Wednesday, March 9, 2011

சேட்டை டிவி-திரை விமர்சனம்

வணக்கம் நேயர்களே! சில கலைநயமிக்க திரைப்படங்கள், அரைத்த மாவையே திரும்பவும் அரைப்பதால் தோல்வியடைவதுண்டு என்றாலும், பெரிய கலைஞர்கள், புத்திசாலி இயக்குனர்கள் மற்றும் பிரம்மாண்டமான படங்களை எடுத்த அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்தால், பழைய கதையை கூட சிறப்பாகச் சொல்லி வெற்றிப்படத்தை அளிக்க முடியும்.

இந்த வார ’திரைவிமர்சனம்’ நிகழ்ச்சியில் நாம் பார்க்கப்போகிற படம், தென்னிந்திய-வட இந்திய கூட்டுத்தயாரிப்பான Salt flour needle gone ( உப்பு மா ஊசி போச்சு). இதில் தில்லி, தமிழ் மற்றும் பல மிகப்பெரிய கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பு: முகர்ஜீ!
கதை,வசனம்: நிதி,
இசை: கூல் காந்தி
தயாரிப்பு & இயக்கம்: அன்னை

படத்தில் கதாநாயகன் தமிழ் ஒரு பெரிய ஹோட்டல் முதலாளியாக வருகிறார். அவர் கிட்டேயிருக்கிற 234 பரோட்டா ஸ்டால்களில் தனக்கும் குறைஞ்சது 63 ஸ்டாலாவது வேணும்னு தில்லி கேட்கிறாரு. இதனால் கோபமடைந்த தமிழ், தன்னுடைய தில்லி ஸ்டாலிலே சப்பாத்தி சுடுற ஆறு பேரையும், கையிலே தூக்கு நிறைய குருமாவோட அனுப்பி, "இனிமேல் உன் சப்பாத்தி உனக்கு; என் பரோட்டா எனக்கு!" என்று சொல்ல வைக்கிறாரு! ஏற்கனவே ஊசிப்போன அந்தப் பழைய குருமாவை, கூட ரெண்டு நாள் ஃபிரிட்ஜிலே வச்சிட்டு, தமிழும் தில்லியுமாகச் சேர்ந்து வெங்காயம் நறுக்கிறாங்க! கடைசியில் தமிழ் அனுப்பின குருமாவை தில்லி வாங்கினாரா, தில்லிக்கு எத்தனை பரோட்டா ஸ்டால் கிடைச்சதுங்குறதுதான் உப்புமா ஊசிப்போச்சு படத்தோட கதைச் சுருக்கம்.

ஏற்கனவே "தராட்டி விடவே மாட்டேன்," படத்துலே இதே மாதிரி டெல்லிக்குப் போய் டேரா போடுற கதாபாத்திரத்துலே நடிச்சிருந்தாலும் இந்தப் படத்துலேயும் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, பாத்திரத்தோட தன்மையை உணர்ந்து உள்வாங்கி, வெளிப்படுத்துகிறதில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் கதாநாயகன். குறிப்பாக, தனியறைக்குள்ளே வில்லன்களிடம் ஏகப்பட்டதை வாங்கிக்கட்டிக்கிட்டு, வீக்கத்தோட வெளியே வந்து "இது மிகவும் மகிழ்ச்சியான நாள்," என்று கூறுகிற காட்சியில் அரங்கத்துக்கு வெளியே போய்வந்து கொண்டிருந்தவர்களும் கைதட்டியதை நமது விமர்சனக்குழுவால் காணமுடிந்தது.

"சிவாஜி" படத்தில் வருகிற ஆம்பல் ஆம்பல் மொவ்வல் மொவ்வல் பாடல்போலவே "டூஜீ டூஜீ டூஜீ! நீ டூ சொல்லாதே வாஜீ!" என்ற பாடல் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

படத்தில் நகைச்சுவைக்கென்று தனிப்பகுதியாக வைக்காமல், மயிர்க்கூச்செரியும் சண்டைக்காட்சிகளிலும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று. குறிப்பாக, மீனம்பாக்கம் விமானநிலையத்தில் "உங்களை நினைச்சா எனக்கு பெரும்மையா இருக்குது," என்ற ஈரமணியின் வசனம் காலந்தாண்டியும் பேசப்படும்.

கதாநாயகனைத் தவிர மற்ற பரோட்டா மாஸ்டர்கள் அனைவருமே, "என்கிட்டே கேட்காதே! எனக்கொண்ணும் தெரியாது," என்று திரும்பத் திரும்பச் சொல்லுவதும், இறுதிக்காட்சியில் வெங்காயம் நறுக்குகிற காட்சியில் அனைவரும் ஆனந்தக்கண்ணீர் விடுவதும், படம் பார்க்கிற ரசிகர்களின் கண்களில் நீர் வருமளவுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. அனேகமாக, "அடுத்த வீட்டுப் பெண்," படத்துக்குப்பிறகு இப்போதுதான் இப்படியொரு நகைச்சுவைப்படம் வந்திருப்பதாக சொல்லலாம்.

அதே போல புலாவ் நபி ஆசாத் "ஏரியாவைப் பிரிச்சிட்டோம்," என்று சொல்கிற காட்சியில், நமது பரோட்டா மாஸ்டர்களை குளோஸ்-அப்பில் காட்டியிருப்பது பிரமிக்கத்தக்க யுக்தி. இதை டேவிட் லீன் தனது "ரயான்ஸ் டாட்டர்," என்ற படத்தில்தான் இறுதியாக உபயோகப்படுத்தியிருந்தார் என்று ஞாபகம். அதே போல இறுதிக்காட்சியில் பரோட்டோவைச் சுக்கு நூறாகப் பிய்த்துப்போட்டபடி நடக்கிற கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அக்கிரோ காரசேவா, மன்னிக்கவும், அக்கிரோ குருசேவாவின் "செவன் சாமுராய்ஸ்," படத்தை நினைவூட்டுகின்றன.

அதே போல 63 ஸ்டால்களை சிரித்தமுகத்தோடு கதாநாயகன் வழங்குகிறபோது, ’இந்த சஸ்பென்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை!" என்று திரையில் ஸ்லைடு போடுவது பிரமாதமான தொழில்நுட்பமாகும்.

இருந்தாலும், இவ்வளவு விறுவிறுப்பான படத்தில் இடையிடையே "ஸ்டாலு ஸ்டாலுதான், இது பரோட்டா ஸ்டாலுதான்! இது பரோட்டாக்கேத்த மைதாமாவுதான்," என்ற குத்தாட்டப் பாடலை ஏன் நுழைத்தார்கள் என்று புரிவதில்லை. அதனாலோ என்னவோ இறுதியில் பரோட்டா ஸ்டாலை லாங்-ஷாட்டில் காட்டும்போது நமக்கு அனுதாபமே ஏற்பட மாட்டேன் என்கிறது.

படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவோ, இடையில் அடங்கோவன் என்று ஒரு கதாபாத்திரம் உப்புமா சாப்பிடுவது போலக்காட்டியிருப்பது தேவையற்றது. இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.

இறுதியில் இருந்த பரோட்டாக்களையும் கொடுத்துவிட்டு, சப்பாத்தியையும் பிய்த்துப்போட்டுவிட்டுத் திரும்புகிற காட்சியில் "வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்!" என்ற பூம்புகார் படப்பாடலைப் பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது இயக்குனரின் ரசனையைக் காட்டுகிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என்றாலும், மூன்று நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டிவந்தது சற்று அலுப்பாக இருக்கிறது. மற்றபடி, கஷ்டப்பட்டாவது கழுத்தறுபட விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம்: "Salt Flour Needle gone!"

63 comments:

டக்கால்டி said...

வடை, தக்காளி, பப்பாளி,ரஸ்தாளி எல்லாம் இப்போ எமக்கு தான்.

டக்கால்டி said...

படிச்சேன், ரசித்தேன்...
ஈரமணியின் காலத்தே அழிக்க முடியாத வசனம் சூப்பரு...படத்தோட பேரு அதை விட சூப்பரு...
இப்படியே யோசிங்க..சாரி உக்காந்து யோசிங்க...

எல் கே said...

சேட்டை பிரிச்சி மேயறீங்க,

வைகை said...

செம நக்கல்... பாவம் அழுவப்போறாங்க.....(இப்பவே அதானே செய்றாங்க?)

வேடந்தாங்கல் - கருன் said...

நாங்களும் வருவோமில்ல..

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணன் போட்டிக்கு வந்து விட்டதால் நான் இனி விமர்சனம் எழுதுவதை விட்டு விட்டு பொழப்பைப்பார்க்க எங்க கிராமத்துக்கே போலாம்னு இருக்கேன்.. யாரும் என்னை தடுக்காதீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>>>படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவோ, இடையில் அடங்கோவன் என்று ஒரு கதாபாத்திரம் உப்புமா சாப்பிடுவது போலக்காட்டியிருப்பது தேவையற்றது. இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.

haa haa ஹா ஹா செம அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஏற்கனவே "தராட்டி விடவே மாட்டேன்," படத்துலே

டேய்.. சி பி நோட் பண்றா.. அண்ணன் பதிவை படிச்சாலே பத்து ஜோக் தேத்திடலாம் போல.

somanathan said...

super

பிரபாகர் said...

இதைவிட நாசூக்காய் சொல்ல முடியாது நண்பரே!... குப்புற விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை என செய்யும் கேலிக்கூத்துக்கள் தேர்தலில் பாடம் புகட்டப்படுமா என பார்ப்போம்...

பின்னனியில் என்ன பேரமோ?, பகவானுக்கே வெளிச்சம்.

பிரபாகர்...

சங்கவி said...

//மூன்று நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டிவந்தது//

எல்லாரும் உட்கார்ந்து பார்த்தது எதற்கு என்றால் அடுத்த 5 வருடம் வீட்டில் உட்கார வைக்கத்தான்...

Chitra said...

முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என்றாலும், மூன்று நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டிவந்தது சற்று அலுப்பாக இருக்கிறது. மற்றபடி, கஷ்டப்பட்டாவது கழுத்தறுபட விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம்: "Salt Flour Needle gone!"


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... உப்புமா ஊசி போச்சு!

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்ப பிரச்சினை என்னன்னா 63 பரோட்டாவையும் யார் யார் சாப்பிடறது???

Ponchandar said...

வி வி சி...

கலக்குங்க...கலக்குங்க...கலக்கிட்டே இருங்க ! ! ! ! !

Anonymous said...

சேட்டை டிவியில் தேர்தல் சேட்டைகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்

! சிவகுமார் ! said...

அண்ணே, அம்பது பரோட்டா சாப்புட்டேன். நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க. கோட்டை அழிங்க. நான் மொதல்ல இருந்து சாப்புடறேன்!

YESRAMESH said...

இனிமே டூஜியை மறந்துடவேண்டியதுதான்...

Ambedhan said...

ஆனந்த விகடனில் வரும் படக்கதை பாணியிலேயே பெயர்கள் வைத்து பிண்ணிப்புட்டீங்க.
அரசியலை எளிய மக்களுக்கு உணர்த்த எளிமையான, சரியான வழி உங்களுடையது.

sudhanandan said...

63-ம்‌ ஒவ்வொரு விதமான அவங்களுக்கு புடிச்சா மாதிரி பரோட்டா கேட்கிறாங்களாமே... கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா.... அப்டின்னு.... இத பத்தி படத்திலே ஏதாவது உண்டா...

Speed Master said...

உப்புமா சூப்பர்

ரஹீம் கஸாலி said...

கலக்குறீங்க பாஸ்

இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

MANO நாஞ்சில் மனோ said...

//"வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்!" என்ற பூம்புகார் படப்பாடலைப் பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது இயக்குனரின் ரசனையைக் காட்டுகிறது//

ஹா ஹா ஹா ஹா அருமை அருமை....

கே. ஆர்.விஜயன் said...

இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.//

இதாங்க ஹைலைட். கலக்கீட்டீங்க தலைவா.

ரிஷபன் said...

ஒரே சம்பந்தம் நாம் தியேட்டருக்குள் வந்து ஏமாறத் தயாராய் இருப்பதுதான்..
சரியான காமெடி கலாட்டா

Senthil said...

great!!!!!!!!!!!!

senthil,doha

வை.கோபாலகிருஷ்ணன் said...

மூன்று நாட்களாகவே எனக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்தது.

எங்க வீட்டுப்பகுதியில் மின் பராமரிப்புக்காக இன்று முழு நேர மின்வெட்டு. அதனால் பகல் பூராவும் சேட்டை டி.வி. சேனலே கிடைக்கவில்லை. நள்ளிரவில் தான் இந்த உங்கள் டி.வி யைப் பார்த்து விட்டு, தெளிவடைந்தேன். நன்றி

ரேகா ராகவன் said...

அரசியல் சினிமாவை நகைச்சுவையாக விமர்சனம் செய்வதற்கு உங்களை விட்டா வேற யாரும் கிடையாது சேட்டை..

சேட்டைக்காரன் said...

//டக்கால்டி said...

வடை, தக்காளி, பப்பாளி,ரஸ்தாளி எல்லாம் இப்போ எமக்கு தான்.//

நல்லவேளை, ச்சூ மந்திர காளியையாவது மிச்சம் வச்சீங்களே? :-)

//படிச்சேன், ரசித்தேன்... ஈரமணியின் காலத்தே அழிக்க முடியாத வசனம் சூப்பரு...படத்தோட பேரு அதை விட சூப்பரு...இப்படியே யோசிங்க..சாரி உக்காந்து யோசிங்க...//

ஆஹா! வடையோட போயிடாம நாலுவார்த்தை மனசாரப்பாராட்டி எழுதியிருக்கீங்க! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//எல் கே said...

சேட்டை பிரிச்சி மேயறீங்க,//

டபுள் நன்றி கார்த்தி! இன்னொரு நன்றி எதுக்குண்ணு சொல்லணுமா? :-)

சேட்டைக்காரன் said...

//வைகை said...

செம நக்கல்... பாவம் அழுவப்போறாங்க.....(இப்பவே அதானே செய்றாங்க?)//

பின்னே இந்த மாதிரி மொக்கைப் படமெடுத்தா அழத்தானே செய்யணும்? :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//வேடந்தாங்கல் - கருன் said...

நாங்களும் வருவோமில்ல..//

வாங்க வாங்க! இது நம்ம இடம் நண்பரே! நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணன் போட்டிக்கு வந்து விட்டதால் நான் இனி விமர்சனம் எழுதுவதை விட்டு விட்டு பொழப்பைப்பார்க்க எங்க கிராமத்துக்கே போலாம்னு இருக்கேன்.. யாரும் என்னை தடுக்காதீங்க..//

ஐயையோ, அப்படியெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீங்கோ! சினிமா விமர்சனத்துலே உங்களை பீட் பண்ண ஆளே கிடையாது தல!

>>>>படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவோ, இடையில் அடங்கோவன் என்று ஒரு கதாபாத்திரம் உப்புமா சாப்பிடுவது போலக்காட்டியிருப்பது தேவையற்றது. இவர்கள் படத்தலைப்புக்கும் உள்ளேயிருப்பதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.

haa haa ஹா ஹா செம அண்ணே//

இது எனக்கே ஒரு after-thought தான் தல! சொருவிட்டேன்!

//டேய்.. சி பி நோட் பண்றா.. அண்ணன் பதிவை படிச்சாலே பத்து ஜோக் தேத்திடலாம் போல.//

இதுலே பதிமூணு ஜோக்கு இருந்ததா ஞாபகம்! :-)
மிக்க நன்றி தல!

சேட்டைக்காரன் said...

//somanathan said...

super//

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//பிரபாகர் said...

இதைவிட நாசூக்காய் சொல்ல முடியாது நண்பரே!... குப்புற விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை என செய்யும் கேலிக்கூத்துக்கள் தேர்தலில் பாடம் புகட்டப்படுமா என பார்ப்போம்...//

டவுட்டு தான் நண்பரே! தேர்தல் முடிவுகள் இழுபறியாத்தானிருக்கும் போலிருக்குது. போகப்போக என்னாகுமுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

//பின்னனியில் என்ன பேரமோ?, பகவானுக்கே வெளிச்சம்.//

பகவான்தான் நம்மள காப்பாத்தணும் நண்பரே! மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//சங்கவி said...

எல்லாரும் உட்கார்ந்து பார்த்தது எதற்கு என்றால் அடுத்த 5 வருடம் வீட்டில் உட்கார வைக்கத்தான்...//

அப்படி நடந்தால், இந்தப் படத்துக்கு நாம் ஆஸ்கார் கொடுக்கலாம் நண்பரே! மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//Chitra said...

.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... உப்புமா ஊசி போச்சு!//

வாங்க வாங்க! மிக்க நன்றி சகோதரி! :-)

சேட்டைக்காரன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

இப்ப பிரச்சினை என்னன்னா 63 பரோட்டாவையும் யார் யார் சாப்பிடறது???//

63 பரோட்டா ஸ்டாலுக்கும் யார் மாஸ்டராவுறது? :-)
மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//Ponchandar said...

வி வி சி...கலக்குங்க...கலக்குங்க...கலக்கிட்டே இருங்க ! ! ! ! !//

கலக்கித்தானே ஆகணும்.சும்மா இருக்க வுடாம இப்புடி காமெடி பண்ணுறாய்ங்களே நம்மாளுங்க...?
மிக்க நன்றி நண்பரே! :-)

சேட்டைக்காரன் said...

//"குறட்டை " புலி said...

சேட்டை டிவியில் தேர்தல் சேட்டைகள் தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்//

நல்ல யோசனை! செஞ்சிரலாம் நண்பரே! மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//! சிவகுமார் ! said...

அண்ணே, அம்பது பரோட்டா சாப்புட்டேன். நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க. கோட்டை அழிங்க. நான் மொதல்ல இருந்து சாப்புடறேன்!//

நீங்க வேண்ணா வெளாட்டுக்கு இப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனா, இதங்காட்டி பெரிய காமெடியெல்லாம் பண்ணிக்காட்டுவாங்க பார்த்திட்டேயிருங்க! :-)

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//YESRAMESH said...

இனிமே டூஜியை மறந்துடவேண்டியதுதான்...//

அப்புடி ஆவாதுன்னு நினைக்கிறேன். அதை வச்சு நிறையா மெரட்டுவாங்க!
மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//Ambedhan said...

ஆனந்த விகடனில் வரும் படக்கதை பாணியிலேயே பெயர்கள் வைத்து பிண்ணிப்புட்டீங்க. அரசியலை எளிய மக்களுக்கு உணர்த்த எளிமையான, சரியான வழி உங்களுடையது.//

அரசியல் கூத்துக்களை ஆக்ரோஷமாக விமர்சிப்பதைவிடவும், இப்படி நக்கல் பண்ணுவதுதான் எனக்கு ஒத்துவருகிறது. அது சரியாக இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//sudhanandan said...

63-ம்‌ ஒவ்வொரு விதமான அவங்களுக்கு புடிச்சா மாதிரி பரோட்டா கேட்கிறாங்களாமே... கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா.... அப்டின்னு.... இத பத்தி படத்திலே ஏதாவது உண்டா...//

ம்...ஒரு மோன்டேஜ் சாங் இருக்குது. நான் எழுந்திரிச்சு தம்மடிக்கப் போயிட்டேன். :-)
மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//Speed Master said...

உப்புமா சூப்பர்//

மிக்க நன்றி நண்பரே! :-)

சேட்டைக்காரன் said...

//ரஹீம் கஸாலி said...

கலக்குறீங்க பாஸ்//

மிக்க நன்றி நண்பரே! :-)

சேட்டைக்காரன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:) //

:-))

சேட்டைக்காரன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா அருமை அருமை....//

மிக்க நன்றி நண்பரே! :-))

சேட்டைக்காரன் said...

//கே. ஆர்.விஜயன் said...

இதாங்க ஹைலைட். கலக்கீட்டீங்க தலைவா.//

வருகைக்கும் கருத்துக்கும் & பின்தொடரத்தொடங்கியதற்கும் மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

//ரிஷபன் said...

ஒரே சம்பந்தம் நாம் தியேட்டருக்குள் வந்து ஏமாறத் தயாராய் இருப்பதுதான்..சரியான காமெடி கலாட்டா//

தியேட்டருக்குப் போகாட்டி, இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக-ன்னு வீட்டுக்குள்ளேயே கொணாந்திருவாங்களே...? :-)
மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//Senthil said...

great!!!!!!!!!!!!//

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மூன்று நாட்களாகவே எனக்குள்ளும் ஒரு குழப்பம் இருந்தது.//

பெரும்பாலானவர்களுக்கு இருந்த குழப்பம்தானே அது? :-)

//எங்க வீட்டுப்பகுதியில் மின் பராமரிப்புக்காக இன்று முழு நேர மின்வெட்டு. அதனால் பகல் பூராவும் சேட்டை டி.வி. சேனலே கிடைக்கவில்லை. நள்ளிரவில் தான் இந்த உங்கள் டி.வி யைப் பார்த்து விட்டு, தெளிவடைந்தேன். நன்றி//

இன்னும் மின்வெட்டுக்கு ஒரு மாற்று கண்டுபிடிக்காமல் இருக்கிறார்களே? :-(
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

//ரேகா ராகவன் said...

அரசியல் சினிமாவை நகைச்சுவையாக விமர்சனம் செய்வதற்கு உங்களை விட்டா வேற யாரும் கிடையாது சேட்டை..//

ஆஹா, வாங்க வாங்க! பார்த்து ஒரு மாமாங்கமாயிருச்சே! நல்லாயிருக்கீங்களா ஐயா?
வருகைக்கும் எப்போதும்போல உற்சாகமூட்டும் உங்களது கருத்துக்கும் மிக்க நன்றி!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த சஸ்பென்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை!//
ஆமா

ரஹீம் கஸாலி said...

நேற்றைய என் பதிவிற்கு வாக்களித்து, பின்னூட்டமிட்டு ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....
இன்றைய என் பதிவு....
http://ragariz.blogspot.com/2011/03/blog-post_11.html
சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..- பிரபல பதிவர் குற்றசாட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டை அண்ணன் பின்னி பெடலெடுத்துட்டாரு... ஈரமணி.... ஹஹஹா...... !

தோழி பிரஷா said...

கலக்கல்.

சேட்டைக்காரன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த சஸ்பென்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் எவ்வித சம்பந்தமில்லை!//
ஆமா//

ஆமாமா! :-)

சேட்டைக்காரன் said...

//ரஹீம் கஸாலி said...

இன்றைய என் பதிவு....http://ragariz.blogspot.com/2011/03/blog-post_11.html
சில பதிவர்கள் குழு அமைத்துக்கொண்டு...தங்களுக்குள் ஓட்டு போட்டுக்கொள்கின்றனர்..- பிரபல பதிவர் குற்றசாட்டு//

மேட்ச்-ஃபிக்ஸிங் எப்படி நடக்குதுன்னு இதுவரை தெரியாம இருந்தது. இப்போ புரிஞ்சுக்கிட்டேன். :-)

சேட்டைக்காரன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டை அண்ணன் பின்னி பெடலெடுத்துட்டாரு... ஈரமணி.... ஹஹஹா...... !//

என்ன பானா ராவன்னா, உங்க கருத்துக்கணிப்பை விடவா? செம கலாய்ப்பில்லே கலாய்ச்சிருக்கீங்க! பானா ராவன்னா ராக்ஸ்! :-) நன்றி!

சேட்டைக்காரன் said...

//தோழி பிரஷா said...

கலக்கல்.//

மிக்க நன்றி! :-)

Niroo said...

DONT WORRY ஆட்டோ வருது

சேட்டைக்காரன் said...

//Niroo said...

DONT WORRY ஆட்டோ வருது//

I am waiting. Thanks! :-)