Wednesday, July 27, 2011

ரஞ்சிதா செய்த தவறு என்ன?

பொதுவாக நான் இந்த பெண்ணியம், ஆணாதிக்கம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்றவற்றிற்கு நேற்று பயணித்த பஸ் டிக்கெட்டுக்கு இன்று கொடுக்கிற மரியாதையைக் கூடத் தருவதில்லை. என்னுடன் இருப்பவர்கள், நான் சந்திப்பவர்கள் பலரிடமிருந்து சகமனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பாரபட்சமின்றி மதிக்கக் கற்றுக்கொண்டு வருகிறேன்; முடிந்தவரை கடைபிடிக்க தொடர்ந்து என்னைப் பக்குவப்படுத்தி வருகிறேன். (இதுவரை முழுவெற்றியில்லை!) பார்த்தும், கேள்விப்பட்டும் சற்றே நிலைகுலைய வைக்கும் விசயங்களை புனைவாகவோ, சற்று தீவிரம் குறைவாயிருப்பின் நையாண்டிகளாகவோ எழுதுவதே எனது வாடிக்கை. அனேகமாக முதல்முறையாக, ஒரு விஷயம் குறித்த எனது கருத்துக்களை நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன்.

ரஞ்சிதா செய்த தவறு என்ன?’ - பல மாதங்களுக்கு முன்பு "பண்புடன்" குழுமத்தின் ஒரு விவாதத்தின்போது, இப்படியொரு கேள்வியை எழுப்பிய ஒரு சிலரில் நானும் ஒருவன். (கவனிக்கவும், நித்தியானந்தா செய்த தவறு என்ன என்று கேட்கவில்லை!).

சர்ச்சைக்குரிய அந்த வீடியோ வெளிவந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் பத்திரிகைகளிலும் வலைப்பதிவுகளிலும் நார் நாராகக் கிழித்துக் கொண்டிருந்தபோது "எனக்குப் பிடித்த பத்து பெண்கள்," என்ற தலைப்பில் ரஞ்சிதாவையும் குறிப்பிட்டு இடுகை எழுதியிருந்தேன். மீண்டும் நித்தி-ரஞ்சிதாவைப் பற்றிய செய்திகள் முழுவீச்சில் வெளிவந்து கொண்டிருக்கிற சூழலில், அப்போது நான் கேட்ட கேள்வியின் வீரியம் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.

ரஞ்சிதா செய்த தவறு என்ன? - திருமணமான ஒரு பெண், ஒரு இளம் துறவியோடு (?) அந்நியோன்னியமாக இருந்தது தவறு! - இது கொஞ்சம் பட்டும் படாமல், நாசூக்காகச் சொல்கிற பதிலாக இருக்கலாம். இது போன்ற தவறுகளைச் செய்கிற பெண்களுக்கு வழங்குவதற்காக, வழிவழியாய் வகைவகையாய் பட்டங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை பகீரங்கமாய், பட்டவர்த்தனமாய் சொல்லி ’கண்ணியவான்,’ என்ற கவுரவத்தை வலுவில் இழக்க எந்தக் கலாச்சாரக்காவலர்களும் விரும்புவதில்லை. இந்தப் பட்டங்கள் என்னவோ, ரஞ்சிதா போன்ற பிரபலங்களுக்காவே ஏற்படுத்தப்பட்டவை அல்ல. ஆனால், நடிகை சம்பந்தப்பட்டால், அட்டையில் அதே நடிகையின் கவர்ச்சிப்படத்தைப் போட்டு விற்பனையை அதிகரிக்கிற வர்த்தக சாத்தியக்கூறு இருக்கிறது. கவனத்தை சட்டென்று ஈர்க்க உதவுகிறது. பட்டங்களுக்குப் பட்டைதீட்டி வண்ணக்காகிதத்தில் பொட்டலம் கட்டி கடைகடையாய் விற்கிறார்கள். அவ்வளவே!

காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலுக்குள் சல்லாபித்த பூசாரி தேவநாதனுக்கு இணங்கிய அந்தப் பெண்ணின் பெயரை எத்தனை பேர் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்? எனக்கே ஞாபகம் வரவில்லை; அதை கூகிளில் தேடுமளவுக்கு முக்கியமாகவும் தோன்றவில்லை. ஆனால், ரஞ்சிதாவை எளிதில் மறக்க முடியாத அளவுக்கு, பார்க்குமிடமெங்கும் நீக்கமற எழுதியும் பேசியும் நமது சமுதாயக்கடமையை நிறைவேற்றி விட்டோம்; இன்னும் எழுதுவோம் என்று நம்புகிறேன்.

பிரபலங்களின் செயல், பேச்சு நமது கவனத்தை சட்டென்று ஈர்த்துத் தொலைத்து விடுகிறது. ’திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வதில் தப்பில்லை; ஆனால், கவனமாய் இருங்கள்,’ என்று ஒரு நடிகை சொன்னால் தப்பு. அதையே எத்தனையோ தொலைக்காட்சிகளில் மருத்துவ நிகழ்ச்சிகளில் படித்துப் பட்டம்பெற்ற மருத்துவர்கள், சற்றே இங்கிலீஷும், நிறைய இங்கிதமும் கலந்து சொன்னால் நாம் கண்டு கொள்ள மாட்டோம். (யூ நோ திஸ் புரோகிராம் இஸ் வெரி இன்டரஸ்டிங் அண்ட் இன்ஃபர்மேடிவ்..!)

ஸ்தூ....! பண்பாடு, கலாச்சாரம் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சொல்லப்படுகிற விசயங்கள் பற்றியும், அவற்றின் குழப்பமான எல்லைகளை மீறுதல் குறித்தும் எனக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. நாம் விரும்புகிறோமோ, விரும்பவில்லையோ சில நடந்து கொண்டிருக்கின்றன; இனியும் நடக்கும் என்பது தான் நிஜம்! இவற்றையெல்லாம் ஆதரித்து முற்போக்குவாதி என்ற பட்டம் பெறுவதில் எனக்கு எத்தனை விருப்பமில்லையோ, அதே அளவு இவற்றை முழுமூச்சாய் எதிர்த்து ’கலாச்சாரக்காவலன்,’ என்ற பட்டம் வாங்கவும் விருப்பமில்லை. எனக்குப் பிடிக்காததை நான் செய்ய மாட்டேன் - அம்புட்டுத்தேன்! சரி, எங்கேயோ அரசல்புரசலாய் நடப்பதை இன்னும் வெளிச்சம்போட்டு நடத்திக்கொள்ளட்டுமே என்று சொன்னால் - ஸாரி, எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது!

"அவன் இருக்கானே, மச்சக்காரண்டா! ஒரு பொண்ணு கண்ணுலே பட்டாலே போதும்!" என்று ஒரு ஆண்மகனின் வசீகரத்தையும், அவனது டெஸ்டோஸ்டெரோனின் மகிமை குறித்தும் சிலாகித்துச் சொல்லும்போது, அந்த மச்சக்காரன் ஒரு நல்லவளையாவது தடம்புரள வைத்திருப்பான் என்பது உறைப்பதில்லை. ஆனால், அந்தப்பெண்ணை எங்கேனும் பார்த்தால் தன்னிச்சையாகவே நமது உதடுகளில் ஒரு அலட்சியப்புன்னகை எட்டிப்பார்க்கிறது. (டெக்னிக்கலாக, இதையும் ஆணாதிக்கம் என்று சொல்கிறார்கள்! )

தொடர்ந்து ரஞ்சிதாவைக் குறித்துப் பலர் எழுதுவதை வாசிக்கும்போது ஒன்று நன்றாகப் புரிகிறது. நாம் பிரபலங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்; அவர்கள் பிறழும்போது நமக்கு அதிக ஏமாற்றம் ஏற்படுகிறது. (சிலருக்கு "வடை போச்சே" என்ற ஆதங்கம் கூட எரிச்சலை உண்டாக்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படாமல் இல்லை!)

சொல்லப்போனால் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், அரசாங்கம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒவ்வொருவரிடமும் ஏமாந்த கோபம் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நான் வாசித்த இடுகைகளை எழுதியவர்கள் அனைவரிடமும் இந்தக் கோபக்குவியலை நான் இப்போதோ அல்லது இதற்கு முந்தைய இடுகைகளிலோ பார்த்திருக்கிறேன். ஆனால், தெரிந்தோ தெரியாமலோ திரைப்படங்கள் அரசியல், ஆன்மீகம் போன்றவற்றைக் காட்டிலும் நம்மிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உதாரணத்துக்கு....

எனக்குத் தெரிந்த ஒரு பதிவர் ஒரு சில வருடங்களாய் அருமையாகக் கவிதைகள் எழுதி வருகிறார். ஆனால், அவர் ’தில்லாலங்கடி,’ படத்துக்கு விமர்சனம் எழுதியதும் தான் முதன் முதலாக அவரது இடுகை இண்டெலியில் பிரபலம் (Popular) ஆனது. இது திரைப்படங்களையோ, அவை குறித்து அதிகம் எழுதி, அதிகம் வாசிப்பவர்களின் ரசனையையோ, குறைத்து மதிப்பிடுவதற்காக எடுத்துக் காட்டப்படவில்லை. அரசியல், ஆன்மீகம் இவற்றைக் காட்டிலும், திரைப்படங்கள் எளிதாக நமது அண்மையில் இருக்கின்றன; அவற்றைக் காட்டிலும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்கவையாய், சிக்கல்களற்று இருக்கின்றன என்பதையே சொல்ல விருப்பம்.

அதனால்தான், ஹைதராபாத்தில் சீதையாக நடிக்கிற ஒரு நடிகையின் ’தகுதி’யை திருப்பூரில் இருக்கிற ஒரு லெட்டர்-பேட் கட்சி கேள்விகேட்க முடிகிறது. ஏதோ ஒரு விருந்தில், இரண்டு நடிகைகள் மதுவருந்தி ஆடினால், அந்தப் புகைப்படங்கள் சகட்டுமேனிக்கு இஷ்டமித்திர பந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ’நான் சம்பாதிக்கிறேன்; குடிக்கிறேன். உனக்கென்ன?’ என்று பெரிய நகரங்களில் சில பெண்கள் கேட்கிற உரிமை கூட நடிகைகளுக்கு இல்லை.

ராமனாக நடிக்கிறவன் ஏகபத்தினி விரதனாய் இருத்தல் வேண்டும் என்று எந்த இந்துக்கட்சியும் கொடிபிடிப்பதில்லை. டாஸ்மாக்கில் குடித்துவிட்டு நடுரோட்டில் புரள்கிறவனைக் கேள்வி கேட்க எவனுக்கும் துப்பில்லை. பேருந்துப்பயணத்தில் பெண்களிடம் அத்துமீறுகிறவன் பிடறியில் ஒன்று போடுகிற துணிச்சல் நமக்கு எளிதில் வருவதில்லை. ஆனால், பல தூண்டுதல்களுக்கும், சுரண்டல்களுக்கும் பஞ்சமில்லாத ஒரு துறையில், புகழ், பணம் என்பதெல்லாம் போய், ’பிழைப்பு’ என்ற குறைந்தபட்ச காரணத்துக்காக அல்லாடுகிற பெண்களை ஏகடியம் செய்வதில் நமக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி கிடைக்கிறது.

துறவிகள், அவர்களின் பட்டத்துக்குப் பொருத்தமாக உலகவாழ்க்கையின் சவுகரியங்கள் அனைத்தையும் துறந்திருக்க வேண்டும். தரிசனத்துக்குக் கட்டணம், பட்டுப்பீதாம்பரம், தேர்வடம் போன்ற தங்கச்சங்கிலி, வெளிநாட்டுக்கார்கள், சொகுசு பங்களாக்கள், வெளிநாட்டு வங்கிகளில் அளவற்ற அந்நியச்செலாவணி என்று போனவர்களை துறவிகள் என்று நம்புகிற மூர்க்கத்தனமான பக்தி இன்னும் பரவலாய் இருக்கிறது. இவர்களில் சிலர் பணம்பறிப்பதோடு, அத்துமீறி நடக்கிற செய்திகளும் புதிதல்ல. இருந்தாலும் சீட்டுக்கம்பனிகள் எவ்வளவு ஏமாற்றினாலும், திரும்பத் திரும்ப புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுகிறவர்களைப் போலவே, புதிதாய்க் கிளம்புகிற சாமியார்களிடம் ஏமாறுகிற கூட்டமும் இன்னும் இருக்கிறது. அவர்களது பலவீனத்தை, தங்களது சாதுரியத்தாலோ அல்லது பலாத்காரமாகவோ பயன்படுத்துகிற ஆன்மீகவாதிகளுக்கு நித்தியைப் போன்ற ஒரு உதாரணம் இருக்க முடியாது.

ஒருவனின் படுக்கையறைக்குள் திருட்டுத்தனமாய் கேமிராவை வைத்து, அவனது அந்தரங்கத்தைப் படம் பிடிக்கிறவனின் மனதில் எவ்வளவு அழுக்கு இருக்க வேண்டும் என்று யோசித்தால் குமட்டுகிறது. ஆனால், அத்தகைய செயலைச் செய்தவர் மாவீரனாக சித்தரிக்கப்பட்டு, துணிச்சலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய சாகசத்தை நிகழ்த்தியவர் போலப் பெருமிதம் கொள்கிறார்.

குழந்தைகளும் பெண்களும் இருக்கிற குடும்பங்களின், குறைந்தபட்சப் பொழுதுபோக்கான தொலைக்காட்சியில், எங்கோ யாரோ யாருடனோ சல்லாபம் செய்த காட்சிகள் சற்றும் திருத்தப்படாமல், சங்கோஜம் சிறிதுமின்றி சர்வசாதாரணமாகத் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகின்றன. அதை இன்னொரு பத்திரிகை வர்ணனையோடு எழுதிப் பூரிப்படைகிறது.

சமீபத்தில் நிகழ்ந்த இரு பெரிய ரயில் விபத்துக்களில் பலியானோரின் சடலங்களை ஊடகங்கள் காட்டியபோது, திரையில் சில பகுதிகளை மொஸைக் மூலம் மறைத்துக்காட்டினார்களே ஏன்? பார்க்கிறவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகத்தானே? பத்திரிகைகளிலும் சில புகைப்படங்களை முழுமையாகப் போடாமல் இருக்கிறார்களே? ஆனால், நித்தி-ரஞ்சிதா வீடியோவை தொலைக்காட்சியில் காட்டியபோதும், பத்திரிகையில் புகைப்படங்களாய்ப் போட்டபோதும் இந்த கண்ணியம், பொறுப்புணர்ச்சி எல்லாம் எங்கு போயின? அவை கடைபிடிக்கப் படாமல் போனதற்கு, எப்படியாவது பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்ற அற்ப அரிப்பைத் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியும், பத்திரிகையும் அவரவர் எல்லைகளை மீறியிருக்கின்றனர் என்பது அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்டதைக் காட்டிலும் அருவருப்பான உண்மை. இப்படியெல்லாம் வெளிச்சம்போட்டுக் காட்டினாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற மிதப்பு அவர்களுக்கு வந்திருப்பது, பொதுமக்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கிற மட்டமான கருத்தின் அறிகுறியல்லவா? அதை நிரூபிப்பதுபோலவே, ஒரு சிலர், குறிப்பாக ரஞ்சிதாவை மட்டும் வரம்புமீறி படுவிரசமாய் விமர்சித்து எழுதியதும், எழுதிக்கொண்டிருப்பதும் நாம் நமது வரம்பை மீறியிருக்கிறோம் என்பதன் அறிகுறி இல்லையா?

துறவி அல்லது குரு என்பவனுக்கென்று சில கடுமையான வரைமுறைகள் இருக்கின்றன. ஊடகங்களுக்கென்று எழுதப்பட்ட ஒரு நெறிமுறை இருக்கிறது. நியாயப்படி பார்த்தால், இவர்கள்தான் மிகப்பெரிய விதிமீறல்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், திரைப்பட நடிகைக்கு என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா? இறுக்கமான விதிமுறைகளுக்கு உட்பட்டு கடமையாற்ற வேண்டியவர்களே அதை மீறுகிறபோது, தொழில்முறையாக எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு நடிகையை மட்டும் ரவுண்டு கட்டி அடிப்பது ஏன்?

திருமணமான பெண் கணவனுக்குத் துரோகம் இழைத்தால், அவளுக்கு என்ன தண்டனை என்று கருடபுராணத்தில் சொல்லியிருக்கிறது. (பழுக்கக்காய்ச்சிய இரும்பு பொம்மைகளைத் தழுவ வேண்டுமாம்; பெயர் ஞாபகமில்லை!) ஆக, இது யுக யுகமாக நடந்து வருகிறது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? கருடபுராணத்தை விடுவோம். கணவனுக்கு மனைவி துரோகம் செய்தால், அவளுக்கு சட்டப்படி அளிக்கப்படுகிற தண்டனை, விவாகரத்து ஒன்றுதான்! அந்த தண்டனையை அளிக்க வேண்டியது அவளது கணவனும் நீதிமன்றமும்.

பொது இடங்களில் கைபேசி கேமிரா மூலம் அனுமதியின்றி பெண்களைப் படமெடுப்பது சட்டப்படி குற்றம். Sting Operation என்ற பெயரில் தனிமனிதர்களின் உரிமைகளில் தலையிடுவதை உச்சநீதிமன்றமே வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஆனால், சன் டிவிக்கோ, நக்கீரனுக்கோ யார் தண்டனை கொடுப்பது? அவர்கள் செய்தது தவறு இல்லையென்றால், இனி கேமிராக்கள் எவர் வீட்டுப் படுக்கையறைக்குள்ளும் ரகசியமாய் வருவதற்கான அபாயம் காத்திருக்கிறது.

அவர்கள் எந்த உறுத்தலும் இன்றி உலவுகிற ஒவ்வொரு கணமும், அதன் விளைவாய் தனிமனித ஒழுக்கம் குறித்து அறிவுரை சொல்கிற சாக்கில் கண்ணியமேயில்லாமல் எழுதுகிறவர்கள் இருக்கிற வரையிலும், நான் தைரியமாகச் சொல்வேன்.

ரஞ்சிதா எந்தத் தவறும் செய்யவில்லை!


டிஸ்கி.1: இன்னும் சொல்வதற்கு மிச்சமிருக்கிறது. முடிந்தால் இன்னொரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்.

டிஸ்கி.2: ஒருபோதிலும் நான் எவரது இடுகைக்கும் எதிர் இடுகை எழுதுகிறவன் இல்லை. எனவே, இது யாருடைய எசப்பாட்டுக்கும் எதிரான எதிர்ப்பாட்டு அல்ல.

டிஸ்கி.3: எனது சகபதிவர்களின் கருத்தோடு பல சமயங்களில் ஒத்துப்போகாத போதிலும், அவர்களது உரிமையை நான் மதிக்கிறேன். இது எனது உரிமை என்பதை அவர்களும் மதிப்பார்கள் என நம்புகிறேன்.

66 comments:

Unknown said...

//சிலருக்கு "வடை போச்சே" என்ற ஆதங்கம் கூட எரிச்சலை உண்டாக்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்படாமல் இல்லை!//
அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?
கலாச்சாரக் காவலர் ஆவதற்குரிய ஆரம்பகட்ட எண்ணக்கருவே அதுதானென்று அறிஞர்கள் சொல்கிறார்கள்! 'என்னால் செய்ய முடியாததை..அல்லது சான்ஸ் கிடைக்காததால்...!

rajamelaiyur said...

//
டிஸ்கி.1: இன்னும் சொல்வதற்கு மிச்சமிருக்கிறது. முடிந்தால் இன்னொரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்.
//

இன்னும் ஒண்ணா ... நாடு தாங்காது

rajamelaiyur said...

நல்ல பதிவு நண்பா

rajamelaiyur said...

இன்று இன் வலையில்

உறவு வலுப்பட என்ன செய்யலாம்

பெசொவி said...

உங்கள் கோணம் சில "கலாச்சாரக் காவலர்களுக்கு" வேண்டுமானால் கோபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் உங்க கருத்து நியாயமானது!

vasu balaji said...

good and fair one chettai

Unknown said...

ரஞ்சிதா பத்தி பேசுறதுனால அவங்களுக்கு ஒண்ணும் நட்டமில்ல, நமக்கு எதுவும் பிரயோஜனம் இல்லை.

அவங்கவங்களுக்கு அவங்கவங்க செய்யுறது சரி,

சும்மா எந்த விசயத்தையும் மேம்போக்கா தெரிஞ்சுக்கிட்டு பேசுறது தப்பு.

சரியா சொல்லி இருக்கீங்க சேட்டை..

நிகழ்காலத்தில்... said...

ரஞ்சிதா தரப்பு நியாயங்கள் ஏற்புடையதே.,

நடிகை என்ற பிரபலமும், இவனுக்கு இவளக்கேட்குதா என்ற பொறாமையும் பெரும்பான்மையோர் குரலில் பிரதிபலித்ததை மறுப்பதற்கு இல்லை.,

நிரூபன் said...

வணக்கம் சகோதரம்,
முதலில் வாழ்த்துக்களைப் பிடித்து, இதய அறையில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம்; முதன் முதலாக உங்களிடமிருந்து நான் படித்த நகைச்சுவை இடுகைகளை விடவும், வித்தியாசமான ஒரு முறையில் சமூகத்தின் மீதான கரிசனையினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.
நான் கூட நித்தி விஷயத்தை வைத்து ஒரு கிண்டல் பதிவு போட்டிருந்தேன், நான் சாமியாராகப் போகின்றேன் என்று.

ஆனால் அப்பொழுது நான் ஏன் இப்படி எழுதினேன் என்பதனை உணரும் பக்குவம் எனக்கு கிடைக்கவில்லையோ தெரியவில்லை. உங்களின் இந்த இடுகையினைப் படித்த பின்னர் உணர்ந்து கொண்டேன். பிரபலங்களை வைத்து, நாமும் ஒரு வகையில் தவறு செய்திருக்கிறோம் என்று.

முதலில் மன்னிக்கவும்.

இன்று சமூகத்தில் உள்ள, வியாபார நோக்கம் கொண்ட ஊடகங்கள் எப்படிப் பிர்பலங்களை வைத்துப் பணம் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை,
காத்திரமான முறையில் பகிர்ந்திருக்கிறீங்க.

எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் வண்ணம் உங்களின் இப் பதிவு அமைந்திருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த பாகத்தையும் வெகு விரைவில் எழுதுங்கள்.

அதியமான் said...

அருமையான தேவையான பார்வையில் உங்கள் பதிவு இருந்தது.
ரஞ்சிதவிடமும் நித்தியிடமும் ஒரே ஒரு நெருடல் தான், மாட்டிகொண்டபின்பு
ஏன் இவர்கள் படம் எடுத்தவன் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கிறர்கள்?
நித்தியிடம் நான் புரிந்துகொண்டது: 1. தனக்கு சாதகமாக மதங்களை துணைக்கு அழைப்பது.
2. தப்பித்துகொள்ள என்னவெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக செய்யாமுடியுமோ செய்வது.
3. தான் பேசுவதில் இருந்தே தான் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை மக்களுக்கு உணர்த்துவது.

Unknown said...

மிகவும் சிந்தனைக்குரிய பதிவு!
பாராட்டுக்கள்
உங்களின் இந்த பதிவின் கருத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அருமையான அலசல் கட்டுரை. பல விஷயங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.
பாராட்டுக்கள். தொடருங்கள்.

Anonymous said...

நிறைய கருத்துக்களை விரவி எழுதியிருக்கிறீர்கள்.

தலைப்பை மட்டுமே பார்த்த்ச் சொன்னால் :

ரஞ்சிதா பல பரிமாணங்கள்: அவற்றுள் சில:

நடிகை
திருமாணபெண்
ஒரு குருவின் சிஸ்யை.

இப்பொது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நடிகை என்பவள் ஒரு பரவலாக அறியப்படுபவள் மட்டுமல்ல. அவள் பார்க்கும் இளம் உள்ளங்களில் நிற்பவள். நித்தி கூட ரஞ்சிதாவை பள்ளியில் படிக்கும்போது கனவுக்கன்னியாக எப்போதும் அவரைப்பற்றிப்பேசுவாராம். நானோ நீங்களோ ஒரு செயலைச் செய்யும்போது அதைப் பிஞ்சு உள்ளங்கள் உள்வாங்காது. நாம் அவர்கள் மனத்தில் நிற்பதில்லை. ஆனால் பரவலாக ஊடங்கங்களின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் நுழையும் இவர்களின் நடத்தை நன்னடைத்தையாகவோ, தீ நடத்தையாக இருப்பின் அது பிஞ்சு உள்ளங்களைப் பாதிக்கும். எனவேதான், இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் வேறுவிதமான நடத்தையை எதிர்பார்க்கிறோம் மற்றவர்களைக் காட்டிலும். சா ரூக் கான் திரைப்படத்தில் புகைபிடித்தலை அன்புமணி தட்டிக்கேட்டார். சத்ருகன் சின்கா குடி விளம்பரத்தில் நடித்த படங்களை டெல்லியில் ஒட்டியதால் அவர் ராஜேஸ்கண்ணாவிடம் எம்.பி தேர்தலில் தோற்றுப்போனார். டோனி குடி விளம்பர்த்தில் நடித்ததை எதிர்த்தார்கள். இப்படி பொது வாழ்க்கையில் உள்ளோர் குறைந்தது பொதுவாழ்க்கையிலாவது, அதாவது பிறருக்கு வெளிச்சமாக அறியப்படும்போது, ஒழுக்கமாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமான பெண் - ரஞ்சிதாவுக்கு ஏற்கனவே ஒரு இராணவ அதிகாரியிடம் பெற்றோரால் பார்த்து திருமணம் செய்யப்பட்டு ஜம்முவின் ஓராண்டு மணவாழ்க்கை அவருக்கு. கணவருடன் விவாகரத்து வாங்காமல் ஒரு சாமியாருடன் படுக்கை வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.

சிஸ்யை - ஒரு சாமியாரிடன் ஒரு சிஸ்யை என்ன செய்யக்கூடாதோ அதை இவர் செய்தார்.
மற்றவர்கள் என்ன சொன்னார்கள்? என்று நீங்கள் பார்க்காமல், இவர் செய்தது சரியா என்று மட்டும் பார்த்தால், தவறு என்றுதானே சொல்லமுடியும்?

Don’t mix many points like whether SunTV can videograph this w/o their knowledge. One point one time please. Accordingly, Ranjitha has transgressed many morals. We can’t argue that she shd be treated like us. Not at all. She is a public personality and as such, to be treated differently. People in public life shd behave properly, at least when they are in lime light. They can do anything behind scenes. No one bothers.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நியாயமானதா இருக்கே

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு அலசல் சேட்டை.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நிலைபாடு. உங்கள் நிலைப்பாட்டை மதிக்கிறேன்.

தமிழகத்தில் நடப்பதைவிட வட இந்தியாவில் சேனல்களில் தொல்லை இன்னும் அதிகம். அது போலவே மேற்கத்திய நாடுகளிலும்.டயானா மரணம் ஒரு உதாரணம்.

இங்கு தவறு செய்கிறவர்களை விட மாட்டிக்கொள்பவர்தான் குற்றவாளி.

ராஜ நடராஜன் said...

சிம்மக்கல்!இந்த முறை தடுமாறாமல் தர்க்கம் செய்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

DR.K.S.BALASUBRAMANIAN said...

//திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வதில் தப்பில்லை; ஆனால், கவனமாய் இருங்கள்,’ என்று ஒரு நடிகை சொன்னால் தப்பு. அதையே எத்தனையோ தொலைக்காட்சிகளில் மருத்துவ நிகழ்ச்சிகளில் படித்துப் பட்டம்பெற்ற மருத்துவர்கள், சற்றே இங்கிலீஷும், நிறைய இங்கிதமும் கலந்து சொன்னால் நாம் கண்டு கொள்ள மாட்டோம்.//

முற்றிலும் உண்மை.
அருமையான பதிவு

அஞ்சா சிங்கம் said...

என் நீண்ட நாள் சிந்தனையை எழுத்தில் வடித்ததற்க்கு நன்றி .........

RS said...

//...They can do anything behind scenes. No one bothers.//

சிம்மக்கல்,

உங்கள் பதிலிலேயே பதிவின் தலைப்பை ஆதரித்திருப்பது தெரிஞ்சே செய்ததா?

இங்கு கூட அவர்கள் செய்தது பொதுவில் அல்ல. ஒருவன் சுயநலத்திற்க்காக எட்டி பார்த்ததால் தான் இந்த சச்சரவே.

சுயநலத்திற்க்கும் சமூக சேவைக்கும் உள்ள வித்தியாசம், இதை வைத்து ஊடக வியாபாரம் செய்ததில் இருந்தே தெரிகிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்துக் கொள்வதில் தப்பில்லை; ஆனால், கவனமாய் இருங்கள்,’ என்று ஒரு நடிகை சொன்னால் தப்பு. அதையே எத்தனையோ தொலைக்காட்சிகளில் மருத்துவ நிகழ்ச்சிகளில் படித்துப் பட்டம்பெற்ற மருத்துவர்கள், சற்றே இங்கிலீஷும், நிறைய இங்கிதமும் கலந்து சொன்னால் நாம் கண்டு கொள்ள மாட்டோம்.//

சரிதான்.

ஆயினும் சொல்வது ஆர்? சொன்ன விதம் எப்படி என்பவைகளை வைத்தே அவரின் சொற்கள் கணித்துப் பேசப்படும்.

குஷ்பு, ஒருவனிடம் ஆறுமாதம் திருமணம் செய்யாமல் வாழ்ந்து அவ்வீட்டாரரால் வெளியில் விரட்டி விடப்பட்டவர். (பிரபுவிடம். சிவாஜியால்) இவரின் களவொழுக்கம் தாராளாமானது. இப்படிப்பட்டவர் தமிழக மக்களுக்கு களவொழுக்கத்தில் அறிவுரை சொல்கிறார்.

எனவே ஈண்டு சொன்னது ஆர்? சொன்ன விதம் எப்படி என்பவை கணித்துப் பின்னரே விமர்சனம் செய்யப்படுகின்றன.

"எத்தனையோ தொலைக்காட்சிகளில்....மாட்டோம்"

இங்கே அப்படிப் பேசுபவர்கள் ஆர்?மருத்துவர்கள், ஆகவே அவர்கள் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக இரு கல்லூரி மாணவர்கள் பெண்களில் உடலைப்பற்றிப்பேசுகிறார்கள். அதையே ஒரு மருத்துவர் பேசுகிறார். அம்மாணவர்களின் நோக்கம் காம இச்சையை எழுப்பி சுகம் காண்பது. இவரின் நோக்கம் நான் சொல்ல்வேண்டியதில்லை.

இதே குஷ்பு, அந்த மருத்துவர்களிடையே ஒரு உரையாடல் தொலைக்காட்சியில் நடக்கும் போது கலந்து கொள்ள அழைக்கப்படும்போது ஆங்கே இவர் இப்படிச்சொல்லியிருந்தால் அது வரவேற்று ஏற்றுக்கொள்ளப்படும். அவர் களவொழுக்கம் கூட ஆங்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது.

ஆக, இடம், காலம், விதம், சொல்பவர் ஆர் என்பதை மறைத்து அச்சொற்களுக்கு நாகரிகம்.

settaikkaran said...

//ஜீ... said...

கலாச்சாரக் காவலர் ஆவதற்குரிய ஆரம்பகட்ட எண்ணக்கருவே அதுதானென்று அறிஞர்கள் சொல்கிறார்கள்! 'என்னால் செய்ய முடியாததை..அல்லது சான்ஸ் கிடைக்காததால்...!//

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்கிற கதைதான்! நான் சொல்லவந்ததை இன்னும் எளிமையாகச் சொல்லியதற்கு மிக்க நன்றி நண்பரே!

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்னும் ஒண்ணா ... நாடு தாங்காது//

பயப்படாதீங்க! அவசரப்பட்டு நாட்டுக்குக் கெடுதல் பண்ணிட மாட்டேன். :-)

//நல்ல பதிவு நண்பா//

மிக்க நன்றி நண்பரே! :-)

//இன்று இன் வலையில் - உறவு வலுப்பட என்ன செய்யலாம்//

பார்த்தேன்; ரசித்தேன்; கருத்தும் எழுதிவிட்டேன். :-)

//பெசொவி said...

உங்கள் கோணம் சில "கலாச்சாரக் காவலர்களுக்கு" வேண்டுமானால் கோபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் உங்க கருத்து நியாயமானது!//

மிக்க நன்றி நண்பரே! இது யாருக்கும் கோபத்தை ஏற்படுத்துவதற்காக எழுதியதல்ல! இவ்விஷயத்தில் எனது சில மனத்தாங்கல்களை சொல்லியிருக்கிறேன். மற்றவை வாசிப்பவர்களின் கையில்...! மீண்டும் நன்றி!

//வானம்பாடிகள் said...

good and fair one chettai//

கொஞ்ச நாட்களாக உங்களைக் காணாமல் இருந்த எனக்கு இந்த ஒற்றை வரிப் பாராட்டு தந்த சந்தோஷத்தை எப்படிச்சொல்வேன் ஐயா? மிக்க நன்றி!

Jayadev Das said...

\\தொடர்ந்து ரஞ்சிதாவைக் குறித்துப் பலர் எழுதுவதை வாசிக்கும்போது ஒன்று நன்றாகப் புரிகிறது. நாம் பிரபலங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்; அவர்கள் பிறழும்போது நமக்கு அதிக ஏமாற்றம் ஏற்படுகிறது.\\ அவர்கள் பிறழும்போது என்பதை, அவர்கள் பிறழ்வது நமக்குத் தெரிய வரும்போது .......... என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும். இன்னொன்று, நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை நாற்றம் பிடித்தது, இது எல்லோருக்கும் தெரிந்ததே, இவர்களிடம் யாரும் இந்த விஷயத்தில் "அதிகம்" எதிர் பார்க்கவே முடியாது.

Jayadev Das said...

\\ஒருவனின் படுக்கையறைக்குள் திருட்டுத்தனமாய் கேமிராவை வைத்து, அவனது அந்தரங்கத்தைப் படம் பிடிக்கிறவனின் மனதில் எவ்வளவு அழுக்கு இருக்க வேண்டும் என்று யோசித்தால் குமட்டுகிறது.\\ சென்னை பாதாள சாக்கடைக்குள் மூழ்கி வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள், அதை நினைத்தால் கூடத்தான் உமக்கு குமட்டும், ஆனபோதிலும், அவர்கள் இல்லாவிட்டால் உம்மைப் போன்ற வெள்ளை காலர் வேலை செய்பவர்கள் வசதியாக வாழ முடியுமா? ஆம், அடுத்தவன் படுக்கையறைக்குள் கேமரா வைப்பது கேவலமான செயல்தான், அதை தனியொரு மனிதனுடைய அறையில் [அது கள்ளத் தொடர்போ, நல்லத் தொடர்போ] அது தவறுதான், ஆனால் இங்கே வைத்தது யார் அறையில்? ஒழுக்கத்தை போதிப்பதாகக் கூறி ஆயிரம் கோடிகளில் மக்கள் சொத்தை பிடுன்கியவனிடம். தற்போதே இவனுக்கு சிலைகள் தயாராகி விட்டன, இவன் செத்தால் கடவுள் என்று கோவில் கட்டி விடுவார்கள். சிலை வடிக்க இவன் என்ன ராமன், கிருஷ்ணன் அவதாரமா? இவன் என்ன பார்த்தனுக்கு கீதையை அருளியவனா? தன்னுடைய இந்திரியங்களைக் கூட காட்டுப் படுத்தத் தெரியாத மிருகம், என்ன தகுதி இருக்கிறது இவனை ஆன்மீக குரு என்றும், அவதாரம் என்றும் சொல்லவும், செத்த பின் கோவிலில் வைத்து கும்பிடவும்? ஆக, அவனது படுக்கையறையில் கேமரா வைத்தான் ஒருத்தன், சட்டத்தின் கண்ணில் இது தவறுதான், ஆனாலும் லட்சக் கணக்கான மக்களின் அறியாமையைப் போக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்ததால் இது சரியான நடவடிக்கை தான். தப்பேயில்லை.

கும்மாச்சி said...

பாஸ் வித்தியாசமான சிந்தனை, அதே சமயத்தில் ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து.

settaikkaran said...

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ரஞ்சிதா பத்தி பேசுறதுனால அவங்களுக்கு ஒண்ணும் நட்டமில்ல, நமக்கு எதுவும் பிரயோஜனம் இல்லை.//

இவ்விசயத்தில் பலரது இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதை நாம் அறிய முடிகிறதல்லவா? :-)

//அவங்கவங்களுக்கு அவங்கவங்க செய்யுறது சரி,//

ம், பிறருக்கு தொந்தரவோ, சட்டவிரோதமோ இல்லாதவரையில்....!

//சும்மா எந்த விசயத்தையும் மேம்போக்கா தெரிஞ்சுக்கிட்டு பேசுறது தப்பு. சரியா சொல்லி இருக்கீங்க சேட்டை..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

//நிகழ்காலத்தில்... said...

ரஞ்சிதா தரப்பு நியாயங்கள் ஏற்புடையதே., நடிகை என்ற பிரபலமும், இவனுக்கு இவளக்கேட்குதா என்ற பொறாமையும் பெரும்பான்மையோர் குரலில் பிரதிபலித்ததை மறுப்பதற்கு இல்லை.,//

மிகச்சரி, இதைத்தான் நானும் கவனித்தேன். என்னை எழுதத்தூண்டியதும் இந்த அணுகுமுறைதான்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//நிரூபன் said...

வணக்கம் சகோதரம், முதலில் வாழ்த்துக்களைப் பிடித்து, இதய அறையில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம்; முதன் முதலாக உங்களிடமிருந்து நான் படித்த நகைச்சுவை இடுகைகளை விடவும், வித்தியாசமான ஒரு முறையில் சமூகத்தின் மீதான கரிசனையினை வெளிப்படுத்தியிருக்கிறீங்க.//

உங்களது வருகையும் தொடர்ந்த உற்சாகமும் எப்போதும் என் இதய அறையில் முன்னாலேயே முகமல்ர்ச்சியுடன் இருக்கிறது சகோதரம்! இது எனது ஆதங்கம்! தனிமனித ஆதங்கம்; ஆம், என்னையும் மீறிய, என்னைச் சுற்றியிருப்பவர்களின் ஆதங்கம் என்றும் சொல்லலாம்.

//நான் கூட நித்தி விஷயத்தை வைத்து ஒரு கிண்டல் பதிவு போட்டிருந்தேன், நான் சாமியாராகப் போகின்றேன் என்று.//

நித்தி மட்டுமல்ல; ஆன்மீகத்தைக் கூறுபோட்டு விற்பனை செய்கிற அனைவரையும் நானும் அவ்வப்போது கிண்டல் செய்துதான் வருகிறேன்.

//ஆனால் அப்பொழுது நான் ஏன் இப்படி எழுதினேன் என்பதனை உணரும் பக்குவம் எனக்கு கிடைக்கவில்லையோ தெரியவில்லை. உங்களின் இந்த இடுகையினைப் படித்த பின்னர் உணர்ந்து கொண்டேன். பிரபலங்களை வைத்து, நாமும் ஒரு வகையில் தவறு செய்திருக்கிறோம் என்று.முதலில் மன்னிக்கவும்.//

சகோதரம், எனது வருத்தம் பதிவுகளைப் பற்றியது மட்டுமல்ல! மிக சக்தி வாய்ந்த வெகுஜன ஊடகங்களில் ஒரு சிலர் நாம் எதைப்பார்க்க வேண்டும், வாசிக்க வேண்டும் என்பதோடு நிறுத்தாமல் எதை நம்ப வேண்டும் என்று நம் தொண்டைக்குள் திணிக்க முற்படுகிற முரட்டுத்தனத்தைத் தான் விமர்சனம் செய்ய விரும்பினேன். நீங்கள் வருந்தத்தேவையில்லை.

//இன்று சமூகத்தில் உள்ள, வியாபார நோக்கம் கொண்ட ஊடகங்கள் எப்படிப் பிர்பலங்களை வைத்துப் பணம் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை,
காத்திரமான முறையில் பகிர்ந்திருக்கிறீங்க.//

அதே! எனது நோக்கம் அதுவே! மிகச்சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். அதுவே மகிழ்ச்சியளிக்கிறது.

//எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளும் வண்ணம் உங்களின் இப் பதிவு அமைந்திருக்கின்றது.//

நாம் நம்முடனே முரண்படாமல் ஒரே கருத்துடன் இருந்தால், நமக்குள் பெரிய மாறுதல்கள் வருவதில்லை என்று கருதுகிறேன். உங்கள் நிலையிலேயே நானும்.....!

//இதன் தொடர்ச்சியாக, அடுத்த பாகத்தையும் வெகு விரைவில் எழுதுங்கள்.//

பார்க்கலாம் சகோதரம்! அடுத்து அனேகமாக மொக்கையாக இருக்கலாம். :-)
உங்களுக்கு நன்றி சொல்வது எப்படி? உங்களது பின்னூட்டமே எனது இடுகையை நியாயப்படுத்தியிருக்கிறது என்ற ஆறுதலுடன், பற்பல நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

//அதியமான் said...

அருமையான தேவையான பார்வையில் உங்கள் பதிவு இருந்தது.//

முதலில் எனது வலைப்பதிவுக்கு முதன்முறையாக வந்த உங்களுக்கு எனது வந்தனங்கள். உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் வருகை பெருமிதமளிக்கிறது.

//ரஞ்சிதவிடமும் நித்தியிடமும் ஒரே ஒரு நெருடல் தான், மாட்டிகொண்டபின்பு ஏன் இவர்கள் படம் எடுத்தவன் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கிறர்கள்?//

இந்த இடுகையின் தொடர்ச்சியில் அதைப் பற்றி எழுதலாமென்று இருந்தேன். அந்த நெருடல் நகைப்புக்குரியதானது என்றால் மிகையாகாது.

//நித்தியிடம் நான் புரிந்துகொண்டது: 1. தனக்கு சாதகமாக மதங்களை துணைக்கு அழைப்பது. 2. தப்பித்துகொள்ள என்னவெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக செய்யாமுடியுமோ செய்வது. 3. தான் பேசுவதில் இருந்தே தான் ஒரு ஏமாற்று பேர்வழி என்பதை மக்களுக்கு உணர்த்துவது.//

முற்றிலும் உண்மை. ஊடகங்களால் பெரிதாக வளர்ந்த ஒரு நபர், அதே ஊடகங்களால் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்டதை, தாள முடியாத தவிப்பை அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

மீண்டும் நன்றிகள்! :-)

settaikkaran said...

//Karikal@ன் - கரிகாலன் said...

மிகவும் சிந்தனைக்குரிய பதிவு! பாராட்டுக்கள் உங்களின் இந்த பதிவின் கருத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்//

வருகைக்கும் தாராளமான பாராட்டுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

//வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அருமையான அலசல் கட்டுரை. பல விஷயங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. பாராட்டுக்கள். தொடருங்கள்.//

ஐயா, நடுநிலையிலிருந்து யோசித்து வினா எழுப்புகிறவர்களுடனான தொடர்பும், அதன் விளைவாய் ஏற்பட்ட ஆதங்கத்தின் விளைவே இந்த இடுகை! மிக்க நன்றி ஐயா!

KARMA said...

சிம்மக்கல் கருத்துக்களுடன் பெரிதும் உடன்படுகிறேன்.

ரஞ்சிதா, படம் எடுத்தவர் மற்றும் அதை ஒளிபரப்பிய ஊடகத்தினர் அனைவர் மீதும் தவறுள்ளதாகவே படுகிறது. எனவே ரஞ்திதா தவறு செய்தாரா ? என்றால் "ஆஆம்"

இது மட்டுமல்ல .....இந்த படுக்கையறை-முழு நீ(ல)ள வீடியோ எங்கு கிடைக்கும் என இரவு முழுதும் google-ல் தேடிய எங்களையெல்லாம் (சேட்டைக்காரன்/ சிம்மக்கல் உட்பட ?) எந்த ரகத்தில் சேர்க்க ?

Jayadev Das said...

\\குழந்தைகளும் பெண்களும் இருக்கிற குடும்பங்களின், குறைந்தபட்சப் பொழுதுபோக்கான தொலைக்காட்சியில், எங்கோ யாரோ யாருடனோ சல்லாபம் செய்த காட்சிகள் சற்றும் திருத்தப்படாமல், சங்கோஜம் சிறிதுமின்றி சர்வசாதாரணமாகத் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகின்றன.\\ இந்த விஷயத்தை வியாபாரமாகினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இதை விட கேவலமான அருவருக்கத் தக்க காட்சிகள் தமிழ் திரைப் படங்களில் வருகின்றன, அதை ஆண், பெண், கிழவன், குமரன் என்று எல்லோரும் உட்கார்ந்து கொண்டு பார்கிறார்கள், அதை விட இது ஒன்றும் மோசமாக இல்லை.

Jayadev Das said...

\\இப்படியெல்லாம் வெளிச்சம்போட்டுக் காட்டினாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற மிதப்பு அவர்களுக்கு வந்திருப்பது, பொதுமக்களைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கிற மட்டமான கருத்தின் அறிகுறியல்லவா? \\ நான் சாமியார், கடவுளுக்கு நிகரானவன், [அட, கடவுளே நான்தான்...], செக்ஸ் மகா பாவம் என்று போதித்து விட்டு, இன்னொருத்தன் மனைவியுடன் காவி உடையிலேயே கட்டிப் பிடித்து விட்டு [அப்புறம் இன்னும் என்னெல்லாம் பண்ணினானோ யாருக்குத் தெரியும்] அது ஊர் உலகத்துக்கு அப்பட்டமாக தெரிந்த பின்னும் வெளியே வந்து, அந்தப் படத்திலிருப்பது நாங்களே இல்லை என்று ஒருத்தன் சொல்கிறானே, அவன் பொதுமக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது
உங்களுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லையா?

Jayadev Das said...

\\துறவி அல்லது குரு என்பவனுக்கென்று சில கடுமையான வரைமுறைகள் இருக்கின்றன. \\ இது உங்க கற்பனை. அப்படி எந்த கடுமையான வரைமுறைகளையும் சட்டம் அவர்களுக்கு வைக்க வில்லை. உங்களுக்கும் எனக்கும் எந்த இந்தியச் சட்டம் பொருந்துமோ, அதேதான் நித்திக்கும் பொருந்தும். சாமியார்கள் சட்டம் என்று தனியாக ஒன்றுமில்லை.இப்போதும், "அட ஆமாயா.. நாங்க ரெண்டு பெரும் சந்தோஷமாத்தான் இருந்தோம், அதனால என்ன தப்பு, எங்க அந்தரங்கத்துல நுழைய இவனுங்க யாரு"-ன்னு சொல்லிட்டா போதும், படம் எடுத்தவன், அதைப் போட்டவன் எல்லாம் உள்ளே போக வேண்டியதுதான். சாமியார்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பது [யார் ஆரம்பிச்சதோ] வழி வழியாக கதைகள் மூலம் நாமாக நினைத்துக் கொண்டிருப்பது. அவங்களுக்கு ஆசை இருக்காது [மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை], பற்றற்றவகளாக இருப்பார்கள், ஒழுக்கமாக இருப்பார்கள், எல்லாத்துக்கும் மேல தங்களின் போதனைகள் படிதான் நடப்பார்கள் என்று மக்களாக கற்பனை செய்து கொண்டு விட்டார்கள். இந்த ஊகத்தின் அடிப்படையில்தான் சாமியாரிடம் கொண்டு போய் பணத்தை கொட்டுகிறார்கள், [ஆசையே இல்லாதவனுக்கு பணம் எதுக்குன்னு இன்னும் விலங்கல]. ஆனா, நித்தி விஷயத்தில் இத்தனை எதிர்பார்ப்புகளையும் மோசம் செய்திருக்கிறான். ஆனாலும், "நான் சட்டப் படி எந்த தவறும் செய்யவில்லை" என்று அவனது வீடியோ வந்த நாளிலிருந்தே திரும்பத் திரும்ப கூறிக்
கொண்டிருக்கிறான், ஆஹா, எப்பேர்பட்ட உண்மை அது!! நிஜமாவே அவன் எந்த சட்டத்தையும் மீற வில்லையே!!

Jayadev Das said...

\\கணவனுக்கு மனைவி துரோகம் செய்தால், அவளுக்கு சட்டப்படி அளிக்கப்படுகிற தண்டனை, விவாகரத்து ஒன்றுதான்! அந்த தண்டனையை அளிக்க வேண்டியது அவளது கணவனும் நீதிமன்றமும்.\\ குற்றம் செய்தவனுக்கு உடந்தையாக இருப்பதுவும் குற்றம்தான். காவியின் மீதும், சாமியார்கள் மீதும் மக்களுக்கிருந்த நம்பிக்கையை பயன்படுத்திக் கொண்டு பொருள் சேர்த்தான் ஒருத்தன், அவனை மக்களுக்கு அடையாளம் காட்டாமல், பணத்துக்காக [அல்லது வேறு எதுக்காகவோ] அவனுக்கு உடல் சுகத்தை கொடுத்து அவனுடன் சேர்ந்து மக்களை ஏமாற்ற நினைத்தும் இவள் செய்த குற்றமே.

Jayadev Das said...

\\பொது இடங்களில் கைபேசி கேமிரா மூலம் அனுமதியின்றி பெண்களைப் படமெடுப்பது சட்டப்படி குற்றம். Sting Operation என்ற பெயரில் தனிமனிதர்களின் உரிமைகளில் தலையிடுவதை உச்சநீதிமன்றமே வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஆனால், சன் டிவிக்கோ, நக்கீரனுக்கோ யார் தண்டனை கொடுப்பது? அவர்கள் செய்தது தவறு இல்லையென்றால், இனி கேமிராக்கள் எவர் வீட்டுப் படுக்கையறைக்குள்ளும் ரகசியமாய் வருவதற்கான அபாயம் காத்திருக்கிறது.\\ எந்த தனி மனிதனின் படுக்கையறைக்குள் கேமரா வைப்பது என்பது தவறுதான், ஆனால் மக்களின் நம்பிக்கையை மோசடி செய்தவனை உலகுக்கு தோலுரித்துக் கட்ட கேமரா வைத்தது தப்பேயில்லை.

Jayadev Das said...

\\டிஸ்கி.1: இன்னும் சொல்வதற்கு மிச்சமிருக்கிறது. முடிந்தால் இன்னொரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்.\\ எழுங்க ஆனா, இந்த மாதிரி ஊரை ஏய்க்கும் கும்பலுக்கு பல்லக்கு தூக்குவது நியாயம்தானா என்று யோசித்து எழுதுங்க.

settaikkaran said...

simmakkal said...

நிறைய கருத்துக்களை விரவி எழுதியிருக்கிறீர்கள்.

வருக சிம்மக்கல்! முதலில் உங்களுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்! மாற்றுக்கருத்து உள்ள இடுகையை வாசித்து விட்டு ஒதுங்கிப்போகாமல், தொடர்ந்து பின்னூட்டம் அளிப்பதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். இனி, உங்கள் கருத்துக்கு எனது பதில்...(உங்களது கருத்துக்களை உபயோகித்தே...!)

நடிகை - கலைஞர்; அவரது படைப்பை (நடிப்பை) மட்டும்தான் நாம் விமர்சிக்க முடியும்; அவரது சொந்த வாழ்க்கை அவரது விருப்பம்.

திருமாணபெண் - அது அவரது குடும்பப்பொறுப்பு! அடுத்தவர் குடும்பத்தில் மூக்கை நுழைப்பது அநாகரீகம்

ஒரு குருவின் சிஸ்யை- குரு - சிஷ்ய பரம்பரைகள் இப்போது எங்கும் கிடையாது. இது துவாபரயுகமோ திரேதாயுகமோ அல்ல!

settaikkaran said...

//இப்பொது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.// பார்க்கலாம்! :-)

நடிகை என்பவள் ஒரு பரவலாக அறியப்படுபவள் மட்டுமல்ல. அவள் பார்க்கும் இளம் உள்ளங்களில் நிற்பவள். நித்தி கூட ரஞ்சிதாவை பள்ளியில் படிக்கும்போது கனவுக்கன்னியாக எப்போதும் அவரைப்பற்றிப்பேசுவாராம்.//

இருந்துவிட்டுப் போகட்டும்! நான் கூட அர்ஜுனும் ரஞ்சிதாவும் நடித்த ஒரு படத்தை தியேட்டரிலேயே இரண்டு முறை பார்த்திருக்கிறேன். :-)

//ஆனால் பரவலாக ஊடங்கங்களின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் நுழையும் இவர்களின் நடத்தை நன்னடைத்தையாகவோ, தீ நடத்தையாக இருப்பின் அது பிஞ்சு உள்ளங்களைப் பாதிக்கும்.//

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், ஒரு நடிகை குளிக்கிற படம் எம்.எம்.எஸ்.மூலம் பரவி களேபரமாகியதே! அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் உள்ள ஓற்றுமை - இரண்டும் திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்டவை. இப்படித் திருட்டுத்தனமாய் எடுத்ததை பகீரங்கமாய், வெகுஜன தொலைக்காட்சியில் போட்டவர்களைத் தானே குற்றம் சொல்ல வேண்டும்?

//மற்றவர்களைக் காட்டிலும். சா ரூக் கான் திரைப்படத்தில் புகைபிடித்தலை அன்புமணி தட்டிக்கேட்டார். சத்ருகன் சின்கா குடி விளம்பரத்தில் நடித்த படங்களை டெல்லியில் ஒட்டியதால் அவர் ராஜேஸ்கண்ணாவிடம் எம்.பி தேர்தலில் தோற்றுப்போனார்.//

ஷாரூக்கானின் தாத்தா காலத்திலிருந்தே புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவாஜி பிடிக்காத சிகரெட்டா? எத்தனை படத்தில் குடிகாரனாய் நடித்திருக்கிறார்? சிகரெட் பிடிப்பதில் ஒரு ஸ்டைலையே உருவாக்கிய ரஜினியை கடவுளுக்கு நிகராய் ரசிகர்கள் வைத்திருக்கிறார்களே?

//டோனி குடி விளம்பர்த்தில் நடித்ததை எதிர்த்தார்கள். இப்படி பொது வாழ்க்கையில் உள்ளோர் குறைந்தது பொதுவாழ்க்கையிலாவது, அதாவது பிறருக்கு வெளிச்சமாக அறியப்படும்போது, ஒழுக்கமாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.//

நீங்கள் சொல்வது விரும்பத்தக்கது. அப்படி நடிக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா? அந்த விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் சட்டம் எதையாவது தோனி மீறினாரா?

//திருமணமான பெண் - ரஞ்சிதாவுக்கு ஏற்கனவே ஒரு இராணவ அதிகாரியிடம் பெற்றோரால் பார்த்து திருமணம் செய்யப்பட்டு ஜம்முவின் ஓராண்டு மணவாழ்க்கை அவருக்கு. கணவருடன் விவாகரத்து வாங்காமல் ஒரு சாமியாருடன் படுக்கை வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.//

அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது அவரது கணவர்! அது அவர்களது குடும்பப்பிரச்சினை!

//சிஸ்யை - ஒரு சாமியாரிடன் ஒரு சிஸ்யை என்ன செய்யக்கூடாதோ அதை இவர் செய்தார்.//

அப்படியென்று எந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது?

//மற்றவர்கள் என்ன சொன்னார்கள்? என்று நீங்கள் பார்க்காமல், இவர் செய்தது சரியா என்று மட்டும் பார்த்தால், தவறு என்றுதானே சொல்லமுடியும்?//

நடிகை, மனைவி, சிஷ்யை என்று குறிப்பிட்டீர்கள்! இவையெல்லாவற்றையும் தாண்டி அவர் ஒரு பெண் என்ற முக்கியமான, அடிப்படைப் பரிமாணத்தை மறந்து விட்டீர்களே! அந்த வகையில் பிற பெண்களுக்கு உள்ள ஆசாபாசங்கள், பலவீனங்கள், சறுக்கல்கள் என எல்லாம் இவருக்கும் இருக்கும்! அதை சந்தையில் போட்டு விற்கிற அனுமதியை சட்டமோ, தர்மமோ யாருக்கும் வழங்கவில்லை.

//Don’t mix many points like whether SunTV can videograph this w/o their knowledge. One point one time please. Accordingly, Ranjitha has transgressed many morals. We can’t argue that she shd be treated like us. Not at all. She is a public personality and as such, to be treated differently. People in public life shd behave properly, at least when they are in lime light. They can do anything behind //

Everyone is convinced that the video was filmed without the knowledge of the concerned persons in question and hence there is no need for me to mix up anything.

Press is governed by a written model code of conduct which needs to be adhered even in the worst circumstances. There are several landmark judgements which categorically draw the line between investigative journalism and infringement of privacy.

Morality is a subjective term that keeps redefining its meaning by the passage of time. What was immoral a decade ago has been accepted or compromised to be part and parcel of life. Moreover, people who preach (SUN TV etc) must practice what they want to preach. You cannot have two sets of rules for two sets of people. Everybody is equal and no one is above board.

There are public figures who practice bigomy and even trigomy. That cannot be a justification for temptations and one cannot summarily blame the public figure for any misconduct.

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

நியாயமானதா இருக்கே//

மிக்க நன்றி நண்பரே! :-)

//சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு அலசல் சேட்டை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நிலைபாடு. உங்கள் நிலைப்பாட்டை மதிக்கிறேன்.//

வாங்கண்ணே! அத்தி பூத்த மாதிரி வந்தாலும், எப்பவும் போல உற்சாகமளிக்கத் தவறுவதே இல்லை நீங்க! :-)

//தமிழகத்தில் நடப்பதைவிட வட இந்தியாவில் சேனல்களில் தொல்லை இன்னும் அதிகம். அது போலவே மேற்கத்திய நாடுகளிலும்.டயானா மரணம் ஒரு உதாரணம்.//

உண்மை அண்ணே! வட இந்திய சேனல்கள் படுத்துகிற பாடு கொடுமை! எந்த அளவுக்கும் போகிறார்கள்!

//இங்கு தவறு செய்கிறவர்களை விட மாட்டிக்கொள்பவர்தான் குற்றவாளி.//

சில சமயங்களில் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே! :-)

//ராஜ நடராஜன் said...

சிம்மக்கல்!இந்த முறை தடுமாறாமல் தர்க்கம் செய்கிறீர்கள்.பாராட்டுக்கள்.//

ஹாஹா! உங்கள் கணிப்பைத் தவறென்று சொல்ல விரும்பவில்லை. பதில் எழுதியிருக்கிறேன்; பாருங்க! நன்றி! :-)

//DRபாலா said...

முற்றிலும் உண்மை. அருமையான பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அஞ்சா சிங்கம் said...

என் நீண்ட நாள் சிந்தனையை எழுத்தில் வடித்ததற்க்கு நன்றி .........//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

//RS said...

//...They can do anything behind scenes. No one bothers.//

சிம்மக்கல், உங்கள் பதிலிலேயே பதிவின் தலைப்பை ஆதரித்திருப்பது தெரிஞ்சே செய்ததா? இங்கு கூட அவர்கள் செய்தது பொதுவில் அல்ல. ஒருவன் சுயநலத்திற்க்காக எட்டி பார்த்ததால் தான் இந்த சச்சரவே.

சுயநலத்திற்க்கும் சமூக சேவைக்கும் உள்ள வித்தியாசம், இதை வைத்து ஊடக வியாபாரம் செய்ததில் இருந்தே தெரிகிறது.//

வந்தனம் RS! எனது பணியை சுலபமாக்கியதற்கும், அதன் மூலம் இந்த இடுகை குறித்த உங்கள் கருத்தினைத் தெளிவாகியதற்கும் மிக்க நன்றி! சிம்மக்கல் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் பதில் வழங்குவேன்!

வருகைக்கு நன்றி! :-)

settaikkaran said...

//mmakkal said...

சரிதான். ஆயினும் சொல்வது ஆர்? சொன்ன விதம் எப்படி என்பவைகளை வைத்தே அவரின் சொற்கள் கணித்துப் பேசப்படும்.

//எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு//

//குஷ்பு, ஒருவனிடம் ...............//

அவரது சொந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாதது. பண்பாடு, கலாச்சாரம் என்று வாய்கிழியப் பேசுகிற அரசியல்வாதிகளின் சொந்தவாழ்க்கையை எடுத்து விட்டால் நாறாதா? அதைச் செய்யக்கூடாது என்பதில் "நான்" உறுதியாக இருக்கிறேன்.

//இதே குஷ்பு, அந்த மருத்துவர்களிடையே ஒரு உரையாடல் தொலைக்காட்சியில் நடக்கும் போது கலந்து கொள்ள அழைக்கப்படும்போது ஆங்கே இவர் இப்படிச்சொல்லியிருந்தால் அது வரவேற்று ஏற்றுக்கொள்ளப்படும். அவர் களவொழுக்கம் கூட ஆங்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது.//

ரொம்ப முரண்படுகிறீர்கள். அப்போது மட்டும் குஷ்புவுக்கு நற்சான்றிதழ் வழங்குவீர்களா? :-)

settaikkaran said...

//Jayadev Das said...

அவர்கள் பிறழும்போது என்பதை, அவர்கள் பிறழ்வது நமக்குத் தெரிய வரும்போது .......... என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும். இன்னொன்று, நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை நாற்றம் பிடித்தது, இது எல்லோருக்கும் தெரிந்ததே, இவர்களிடம் யாரும் இந்த விஷயத்தில் "அதிகம்" எதிர் பார்க்கவே முடியாது.//

முரண்பாடு! எல்லாருக்கும் தெரியும் என்றும் சொல்கிறீர்கள். பிறகு, தெரிய வரும்போது என்று சொல்வது ஏனோ? :-)

//சென்னை பாதாள சாக்கடைக்குள் மூழ்கி வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள், அதை நினைத்தால் கூடத்தான் உமக்கு குமட்டும், ஆனபோதிலும், அவர்கள் இல்லாவிட்டால் உம்மைப் போன்ற வெள்ளை காலர் வேலை செய்பவர்கள் வசதியாக வாழ முடியுமா?//

அண்ணே, உங்களுக்கு ஏதுனாச்சும் திவ்யதிருஷ்டி இருக்குதுங்களா? நான் வெள்ளைக்காலர் வேலை செய்யறேன்னு ஞானக்கண்ணாலே பார்த்தீங்களோ? :-))

//ஒழுக்கத்தை போதிப்பதாகக் கூறி ஆயிரம் கோடிகளில் மக்கள் சொத்தை பிடுன்கியவனிடம். தற்போதே இவனுக்கு சிலைகள் தயாராகி விட்டன, இவன் செத்தால் கடவுள் என்று கோவில் கட்டி விடுவார்கள். சிலை வடிக்க இவன் என்ன ராமன், கிருஷ்ணன் அவதாரமா? இவன் என்ன பார்த்தனுக்கு கீதையை அருளியவனா? தன்னுடைய இந்திரியங்களைக் கூட காட்டுப் படுத்தத் தெரியாத மிருகம், என்ன தகுதி இருக்கிறது இவனை ஆன்மீக குரு என்றும், அவதாரம் என்றும் சொல்லவும், செத்த பின் கோவிலில் வைத்து கும்பிடவும்? ஆக, அவனது படுக்கையறையில் கேமரா வைத்தான் ஒருத்தன், சட்டத்தின் கண்ணில் இது தவறுதான், ஆனாலும் லட்சக் கணக்கான மக்களின் அறியாமையைப் போக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்ததால் இது சரியான நடவடிக்கை தான். தப்பேயில்லை//

சட்டப்படி எது குற்றமோ அதைச் செய்பவனுக்கு அடுத்தவன் குற்றத்தைப் பற்றிப்பேச என்ன அருகதை இருக்க முடியும்?

settaikkaran said...

//கும்மாச்சி said...

பாஸ் வித்தியாசமான சிந்தனை, அதே சமயத்தில் ஒத்துக்கொள்ள வேண்டிய கருத்து.//

வாங்க வாங்க! எவ்வளவு நாளாச்சு பார்த்து..? மிக்க நன்றி பாஸ்! :-)

//KARMA said...

சிம்மக்கல் கருத்துக்களுடன் பெரிதும் உடன்படுகிறேன்.//

மதிக்கிறேன். :-)

//ரஞ்சிதா, படம் எடுத்தவர் மற்றும் அதை ஒளிபரப்பிய ஊடகத்தினர் அனைவர் மீதும் தவறுள்ளதாகவே படுகிறது. எனவே ரஞ்திதா தவறு செய்தாரா ? என்றால் "ஆஆம்"//

"இல்ல்ல்லை!" என்கிறேன் நான்! அது தான் இடுகையே...! :-))

//இது மட்டுமல்ல .....இந்த படுக்கையறை-முழு நீ(ல)ள வீடியோ எங்கு கிடைக்கும் என இரவு முழுதும் google-ல் தேடிய எங்களையெல்லாம் (சேட்டைக்காரன்/ சிம்மக்கல் உட்பட ?) எந்த ரகத்தில் சேர்க்க ?//

ஆஹா, இன்னொரு திவ்யதிருஷ்டி வந்திட்டாருங்க! அவங்கவங்க வெப்சைட்டுலே சக்கைபோடு போட வச்சவங்களும், டிவியிலே போட்டுப் போட்டுக் காட்டுனவங்களும் கேட்டா என்ன நினைப்பாங்க...?

அப்போ...........நீங்க இன்னும் பார்க்கலேங்கறீங்க...? நம்புறோமுங்க! நன்றி! :-)

settaikkaran said...

//\ இந்த விஷயத்தை வியாபாரமாகினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இதை விட கேவலமான அருவருக்கத் தக்க காட்சிகள் தமிழ் திரைப் படங்களில் வருகின்றன, அதை ஆண், பெண், கிழவன், குமரன் என்று எல்லோரும் உட்கார்ந்து கொண்டு பார்கிறார்கள், அதை விட இது ஒன்றும் மோசமாக இல்லை.//

உங்க ஒப்பீடு மெய்சிலிர்க்க வைக்குதுண்ணே! நீங்க குறிப்பிடற சினிமாக்களும் இதுவும் ஒண்ணா? :-))

//நான் சாமியார், கடவுளுக்கு நிகரானவன், [அட, கடவுளே நான்தான்...], செக்ஸ் மகா பாவம் என்று போதித்து விட்டு, இன்னொருத்தன் மனைவியுடன் காவி உடையிலேயே கட்டிப் பிடித்து விட்டு [அப்புறம் இன்னும் என்னெல்லாம் பண்ணினானோ யாருக்குத் தெரியும்] அது ஊர் உலகத்துக்கு அப்பட்டமாக தெரிந்த பின்னும் வெளியே வந்து, அந்தப் படத்திலிருப்பது நாங்களே இல்லை என்று ஒருத்தன் சொல்கிறானே, அவன் பொதுமக்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது
உங்களுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லையா?//

இடுகையை முடிஞ்சா இன்னொரு தபா வாசிங்கண்ணே! (கொஞ்சம் பெரிசுதான்!). நான் நித்தியைத் தான் முதல் குற்றவாளின்னு சொல்லியிருக்கேன். இது விசயத்துலே நான் ஒத்துப்போக சம்மதிக்கிறேன்.

Jayadev Das said...

\\முரண்பாடு! எல்லாருக்கும் தெரியும் என்றும் சொல்கிறீர்கள். பிறகு, தெரிய வரும்போது என்று சொல்வது ஏனோ? :-)\\ பொதுவா, எல்லோருக்கும் இவங்க இப்படித்தான் என்று தெரிந்திருக்கும், ஆனால் யாருடன் யார் என்ற விவரங்கள் பொதுவாக பலருக்கும் தெரியாது. [நீங்க ஒன்னு பண்ணுங்க, நடிகைகள் ரொம்ப ஒழுக்கமானவங்க, என்று நீங்க பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் சொல்லுங்க, ஆமாம் என்று எத்தனை பேர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று பாருங்கள், அதுக்கப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க.].

Jayadev Das said...

\\அண்ணே, உங்களுக்கு ஏதுனாச்சும் திவ்யதிருஷ்டி இருக்குதுங்களா? நான் வெள்ளைக்காலர் வேலை செய்யறேன்னு ஞானக்கண்ணாலே பார்த்தீங்களோ? :-))\\ இவ்வளவு விவரமா எழுதறீங்களே, அதை வச்சு ஒரு குத்து மதிப்பா தான் சொன்னேன்.

settaikkaran said...

//Jayadev Das said...

/இது உங்க கற்பனை. அப்படி எந்த கடுமையான வரைமுறைகளையும் சட்டம் அவர்களுக்கு வைக்க வில்லை. உங்களுக்கும் எனக்கும் எந்த இந்தியச் சட்டம் பொருந்துமோ, அதேதான் நித்திக்கும் பொருந்தும்.//

முதல் பகுதி....."சாமியார் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற மதக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அது இல்லை என்கிறீர்களா?"

இரண்டாம் பகுதி:

//உங்களுக்கும் எனக்கும் எந்த இந்தியச் சட்டம் பொருந்துமோ, அதேதான் நித்திக்கும் பொருந்தும்//

பாயின்டுக்கு இப்போத்தான் வந்திருக்கீங்க! அப்போ இதே தவறை நாம செஞ்சிருந்தா அது எப்படித் தப்பில்லையோ, அதே மாதிரி ரஞ்சிதா செஞ்சது (நித்தி இல்லை!) தப்பு இல்லை என்பதுதான் எனது வாதமே! :-)

எனவே, மீதமுள்ள கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் செய்து விட்டீர்கள். :-)

Jayadev Das said...

\\சட்டப்படி எது குற்றமோ அதைச் செய்பவனுக்கு அடுத்தவன் குற்றத்தைப் பற்றிப்பேச என்ன அருகதை இருக்க முடியும்? \\ நான் முன்பே சொல்லிவிட்டேன், சட்டப்படி நித்தியோ, ரஞ்சியோ எந்தத் தவறையும் செய்யவில்லை. அவர்கள் செய்திருப்பது மக்களின் மத நம்பிக்கையை மோசடி செய்தது, இது எந்த சட்டத்தின் கீழும் வராது. குற்றம் புரிந்தவன் என்று லெனின் உள்ளே போனாலும், அப்பாவிகள் என்று ரஞ்சியும், நித்தியும் பழையபடி தாலிகட்டாத புருஷன் பெண்டாட்டியாய் கள்ளத் தொடர்பை தொடர்ந்தாலும், மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த இந்த பிராடுகளை விட லட்சக் கணக்கான மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்து படமெடுத்தவனே மேலானவன்.

settaikkaran said...

ஜெயதேவ் தாஸ்! இவ்வளவு நேரம் பொறுமையாக, உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக சொன்னதற்கும், பதில்களை சளைக்காமல் எழுதியதற்கும் மிக்க நன்றி! சட்டம் எல்லாருக்கும் பொது என்று சொல்லி விட்டீர்கள். அதே சமயம் சட்டப்படி எது குற்றமோ அதை இன்னொரு குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காகப் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். இதை நாம் செய்தால் ஜெயிலுக்குப் போவோம்; சன் டிவி போகாது என்பது தான் உண்மை. எனவே, உங்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, எனது கருத்து இன்னும் அதே தான் என்பதோடு இப்போதைக்கு நிறைவு செய்கிறேன். மீண்டும் நன்றி! :-)

Jayadev Das said...

\\முதல் பகுதி....."சாமியார் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற மதக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அது இல்லை என்கிறீர்களா?"\\ என்னாங்கண்ணே, எவ்வளவோ விவரமா கிடுக்கி பிடிஎல்லாம் போட்டு பிடிக்கிறீங்க, இந்த சப்பை மேட்டரில் தப்பு பண்றீங்களே! நீங்க சொல்லும் \\ மதக்கட்டுப்பாடுகள் \\- இவற்றை ஒரு சாமியார் மீறி விட்டார் என்று உள்ளே தள்ள முடியுமான்னே? அதனால் தானே அந்த வீடியோவில் இருப்பது நித்திதான் என்று தடைய அறிவியல் துறையினர் நிறுவிய பின்னரும் நித்தி ஜாலியா ஊரைச் சுத்திகிட்டு இருக்கான். அது வேற இது வேற அண்ணே.

ராஜ நடராஜன் said...

சேட்டை!இன்று அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கும் போது உங்களின் பதிவில் ரஞ்சிதா நடிகை என்பதாலேயே மிகைப்படுத்தப் படுகிறதென்று நீங்கள் கூறியது பற்றி நினைவு வந்தது.கூடவே இன்னுமொரு பழைய கதை ஒன்றும் நினைவுக்கு வந்தது.பத்திரிகை படிப்பவர்களுக்கு ஒரு வேளை நினைவிருக்கலாம்.பமீலா பிரிட்டனின் மந்திரி பதவியையே இழக்க வைத்த பெயர்.இந்திய மாடலாக லண்டனில் வாழ்ந்தவர்.சன் தொலைக்காட்சிக்கும்,நக்கீரனுக்கும் மாற்றாக இந்திய பத்திரிகைகள் துவைத்துப்போட்ட பெயர்.இன்றைக்கு செய்தியை விசுவலாகப் பார்ப்பதாலும் செக்ஸ் என்ற சென்சிடிவிடி ஆன்மீகத்தோடு கலந்து பிரம்மச்சரியம் பொய்யாகப்போனதால் மட்டுமே இதன் தாக்கம் அதிகமாக தெரிகிறது.உங்கள் பதிவுக்கு முரணாக செங்கோவி முன்பு போட்டிருந்த பதிவில் சொல்லியிருந்தேன்.உங்கள் கருத்துப்படியெல்லாம் ரஞ்சிதா கருத்துக்கள் தெரிவிப்பதில்லை.படத்தை வெளியிடுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பாவது தன்னிடம் சுயவிளக்கம் கேட்டிருக்கலாமே என்பதும்,,நான் உண்மையைச் சொல்லும் பட்சத்தில் தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பதும் இரு பெரும் சக்திகளுக்கிடையில் தான் மாட்டிக்கொண்டதாக மட்டுமே தன்னிலை விளக்கம் அளிக்கிறார்.இங்கே விமர்சிக்கப்பட வேண்டிய ஆள் நித்யானந்தா ராஜசேகரன் மட்டுமே என்றாலும் உடனிறுத்தல் பொருட்டு ரஞ்சிதாவையும் மனசாட்சிக்கு இழுக்க வேண்டியிருக்கிறது.சன் தொலலக்காட்சியும்,நக்கீரனும் ஊடக சுயநலக்காரர்களாய் இருந்தாலும் கூட நித்யானந்தா ராஜசேகரனின் முகத்திரை கிழிக்க தகுதியானவர்களே.

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா. என்ன ஒரு தீர்க்கமான வாதம்? நீங்க வக்கீலோ?

100% உடன் படுகிறேன்

Anonymous said...

அவரது சொந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாதது. பண்பாடு, கலாச்சாரம் என்று வாய்கிழியப் பேசுகிற அரசியல்வாதிகளின் சொந்தவாழ்க்கையை எடுத்து விட்டால் நாறாதா? அதைச் செய்யக்கூடாது என்பதில் "நான்" உறுதியாக இருக்கிறேன்.

//இதே குஷ்பு, அந்த மருத்துவர்களிடையே ஒரு உரையாடல் தொலைக்காட்சியில் நடக்கும் போது கலந்து கொள்ள அழைக்கப்படும்போது ஆங்கே இவர் இப்படிச்சொல்லியிருந்தால் அது வரவேற்று ஏற்றுக்கொள்ளப்படும். அவர் களவொழுக்கம் கூட ஆங்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது.//

ரொம்ப முரண்படுகிறீர்கள். அப்போது மட்டும் குஷ்புவுக்கு நற்சான்றிதழ் வழங்குவீர்களா? :-)

Settaikaaran

என்னைப்புரிந்த மாதிரி தெரியவில்லையே ! நான் குஷ்பு, அரசியல்வாதிகள் என்று பிரித்துப்பார்க்கவில்லை. பொது வாழ்க்கையில் நன்கறியப்பட்டவர்கள் அனைவரையும் சேர்த்தே சொல்கிறேன். ஒரு அரசியல்வாதிக்கு பலதாரங்கள் மறைத்தும் மறைக்காமலும். அவர் போய் பொது மேடையில் 'ஒருவனுக்கு-ஒருத்தி' பண்பாட்டை நாம் பேண வேண்டும் என அறிவுரை சொல்லலாமா ? இதே போல, குஷ்பு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் தொடர்புள்ளவர். இவர் போய், நமது மணவாழ்க்கை ஒழுக்கம் பற்றி பேசலாமா ? "அஃது அவரின் சொந்த வாழ்க்கை; நாம் தலையிடக்கூடாது" என்று சொல்வது வாதத்தை முடக்க‌ முயற்சிப்பதாகும். தன் சொந்த வாழ்க்கை எப்படியிருக்கலாம். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வேன் என்று சொல்லமுடியாது. எப்படியும் வாழுங்கள். ஊருக்கு உபதேசம் செய்யவிரும்பினீர்களென்றால் உங்கள் வாழ்க்கையும் ஆராயப்படும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

டாக்டர்கள் மத்தியில் உரையாடும்போது, களவொழுக்கம் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்படி இருக்கவேண்டுமென என எவர் சொன்னாலும் வரவேற்கப்படும். ஏனெனில் அவ்வுரையாடலின் நோக்கமே அதுதான். குஷ்புவே இருந்தாலும் ஏற்கப்படும்.

குஷ்பு சொன்ன இடம், சொன்ன விதம் வேறு அவர் சொன்னார்: "ஆடவர்கள் சென்னைப்பெண்களை மணக்குமுன் ஜாக்கிரதை. இன்றைய சென்னைப்பெண்கள் அப்படி1" என்பது போல பேசினார். இங்கே பெண்கள் என்பது ஒட்டுமொத்த சென்னைப்பெண்கள் அல்லது தமிழ்ப்பெண்கள். அவர்கள் எல்லாரையும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்ற மாதிரி! எல்லாரும் அப்படியா ? அவர்கள் மணங்கள் புண்படாதா என்பதை நீங்கள் யோசித்தீர்களா ? இங்கே குஷ்புவின் ஒழுக்கம் பேசப்படவில்லை. பேசியவிதமே முக்கியம்.

எப்படிச் சொல்லியிருக்கவேண்டும் குஷ்பு? "இன்றைய வாழ்க்கையில் மணத்திற்கு முன் ஆண்களும் பெண்களும் ஒன்றாக பழகுவதற்கு நிறைய கட்டங்கள் உண்டு. இவர்களில் சிலர் முறைதவற வாயுப்புகளுண்டு எனவே மணத்திற்கு முன், ஆணோ பெண்ணோ, தங்கள் மணக்கவிருக்கும் நபரைப்பற்றி நன்கு தெரிவது நல்லது" என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். பிரச்சனையே இருந்திருக்காது.

எனவேதான் சொல்கிறேன்: சொல்லும் விதம் நாகரிகமாக‌ இருக்கவேண்டும். நபர்களைக்குறிப்பிட்டு, அல்லது ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடாது.

பொது மேடைகளில் சொற்களை அளந்துதான் விடவேண்டும். யாகவராயினும் நாகாக்க. கண்டிப்பாக பொதுஇடங்களில். காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு. ஜெயராம் என்ற மலையாள நடிகர், தமிழ்ப்பெண்கள் எருமை மாடுகள் மாதிரி என்று சொல்லியதற்கு திட்டப்பட்டார். 'இல்லை..அவரைத் திட்டியது சரியில்லை. அஃது அவரின் சொந்தக்கருத்து' என்று வாதிடுவீர்களா ? இல்லை அவர்தான் செய்வாரா ? அவர் கண்ணீர் வடித்து மன்னிப்புக்கேட்டார்.

Anonymous said...

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், ஒரு நடிகை குளிக்கிற படம் எம்.எம்.எஸ்.மூலம் பரவி களேபரமாகியதே! அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் உள்ள ஓற்றுமை - இரண்டும் திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்டவை. இப்படித் திருட்டுத்தனமாய் எடுத்ததை பகீரங்கமாய், வெகுஜன தொலைக்காட்சியில் போட்டவர்களைத் தானே குற்றம் சொல்ல வேண்டும்?

//

நடிகை குளிப்பது தனிநபர் செயல். அதே நடிகை, குடித்துப்போட்டு ரகளை செய்கிறார். அதை மறுநாள் ஊடகங்கள் பரப்புகின்றன. ஊடங்கள் செய்வது தப்பு. ஆனால் அதே நடிகை, கல்லூரி விழாக்களுக்கு அழைக்கப்பட்டு, மாணவிகளிடையே ஒழுக்கத்தைப்பற்றி பேசுகிறார். சரியா ?

களவொழுக்கம் கடைபிடிக்கப்படவேண்டியவர் சாமியார். அவர் வரும் பக்தையிடம் படுக்கையைப் பகிர்ந்து சல்லாபிக்கிறார். சரியா ?

திருட்டு வீடியோ தவறே. சரி. பின்னர் அவர்களில் இரட்டை வேடம் எப்படி வெளியில் தெரிய வைப்பது ? தெரியவில்லையென்றால் நிறைய பெண்களையல்ல கெடுப்பான் தன்னைக் கேட்ப்பாரில்லையென்று. நீங்கள் ஒரு நல்ல வழியைச்சொல்லுங்கள்.

குரு-சிஷையை, அல்லது குரு-சிஷ்யன் உறவு புனிதமானது. அஃது எப்படியும் இருக்கலாம் என்றும் அது அவர்கள் விடயம் என்பது உங்கள் 'எப்படியும் வாழலாம்' என்பதன் கீழ் தாராளமாக வரும். ஆனால் மதத்திலுள்ளோர் அப்படி விரும்புவதில்லை. தங்கள் இந்துமதம் இப்படிப்பட்டவர்களால் கெடுகிறது என்று சொல்லித்தான் இந்து முன்னனியர் அவர் மடத்தைத்தாக்கினார்கள். அவர்கள் மதம் அவர்களுக்கு.

Anonymous said...

நீங்கள் சொல்வது விரும்பத்தக்கது. அப்படி நடிக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா? அந்த விளம்பரத்தில் நடித்ததன் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் சட்டம் எதையாவது தோனி மீறினாரா? //

இவையெல்லாம் சட்டம் சொல்லாது. வாழ்க்கையில் பல விடயங்களில் சட்டம் தலையிடாது. வைப்பாட்டி வைக்கக்கூடாது என்று சட்டம் சொல்லாது. ஆனால் சமூகம் அது தவறென்கிறது. குடி விளம்பரங்களில் நடிக்கக்கூடாது என்று டோனியைக்கட்டாயப்படுத்த முடியாது. அஃதை அவரேதான் செய்ய வேண்டும், குழந்தைகளிடையே பாப்புலரான நபர்கள் தங்கள் பொறுப்பை உணரவேண்டும். குழந்தைகள் அவரைக் காப்பியடிப்பார்கள். அமெரிக்க பாப்புலர் டிவி நடிகை (மைல் சைரஸ்) ஒருத்தியின் அரை நிர்வாணப்படம் பத்திரிக்கைகளில் வந்தது. அமெரிக்க பெற்றொர்கள் கொதித்து விட்டார்கள். ஏனெனில் அன்னடிகை டிவியில் குழந்தைகள் விரும்பிப்பார்க்கும் சீரியல்களில் நடித்துகொண்டிருக்கிறார் இன்னும். உலக முழவதும் குழந்தைகள் அவர் படத்தை தங்கள் அறைகளில் வைக்கும்படி பாப்புலர்.

டெண்டுல்கர் குழந்தைகளிடம் பாப்புலர். அவர் குடிப்பதாகாவும், புகைபிடிப்பதாகவும் விளம்பரங்களில் நடிப்பதில்லை. அவர் நடித்தால் உங்களைப் போன்றோர் பிசிசி தடுக்கிறதா? சட்டம் தடுக்கிறதா என்று கேட்பார்கள். ஆனாலும், அவர் நடிக்க மாட்டார். பொறுப்புணர்ச்சி இதுவே. நீங்களே உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் சிலவேளைகளில் பொது நலனுக்காக !

settaikkaran said...

ராஜ நடராஜன் said...

// ரஞ்சிதா நடிகை என்பதாலேயே மிகைப்படுத்தப் படுகிறதென்று நீங்கள் கூறியது பற்றி நினைவு வந்தது.// உண்மையும் அதுவே!

//இங்கே விமர்சிக்கப்பட வேண்டிய ஆள் நித்யானந்தா ராஜசேகரன் மட்டுமே என்றாலும் உடனிறுத்தல் பொருட்டு ரஞ்சிதாவையும் மனசாட்சிக்கு இழுக்க வேண்டியிருக்கிறது.//

நித்தியின் தவற்றை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், ரஞ்சிதாவின் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால், இவ்வளவு character assassination நடந்திருக்காது என்பது தான் எனது கருத்து.

//சன் தொலலக்காட்சியும்,நக்கீரனும் ஊடக சுயநலக்காரர்களாய் இருந்தாலும் கூட நித்யானந்தா ராஜசேகரனின் முகத்திரை கிழிக்க தகுதியானவர்களே.//

அது உங்களது கருத்து; மதிக்கிறேன். ஆனால், அவர்கள் இந்த சட்டவிரோதப்போக்கை தங்கள் சுய நலத்துக்காகவும் பயன்படுத்தியிருப்பார்கள் என்று ஊகிக்க முடிகிறது. எனவே, அவர்களது குறிக்கோளை பொதுநலம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.

கருத்துக்கு நன்றி! வருகைக்கு நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...
அடேங்கப்பா. என்ன ஒரு தீர்க்கமான வாதம்? நீங்க வக்கீலோ?//
அடிக்கடி மொக்கை போடுறதை வச்சு சந்தேகப்படறீங்களா தல..? 
//100% உடன் படுகிறேன் //
மிக்க நன்றி தல!

settaikkaran said...

சிம்மக்கல் அவர்களுக்கு, நீங்கள் கடைசியாக எழுதியிருக்கிற மூன்று கருத்துக்களை வாசித்தபோது, அதற்காக நீங்கள் செலவிட்ட நேரம், உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால், மீண்டும் ஒரு முறை அதை நீங்களே திரும்ப வாசித்தால், முன்னுக்குப்பின் முரணாகவே திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியும். இது தற்செயலா அல்லது வேண்டுமென்றே குழப்புகிறீர்களா என்று புரியவில்லை. உங்களது முரண்பாட்டை ஏற்கனவே நான் சுட்டிக்காட்டி விட்டேன். அதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இந்த விசயத்தில் என்னுடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் நானோ, என்னால் நீங்களோ அவரவர் கருத்துக்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, ஒவ்வொரு முரண்பாட்டையும் சுட்டிக்காட்டி, இதை மேலும் தொடர விரும்பவில்லை.

ஆனால், உங்கள் நேரத்துக்கும் உழைப்புக்கும் நன்றி!

middleclassmadhavi said...

உங்கள் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தேன். நல்ல அலசல்.

//பொதுவாக நான் இந்த பெண்ணியம், ஆணாதிக்கம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை போன்றவற்றிற்கு நேற்று பயணித்த பஸ் டிக்கெட்டுக்கு இன்று கொடுக்கிற மரியாதையைக் கூடத் தருவதில்லை.// மறுபடி இதைப் படித்து ரசித்தேன்!!

Anonymous said...

First of all, tks for releasing contrary views from me.

Next, tks for accepting that your views reflect one side of the issue only. There exists another side, which I represent.

The issue: Whether an individual has right to privacy and how far that right shd be extended to him so that his acts wont harm anyone is an old one but for ever debated.

I hope you will go beyond what u r clinging to now and examine them with an open mind. Dont say NO. Because, no man has ever lived who has not changed his views. In case he refuses, he is called a brute. A common truth.

I have no trouble or pains in writing my comments in blogs. Have plenty of time.

Tks again.

If u like, v can debate in private and I will make my points clearer to you there. I like debates.

சுபத்ரா said...

கொட்டித் தீர்த்திருக்கீங்க சேட்டை :-)
மிகவும் நியாயமான வார்த்தைகள்..

ஜெய்லானி said...

//இன்னும் சொல்வதற்கு மிச்சமிருக்கிறது. முடிந்தால் இன்னொரு இடுகை எழுதினாலும் எழுதுவேன்.//


நல்ல அலசல்.. மீதியையும் விரைவில் எதிர்பார்க்கிறோம் :-)

settaikkaran said...

//சுபத்ரா said...

கொட்டித் தீர்த்திருக்கீங்க சேட்டை :-)
மிகவும் நியாயமான வார்த்தைகள்..//

மிக்க நன்றி சகோதரி! இதையே தான் முன்பு நக்கலாய் எழுதியிருந்தேன். :-))) இப்போது, கலப்படமின்றி......!

settaikkaran said...

//ஜெய்லானி said...

நல்ல அலசல்.. மீதியையும் விரைவில் எதிர்பார்க்கிறோம் :-)//

இங்கே உங்களை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில், விரைவில் எழுதினாலும் எழுதுவேன். மிக்க நன்றி! :-)

Thuvarakan said...

wow chettai. its was an awsome argument.

rajendran said...

"அதை இன்னொரு பத்திரிகை வர்ணனையோடு எழுதிப் பூரிப்படைகிறது."

இந்த பத்திரிக்கையை நான் வாங்குவதையும் படிப்பதையும் அன்றுமுதல் நிறுத்திவிட்டேன்.

காப்பிகாரன் said...

thappu panathavanga yarum illa avanga nadikai athanala news agthu yar than thappu pannala ana makkalta thanna nallavana kattikittu makala sorantra samiyarkala pathi yenna solrathu....