வணக்கம் நேயர்களே! இது உங்கள் அபிமான சேட்டை டி.வியின் ’குண்டக்க..மண்டக்க’ நிகழ்ச்சி! இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆளுங்கட்சியைச் சேர்ந்த திரு. சுரண்டலூர் சுப்பாமணியும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த திரு.கொட்டாவிப்பாளையம் குருவப்பனும் வந்திருக்கிறார்கள். வணக்கம் திரு.சுப்பாமணி அவர்களே! வணக்கம் திரு.குருவப்பன் அவர்களே!
சுப்பாமணி: வணக்கம்!
குருவப்பன்: வணக்கம்!
சேட்டை: இன்று மாலை மத்திய போக்குவரத்துத் துறை செயலாளர் ஒரு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்கிற சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் டோல்கேட்டில் பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆளுங்கட்சிப் பிரதிநிதியாக இது குறித்து பொதுமக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
சுப்பாமணி: இது வரவேற்கத்தக்க விஷயம்! நாங்கள் எங்களுக்காகவே மக்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்...மன்னிக்கவும்...மக்களுக்காகவே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் ஒவ்வொரு முறையும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி பெருந்தொகையை வசூலித்தால் எப்படி நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியும்?
சேட்டை: ஐயா! குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்! வெறும் முப்பது ரூபாய் தானே டோல்-கேட்டில் வசூலிக்கிறார்கள்? அதைக் கூடவா உங்களால் கொடுக்க முடியாது?
சுப்பாமணி: முப்பது ரூபாயா? மீது தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தி ஒன்பது காருக்கு யாரு காசு கொடுக்கிறது? பொதுவாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டால் பாத்-ரூம் தவிர வேறு எங்குமே தனியாகப் போக முடியாதல்லவா? ஒவ்வொரு வாட்டியும் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று கொடுத்தால் அப்புறம் சம்பாதிக்கிறதெல்லாம்...அதாவது, வாங்குற சம்பளம் எல்லாம் திரும்ப அரசாங்கத்துக்கே போயிடாதா?
சேட்டை: திரு.குருவப்பன் அவர்களே! எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
குருவப்பன்: இது அதிகார துஷ்பிரயோகம்! மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்! இதைக் கண்டித்து நாளை முதல் தமிழ்நாட்டின் எல்லா டோல்-கேட்டுகளின் முன்பும் எங்கள் கட்சித்தொண்டர்கள் கோல்கெட் பேஸ்ட்டால் பல்துலக்கி நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்வார்கள்.
சுப்பாமணி: சேட்டை! இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்தபோது, இதனால் பொதுமக்களின் வரிப்பணத்திற்கு இழப்பு ஏற்படாமல் இருக்க ஒரு யோசனை சொன்னோம். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கினால் அவர்கள் டோல்-கேட்டில் பணம் கட்ட வேண்டிய அவசியமே இருக்காது என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இந்தியாவில் அந்த அளவு எண்ணிக்கையில் ஹெலிகாப்டர் டிரைவர்களும் ஹெலிகாப்டர் கிளீனர்களும் கிடையாது என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
குருவப்பன்: டிரைவர் இல்லாவிட்டால் என்ன? எல்லா ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக்கொள்ளலாமே?
சுப்பாமணி: முதலில் நீங்கள் கற்றுக்கொள்வீர்களா குருவப்பன்? உங்கள் கட்சிக்காரர் ஹெலிகாப்டர் ஓட்டப் பயிற்சி பெற்றாரே, என்ன நடந்தது?
சேட்டை: என்ன நடந்தது?
சுப்பாமணி: ஹெலிகாப்டர் ஆகாயத்தில் பறந்தபோது, ’ரொம்பக் குளுருது,’ன்னு ஹெலிகாப்டர் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேனை ஆஃப் செய்து விட்டார்!
குருவப்பன்: இது அப்பட்டமான அவதூறு! மத்திய அரசு மலிவாய்க் கிடைக்கிறது என்று யூகோஸ்லாவியாவிலிருந்து ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்து விட்டார்கள். அதில் மேலே போக ஒரு பொத்தான், வலது பக்கம் போக ஒரு பொத்தான், இடது பக்கம் போக ஒரு பொத்தான் என்று மொத்தமே மூன்று பொத்தான்கள் தானிருந்தன. கீழே இறங்குவதற்குப் பொத்தானே இல்லை! ஏன் என்று கேட்டால், கமிஷன் தொகை அதிகமாகக் கொடுத்துக் கட்டுப்படியாகததால் அந்த ஒரு பொத்தானை மட்டும் வைக்காமல் விட்டு விட்டோம் என்று சொல்லி விட்டார்கள். பரங்கிப்பேட்டையிலிருந்து பறந்த எங்களது கட்சிக்காரர் இறங்கத் தெரியாமல் பாராமுலா வரைக்கும் போய்விட்டார்! இனிமேல் அவரை பாகிஸ்தான்காரர்கள் இறக்கினால் தான் உண்டு.
சேட்டை: திரு.குருவப்பன்! இது போன்ற விஷயங்களைப் பற்றி ஆளுநரிடம் முறைப்படி புகார் கொடுக்காமல் தினசரி ஏன் போராட்டங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்? அண்மையில் கூட தேனாம்பேட்டை சிக்னல் அருகே உங்கள் தலைமையிலே தொண்டர்கள் தீக்குளிக்கப்போவதாக பரபரப்பை ஏற்படுத்தினீர்களே?
சுப்பாமணி: அதெல்லாம் அவர்களது நாடகம்! இவர்கள் தீக்குளிப்பதாகச் சொன்னதும் சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது! பொதுமக்கள் அவரவர் வாகனங்களிலிருந்த பெட்ரோலைக் காலி செய்து பாட்டிலில் நிரப்பி இவர்களிடம் கொடுப்பதற்குள்ளாகவே எதிர்க்கட்சித்தொண்டர்கள் "போராட்டம் வெற்றி!" என்று கோஷம் போட்டுக்கொண்டு தலைதெறிக்க ஓடி விட்டார்கள்!
சேட்டை: விவாதம் திசைதிரும்புகிறது! சுப்பாமணி அவர்களே! அரசாங்க கஜானாவுக்கு முப்பது ரூபாய் கூட கொடுக்க விரும்பாத அரசியல்வாதிகள் என்று மக்கள் குற்றம் சாட்ட மாட்டார்களா?
சுப்பாமணி: இது தவறான கருத்து! மக்களுக்காக நாங்கள் எவ்வளவு வேண்டுமானலும் செலவழிக்கத் தயார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? சந்தேகமிருந்தால் அடுத்த இடைத்தேர்தலின் போது அதை மீண்டும் நிரூபித்துக்காட்டுகிறோம். எங்களது சவாலை சந்திக்க எதிர்க்கட்சிகள் தயாரா என்று சூளுரை விடுகிறேன்.
குருவப்பன்: மிகவும் குறுகிய கண்ணோட்டத்தோடு நிறைவேற்றப்பட்ட கோரிக்கை இது! எங்கள் வசம் வாகனங்கள் அதிகமில்லை என்பதற்காகவே திட்டமிட்டு இப்படியொரு சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். அடுத்த முறை எங்களது ஆட்சி மலர்ந்தால் இதை நாங்கள் கண்டிப்பாக மாற்றியமைப்போம்.
சேட்டை: எப்படி? மீண்டும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் டோல்-கேட்டில் பணம் செலுத்த வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றுவீர்களா?
குருவப்பன்: இல்லவே இல்லை! சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளித்தால் மட்டும் போதாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்கள் பிரதிநிதிகளுக்கு இலவசமாக பெட்ரோலும் டீசலும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சுப்பாமணி: நீங்கள் இப்படி ஏறுக்கு மாறாக கோரிக்கை வைப்பீர்கள் என்று தெரிந்து தான், மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருக்கிறோம்.
குருவப்பன்: நீங்கள் கோரிக்கை தானே வைப்பீர்கள்? நாங்கள் மக்கள் பிரதிநிதிகளின் வாகனங்களுக்கு சுங்கவரி, கலால்வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி,ஜனவரி, பிப்ருவரி, முகவரி போன்ற அனைத்திலிருமிருந்து விலக்கு வேண்டுமென்று நாடுதழுவிய போராட்டம் நடத்துவோம்.
சுப்பாமணி: நீங்கள் வரிவிலக்கு மட்டும் தானே கேட்பீர்கள்? நாங்கள் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பி.எம்.டபூள்யூ, டயோட்டா, மிட்சுபிஷி,ஹூண்டாய், ஹோண்டா போன்ற வாகனங்களையே இலவசமாக வழங்கக்கோரி விட்டோம்.
சேட்டை: என்னது, எல்லா அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் இலவசமாக கார் கொடுப்பதா? பொதுமக்கள் இனிமேல் மாட்டுவண்டியில் போக வேண்டியது தானா?
குருவப்பன்: சேட்டை! கட்சி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. பேசிமுடித்து விட்டு வருகிறேன்.
சேட்டை: சரி, பேசுங்கள்! சுப்பாமணி அவர்களே! இப்படியே பணமே செலுத்தாமல் இலவசமாக எல்லாம் நடந்தால் கஜானா காலியாகி விடாதா?
சுப்பாமணி: நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா? மக்கள் மட்டும் எல்லாம் இலவசமாய் பெறலாம். நாங்கள் பெறக்கூடாதா?
குருவப்பன்: சரியாகச் சொன்னீர்கள் சுப்பாமணி!
சேட்டை: என்னது, எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சியை ஆதரிக்கிறீர்கள்?
குருவப்பன்: யார் எதிர்க்கட்சி? நான் போட்டிருக்கிற சட்டையில் ஒரு பொத்தான் இல்லையாம். அதனால் கட்சிவிரோதச் செயல்பாட்டுக்காக என்னை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக இப்பொது தான் போன் வந்தது. சுப்பாமணி அண்ணே, போகும்போது அப்படியே என்னையும் உங்க கட்சிக்குக் கூட்டிக்கிட்டு போறீங்களா?
சுப்பாமணி: வாங்க வாங்க! ஆனா, என் தொண்டர்கள் நிறைய பேரு காத்திட்டிருக்காங்க! நீங்க உங்க வண்டியிலேயே பின்னாலேயே வர்றீங்களா?
குருவப்பன்: அதனாலென்ன அண்ணே, நான் பாட்டுக்கு டிக்கியிலே உட்கார்ந்து கிட்டு வர்றேன். நம்ம கட்சி அலுவலகம் வரைக்கும் தானே? ஹிஹி!
சேட்டை: முடிவா இந்தப் பிரச்சினையைப் பத்தி என்ன சொல்றீங்க குருவப்பன் அவர்களே?
குருவப்பன்: இது விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரம்! மக்களாட்சியிலே மக்களுக்காக சேவை செய்கிற மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களாகக் கொடுக்கிற சலுகையை மக்கள் விரோத சக்திகள் எதிர்ப்பது மக்களின் மன்தை நோகடிக்கும் செயல் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுவார்கள்.
சேட்டை: சுத்தமாப் புரியலே!
சுப்பாமணி: குருவப்பன், நல்லாப் பேசினீங்க! இனிமே நாம ரெண்டு பேரும் நகமும் சதையுமா, கண்ணும் இமையுமா, காரும் ஸ்டெப்னியுமா பிரியாம இருப்போம். சேட்டை, பேட்டியை முடிச்சிட்டு வந்து டிக்கியைத் திறந்து விடு! அண்ணனைக் கூட்டிக்கிட்டுப்போகணும்.

Tweet |
24 comments:

.......உண்மையை இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்களே..... சூப்பர்!
செம கலக்கல் பேட்டி. அதும் அந்த 3 பொத்தான் பேரம்:)). அருமை சேட்டை
Me the first...
நானே இந்த நியூஸை படிச்சிட்டு நொந்து நூடுல்ஸாயி இருந்தேன். சேட்டை அசத்திட்ட அசத்தி.
//////////சுப்பாமணி: சேட்டை! இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதித்தபோது, இதனால் பொதுமக்களின் வரிப்பணத்திற்கு இழப்பு ஏற்படாமல் இருக்க ஒரு யோசனை சொன்னோம். அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர் வழங்கினால் அவர்கள் டோல்-கேட்டில் பணம் கட்ட வேண்டிய அவசியமே இருக்காது என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், இந்தியாவில் அந்த அளவு எண்ணிக்கையில் ஹெலிகாப்டர் டிரைவர்களும் ஹெலிகாப்டர் கிளீனர்களும் கிடையாது என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
//////////////
ஏலே மக்கா மேல சுதந்திரமா பறந்து தெரிகிற பறவைகளையும் க்ளோஸ் பண்ணிடலாம்னு எண்ணத்தில இருக்கீங்களா இது நடக்காதுல நாங்க காக்கா கூட்டத்தை அனுப்பி உங்க மேல அபிஸெகம்
பண்ணிடுவோம்ல .
சேட்டை கலக்கல் பகிர்வுக்கு நன்றி !
ஆஹா, மொதல் போணி நான்தானா, குண்டக்க மண்டக்க எளுதினாலும் கோளாறா எளுதீருக்கிறீரையா, பைய பாத்து போங்கையா, ஊட்டுக்கு ஆட்டோ வந்துரப்போகுது.
யோவ் என்னய்யா நடக்குது தமிலிஷ் ஓட்டு 14. கமான்ட் 0. கள்ள ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கீரா? பிச்சுபுடுவேன்.
சரி சீக்கிரம் சேட்டைக்கு ஆட்டோ அனுப்ப வேண்டித்தான்
//பொதுமக்கள் அவரவர் வாகனங்களிலிருந்த பெட்ரோலைக் காலி செய்து பாட்டிலில் நிரப்பி இவர்களிடம் கொடுப்பதற்குள்ளாகவே எதிர்க்கட்சித்தொண்டர்கள் "போராட்டம் வெற்றி!" என்று கோஷம் போட்டுக்கொண்டு தலைதெறிக்க ஓடி விட்டார்கள்!//
சூப்பர்!
இதத்தான் இனிமே பண்ணனும். அப்பத்தான் இவனுங்க ரவுசு அடங்கும்! :)
கலக்கல் சேட்டை Stamp.
ஹெலிகாப்டர் ஆகாயத்தில் பறந்தபோது, ’ரொம்பக் குளுருது,’ன்னு ஹெலிகாப்டர் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேனை ஆஃப் செய்து விட்டார்!
நாங்களும் ஃபேனை ஆஃப் பண்ணுவோம் ஆன்னா வீட்டுல
அதகளம். சேட்டை சார்.
ரசிச்சுப் படிச்சேன்.
(பி.கு: நான் பரங்கிப்பேட்டைக்காரன்)
\\நாங்கள் எங்களுக்காகவே மக்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக்...மன்னிக்கவும்...மக்களுக்காகவே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்!//
இது தான் சேட்டைங்கிறது
சூப்பர்ர்,பெயர் எல்லாம் எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க...
அடுத்த கலக்கல்.. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி ஐடியாஸ் வருதோ.. எந்த வரி என்று எடுத்து சொல்ல.. டோட்டல் அட்டாக்கில்.. இங்கு வந்தால் மனம் விட்டு சிரிக்கலாம் என்பது மட்டும் காரண்டி..
naala irruku settai.. crazy mohan drama padicha mathuri irruku he..he..he.. (konjam overa sollitanooo.. vidra vidraa)
//எங்கள் கட்சித்தொண்டர்கள் கோல்கெட் பேஸ்ட்டால் பல்துலக்கி நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்வார்கள்.//
சேட்டை.. என்னாலே முடியலே... கலக்கிட்டிங்க போங்க... அப்புறம் போய் டிக்கிய தொறந்து விட்டீங்களா? (ஏன் கார் டிரைவருக்கு என்னாச்சு?)
அப்புறம் உங்க சோதிடத்துல ஒம்போது ராசிதானா? மீதிக்கெல்லாம் யாரு வந்து எழுதுவா? அடுத்தது உங்க சொறிகால்வளவன ரொம்ப நாளா மறந்துட்டிங்களே... சீக்கிரம் எதிர்பாக்கிறேன்.
சூப்பர் அண்ணாச்சி, இதுக்குதான் என் கட்சி ஆளுகள டி சட்டை போட சொல்றது , பொத்தான் பிரச்சினை வரக்கூடாது பாருங்க
சு’ண்டி
மோ’திரம் வரும் சீக்கிரமே வீட்டுக்கு
நான் இந்த எலெக்சன்ல நிக்கப் போறேன் சேட்டை :))
மக்கள் மனதை நோகடிக்கும் செயலை ஒரு போதும் செய்யகூடாது.
மக்கள் சந்தோஷமாய் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்கள்.
அய்யா சாமி சேட்ட, நல்ல சரியான தீர்வு ஒன்னு கெடச்சிருக்கு.
கிண்டல் இல்ல. நிசமாலுமே!
இனிமே யாராவது போராட்டம் பன்னி தீ குளிகிறதா ரோட்டுக்கு வந்தா
நம்ம ஜனங்க அவங்க அவுங்க வண்டிலேர்ந்து பெட்ரோல பிடிச்சி அவுங்களுக்கே
கொடுத்திட்டு இருந்து பாத்திட்டு வருவாங்க.
Chitra said...
//.......உண்மையை இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்களே..... சூப்பர்!//
எல்லாருக்கும் தெரிஞ்சது தானே? :-)
மிக்க நன்றி!
வானம்பாடிகள் said...
//செம கலக்கல் பேட்டி. அதும் அந்த 3 பொத்தான் பேரம்:)). அருமை சேட்டை//
ஹிஹி! அது ஒரு சர்தார்ஜி ஜோக்கோட உட்டாலக்கிடி! மிக்க நன்றி ஐயா! :-))
philosophy prabhakaran said...
// Me the first...//
ஊஹும்! பின்னூட்ட தில்கம் தான் First! அதுனாலென்ன, இதொண்ணும் மரத்தான் இல்லியே! மிக்க நன்றி! :-)
ஜெய்லானி said...
//நானே இந்த நியூஸை படிச்சிட்டு நொந்து நூடுல்ஸாயி இருந்தேன். சேட்டை அசத்திட்ட அசத்தி.
நானும் தான்! அதான் சூட்டோட சூடா எழுதிட்டேன்! மிக்க நன்றி! :-)
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//ஏலே மக்கா மேல சுதந்திரமா பறந்து தெரிகிற பறவைகளையும் க்ளோஸ் பண்ணிடலாம்னு எண்ணத்தில இருக்கீங்களா இது நடக்காதுல நாங்க காக்கா கூட்டத்தை அனுப்பி உங்க மேல அபிஸெகம் பண்ணிடுவோம்ல. சேட்டை கலக்கல் பகிர்வுக்கு நன்றி !//
காக்கா கூட்டமெல்லாம் இப்போ ஒரே மாநிலத்துலே மட்டும் தானிருக்காம். மிக்க நன்றி! :-))
மசக்கவுண்டன் said...
//ஆஹா, மொதல் போணி நான்தானா, குண்டக்க மண்டக்க எளுதினாலும் கோளாறா எளுதீருக்கிறீரையா, பைய பாத்து போங்கையா, ஊட்டுக்கு ஆட்டோ வந்துரப்போகுது.//
முதல் போணியா? என்னண்ணே, எல்லாரும் இப்படியே சொல்லுறீங்க! வந்ததே பெரிய விஷயம்! மிக்க நன்றிண்ணே! :-))
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//யோவ் என்னய்யா நடக்குது தமிலிஷ் ஓட்டு 14. கமான்ட் 0. கள்ள ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கீரா? பிச்சுபுடுவேன்.//
ஹலோ, நீங்க ரொம்ப நல்லவனா இருக்கலாம்! ஆனா, கள்ள ஓட்டு போடுற அளவு என்னை நல்லவன்னு நினைச்சீங்களா? ஹிஹி, அது ஒண்ணுமில்லே! கமெண்ட் மாடரேசன்லே வச்சிருக்கேன். கொஞ்சம் தொல்லை ஆரம்பிச்சிருக்குங்கிறதாலே! மிக்க நன்றி! :-)
LK said...
//சரி சீக்கிரம் சேட்டைக்கு ஆட்டோ அனுப்ப வேண்டித்தான்//
எத்தனை ஆட்டோ அனுப்புவீங்க? ஆட்டோ ஸ்டாண்டாயிரும் போலிருக்கே! மிக்க நன்றி! :-)
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//சூப்பர்!இதத்தான் இனிமே பண்ணனும். அப்பத்தான் இவனுங்க ரவுசு அடங்கும்!:)//
அடங்கிரும்னா நினைக்கறீங்க? :-)) எது எப்படியோ, உங்களுக்குப் பிடிச்சிருக்கிறதுங்கிறது ரொம்ப பெருமையா இருக்கு! மிக்க நன்றி! :-)
வெங்கட் நாகராஜ் said...
// கலக்கல் சேட்டை Stamp.//
மிக்க நன்றி சார்! தன்யவாத்!
soundar said...
//நாங்களும் ஃபேனை ஆஃப் பண்ணுவோம் ஆன்னா வீட்டுல//
ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! அடிக்கடி வாங்க! :-)
இப்னு ஹம்துன் said...
//அதகளம். சேட்டை சார். ரசிச்சுப் படிச்சேன்.
(பி.கு: நான் பரங்கிப்பேட்டைக்காரன்)//
ரொம்ப நன்றிங்க! :-)
பரங்கிப்பேட்டையா? யாதும் ஊரே யாவரும் கேளிர்! :-) வருகைக்கு மீண்டும் நன்றி!
Blogger சிவா (கல்பாவி) said...
//இது தான் சேட்டைங்கிறது//
ஹி.ஹி! மிக்க நன்றி! :-)
Mrs.Menagasathia said...
// சூப்பர்ர்,பெயர் எல்லாம் எப்படி இப்படிலாம் யோசிக்கிறீங்க...//
எல்லாம் ஒரு ஃபுளோவிலே வர்றது தான்! (இதையே இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லப்போறேனோ?)
மிக்க நன்றி! :-)
Blogger ரிஷபன் said...
//அடுத்த கலக்கல்.. உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி ஐடியாஸ் வருதோ.. எந்த வரி என்று எடுத்து சொல்ல.. டோட்டல் அட்டாக்கில்.. இங்கு வந்தால் மனம் விட்டு சிரிக்கலாம் என்பது மட்டும் காரண்டி..//
ஆஹா, உங்க பாராட்டைப் படிச்சு மனசு நிறைஞ்சிடுச்சி! எனக்கும் அது தாண்ணே குறிக்கோள்! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-))
Blogger கரிகாலன் said...
//சேட்டை.. என்னாலே முடியலே... கலக்கிட்டிங்க போங்க... அப்புறம் போய் டிக்கிய தொறந்து விட்டீங்களா? (ஏன் கார் டிரைவருக்கு என்னாச்சு?)//
அட, இதுலே கூட லாஜிக் எல்லாம் பார்ப்பீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்!
//அப்புறம் உங்க சோதிடத்துல ஒம்போது ராசிதானா? மீதிக்கெல்லாம் யாரு வந்து எழுதுவா?//
ஹிஹி! வருது வருது! நம்ம ஜோசியருக்குக் கொஞ்சம் ஆணி அதிகமாயிருச்சு! அதான்...!
//அடுத்தது உங்க சொறிகால்வளவன ரொம்ப நாளா மறந்துட்டிங்களே... சீக்கிரம் எதிர்பாக்கிறேன்.//
அதுவும் விரைவில் வரும்! மிக்க நன்றி! :-))
arul Sudarsanam said...
//naala irruku settai.. crazy mohan drama padicha mathuri irruku he..he..he.. (konjam overa sollitanooo.. vidra vidraa)//
ஆஹா! கிரேஸி மோகனா? என்னோட ஃபேவரைட்! :-))
மிக்க நன்றி!
கே.ஆர்.பி.செந்தில் said...
//சூப்பர் அண்ணாச்சி, இதுக்குதான் என் கட்சி ஆளுகள டி சட்டை போட சொல்றது ,பொத்தான் பிரச்சினை வரக்கூடாது பாருங்க//
நல்ல வேளை! வேறே எதுவும் சொல்லாம விட்டீங்களே! மிக்க நன்றி! :-))
துரை. ந.உ 9443337783 said...
//சு’ண்டி
மோ’திரம் வரும் சீக்கிரமே வீட்டுக்கு//
ஐயையோ, என்ன எல்லாரும் பயமுறுத்துறாங்கன்னா நீங்களுமா? :-(
//நான் இந்த எலெக்சன்ல நிக்கப் போறேன் சேட்டை :))//
ஆஹா! எங்கள் ஓட்டு துரை ஐயாவுக்கே!
மிக்க நன்றி!
கோமதி அரசு said...
//மக்கள் மனதை நோகடிக்கும் செயலை ஒரு போதும் செய்யகூடாது.//
உண்மை! மக்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது!
//மக்கள் சந்தோஷமாய் தங்கள் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்கள்.//
ஹும்! புரிகிறது! :-)) மிக்க நன்றி!!
கக்கு - மாணிக்கம் said...
//அய்யா சாமி சேட்ட, நல்ல சரியான தீர்வு ஒன்னு கெடச்சிருக்கு. கிண்டல் இல்ல. நிசமாலுமே! இனிமே யாராவது போராட்டம் பன்னி தீ குளிகிறதா ரோட்டுக்கு வந்தா நம்ம ஜனங்க அவங்க அவுங்க வண்டிலேர்ந்து பெட்ரோல பிடிச்சி அவுங்களுக்கே கொடுத்திட்டு இருந்து பாத்திட்டு வருவாங்க.//
இதுவரை யாருமே செய்யலியா? என்னண்ணே இது? :-)))
மிக்க நன்றி!
//ஹெலிகாப்டர் ஆகாயத்தில் பறந்தபோது, ’ரொம்பக் குளுருது,’ன்னு ஹெலிகாப்டர் மேலே சுத்திக்கிட்டிருந்த ஃபேனை ஆஃப் செய்து விட்டார்!//
நம்ம ராஜசேகர ரெட்டி இததான் பண்ணி இருப்பாரோ
//இவர்கள் தீக்குளிப்பதாகச் சொன்னதும் சாலையில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது! பொதுமக்கள் அவரவர் வாகனங்களிலிருந்த பெட்ரோலைக் காலி செய்து பாட்டிலில் நிரப்பி இவர்களிடம் கொடுப்பதற்குள்ளாகவே எதிர்க்கட்சித்தொண்டர்கள் "போராட்டம் வெற்றி!" என்று கோஷம் போட்டுக்கொண்டு தலைதெறிக்க ஓடி விட்டார்கள்!//
பல் தெறிக்க சிரிக்க முடிகிறது ............
Post a Comment