Tuesday, March 22, 2011

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.03

முன்கதைச் சுருக்கம்:

பாவம் ஐயாக்கண்ணு! அரசியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறவரை, பரபரப்புக்காக குஸ்கா தத் தவறான செய்தியைப் பரப்பி பிரபலமாக்கிவிட்டார். ஆந்தைக்கண்ணுவும் ஒரே நாளில் தலைப்புச்செய்தியாகி விட்டார்! இனி...

யாரிந்த ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு? ’லத்திகா’ படம் வெளியாவதையறிந்து ரஜினியும் கமலும் திடுக்கிட்டது போலவே தமிழக அரசியல் வட்டாரங்கள் கிடுகிடுத்தன. ’ஐநூறா? நான் ஆயிரம் கொடுக்கிறேன்," என்று ஆனா ஆவன்னா கட்சியும், "ரெண்டாயிரம் கொடுக்கிறேன்," என்று ஈனா ஈயன்னா கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு ஐயாக்கண்ணுவை மொய்த்தன. ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் போல மிகுந்த பரபரப்போடு காட்சியளித்தது. குஸ்கா தத் கென்னத் சந்தைவிட்டு நகராமல், ஐயாக்கண்ணுவின் நடவடிக்கைகளையே கண்காணித்துக்கொண்டிருந்தாள்.

"அண்ணாச்சி! இம்புட்டுப் பணம் வந்திருச்சே! தேர்தல் அறிக்கையிலே என்ன இலவசமுண்ணு சொல்லப்போறீங்க?" என்று களக்காடு கருமுத்து ஐயாக்கண்ணுவின் காதில் கிசுகிசுத்தான்.

"அஸ்கு புஸ்கு! நா ஏம்லே கொடுக்கணும்? ஆளுக்கு ஒரு பீடிக்கட்டும் வத்திப்பொட்டியும் கொடுக்கேன்!" என்று அவனைக் கடிந்து கொண்டார் ஐயாக்கண்ணு.

சும்மாயிருப்பாளா குஸ்கா? எதையாவது சொல்லி எப்படியாவது மீட்டரை ஏற்ற வேண்டும் என்று அறுந்துபோன பல்லிவால் போலத் துடிக்கிறவளாயிற்றே? உடனே செய்தியைப் பரப்பி விட்டாள்.

"ஐயாக்கண்ணுவின் தேர்தல் அறிக்கை வெளியீடு! இலவசமாக பீடிக்கட்டும் வத்திப்பெட்டியும்!"

இதைக் கேட்ட பொதுமக்கள் சிரித்தனர். ஆனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தனர்.

"இந்த ஐயாக்கண்ணை என்னமோ காமெடி பீஸ்னு நினைச்சோமே? இலவச பீடியாம்; இலவச வத்திப்பொட்டியாம்! என்ன மூளை இந்தாளுக்கு?"

"ஆமாண்ணே! இதைக் கேட்டதும் பீடி குடிக்கிறவனெல்லாம் கண்டிப்பா ஓட்டுப்போடுவானோ?"

"அது மட்டுமா? பீடி தயாரிக்கிறவங்கல்லாம் போயி பொட்டி கொடுப்பானுங்க! ஐயாக்கண்ணுவோட திட்டம் அமுலுக்கு வந்தா தமிழ்நாட்டுலே சிகரெட்டுக்கு சங்கு ஊதிருவாங்கன்னு சிகரெட் பண்ணுறவனும் பொட்டி பொட்டியா எடுத்திட்டுப் போவானுங்க! ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா அடிச்சிட்டாரே இந்த ஐயாக்கண்ணு?"

அப்படியே நடந்தது. அடுத்த சில மணிநேரங்களில் ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் வாசலில் சேட்டைக்காரனின் இடுகையை விடவும் நீளமாக வரிசையில் கார்கள் வந்து நின்றிருந்தன. குஸ்கா அடிக்கடி வழக்கம்போல எசகுபிசகாக தன் பங்குக்கு பரபரப்பை அதிகரிக்கிற செய்திகளாய் அளித்தவண்ணமிருந்தாள்.

"அண்ணாச்சி! தில்லிக்கு உடனே கிளம்பி வரச்சொல்லி போன் வந்திருக்கு!" என்று பதைபதைப்போடு ஓடிவந்தான் கருமுத்து. "கூட்டணி பத்திப் பேசணுமாம்! கிளம்புங்கண்ணே, டாக்ஸியைப் புடிச்சு ஏர்போர்ட்டுக்குப் போயிரலாம்!"

"சே! நாம ஆட்சிக்கு வந்தா ஆட்டோ மாதிரியே ஏரோப்ளேனும் வீட்டு வாசலுக்கு வர்றா மாதிரி பண்ணிரணும்," என்று ஐயாக்கண்ணு முணுமுணுத்தது, குஸ்காவின் காதில் விழவில்லை. இல்லாவிட்டால், இன்னும் என்னென்ன புரளி கிளப்பியிருப்பாளோ?

டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது......

"அண்ணாச்சி! உங்களைப் பத்தி டெரரா பில்ட்-அப் பண்ணி, இப்படி பேமஸ் ஆக்கின அந்த குஸ்காவுக்கு நாம ஏதாவது செய்யணும்," என்று கருமுத்து சொன்னதும் ஐயாக்கண்ணு மறுத்தார்.

"லேய், நம்ம பொழைப்பை நாம பார்க்கணும்லே! அந்தம்மா என்ன எளவை வேண்ணாப் பேசிப் பொழச்சிட்டுப்போவட்டும்."

ஏர்போர்ட்டை இருவரும் அடைந்தபோது, ஐயாக்கண்ணு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழைவதுபோல அசட்டையாக உள்ளே செல்ல முயலவும், பாதுகாப்பு அதிகாரி நிறுத்தினார்.

"வெயிட் ப்ளீஸ்!"

"எழுபத்தி அஞ்சு கிலோ!"

"உங்க வெயிட் எவ்வளவுன்னு கேட்கலே சார்! பொறுங்கன்னு சொன்னேன்!" என்று விளக்கிய அதிகாரி கையிலிருந்த கருவியால் ஐயாக்கண்ணுவைத் தடவி பரிசோதனை செய்தார்.

"என்ன மக்கா, கரண்டியாலே சொறண்டுகான்?"

"குண்டிருக்கான்னு பாக்காங்க!"

"லேய் நான் குண்டுன்னு பார்த்தாலே தெரியாதா? தடவிப்பாக்கணுமோ?"

ஒருவழியாக டெல்லி தயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிக்கெட் உதவியுடன், விமானநிலையத்துக்குள் நுழைந்து, விமானத்துக்காகக் காத்திருந்தார்கள்.

"கழுத்துலே என்னலே மாட்டியிருக்கே?"

"பைனாகுலர் அண்ணாச்சி! தூரத்துலே இருக்கிறவங்க கிட்டத்துலே தெரிவாங்க!"

"கொடு பார்ப்போம்!" என்று வாங்கிய ஐயாக்கண்ணு பைனாகுலரை வாங்கிப் பார்த்தார்.

"எலேய்! இந்த எளவெடுத்த பொம்பளை என்னலே எங்கண போனாலும் பொறத்தாலயே வருகுது?"

"யாரு அண்ணாச்சி!"

"அதாம்லே குஸ்கா! ரொம்பத் தொலவுலே நிக்கி, இல்லாட்டா கூப்புட்டு வெசாரிக்கலாம்."

"அதுக்குத்தானே இத வாங்குனேன்! பாருங்க அண்ணாச்சி!" என்று பைனாகுலரைத் திரும்பப் பெற்ற கருமுத்து, பைனாகுலர் வழியாகக் குஸ்காவை நோக்கியபடியே அழைத்தான். "குஸ்கா மேடம்..குஸ்கா மேடம்!"

39 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத வெட்டு..

வெங்கட் நாகராஜ் said...

குஸ்கா தத்! :) நல்ல பெயர் வைச்சீங்க சேட்டை! சூப்பர்.

பைனாகுலர் மூலம் தூரத்துல இருந்த குஸ்கா தத்-தை பார்த்து கூப்பிட்ட டெக்னிக் மிக நல்ல கண்டுபுடிப்பு!! தொடரட்டும் உங்கள் கலக்கல்.

பிரபாகர் said...

எனது ஃபேவரிட் அய்யாக்கண்ணுவை ஆர்வமாய் தொடர்கிறேன் குஸ்கா தத்துடன்... கலக்கலாய் இருக்கிறது, தொடருங்கள் நண்பா...

பிரபாகர்...

வானம் said...

பீடிக்கட்டும், வத்திப்பெட்டியும் இலவசம். சரி, அத பத்தவைக்க அய்யாக்கண்ணு கிராண்ட்பாதரா வருவாரு?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அது மட்டுமா? பீடி தயாரிக்கிறவங்கல்லாம் போயி பொட்டி கொடுப்பானுங்க! ஐயாக்கண்ணுவோட திட்டம் அமுலுக்கு வந்தா தமிழ்நாட்டுலே சிகரெட்டுக்கு சங்கு ஊதிருவாங்கன்னு சிகரெட் பண்ணுறவனும் பொட்டி பொட்டியா எடுத்திட்டுப் போவானுங்க! ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா அடிச்சிட்டாரே இந்த ஐயாக்கண்ணு?"//



//"வெயிட் ப்ளீஸ்!"

"எழுபத்தி அஞ்சு கிலோ!"//

//"என்ன மக்கா, கரண்டியாலே சொறண்டுகான்?"

"குண்டிருக்கான்னு பாக்காங்க!"

"லேய் நான் குண்டுன்னு பார்த்தாலே தெரியாதா? தடவிப்பாக்கணுமோ?"//

ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு-ரிட்டர்ன்ஸ்.03
சூப்பரா போயிட்டிருக்கு சார்.

சீக்கரமா டெல்லிக்குக் கொண்டுபோங்க.

வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

தமிழ் 007 said...

சூப்பர்!

vasu balaji said...

அப்பாவி அய்யாக்கண்ண நீராதத் லெவலுக்கு பெரியாளாக்கிருவா போலயே குஸ்கா:))

சிநேகிதன் அக்பர் said...

ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு. :)

என்னமா யோசிக்கிறீங்க.

நிரூபன் said...

யாரிந்த ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு? ’லத்திகா’ படம் வெளியாவதையறிந்து ரஜினியும் கமலும் திடுக்கிட்டது போலவே தமிழக அரசியல் வட்டாரங்கள் கிடுகிடுத்தன. ’ஐநூறா? நான் ஆயிரம் கொடுக்கிறேன்," என்று ஆனா ஆவன்னா கட்சியும், "ரெண்டாயிரம் கொடுக்கிறேன்," என்று ஈனா ஈயன்னா கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு ஐயாக்கண்ணுவை மொய்த்தன. ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் போல மிகுந்த பரபரப்போடு காட்சியளித்தது. குஸ்கா தத் கென்னத் சந்தைவிட்டு நகராமல், ஐயாக்கண்ணுவின் நடவடிக்கைகளையே கண்காணித்துக்கொண்டிருந்தாள்.//

இதனைத் தான் சொல்லுறது, ஒரே நைற்றிலை ஓவர் பிரபலம் ஆகிறது என்று.
//மாலை டாஸ்மாக் போல மிகுந்த பரபரப்போடு காட்சியளித்தது//

என்ன ஒரு கற்பனை... வாழ்க தமிழ்! வளர்க உங்களின் சேட்டைகள்!

நிரூபன் said...

"ஐயாக்கண்ணுவின் தேர்தல் அறிக்கை வெளியீடு! இலவசமாக பீடிக்கட்டும் வத்திப்பெட்டியும்!"

இதைக் கேட்ட பொதுமக்கள் சிரித்தனர். ஆனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தனர்.

"இந்த ஐயாக்கண்ணை என்னமோ காமெடி பீஸ்னு நினைச்சோமே? இலவச பீடியாம்; இலவச வத்திப்பொட்டியாம்! என்ன மூளை இந்தாளுக்கு?"

"ஆமாண்ணே! இதைக் கேட்டதும் பீடி குடிக்கிறவனெல்லாம் கண்டிப்பா ஓட்டுப்போடுவானோ?"//

நான் கடந்த் இடுகையிலை நினைச்சதை, பின்னூட்டத்திலை சொன்னதை நீங்கள் அப்பிடியே இந்த இடுகை மூலம் கொண்டு வாறீங்க.
நம்ம கணிப்பு சரி தான்.

//

இதைக் கேட்ட பொதுமக்கள் சிரித்தனர். ஆனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெருங்கவலையில் ஆழ்ந்தனர்.//

இதை இலவசக்காரர் படிச்சால் ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணீரை விட்டுக் குதிச்சுச் சாவார்கள்.

நிரூபன் said...

அப்படியே நடந்தது. அடுத்த சில மணிநேரங்களில் ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் வாசலில் சேட்டைக்காரனின் இடுகையை விடவும் நீளமாக வரிசையில் கார்கள் வந்து நின்றிருந்தன.//

இதொன்றும் வஞ்சப் புகழ்ச்சி இல்லையே.. நீளமாக இருந்தாலும் விசயம் ஆழமா இருக்கில்ல.. அது தானே தனிரகம்.

நிரூபன் said...

"சே! நாம ஆட்சிக்கு வந்தா ஆட்டோ மாதிரியே ஏரோப்ளேனும் வீட்டு வாசலுக்கு வர்றா மாதிரி பண்ணிரணும்," என்று ஐயாக்கண்ணு முணுமுணுத்தது, குஸ்காவின் காதில் விழவில்லை. இல்லாவிட்டால், இன்னும் என்னென்ன புரளி கிளப்பியிருப்பாளோ?//

நல்ல வேளை ஐயாக்கண்ணுவிற்கு டாய்லெட் கூட தான் நினைத்தவுடன் தனக்கு முன்னே வர வேணும் என்று தோன்றவில்லை.

உந்த மந்திரி ஆட்களுக்குப் பக்கத்திலை இருக்கிற உதவியாளர்கள் தான் பொல்லாதவை. மந்திரி தீர்மானம் எடுக்க முதலே, விசயத்தை வெளியை சொல்லி பரபரப்பு நியூஸ் போட வைச்சிடுவாங்க.

சேட்டை இவ் இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளவும். எதிர்காலத்தில் அரசியலுக்குள் தாங்கள் நுழையவுள்ளதால் இவ் வரிகள் தேவைப்படலாம். எம்பி, எம் எல்லேக்கள் எப்போதும் தங்கடை உதவியாளரை காலுக்கு கீழை வைச்சிருக்கப் பார்க்க வேணுமாம். காலுக்கு மேலை போக விட்டால் தலையிலை ஏறி நின்றே காதைக் கடிக்கிற வம்சம் தானாம் அஸிஸ்டண்ட் ஆளுக.

நிரூபன் said...

இந்தப் பகுதியும் அருமை சேட்டை. நகைச்சுவைகள் கலந்து, நவரசமாய், இலக்கியச் சுவையுடன் இங்கிதமாய் ஒரு பதிவினைத் தந்துள்ளீர்கள்.
பின் தொடருற ஆட்களாலை ஆபத்து எப்பவுமே இருக்கு என்பது போல குஸ்கா எனும் பாத்திரத்தைப் படைத்துள்ளீர்கள். அடுத்த பகுதிக்காக வெயிற்றிங்க்.

எல் கே said...

யாருக்கும் இந்த கேரக்டர்ஸ் பொருந்தி வரலியே

sathishsangkavi.blogspot.com said...

கலக்கறீங்க...

middleclassmadhavi said...

தேர்தல் அறிக்கைக்கு ஐடியா கேட்டு யார் வேணும்னாலும் வரலாம்! எதுக்கும் ரெடியாயிருங்க! :-))

சி.பி.செந்தில்குமார் said...

>>’லத்திகா’ படம் வெளியாவதையறிந்து ரஜினியும் கமலும் திடுக்கிட்டது போலவே

haa haa ஹா ஹா செம

சி.பி.செந்தில்குமார் said...

>>"லேய், நம்ம பொழைப்பை நாம பார்க்கணும்லே! அந்தம்மா என்ன எளவை வேண்ணாப் பேசிப் பொழச்சிட்டுப்போவட்டும்."

hi hi ஹி ஹி உள்குத்து..?

Sivakumar said...

நல்லா பத்த வச்சிருக்கீங்க....பீடியை!

Jey said...

சேட்டையின் சேட்டை தொடர வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சேட்டைக்காரன் said...
பணிப்பளு காரணமாக வழுவட்டையாக இருந்துவிட்டேன். இன்று இரவு முழுவதும் வாசித்து விட்டு எனது பின்னூட்டங்களுடன் சந்திக்கிறேன் ஐயா. :-)
March 23, 2011 5:42 AM
==============================
வாடிக்கையாளரான சேட்டையார் சொன்னால் சொன்னபடி வருகை தராததால், இரவு முழுக்கத் தூக்கமின்றி ஒரு விதத் தவிப்புடன், ஏழாவது பகுதியிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டார் வ.வ.ஸ்ரீ.

சேட்டையார் வந்து அவர் ரசித்தவற்றை புட்ப்புட்டு வைத்தபிறகே எட்டாவது பகுதியை எட்டுவார் வ.வ.ஸ்ரீ.

அதுவரை உண்ணாவிரதம் தொடர்கிறது என்பதை கவனத்தில்மொண்டு, லெமென் ஜூஸுடன் வந்து, உண்ணாவிரத்தை முடித்து வையுங்கள், Please.

அன்புடன் vgk

sudhanandan said...

1. ’லத்திகா’ படம் வெளியாவதையறிந்து ரஜினியும் கமலும் திடுக்கிட்டது போல
2. ஐயாக்கண்ணு தங்கியிருந்த லாட்ஜ் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் போல மிகுந்த பரபரப்போடு காட்சியளித்தது.
3. அறுந்துபோன பல்லிவால் போலத் துடிக்கிறவளாயிற்றே?

.... இது போல உவமைகளை தொகுத்து "சேட்டை இலக்கணம்" என ஒரு நூலை வெளியிடலாமே?

settaikkaran said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...

முத வெட்டு..//

ஆமாங்க, மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

குஸ்கா தத்! :) நல்ல பெயர் வைச்சீங்க சேட்டை! சூப்பர்.//

நல்ல பேருன்னுறதுனாலே தான் ’தத்’தெடுத்துக்கிட்டேன். :-)

//பைனாகுலர் மூலம் தூரத்துல இருந்த குஸ்கா தத்-தை பார்த்து கூப்பிட்ட டெக்னிக் மிக நல்ல கண்டுபுடிப்பு!! //

ஹிஹி! இது மாதிரி நிறைய வரும் வெங்கட்ஜீ!

//தொடரட்டும் உங்கள் கலக்கல்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

settaikkaran said...

//பிரபாகர் said...

எனது ஃபேவரிட் அய்யாக்கண்ணுவை ஆர்வமாய் தொடர்கிறேன் குஸ்கா தத்துடன்... கலக்கலாய் இருக்கிறது, தொடருங்கள் நண்பா...//

இதைத் திரும்ப எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தியதே நீங்கள்தானே நண்பரே! மிக்க நன்றி!!

settaikkaran said...

//வானம் said...

பீடிக்கட்டும், வத்திப்பெட்டியும் இலவசம். சரி, அத பத்தவைக்க அய்யாக்கண்ணு கிராண்ட்பாதரா வருவாரு?//

ஐயாக்கண்ணுவே அல்ரெடி கிராண்ட்பாதர் தானுங்க! மிக்க நன்றிங்க!

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பரா போயிட்டிருக்கு சார். சீக்கரமா டெல்லிக்குக் கொண்டுபோங்க.//

அடுத்த எபிசோடுலேயே போயிடுவாரு! :-)

//வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

வாடிக்கையாளரான சேட்டையார் சொன்னால் சொன்னபடி வருகை தராததால், இரவு முழுக்கத் தூக்கமின்றி ஒரு விதத் தவிப்புடன், ஏழாவது பகுதியிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டார் வ.வ.ஸ்ரீ.//

பாருங்க சார், என்னிக்குப் போட்ட இடுகையிலே என்னிக்கு பதில் எழுதிட்டிருக்கேன்னு...! :-)). திடீர்னு ஆபீஸ்லே ஆணி அதிகமாயிருச்சு! அதான் நகர முடியாமப் போயிடுச்சு!

//சேட்டையார் வந்து அவர் ரசித்தவற்றை புட்ப்புட்டு வைத்தபிறகே எட்டாவது பகுதியை எட்டுவார் வ.வ.ஸ்ரீ.//

புட்டு புட்டு வைக்கணுமா? வச்சிடலாம்! :-))

//அதுவரை உண்ணாவிரதம் தொடர்கிறது என்பதை கவனத்தில்மொண்டு, லெமென் ஜூஸுடன் வந்து, உண்ணாவிரத்தை முடித்து வையுங்கள், Please.//

ஆஹா, இதைக் கவனிக்கலியே! வர்றேன் இதோ!


அதுக்கு முன்னாலே, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! :-)

settaikkaran said...

//தமிழ் 007 said...

சூப்பர்!//

மிக்க நன்றி!

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

அப்பாவி அய்யாக்கண்ண நீராதத் லெவலுக்கு பெரியாளாக்கிருவா போலயே குஸ்கா:))//

இல்லே ஐயா, அந்த அளவுக்கெல்லாம் அவருக்கு துணிச்சல் போதாது. மிக்க நன்றி ஐயா! :-)

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு. :)//

ஹிஹி, ஆமாங்கண்ணே! :-)

//என்னமா யோசிக்கிறீங்க.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிண்ணே!

settaikkaran said...

//நிரூபன் said...

இதனைத் தான் சொல்லுறது, ஒரே நைற்றிலை ஓவர் பிரபலம் ஆகிறது என்று.//

வாங்க சகோதரம், வாங்க! :-)

//என்ன ஒரு கற்பனை... வாழ்க தமிழ்! வளர்க உங்களின் சேட்டைகள்!//

என் சேட்டையை விடுங்க, அடுத்து ஐயாக்கண்ணு என்ன பண்ணுறாருன்னு கவனிங்க!

//நான் கடந்த் இடுகையிலை நினைச்சதை, பின்னூட்டத்திலை சொன்னதை நீங்கள் அப்பிடியே இந்த இடுகை மூலம் கொண்டு வாறீங்க. நம்ம கணிப்பு சரி தான்.//

நானும் போன இடுகைக்குப் போட்ட பதில்லேயே சொன்னேனே! நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னு...! :-))

//இதை இலவசக்காரர் படிச்சால் ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணீரை விட்டுக் குதிச்சுச் சாவார்கள்.//

ஊஹும், நோ சான்ஸ்! :-))

//இதொன்றும் வஞ்சப் புகழ்ச்சி இல்லையே.. நீளமாக இருந்தாலும் விசயம் ஆழமா இருக்கில்ல.. அது தானே தனிரகம்.//

இல்லை நண்பரே, நிறைய பேர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எனக்கே தெரிகின்றது. இதை அவசியம் சரிப்படுத்த வேண்டும். செய்வேன்.

//நல்ல வேளை ஐயாக்கண்ணுவிற்கு டாய்லெட் கூட தான் நினைத்தவுடன் தனக்கு முன்னே வர வேணும் என்று தோன்றவில்லை.//

சாமீ! உங்க கால் எங்கே இருக்கு? யெப்பா...! :-)))

//உந்த மந்திரி ஆட்களுக்குப் பக்கத்திலை இருக்கிற உதவியாளர்கள் தான் பொல்லாதவை. மந்திரி தீர்மானம் எடுக்க முதலே, விசயத்தை வெளியை சொல்லி பரபரப்பு நியூஸ் போட வைச்சிடுவாங்க.//

உண்மை தான். உடனிருந்தே கொல்லும் அனுகூலசத்ருக்கள்!

//சேட்டை இவ் இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளவும். எதிர்காலத்தில் அரசியலுக்குள் தாங்கள் நுழையவுள்ளதால் இவ் வரிகள் தேவைப்படலாம். எம்பி, எம் எல்லேக்கள் எப்போதும் தங்கடை உதவியாளரை காலுக்கு கீழை வைச்சிருக்கப் பார்க்க வேணுமாம். காலுக்கு மேலை போக விட்டால் தலையிலை ஏறி நின்றே காதைக் கடிக்கிற வம்சம் தானாம் அஸிஸ்டண்ட் ஆளுக.//

நான் எவ்வளவு எம்பி எம்பிக் குதிச்சாலும் எம்.பியாகவோ, எம்.எல்.ஏயாகவோ முடியாது. அப்பாடா, தப்பிச்சேன்! :-))

//இந்தப் பகுதியும் அருமை சேட்டை. நகைச்சுவைகள் கலந்து, நவரசமாய், இலக்கியச் சுவையுடன் இங்கிதமாய் ஒரு பதிவினைத் தந்துள்ளீர்கள். பின் தொடருற ஆட்களாலை ஆபத்து எப்பவுமே இருக்கு என்பது போல குஸ்கா எனும் பாத்திரத்தைப் படைத்துள்ளீர்கள். அடுத்த பகுதிக்காக வெயிற்றிங்க்.//

பின்னூட்டச் சக்ரவர்த்தியே! உங்களது ஆர்வத்தைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது சகோதரம். விரைவில் அடுத்த பகுதியும் வெளியாகும். :-)

தொடர்ந்து வந்து உற்சாகமூட்டும் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மிக்க நன்றி..!

settaikkaran said...

//எல் கே said...

யாருக்கும் இந்த கேரக்டர்ஸ் பொருந்தி வரலியே//
நெசமாவா கார்த்தி? சரி, அடுத்தவாட்டி சரிபண்ணிருவோம். நன்றி௧ :-))

settaikkaran said...

//சங்கவி said...

கலக்கறீங்க...//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//middleclassmadhavi said...

தேர்தல் அறிக்கைக்கு ஐடியா கேட்டு யார் வேணும்னாலும் வரலாம்! எதுக்கும் ரெடியாயிருங்க! :-))//

சொல்லிட்டீங்கல்லே? ஒரு போர்டு போட்டிரலாம். :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா செம//

வாங்க தல, :-))

//hi hi ஹி ஹி உள்குத்து..?//

நானே குத்துயிரும் குலையுயிருமா இருக்கேன். :-)))
மிக்க நன்றி தல!

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

நல்லா பத்த வச்சிருக்கீங்க....பீடியை!//

புகைய ஆரம்பிச்சிட்டதா நண்பரே? :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//Jey said...

சேட்டையின் சேட்டை தொடர வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பரே! :-))

settaikkaran said...

//sudhanandan said...

.... இது போல உவமைகளை தொகுத்து "சேட்டை இலக்கணம்" என ஒரு நூலை வெளியிடலாமே?//

அம்புட்டு சேர்ந்திருச்சா என்னா? :-))
மிக்க நன்றி! :-)

இராஜராஜேஸ்வரி said...

குஸ்கா அடிக்கடி வழக்கம்போல எசகுபிசகாக தன் பங்குக்கு பரபரப்பை அதிகரிக்கிற செய்திகளாய் அளித்தவண்ணமிருந்தாள்./

அஸ்காவாய் தொடர்கிறாள்
குஸ்கா..
இனிய பாராட்டுக்கள்..