Wednesday, January 5, 2011

கல்யாண சமையல் சாதம்!

கதவைத் திறந்த பரிமளம், வாசலில் நின்றிருந்த குப்பண்ணாவைப் பார்த்ததும், போன் செய்து மறுநாளே கேஸ் சிலிண்டர் வந்ததுபோல, பரவசமடைந்தாள்.

"வாங்க சார்," என்று பல்லெல்லாம் வாயாக வரவேற்ற பரிமளம், குப்பண்ணாவை உட்காரவைத்துவிட்டு கணவனை அழைத்தாள்.

"என்னங்க, யாரு வந்திருக்காரு பாருங்களேன்!"

"அடடே, வாங்க சார்," என்று பஞ்சாயத்துத் தேர்தலில் சுயேச்சையாக நிற்கிற வேட்பாளர் போலக் கைகூப்பியபடி வந்தார் சிவக்கொழுந்து. "குப்பண்ணா சாரை மறந்தாலும் அவர் சமையலை மறக்க முடியுமா? அந்தக் கல்யாணத்துலே இட்லிக்கு ஒரு பெங்களூர் கமலஹாசன் தொக்கு பண்ணியிருந்தாரே! ஆஹா!"

"அதைச் சாப்பிட்டதுக்கப்புறம்தான், நம்ம பொண்ணு கல்யாணத்திலேயும் இவர்தான் சமையல்னு முடிவு பண்ணினோம்," என்று குப்பண்ணாவின் தலையில், பரங்கிமலை சைஸுக்கு ஐஸ் வைத்தாள் பரிமளம்.

"ரொம்ப சந்தோஷம்!" என்று ராஜ்பவனுக்குப் போன எதிர்க்கட்சித்தலைவர் போலக் கைகூப்பினார் குப்பண்ணா.

"பணத்தைப் பத்தி கவலையில்லே சார்! சமையல் ஜமாய்ச்சிடணும். இப்படியொரு கல்யாணச்சாப்பாடு மெட்ராஸ்லே எவனும் போட்டதில்லேன்னு எல்லாரும் சொல்லணும்." தன் பங்குக்கு சிவக்கொழுந்தும் குப்பண்ணாவை உசுப்பேற்றினார்.

"பண்ணிடலாம் சார்! எத்தனை பேர் வருவாங்க? என்ன மெனு வேணும்னு சொல்லுங்க! அதுக்குத் தகுந்த மாதிரி பண்ணிடலாம்." என்று சட்டைப்பையிலிருந்து ஒரு கையளவு டயரியை எடுத்துக் குறித்துக்கொள்ளத் தயாரானார் குப்பண்ணா.

"ஐந்நூறு பேர் வருவாங்க! முகூர்த்தம் பதினோரு மணிக்கு. அதுனாலே காலையிலே டிபன் பண்ணனும். மத்தியானம் சமையல் தடபுடலா இருக்கணும்." என்று சிவக்கொழுந்து கூறவும், வாழ்க்கையில் முதல்முறையாக புருசனும் உருப்படியாக யோசிப்பதைப் பார்த்து புன்னகை பூத்தாள் பரிமளம்.

"அப்படீன்னா காலையிலே டிபனுக்கு பொங்கல், இட்லி, மைசூர் போண்டா போட்டுரலாம். இட்டிலிக்கு பாக்யராஜ் சாம்பாரும், ப்ருத்விராஜ் சட்னியும் அரைச்சிடுவோம். பொங்கலுக்கு விக்ரம் கொத்சு பண்ணிடலாம். ஸ்வீட்டுக்கு நமீதா அல்வா பண்ணிருவோம். ஓ.கேவா?"

"சார், உங்க ஸ்பெஷாலிட்டியே அந்த பெங்களூர் கமலஹாசன் தொக்குதானே? அதை விட்டுட்டீங்களே?"

"அதை விடுங்க சார், சில சமயங்களிலே பெங்களூரு கமல்ஹாசன் கிடைக்கலேன்னா, நாட்டு கமலஹாசனைப் போட வேண்டிவரும். போனவாரம் ஒரு கல்யாணத்துலே புதுசா ரஜினிகாந்த் துவையல் ஒண்ணு போட்டேன். சாப்பிட்டவங்க அப்படியே சொக்கிட்டாங்க! அதையே போடுவோமா?"

"தாராளமா, ஆனா, ரஜினிகாந்த் விலை கண்டபடி ஏறிக்கிடக்குதே?"

"அதான் பாகிஸ்தானிலேருந்து இறக்குமதி பண்ணுறாங்களாமே? கண்டிப்பா விலை குறையும்!"

"அப்போ சரி, சமையலுக்கு என்ன பண்ணலாம்!"

"அமலா பால் பச்சடி பண்ணிரலாம். தனுஷ் பருப்பு உசிலி, நிறைய வடிவேலு, விவேக் எல்லாம் போட்டு ஒரு விஜய் சாம்பார்!"

"சின்ன விஜயா பெரிய விஜயா?"

"பெரிய விஜய்தான் கல்யாண சாம்பாருக்கு நல்லாருக்கும். சொத்தையில்லாம நானே பார்த்து வாங்கித்தர்றேன்."

"சந்தோஷம் சார்!"

"அப்புறமா அஜித் போட்டு ஒரு ரசம்! ஒரு சினேகா மோர்க்குழம்பு! நிறைய ரகஸ்யா போட்டு ஒரு பால்பாயாசம். தமன்னா பொரியல். போதுமா? வேறே ஏதாவது வேணுமா?"

"இந்தக் கல்யாணத்துலே புதுசா ஏதாவது அயிட்டம் பண்ணுங்க சார்!"

"அதுக்கென்ன, பண்ணிடலாம்! ஒரு காத்ரீனா கைஃப் மஞ்சூரியன் போடலாம். அப்புறம், ஒரு இலியானா ஃபிரை பண்ணிடலாம். எல்லா சீசன்லேயும் ஸ்ரேயா மார்க்கெட்டுலே சீப்பா கிடைக்கும். அதையும் அஞ்சலியும் போட்டு ஒரு கூட்டு வச்சிரலாம். போதுமா?"

"ஒரு சந்தேகம், ராஜபாளையம் விஜயகாந்த் போதுமா, குண்டூர் விஜயகாந்த் தான் வேணுமா?"

"குண்டூர் விஜயகாந்த் தான் காரமாயிருக்கும். அது இல்லாட்டிப் பரவாயில்லை. மத்த அயிட்டங்களிலே ஃபிரெஷா சத்யராஜ் போடத்தானே போறோம். காரம் சரியாத்தானிருக்கும்."

"அமர்க்களம் சார்! அப்படியே பண்ணிருவோம். இந்தாங்க அட்வான்ஸ்!"

ஹிஹி! தலையைப் பிச்சிக்கணும் போலிருக்கா? ஒண்ணுமில்லீங்க! சமீபத்துலே உத்திரப்பிரதேசத்துலே ஒருத்தர் கொய்யாப்பழத்துக்கு ஐஸ்வர்யா ராய் பேரை வச்சிருக்கிறாராமே?

இப்படியே எல்லாப் பழங்களுக்கும் நடிகைகள் பெயரையும், காய்கறிகளுக்கு நடிகர்கள் பெயரையும் வைத்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தேன்.

என்ன இருந்தாலும் இன்றைய தேதியில் காய்கறிகளுக்குத் தானே ’ஸ்டார் வேல்யூ’ அதிகம்?

இதில் யார் யார் எந்தக் காய், எந்தப் பழம் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்! நானாகச் சொல்லி மாட்டிக்கொள்வேனா என்ன?

35 comments:

Philosophy Prabhakaran said...

என்ன இது... பின்னிரவில்... தூங்கலையா...

Philosophy Prabhakaran said...

அப்படின்னா... விஜய்தானே அந்த வெங்காயம்...

Philosophy Prabhakaran said...

நீங்க ஸ்ரேயாவை பத்தி எதுவும் எழுதலையா... இதை என்னால் நம்ப முடியவில்லை...

மாணவன் said...

//இப்படியே எல்லாப் பழங்களுக்கும் நடிகைகள் பெயரையும், காய்கறிகளுக்கு நடிகர்கள் பெயரையும் வைத்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தேன்.//

பாஸ் செம்ம கலக்கல்...
அதுவும் வழக்கம்போலவே உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்துநடையில் சூப்பர் கற்பனை...

தொடரட்டும்.....

மாணவன் said...

//என்ன இருந்தாலும் இன்றைய தேதியில் காய்கறிகளுக்குத் தானே ’ஸ்டார் வேல்யூ’ அதிகம்?//

ஊர்ல கம்யூட்டர் படிச்ச மாப்பிளைய விட காய்கறி கடை வச்சிருக்கிற மாப்பிள்ளைகளுக்குதான் மதிப்பு அதிகமாம் பொன்னு வீட்டுகாரங்க தெளிவாதான் இருக்காங்க போல....

சேலம் தேவா said...

போன் செய்து மறுநாளே கேஸ் சிலிண்டர் வந்ததுபோல, பரவசமடைந்தாள்
சுயேச்சையாக நிற்கிற வேட்பாளர் போலக்
ராஜ்பவனுக்குப் போன எதிர்க்கட்சித்தலைவர் போலக்

கலகலப்பான உதாரணங்கள்..!! கலக்கல்..!! :-)

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம் போல சிரிச்சு மாலல. சரி, எங்கே நம்ம சேட்ட டி. வி. ? ரொம்ப நாளா நிறுத்தி வெச்சிருகிறது ஞாயமா சேட்டை?

சங்கவி said...

//இப்படியே எல்லாப் பழங்களுக்கும் நடிகைகள் பெயரையும், காய்கறிகளுக்கு நடிகர்கள் பெயரையும் வைத்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தேன்.//

கலக்கலான கற்பனை....

Chitra said...

அய்யா.... மீண்டும் சொல்கிறேன்... நீரே நக்கல் - நையாண்டி திலகம். கலக்கல்!!!!

ஜீ... said...

கலக்கல் பாஸ்! :-)

வெங்கட் நாகராஜ் said...

கலக்கலாய் ஒரு கற்பனை. எதற்குத்தான் நடிகைகள்/நடிகர்கள் பெயர் வைப்பதென்பதே இல்லை....

நடிகை மோகம் பிடித்து ஆட்டுகிறது...

நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றி சேட்டை.

சிநேகிதன் அக்பர் said...

//அய்யா.... மீண்டும் சொல்கிறேன்... நீரே நக்கல் - நையாண்டி திலகம். கலக்கல்!!!! //

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)

இரவு வானம் said...

அப்புறம் இன்னைக்கு உங்க வீட்டுல என்ன சமையல் :-)

தங்கராசு நாகேந்திரன் said...

பின்னிட்டிங்க அதிலும் உங்க உவமை வர்ணனைகள் பிரமாதம் வாழ்த்துக்கள்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

பின்னி பெட்லெடுத்திட்டீங்க தல. கேஸ் ஸ்லிண்டர் உதாரணம், ராஜ்பவன் உதாரணம் சூப்பர். முடியல. சேட்டைகள் தொடர வாழ்த்துக்கள்

மாதேவி said...

:))

அப்பாவி தங்கமணி said...

ha ha ha...chance illa... kalakkal... sssaapppa...eppavum neenga ippadi thaana? super...

வெறும்பய said...

தல இவ்வளவு தானா.. இல்லா வேற எதாச்சும் பெயருல இருக்கா...

தமிழ் மகன் said...

கமலஹாசன் - தக்காளி
ரஜினிகாந்த் - வெங்காயம்
விஜயகாந்த் - மிளகாய்
பிருத்விராஜ் - தேங்காய்
பாக்யராஜ் - கேரட்

அதுக்கு மேல ஒன்னும் தெரியல..

கலக்கல் காமெடி பதிவு...

சேட்டைக்காரன் said...

Philosophy Prabhakaran said...

//என்ன இது... பின்னிரவில்... தூங்கலையா...//

நண்பா, தாமதமாகத்தான் திரும்பினேன். வந்ததும் ஒரு இடுகை! :-)

//அப்படின்னா... விஜய்தானே அந்த வெங்காயம்...//

// நீங்க ஸ்ரேயாவை பத்தி எதுவும் எழுதலையா... இதை என்னால் நம்ப முடியவில்லை...//

ஹிஹி! சரியாப் படிக்கலே நீங்க! இம்போசிஷன் எழுத வேண்டி வரும்! நானாவது இந்த மாதிரி இடுகையிலே ஸ்ரேயாவைப் பத்தி எழுதாம இருக்கிறதாவது...? நோ சான்ஸ்! எனிவே, கருத்துக்கு நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

மாணவன் said...

//பாஸ் செம்ம கலக்கல்...அதுவும் வழக்கம்போலவே உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்துநடையில் சூப்பர் கற்பனை...//

தொடரும் உங்களது உற்சாகமான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

//ஊர்ல கம்யூட்டர் படிச்ச மாப்பிளைய விட காய்கறி கடை வச்சிருக்கிற மாப்பிள்ளைகளுக்குதான் மதிப்பு அதிகமாம் பொன்னு வீட்டுகாரங்க தெளிவாதான் இருக்காங்க போல....//

பேரு மாணவன் என்றாலும், வாத்தியார் மாதிரி கரெக்டா கண்டுபிடிச்சு பின்னூட்டம் போட்டுர்றீங்க! மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

சேலம் தேவா said...

//கலகலப்பான உதாரணங்கள்..!! கலக்கல்..!! :-)//

தொடரும் உங்களது கலக்கலான பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

கக்கு - மாணிக்கம் said...

// வழக்கம் போல சிரிச்சு மாலல.//

மிக்க நன்றி நண்பரே!

//சரி, எங்கே நம்ம சேட்ட டி. வி. ? ரொம்ப நாளா நிறுத்தி வெச்சிருகிறது ஞாயமா சேட்டை?//

கொஞ்சம் ஃபைனான்ஸ் டைட்டாயிருக்கு நண்பரே! சீக்கிரம் ஒரு ஸ்பான்ஸரைப் பிடிச்சிட்டு வாறேன்! :-)

சேட்டைக்காரன் said...

சங்கவி said...

//கலக்கலான கற்பனை....//

மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

//Chitra said...

அய்யா.... மீண்டும் சொல்கிறேன்... நீரே நக்கல் - நையாண்டி திலகம். கலக்கல்!!!!//

அம்மாடியோ! வசிஷ்டர் வாயாலே பிரம்மரிஷி பட்டம்னு கேள்விப்பட்டிருக்கேன். வசிஷ்டருக்குப் பதிலா சிஸ்டர் வாயாலே பட்டம் வாங்கிட்டேன். மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

ஜீ... said...

//கலக்கல் பாஸ்! :-)//

மிக்க நன்றி நண்பரே! :-)

சேட்டைக்காரன் said...

வெங்கட் நாகராஜ் said...

//கலக்கலாய் ஒரு கற்பனை. எதற்குத்தான் நடிகைகள்/நடிகர்கள் பெயர் வைப்பதென்பதே இல்லை....நடிகை மோகம் பிடித்து ஆட்டுகிறது...//

ஆமாம் ஐயா! அதனால் தான் நான் கூட ஸ்ரேயா பெயரில் ஆரம்பிப்பதாக இருந்த வலைப்பூவை நிறுத்தி வைத்து விட்டேன். :-)

//நகைச்சுவையான பகிர்வுக்கு நன்றி சேட்டை.//

மீண்டும் மீண்டும் என்னை ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி ஐயா!

சேட்டைக்காரன் said...

சிநேகிதன் அக்பர் said...

//அய்யா.... மீண்டும் சொல்கிறேன்... நீரே நக்கல் - நையாண்டி திலகம். கலக்கல்!!!! //

//நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :)//

கண்டிப்பா அண்ணே! சகோதரி சித்ரா பேச்சுக்கு அப்பீல் ஏது? :-) மிக்க நன்றி அண்ணே!

சேட்டைக்காரன் said...

இரவு வானம் said...

//அப்புறம் இன்னைக்கு உங்க வீட்டுல என்ன சமையல் :-)//

எஸ்.வி.சேகரும், விசுவும் தான் - ஐ மீன் தயிர்சாதம்-ஊறுகாய்! :-)

சேட்டைக்காரன் said...

தங்கராசு நாகேந்திரன் said...

//பின்னிட்டிங்க அதிலும் உங்க உவமை வர்ணனைகள் பிரமாதம் வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

சேட்டைக்காரன் said...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//பின்னி பெட்லெடுத்திட்டீங்க தல. கேஸ் ஸ்லிண்டர் உதாரணம், ராஜ்பவன் உதாரணம் சூப்பர். முடியல. சேட்டைகள் தொடர வாழ்த்துக்கள்//

வருகைக்கும் தாராளமான பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே! உங்களது ஆதரவும் தொடர வேண்டுகிறேன்.

சேட்டைக்காரன் said...

//மாதேவி said...

:))//

மிக்க நன்றி!

சேட்டைக்காரன் said...

அப்பாவி தங்கமணி said...

// ha ha ha...chance illa... kalakkal... sssaapppa...eppavum neenga ippadi thaana? super...//

மிக்க நன்றிங்க! எப்பவுமே இப்படியிருக்க முடியுமா? அப்பப்போ....! ஹிஹி!

சேட்டைக்காரன் said...

வெறும்பய said...

// தல இவ்வளவு தானா.. இல்லா வேற எதாச்சும் பெயருல இருக்கா...//

நிறையவே இருக்கு! ஆனா, இப்பவே ரொம்ப நீளமா எழுதறேன்னு ஒரு குறை பரவலாயிருக்கு. அதன் கட் பண்ணிட்டேன். மிக்க நன்றி! :-)

சேட்டைக்காரன் said...

தமிழ் மகன் said...

//கமலஹாசன் - தக்காளி
ரஜினிகாந்த் - வெங்காயம்
விஜயகாந்த் - மிளகாய்
பிருத்விராஜ் - தேங்காய்
பாக்யராஜ் - கேரட்//

என்னாது? பாக்யராஜ் கேரட்டா? தேவுடா! :-)))

//அதுக்கு மேல ஒன்னும் தெரியல..//

எனக்கே தெரியலீங்க, தோராயமாத் தான் எழுதினேன்.

//கலக்கல் காமெடி பதிவு...//

மிக்க நன்றி!