Tuesday, January 11, 2011

பணவீக்கமா? யார் சொன்னது??

இடம்: புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீடு

பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிரிக்கெட் துறை, மன்னிக்கவும், உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அஹுலுவாலியா ஆகியோர் ஐ.பி.எல்லில் விலைபோகாத கிரிக்கெட் வீரர்கள் போல சோகமாக உட்கார்ந்திருக்கின்றனர்.

பிரதமர்: எல்லாரும் வந்திட்டீங்களா? மீட்டிங் ஆரம்பிக்கலாமா?

சரத் பவார்: சார், டாஸ் போட வேண்டாமா?

பிரதமர்: ஹலோ, இது கேபினெட் மீட்டிங்! மறந்திட்டீங்களா? எல்லாரும் அவங்கவங்க செல்போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணுங்க!

ப.சிதம்பரம்: சார் சார், தெலுங்கானா கலவரம் ரன்னிங் கமெண்டரி வரும்.நான் மட்டும் செல்போனை ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

பிரணாப் முகர்ஜீ: சார் சார், கொல்கத்தாவுலே புத்ததேவ் பட்டாச்சாரியா ஏதாவது ஸ்டேட்மெண்ட் விடுவாருன்னு தோணுது.. நானும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

சரத் பவார்: சார், இன்னிக்கு கிரிக்கெட் சூதாட்ட விசயமா ஐ.சி.சி. தீர்ப்பு சொல்லப்போறாங்க! நானும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

பிரதமர்: சரியாப் போச்சு! அப்படீன்னா என்னோட போனையும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா?

அஹ்லுவாலியா: நீங்களே பல வருசமா ஸைலண்ட் மோட்-லே தானேயிருக்கீங்க! மீட்டிங்கை ஆரம்பிங்க சார்!

பிரதமர்: சரி, மிஸ்டர் பவார்! என்னது விலைவாசியெல்லாம் இப்படி சகட்டு மேனிக்கு ஏறியிருக்குது!

சரத் பவார்: ஆமா சார்! கௌதம் கம்பீருக்கே 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்துத்தான் வாங்கினோம். இந்த நியூசீலாந்துலே நேதன் மெக்கல்லமுன்னு ஒரு கிளிமூக்கன், அந்தாளுக்கே ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் கொடுக்க வேண்டியதாப்போச்சு!

பிரதமர்: ஐயா சாமீ பவார்! இந்த எளவெடுத்த கிரிக்கெட்டைப் பத்தி எவன்யா கேட்டான்? நீங்க உணவு அமைச்சர் தானே? விலைவாசியெல்லாம் இப்படி ஏறியிருக்குதே? இதுக்கு என்ன பண்ணினீங்க?

சரத் பவார்: என்ன சார் நீங்க? சோனியா காந்தி மேடமே விலைவாசியைக் குறைக்கிறதெல்லாம் மாநில அரசோட வேலைன்னு சொல்லிட்டாங்க. நீங்க புதுசாக் கேக்கறீங்களே?

பிரதமர்: மேடமே அப்படிச் சொல்லிட்டாங்களா? இதை முதல்லேயே சொல்லியிருந்தா இப்படியொரு மீட்டிங்கே போட்டிருக்க வேண்டாமில்லே? எத்தனை பிளேட் சமோசா வேஸ்டு? எல்லாம் மக்களோட வரிப்பணமில்லையா?

ப.சிதம்பரம்: பேசாம விலைவாசியைக் கட்டுப்படுத்தியே தீரணும்னு எல்லா முதலமைச்சர்களுக்கும் ஒரு லெட்டர் போட்டிரலாம். அவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலே அதை எல்லா டி.வி.சேனலுக்கும் கொடுத்திருவோம். அப்பத்தான் நம்மளை விரைந்து செயல்படுற அரசுன்னு சொல்லுவாங்க!

பிரணாப் முகர்ஜீ: மிஸ்டர் சிதம்பரம்! மத்தவங்க பதில் போடாட்டிக் கூட பரவாயில்லை! ஆனா, புத்ததேவ் பட்டாச்சார்யா கண்டிப்பா பதில் எழுதியே ஆகணுமுன்னு சொல்லுங்க!

ப.சிதம்பரம்: ஏற்கனவே மம்தா பேனர்ஜீ சொல்லிட்டாங்க! அதுனாலே, லெட்டர் எழுதறதுக்கு முன்னாடியே ஏன் பதில் போடலேன்னு முதல்லேயே கேட்டு லெட்டர் போட்டுட்டேன்.

பிரதமர்: யாருய்யா குறட்டை விடுறது? மிஸ்டர் மான்டெக் சிங்! எழுந்திருங்க!

அஹ்லுவாலியா: இன்ஃப்ளேஷன்...க்ராஸ் டொமஸ்டிக் ப்ராடக்ட்....மைக்ரோ எகணாமிக்ஸ்..மேக்ரோ எகணாமிக்ஸ்..ஹிஸ்டரி..ஜ்யாகிரபி...நாண்டீட்டைல்ட்....!

பிரணாப் முகர்ஜீ: ஹலோ, நாங்கெல்லாம் இருக்கும்போது நீங்கல்லாம் ஓவர்-ஆக்டிங் பண்ணப்படாது.

பிரதமர்: மிஸ்டர் பவார், உங்க டிப்பார்ட்மென்டு தான் பெரிய தலைவலியா இருக்குது! போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு! இந்த வருசமாவது இடத்தையெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?

சரத் பவார்: ஆமா சார், பூனேயிலே பாதியை எங்க கட்சி ஆளுங்க வளைச்சுப்போட்டுட்டாங்க!

பிரதமர்: அதை யாரு கேட்டாங்க? நான் சொல்லுறது கோடவுன் பத்தி!

சரத் பவார்: உங்களுக்கு விஷயமே தெரியாதா சார்? எங்க ஊருலே மொத்த வெங்காயத்தையும் பதுக்கி வைக்கிற அளவுக்கு அத்தனை கோடவுன் இருக்குது சார்!

பிரணாப் முகர்ஜீ: ஆமா சார், நாங்க கூட வருமானவரிக்காரங்களை அனுப்பி வெங்காய மண்டியிலே ரெய்டெல்லாம் பண்ணினோம். அடுத்த வாரம் தக்காளி ரெய்டு, அதுக்கடுத்த வாரம் வெண்டைக்காய் ரெய்டு, அதுக்கடுத்த வாரம் முள்ளங்கி ரெய்டு...இப்படி வாரா வாரம் ரெய்டு மேலே ரெய்டு பண்ணினா விலைவாசி குறைஞ்சிடும் சார்!

ப.சிதம்பரம்: உங்களுக்கு ஆளு பத்தலேன்னா சொல்லுங்க! எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க! பேச்சுத்துணைக்கு அனுப்பி வைக்கிறேன்.

சரத் பவார்: அதெல்லாம் விடுங்க சார்! ஜனங்களோட கவனத்தைத் திசைதிருப்ப நான் ஒரு சூப்பர் ஐடியா வச்சிருக்கேன். ஐ.பி.எல் மாதிரியே வி.பி.எல், அதாவது வெஜிடபிள் ப்ரீமியர் லீக்-னு ஒண்ணு ஆரம்பிக்கப்போறோம். அதுலே சென்னை கேபேஜ், டெல்லி டிரம்ஸ்டிக்ஸ், கொல்கத்தா கோரியாண்டர் லீவ்ஸ், பேங்களூர் பிரிஞ்சால்ஸ், கொச்சி கோக்கனட்ஸ்-னு நிறைய டீம் உருவாக்கி, இன்னும் நிறைய கிரிக்கெட் ப்ளேயருங்களை ஏலத்துலே எடுத்து அட்டகாசமா ஒரு டூர்ணமண்ட் நடத்தினாப்போதும். ஜனங்க எல்லாத்தையும் மறந்திருவாங்க!

பிரதமர்: இப்படியே பேசிட்டிருங்க! பாகிஸ்தானிலேருந்து வெங்காயம் வர ஏன் இவ்வளவு லேட்டு? பால் தாக்கரே கூட ஒண்ணும் சொல்லலியே? என்ன பிரச்சினை? மக்களுக்கு என்ன சொல்லப்போறீங்க?

ப.சிதம்பரம்: நான் வேண்ணா, வெங்காயத்துக்குப் பதிலா பாகிஸ்தான் வெங்காய வெடி அனுப்பிட்டாங்கன்னு ஒரு அறிக்கை விடட்டுமா?

அஹ்லுவாலியா: சார், எனக்குத் தூக்கம் தூக்கமா வருது!

பிரதமர்: தூங்குவீங்கய்யா தூங்குவீங்க! அடுத்தவாட்டி உங்களை பிரதமராக்க சொல்றேன். அப்புறம் எப்படிப் பொருளாதாரம் பேசுறீங்கன்னு பார்க்கிறேன்.

ப.சிதம்பரம்: சார், புத்ததேவ் பட்டாச்சார்யா தில்லிக்கு வரமுடியாதுன்னு எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருக்காரு! நான் உடனே போயி அடுத்த லெட்டர் எழுதணும். (போகிறார்)

பிரதமர்: மிஸ்டர் பவார்! ஏதாவது நல்ல செய்தியா சொல்லுங்க! எப்படி விலைவாசியைக் கட்டுப்படுத்தப்போறீங்க? எதிர்க்கட்சிக்காரங்க ரொம்ப கூச்சல் போடுறாங்களே?

சரத் பவார்: ஏன் கூச்சல் போடுறாங்க? விலைவாசியெல்லாம் அப்படியொண்ணும் ஏறலே தெரியுமா? சொல்றேன் கேளுங்க...! ஒரு டீயோட விலை ஒரு ரூபாய்!

பிரதமர்: நெஜமாவா?

பிரணாப் முகர்ஜீ: ஆமா சார், ஒரு சூப் அஞ்சரை ரூபாய். ஒரு சைவச் சாப்பாடு பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா! அசைவச் சாப்பாடு இருபத்திரெண்டு ரூபாய்!

பிரதமர்: என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே? உண்மையாவா?

சரத் பவார்: அட ஆமா சார், தயிர் சாதம் பதினோரு ரூபாய், கலந்த சாதம் எட்டு ரூபாய், சிக்கன் பிரியாணி முப்பத்தி நாலு ரூபாய். மீன்கறி சோறு பதிமூணு ரூபாய்!

பிரதமர்: மான்டெக் சிங் ஜீ! இவங்க சொல்றது உண்மையா?

அஹ்லுவாலியா: ஆமா சார்!

சரத் பவார்: தக்காளி சாதம் ஏழு ரூபாய்.

பிரணாப் முகர்ஜீ: மீன் வறுவல் பதினேழு ரூபாய்

சரத் பவார்: கோழி வறுவல் இருபது ரூபாய் ஐம்பது பைசா

பிரணாப் முகர்ஜீ: கோழி மசாலா இருபத்தி நாலு ரூபாய் ஐம்பது பைசா!

சரத் பவார்: சப்பாத்தி ஒரு ரூபாய்!

பிரணாப் முகர்ஜீ: அரிசிச்சோறு ரெண்டு ரூபாய்!

பிரதமர்: யோவ், என்னய்யா ஆச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீங்க??

அஹ்லுவாலியா:தோசை நாலு ரூபாய், பாயாசம் அஞ்சு ரூபாய் ஐம்பது பைசா!

பிரதமர்: நீங்களுமா சர்தார்ஜீ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

அஹ்லுவாலியா: சார், அவங்க சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. உண்மையிலே இதுக்கெல்லாம் இவ்வளவு தான் விலை!

சரத் பவார்: சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே? இப்போ திருப்தியா? அப்படீன்னா நான் லண்டனுக்குக் கிளம்பறேன். கிரிக்கெட் வர்ல்டு கப்பு வருது. தலைக்கு மேலே வேலையிருக்கு! (கிளம்புகிறார்!)

பிரணாப் முகர்ஜீ: நானும் கிளம்பறேன் சார், பட்ஜெட் வேலை இருக்கு. நிறைய டூப்பு விடணும். ஒரு வாட்டி மெட்ராஸ் போயிட்டு வந்தாத்தான் செட் ஆகும். வரட்டுமா? (கிளம்புகிறார்)

பிரதமர்: சே, சப்பாத்தி ஒரு ரூபாயா? இவ்வளவு மலிவா கிடைக்கும்போது ஏன்யா எதிர்க்கட்சிக்காரங்க இப்படிக் குதிக்கிறாங்க?

அஹ்லுவாலியா: கிடைக்குறது என்னவோ உண்மைதான். எங்கேன்னு கேக்கலியே நீங்க?

பிரதமர்: எங்கே?

அஹ்லுவாலியா: பாராளுமன்ற கேன்டீன்-லே, மாசம் எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நம்ம எம்.பிக்களுக்குத் தான் இதெல்லாம் இந்த விலையிலே கிடைக்குது.

பிரதமர்: ஐயையோ! போனவங்களையெல்லாம் திருப்பிக் கூப்பிடுங்கய்யா! மீட்டிங் இன்னும் முடியலே...ஹலோ, நீங்க எங்கே போறீங்க? ஹலோ..ஹலோ....

செய்தி: விலைவாசி, பண வீக்கம் உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

31 comments:

பொன் மாலை பொழுது said...

சேட்ட, நீங்க வேண்ணா நக்கல் அடிக்கலாம். பாதியிலேயே எனக்கு புரிஞ்சிபோச்சு.ஆனா உண்மையிலேயே இதுதான் நடந்திருக்கும் போல இருக்கு. வயிறு காந்துதே என்ன பண்ணலாம்? தண்ணிதான் குடிச்சி தீத்துக்கணும்.

bandhu said...

வயிறெரிகிறது! இதற்க்கு என்ன தான் தீர்வு?

Chitra said...

நாட்டு நிலைமையை நினைச்சு அழுவதா சிரிப்பதா.......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சிரிச்சு மாளலை.. ஹா...ஹா
கலக்கீட்டிங்க சேட்டை..

Philosophy Prabhakaran said...

// நீங்களே பல வருசமா ஸைலண்ட் மோட்-லே தானேயிருக்கீங்க! மீட்டிங்கை ஆரம்பிங்க சார்! //

செம பன்ச்...

// செய்தி: விலைவாசி, பண வீக்கம் உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. //

ஹா ஹா... இந்த மேட்டரை வச்சிக்கிட்டுதான் இவ்வளவு கற்பனையா...

வெங்கட் நாகராஜ் said...

சேட்டை, இவர்கள் இப்படி மீட்டிங் போட்டே காலத்தை ஓட்டிடுவாங்க! அவஸ்தை படறது சாதாரண மக்கள் தானே....

சேலம் தேவா said...

இந்த செய்தியை வைத்து நான் ஒரு பதிவு போட்டு இருந்தேன். இருந்தாலும் உங்களுடையது மிகவும் அருமை. அதீத கற்பனைவளம் உங்களுக்கு.

http://salemdeva.blogspot.com/

Speed Master said...

அருமை

சி.பி.செந்தில்குமார் said...

USUALLY PATTAA PATTI COMENTS ABOUT CONGRESS, THIS TIME U.. VERY VERY LAUGHFULL WRITTING.. GOOD ANNAE

சுபத்ரா said...

சிரிக்கிறதா....அழுறதான்னே தெரியல சேட்டை!

Unknown said...

எல்லாம் மக்களை சொல்லனும் தலயெழுத்து.

சிநேகிதன் அக்பர் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விசயம்.

இவங்களை நம்பி ஓட்டு போடுற நம்மளை சொல்லனும்.

vasu balaji said...

அந்த மீட்டிங்குக்கு குறைஞ்சது ஒன்னரை லட்சம் வரிப்பணம் செலவாகியிருக்கும்.

பிரபாகர் said...

நண்பா... நடப்பு நிகழ்வுகளை கிண்டல் செய்து கலக்கலாய் ஒரு இடுகை... அருமை, வாழ்த்துக்கள்.

பிரபாகர்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமைங்க... இப்படிதாங்க இருப்பாங்க.. ஒழுங்கா கூட்டம் போட்டிருந்தா ஏன் இப்படி எல்லாம் நடக்குது :(

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

சேட்ட, நீங்க வேண்ணா நக்கல் அடிக்கலாம். பாதியிலேயே எனக்கு புரிஞ்சிபோச்சு.ஆனா உண்மையிலேயே இதுதான் நடந்திருக்கும் போல இருக்கு. வயிறு காந்துதே என்ன பண்ணலாம்? தண்ணிதான் குடிச்சி தீத்துக்கணும்.//

அண்ணே, எனக்கும் எல்லாரையும் போல கொதிப்பு ஏற்படுகிறது. உணர்ச்சிப்பெருக்கில், வார்த்தைகள் கண்ணியத்தைக் களைந்து அம்மணமாகி விடக் கூடாதே என்றுதான் நக்கல் என்ற போர்வையைத் தேடவேண்டியிருக்கிறது. நன்றி! :-)

settaikkaran said...

//bandhu said...

வயிறெரிகிறது! இதற்க்கு என்ன தான் தீர்வு?//

தேர்தல் வருகிறது. தக்க பாடம் புகட்டுவோம். நன்றி! :-)

settaikkaran said...

Chitra said...

//நாட்டு நிலைமையை நினைச்சு அழுவதா சிரிப்பதா.......//

சிரிக்க முயல்வோம்; அழுதால் நம்மை பலவீனமானவர்கள் என்று கருதி விடுவார்கள். நன்றி! :-)

settaikkaran said...

பட்டாபட்டி.... said...

//சிரிச்சு மாளலை.. ஹா...ஹா கலக்கீட்டிங்க சேட்டை..//

மிக்க நன்றி பட்டாபட்டி அண்ணே! :-)

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

ஹா ஹா... இந்த மேட்டரை வச்சிக்கிட்டுதான் இவ்வளவு கற்பனையா...//

அந்த மேட்டர் முத்தாய்ப்புதான். இடையில் வாசித்த, கேட்ட பல செய்திகள் தான் சாவி கொடுத்து முடுக்கிவிட்டன. நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

சேட்டை, இவர்கள் இப்படி மீட்டிங் போட்டே காலத்தை ஓட்டிடுவாங்க! அவஸ்தை படறது சாதாரண மக்கள் தானே....//

ஆமாம். சமீபத்தில் மணிசங்கர் ஐயர் நடுத்தரவர்க்கத்தைப் பற்றி தொலைக்காட்சியொன்றில் சொன்னதைக் கேட்டபோது, எனக்கும் இப்படித்தான் தோன்றியது. மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//சேலம் தேவா said...

இந்த செய்தியை வைத்து நான் ஒரு பதிவு போட்டு இருந்தேன். இருந்தாலும் உங்களுடையது மிகவும் அருமை. அதீத கற்பனைவளம் உங்களுக்கு.//

வாசித்துப் பின்னூட்டமும் இட்டேன் நண்பரே! அற்புதமாக எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி!

settaikkaran said...

//Speed Master said...

அருமை//

மிக்க நன்றி!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

USUALLY PATTAA PATTI COMENTS ABOUT CONGRESS, THIS TIME U.. VERY VERY LAUGHFULL WRITTING.. GOOD ANNAE//

Thank You Thala! :-)

settaikkaran said...

//சுபத்ரா said...

சிரிக்கிறதா....அழுறதான்னே தெரியல சேட்டை!//

குழப்பமே வேண்டாம். அழ மட்டும் கூடவே கூடாது. :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//இரவு வானம் said...

எல்லாம் மக்களை சொல்லனும் தலயெழுத்து.//

இல்லை. தாமே எழுதிக்கொள்வது. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விசயம். இவங்களை நம்பி ஓட்டு போடுற நம்மளை சொல்லனும்.//

ஜனநாயகத்தில் அந்த ஒரு ஆயுதம் மட்டும் தானே இருக்கிறது அண்ணே? :-((

மிக்க நன்றி!

settaikkaran said...

வானம்பாடிகள் said...

//அந்த மீட்டிங்குக்கு குறைஞ்சது ஒன்னரை லட்சம் வரிப்பணம் செலவாகியிருக்கும்.//

ஆமாம் ஐயா! குதிரை குப்புறத்தள்ளினதும் இல்லாமல், குழியும் பறித்த கதைதான்.மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//பிரபாகர் said...

நண்பா... நடப்பு நிகழ்வுகளை கிண்டல் செய்து கலக்கலாய் ஒரு இடுகை... அருமை, வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி நண்பரே! ஐ-போனிலிருந்தே வாசித்து, சளைக்காமல் பின்னூட்டமும் இடுவதற்கு டபுள் தேங்க்ஸ்! :-)

settaikkaran said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமைங்க... இப்படிதாங்க இருப்பாங்க.. ஒழுங்கா கூட்டம் போட்டிருந்தா ஏன் இப்படி எல்லாம் நடக்குது :(//

இந்தக் கூட்டங்களில் எதுவும் நடக்கப்போவதில்லை. இவை, ஈமச்சடங்குகளுக்கு ஒப்பானவை தானே? மிக்க நன்றி! :-)

Arun Ambie said...

இந்தக் கும்பல் நாட்ட வெச்சு காமெடி பண்ணுது. நீங்க அந்த கும்பல வெச்சு காமெடி பண்றீங்க.... செம சேட்டை தான்!!!

http://ch-arunprabu.blogspot.com/க்கு வாங்க, பழகலாம்!!