரி முச்சூடும் சரஸ்வதியோடத்தான் சாட் பண்ணிட்டிருந்தேன். செல்போன் நம்பர் கூடக் கொடுத்திருக்கா தெரியுமா?"//

ஆய் சொந்த அனுபவம். இன்றைய இளசுகளின் எலக்ரோனிக் World இனை நன்றாகக் கடிக்கிறீர்கள்.

நிரூபன் said...

ஜம்புநாதன் பைநிறைய காய்கறியும் இரண்டுதோள்களிலும் விசிறிமடிப்பு அங்கவஸ்திரத்துக்குப் பதிலாக புடலங்காய்களுடனும் வீட்டுக்குத் திரும்பியபோது, கூட்டணியிலிருந்து கடைசிவினாடியில் கழற்றிவிடப்பட்ட உதிரிக்கட்சியின் அலுவலகம்போல, வீடே அமைதியாக இருந்தது.//

சகோ, நீங்கள் நகைச்சுவை எழுதினாலும் என்ன ஒரு இலக்கிய நயத்தோடை எழுதுறீங்கள். வாழ்க உங்கள் தமிழ்.
சேட்டை //
கூட்டணியிலிருந்து கடைசிவினாடியில் கழற்றிவிடப்பட்ட உதிரிக்கட்சியின் அலுவலகம்போல//

ரசித்தேன்... சிரித்தேன், சிரித்துக் கொண்டே படிக்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

///ராத்திரி முழுக்க கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கொள்ளுதின்ன கோவேறு கழுதை மாதிரி இக்கிக்கிக்கின்னு இளிக்க வேண்டியது///

/// ஒருவாட்டி நீ ராய்ச்சூர் ரவா உப்புமான்னு பண்ணினியே, அன்னிக்கு கண்டசாலா கனவுலே வந்து உலகே மாயம் வாழ்வே மாயம்னு பாடினாரு!"///

ஐயோ ஐயோ................சேட்ட........கடன்காரா........கடன்காரா.......கடன்காரா.......கடன்காரா.......

நிரூபன் said...

ஜம்புநாதன் ஆட்டமிழந்த கிரிக்கெட் வீரரைப் போல தலையைக் குனிந்தவாறே, சத்தமின்றி காய்கறிகளை சமையலறையில் வைத்துவிட்டு வரவேற்பரையில் அமர்ந்திருந்த மகன், மகளுடன் சேர்ந்து கொண்டார்.//

ஆட்டமிழந்த கிறிக்கற் வீரரைப் போல...
என்ன ஒரு வரணனை,
ஏன் எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாமல் ஜம்பு நாதன் ஏமாந்து விட்டாரோ:)))

நிரூபன் said...

என் தலையிலே எப்படிக் குட்டியிருக்கான்னு பாருங்கப்பா!" என்று அம்மா தன் தலையில் குட்டியதுபற்றி அப்பாவிடம் முறையிட்டான் அசோக். "என்னிக்காவது உங்க தலை இப்படி வீங்கியிருக்கா?"

"வீங்காட்டி என்ன, வழுக்கை விழுந்திருச்சே போதாதா?" என்று குமுறலுடன் சொன்னாள் சொர்ணா.//

இவ் இடத்தில் பெண்னை உயர்த்திக் காட்டி, பெண்ணாதிக்க வாதியாக பார்வதியைக் காட்டி, அடங்கிப் போகும் அப்பாவி அப்பாவாக ஜம்புவை காட்டியுள்ளீர்கள். குட்டு வேண்டி மண்டையிலை வழுக்கை விழும் என்றால் நானெல்லாம் கலியாணம் பற்றியே கனவிலையும் நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டேன்.

நிரூபன் said...

"பார்வதி ஆன்ட்டி! ஒரு சின்ன ஹெல்ப்! எங்க வீட்டு ஆம்பிளைங்கெல்லாம் டிவியிலே கிரிக்கெட் தான் பார்ப்பாங்களாம். சரி, கோமுப்பாட்டி வீட்டுலே சீரியல் பார்த்துக்கலாமுன்னு நினைச்சா, அவங்களும் கிரிக்கெட் முடியுற வரைக்கும் சீரியல் பார்க்க மாட்டாங்களாம். தயவு செய்து உங்க வீட்டுலேயே நாங்கல்லாம் சீரியல் பார்க்கலாமா?"

ஜம்புநாதன், அசோக், சொர்ணா மூவருக்கும் ஜவ்வரிசி உப்புமா தன் வேலையைக் காட்டத்தொடங்கியது.//

இதனைத் தான் சொல்லுவதோ பின் விளைவுகள் பொல்லாதவை என்று.//

அருமையான நகைச்சுவை கலந்த எங்கல் ஒவ்வோர் வீடுகளிலும் உறைந்து கிடைக்கும் உண்மைகளை, சீரியலில் கண்ணீர் வடிப்போரின் நிஜங்களைச் சிறுகதை வடிவில் தந்துள்ளீர்கள்.

உப்புமாக் கொடுத்து டாயிலெடுக்கு அனுப்பினா சந்தோசமாகச் சீரியல் பார்க்கலாம் என்பது இக் கால மகளிரின் தந்திரமோ?

சேட்டை உங்களின் இக் கதை கொஞ்சம் வித்தியாசமாக, இன்றைய குடும்பப் பெண்களின் யதார்த்தத்தினையும், ஒரு சில உணவுகளை உண்ணுவதால் வரும் பின் விளைவுகளையும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை ஜோக்கா கொண்டுபோய் ஜோக்காகவே முடிச்சுட்டீங்க.

//காலைலே எழுந்திரிச்சதும் காளைமாடு கழநீரு குடிக்கிறாமாதிரி காப்பியை உறிஞ்ச வேண்டியது,

மனைவியிடம் டோஸ் வாங்கி சொம்புநாதனாகிய ஜம்புநாதன்.

உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும்.


இப்புடியிருந்தா சரஸ்வதி எப்படிரா அண்டுவா?"

"சும்மாயிரும்மா!" அசோக் முணுமுணுத்தான். "நேத்து ராத்திரி முச்சூடும் சரஸ்வதியோடத்தான் சாட் பண்ணிட்டிருந்தேன். செல்போன் நம்பர் கூடக் கொடுத்திருக்கா தெரியுமா?"

நமக்கும் ஒரு நயன்தாரா கிடைக்காமப் போகலாம்; ஆனா கோபப்படுறது பயன்தாரா..."

ஜம்புநாதன் ஆட்டமிழந்த கிரிக்கெட் வீரரைப் போல தலையைக் குனிந்தவாறே,

"ஒண்ணும் வேண்டாம். மசக்கைக்காரி மாதிரி உக்காந்திட்டிருக்காம காலாகாலத்துலே குளிச்சிட்டு வந்து டிபனைச் சாப்பிடுங்க!"

"அதுவும் சரிதான்," என்று முணுமுணுத்தார் ஜம்புநாதன். "நீ பண்ணுற டிபனைச் சாப்பிடறதை விட பெரிய ஒத்தாசை வேறே என்ன இருக்க முடியும்?"

மனதைத் தேற்றிக்கொண்டு பானிபட் போருக்குக் கிளம்புகிறவரைப்போல, துண்டை எடுத்து வீசியவாறு பாத்ரூமை நோக்கி நடந்தார்.

கோமுப்பாட்டி கிரிக்கெட் முடியுற வரைக்கும் சீரியல் பார்க்க மாட்டாங்களாம். //

கலக்கிட்டீங்க, சார், பாராட்டுக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

///அவங்களும் கிரிக்கெட் முடியுற வரைக்கும் சீரியல் பார்க்க மாட்டாங்களாம். தயவு செய்து உங்க வீட்டுலேயே நாங்கல்லாம் சீரியல் பார்க்கலாமா?"///

ஹா...ஹா...ஹா... நல்ல ஜோக்

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

Sivakumar said...

"நீ பண்ணுற டிபனைச் சாப்பிடறதை விட பெரிய ஒத்தாசை வேறே என்ன இருக்க முடியும்?"

That is Settai trademark. தூள்!

dhandapani said...

இன்றைய நிலவரப்படி இயல்பாக, சுத்தமான நகைச்சுவை இடுகைகள் எழுத சேட்டைக்காரன் ஒருவரால் மட்டுமே முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் நண்பா...! அசத்தல்...!

முகுந்த்; Amma said...

ஹா ஹா ஹா, கிரிக்கெட் நம்ம வீடுகளில் நிகழ்த்தும் மாற்றங்களை நன்கு உணர்த்துகிறது இந்த இடுகை. keep up your good work.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. கிரிக்கெட் எந்த அளவுக்கு மக்களை பாதித்து இருக்கிறது என்பது புரிகிறது சேட்டை!! :)

சேலம் தேவா said...

//கூட்டணியிலிருந்து கடைசிவினாடியில் கழற்றிவிடப்பட்ட உதிரிக்கட்சியின் அலுவலகம்போல,//

டைமிங் எ.கா. :)

MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடிய்யா இவளவு நீளத்துக்கு பதிவு போட்டு அசத்துறீங்க ராத்திரி தூங்க மாட்டேன்ன்களோ ஹா ஹா ஹா அருமையா இருக்கு....

sudhanandan said...

எனக்கும் கொஞ்சம் ஜவ்வரிசி உப்புமா கொடுங்கண்ணா..... சிரிப்பை அடக்க முடியலே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜவ்வரிசி உப்புமா நல்லாவே வேலைய காட்டியிருக்கு, இடை இடையே செம டைமிங் காமெடிகள் வேற (கழட்டிவிடப்பட்ட கூட்டணிக் கட்சி அலுவலம் மாதிரி...)..... கலக்கீருச்சு.....

Mahi_Granny said...

இன்ட்லியில் ஓட்டுமட்டுமே போட்டால் பயன்தாரா என்று ஒரு கமெண்டும் போடுகிறேன். சேட்டையின் அளவிலா சேட்டைக்கு பாராட்டுக்கள்

எல் கே said...

வார்த்தைக்கு வார்த்தை உன் சேட்டை. கலக்குங்க

மங்குனி அமைச்சர் said...

வழக்கம் போல சூப்பர் சேட்ட

middleclassmadhavi said...

செம காமெடி!
அந்தக் குடும்பத்தை உடனே ஒரு டிவியோ இல்லை ரிகார்ட் பண்ணும் வசதி உள்ள ஒரு டிஷ் கனெக்ஷனோ வாங்கச் சொல்லுங்க! (நிறைய வீட்டோட நிலமை இது தான்!!)

சி.பி.செந்தில்குமார் said...

>>உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும்.

நோட் பண்றா.. நோட் பண்றா... ( அண்ணே.. பயப்படாதீங்க.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் ஹி ஹி )

Anonymous said...

குறட்டைவிட்டுக்கொண்டிருந்த அவளது மனசாட்சி கொசுக்கடி பட்டதுபோல விசுக்கென்று விழித்துக்கொண்டது//
சூப்பர் வரிகள்

சிநேகிதன் அக்பர் said...

புதிது புதிதான உவமானங்களுடன். அக்மார்க் சேட்டை பாணி.

கலக்குங்க சேட்டை.

Unknown said...

//மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் தன் கால்விரல்களை வாழ்க்கையில் முதல்முதலாக எண்ணிப்பார்க்கத்தொடங்கினார்//
அட அட அட! என்ன உவமை! கலக்கல் பாஸ்! :-)

vasu balaji said...

க்ளைமாக்ஸ் டாப்பு:)))

நர்மதன் said...

இதையும் படியுங்க
கவுண்டமணியின் சில மணியோசைகள்

settaikkaran said...

//நிரூபன் said...

//வணக்கம் சேட்டை, எப்படி நலமா?//

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்! :-)

//ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, இறுதியாக எங்கள் வீடுகளில் நடக்கும் யதார்த்த நிகழ்வுகளை உங்கள் அனுப்வம் மூலம் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் படித்து முடியவில்லை. தங்களின் ஆந்தைக் குளம் ஐயாக் கண்ணிற்கு பின்னூட்டம் எழுதிவிட்டுத் தூங்கி விட்டேன். காலையில் பின்னூட்டப் பெட்டியைப் பார்த்தேன். அது Reload ஆக மாட்டேங்குது. மீண்டும் அந்தப் படிவைப் படித்து விட்டுச் சந்திக்கிறேன்.//

ரைட்டு! வாசிக்காமலே இவ்வளவு பெரிய கருத்துச் சொல்லியிருக்கீங்களே, உங்களுக்குக கருத்துச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கலாம்.

//ஆகா she is be rude. என்ன ஒரு கண்டிப்பு.//

எல்லாம் மெகாசீரியல் தர்ற பாடம்.

//ஆய் சொந்த அனுபவம். இன்றைய இளசுகளின் எலக்ரோனிக் World இனை நன்றாகக் கடிக்கிறீர்கள்.//

ஐயையோ, சரஸ்வதி யாருன்னே எனக்குத் தெரியாது சகோதரம். :-))

//சகோ, நீங்கள் நகைச்சுவை எழுதினாலும் என்ன ஒரு இலக்கிய நயத்தோடை எழுதுறீங்கள். வாழ்க உங்கள் தமிழ்.சேட்டை //

எல்லாம் உடனிருப்பவர்கள் தருகிற உந்துதல்தான் நண்பரே! :-)

//ரசித்தேன்... சிரித்தேன், சிரித்துக் கொண்டே படிக்கிறேன்.//

சிரிக்க வைப்பதுதானே எனது குறிக்கோளே! :-))

//ஆட்டமிழந்த கிறிக்கற் வீரரைப் போல...என்ன ஒரு வரணனை, ஏன் எதிர்பார்ப்பெல்லாம் நிறைவேறாமல் ஜம்பு நாதன் ஏமாந்து விட்டாரோ:)))//

கிரிக்கெட் சீசனாயிற்றே, அதான்! ஜம்புநாதன் இன்று நேற்றா ஏமாறுகிறார்??

//இவ் இடத்தில் பெண்னை உயர்த்திக் காட்டி, பெண்ணாதிக்க வாதியாக பார்வதியைக் காட்டி, அடங்கிப் போகும் அப்பாவி அப்பாவாக ஜம்புவை காட்டியுள்ளீர்கள். குட்டு வேண்டி மண்டையிலை வழுக்கை விழும் என்றால் நானெல்லாம் கலியாணம் பற்றியே கனவிலையும் நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டேன்.//

அப்படீன்னா இன்னும் வழுக்கை விழலியா, ஐ மீன், கல்யாணம் ஆகலியா? :-)

//இதனைத் தான் சொல்லுவதோ பின் விளைவுகள் பொல்லாதவை என்று.//

இருந்தாலும் இருக்கும். இப்படியொரு கோணத்தை நான் யோசிக்கவேயில்லையே! :-))

//அருமையான நகைச்சுவை கலந்த எங்கல் ஒவ்வோர் வீடுகளிலும் உறைந்து கிடைக்கும் உண்மைகளை, சீரியலில் கண்ணீர் வடிப்போரின் நிஜங்களைச் சிறுகதை வடிவில் தந்துள்ளீர்கள்.//

கொஞ்சம் அதிகப்படியான மசாலா தூவி, ஒரு குடும்பக்காட்சியைக் கொண்டுவர முயற்சித்தேன். அவ்வளவே! :-)

//உப்புமாக் கொடுத்து டாயிலெடுக்கு அனுப்பினா சந்தோசமாகச் சீரியல் பார்க்கலாம் என்பது இக் கால மகளிரின் தந்திரமோ?//

ஊவ்வ்வ்வ்! இதுவும் நான் யோசித்தே பார்க்காத கோணம் சகோதரம்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க! :-))))

// சேட்டை உங்களின் இக் கதை கொஞ்சம் வித்தியாசமாக, இன்றைய குடும்பப் பெண்களின் யதார்த்தத்தினையும், ஒரு சில உணவுகளை உண்ணுவதால் வரும் பின் விளைவுகளையும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறது.//

உங்களைப் பற்றி என்ன சொல்வது? அணு அணுவாக ரசித்து, ரசித்தவற்றை அலுக்காமல் சளைக்காமல் எடுத்துச்சொல்லி அசர வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் போலும். எத்தனையெத்தனை நன்றிகள் சொன்னாலும் போதவே போதாது.

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

ஐயோ ...............சேட்ட........கடன்காரா........கடன்காரா.......கடன்காரா.......கடன்காரா.......//

என்ன நண்பரே, நீங்களும் என்னை வைய ஆரம்பிச்சிட்டீங்களே...? :-))

மிக்க நன்றி!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை ஜோக்கா கொண்டுபோய் ஜோக்காகவே முடிச்சுட்டீங்க.//

அவ்வளவுதான். சும்மா நாலஞ்சு ஜோக்ஸ், ஒரு அவுட்-லைன் -இத வச்சே குப்பை கொட்டிக் காலம் தள்ளிட்டிருக்கேன்! :-))

//கலக்கிட்டீங்க, சார், பாராட்டுக்கள்//

தொடரும் வருகைக்கும், தொய்வில்லாத உங்கள் உற்சாகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

ஹா...ஹா...ஹா... நல்ல ஜோக்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

That is Settai trademark. தூள்!//

ஹிஹி! மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//dhandapani said...

இன்றைய நிலவரப்படி இயல்பாக, சுத்தமான நகைச்சுவை இடுகைகள் எழுத சேட்டைக்காரன் ஒருவரால் மட்டுமே முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் நண்பா...! அசத்தல்...!//

வாங்கண்ணே, உடல்நலம் எப்படி? பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. வருகையும் கருத்தும் உற்சாகமூட்டுகின்றன அண்ணே! :-)

settaikkaran said...

//முகுந்த் அம்மா said...

ஹா ஹா ஹா, கிரிக்கெட் நம்ம வீடுகளில் நிகழ்த்தும் மாற்றங்களை நன்கு உணர்த்துகிறது இந்த இடுகை. keep up your good work.//

வாங்க! சும்மா கிரிக்கெட் கான்சப்டை எடுத்துப் பார்த்தேன். உங்களுக்குப் பிடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. கிரிக்கெட் எந்த அளவுக்கு மக்களை பாதித்து இருக்கிறது என்பது புரிகிறது சேட்டை!! :)//

கிரிக்கெட், மெகாசீரியல் இரண்டும் தானே வெங்கட்ஜீ? :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

டைமிங் எ.கா. :)//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

எப்பிடிய்யா இவளவு நீளத்துக்கு பதிவு போட்டு அசத்துறீங்க ராத்திரி தூங்க மாட்டேன்ன்களோ ஹா ஹா ஹா அருமையா இருக்கு....//

ஆமாம் நண்பரே, எனது இடுகைகள் பெரிதாக இருப்பதாக இப்போது புரிந்து கொண்டு விட்டேன். இதை இனிவரும் நாட்களில் குறைக்க முயல்வேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து மெருகேற்றுங்கள்!

settaikkaran said...

//sudhanandan said...

எனக்கும் கொஞ்சம் ஜவ்வரிசி உப்புமா கொடுங்கண்ணா..... சிரிப்பை அடக்க முடியலே//

சிரிப்பை அடக்கமுடியலேன்னா, அதுக்காக உப்புமா சாப்பிட்டு அழணுமா? :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜவ்வரிசி உப்புமா நல்லாவே வேலைய காட்டியிருக்கு, இடை இடையே செம டைமிங் காமெடிகள் வேற (கழட்டிவிடப்பட்ட கூட்டணிக் கட்சி அலுவலம் மாதிரி...)..... கலக்கீருச்சு.....//

பானா ராவன்னா, உங்க டாகுடர் இடுகை சூப்பரோ சூப்பர்! மனசு விட்டு சிரிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி! வருகைக்கு ஸ்பெஷல் நன்றி! :-)

settaikkaran said...

//Mahi_Granny said...

இன்ட்லியில் ஓட்டுமட்டுமே போட்டால் பயன்தாரா என்று ஒரு கமெண்டும் போடுகிறேன். சேட்டையின் அளவிலா சேட்டைக்கு பாராட்டுக்கள்//

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். அதுவே யாம் பெற்ற பயன். மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//எல் கே said...

வார்த்தைக்கு வார்த்தை உன் சேட்டை. கலக்குங்க//

எல் கே! நீங்க உண்மையிலே ஒரு ஜென்டில்மேன்! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//மங்குனி அமைச்சர் said...

வழக்கம் போல சூப்பர் சேட்ட//

நீங்க ஒருவார்த்தை சொன்னா நூறுவார்த்தை சொன்னா மாதிரி! இனி நூறு வார்த்தையிலே சொல்லுறதை நானும் சுருக்க முயற்சி பண்ணனும். :-)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//middleclassmadhavi said...

செம காமெடி! அந்தக் குடும்பத்தை உடனே ஒரு டிவியோ இல்லை ரிகார்ட் பண்ணும் வசதி உள்ள ஒரு டிஷ் கனெக்ஷனோ வாங்கச் சொல்லுங்க! (நிறைய வீட்டோட நிலமை இது தான்!!)//

இப்படியொண்ணு இருக்கோ? சரி, அடுத்த இடுகைக்கு உதவும். வருகைக்கும் கருத்துக்கும் யோசனைக்கும் ஆக மூன்று பெரிய நன்றிகள்! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

>>உனக்கு சொர்ணான்னு பேரு வச்சதுக்குப் பதிலா கொர்ணா-ன்னு பேரு வச்சிருக்கணும்.

நோட் பண்றா.. நோட் பண்றா... ( அண்ணே.. பயப்படாதீங்க.. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் ஹி ஹி )//

ஏன் தல...? ஏதாவது தெரிஞ்சவங்க பேரா சொர்ணா? :-)
மிக்க நன்றி தல..!

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

குறட்டைவிட்டுக்கொண்டிருந்த அவளது மனசாட்சி கொசுக்கடி பட்டதுபோல விசுக்கென்று விழித்துக்கொண்டது// சூப்பர் வரிகள்//

ஆஹா, மிக்க நன்றி நண்பரே! :-) எனக்கு நல்ல நேரம் தான்!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

புதிது புதிதான உவமானங்களுடன். அக்மார்க் சேட்டை பாணி.
கலக்குங்க சேட்டை.//

நான் எழுதுகிற ஒவ்வொன்றையும் உற்சாகப்படுத்த உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது என்ன குறை அண்ணே? :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//ஜீ... said...

//மகள் தன்னை எரித்துவிடுவதைப் பார்க்க விரும்பாமல் தன் கால்விரல்களை வாழ்க்கையில் முதல்முதலாக எண்ணிப்பார்க்கத்தொடங்கினார்// அட அட அட! என்ன உவமை! கலக்கல் பாஸ்! :-)//

பரவாயில்லையே, ஏறக்குறைய எல்லா உவமானங்களையுமே எல்லாரும் ரசிச்சிருக்காங்க. அது போதுமே! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

க்ளைமாக்ஸ் டாப்பு:)))//

ஏகலைவனின் நன்றிகள் ஐயா! :-)

settaikkaran said...

//நர்மதன் said...

இதையும் படியுங்க கவுண்டமணியின் சில மணியோசைகள்//

படிச்சேன். பின்னூட்டமும் போட்டிருக்கேன். நன்றி! :-)