Wednesday, July 6, 2011

அண்ணாஜிப்பழம்-பாகம்.03

முதல் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.

இரண்டாம் பகுதியை முழுமையாய் வாசிக்க "இங்கே" சொடுக்கவும்.


(இவ்வளவு ’ரிஸ்க்’ எடுத்துப் படிக்கணுமா? என்று கேட்பவர்களுக்கு - அதுவும் சரிதான், படிக்காவிட்டால் ஒன்றும் குறைந்து விடாது!)

முன்கதைச் சுருக்கம்

குடிமக்கள் முன்னேற்றக் கழகத்திடம், ஜன் லோக்பால் சட்டவரைவுக்கு ஆதரவு கோரி, கட்சியின் பொதுச்செயலாளர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க அண்ணா ஹஜாரே வருகிறார். அவரை வெளியே காத்திருக்கச் சொல்லுமாறு கு.மு.கவின் கொள்கைப்பரப்புச் செயலாளர் நெப்போலியன் நெடுவளவன் உத்தரவிட்டு விட்டு, கிருஷ்ணசாமிக்கு அண்ணாஜியைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். அப்போது அண்ணாஜியின் ஒரு செய்தியோடு கு.மு.க-வின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி உள்ளே வருகிறார்.

அண்ணா ஹஜாரேவுக்கு வெளியே காத்திருப்பது ’போரடிப்பதால்’ வந்திருக்கிற தொலைக்காட்சி நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளிக்க, சேட்டை டிவியின் ஒரே நிருபர் களக்காடு கருமுத்து அண்ணா ஹஜாரேயின் மாய்மாலங்களைப் புட்டுப் புட்டு வைக்கிற கேள்விகளாய் கேட்கிறார்.

இனி, சேட்டைக்காரனின் ’என்ட்ரீ’!

"வா சேட்டை!" கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி வாயெல்லாம் சிங்கப்பல்லானார். "என்ன நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம வெளியூர் போயிட்டே? உன்னைப் பார்க்காம எங்களுக்கெல்லாம் பைத்தியம் தெளிஞ்சா மாதிரி ஆயிடுச்சு! தெனமும் ரெண்டு ஃபுல் அடிச்சும் பெருமாள் கோவில் தீர்த்தம் சாப்பிட்ட எஃபெக்ட் தானிருக்கு!"

"அதிருக்கட்டும் அண்ணே! உங்க ஆபீஸுக்கு அண்ணாஜி வந்திருக்கிறாரு போலிருக்கே?"

"அட சேட்டை! உனக்குக் கூட அவரைத் தெரியுமா?"

"என்ன அப்பிடிக் கேட்டுட்டீங்க அண்ணே? நானும் அவரோட தொண்டன். மெரீனாவுக்குப் போயி மெழுகுவத்தியெல்லாம் ஏத்தினேன் தெரியுமா?"

"நீயுமா சேட்டை?" கிருஷ்ணசாமியின் முகம் வெளிறியது.

"ஆமாண்ணே! அவர்தானே ஊழலை ஒழிக்க வந்த மகான்? பாருங்கண்ணே, எனக்கு மும்பையிலேருந்து வர்றதுக்கு ’பர்த்’ கிடைக்கலே! கல்யாண் வந்ததும் டி.டி.ஈக்கு இருநூறு ரூபா கொடுத்தேன்! லோனாவாலா வர்றதுக்குள்ளே பர்த் கிடைச்சிருச்சு! அது மட்டுமா, உங்களைப் பார்க்க வர்ற அவசரத்துலே ஹெல்மெட் போட்டுக்கலே! போலீஸ் பிடிச்சிட்டாங்க! நூறு ருபா கைலே வச்சு அமுக்கிட்டு வந்தேன்! நாட்டுலே எம்புட்டு லஞ்சம் பாருங்கண்ணே! அண்ணா ஹஜாரே சொல்லுற சட்டம் வந்தாத்தான் லஞ்சம் ஒழியும். அதுக்காகவே அவருக்கு சப்போர்ட் பண்ணுறேன்!"

"அதுவரைக்கும்...?"

’அதுவரைக்கும் நான் ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டிட்டே இருப்பேன். டி.டி.ஈக்கு லஞ்சம் கொடுத்து ’பர்த்’ வாங்கிட்டே இருப்பேன். ஏன்னா, லஞ்சத்தை ஒழிக்கிறது என் வேலையில்லையே?"

"என்ன சேட்டை?லஞ்சத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒண்ணும் பண்ண வேண்டாமா?"

"அது அரசாங்கமும் அண்ணா ஹஜாரேயும் சேர்ந்து சட்டம்போட்டு பண்ண வேண்டிய வேலை! நானு மிஞ்சிமிஞ்சிப் போனா, மெரீனாவுக்குப் போயி ஒரு மெழுவத்தியோ ஊதுபத்தியோ ஏத்துவேன்! தொண்டைத்தண்ணி வத்துற வரைக்கும் கத்துவேன்! அப்பாலிக்கா மொளகா பஜ்ஜியும், சுக்குக்காப்பியும் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயிடுவேன்! அம்புட்டுத்தேன்! எப்படியும், நான் ஒருத்தன் லஞ்சம் கொடுக்காம இருந்திட்டா லஞ்சம் ஒழிஞ்சிருமா?"

"ரொம்பத் தெளிவாயிருக்கே சேட்டை!" கிருஷ்ணசாமி மகிழ்ந்தார். "மக்கள்லே நிறைய பேரு உன்னை மாதிரியே தெளிவாயிருக்கிற தைரியத்துலே தான் அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவ் மாதிரி ஆளுங்க சுலபமா பெரிய ஆளாயிடறாங்க! அண்ணாஜிக்கும் அவரு சொல்லுற மாதிரி சட்டம் வராதுன்னு தெளிவாத் தெரிஞ்சிருக்கு! மொத்தத்துலே எல்லாரும் நம்ம தலையிலே நாமளே மொளகாய் அரைச்சிட்டு இருக்கோம்!"

"மத்தவங்க தெளிவாகுறது இருக்கட்டும் அண்ணே! கு.மு.க.தலைவரு நீங்க தெளிவாயிட்டா கட்சியே அம்பேலாயிடும்ணே!"

"ஹிஹி!" என்று சிரித்தபடியே அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி. "ஏன் சேட்டை, தில்லி, மும்பையிலே அண்ணாஜிக்கு இத்தனை ஆளுங்க கூட்டம் சேர்றது இருக்கட்டும். எப்படி நம்மூருலே இவ்வளவு கூட்டம் சேருது?"

"நமக்கு வடக்குன்னா எப்பவுமே ஒரு பிடிப்பு இருக்குண்ணே! நம்மூருலே நமீதா, தமன்னா, நக்மா, குஷ்பூவுக்குத்தானே அதிக மவுசு இருக்குது. கோவில் கூட கட்டியிருக்கோமே? நான் கூட திரிஷா, சினேகாவையெல்லாம் விட்டுப்புட்டு ஸ்ரேயாவைப் பத்தித்தானே அதிகம் எழுதுறேன். அதே மாதிரிதான் இந்த அண்ணாஜி மேட்டரும்! நம்முருலே பெட்டிஷன் ராமசாமின்னு ஒருத்தர் இருக்கிறாரு! தனிமனுசனா அரசாங்கத்தோட கண்ணுலே விரலை விட்டு ஆட்டுக்கிட்டு இருக்கிறாரு! அண்ணா ஹஜாரேவுக்காக மெழுகுவத்தியைத் தூக்கிட்டுப் போனவங்கள்ளே யாராவது அந்தப் பெட்டிஷன் ராமசாமிக்காக ஒரு தீக்குச்சியாவது கொளுத்தியிருப்பான்னா நினைக்கிறே? மாட்டாங்க! ஏன்னா, பெட்டிஷன் ராமசாமியைப் பத்தி மயிலாப்பூர் டைம்ஸ்-லே கூட யாரும் எழுத மாட்டாங்க! ஆனா, அண்ணா ஹஜாரேன்னா சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டிவி, டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி பெரிய பெரிய இங்கிலீஷ் சேனல்லே காண்பிப்பாங்க!"

"ஓஹோ!"

"பெட்டிஷன் ராமசாமி மாதிரி ஊருக்குப் பத்து பேரு இருப்பாங்க நம்ம தமிழ்நாட்டுலே! ஆனா, அவங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணினா ஒரு புண்ணாக்கும் புரயோஜனம் கிடையாது. அவரு பொதுநல வழக்குப் போடுறாரு! நாம நம்ம வழக்கையே போடப் பயந்துகிட்டு ’எல்லாம் தலைவிதி,’ன்னு சொல்லிட்டு, அண்ணா ஹஜாரே மாதிரி யாராவது வந்து காப்பாத்துவாருன்னு குப்புறப்படுத்திட்டிருக்கோம். இந்த வீக்னஸைப் புரிஞ்சுக்கிட்டுத்தானே அரசாங்கம் ஏய்க்கிறது போதாதுன்னு இந்த மாதிரி அலப்பறைங்களும் சேர்ந்துக்கிட்டு நம்மளை ஏய்க்கிறாங்க?"

"வாய்யா சேட்டை!" என்று தள்ளாடியவாறு உள்ளே நுழைந்தார் நெப்போலியன் நெடுவளவன். "உன் தோஸ்து கள்காடு கருமுத்து அண்ணா ஹஜாரேக்குத் தண்ணி காட்டிக்கினுகீறான்யா!"

"அவனுக்கு மூணுமாசமா சம்பளம் கிடைக்கலேன்னு கடுப்பு! அதான் சேட்டை டிவி மேலே இருக்கிற கடுப்பை அண்ணாஜிட்டே காட்டுறான்னு நினைக்கிறேன்!"

"சும்மாயிருய்யா நெப்ஸு! சேட்டை கொஞ்சம் உருப்படியா பேசிட்டிருக்கான். எதையாவது பேசி அவனைக் குழப்பிட்டேன்னா, அவனும் அண்ணா ஹஜாரே மாதிரி உளற ஆரம்பிச்சிடப்போறான்!" என்று இடைமறித்தார் கிருஷ்ணசாமி. "ஏன் சேட்டை, ஒரு மனிசன் சோறுதண்ணியில்லாம சாவப்போறேன்னு சொல்றது எம்புட்டுப் பெரிய விஷயம்? அதைக் கேட்குறவனுக்கு நம்பளுக்காண்டி ஒருத்தரு சாவுறேன்னு சொல்றானேன்னு தோணாதா? அதைக் கூட நையாண்டி பண்ணுறியே சேட்டை?"

"தலீவரே, ’ரமணா’ படம் பார்த்தீங்களா?"

"ஓ!"

"அந்தப்படத்தைப் பார்த்திட்டு வாறையிலே ’சே, இந்த மாதிரி உண்மையிலேயே ஒருத்தன் வரணுண்டா,’ன்னு நெனச்சேன். அதே மாதிரி ’முதல்வன்’,’அந்நியன், ’சிவாஜி’ன்னு ஒவ்வொரு சங்கர் படத்தையும் பார்த்திட்டு ’மெய்யாலுமே இந்த மாதிரி ஒருத்தன் இருந்தா நல்லாருக்குமே,’ன்னு யோசிப்பேன். ஒருவாட்டி கூட ’அந்த ஒருத்தன் ஏன் நானா இருக்கக் கூடாதுன்னு யோசிக்க மாட்டேன் தெரியுமா? அதிகபட்சம் நான் பண்ணுனது என்னா தெரியுமா? எதுத்த வூட்டு மாமியைப் பார்த்து ’ஐயங்காரு வீட்டு அழகே,’ன்னு பாடி மாமா கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டதுதான். அந்த மாதிரித்தான் எல்லா ஜனமும் ’எவனாவது வந்து எல்லாத்தையும் திருத்தணும்’னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வூட்டுலே உட்கார்ந்திட்டிருக்கு! நாம இப்படித் தொடைநடுங்கிங்களா இருக்கிறவரைக்கும் லோக்பால் வந்தாலும் நம்மளை ஏமாத்துறவன் ஏமாத்திட்டுத்தான் இருப்பான்!"

"இன்னா சேட்டை அப்படிச் சொல்லிட்டே?"

"பின்னே என்னய்யா? கொலை பண்ணா ஆயுள்தண்டனை, தூக்குத்தண்டனைன்னு நம்ம நாட்டுலே சட்டமிருக்கு! கொலை நடக்காமலா இருக்கு? ஹாரர் மூவியிலே வர்றதை விடவும் கொடூரமா கொலை நடக்குதுய்யா! முதல்லே நாம உருப்படியா இருந்தா, மேலே இருக்கிறவனுக்குப் பயம் வரும். ஜனங்க முழிச்சிட்டிருக்கான்னுற சொரணை வரும். சும்மாவா சொன்னாய்ங்க? People get the Government they deserve! அரசியல்வாதி. ஊழல் பண்ணுறான்னு நாமளும் லஞ்சம் வாங்குறோம்; கொடுக்குறோம். போலீசைக் கண்டதும் பொம்பிளையோட பொம்பளையா ஒளிஞ்சு ஓடுற பரதேசிப்பன்னாடைங்களையெல்லாம் ஹீரோன்னு சொல்லுறோம். ஒரு நாளு மெழுகுவர்த்தி கொளுத்தினாப் போதுமாய்யா? வேணுங்கிறது கிடைக்கிறவரைக்கும் ஜனங்க போராடணும்யா! எல்லாம் அண்ணாஜி பார்த்துக்குவாருன்னு வூட்டுலே தின்னுட்டுத் தூங்கினா வந்திருமா லோக்பால்? மண்குதிரையை நம்பி ஆத்துலே இறங்கிட்டிருக்கோமய்யா!"

"சேட்டை, டென்ஷன் ஆவாதே! அண்ணாஜி பேட்டியை முடிச்சிட்டு வர்றாரு போலிருக்குது. நம்ம ஆதரவு கேட்டா என்ன சொல்றது?" என்று கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி கேட்கவும் பகார்டி பக்கிரிசாமி அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.

(முற்றும்- அப்படீன்னு போடுவேன்னு எதிர்பார்த்தீங்களா?
ஹிஹி...தொடரும்)

6 comments:

Niroo said...

vadai

வை.கோபாலகிருஷ்ணன் said...

முற்றும் போட்டுட்டீங்களோன்னு பயந்துட்டேன். ஊழல் முற்றிலும் ஒழியும் வரை (தினத்தந்தி கன்னித்தீவுபோல)இந்தக்கதை தொடரணும் ஸ்வாமி!

//அதிகபட்சம் நான் பண்ணுனது என்னா தெரியுமா? எதுத்த வூட்டு மாமியைப் பார்த்து ’ஐயங்காரு வீட்டு அழகே,’ன்னு பாடி மாமா கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டதுதான். //

அதே அதே ... எல்லோருமே அப்படித்தான் செய்கிறார்கள்.

//"நமக்கு வடக்குன்னா எப்பவுமே ஒரு பிடிப்பு இருக்குண்ணே! நம்மூருலே நமீதா, தமன்னா, நக்மா, குஷ்பூவுக்குத்தானே அதிக மவுசு இருக்குது. கோவில் கூட கட்டியிருக்கோமே? நான் கூட திரிஷா, சினேகாவையெல்லாம் விட்டுப்புட்டு ஸ்ரேயாவைப் பத்தித்தானே அதிகம் எழுதுறேன்//

கரெக்ட். சூப்பர் எடுத்துக்காட்டு.

//யாராவது அந்தப் பெட்டிஷன் ராமசாமிக்காக ஒரு தீக்குச்சியாவது கொளுத்தியிருப்பான்னா நினைக்கிறே? மாட்டாங்க! ஏன்னா, பெட்டிஷன் ராமசாமியைப் பத்தி மயிலாப்பூர் டைம்ஸ்-லே கூட யாரும் எழுத மாட்டாங்க! ஆனா, அண்ணா ஹஜாரேன்னா சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டிவி, டைம்ஸ் நௌ, ஹெட்லைன்ஸ் டுடே மாதிரி பெரிய பெரிய இங்கிலீஷ் சேனல்லே காண்பிப்பாங்க!"//

சாட்டையடி.

//
"என்ன சேட்டை?லஞ்சத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒண்ணும் பண்ண வேண்டாமா?"

"அது அரசாங்கமும் அண்ணா ஹஜாரேயும் சேர்ந்து சட்டம்போட்டு பண்ண வேண்டிய வேலை! நானு மிஞ்சிமிஞ்சிப் போனா, மெரீனாவுக்குப் போயி ஒரு மெழுவத்தியோ ஊதுபத்தியோ ஏத்துவேன்! தொண்டைத்தண்ணி வத்துற வரைக்கும் கத்துவேன்! அப்பாலிக்கா மொளகா பஜ்ஜியும், சுக்குக்காப்பியும் குடிச்சிட்டு வூட்டுக்குப் போயிடுவேன்! அம்புட்டுத்தேன்! எப்படியும், நான் ஒருத்தன் லஞ்சம் கொடுக்காம இருந்திட்டா லஞ்சம் ஒழிஞ்சிருமா?"//

அதானே, கரெக்ட்டா அடிக்கிறீங்க.

ஜாலியா எழுதிக்கிட்டே இருங்க. அப்போதான் எல்லோருக்குமே ஒரு விழிப்புணர்வு வரும்.

மேலேயுள்ள கார்ட்டூனில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒற்றுமையாக்கூடி பேசிக்கொள்வது ஒரே சிரிப்பு தான். சேட்டைன்னா சேட்டைதான்! சபாஷ்.

வெங்கட் நாகராஜ் said...

சொல்லிய விஷயங்கள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவே. நம்மில் எத்தனை பேர் என் வேலை நடக்க, நான் லஞ்சம் தரமாட்டேன் என்ற எண்ணத்துடன் இருக்கிறோம்....

தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்....

நடராஜன் said...

first time am reading ur blogs! sugar coated medicine! add a count in ur fan's list

சுபத்ரா said...

/*"தலீவரே, ’ரமணா’ படம் பார்த்தீங்களா?"

"ஓ!"

"அந்தப்படத்தைப் பார்த்திட்டு வாறையிலே ’சே, இந்த மாதிரி உண்மையிலேயே ஒருத்தன் வரணுண்டா,’ன்னு நெனச்சேன். அதே மாதிரி ’முதல்வன்’,’அந்நியன், ’சிவாஜி’ன்னு ஒவ்வொரு சங்கர் படத்தையும் பார்த்திட்டு ’மெய்யாலுமே இந்த மாதிரி ஒருத்தன் இருந்தா நல்லாருக்குமே,’ன்னு யோசிப்பேன். ஒருவாட்டி கூட ’அந்த ஒருத்தன் ஏன் நானா இருக்கக் கூடாதுன்னு யோசிக்க மாட்டேன் தெரியுமா? அதிகபட்சம் நான் பண்ணுனது என்னா தெரியுமா? எதுத்த வூட்டு மாமியைப் பார்த்து ’ஐயங்காரு வீட்டு அழகே,’ன்னு பாடி மாமா கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டதுதான். அந்த மாதிரித்தான் எல்லா ஜனமும் ’எவனாவது வந்து எல்லாத்தையும் திருத்தணும்’னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வூட்டுலே உட்கார்ந்திட்டிருக்கு! நாம இப்படித் தொடைநடுங்கிங்களா இருக்கிறவரைக்கும் லோக்பால் வந்தாலும் நம்மளை ஏமாத்துறவன் ஏமாத்திட்டுத்தான் இருப்பான்!"*/

க்ளாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொடர்ந்து கலக்குங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாமே சூப்பர், செமபஞ்ச் லைன்ஸ்... ஆனால் அத்தனையும் கசப்பான உண்மைகள் சேட்டை!