டிவியில் ஒரு கொடுந்தொடர், அதாவது நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருந்தது.
"ஏண்டா, உன்னைப் பத்துமாசம் சுமந்து பெத்து வளர்த்த தாயைப் பார்த்தா இப்படிக் கேட்குறே? இதைக் கேட்டுக்கிட்டு நான் இன்னும் உசிரோட இருக்கேனே, அதைத்தாண்டா என்னாலே தாங்க முடியலே!"
என்னாலேயும் தான் தாங்க முடியலே! இந்த டிவி சீரியல் அம்மாக்களெல்லாம் ஏன் எல்லா சேனலிலும் ஒரே வசனத்தைச் சொல்றீங்க? எடு ரிமோட்டை; மாத்து சேனலை...!
"இந்த எந்திரத்தை உங்கவீட்டு பாத்ரூமிலே புதைச்சீங்கன்னா, சரியா பதினோராவது நாளிலே பல அற்புதங்கள் நடக்கும்! இதே பாத்ரூமிலே உங்க மாமியார் வழுக்கி விழுந்து மண்டையைப் போட்டிருவாங்க!"
சே, அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..!
"நான் மறத்தமிளன். தமிளுக்கு ஒரு கலங்கம்வந்தா அதை சுக்குநூறா உடைக்கிற கள்ளாயிடுவேன் நான்!"
அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..!
"ஹலோ, குட்மார்னிங்! திஸ் இஸ் டார்ட்டாய்ஸ் மஸ்க்கிட்டோ காயில் டமில் சாங்க்ஸ்!"
அமுக்கு ரிமோட்டை; மாத்து சேனலை..!
"ஆஜ் சன்சத் மே விபக்சி தலோன்னே டூ ஜீ ஸ்பெக்ட்ரம் மாம்லே கோ லேக்கர் ஹங்காமா கடா கர்தியா!"
சே! ஒண்ணுக்கு நூறு சேனல் இருக்கு! ஒண்ணிலே கூட ஒரு உருப்படியான புரோகிராம் இல்லையே! இதுக்குத்தான் நாம சேட்டை டிவின்னு ஆரம்பிச்சா, கூர்க்காவுக்கே முதல்மாசம் சம்பளம் கொடுக்க முடியாம இழுத்துப் பூட்ட வேண்டியதாயிருச்சு! இவனுங்கெல்லாம் டிவியா நடத்துறாங்க? கொடுமை! எனக்கு வர்ற கோபத்துக்கு இந்த ரிமோட்டை.....
"ஐயோ....அம்மா...!"
உரத்த கூச்சலைத் தொடர்ந்து, தலையிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட, சடைமுடியுடன் ’நான் கடவுள்’ ஆர்யாவைப் போல ஒருவர் வெளிப்பட்டார். ஐயையோ, நான் வீசியெறிஞ்ச ரிமோட்டு இந்த சாமியார் மண்டையிலே பட்டு, இரத்தமாக் கொட்டுதே? டிவி ரிமோட் பட்டா மண்டையிலிருந்து இரத்தம் வருமா? ஏன் வராது, டிவியை சும்மா பார்த்தாலே சிலவாட்டி கண்ணுலேருந்து இரத்தம் கொட்டுதே!
"இந்த சடாதாரி முனிவனை இரத்தம் சிந்த வைத்த அடாதசெயலைச் செய்தவன் எவன்?"
"சாமீ, தெரியாமப் பண்ணிட்டேன் சாமி! சாபம்கீபம் போட்டுராதீங்க! ஏற்கனவே நாளைக்கு ஒருத்தன் இளைஞன் படத்துக்கு வந்தே ஆகணுமுன்னு பயமுறுத்தியிருக்கான். இதுக்கு மேலே கஷ்டம் வந்தா என்னாலே தாங்க முடியாது சாமீ!"
"அற்பமானிடனே! ரிமோட்டாயுதம் கொண்டு இந்த ரிஷியின் மண்டையை ரிப்பேர் ஆக்கி விட்டாயே? பிடி சாபம்! இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் தூரதர்ஷன் தவிர வேறு சேனல்களே இல்லாத குக்கிராமத்துக்கு உன்னை கம்பல்ஸரி டிரான்ஸ்ஃபர் செய்யக்கடவது!"
"ஐயோ சாமீ!" என்று நெடுஞ்சாண்கிடையாக அவரது காலில் விழுந்தேன். "அவசரப்பட்டு சாபம் போட்டுட்டீங்களே? தயவு செய்து வாபஸ் வாங்கிக்குங்க! ஒரு சேனலிலே கூட நல்ல புரோகிராம் இல்லியேன்னு கோபப்பட்டு இப்படிப் பண்ணிப்புட்டேன்."
"புகாரி ஹோட்டல் பல்குத்தும் குச்சியைப் போலிருந்து கொண்டு உனக்கு இத்தனை கொழுப்பா? தீயவனே, திரும்பிப் பார்! முன்னொரு காலத்தில், உன் கிராமத்து வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில்லாதபோது, அடுத்த வீட்டு டிவியை ஜன்னல்வழியாக எட்டிப்பார்த்ததை மறந்து விட்டாயா?" சாமியார் உறுமினார்.
"எப்படி மறக்க முடியும் சாமீ? நான் தூரதர்ஷனிலே ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததை, அந்த வீட்டு அம்மா தப்பா நினைச்சு அவங்க வீட்டுக்காரர் கிட்டே போட்டுக்கொடுத்து, அவரு என்னைத் தெருவிலே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே சாமீ?" நான் கதறினேன்.
"அதுமட்டுமா? பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா?"
"ஆமா சாமீ! எல்லாத்தையும் விக்கி லீக்ஸ் மாதிரி கரெக்டா சொல்றீங்களே?"
"விம்பிள்டன் போட்டியில் ஷரபோவா விளையாடுவதைப் பார்க்க அனுமதிப்பதற்காக, அடுத்த வீட்டு அம்மணியைக் காக்காய் பிடிக்க, ஐந்து மணிநேரம் ரேஷன் கடை வரிசையில் நின்று மண்ணெண்ணை வாங்கிக்கொடுத்தாயே?"
"சாமீ, உங்க ஞானதிருஷ்டியிலே ஏதோ ஃபால்ட்டு இருக்கு! அது ஷரபோவா இல்லை! மோனிகா செலஸ்!"
"ஏதோ ஒன்று! உனக்கு நினைவிருக்கிறதா, உன் வீட்டில் தொலைக்காட்சி வந்த அன்று என்ன நடந்தது?"
"ஞாபகமிருக்குது சாமி! பழைய படத்துலே கொலை சீன்லே வர்றா மாதிரி ஜோன்னு மழை கொட்டிச்சு! டிவி ஷோரூமிலேருந்து வந்தவங்க, ஆன்டனாவை மழை பெய்யும்போது வைக்க முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க! ஏதோ ஒரு ரோஷத்துலே நானே ஆன்டனாவை வைக்கிறேன்னு சொல்லிட்டு கூரை மேலே ஏறிட்டேன். ஆனா, கீழே இறங்கத்தெரியாம நான் ’ஓ’ன்னு அழ, மொத்த கிராமமே கீழேயிருந்து பார்த்திட்டிருந்திச்சு சாமீ! கடைசியிலே ஃபயர் சர்வீஸ்காரங்களுக்கு போன் பண்ணி வரவழைச்சுத்தான் என்னைக் கீழே இறக்கினாங்க!"
"அத்தோடு விட்டாயா? மீண்டும் ஒருமுறை அதே தவறைச்செய்தாயே?"
"ஆமாம் சாமீ, இன்னொரு ஆண்டனாவை உசரத்திலே கட்டுனா, ஸ்ரீலங்கா டிவி தெரியுமுன்னு சொன்னாங்கன்னு துணிஞ்சு ஏறிட்டேன். நான் ஏறின உசரத்துலேருந்து பார்த்தா எனக்கு ஸ்ரீலங்காவே தெரிஞ்சுது. ஆனா, டிவியிலே தான் ஸ்ரீலங்கா டிவி தெரியவேயில்லை!"
"உம்! கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்த பொடிப்பசங்களிடம் தலைக்கு நாலணா வசூல் செய்தாயே? அத்துடன் விட்டாயா? உனது டிக்கெட்டை நீயே பிளாக்கில் விற்றாயே?"
நான் என்ன பதில் சொல்ல? நீரா ராடியா போல விழித்துக்கொண்டு நின்றிருந்தேன்.
"நீ இன்னும் சில நாட்கள் மீண்டும் தூரதர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கடவாயாக!"
"சாமீ சாமீ! எனக்கு விமோசனமே இல்லையா?"
"இருக்கிறது. என்றைக்கு தூரதர்ஷன் தில்லி செய்தி வாசிப்பாளர் சல்மா சுல்தானா ரிட்டயர் ஆகிறார்களோ, அன்றே நீ மீண்டும் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி விடுவாய்!"
"சாமீ, இது நடக்குற காரியமா? தீர்ப்பை மாத்துங்க...ப்ளீஸ்! தினத்தந்தியிலே கன்னித்தீவு கூட முடிஞ்சிரும். ஆனா, சல்மா சுல்தானா ரிட்டயர் ஆகுறது இந்த ஜென்மத்துலே நடக்காது சாமீ! போகாதீங்க சாமீ! ப்ளீஸ்! ப்ளீஸ்! இரக்கம் காட்டுங்க சாமீ!"
இறைவா! பரம்பொருளே! ஞானப்பண்டிதா! எனக்கு விமோசனமே இல்லையா?
அருமை "சினேகிதன்" அக்பர் "டிவியும், டிரை சைக்கிளும் பின்னே நானும் (தொடர்பதிவு)" என்று ஒரு இடுகை போட்டு, என்னையும் தொடரச் சொல்லியிருந்தார். நான் எழுதிவிட்டேன். இதை யார் தொடர வேண்டும் என்று விரும்பினாலும், தொடரலாம். அப்படித் தொடராதவர்கள் வீட்டுக்கு இந்த இடுகையில் வந்த சாமியாரை அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை! :-)

Tweet |
34 comments:
//அதுமட்டுமா? பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா?"//
ஹி.. ஹி..தெரிஞ்சுதா இல்லையா?
//உம்! கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்த பொடிப்பசங்களிடம் தலைக்கு நாலணா வசூல் செய்தாயே? அத்துடன் விட்டாயா? உனது டிக்கெட்டை நீயே பிளாக்கில் விற்றாயே?"//
நீங்களுமா? சேம் பிளட்
”தீயவனே திரும்ப்பிபார்” - யாருங்க அந்த சாமியார்? கடைசிவரை சொல்லவே இல்லை :) கலக்கல் சேட்டை. சேட்டை டிவி சீக்கிரம் தொடருங்க!
ஹி ஹி ஹி
அந்த சாமியாரும் நீங்க தானே ?? ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ??
நான் ஒசிபிஸாவுக்கு பிச்சையெடுத்தேன்:)
அட! அருமையா இருக்கு சேட்டை. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோன்னு தோணுது. அதான் சாமியார் 24 மணி நேரம் டைம் கொடுத்தாருல்ல. :)
அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி தல.
என்ன தான் இருந்தாலும் நம்ம முன்னோரை (அதுதாங்க தூர்தர்சன்) மறக்க முடியுமா..
ஹாஹாஹா, குட் ஒன்..
நீங்க அந்த தூர்தர்ஷன் காலத்தை சாபம்ன்னா சொல்லுரீங்க...என்னை பொருத்த வரை அளவா டிவி பார்த்துக்கிட்டு நிறைய விளையாடிட்டு, நிறைய நேரம் குடும்பத்தோட செலவு பண்ண வச்ச வசந்த காலம்ன்னு சொல்லுவேன்...
இப்போ, எத்தனை சானல்கள் வந்தாலும் இன்னும் அந்த காலத்தில பார்த்த சில நிகழ்ச்சிகள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குங்க..
//தூரதர்ஷனிலே ஷோபனா ரவி நியூஸ் வாசிக்கிறதை ஒளிஞ்சிருந்து பார்த்ததை, அந்த வீட்டு அம்மா தப்பா நினைச்சு அவங்க வீட்டுக்காரர் கிட்டே போட்டுக்கொடுத்து, அவரு என்னைத் தெருவிலே போட்டு மிதிமிதின்னு மிதிச்சாரே சாமீ?//
சேட்டைகரன்னு பேர் வச்சிட்டு பண்றதெல்லாம் வில்லத்தனம் .
// பாத்திமா பாபு செய்தி வாசித்தபோது, அவர்களது கூந்தல் உண்மையிலேயே இத்தனை நீளமா அல்லது சவுரியா என்று சரிபார்க்க, நீ டிவிக்குப் பின்னால் போய்ப் பார்த்தாயே ஞாபகமிருக்கிறதா?" //
அடபாவிகளா.....இதெல்லாம் கூட நடக்குமா?
இதுக்குத்தான் நான் தலைப்பாடா அடிசிகிறேன் . சீக்கிரம் சேட்ட டி . வி. மீண்டும் வந்தாகணும். சரி ,மாட்டு பொங்கல் அன்னிக்கி நம்ம சேட்ட டி. வி. மீண்டும் ஆரம்பம் சரியா? நா வேணும்னா சம்பளம் இல்லாத கூர்காவா இருக்கேன்.
பழைய தூர்தர்ஷன் நினைவுகளை வரவைத்துவிட்டீர்கள் சேட்டை...
அந்த தூர்தர்ஷன் ஓபனிங் மியூசிக் சூப்பரா இருக்கும்..!!வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை புதுப்படம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.இப்ப எங்க... விளம்பரத்துக்கு நடுவிலதான் நிகழ்ச்சிகளே போடறாங்க..!!
சூப்பர் சேட்டை!
தமிழில் உள்ள இன்னும் பல சேனல்களையும் சேர்த்திருக்கலாம் . சேட்டை நல்லா இருக்கு
//"சாமீ, தெரியாமப் பண்ணிட்டேன் சாமி! சாபம்கீபம் போட்டுராதீங்க! ஏற்கனவே நாளைக்கு ஒருத்தன் இளைஞன் படத்துக்கு வந்தே ஆகணுமுன்னு பயமுறுத்தியிருக்கான். இதுக்கு மேலே கஷ்டம் வந்தா என்னாலே தாங்க முடியாது சாமீ!"//
வயசானாலும் ஓளச்சு சம்பாரிக்கணும்னு ஆசப்பட்ர ஒரு மனுசன் பொதுச் சேவைக்கு நடுவிலயும் கஸ்டப்பட்டு நேரம் எடுத்துகிட்டு சினிமா படத்துக்கு வசனம் கிசனமெல்லாம் எளுதுறாரு. ஒளைப்ப பாராட்டாட்டியும் பரால்லப்பூ... அத ஒக்காந்து கேவலப்படுத்தி கிண்டல் பண்ணிக்கிருக்கீயளே! சுவாமி ஆட்டோவானந்தா 10-15 சிஷ்ய கோடிகளோட வீட்டுக்கு வந்து சங்கு சாங்கியம் பண்ணீரப் போறாரு பாத்துப்போய்!!
ஹா..ஹா...
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
கவிதை காதலன் said...
//ஹி.. ஹி..தெரிஞ்சுதா இல்லையா?//
ஊஹும்! :-)
//நீங்களுமா? சேம் பிளட்//
ஹிஹி! நிறைய பேரு இப்படி இருந்திருப்பாங்க போல..!
மிக்க நன்றி! :-)
//வெங்கட் நாகராஜ் said...
”தீயவனே திரும்ப்பிபார்” - யாருங்க அந்த சாமியார்? கடைசிவரை சொல்லவே இல்லை :) //
சும்மா ஒரு பில்ட்-அப் ஐயா! :-)
//கலக்கல் சேட்டை. சேட்டை டிவி சீக்கிரம் தொடருங்க!//
அப்படீங்கறீங்களா? தொடர்ந்திருவோம்...! :-))
மிக்க நன்றி ஐயா!
//Speed Master said...
ஹி ஹி ஹி//
நன்றி! :-)
//எல் கே said...
அந்த சாமியாரும் நீங்க தானே ?? ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ??//
நோ நோ! அது நானில்லை! :-)
நன்றி கார்த்தி!
//வானம்பாடிகள் said...
நான் ஒசிபிஸாவுக்கு பிச்சையெடுத்தேன்:)//
ஆஹா! கிளறி விட்டுப்புட்டேன் போலிருக்குதே ஐயா!
மிக்க நன்றி! :-)
//சிநேகிதன் அக்பர் said...
அட! அருமையா இருக்கு சேட்டை. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோன்னு தோணுது. அதான் சாமியார் 24 மணி நேரம் டைம் கொடுத்தாருல்ல. :)//
நறுக்-னு இருந்தா நல்லாயிருக்குமேன்னு நினைச்சேன் அண்ணே! :-)
//அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு மிக்க நன்றி தல.//
நீங்கள் அழைத்தால் நான் வருவேன் அண்ணே! மிக்க நன்றி! :-)
//வெறும்பய said...
என்ன தான் இருந்தாலும் நம்ம முன்னோரை (அதுதாங்க தூர்தர்சன்) மறக்க முடியுமா..//
உண்மையில், தூர்தர்ஷனை மறக்க முடியாது தான். மிக்க நன்றி நண்பரே! :-)
//முகுந்த் அம்மா said...
ஹாஹாஹா, குட் ஒன்..//
மிக்க நன்றி! :-)
//நீங்க அந்த தூர்தர்ஷன் காலத்தை சாபம்ன்னா சொல்லுரீங்க...என்னை பொருத்த வரை அளவா டிவி பார்த்துக்கிட்டு நிறைய விளையாடிட்டு, நிறைய நேரம் குடும்பத்தோட செலவு பண்ண வச்ச வசந்த காலம்ன்னு சொல்லுவேன்...//
சும்மா காமெடிக்காக அப்படி சொன்னேமுங்க! முதல் முதலாக டிவி பார்த்த அந்த நாட்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை!
//இப்போ, எத்தனை சானல்கள் வந்தாலும் இன்னும் அந்த காலத்தில பார்த்த சில நிகழ்ச்சிகள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குங்க..//
எனக்கும்தான்! இப்போதும், எப்போதும் தொடரும் அந்த நினைவுகள்! நன்றி! :-)
vivesh..... said...
//சேட்டைகரன்னு பேர் வச்சிட்டு பண்றதெல்லாம் வில்லத்தனம் .//
வில்லத்தனம் பண்ணுறவன் அதை எழுதுவானா? :-)
நன்றி!
//கக்கு - மாணிக்கம் said...
அடபாவிகளா.....இதெல்லாம் கூட நடக்குமா? இதுக்குத்தான் நான் தலைப்பாடா அடிசிகிறேன் . சீக்கிரம் சேட்ட டி . வி. மீண்டும் வந்தாகணும். சரி ,மாட்டு பொங்கல் அன்னிக்கி நம்ம சேட்ட டி. வி. மீண்டும் ஆரம்பம் சரியா? நா வேணும்னா சம்பளம் இல்லாத கூர்காவா இருக்கேன்.//
சேட்டை டிவிக்கு திரும்பவும் ஆள் எடுக்கணும் அண்ணே! களக்காடு கருமுத்து கலைஞர் டிவிக்குப் போயிட்டான். சீக்கிரமே சிட்டிவேஷன் வேக்கன்ட்-லே ஒரு விளம்பரம் போட்டிரலாம். நன்றி! :-))
//Philosophy Prabhakaran said...
பழைய தூர்தர்ஷன் நினைவுகளை வரவைத்துவிட்டீர்கள் சேட்டை...//
மிக்க நன்றி நண்பரே! :-)
//சேலம் தேவா said...
அந்த தூர்தர்ஷன் ஓபனிங் மியூசிக் சூப்பரா இருக்கும்..!!வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை புதுப்படம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.இப்ப எங்க... விளம்பரத்துக்கு நடுவிலதான் நிகழ்ச்சிகளே போடறாங்க..!!//
உம்...நெசந்தான்! அதிகாலையில் ஏதேனும் விசேஷ நிகழ்ச்சியிருந்தால், முன்கூட்டியே எழுந்து பார்த்தபோது, அந்த இசையிலே லயித்ததுண்டு. அத்துடன் தொடர்புடைய நினைவுகள் நிறைய...மிக்க நன்றி! :-)
//ஜீ... said...
சூப்பர் சேட்டை!//
மிக்க நன்றி ஜீ! :-))
Mahi_Granny said...
// தமிழில் உள்ள இன்னும் பல சேனல்களையும் சேர்த்திருக்கலாம் . சேட்டை நல்லா இருக்கு//
உண்மைதானுங்க! இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்கலாமோன்னு தோணுது. மிக்க நன்றி! :-)
Arun Ambie said...
//வயசானாலும் ஓளச்சு சம்பாரிக்கணும்னு ஆசப்பட்ர ஒரு மனுசன் பொதுச் சேவைக்கு நடுவிலயும் கஸ்டப்பட்டு நேரம் எடுத்துகிட்டு சினிமா படத்துக்கு வசனம் கிசனமெல்லாம் எளுதுறாரு. ஒளைப்ப பாராட்டாட்டியும் பரால்லப்பூ... அத ஒக்காந்து கேவலப்படுத்தி கிண்டல் பண்ணிக்கிருக்கீயளே! சுவாமி ஆட்டோவானந்தா 10-15 சிஷ்ய கோடிகளோட வீட்டுக்கு வந்து சங்கு சாங்கியம் பண்ணீரப் போறாரு பாத்துப்போய்!!//
பின்னூட்டங்கிற பேருலேயே இப்படி ஜோக் அடிச்சு அதகளம் பண்ணியிருக்கீங்களே? :-))))
மிக்க நன்றி!
//மாதேவி said...
ஹா..ஹா...இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.//
மிக்க நன்றிங்க! :-)
//நான் ஏறின உசரத்துலேருந்து பார்த்தா எனக்கு ஸ்ரீலங்காவே தெரிஞ்சுது. ஆனா, டிவியிலே தான் ஸ்ரீலங்கா டிவி தெரியவேயில்லை!"//
ha....ha....haa.....
settai rocks!
Post a Comment