Sunday, March 6, 2011

ரயிலே...ரயிலே..ரயிலே...ரயிலே..!

ஏற்காடு எக்ஸ்பிரஸ் கிளம்பத்தயாராயிருக்க, டீக்கடையில் கிளாசை உடைத்தவரைப் போல கண்கள் நிலைகுத்தி அமர்ந்திருந்தார் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி. தலைவரின் முகம் பூட்டப்பட்ட டாஸ்மாக் போல பொலிவிழந்திருப்பதைக் கண்டார் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி.

"அண்ணே! உங்க கவலை எனக்குத்தெரியாதா?" என்று கிசுகிசுப்பாகச் சொன்னார். "இதோ பாருங்க, பெட் -பாட்டில்லே பெப்ஸியும் சரக்கும் கனகச்சிதமா மிக்ஸிங் பண்ணி வச்சிருக்கேன். அப்பப்போ எடுத்துக் குடிச்சுட்டே ஈரோடு போய்ச்சேரலாம்!"

"தெய்வண்டா நீ!" கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் கண்கள், தவமாய்த்தவமிருந்து ராஜ்கிரணைப் போலப் பனித்தது."சரக்கு ரெடி பண்ணிட்டே! கூடவே ஆச்சியும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?"

"என்ன தலைவரே? ஓடுற டிரெயினிலே போயி ஆச்சியைக் கொண்டாங்கறீங்களே?"

"லேய் மண்டு, நான் சொல்லுறது ஆச்சி ஊறுகாய்! சரக்கோட அதையும் நக்கிக்கிட்டே போனா எம்புட்டு நல்லாயிருக்கும்?"

"நான் எதுக்கு இருக்கிறேன்? அடுத்த போகியிலே ஒரு ஆந்திராக்காரரு பெசரட்டும், கொங்குரா சட்னியும் கொண்டுவந்திருந்தாரு! அப்படியே லவட்டிக்கிட்டு வந்திட்டேன். இதோ...!"

"உன்னை மாதிரி இன்னும் கொஞ்சம் தொண்டருங்க சேர்ந்தா கு.மு.க 2016-லே கண்டிப்பா ஆட்சியமைச்சே தீருண்டே!"

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே "வாழ்க வாழ்க," என்று கோஷம் முழங்குவது கேட்டது.

"எலேய் கோவிந்தா, நம்மளை வழியனுப்பவா வந்திருக்காக?"

"இல்லேண்ணே, நம்ம மருத்துவரு ராமதாஸ் வாறாரு! நமக்கு இந்த மாதிரி கோஷம் வரணுமுன்னா, இன்னும் ரெண்டுவருசமாவது அரசியல்நடத்தி அமாவாசைக்கு அமாவாசை அணியை மாத்திட்டே இருக்கணும்."

பேசிக்கொண்டிருக்கும்போதே மருத்துவர் ராமதாஸ் வண்டியிலேறி, சரியாக கிருஷ்ணசாமியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

"ஐயா வணக்கம்! இவருதான் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி! குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தோட தலைவர்! என் பேரு கோல்கொண்டா கோவிந்தசாமி; நான் செயலாளர்."

"ஓஹோ!" மருத்துவர் ராமதாஸ் முகம்சுளித்தார். "ஒரு குவார்ட்டர் வாங்கினால் ஊறுகாய் இலவசமாத் தரணுமுன்னு போராட்டம் நடத்துன கட்சிதானே? எனக்கு மதுவும், சினிமாவும் அறவே பிடிக்காது தெரியுமா?"

"ஹிஹிஹி!" பெப்ஸி பாட்டிலைச் சீப்பியவாறு சிரித்தார் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி. "எங்களுக்கு அது ரெண்டும் ரெண்டு கண்கள் மாதிரி! அதுனாலேதான் இன்னும் கட்சிக்குன்னு ஒரு அலுவலகம் கூட வச்சுக்கலை. எங்க பொதுக்குழு டாஸ்மாக் கடையிலே; செயற்குழு தியேட்டர் வாசலிலே; உயர்மட்டக்குழு பிளாட்பாரத்துலே! எம்புட்டு செலவு மிச்சம்!"

"சரி சரி! எனக்கு அப்பர்-பர்த்!" வண்டி நகரத்தொடங்கியதும் மருத்துவர் ஐயா எழுந்து கொண்டார். "நான் மேலே படுத்துத் தூங்கப்போறேன்!"

"நிம்மதியாத் தூங்குங்க ஐயா! தூக்கத்துலே புலம்ப மாட்டீங்களே?" கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியின் நக்கல் எரிச்சலூட்டினாலும் அதை வெளிக்காட்டாமல் மருத்துவர் ஐயா மேலேறிப்படுத்து சிறிது நேரத்தில் உறங்கினார். அவரது உதவியாளர் கீழே அமர்ந்து கொண்டார்.

சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கிப்போக, கிருஷ்ணசாமி மட்டும் பெப்ஸி பருகியபடியே விழித்திருந்தார். அப்போது திடீரென்று...

"இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஊழல் ஆட்சியை களைய வேண்டும்!"

கிருஷ்ணசாமி திடுக்கிட்டு எழுந்துபார்க்கவும், மேல்-பர்த்தில் படுத்திருந்த மருத்துவர் ராமதாஸ் உறக்கத்தில் எதையெதையோ புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டார்.

"ஐயா...ஐயா!" கிருஷ்ணசாமி மருத்துவர் ஐயாவை எழுப்பினார். "எழுந்திரிங்க ஐயா! எழுந்திரிங்க...!"

"என்..என்னாச்சு?" மருத்துவர் ஐயா கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தார். "தூக்கத்துலே உளறினேனா?"

"ஆமாங்கய்யா!" கிருஷ்ணசாமி சிரித்தார். "பழைய ஞாபகத்துலே தி.மு.கவைத் திட்டினீங்க! குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சின்னு இருபது நாளைக்கு முன்னாடி பேசினதையெல்லாம் புலம்புனீங்க!"

"யாரு சொன்னாங்க இருபது நாளுன்னு..?" மருத்துவர் ஐயாவுக்குக் கோபம் வந்தது. "இன்னியோட இருபத்தியோரு நாளாயாச்சு தெரியுமா?"

"ஆமாம்! மணி பன்னிரெண்டுக்கு மேலாயிடுச்சோ? நான் கவனிக்கலே!" என்ற கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி, "ஐயா, வேண்ணா அரக்கோணத்துலே சூடா ஒரு டீ வாங்கித்தரட்டுமா?" என்று கரிசனத்தோடு கேட்டார்.

"அதெல்லாம் எனக்குப் பிடிக்காது!" என்று கடுகடுப்புடன் கூறினார் மருத்துவர் ஐயா.

"உங்களுக்கு டீ, காப்பி பிடிக்காது. மத்தவங்க விஸ்கி, பிராந்தி சாப்பிட்டா பிடிக்காது. அப்புறம் எப்படித்தான் ஆட்சியைப் புடிச்சு முதலமைச்சராகப்போறீங்களோ? சரி, நிம்மதியாத் தூங்குங்க!"

மீண்டும் மருத்துவர் ஐயா ஆழ்ந்து உறங்க, கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி தொடர்ந்து பெப்ஸியைச் சீப்பிக் குடித்துக்கொண்டிருந்தார். நீண்ட அமைதிக்குப்பின்னர் திடீரென்று....

"அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்! டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம்! சினிமாவை ஒழிப்போம்!"

"ஐயா...ஐயா!" சிரிப்பை அடக்கியவாறே கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி மருத்துவர் ஐயாவை எழுப்பினார்.

"என்னாச்சு, திரும்பவும் பழசையெல்லாம் பேசினேனா?" மருத்துவர் ஐயா எரிச்சலுடன் கேட்டார்.

"அதெல்லாம் பழசா ஐயா? ரொம்ப சமீபத்துலே பேசுனதுதானே? எனக்கொரு யோசனை ஐயா, எங்களுக்கு எல்லாத் தொகுதிலேயும் செல்வாக்கு இருக்கு. பேசாம எங்ககூட கூட்டணி வச்சிக்கலாமே நீங்க?"

"விளையாடறீங்களா? எனக்கு குடிகாரங்கதான் முதல் எதிரி!" உறுமினார் மருத்துவர்.

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி தி.மு.க.தான் என் முதல் எதிரின்னு சொல்லிட்டு, இப்போ அவங்க கூட போகலியா? சரி, இஷ்டமில்லாட்டி விடுங்க! அரக்கோணத்துலே ஒரு பாதாம்பால் வாங்கித்தரட்டுமா?"

"நானே இறங்கி வாங்கிக்குடிச்சுக்கிறேன். தொந்தரவு பண்ணாதீங்க!" மருத்துவர் ஐயா புரண்டு படுத்தார்.

அரக்கோணம் வந்தபோது, கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தார். மெதுவாக, கீழே இறங்கிய மருத்துவர் ஐயா, உதவியாளரை எழுப்பினார்.

"எழுந்திருய்யா, இந்த கு.மு.க ஆளு ரொம்ப அலப்பறை பண்ணுறான். நாம ஒரு பாதாம்பால் குடிச்சிட்டு, வேறே பொட்டிக்குப் போயிரலாம். தொந்தரவு தாங்க முடியலே!"

"ஐயா, அந்தாளு மப்புலே என்னத்தையோ உளர்றான்...அதைப்போயீ நீங்க..."

"சும்மாயிரு, அந்தாளு என்னமோ 234 தொகுதி, கூட்டணின்னு சொல்லுறான். தப்பித்தவறி நான் சரின்னு சொன்னாலும் சொல்லிருவேன். மூச்சுக்காட்டாம சாமானெல்லாம் எடுத்திட்டு வா; வேறே பொட்டிக்குப்போயிரலாம்."

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து வண்டி நகரத்தொடங்கியதும், கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி முழித்துக்கொண்டார்.

"அட கோவிந்தா, எங்கே மருத்துவர் ஐயாவைக்க்காணோம்?"

"அண்ணே, ஒருவேளை உங்க தொல்லை தாங்காம வேறே பொட்டிக்குப் போயிருப்பாங்களோ?"

"போனா என்ன? ஈரோட்டுலே பார்த்துத்தானே தீரணும்?"

கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியும், கோல்கொண்டா கோவிந்தசாமியும் பேசிச்சிரித்துக்கொண்டிருக்கையில், வேறு பெட்டிக்கு மாறியிருந்த மருத்துவர் ஐயா, அங்கேயும் காலியாகக் கிடைத்த ஒரு அப்பர்-பர்த்தில் ஏறிப்படுத்துக்கொண்டார். கீழேயிருந்து ஒரு பயணி அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.

"வணக்கம் மருத்துவர் ஐயா! நான் மக்கள் டிவி தவறாமப் பார்க்கிறேன் ஐயா!"

"ரொம்ப மகிழ்ச்சி! நீங்க யாரு, எங்கே போயிட்டிருக்கீங்க?"

"என் பேரு தண்டபாணி ஐயா! லீவு முடிஞ்சு தில்லிக்குத் திரும்பிப் போயிட்டிருக்கேன்!"

"ஆஹா! மம்தா பானர்ஜீயோட சாதனையே சாதனை!" என்று நெக்குருகினார் மருத்துவர் ஐயா. "ஒரே ரயிலிலே மேலே படுத்திட்டிருக்கிறவன் ஈரோடு போறான்; கீழே உட்கார்ந்திட்டிருக்கிறவன் டெல்லி போறான். விஞ்ஞானம் ரொம்ப முன்னேறிடுச்சு!"

"என்னது? ஈரோடா? ஐயா! நீங்க ஈரோடா போகணும்? அந்த வண்டி கிளம்பினதுக்கப்புறம் தான் இந்த வண்டி பிளாட்பாரத்துக்கு வந்திச்சு! நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க?"

"பாதாம்பால் சாப்பிட்டோம்! ஐயையோ, இந்த டிரெயின் டெல்லிக்கா போகுது?"

"ஆமாங்கய்யா! அது டிரெயின் இல்லை ஐயா...தொடர்வண்டி...!"

"நாசமாப்போக! நான் வண்டியே மாத்தி ஏறிட்டேன். உனக்கு சொற்பிழை பெருசாப்போச்சா? யோவ், சங்கிலியைப் பிடிச்சு இழுத்து வண்டியை நிறுத்துய்யா!"

"ஐயையோ! அடிக்கடி பெட்டி மாத்தி மாத்தி, இப்போ வண்டியே மாத்தி ஏறிட்டீங்களே ஐயா?"

வண்டி டெல்லியை நோக்கி விரைந்தது.

39 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! நச் ரயில் பயணம்...

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்

Anonymous said...

//மருத்துவர் ஐயா புரண்டு படுத்தார்.//

தலைவர் புரண்டு பேசுவது, நடப்பது, படுப்பது. இதெல்லாம் ஜகஜம் தானே!

பிரபாகர் said...

சிரித்து வயிறு வலிக்கிறது சேட்டை நண்பா... அதகளம்...

பிரபாகர்...

பொன் மாலை பொழுது said...

// பெட் -பாட்டில்லே பெப்ஸியும் சரக்கும் கனகச்சிதமா மிக்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்.//

அனுபவம் சேட்ட அனுபவம்........போட்டோ ஷாப் வேலை பிரமாதம். :))) நக்கல் அதிகம் வழக்கம் போல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மருத்துவர் நாடியைப் பிடித்து இன்று மருத்துவருக்கே மருத்துவம் பார்த்த சேட்டையின் குறும்பினில் கிங் பிஷர் போலவே நல்ல கிக் இருந்தது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செம நக்கல் பாஸ். ஹிஹி

எல் கே said...

சேட்டை உன்னை கொஞ்ச நாள் கணிணி இல்லாத ஊருக்கு மாத்த போறாங்களாம் . அனைத்துக்கட்சி செய்தி இது

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
"ஆமாங்கய்யா! அது டிரெயின் இல்லை ஐயா...தொடர்வண்டி...!"

"நாசமாப்போக! நான் வண்டியே மாத்தி ஏறிட்டேன். உனக்கு சொற்பிழை பெருசாப்போச்சா?

haa haa கணிக்க முடியாத காமெடி பஞ்ச்

சி.பி.செந்தில்குமார் said...

????>>>
"ஐயையோ! அடிக்கடி பெட்டி மாத்தி மாத்தி, இப்போ வண்டியே மாத்தி ஏறிட்டீங்களே ஐயா?"

கட்சி மாறும் கபடத்தை கலக்கலாய் காமெடி பண்ணீட்டீங்க

டக்கால்டி said...

அருமைங்க...
மக்கள் சேவை மகேசனை கலாய்க்கறீங்க, பார்த்துக்கோங்க ...
ஏன்னா அவங்க படப்பொட்டியை தூக்கின கும்பல்...உங்களையும் தூக்கிட போறாங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கல் காமடி நையாண்டி

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை..

Chitra said...

"ஐயையோ! அடிக்கடி பெட்டி மாத்தி மாத்தி, இப்போ வண்டியே மாத்தி ஏறிட்டீங்களே ஐயா?"


......ஹா,ஹா,ஹா,ஹா,... செம பஞ்ச் லைன்!

Speed Master said...

சேட்டை சேட்டை

Unknown said...

உண்மையிலேயே சிரிப்பு தாங்கல.

MANO நாஞ்சில் மனோ said...

மருத்துவர் அண்ணாச்சியை நல்லா வாரி விட்டுட்டீங்க...

YESRAMESH said...

பொட்டி மாத்தருதுக்கு தானே பெட்டி மாத்தறது

ரிஷபன் said...

ரூட்ட மாத்தி விட்டதும் நல்லதுதான்..

வெங்கட் நாகராஜ் said...

அட என்ன சேட்டை, மருத்துவரை தில்லிக்கு அனுப்பிட்டீங்களே! ஏற்கனவே – மகனுக்கு ராஜ்ய சபா எம்.பி/மந்திரி பதவி-ன்னு ஏதோ பேசிட்டு இருந்தாரு! இங்க வந்தா அதை கேட்க ஆரம்பிச்சா, மன்மோகன் என்ன பண்ணுவாரு பாவம்! ஏற்கனவே, இருக்கற பிரச்சனையை சமாளிக்கவே அவருக்கு நேரம் பத்தல!

ஸ்வர்ணரேக்கா said...

//"நாசமாப்போக! நான் வண்டியே மாத்தி ஏறிட்டேன். உனக்கு சொற்பிழை பெருசாப்போச்சா//


-- சிரிச்சு மாளலை எனக்கு... செம பன்ச்...

ஜீவன்சிவம் said...

தி மு கா கண்ணில் மண்ணை துவிட்டு பேரம் பேச டெல்லி வண்டி ஏறியிருப்பார் அதை போய் தப்ப நினைக்கலாம

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

அண்ணே! நச் ரயில் பயணம்...//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

தலைவர் புரண்டு பேசுவது, நடப்பது, படுப்பது. இதெல்லாம் ஜகஜம் தானே!//

அதானே! அதானே!! :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//பிரபாகர் said...

சிரித்து வயிறு வலிக்கிறது சேட்டை நண்பா... அதகளம்...//

இருந்த சில சீரியஸ் மேட்டர்களைத் தூக்கிட்டதால இருக்கும் நண்பரே! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

அனுபவம் சேட்ட அனுபவம்........//

ஹிஹி! நமக்கு அந்த அனுபவமெல்லாம் இல்லே நண்பரே! வெள்ளைபீடி மட்டும்தான்! :-)

//போட்டோ ஷாப் வேலை பிரமாதம். :))) நக்கல் அதிகம் வழக்கம் போல.//

போட்டோஷாப் இல்லாட்டி ரொம்ப கஷ்டப்படுவேன். மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மருத்துவர் நாடியைப் பிடித்து இன்று மருத்துவருக்கே மருத்துவம் பார்த்த சேட்டையின் குறும்பினில் கிங் பிஷர் போலவே நல்ல கிக் இருந்தது.//

ஆஹா! கிங்ஃபிஷர்-லே அம்புட்டு கிக் இருக்குமா? :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செம நக்கல் பாஸ். ஹிஹி//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//எல் கே said...

சேட்டை உன்னை கொஞ்ச நாள் கணிணி இல்லாத ஊருக்கு மாத்த போறாங்களாம் . அனைத்துக்கட்சி செய்தி இது//

ஆஹா! நல்ல செய்தி! நம்ம கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அமெரிக்காவுலே அப்படியொரு இடமிருக்கிறதா எழுதியிருக்காங்க! ஹையா, நான் அமெரிக்கா போறேனே! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

>>>>"ஆமாங்கய்யா! அது டிரெயின் இல்லை ஐயா...தொடர்வண்டி...!"

"நாசமாப்போக! நான் வண்டியே மாத்தி ஏறிட்டேன். உனக்கு சொற்பிழை பெருசாப்போச்சா?//

haa haa கணிக்க முடியாத காமெடி பஞ்ச்//

கடைசியிலே சொருவினது தல! நல்லாயிருக்கா? :-)

????>>> "ஐயையோ! அடிக்கடி பெட்டி மாத்தி மாத்தி, இப்போ வண்டியே மாத்தி ஏறிட்டீங்களே ஐயா?"//

கட்சி மாறும் கபடத்தை கலக்கலாய் காமெடி பண்ணீட்டீங்க//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல! :-)

settaikkaran said...

//டக்கால்டி said...

அருமைங்க...மக்கள் சேவை மகேசனை கலாய்க்கறீங்க, பார்த்துக்கோங்க ...
ஏன்னா அவங்க படப்பொட்டியை தூக்கின கும்பல்...உங்களையும் தூக்கிட போறாங்க//

எனக்கு பக்கபலமா கு.மு.க.தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி இருக்காரு! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//ரஹீம் கஸாலி said...

கலக்கல் காமடி நையாண்டி//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு இந்தக்கதைக்கும் இந்த ஆட்சிக்கும் சம்பந்தமில்லை..//

நான் வெகுநாட்களாக வந்து வாசிக்க விரும்புகிற வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று. நேரமின்மைதான் தடை. விரைவில் வருவேன். :-)

settaikkaran said...

//Chitra said...

......ஹா,ஹா,ஹா,ஹா,... செம பஞ்ச் லைன்!//

நாம சொல்லவே வேண்டாம்; அவிய்ங்களே தராங்க!
மிக்க நன்றி சகோதரி! :-)

settaikkaran said...

//Speed Master said...

சேட்டை சேட்டை//

யெஸ்! மை நேம் இஸ் சேட்டை! :-)

settaikkaran said...

//கே. ஆர்.விஜயன் said...

உண்மையிலேயே சிரிப்பு தாங்கல.//

ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

மருத்துவர் அண்ணாச்சியை நல்லா வாரி விட்டுட்டீங்க...//

ஹிஹி! ஏதோ நம்பளாலே முடிஞ்சது!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//YESRAMESH said...

பொட்டி மாத்தருதுக்கு தானே பெட்டி மாத்தறது//

ஆஹா, இதை யூஸ் பண்ணியிருக்கலாமே? மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ரிஷபன் said...

ரூட்ட மாத்தி விட்டதும் நல்லதுதான்..//

ஆனா, போய்ச்சேர வேண்டிய இடத்துக்குப் போயிட்டாராமே? :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

அட என்ன சேட்டை, மருத்துவரை தில்லிக்கு அனுப்பிட்டீங்களே! ஏற்கனவே – மகனுக்கு ராஜ்ய சபா எம்.பி/மந்திரி பதவி-ன்னு ஏதோ பேசிட்டு இருந்தாரு! இங்க வந்தா அதை கேட்க ஆரம்பிச்சா, மன்மோகன் என்ன பண்ணுவாரு பாவம்! ஏற்கனவே, இருக்கற பிரச்சனையை சமாளிக்கவே அவருக்கு நேரம் பத்தல!//

மன்மோகன் சிங் கிட்டே எல்லா கேள்விக்கும் ரெடியா பதில் இருக்குதே:
"எனக்கு எதுவுமே தெரியாது. நான் வெறும் பிரதம மந்திரி மட்டும்தான்!"

மிக்க நன்றி வெங்கட்ஜீ! (ஹை, வெங்கட்ஜீ-ன்னு கூப்பிட்டா நல்லாருக்கே!)

settaikkaran said...

//ஸ்வர்ணரேக்கா said...

-- சிரிச்சு மாளலை எனக்கு... செம பன்ச்...//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//ஜீவன்சிவம் said...

தி மு கா கண்ணில் மண்ணை துவிட்டு பேரம் பேச டெல்லி வண்டி ஏறியிருப்பார் அதை போய் தப்ப நினைக்கலாம//

அப்படித்தான் ஜோலார்பேட்டை ஜங்ஷனிலே பேசிட்டாங்க! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)