அரோகரா ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனை அணுகியபோது அங்கே ஒரு நபர், அசப்பில் மீரா ஜாஸ்மின் போலிருந்த ரிசப்ஷனிஸ்டிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.
"என்ன மேடம், கம்ப்யூட்டரிலே பேரை தப்புத்தப்பா அடிக்கிறீங்க? என் பேரு பொன்னுச்சாமி; நீங்க பூனைச்சாமின்னு அடிச்சிருக்கீங்களே? என்னைப் பார்த்தா பூனை மாதிரியா இருக்கு?" என்று இரைந்தார். விட்டால் பாய்ந்து பிறாண்டி விடுவார் போலிருந்தது.
"சாரி சார்! நான் திருத்திடறேன் சார்," என்று வருத்தம் தெரிவித்த அந்தப்பெண், "அதுவரைக்கும் நீங்க ஹாலிலே உட்கார்ந்து எலிவிஷன்...சாரி, டெலிவிஷன் பார்த்திட்டிருங்க சார்," என்று கெஞ்சிக்கூத்தாடி அனுப்பி வைத்தாள். வைத்தகண் வாங்காமல் நான் ரிஸப்ஷனை அணுகினேன்.
"எக்ஸ்கியூஸ் மீ மேடம்! டாக்டர் ஊளம்பாறை உலகப்பனைப் பார்க்கணும்."
"உங்க பேரைச் சொல்லுங்க சார்!" என்றாள் மீரா ஜாஸ்மின்.
"என் பேரு சேட்டைக்காரன்; நீங்க பாட்டுக்கு சொட்டைக்காரன்-னு அடிச்சிராதீங்க. எனக்கு தலைக்கு உள்ளே எப்படியோ, ஆனா, தலைக்கு மேலே ஒரு வால்பாறை எஸ்டேட்டே இருக்கு!"
"என்னது சேட்டைக்காரனா? நாங்கல்லாம் உங்களோட விசிறிங்க சார்!" என்று பரபரப்புடன் கூவினாள். "நீங்க வலைப்பதிவு எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் எங்க ஆஸ்பத்திரி களைகட்டியிருக்கு! தினமும் பத்து பேராவது வர்றாங்க! ஒருவாட்டி போலீஸ்வந்து கண்ணீர்புகை கூட வீசுனாங்க தெரியுமா?"
"ரொம்ப சந்தோஷம்! சீக்கிரம் வலைப்பதிவாளர் வாஸ்து பத்தி எழுதப்போறேன். லத்திசார்ஜே நடத்த வேண்டிவரும் பாருங்க!" என்று பதிலளித்தேன்.
"சிஸ்டர்...சிஸ்டர்..!" என்று மீரா ஜாஸ்மின் குரல் கொடுக்க, எதிர்த்திசையிலிருந்து நர்ஸ் உடையில் வந்து கொண்டிருந்தது.....அட பாவனா!
"சிஸ்டர்...இவரு யாரு தெரியுமா? சேட்டைக்காரன்!" என்று அறிமுகப்படுத்தினாள் மீரா ஜாஸ்மின்.
"ஆணோ?" பாவனா முகத்தில் வியப்பு.
"ஆணே தான். அதுலே என்ன சந்தேகம் உங்களுக்கு? இதோ பாருங்க, கைப்புள்ளே மாதிரி மீசையெல்லாம் கூட வச்சிருக்கேன்," என்று அவசரமாய்க் கூறினேன்.
"சார் மலையாளத்துலே ’ஆணோ’ன்னு கேட்டா ’அப்படியா’ன்னு அர்த்தம் சார்!" என்று விளக்கினாள் மீரா ஜாஸ்மின்.
"ஆணோ? சரி, டாக்டர் உலகப்பனைப் பார்க்க முடியுமா?"
"பார்க்கலாம் சார். சிஸ்டர், சேட்டைக்காரன் சாரை டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப்போங்க!"
டாக்டர் உலகப்பனின் அறையில் இன்னுமோர் பரிச்சயமான முகம் - அமலா பால்!
"வாங்க மிஸ்டர் சேட்டை! " என்று கைகுலுக்கினார் டாக்டர். "உட்காருங்க!" என்று உபசரித்தார். பாவனா வெளியேறவும், அமலா பால் எனது கையில் ரப்பரைச்சுற்றி இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.
"பார்த்துப் பண்ணுங்கம்மா! ஒருவாட்டி பிரஷர் செக் பண்ணுறேன்ன்னு அவங்க போட்டு அழுத்தினதுலே என்னோட கை எலும்பு முறிஞ்சுபோயிருச்சு. இதை வச்சுத்தான் வலையுலகத்துலே காலம்தள்ளிட்டிருக்கேன்."
"சேட்டையோட பிளட் பிரஷர் நார்மல் டாக்டர்!" என்று கூறினாள் அமலா பால்.
"சொல்லுங்க சேட்டை, என்ன பிரச்சினை உங்களுக்கு?" என்று கேட்டார் டாக்டர் உலகப்பன்.
"டாக்டர், ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மொக்கை எழுதலாமுன்னு உட்கார்ந்தேன். ஆனா, எழுதி முடிச்சதுக்கப்புறம் பார்த்தா, அது புனைவா இருந்தது."
"சரிதான். இந்தமாதிரி சில அபூர்வமான கேசுங்க இருக்கு சேட்டை! நீங்க என்ன செய்யணுமுன்னு நினைக்கிறீங்களோ, கை அதுக்கு நேர் மாறான காரியத்தைச் செய்யும். எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் அவரோட கேர்ள்-ஃபிரண்டையும் அவங்க அம்மாவையும் சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போயி...."
"ஐயையோ...!" என்று பதறினேன்.
"இன்னும் சொல்லியே முடிக்கலை சேட்டை!" என்று இடைமறித்தார் டாக்டர். "கேர்ள்-ஃபிரண்டையும் அவங்க அம்மாவையும் சினிமாவுக்குக் கூட்டிட்டுப்போயி, இருட்டுலே அம்மாக்காரியோட பர்சிலேருந்து ஐநூறு ரூபாயை ஆட்டையைப் போட்டுட்டாரு!"
"சரியாப்போச்சு! அப்படீன்னா இது ஒருவிதமான வியாதியா டாக்டர்?"
"ஆமா சேட்டை! இதுக்கு ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்-னு பேரு! பொதுவா இது தலையிலே அடிபட்டு மூளையிலே பாதிப்பு ஏற்படுறவங்களுக்கு அபூர்வமா வருமாம். உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது ஆயிருக்கா?"
"தலையிலே அப்பப்போ யாராவது தட்டி நிறைய அடிபட்டிருக்கு. ஆனா எனக்கெல்லாம் மூளையிலே பாதிப்பு ஏற்பட சான்ஸ் இருக்கா டாக்டர்?"
"அதுவும் சரி தான்! அப்புறம் வேறேன்ன பிரச்சினை சொல்லுங்க!"
"முந்தாநாளு எங்க எம்.டியோட சம்சாரம் ஆபீசுக்கு வந்து என்கிட்டே இங்கிலீஷ்லே பேசுனாங்க. ஒபாமாவுக்கு எம்புட்டு தமிழ்தெரியுமோ அம்புட்டு இங்கிலீஷ்தான் எனக்குத் தெரியும். ஆனா, அன்னிக்கு பொளந்து கட்டிப்புட்டேன் டாக்டர். அவங்களே ஆச்சரியப்பட்டு ’சேட்டை, உங்க இங்கிலீஷ் UK இங்கிலீஷ் மாதிரி இருக்குதுன்னு சொல்லிட்டாங்க!"
"நீங்க இதுக்கு முன்னாலே UK-லே இருந்திருக்கீங்களா சேட்டை?"
"ஆமா டாக்டர், உடுப்பி(U) கிருஷ்ணாவுலே(K) மூணுவருஷம் பில் போட்டிருக்கேன்."
"அப்படீன்னா இதுக்குப் பேரு ஃபாரின் எக்ஸன்ட் சிண்ட்ரோம்."
"ஐயையோ! புதுசு புதுசா சொல்றீங்களே டாக்டர். பயமாயிருக்கே?"
"பயப்படாம சொல்லுங்க சேட்டை! டாக்டர் கிட்டேயும் வக்கீல் கிட்டேயும் பொய் சொல்லக்கூடாதுன்னு தெரியுமில்லே?"
"தெரியும் டாக்டர். அவங்க மட்டும்தான் சொல்லலாமுண்ணும் தெரியும்!"
"ஹிஹி! அடுத்த பிரச்சினை என்ன சொல்லுங்க?"
"விசித்திரமான கனவா வருது டாக்டர்! ஒருவாட்டி தாமஸ் ஆல்வா எடிசனும் நானும் தாம்பரம் ஸ்டேஷனிலேருந்து டிரெயினிலே வர்றா மாதிரி கனவு வந்துச்சு. அப்பாலே, ஒரு வாட்டி எம்.கே.தியாகராஜ பாகவதர் என் கிட்டே "டி.ஆர்.ராஜகுமாரியைப் பத்தி ஒரு இடுகை எழுது,"ன்னு சொல்லுறா மாதிரி ஒரு கனவு. அப்பப்போ நான் உசிரோடவே இல்லியோன்னு தோணுது டாக்டர். அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறா மாதிரி கனவெல்லாம் வருது."
"ஐயையோ...இது என்ன தெரியுமா? Walking Corpse Syndrome! அதாவது பிணம் எழுந்து நடக்குறா மாதிரி கற்பனை பண்ணிக்கிறது."
"என் நடையே அப்படித்தான் டாக்டர். நான் இருக்கிற இருப்புக்கு படையப்பா ரஜினி மாதிரியா நடக்க முடியும்?"
"சரி, காங்கிரஸ் தி.மு.க.கிட்டே கேட்கிற தொகுதி பட்டியல் மாதிரி உங்க பிரச்சினை எக்கச்சக்கமாயிருக்குது சேட்டை! இன்னும் என்னென்ன இருக்கு சொல்லிடுங்க!"
"கேலண்டர்-லே செப்டம்பர் பதினொண்ணாம் தேதியைப் பார்த்தா பாதாம்கீர் வாசனை மூக்கைத் தொளைக்குது. அக்டோபர் பன்னிரெண்டாம் தேதியைப் பார்த்தா மோர்க்குழம்பு வாசனை அடிக்குது."
"ஏன் அப்படி?"
"செப்டம்பர் பதினொண்ணு ஸ்ரேயா பொறந்தநாள். அக்டோபர் பன்னிரெண்டு சினேகா பொறந்தநாள்!"
"ஓஹோ! அப்புறம்?"
"ரேடியோவிலே பாட்டுக்கேட்டா, டிவி மாதிரி படம் தெரியுது டாக்டர்."
"புரிஞ்சுது! ஆனா, ஆவன்னா...அப்புறம் ஏ, பி, சி, டின்னு எந்த எழுத்தைப் பார்த்தாலும் கூடவே ஒரு கலரும் ஞாபகத்துக்கு வருதா?"
"ஆமா டாக்டர்!"
"அப்படீன்னா இதுக்குப் பேரு சினெதீஸியா" எதைப் பத்தி நினைச்சாலும் அதோட கலர், வாசனை எல்லாத்தையும் உடனே உணர முடியும்."
"டாக்டர்..ரொம்ப பயமுறுத்தறீங்களே?"
"பயப்படாதீங்க சேட்டை! ஒரு நாள் லீவு போட்டுட்டு வாங்க! எல்லா டெஸ்ட்டும் பண்ணிரலாம்."
"ஹிஹி! உங்க ஆஸ்பத்திரிக்கு எத்தனை வாட்டி வேண்ணா வரலாம் டாக்டர். அழகழகா மீரா ஜாஸ்மின், பாவனா, அமலா பால்-னு அட்டகாசமான ஃபிகருங்களா வேலை பார்க்கிறாங்களே?"
"சேட்டை, என்ன உளர்றே? மீரா ஜாஸ்மினாவது, பாவனாவாவது...?" டாக்டர் எரிந்து விழுந்தார்.
"இல்லியா பின்னே? இதோ நிக்குறாங்களே அமலா பால்தானே? " என்று அருகிலிருந்த நர்ஸைக் காண்பித்தேன்.
"நாசமாப்போச்சு! சேட்டை, இந்த நர்சுக்கு வயசு என்ன தெரியுமா? அம்பத்தி ரெண்டு. இவங்களைப் போயி அமலா பால்-னு சொல்றேன்னா உனக்கு அனேகமா ஸ்டெண்டால்ஸ் சிண்ட்ரோம் இருக்குன்னு அர்த்தம். அவங்களுக்குத்தான் அசிங்கமானதெல்லாம் கூட ரொம்ப அழகழகாத் தெரியும். உனக்கு ஒரு பிரச்சினையில்லை. பல பிரச்சினையிருக்கு!" என்று தலையிலடித்துக்கொண்டார் டாக்டர்.
"அப்படீன்னா இவங்க அமலா பால் இல்லையா?"
"யாரு, இந்த அரைக்கிழவியா? இந்த மூஞ்சியைப் போயி அமலா பால் கூட கம்பேர் பண்ணுறியே சேட்டை? உனக்கென்ன பைத்தியமா? இது மனப்பிராந்தி சேட்டை! இங்கிலீஷ்லே "ஷாலோ ஹல்,"னு ஒரு படம் வந்துதே! அதுலே 300 பவுண்டு இருக்கிற ஒருத்தியைப் போயி அழகின்னு ஒருத்தன் பின்னாலேயே சுத்துவானே! அந்த மாதிரிதான் இதுவும்..." என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே அமலா பால் போலிருந்த அந்த நர்ஸ் டாக்டர் உலகப்பனை முறைத்துப் பார்க்கத்தொடங்கினாள்.
ஒரு கொலைக்கு சாட்சியாக இருக்க விரும்பாமல் நான் பின்னங்கால் பிடறியில்பட ஓடி தப்பித்தேன். அடுத்தவாட்டி போய், இப்படி ஓடுவதற்கு என்ன பெயர் என்று கேட்க வேண்டும் - அதுவரை டாக்டர் உலகப்பன் உலகில் இருந்தால்...!
நன்றி: நண்பர் பிரபாகர் - இடுகைக்கருவுக்காக...!
நன்றி: சி.பி.செந்தில்குமார் - அடுத்த இடுகைக்காக...!

Tweet |
45 comments:
VADA
பேசிக்கொண்டிருந்த ஒரு சின்ன விஷயத்தை இவ்வளவு அழகான இடுகையாய் மாற்ற என் சேட்டையால்தான் முடியும். கலக்கல் நண்பா...
பிரபாகர்...
I COME LATER..... NOW BC....
இதை படிச்சிட்டு எதுவுமே புரியலன்னாலும் ‘ஆகா,சூப்பர் சேட்டை’ன்னு கமெண்டு போட்டா அந்த வியாதிக்கு என்ன பேரு?
ஒரு உரையாடலை வைத்தே ஒரு பதிவா? பலே பலே
arumaiyaa nakkal... uraiyaadal vaalththukal
// ஒருவாட்டி போலீஸ்வந்து கண்ணீர்புகை கூட வீசுனாங்க தெரியுமா?"//
இதுதான் சேட்டையின் தனி மகத்துவம் .தாங்கலடா சாமீ!
சேட்டை, தலை சுத்திப் போனது.. முதலில் ஏதோ விளையாட்டுத்தனமாக எழுதியிருக்கீங்கள் என்று நினைத்தேன்.. க்ளிக் செய்து படித்தால் உண்மையாகவே இப்படியெல்லாம் இருக்கிறது போல.. எல்லாமே கேள்வி கூட பட்டிருக்காத விஷயங்கள்..
இதையெல்லாம் இயக்குனர்கள் படித்தால் புது புதுசாக தினுசு தினுசாக மன நோயாளிக் கதைகள் வரப் போவது நிஜம்.. :)))
"நீங்க இதுக்கு முன்னாலே UK-லே இருந்திருக்கீங்களா சேட்டை?"
"ஆமா டாக்டர், உடுப்பி(U) கிருஷ்ணாவுலே(K) மூணுவருஷம் பில் போட்டிருக்கேன்."
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம பதில்!
//"என் பேரு சேட்டைக்காரன்; நீங்க பாட்டுக்கு சொட்டைக்காரன்-னு அடிச்சிராதீங்க. எனக்கு தலைக்கு உள்ளே எப்படியோ, ஆனா, தலைக்கு மேலே ஒரு வால்பாறை எஸ்டேட்டே இருக்கு!"//
ஒவ்வொரு வரியையும் மிகவும் ஆழமாக ரஸித்துப் படித்து விட்டு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தேன். நான் சொட்டையின் சே சேட்டையின் தீவிர ரஸிகனாகி விட்டேன். வெளியே வால்பாறை எஸ்டேட்டே இருந்தாலும், தங்கள் மூளை பூராவும் பன்ருட்டிப் பலாச் சுளையாகவல்லவா இனிக்கிறது!
//ஆணோ?" பாவனா முகத்தில் வியப்பு.//
கொன்னுட்டீங்க!
வாழ்த்துக்கள்.
//"டி.ஆர்.ராஜகுமாரியைப் பத்தி ஒரு இடுகை எழுது,"ன்னு சொல்லுறா மாதிரி ஒரு கனவு"//
உங்க கனவுக்கன்னி ரேஞ்சே தனி!
hahaha சூப்பர்
>>>அரோகரா ஆஸ்பத்திரியின் ரிசப்ஷனை
ஓப்பனிங்க்ல சிக்ஸர் அடிக்கலைன்னா அண்ணனுக்கு உறக்கம் வராதே..?
>>>"டாக்டர், ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி ஒரு மொக்கை எழுதலாமுன்னு உட்கார்ந்தேன். ஆனா, எழுதி முடிச்சதுக்கப்புறம் பார்த்தா, அது புனைவா இருந்தது."
haa haa ஹா ஹா
எனது பதிவுகள் எல்லாமே ஏன் மொக்கையாவே இருக்குன்னு இப்போ புரிஞ்சுடுச்சு அண்னே
அண்ணே.. எனக்கு ஒரு டவுட். எதுக்கு கமெண்ட் மாடரேஷன்?யார் உங்களை திட்டப்போறாங்க? (நாட் ஃபார் பப்ளிஷ்)
/ஆனா, தலைக்கு மேலே ஒரு வால்பாறை எஸ்டேட்டே இருக்கு!"//
எஸ்டேட் இருக்கோ இல்லையோ எங்களை எல்லாம் சிரிச்சு சிரிச்சு வயிற புண் செய்யற அளவுக்கு உங்க எழுத்து இருக்கு..
வழக்கம் போல் சிரித்து மகிழ்ந்தேன்...
see this
ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்
நல்ல நகைச்சுவை சேட்டையாரே! ரொம்பவே உட்கார்ந்து யோசிச்சிருக்கீங்க போலிருக்கு. ஆனால், stendhal syndrome குறித்து நீங்கள் எழுதியிருக்கிற தகவல் பிசகு. :-) எதிர்காலத்தில் இது போன்ற மருத்துவ பெயர்களை உபயோகிக்கும்போது இன்னும் தகவல் சரிபார்த்து எழுதவும். மற்றபடி வாய்விட்டு சிரிக்க வைத்த இடுகை என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி சேட்டைக்காரன்.
வலைப்பதிவாளர் வாஸ்து பத்தி எழுதப்போறேன்//
ஆஹா காத்திருக்கோம் தல
ஆமா டாக்டர், உடுப்பி(U) கிருஷ்ணாவுலே(K) மூணுவருஷம் பில் போட்டிருக்கேன்."//
ம்ம்..இனி நானு சொல்லலாம்..புது டிரண்டையே உண்டாக்குறியே தல
ரசிக்க வைக்கும் சிரிக்க வைக்கும் பதிவு
பிரபல பதிவர்கள் லிஸ்ட்ல என் பிளாக்ல இணைச்சிட்டேன் தலைவா..இப்பதான் இணைச்சியான்னு கேட்குறது கேட்குது ஹிஹி
//ஓட்ட வட நாராயணன் said...
VADA//
வாங்க வடைப்பிரியரே! :-)
// I COME LATER..... NOW BC....//
IC...RU BC? NP! :-)
\\"சேட்டை, என்ன உளர்றே? மீரா ஜாஸ்மினாவது, பாவனாவாவது...?" .//
ஹி..ஹி..
//பிரபாகர் said...
பேசிக்கொண்டிருந்த ஒரு சின்ன விஷயத்தை இவ்வளவு அழகான இடுகையாய் மாற்ற என் சேட்டையால்தான் முடியும். கலக்கல் நண்பா...//
நாம் உரையாடியது போல சுவாரசியமாக வந்திருந்தால் சரிதான் நண்பரே! :-)
இன்னொருதபா நன்றி சொல்லிக்கறேன் நண்பரே!
//வானம் said...
இதை படிச்சிட்டு எதுவுமே புரியலன்னாலும் ‘ஆகா,சூப்பர் சேட்டை’ன்னு கமெண்டு போட்டா அந்த வியாதிக்கு என்ன பேரு?//
ஹிஹி! நானு டாக்டர் இல்லீங்களே? அவர்தான் சொல்லணும்! :-)
//மதுரை ராஜா said...
ஒரு உரையாடலை வைத்தே ஒரு பதிவா? பலே பலே//
பல பதிவுகள் உரையாடல்களை வைத்துத்தான் ஓடிட்டிருக்குது இப்போ! :-)
மிக்க நன்றி!
//மதுரை சரவணன் said...
arumaiyaa nakkal... uraiyaadal vaalththukal//
மிக்க நன்றி நண்பரே!
//கக்கு - மாணிக்கம் said...
// ஒருவாட்டி போலீஸ்வந்து கண்ணீர்புகை கூட வீசுனாங்க தெரியுமா?"//
இதுதான் சேட்டையின் தனி மகத்துவம் .தாங்கலடா சாமீ!//
ஐயையோ, கண்ணீர்புகை வீசும்போது மாட்டிக்கிட்டீங்களா? :-))
மிக்க நன்றி!
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
சேட்டை, தலை சுத்திப் போனது.. முதலில் ஏதோ விளையாட்டுத்தனமாக எழுதியிருக்கீங்கள் என்று நினைத்தேன்.. க்ளிக் செய்து படித்தால் உண்மையாகவே இப்படியெல்லாம் இருக்கிறது போல.. எல்லாமே கேள்வி கூட பட்டிருக்காத விஷயங்கள்..//
இப்படியெல்லாம் சங்கதிகள் இருக்கின்றன என்று பேசிக்கொண்டிருந்ததன் அடிப்படையில்தான் எழுதினேன் நண்பரே! அவற்றை வாசித்தபோது எனக்கும் மலைப்பே ஏற்பட்டது.
//இதையெல்லாம் இயக்குனர்கள் படித்தால் புது புதுசாக தினுசு தினுசாக மன நோயாளிக் கதைகள் வரப் போவது நிஜம்.. :)))//
ம்...முதலில் பிறமொழிகளில் வந்து, வழக்கம்போல இங்கே ரீமேக் செய்யப்படலாம். :-))
மிக்க நன்றி! :-)
//Chitra said...
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம பதில்!//
செம பின்னூட்டம். மிக்க நன்றி! :-))
//வை.கோபாலகிருஷ்ணன் said...
ஒவ்வொரு வரியையும் மிகவும் ஆழமாக ரஸித்துப் படித்து விட்டு வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தேன். நான் சொட்டையின் சே சேட்டையின் தீவிர ரஸிகனாகி விட்டேன். வெளியே வால்பாறை எஸ்டேட்டே இருந்தாலும், தங்கள் மூளை பூராவும் பன்ருட்டிப் பலாச் சுளையாகவல்லவா இனிக்கிறது!//
ஆஹா! இத்தனை நாளில் இப்படிச் சொன்ன முதல் வாசகர் நீங்கள்தான். உண்மையிலேயே எனக்கு மூளையிருக்கிறது என்று எனக்கே இப்போது தோன்றுகிறது.
//கொன்னுட்டீங்க! வாழ்த்துக்கள்.//
தொடர்ந்து வருகை புரிந்து, பின்னூட்டமிடுவதற்கு மிக்க நன்றி! :-)
//! சிவகுமார் ! said...
உங்க கனவுக்கன்னி ரேஞ்சே தனி!//
எக்ஸ்கியூஸ் மீ! அது எம்.கே.டியோட ரசனை ஸ்வாமி! :-)
மிக்க நன்றி!
//எல் கே said...
hahaha சூப்பர்//
நன்றி கார்த்தி! :-)
//சி.பி.செந்தில்குமார் said...
ஓப்பனிங்க்ல சிக்ஸர் அடிக்கலைன்னா அண்ணனுக்கு உறக்கம் வராதே..?//
ஓப்பனிங்க்லே டக்-அவுட்டாயிரக்கூடாதே என்ற பயம்தான் தல...!
//haa haa ஹா ஹா! எனது பதிவுகள் எல்லாமே ஏன் மொக்கையாவே இருக்குன்னு இப்போ புரிஞ்சுடுச்சு அண்னே//
ஆஹா, தன்னடக்கத்திலகமே! என்ன இப்புடிச் சொல்றீங்க? :-))
//அண்ணே.. எனக்கு ஒரு டவுட். எதுக்கு கமெண்ட் மாடரேஷன்?யார் உங்களை திட்டப்போறாங்க? (நாட் ஃபார் பப்ளிஷ்)//
தல, நண்பர்கள் வருகிற இடத்தில் நமக்கு வேண்டாதவர்கள் வந்து அசிங்கம் பண்ணிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுதான். :-)
மிக்க நன்றி தல! அடுத்தது உங்க மேட்டர் தான் எழுதோணும்! :-)
//சங்கவி said...
எஸ்டேட் இருக்கோ இல்லையோ எங்களை எல்லாம் சிரிச்சு சிரிச்சு வயிற புண் செய்யற அளவுக்கு உங்க எழுத்து இருக்கு..//
இதை வச்சுத்தானே வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கேன். அப்பப்போ, சீரியஸா எதுனாச்சும் எழுதினாலும், வண்டி திரும்ப மெயின் லைனுக்கு வந்தே தீரும்!
//வழக்கம் போல் சிரித்து மகிழ்ந்தேன்...//
மிக்க நன்றி நண்பரே!
//நர்மதன் said...
see this ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்//
எப்படியெல்லாம் கிளம்பிருக்காங்கய்யா...? நல்லா இருங்க நண்பரே! :-)
//சௌமியா said...
நல்ல நகைச்சுவை சேட்டையாரே! ரொம்பவே உட்கார்ந்து யோசிச்சிருக்கீங்க போலிருக்கு. ஆனால், stendhal syndrome குறித்து நீங்கள் எழுதியிருக்கிற தகவல் பிசகு. :-)//
ஓ! அப்படியென்றால் உண்மையிலேயே மிக வருந்துகிறேன் சகோதரி. சற்று அவசரத்தில் எழுதியது என்றாலும், சரியாக பார்த்திருக்க வேண்டும்தான். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி!
//எதிர்காலத்தில் இது போன்ற மருத்துவ பெயர்களை உபயோகிக்கும்போது இன்னும் தகவல் சரிபார்த்து எழுதவும்.//
அவசியம் செய்வேன்! உங்களது கருத்துக்களை இனி கவனத்தில் கொள்வேன்.
//மற்றபடி வாய்விட்டு சிரிக்க வைத்த இடுகை என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி சேட்டைக்காரன்.//
உங்களது தொடர்ந்த வருகைக்கும், கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
வலைப்பதிவாளர் வாஸ்து பத்தி எழுதப்போறேன்//
ஆஹா காத்திருக்கோம் தல
ஆஹா, நல்ல நாள் பார்த்திட்டிருக்கேன் நண்பரே! விரைவில் தொடங்குவேன்!
//ம்ம்..இனி நானு சொல்லலாம்..புது டிரண்டையே உண்டாக்குறியே தல//
என்னைப் போயி தல-ன்னு சொல்றீங்களே? ஹிஹி! நானெல்லாம் டம்மி பீஸுங்க நண்பரே! ( இதுக்குப் பேருதான் அடக்கமாம்!)
// ரசிக்க வைக்கும் சிரிக்க வைக்கும் பதிவு//
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே!
//பிரபல பதிவர்கள் லிஸ்ட்ல என் பிளாக்ல இணைச்சிட்டேன் தலைவா..இப்பதான் இணைச்சியான்னு கேட்குறது கேட்குது ஹிஹி//
அப்போ நான் பிரபலமா? :-)
கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள் நண்பரே! எல்லாம் கடவுள் செயல்; நண்பர்களின் கரிசனம். மிக மிக நன்றி!
செம காமெடி! எனது சுற்றுப் பட்டாளத்திற்கு இந்த link ஐ உடனே அனுப்பணும்!
ஒவ்வொரு வரியும் சிரிக்க வைக்கின்றது.....
...... ............ ...................!
//சொல்லச் சொல்ல said...
செம காமெடி! எனது சுற்றுப் பட்டாளத்திற்கு இந்த link ஐ உடனே அனுப்பணும்!//
அனுப்புனீங்களா இல்லையா? :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//நிலவு said...
ஐ.ஏ.எஸ் க்கு வெளியே நல்லவர்களை தேடுங்கள் - உச்சநீதி மன்றம் - http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_7385.html//
:-)
//NIZAMUDEEN said...
ஒவ்வொரு வரியும் சிரிக்க வைக்கின்றது.....//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)
அருமை மிக அருமை ....
இப்படி மேலும் பல வியாதிகளை பற்றியோ /மருத்துவ விளக்க
சேட்டைகளை தொடரலாமே ...
அடுத்த பிறவியிலும் சைட் அடிக்க வேண்டுமா?..... உடனே கண் தானம் செய்வீர்
என்கிற ரீதியில்
Post a Comment