நீங்கள் அசந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, அதுவும் அதிகாலையில், அர்த்தராத்திரியில் அடுத்தவீட்டு முருங்கைமரத்தை உலுக்குவது போல உலுக்கினால் எப்படியிருக்கும்? இன்று எனக்கும் அப்படித்தான் எரிச்சல் ஏற்பட்டது.
"ஏண்டா உசிரை எடுக்கறீங்க? ஞாயித்துக்கிழமையும் அதுவுமா ஏண்டா காலங்கார்த்தாலே பதினோரு மணிக்கே எழுப்பறீங்க?"
"டேய், நீதானேடா புத்தகக்கண்காட்சிக்குப் போகணும்! காலையிலே பத்தரை மணிக்கே அலாரம் வைக்கச் சொன்னே?"
அட ஆமாம்! புத்தகம் வாங்குறோமோ இல்லையோ, புத்தகக்கண்காட்சி பற்றி ஒரு இடுகை கூட எழுதலேன்னா, நாளைக்கு நாலு பேரு நாக்கு மேலே பல்லுப்போட்டு கேள்வி கேக்க மாட்டாங்களா?
அடுத்த ஐந்தாவது நிமிடமே குளித்துத் தயாராகி, அவசர அவசரமாக டீ குடித்துவிட்டு, இரண்டு பேருந்துகள் மாறி, சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிற இடத்தை அடைந்தோம்.
"சேட்டை, நீ எந்த புத்தகம் படிப்பே?"
"நான் எந்தக்காலத்துலே புத்தகமெல்லாம் படிச்சிருக்கேன்? ஆனா, வெளியிலே அப்படியெல்லாம் சொல்லப்படாது. அதுனாலே நான் என்ன பண்ணுறேன்னு கவனிச்சிட்டே இரு, சரியா?"
"ஓ.கே! டேய் அது யாருடா உன்னைப் பார்த்து கையாட்டுறது?"
"ஓ அவரா, கல்லுளிமங்கன்!"
"டேய் டேய், எவ்வளவு பிரியமா உன்னைப் பார்த்துக் கையாட்டுறாரு, அவரைப் போயி திட்டுறியே?"
"யார்றா திட்டுனா, அவரு கல்லுளிமங்கன்-கிற பேருலே வலைப்பதிவு எழுதுறாருடா! ஹலோ, கே.எம் சார், என்ன புஸ்தகம் வாங்க வந்தீங்களா?"
"பின்னே என்ன புண்ணாக்கு வாங்கவா வந்தேன்? அது போகட்டும், என்னென்ன புத்தகம் வாங்கப்போறதா முடிவு பண்ணியிருக்கீங்க சேட்டை?"
"ஓ அதுவா! சமகாலச்சமூகவியலில் பொருளாதாரத்தின் வீச்சு குறித்த முற்போக்கு சிந்தனைகளும், பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பீடுகள் செய்யத்தக்க இடைச்சங்ககாலத்தின் இலக்கியத்தோடு ஒத்தகருத்துடைய பின்நவீனத்துவத்துடனான ஆய்வுகளடங்கிய புனைவுகளின் சாயலுடன்....."
"போதும் சேட்டை, கேட்கிறபோதே ஆஸ்மா வரும்போலிருக்கு. நீங்க இவ்வளவு ஆழமா யோசிக்கிற ஆளுன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்க அபிமான எழுத்தாளர் யாரு?"
"தவளையூரான்"
"கேள்விப்பட்டதேயில்லையே?"
"நானும்தான்!"
"என்னது?"
"அதாவது எனக்கும் அவரைப்பத்தி சப்பைமூக்கன்னு ஒரு பதிவர் சொல்லுறவரைக்கும் தெரியாதுன்னு சொல்ல வந்தேன்."
"ஆஹா, நம்ம சப்பைமூக்கன் இப்போத்தான் உள்ளே போறதைப் பார்த்தேன்! ஏன் சேட்டை, இந்தத் தவளையூரான் எழுதினதுலேயே பெஸ்ட் புத்தகம் எது?"
"தவிட்டுப்பானைக்குள் ஒரு செவிட்டுப்பூனை-ன்னு ஒரு நெடுங்கதை எழுதியிருந்தாரு! அந்த ஒரு புத்தகத்தை மட்டுமே மூணு தலைமுறை படிக்கலாம்."
"அவ்வளவு நல்லாயிருக்குமா?"
"இல்லை, அவ்வளவு பெரிய புத்தகம்!"
"சரி சேட்டை, அவசியம் வாங்கிப்படிக்கிறேன். அப்புறம் சேட்டை, எனக்கு உங்க மேலே ஒரே ஒரு வருத்தம். இவ்வளவு இலக்கிய ஆர்வமிருக்கிற நீங்க இதுவரைக்கும் பிரபல எழுத்தாளர்கள் பத்தி ஒரு இடுகை கூட எழுதாம இருக்கிறது ரொம்பத் தப்பு. எங்களுக்கெல்லாம் ரொம்ப வருத்தம். ரொம்பவெல்லாம் வேண்டாம். அமாவாசைக்கு அமாவாசை அவங்களைத் திட்டியாவது ஒரு இடுகை போடலாமில்லே?"
"நெசந்தான். தை பொறக்கட்டும். முயற்சி பண்ணுறேன் கே.எம்.சார்!" என்று ஆறுதலாய் இரண்டு வார்த்தைகள் சொன்னதும் கல்லுளிமங்கன் நகர்ந்தார்.
"என்னடா சேட்டை, நீ பாட்டுக்கு ரீல் விடுறே? அந்தாளு உண்மையிலேயே போயி அந்தப் புத்தகம் இருக்கான்னு கேட்டா...?"
"கவலையே படாதே! அவரு உள்ளே போயி கடலங்குடி பதிப்பகத்துலே மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்களை வாங்கிட்டு அடுத்த பஸ்ஸைப் பிடிச்சுப் போயிருவாரு!"
"என்னடா இது, ஆளாளுக்கு மலைமலையா புத்தகம் வாங்கிட்டுப்போறாங்க? இங்கே வந்ததுக்கு ஞாபகார்த்தமா நாமளும் ஏதாவது வாங்க வேண்டாமா?"
"முதல்லே தலைக்கு அஞ்சு ரூபா கொடுத்து ரெண்டு டிக்கெட் வாங்கு."
டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்ததும், சனி சப்பைமூக்கன் வடிவில் காத்திருந்தது; கூடவே கல்லுளிமங்கனும்...
"சேட்டை அண்ணாச்சி! சௌக்கியமா?"
போச்சுரா, இப்போது சப்பைமூக்கன் வந்து தவளையூரான் பற்றி நான் கல்லுளிமங்கனிடம் சொன்னது குறித்துக் கேட்டால் என்ன செய்வது...?
"சௌக்கியம் அண்ணே! என்னண்ணே மூட்டை மூட்டையா புஸ்தகம் வாங்கிட்டீங்க போலிருக்கே?"
"ஹிஹி! அது புஸ்தகமில்லே சேட்டை! இருக்கிற நானூறு ஸ்டாலுக்கும் போயி கேடலாக் வாங்கியிருக்கேன். என்ன கொடுமைன்னா, நம்ம தவளையூரான் புத்தகமெல்லாமே அவுட்-ஆஃப்-பிரிண்ட்டாமே?"
"என்..என்னது...?"
"என்ன தெரியாத மாதிரி கேக்கறீங்க சேட்டை?" கல்லுளிமங்கன் இடைமறித்தார். "கொஞ்சநேரம் முன்னாடி நீங்கதானே சப்பைமூக்கன் அண்ணாச்சி உங்களுக்கு சிபாரிசு பண்ணினதா வெளியே வச்சு சொன்னீங்க! புத்தகம் பேரு கூட சொன்னீங்களே..? தவிட்டுப்பானைக்குள் ஒரு செவிட்டுப்பூனை.."
"ஆ...ஆமாண்ணே!"
"அடாடாடாடா!" சப்பைமூக்கன் சிலாகித்தார். "எப்படிப்பட்ட புத்தகம் அது? தமிழ் இலக்கிய உலகில் இருக்கிற நுண்ணரசியல் காரணமாத்தான் அது பெரிசாப் பேசப்படலே! இல்லாட்டா நியாயமாப் பார்த்தா அதுக்குத்தான் இந்தவாட்டி சாஹித்ய அகாதமி பரிசு கொடுத்திருக்கணும்..!"
"டேய் சேட்டை," என் நண்பன் காதில் கிசுகிசுத்தான். "டேய், நீ தான் 420-ன்னா இந்த சப்பைமூக்கன் 840-யா இருப்பாரு போலிருக்கே?"
"சேட்டை, குறிப்பா அந்தப் பூனை தவறிப்போயி அந்தத் தவிட்டுப்பானைக்குள்ளே விழுற காட்சியை எழுதியிருப்பாரு பாருங்க! அந்தப் பூனையே பேனா புடிச்சு எழுதினா மாதிரி அவ்வளவு ரியலா இருக்கும். இவருக்கு முன்னாலே கு.ப.ரா, தி.ஜ.ர, ந.பிச்சமூர்த்தி, ஜானகிராமனெல்லாம் ஒண்ணுமேயில்லே! இருந்தாலும் இன்னிக்கு தவளையூரான்னு சொன்னா, தமிழன் ஒருத்தனுக்குக் கூட தெரியலியே! சே!"
"சேட்டை, எனக்கு வர்ற எரிச்சலுக்கு இந்தாளு மூஞ்சியிலே குத்தி உண்மையிலேயே சப்பைமூக்கனாக்கிடுவேன்," என்று மீண்டும் காதில் கிசுகிசுத்தான் நண்பன்.
"பேசாம இருடா, இந்த சப்பைமூக்கன் அடிக்கடி இலக்கியம் பத்தியெல்லாம் எழுதுவாருன்னு நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சிட்டிருந்தேன். என்னை விட மொக்கையா இருப்பாரு போலிருக்கேடா?"
"மிஸ்டர் கல்லுளிமங்கன்! தவளையூரான் சிப்பாய் கலகத்தை மையமா வச்சு வேலூர் பின்னணியிலே ஒரு காதல் கதை எழுதியிருந்தாரு. அதைத் தான் கமல் காப்பியடிச்சு ’ராஜ பார்வை’ன்னு எடுத்தாரு தெரியுமா?"
அடப்பாவி மக்கா....!
"அது மட்டுமா? தவளையூரான் எழுதின ’நொட்டாம்புளி’ கதையைப் பார்த்துத்தான், இந்தியிலே ’ஷோலே’ படமே எடுத்தாங்க! இதைப் பத்தி 1976 குமுதத்துலே முப்பத்தி எட்டாம் பக்கத்துலே எழுதியிருக்காங்க தெரியுமா?"
"என்ன கொடுமை சப்பை?" கல்லுளிமங்கன் சப்பல் காணாமல் போனதுபோல,கன்னத்தில் கைவைத்தார்.
"சரிங்க சப்பைமூக்கண்ணே, கல்லுளிண்ணே, நாங்க போய் சுத்திப்பார்க்கிறோம். அப்புறமா சந்திக்கலாம்!" என்று விடைபெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்தோம்.
"சேட்டை, நீங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான் உளறுவீங்களா? இல்லாட்டி இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் அக்கேஷனா...?"
"மத்தவங்களைப் பத்தித் தெரியாதுரா...எனக்கு இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் அக்கேஷன் தான்!"
"ஐயா சாமீ, ஒருவேளை நீ என்னைக்காட்டி ’இவர்தான் தவளையூரான்,’னு சொல்லியிருந்தா அதையும் நம்பியிருப்பாங்களோ?"
"நம்புறதா? உன்னோட போட்டோ எடுத்துக்கிட்டு நாளைக்கு இதை வைச்சே ஒரு இடுகை போட்டிருப்பாங்க!"
"சரியாப் போச்சு! உன்னை நம்பி ஐ.பி.எல். ஏலம் லைவ்-டெலிகாஸ்டை விட்டுப்புட்டு இங்கே வந்தேன் பாரு."
"இந்தவாட்டி மந்திரா பேதியை யாருடா ஏலத்துலே எடுத்திருக்காங்க...?"
"சேட்டை, நீ கிரிக்கெட் பத்திப் பேசமாட்டேன்னு ஏற்கனவே உங்க கொள்ளுப்பாட்டி மேலே சத்தியம் பண்ணியிருக்கே!"
"கிரிக்கெட்டைப் பத்தி யாருடா பேசினாங்க? மந்திரா பேதி, ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே இவங்கல்லாம் டிவியிலே வருவாங்களான்னு ஒரு கவலை, அம்புட்டுத்தேன்!"
"சரி, இன்னிக்கு ஏதோ ஸ்பெஷல் அக்கேஷன்னு வேறே சொல்லிட்டே. அதுனாலே விடுறேன்."
"என்ன ஸ்பெஷல் அக்கேஷன்னு கேக்க மாட்டியா?"
"என்னது சேட்டை?"
"ஹிஹி! வேறோண்ணுமில்லேடா! இன்னியோட எனக்கு ஒரு வயசு முடிஞ்சு ரெண்டாவது வயசு ஆரம்பமாகுது!"
"என்னது??? என்னடா உளர்றே?"
"அதாவது, நான் சேட்டைக்காரன்-ன்னு வலைப்பதிவு ஆரம்பிச்சு ஒருவருசம் முடிஞ்சு போச்சு!"
"அப்படியா சமாச்சாரம்! அப்படீன்னா இன்னிக்காவது ஒரு உருப்படியான காரியம் பண்ணு சேட்டை!"
"என்னாது?"
"இங்கே உண்மையிலேயே நிறைய புத்தகப்பிரியர்கள் வந்திருப்பாங்க. அவங்களைத் தொந்தரவு பண்ணாம, அப்படியே வெளியே போயி டீயைக் குடிச்சிட்டு வேடிக்கை பார்த்திட்டு வந்த சுவடு தெரியாமப் போயிரலாமா? இல்லாட்டி உன் ஃபிரண்டு, யாராவது ரெட்டைமண்டைன்னு வந்துரப்போறாரு!"
"உன் வாயிலே அருகம்புல் ஜூஸைத்தான் ஊத்தணும். அதோ பாரு, உண்மையிலேயே ரெட்டைமண்டை வந்திட்டிருக்காரு!"
Tweet |
49 comments:
வாழ்த்துக்கள் சேட்டை. புத்தக கண்காட்சிக்கு வந்தீர்களா ??
// "ஓ அதுவா! சமகாலச்சமூகவியலில் பொருளாதாரத்தின் வீச்சு குறித்த முற்போக்கு சிந்தனைகளும், பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பீடுகள் செய்யத்தக்க இடைச்சங்ககாலத்தின் இலக்கியத்தோடு ஒத்தகருத்துடைய பின்நவீனத்துவத்துடனான ஆய்வுகளடங்கிய புனைவுகளின் சாயலுடன்....." ////
இதுதான் சேட்டைத்தனம்கிறது. ரொம்ப கொழுப்புதான்ய்யா உனக்கு :))))
வாழ்த்துக்கள்..மென்மேலும் உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் சேட்டை.
வரும் வருடங்களில் சேட்டை தொடர வாழ்த்துகள் ;)
//நீ தான் 420-ன்னா இந்த சப்பைமூக்கன் 840-யா இருப்பாரு போலிருக்கே?///
ஹாஹாஹா... கலக்கல் நண்பா...
வாழ்த்துகள் சேட்டை.
தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்.
சூப்பர் பாஸ்! வாழ்த்துக்கள்!
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் சேட்டைக்கு வாழ்த்துகள். புத்தக கண்காட்சி பற்றிய உங்கள் கருத்து - :)))
//சமகாலச்சமூகவியலில் பொருளாதாரத்தின் வீச்சு குறித்த முற்போக்கு சிந்தனைகளும், பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பீடுகள் செய்யத்தக்க இடைச்சங்ககாலத்தின் இலக்கியத்தோடு ஒத்தகருத்துடைய பின்நவீனத்துவத்துடனான ஆய்வுகளடங்கிய புனைவுகளின் சாயலுடன்...//
இது சம்பந்தமா எனக்கும் ரெண்டு புத்தகங்கள் அனுப்பி வைங்க..!! ஹி.ஹி..ஹி...!!
"சேட்டை, நீங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான் உளறுவீங்களா? இல்லாட்டி இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் அக்கேஷனா...?"
"மத்தவங்களைப் பத்தித் தெரியாதுரா...எனக்கு இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் அக்கேஷன் தான்!"
......
CONGRATULATIONS!!! HAPPY FIRST ANNIVERSARY!!! :-)
கலக்கல் சேட்டை.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
haa haa haa, wish you happy birthday sir
தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பங்கேற்று சிறப்பிக்கவும்.
http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_10.html
வாழ்த்துக்கள் சேட்டை...
கலக்கல் காமெடி!
நல்ல கலகலப்பாக இருந்தது சேட்டை. நிறைய தகவல்களை சொல்லியிருக்கீங்க.. உங்க வலைப்பூவுக்கு வயசு ஒண்ணா.. ரொம்ப சந்தோசமா இருக்கு சேட்டை. இந்த இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நீங்க பல சாதனைகள் புரியணும். தொடரட்டு வெற்றிகள்.
வாழ்த்துகள் சேட்டை.
சேட்டைன்னா நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்பதற்கு இப்பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வருடம் போனதே தெரியல. மேலும் வளர வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் :)
சேட்டை தொடர வாழ்த்துக்கள்
நீங்கள் நாகேஷ் அவர்களின் தீவிர ரசிகரோ?
இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...
நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html
அப்படின்னா நீங்க சென்னைல இருப்பீங்க... புத்தகக் கண்காட்சிக்கு வருவீங்க... ஆனா எந்த பதிவரையும் சந்திக்க வரமாட்டீங்க... அப்படித்தானே... என்ன பழக்கம் இது...? அப்படியென்ன பிடிவாதம்... பிடிவாதமா இல்லை கொழுப்பா...? இந்த பின்னூட்டத்திற்கு பதில் போடவும்...
யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றால்... "ஆமாம்டா நான் அப்படித்தாண்டா..." என்று வெளிப்படையாக கூறிவிடுங்கள்...
வாழ்த்துக்கள் நண்பா... ஒரு வருடத்தில் உங்களின் வளர்ச்சி பிரம்மிப்பாயிருக்கிறது... இன்னும் நிறைய எழுதி எங்களையெல்லாம் மகிழ்விக்க வேண்டுகிறேன்...
பிரபாகர்...
ஆகா.. வழக்கம் போல் கல கல :-)
சேட்டைக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
//எல் கே said...
வாழ்த்துக்கள் சேட்டை. புத்தக கண்காட்சிக்கு வந்தீர்களா ??//
நன்றி கார்த்தி! புத்தகக்கண்காட்சிக்கு இதுவரையிலும் மூணுவாட்டி வந்திட்டேன். :-)
//கக்கு - மாணிக்கம் said...
இதுதான் சேட்டைத்தனம்கிறது. ரொம்ப கொழுப்புதான்ய்யா உனக்கு :))))//
இது ஒண்ணை வச்சுத்தான் பொழைப்பை நடத்திட்டிருக்கேன்! மிக்க நன்றி! :-)
//முகுந்த் அம்மா said...
வாழ்த்துக்கள்..மென்மேலும் உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி! என்னைத் தொடர்ந்து ஊக்குவிப்பவர்களில் நீங்களும் ஒருவர்!
//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
வாழ்த்துகள் சேட்டை. வரும் வருடங்களில் சேட்டை தொடர வாழ்த்துகள் ;)//
மிக்க நன்றி! உங்களது அன்பும் ஆதரவும் இருந்தா ஜமாய்ச்சிட மாட்டேனா? :-)
அகல்விளக்கு said...
//ஹாஹாஹா... கலக்கல் நண்பா...//
மிக்க நன்றி நண்பரே! :-)
//சிநேகிதன் அக்பர் said...
வாழ்த்துகள் சேட்டை. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்.//
உங்களது நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணே! :-)
//ஜீ... said...
சூப்பர் பாஸ்! வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி ஜீ! :-)
//வெங்கட் நாகராஜ் said...
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் சேட்டைக்கு வாழ்த்துகள். புத்தக கண்காட்சி பற்றிய உங்கள் கருத்து - :)))//
மிக்க நன்றி ஐயா! உங்களது தொடரும் ஆதரவு எனக்கு தூண்டுகோலாயிருக்கிறது. புத்தகக்கண்காட்சி மிகவும் அருமை! இன்னொரு இடுகை (உருப்படியாக) அதைப் பற்றி எழுத உத்தேசம்!
//சேலம் தேவா said...
//சமகாலச்சமூகவியலில் பொருளாதாரத்தின் வீச்சு குறித்த முற்போக்கு சிந்தனைகளும், பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பீடுகள் செய்யத்தக்க இடைச்சங்ககாலத்தின் இலக்கியத்தோடு ஒத்தகருத்துடைய பின்நவீனத்துவத்துடனான ஆய்வுகளடங்கிய புனைவுகளின் சாயலுடன்...//
இது சம்பந்தமா எனக்கும் ரெண்டு புத்தகங்கள் அனுப்பி வைங்க..!! ஹி.ஹி..ஹி...!!//
லாரி கிடைக்கலே நண்பரே! அம்புட்டுப் பெருசா இருக்குதுங்க! :-)
மிக்க நன்றி!
Chitra said...
//CONGRATULATIONS!!! HAPPY FIRST ANNIVERSARY!!! :-)//
மிக்க நன்றி! எனது வலைப்பதிவு முயற்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை உற்சாகப்படுத்துகிறவர்களில் நீங்களும் ஒருவர்! மறக்க முடியாது!
அமைதிச்சாரல் said...
//கலக்கல் சேட்டை.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றி! உங்களது வாழ்த்துக்கள் மகிழ்ச்சியளிக்கிறது.
//இரவு வானம் said...
haa haa haa, wish you happy birthday sir//
மிக்க நன்றி! :-)
//சிநேகிதன் அக்பர் said...
தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். பங்கேற்று சிறப்பிக்கவும்.
உம். பார்த்திட்டேன் அண்ணே! :-)
கலக்கிடுவோம்!
ஸ்ரீராம். said...
//வாழ்த்துக்கள் சேட்டை...//
மிக்க நன்றி! :-)
//கே. பி. ஜனா... said...
கலக்கல் காமெடி!//
மிக்க நன்றி! :-)
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//நல்ல கலகலப்பாக இருந்தது சேட்டை. நிறைய தகவல்களை சொல்லியிருக்கீங்க.. உங்க வலைப்பூவுக்கு வயசு ஒண்ணா.. ரொம்ப சந்தோசமா இருக்கு சேட்டை. இந்த இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நீங்க பல சாதனைகள் புரியணும். தொடரட்டு வெற்றிகள். வாழ்த்துகள் சேட்டை.//
மிக்க நன்றி ஸ்டார்ஜன்! எனது வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம். வலைச்சரத்தில் நீங்கள் ஆசிரியராக இருந்தபோது, என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி, பலருக்கு எனது வலைப்பதிவை அறிவித்து உதவி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி மீண்டும் மீண்டும்.....!
ரேகா ராகவன் said...
// சேட்டைன்னா நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்பதற்கு இப்பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு வருடம் போனதே தெரியல. மேலும் வளர வாழ்த்துகள்.//
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களது ஊக்குவித்தல் இருந்தால், எனது சேட்டை தொடரும் என்பது நிச்சயம். மிக்க நன்றி!
//அஹமது இர்ஷாத் said...
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி! :-)
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
வாழ்த்துக்கள் :)//
உங்களுக்கும் எனது விசேஷ நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எனது ஆரம்பகால இடுகைகளிலிருந்து என்னை ஊக்குவித்து வந்திருக்கிறீர்கள். கோடி நன்றிகள்! :-)
//Mahi_Granny said...
சேட்டை தொடர வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி அம்மா!
//THOPPITHOPPI said...
நீங்கள் நாகேஷ் அவர்களின் தீவிர ரசிகரோ?//
தவறு. நான் நாகேஷின் தீவிர பக்தன்! :-)
மிக்க நன்றி!
Philosophy Prabhakaran said...
//அப்படின்னா நீங்க சென்னைல இருப்பீங்க... புத்தகக் கண்காட்சிக்கு வருவீங்க... ஆனா எந்த பதிவரையும் சந்திக்க வரமாட்டீங்க... அப்படித்தானே... என்ன பழக்கம் இது...? அப்படியென்ன பிடிவாதம்... பிடிவாதமா இல்லை கொழுப்பா...? இந்த பின்னூட்டத்திற்கு பதில் போடவும்...//
அப்படியெல்லாம் இல்லை நண்பரே! ஏற்கனவே பல பதிவர்களை சந்தித்து விட்டேன். நேரம், இடம், ஒத்து வந்தால் உங்களையும் விரைவில் சந்திப்பேன். இது உறுதி! :-)
மிக்க நன்றி நண்பரே!
//பிரபாகர் said...
வாழ்த்துக்கள் நண்பா... ஒரு வருடத்தில் உங்களின் வளர்ச்சி பிரம்மிப்பாயிருக்கிறது... இன்னும் நிறைய எழுதி எங்களையெல்லாம் மகிழ்விக்க வேண்டுகிறேன்...//
உங்களுக்கு நான் நன்றி சொல்வது உங்களுக்கு அலுத்துக்கூட போயிருக்குமோ என்று சில சமயங்களில் தோன்றுவதுண்டு. ஆனால், நான் அலுக்காமல் சலிக்காமல் தொடர்ந்து நன்றி தெரிவித்துக்கொண்டேயிருப்பேன். இத்தனைக்கும் முதல் புள்ளி வைத்துத் துவங்கி வைத்தவர் நீங்கள் தான் நண்பரே! கோடானு கோடி நன்றிகள்!!
//சுபத்ரா said...
ஆகா.. வழக்கம் போல் கல கல :-)
சேட்டைக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!//
வாங்க வாங்க! உங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)
Post a Comment