முன்கதைச் சுருக்கம்:
ஒரு கட்சிகூட ஆரம்பிக்காமல், கருமுத்துவைத் தவிர ஒரு தொண்டனும் இல்லாமல், வெறும் பரபரப்புச் செய்திகளின் உதவியாலேயே ஐயாக்கண்ணு பிரபலமாகிவிட்டார். புது தில்லிக்கு வரச்சொல்லி செய்தி வந்து அவரும் போய்ச் சேர்ந்தாயிற்று: அவரை வரவேற்று அழைத்துப்போக தமிழ்தெரிந்த ஒரு டிரைவருடன் வண்டியும் வந்தாயிற்று. இனி.....!
"லேய் மக்கா!" காரில் போய்க்கொண்டிருந்தவாறே கருமுத்துவிடம் கூறினார் ஐயாக்கண்ணு. "எல்லாரும் டெல்லி எருமை டெல்லி எருமைன்னு சொல்லுதாகளே, ரெண்டு வாங்கிட்டுப் போவமா? கறவைக்கு ஒதவுமில்லா?"
"ஐயோ அண்ணாச்சி, இப்பம் நீங்க பெரிய அரசியல்வாதி! எருமை, பசுவெல்லாத்தையும் மறந்திட்டு, சுருக்குன்னு கையிலே நாலு காசைத் தேத்தப்பாப்பியளா? இன்னிக்கு காந்தி சமாதிக்குப் போயி மலர்வளையம் வைக்கப்போறீங்க! அப்பத்தான் ஐயாக்கண்ணுன்னா யாருன்னு எல்லாருக்கும் தெரியும்," என்று நினைவூட்டினான் கருமுத்து.
"சரி, தம்பி டிரைவர், டெல்லியை ஒரு ரவுண்டு அடிச்சிட்டே போ! என்னெல்லாம் இருக்குன்னு பார்க்கலாம்," என்று உற்சாகமாகச் சொன்னார் ஐயாக்கண்ணு.
"இதோ பாருங்கய்யா, இதுக்குப் பேருதான் ஜும்மா மஸ்ஜித்!" என்று கூறினார் டிரைவர்.
"அப்படியா? இதை எத்தனை நாளிலே கட்டினாங்க?"
"அம்பது வருசமாச்சுங்கிறாங்க!"
"எங்கூரு கொத்தனாரு குப்புசாமி இதை ரெண்டு வருசத்துலே கட்டிருவாரு! இதுக்கு அம்பது வருசமா?"
மிகவும் கடுப்பாகிப்போன டிரைவர் சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக வந்தார். வண்டி குதுப் மினாரைக் கடந்தபோது...
"டிரைவர் தம்பி, இதென்ன செங்கல் சூளையா? எம்புட்டு ஒசரமாட்டிருக்கு? இது என்ன மக்கா?"
எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்ட டிரைவர், நிதானமாகச் சொன்னார். "தெரியலே அண்ணாச்சி! இத நேத்திக்கு நான் பாக்கலே. ராத்திரியோட ராத்திரியா கட்டிட்டாங்க போலிருக்குது!"
ஒருவழியாக காந்தி சமாதியை அடைந்ததும், ஐயாக்கண்ணுவும், கருமுத்துவும் மலர்வளையத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.
"அண்ணாச்சி," கருமுத்து கிசுகிசுத்தான். "பார்த்தீகளா டெல்லியை? காந்தி சமாதியிலே கூட கையிலே துப்பாக்கியை வச்சுக்கிட்டு எம்புட்டு போலீஸ் நிக்குது பாருங்க!"
"அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"
ஐயாக்கண்ணு மலர்வளையத்தை வைத்தபோது ஒளிந்துநின்று பலர் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்து அவர்கள் கிளம்பியபோது கருமுத்துவின் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.
"யெஸ்ஸு! ஓ.கே! ஆல்ரைட்டு! யெஸ்ஸு!" என்று பேசிவிட்டு வைத்தான் கருமுத்து. "அண்ணாச்சி, மேடம் அப்பாயின்ட்மென்ட் கொடுத்திட்டாங்க! நேரா அவங்களப் பார்த்து பேசி முடிவு பண்ணிரலாம்."
"அப்புடியா?" ஐயாக்கண்ணு அதிர்ந்தார். "லேய், நமக்கு இங்கிலீஸ் தெரியாது. அவங்களுக்கு தமிழ் தெரியாது. என்ன பேசி, என்ன முடிவு பண்ணுறது...?"
"பேசல்லாம் வேண்டாம் அண்ணாச்சி! சும்மா ஒரு போட்டோ எடுத்துக்குவோம். பொறவு பாருங்க உங்க காட்டுலே அடைமழைதான்!"
"வேண்டாம்லே, காட்டுலே கெழங்கு போட்டிருக்கம்லே! இப்பம் மழை பெஞ்சா பயிரெல்லாம் போயிரும்!" என்று பதறினார் ஐயாக்கண்ணு.
"அண்ணாச்சி, பணமழை பெய்யுமுன்னு சொன்னேன்!" என்று விளக்கினான் கருமுத்து. "அவங்க என்ன சொல்றாங்களோ அதை அப்படியே செய்யணும் அண்ணாச்சி! எதிர்த்துப் பேசப்படாது. சரியா?"
"கொஞ்சம் கஷ்டமான வேலைதான். என் வீட்டுலே நான் என்ன சொல்றேனோ அதைத் தான் சம்சாரம் செய்யும். வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா, உடனே வெந்நீர் கொணாந்து கொடுத்திரும் சம்சாரம்!" என்று பெருமைப்பட்டார் ஐயாக்கண்ணு.
"சந்தோசம் அண்ணாச்சி! எதுக்கு வெந்நீர் கேட்பீங்க அண்ணாச்சி?"
"பிசுக்குப் பிடிச்ச் பாத்திரத்தை பச்சைத்தண்ணியிலே கழுவக்கூடாது மக்கா. வெந்நீர் போட்டுக்கழுவினா பளபளன்னு சுத்தமாயிரும்!"
"சரிதான் அண்ணாச்சி!"
இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, அவர்களது வண்டி ஒரு வீட்டின் வாசலை அடைந்தது. பொன்னெழுத்தில் பெயர்ப்பலகை மின்னியது.
"மீரா கேடியா!"
"மக்கா, என்னலே இதென்ன வீடா கொட்டாயியா? தமிழ்ப்படம் பெயரெல்லாம் போட்டிருக்கு...?"
ஐயாக்கண்ணு சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பலகை இருந்தது. அதில், இந்தி, ஆங்கிலம் தவிர தமிழிலும் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
"தில்லுமுல்லு-திங்கள், புதன்,வெள்ளி
தில்லாலங்கிடி -செவ்வாய்,வியாழன்,சனி
சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!"

Tweet |
32 comments:
அய்யாக்கண்ணுவின் வளர்ச்சி சன் டிவியின் வளர்ச்சிபோல் அபிரிதமாக இருக்கிறது. குஸ்கா தத், இப்போ மீரா கேடியா... அருமை... தொடருங்கள்.
பிரபாகர்...
// "அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"//
சான்சே இல்லை சேட்டை. இதுவரைக்கும் வேறு எவரும் இப்படி இதற்கு விளக்கம் சொன்னதில்லை. உண்மையில் இந்த பயத்தில்தான் அங்கும் இவ்வளவு பாதுகாப்பு போல. நம்ம அரசியல் அசிங்கங்கள் ரொம்பவும் முன் யோசனைக்காரர்கள்தான்.
//"மீரா கேடியா!"//
கிழிஞ்சது போங்க. ஏதுனா வயித்துவலி மாத்திரை பேரு சொல்லுங்க சாமீ.
டெல்லி வரைக்கும் போயிட்டாரா அய்யாகண்ணு.... போங்க.. போங்க.. அப்படியே டாப் கியரிலேயே போங்க..
நகைச்சுவை தூக்கலாக உள்ள இடங்கள்:
1)"எங்கூரு கொத்தனாரு குப்புசாமி இதை ரெண்டு வருசத்துலே கட்டிருவாரு! இதுக்கு அம்பது வருசமா?"
2)வண்டி குதுப் மினாரைக் கடந்தபோது...
"டிரைவர் தம்பி, இதென்ன செங்கல் சூளையா? எம்புட்டு ஒசரமாட்டிருக்கு? இது என்ன மக்கா?"
எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்ட டிரைவர், நிதானமாகச் சொன்னார். "தெரியலே அண்ணாச்சி! இத நேத்திக்கு நான் பாக்கலே. ராத்திரியோட ராத்திரியா கட்டிட்டாங்க போலிருக்குது!"
3) எதுக்கு வெந்நீர் கேட்பீங்க அண்ணாச்சி?"
"பிசுக்குப் பிடிச்ச் பாத்திரத்தை பச்சைத்தண்ணியிலே கழுவக்கூடாது மக்கா. வெந்நீர் போட்டுக்கழுவினா பளபளன்னு சுத்தமாயிரும்!"
4) "மீரா கேடியா!"
"தில்லுமுல்லு-திங்கள், புதன்,வெள்ளி
தில்லாலங்கிடி -செவ்வாய்,வியாழன்,சனி
சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!"
சூப்பராகப்போகிறது. சபாஷ்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
இன்று ஞாயிறு காலை “உணவே வா ... உயிரே போ” என்ற தலைப்பில் என் சமையல் சாப்பாடு அனுபவங்கள் பற்றிய பதிவு ஒன்று சற்றே நகைச்சுவையாக வெளியிட்டுள்ளேன். முடிந்தால் படித்து கருத்துக்கள் கூறவும்.
அது ஏனோ டேஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆகாமல் படுத்துவதால், உங்கள் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால், இதன் மூல்ம் தெரிவித்துள்ளேன்.
அன்புடன் gopu1949.blogspot.com VGK
"மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"
வணக்கம் சேட்டை. நக்கல் அதுதான் சேட்டை.
சில்லறை எண்ண நீராவுக்கு ஞாயிறு மட்டும் போதுமா?
ஆமாம் ஏழு நாளும் இப்படியே போனா எப்பதான் கம்பி எண்ணு வாங்களாம்?
வணக்கம் சேட்டை. நக்கல் அதுதான் சேட்டை.
சில்லறை எண்ண நீராவுக்கு ஞாயிறு மட்டும் போதுமா?
ஆமாம் ஏழு நாளும் இப்படியே போனா எப்பதான் கம்பி எண்ணு வாங்களாம் ?
"லேய் மக்கா!" காரில் போய்க்கொண்டிருந்தவாறே கருமுத்துவிடம் கூறினார் ஐயாக்கண்ணு. "எல்லாரும் டெல்லி எருமை டெல்லி எருமைன்னு சொல்லுதாகளே, ரெண்டு வாங்கிட்டுப் போவமா? கறவைக்கு ஒதவுமில்லா?"//
இது தான் சகோ முற் போக்குச் சிந்தனை அல்லது தூர நோக்குப் பார்வையோ?
"எங்கூரு கொத்தனாரு குப்புசாமி இதை ரெண்டு வருசத்துலே கட்டிருவாரு! இதுக்கு அம்பது வருசமா?"
மிகவும் கடுப்பாகிப்போன டிரைவர் சிறிதுநேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக வந்தார். வண்டி குதுப் மினாரைக் கடந்தபோது...//
என்ன ஒரு கடி.. நம்ம ஊரு தொழில் நுட்பத்திற்கும் அவங்க தொழில் நுட்பத்திற்கும் இம்புட்டு வேறுபாடா சேட்டை.
"டிரைவர் தம்பி, இதென்ன செங்கல் சூளையா? எம்புட்டு ஒசரமாட்டிருக்கு? இது என்ன மக்கா?"
எரிச்சலைக் கட்டுப்படுத்திக்கொண்ட டிரைவர், நிதானமாகச் சொன்னார். "தெரியலே அண்ணாச்சி! இத நேத்திக்கு நான் பாக்கலே. ராத்திரியோட ராத்திரியா கட்டிட்டாங்க போலிருக்குது!"//
அவ்............................செம கிண்டல்.
மீரா கேடியா!"//
மீரா கேடியா.. கொஞ்சம் புரியும் படி போட்டுடைக்கிறது சேட்டை.
தில்லுமுல்லு-திங்கள், புதன்,வெள்ளி
தில்லாலங்கிடி -செவ்வாய்,வியாழன்,சனி
சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!"
அட வசூல் மந்திரியின் அலுவலகம் போல இருக்கிறதே.
>>"லேய், நமக்கு இங்கிலீஸ் தெரியாது. அவங்களுக்கு தமிழ் தெரியாது. என்ன பேசி, என்ன முடிவு பண்ணுறது...?
haa haa ஹா ஹா அண்ணனுக்கு அரசியல்வாதிகள்னாலே நக்கல் தான்
>>
"பிசுக்குப் பிடிச்ச் பாத்திரத்தை பச்சைத்தண்ணியிலே கழுவக்கூடாது மக்கா. வெந்நீர் போட்டுக்கழுவினா பளபளன்னு சுத்தமாயிரும்!"
நல்லவேளை.. அண்னனும் நம்ம பக்கம் தான் போல.. ஹா ஹா
>>சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!"
சில்லறைகள் சில்லறை எண்ணும் பணிக்காக
ஞாயிறு விடுமுறை!" ஹா ஹா ஹா
//"வேண்டாம்லே, காட்டுலே கெழங்கு போட்டிருக்கம்லே! இப்பம் மழை பெஞ்சா பயிரெல்லாம் போயிரும்!" என்று பதறினார் ஐயாக்கண்ணு.//
சே! எவ்ளோ அப்பாவியாய் இருக்கார், என் வோட்டு அவருக்குத் தான்!!
மேடம்னு சொன்னா வுடனே வேற ஒரு மேடத்தை நினைச்சேன்
அய்யாக்கண்ணு கவர்னர் ஆகற வரைக்கும் விட மாட்டிங்க போல...!! :))
// "பார்த்தீகளா டெல்லியை? காந்தி சமாதியிலே கூட கையிலே துப்பாக்கியை வச்சுக்கிட்டு எம்புட்டு போலீஸ் நிக்குது பாருங்க!"
"அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"//
அசத்தல்!
//பிரபாகர் said...
அய்யாக்கண்ணுவின் வளர்ச்சி சன் டிவியின் வளர்ச்சிபோல் அபிரிதமாக இருக்கிறது. குஸ்கா தத், இப்போ மீரா கேடியா... அருமை... தொடருங்கள்.//
மிக்க நன்றி நண்பரே! அடுத்த பகுதியோடு நிறைவு பெறும்! :-)
//கக்கு - மாணிக்கம் said...
// "அது ஏன் தெரியுமாலே?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தார் ஐயாக்கண்ணு. "மறந்துபோயி எந்திரிச்சு வந்திருவாரோன்ன்னு ஒரு பயம்தான்!"//
சான்சே இல்லை சேட்டை. இதுவரைக்கும் வேறு எவரும் இப்படி இதற்கு விளக்கம் சொன்னதில்லை. உண்மையில் இந்த பயத்தில்தான் அங்கும் இவ்வளவு பாதுகாப்பு போல. நம்ம அரசியல் அசிங்கங்கள் ரொம்பவும் முன் யோசனைக்காரர்கள்தான்.//
ஒரு ஊகத்துலே அடிச்சேன் நண்பரே! இப்படி இருந்தாலும் இருக்குமுன்னு நினைக்கறீங்கன்னா, நம்ம அரசியல்வாதிகள் அந்த லட்சணத்துலேதான் இருக்காங்கன்னு அர்த்தம்! :-)
//"மீரா கேடியா!"//
கிழிஞ்சது போங்க. ஏதுனா வயித்துவலி மாத்திரை பேரு சொல்லுங்க சாமீ.//
பரால்கான் ட்ரை பண்ணலாமே? :-)
மிக்க நன்றி நண்பரே!
//sudhanandan said...
டெல்லி வரைக்கும் போயிட்டாரா அய்யாகண்ணு.... போங்க.. போங்க.. அப்படியே டாப் கியரிலேயே போங்க..//
இப்போ கொஞ்சம் பிரேக் போட்டு வண்டியைத் திருப்ப வேண்டிய கட்டமுங்க! :-)
மிக்க நன்றி!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
நகைச்சுவை தூக்கலாக உள்ள இடங்கள்://
வழக்கம்போல மெனக்கெட்டு ஒற்றி ஒட்டி சுட்டிக் காட்டியிருக்கும் உங்களது பொறுமைக்கு முதல் நன்றி! :-)
//சூப்பராகப்போகிறது. சபாஷ். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//
தொடரும் வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் எனது பற்பல நன்றிகள்! :-)
//இன்று ஞாயிறு காலை “உணவே வா ... உயிரே போ” என்ற தலைப்பில் என் சமையல் சாப்பாடு அனுபவங்கள் பற்றிய பதிவு ஒன்று சற்றே நகைச்சுவையாக வெளியிட்டுள்ளேன். முடிந்தால் படித்து கருத்துக்கள் கூறவும்.//
படித்துவிட்டு கருத்தும் போட்டு விட்டேன் ஐயா. அதகளம்! :-)
//அது ஏனோ டேஷ் போர்டில் டிஸ்ப்ளே ஆகாமல் படுத்துவதால், உங்கள் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால், இதன் மூல்ம் தெரிவித்துள்ளேன்.//
ஆமாம், எனது டேஷ்போர்டில் இன்னும் வரவில்லை. ஏன்...???
மிக்க நன்றி!
//இரா.எட்வின் said...
வணக்கம் சேட்டை. நக்கல் அதுதான் சேட்டை.//
வாங்க வாங்க! எம்புட்டு நாளாச்சு உங்களைப் பார்த்து..?
//சில்லறை எண்ண நீராவுக்கு ஞாயிறு மட்டும் போதுமா? ஆமாம் ஏழு நாளும் இப்படியே போனா எப்பதான் கம்பி எண்ணு வாங்களாம் ?//
பங்கு பிரிக்கிறதுலே சண்டை வரும்போது, கூண்டோட உள்ளே போவாங்கன்னு பட்சி சொல்லிச்சு! :-)
மிக்க நன்றி நண்பரே!
//நிரூபன் said...
இது தான் சகோ முற் போக்குச் சிந்தனை அல்லது தூர நோக்குப் பார்வையோ?//
ஊஹும்! இது சாமானியனின் பார்வை...!
//என்ன ஒரு கடி.. நம்ம ஊரு தொழில் நுட்பத்திற்கும் அவங்க தொழில் நுட்பத்திற்கும் இம்புட்டு வேறுபாடா சேட்டை.//
சும்மா ஐயாக்கண்ணுவை வச்சு ஒரு அல்டாப் பண்ண வைச்சேன் சகோதரம்! :-)
//அவ்............................செம கிண்டல்.//
தில்லிக்காரங்க கிண்டுறதுலே எக்ஸ்பர்டுங்க! :-)
//மீரா கேடியா.. கொஞ்சம் புரியும் படி போட்டுடைக்கிறது சேட்டை.//
அது இப்போ இந்தியாவுக்கே புரிஞ்ச விஷயமாச்சே! :-)
//அட வசூல் மந்திரியின் அலுவலகம் போல இருக்கிறதே.//
மந்திரிகளாலே வசூல் ஆகிற அலுவலகம் அது! மிக்க நன்றி! :-)
//சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா அண்ணனுக்கு அரசியல்வாதிகள்னாலே நக்கல் தான்//
அண்ணன் யாரை விட்டு வச்சேன், அரசியல்வாதியை விட்டு வைக்க தல? :-)
//நல்லவேளை.. அண்னனும் நம்ம பக்கம் தான் போல.. ஹா ஹா//
ஹிஹி! இப்படியொரு உள்குத்து இருக்குதா இதுலே??
//சில்லறைகள் சில்லறை எண்ணும் பணிக்காக ஞாயிறு விடுமுறை!" ஹா ஹா ஹா//
எக்ஸாக்ட்லீ! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல...!
//middleclassmadhavi said...
சே! எவ்ளோ அப்பாவியாய் இருக்கார், என் வோட்டு அவருக்குத் தான்!!//
ஆஹா, இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டாரே? :-)
மிக்க நன்றி! :-)
//எல் கே said...
மேடம்னு சொன்னா வுடனே வேற ஒரு மேடத்தை நினைச்சேன்//
அது சரிதான், நம்ம நாட்டுலே மேடம்களுக்கா பஞ்சம்? :-)
மிக்க நன்றி கார்த்தி!
//சேலம் தேவா said...
அய்யாக்கண்ணு கவர்னர் ஆகற வரைக்கும் விட மாட்டிங்க போல...!! :))//
கிட்டத்தட்ட கிளைமேக்ஸை ஊகிச்சிட்டீங்க! மிக்க நன்றி நண்பரே! :-)
//! சிவகுமார் ! said...
அசத்தல்!//
மிக்க நன்றி நண்பரே!
வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா, உடனே வெந்நீர் கொணாந்து கொடுத்திரும் சம்சாரம்!"
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளைனு பாடினது இவங்கள பத்திதானா!
//ரிஷபன் said...
வீட்டுலே கூட ’வெந்நீர் கொண்டுவா,"ன்னு சொன்னா, உடனே வெந்நீர் கொணாந்து கொடுத்திரும் சம்சாரம்!"
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளைனு பாடினது இவங்கள பத்திதானா!//
ஹிஹி! அந்தப் பாட்டு உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ? எனக்கும் பிடிக்கும்! :-)
மிக்க நன்றி!
Post a Comment