Monday, May 3, 2010

"சுறா"வுக்குப் போன சூடாமணி

சுங்குவார்சத்திரம் சூடாமணி மவுண்ட் ரோட்டில் சட்டையைக் கிழித்துக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறான்.

"நானடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்க மாட்டே!"

அம்மா: சேட்டை! தெய்வம் மாதிரி வந்தே! இங்கே பாரு, என் பேச்சைக் கேட்காம அந்தப் படத்துக்குப் போயி இந்த நிலைமைக்கு ஆயிட்டான் பாரு!

சேட்டை: ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா! இவனை அரோகரா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாம்.

இடம்: அரோகரா ஆஸ்பத்திரி

சேட்டை: சார்..சார், எமர்ஜென்ஸி வார்டு எந்தப் பக்கம் இருக்கு?

வார்டுபாய்: என்னாச்சு?

சேட்டை: என் ஃபிரண்டு சூடாமணி ’சுறா’ படம் பார்த்திட்டான் சார்

வார்டுபாய்: ஐயையோ, அதுக்குன்னு புதுசா வார்டு திறந்திருக்காங்க பாரு! அங்கே கொண்டு போங்க!

இடம்: அரோகரா ஆஸ்பத்திரியின் ’சுறா’ வார்டு

சேட்டை: டாக்டர், இவன் சுறா படத்துக்குப் போயிட்டான். எப்படியாவது காப்பாத்துங்க! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.

டாக்டர்: யோவ், நாலஞ்சு நாளா இங்கே வர்றதெல்லாம் அந்தக் கேசு தானய்யா! பன்றிக்காய்ச்சலுக்குக் கூட இங்கே இவ்வளவு கூட்டம் வரலே! முதல்லே நீங்க வெளியே இருங்க!

(சேட்டைக்காரன் வெளியேறுகிறார்)

டாக்டர்: நர்ஸ்! இந்தக் கேஸைப் பார்த்தா ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தைப் பார்த்தே பைத்தியம் பிடிச்சவன் மாதிரியிருக்கே!

நர்ஸ்: என்ன பண்ணலாம் டாக்டர்?

டாக்டர்: நமக்கு மட்டும் தானே தெரியும்? நாமபாட்டுக்கு இது சுறாபோபியான்னு ட்ரீட்மெண்ட் பண்ணுவோம். அந்த சேட்டைக்காரன் கிட்டே போயி சொல்லிடுங்க!

(நர்ஸ் வெளியே சென்று சேட்டைக்காரனிடம் சொல்லுகிறார்)

நர்ஸ்: உள்ளே ட்ரீட்மெண்ட் நடந்திட்டிருக்கு! காப்பாத்திடலாம். எதுக்கும் நீங்க கேஷ்-கவுண்டரிலே போயி ஒரு ஐநூத்தி ஓரு ரூபாய் அட்வான்ஸ் கட்டிருங்க! அப்பத்தான் அட்மிட் பண்ணிப்போம்.

(சேட்டைக்காரன் கேஷ்-கவுன்டருக்குப் போய், ஐநூற்றி ஒன்று ரூபாய் அட்வான்ஸ் கட்டி, சூடாமணியின் பெயரில் ரசீது வாங்குகிறார். பிறகு, மருந்துக்கடைக்குச் சென்று முப்பத்தி மூன்று ரூபாய் பதினெட்டு பைசாவுக்கு மருந்து வாங்கி, அதற்கான பில்லிலும் சூடாமணியின் பெயர்போட்டுப் பெற்றுக்கொள்ளுகிறார்)

சேட்டைக்காரன்: டாக்டர், சூடாமணிக்கு எப்படியிருக்கு?

டாக்டர்: ஒரு ஊசி போட்டோம்! அந்த நேரம் பார்த்து எங்க டாக்டர் ஒருத்தரோட ரிங் டோனிலே வில்லு பாட்டு வந்திச்சா! திரும்ப பைத்தியம் முத்திருச்சு! ஹைதராபாத்துலேருந்து டாக்டர் கடகடாலு ரெட்டின்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் தலைமறைவா ஓடிவந்து சென்னையிலே தங்கியிருக்காரு! ஆந்திராவுலே பொப்புலு கப்புலுன்னு தெலுங்குப்படம் ரிலீஸ் ஆனபோது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தவரு! ஆனா, விசிட்டிங் ஃபீஸ் நூத்தி ஓரு ரூபாயும் சார்மினார் சிகரெட்டும் கொடுக்கணும்.

சேட்டைக்காரன்: பணத்தைப் பத்திக்கவலைப்படாதீங்க சார்! நூத்தி ஒண்ணு என்ன, கூட ஒரு ரூபாய் சேர்த்து நூத்தி ரெண்டாவே கொடுக்கறேன். வந்து பார்க்கச் சொல்லுங்க சார்!

(டாக்டர் கடகடாலு ரெட்டி சைக்கிள் ரிக்ஷாவில் வந்து இறங்கி, சூடாமணியைப் பரிசோதிக்கிறார்)

சேட்டை: டாக்டர், சூடாமணிக்கு என்ன ஆச்சு?

க.க.ரெட்டி: ரொம்ப சீரியசாத் தான் இருக்காரு! முழிச்சிருக்கும்போது பஞ்ச் டயலாக் பேசறாரு! தூக்க ஊசி போட்டா விஜய் பாட்டுப்பாடறாரு! இன்னும் ரெண்டு மணிநேரம் கழிச்சு தசாவதாரம் பாட்டுப் பாடினாருன்னா பொழைக்கிற வாய்ப்பிருக்கு!

இடம்: அரோகரா ஆஸ்பத்திரி-சுறா வார்டு

நர்ஸ்: சார், இந்தப் பைத்தியம் என்னைத் தமன்னான்னு நினைச்சுக்கிட்டு குத்தாட்டம் போடலாமான்னு கேட்குது! சீக்கிரம் இதை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க சார்!

டாக்டர்: முதல்லே இவரைக் கீழ்ப்பாக்கத்துக்கு எடுத்திட்டுப் போகச் சொல்லலாம்.

இடம்: சுறா வார்டு வராண்டா

சேட்டை: சூடாமணி அம்மா! இப்போ டாக்டர் வருவாரு! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம். பேஷியன்ட் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியலேன்னு சொல்லுவாரு பாருங்க!

(டாக்டர் வருகிறார்)

டாக்டர்: ஐயாம் சாரி மிஸ்டர் சேட்டைக்காரன்! நாங்க எவ்வளவோ ட்ரை பண்ணினோம். பேஷியன்ட் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியலே

சூடாமணி அம்மா: சேட்டை, அப்படியே சொல்லுறாரு! நீங்க ரெண்டு பேரும் கூட்டா?

சேட்டைக்காரன்: சும்மாயிருங்கம்மா நீங்க சொல்லுங்க டாக்டர்

டாக்டர்: மொத்தம் அறுநூத்தி எட்டு ரூபாய் செலவாயிருக்கு! மீதி நூத்தி ஏழு ரூபாயைக் கட்டிட்டு பேஷியன்டை நீங்க கீழ்ப்பாக்கத்துக்குக் கூட்டிக்கிட்டுப்போகலாம்.

சேட்டைக்காரன்: இன்னும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தா நாங்க சூடாமணியைக் கூட்டிக்கிட்டுப் போறோம்.

டாக்டர்: வாட்? என்ன சொல்றீங்க??

சேட்டை: செலவைப் பத்திக்கவலைப்படாதீங்கன்னு டாக்டர் கிட்டேயும், டைரக்டர் கிட்டேயும் சொல்லக் கூடாது! ரெண்டு பேரும் செலவை இழுத்து விட்டு கடைசியிலே எல்லாருக்கும் ஆப்பு வச்சிடறீங்க!

புரியலே டாக்டர்? ஏற்கனவே வில்லு படம் பார்த்ததிலேருந்தே பைத்தியம் பிடிச்சதா கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியே சர்டிபிகேட் கொடுத்த ஆளுக்கு சுறாபோபியான்னு ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கீங்க! அதுக்கான ஆதாரம் எங்கிட்டே இருக்கு! அரோகரா ஆஸ்பத்திரியோட எம்.டி, இங்கே, இப்போ வந்தாகணும்.

டாக்டர்: அவரு இப்போ வரமுடியாது சேட்டை! மார்னிங் ஷோ ’சுறா’ பார்க்க ஃபேமிலியோட போயிருக்காரு.

சேட்டைக்காரன்: என்னது? பேமிலியோட போயிருக்காரா? அப்படீன்னா அவரு பேய்முழியோட தான் திரும்பி வருவாரு!

டாக்டர்: சேட்டை, இதோ என் சம்பளப்பணம் அப்படியே தந்திடறேன்! ரமணா படத்துலே விஜயகாந்த் பண்ணுற மாதிரி பண்ணிடாதே! இந்தா பதினையாயிரம் ரூபாய் இருக்கு! வச்சுக்கோ, சூடாமணியைக் கூட்டிக்கிட்டு முதல்லே இடத்தைக் காலிபண்ணு!

சேட்டைக்காரன்: சூடாமணி அம்மா! இந்தாங்க இதுலே பதினைஞ்சு ரூபாய் இருக்கு! மீதி பதினாலாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி அஞ்சு ரூபாயை என்னோட சர்வீஸ் சார்ஜா எடுத்துக்கிட்டேன். சூடாமணியைக் கூட்டிக்கிட்டு அப்படியே 23Cயைப் பிடிச்சு நீங்க வீடுபோய்ச் சேருங்க!

அம்மா: மவராசா! நீ நல்லாயிருக்கணும்! சூடாமணி! சூடாமணி! வாடா வூட்டுக்குப்போகலாம்.

சேட்டைக்காரன்: டாக்டர்! நம்ம நாட்டுலேயே நாலெழுத்துப் படிச்சவங்க ரெண்டே பேரு தான். ஒருத்தன் SSLC; இன்னொருத்தன் MBBS. இப்படிப் பணத்துக்காக படத்தோட பெயரை மாத்தி மாத்தி வைத்தியம் பார்க்கறீங்களே?

டாக்டர்: தெரியாமப் பண்ணிட்டோம் சேட்டை! மன்னிச்சிருங்க!

சேட்டைக்காரன்: மன்னிப்பு, தமிழிலே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை! உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தாங்க டிக்கெட்! எல்லா டாக்டருங்களும் போய் ’சுறா’ படம் பாருங்க!

டாக்டர்: ஐயோ (மயக்கம் போட்டு விழுகிறார்)

48 comments:

நீச்சல்காரன் said...

சிட்சுவேசனும், பினிசிங் டச்சும் ரொம்ப நல்லயிருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

en ippadi. ennaala mudiyala

KALYANARAMAN RAGHAVAN said...

"சுறா" வை இப்படி ஆளாளுக்கு கூறு போடறதைப் பார்த்தா எனக்கு ஒரு துண்டு கூட (பதிவு போட) மிச்சம் வைக்க மாட்டீங்க போலிருக்கே.என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைத்த வைத்த பதிவு.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

ஸ்ரீராம். said...

ஆஹா....கிளம்பிட்டாங்கையா...

Chitra said...

:-)

சைவகொத்துப்பரோட்டா said...

"புட்டு" வச்சிட்டீங்களே அப்பு!!! :))

பினாத்தல் சுரேஷ் said...

:)

அந்த டாக்டர்ங்க எந்த வார்ட்லே சேருவாங்க? அவங்களுக்கு யாரு ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்க?

ஆயில்யன் said...

//டாக்டர்! நம்ம நாட்டுலேயே நாலெழுத்துப் படிச்சவங்க ரெண்டே பேரு தான். ஒருத்தன் SSLC; இன்னொருத்தன் MBBS.//

:))))


டோட்டலி கலக்கல் - சுறா பார்த்தப்பிறகு தப்பி வந்து எழுதினதா இல்ல பாக்காமலே எஸ்ஸாகி எழுதியதா #டவுட்டு :))

முகிலன் said...

இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்

ச.செந்தில்வேலன் said...

சக்க லொள்ளுங்க. அக்மார்க் சேட்டை!!

மிகவும் ரசித்தேன்.

☀நான் ஆதவன்☀ said...

:)))))))))))))))))))))))) சேட்டை அக்மார்க் காமெடி

வானம்பாடிகள் said...

சேட்டைக்காரன் சுறாவுக்கு வேட்டைக்காரன்:))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

செம காமெடி சேட்டைக்காரன்..!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கலக்கிட்டீங்க சேட்டை!

:))

மஞ்சூர் ராசா said...

படம் பாக்காமலே பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கே......

அக்பர் said...

சிரிச்சு முடியலை. கலக்கல் சேட்டை.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சேட்டையோட சேட்டை ஆரம்பமாயிருச்சு.. சிரிச்சி சிரிச்சி சிரிச்சி...

சூடாமணிய நினைச்சா ரொம்ப பாவமாஇருக்கு.. இப்படியா ஆகணும் கடவுளே..

நல்லவேளை, நான் நேத்து சுறா படத்த பார்த்தவுடனே முதல் சீனிலே படத்தை குளோஸ் பண்ணிட்டேன்.

அதிஷா said...

:-)) பாவம் விஜய்

Bairave said...

என்ன சேட்டை? வேட்டை ஆரம்பமாயிடுச்சா? நடத்துங்க நடத்துங்க.

பனங்காட்டான் said...

எலே சேட்ட தாங்க முடியலலே!

குசும்பன் said...

சேட்டை, அப்படியே சொல்லுறாரு! நீங்க ரெண்டு பேரும் கூட்டா?//

கலக்கல்!:)

jeyaprasad said...

super da machi

பிரேமா மகள் said...

//இது விஜய்க்கு தெரியுமா?//


எனக்குகொரு டவுட்.. நீங்க கலாய்க்கிறது விஜயையா இல்லை சன் டி.வி கலாநிதி மாறனையா?

செ.சரவணக்குமார் said...

கலக்கல் சேட்டை. அப்படியே அடிச்சு ஆடுங்க.

VAAL PAIYYAN said...

kalakittinga
SUPERB SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

jaisankar jaganathan said...

யோவ் நீ பதிவர் சங்கத்துக்கு எதிரின்னு போட்டுக்குடுத்துடுவேன். இனிமா வருங்கால முதல்வர் பத்தி ஏதாவது எழுதின அவ்வளவுதான்.

(சேட்ட இது ஜோக் தான். சீரியஸா எடுத்துக்காதீங்க)

சுதாகர் said...

இப்போ ரமணாவ உல்ட்டா பன்னிட்டீங்க..... விட்டா எல்லா சினிமாவையும் ரீமேக் பன்னிடுவீங்க போலிருக்கே.....

வாழ்த்துக்கள் சேட்டை.....

மாதேவி said...

சுறாவைக் கூறுபோட்டு சுவைக்க வைத்துவிடுவீர்கள் போல :)

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))

பிரபாகர் said...

ம்....சுறாவை இங்குமா? என கொஞ்சம் தொய்வோடு படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இனி சேட்டை எல்லாப்படத்துக்கும் இதுபோல் எழுத வேண்டுகோள் வைக்கவேண்டும்போல் இருந்தது படித்து முடித்தபின். அருமை நண்பா!

சுறாப் பாய்ச்சலில் சேட்டை இடுகை!

பிரபாகர்...

பட்டாபட்டி.. said...

சுறா.. ஆஸ்காருக்கு அனுப்பவேண்டிய நல்ல படம்..

படத்தை பாருங்க..அனுபவிங்க...(மினிமம் - 1 புல் அடிச்சிட்டு பார்க்கலாம்..)

நன்றி..
சுறா முன்னேற்றக்கழக தலைவர்..

மசக்கவுண்டன் said...

சுறா இவ்வளவு ஸ்ட்ராங்கான படமா, பாத்துடவேண்டியதுதான். எனக்கும் பைத்தியம் வைத்தியம் பாக்க வந்துருங்க சேட்டை!

கமலேஷ் said...

ரொம்ப நல்லயிருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் said...

//டாக்டர்! நம்ம நாட்டுலேயே நாலெழுத்துப் படிச்சவங்க ரெண்டே பேரு தான். ஒருத்தன் SSLC; இன்னொருத்தன் MBBS.//

:))))


டோட்டலி கலக்கல் - சுறா பார்த்தப்பிறகு தப்பி வந்து எழுதினதா இல்ல பாக்காமலே எஸ்ஸாகி எழுதியதா #டவுட்டு :))//

//
ரிப்பீட்டேய்..:)

philosophy prabhakaran said...

பையன் உயிர் பொழச்சதே பெரிய விஷயம்... its a medical miracle...

philosophy prabhakaran said...

http://philosophyprabhakaran.blogspot.com/2010/05/blog-post.html

இந்த இணைப்பில் நான் எழுதியுள்ள பதிவில் உங்களைப் பற்றி சில வரிகளை எழுதியிருக்கிறேன்... நேரம் கிடைத்தால் வாசியுங்கள்...

soundarapandian said...

http://rasikan-soundarapandian.blogspot.com/

soundarapandian said...

அறுமை அருமை
http://rasikan-soundarapandian.blogspot.com/

pattasu said...

aanalum vijay ippadi pannakoodathu.
by
patttasu.blogspot.com

AlwaysRight- said...

அணு அளவும் பயமில்லை , இறுதி போட்டியில், சுறா படத்தை முழுமையாக பார்க்க வேண்டிய போட்டியில் இருவர் சாவு , மருத்துவ மனையில் சேர்க்க பட்ட மற்ற இறுதி போட்டியாளர்கள் கூறியதாவது "இத்தன கஷ்டமா இருக்கும்னு எங்களுக்கு தெரியல , எவ்வளவோ சுற்றுகள வெற்றிகரமா முடிச்சோம் , இது எங்களால முடியல ... இத எதிர்த்து மனித உரிமை கமிசன்ல வழக்கு தொடுக்க போறோம் "

சேட்டைக்காரன் said...

அன்புடையீர், பணிப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக, உங்களுக்குத் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். குறிப்பாக, முதல் முறையாக எனது வலைப்பூவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்பதோடு மீண்டும் வருக என்று வேண்டிக்கொள்கிறேன்.

@ நீச்சல்காரன்
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@ KALYANARAMAN RAGHAVAN
@ ஸ்ரீராம்
@ Chitra
@ பினாத்தல் சுரேஷ்
@ சைவகொத்துப்பரோட்டா
@ ஆயில்யன்
@ முகிலன்
@ ச.செந்தில்வேலன்
@ ☀நான் ஆதவன்☀
@ வானம்பாடிகள்
@ உண்மைத் தமிழன்(15270788164745573644)
@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
@ மஞ்சூர் ராசா
@ Starjan ( ஸ்டார்ஜன் )
@ அக்பர்
@ அதிஷா
@ பனங்காட்டான்
@ Bairave
@ குசும்பன்
@ jeyaprasad
@ பிரேமா மகள்
@ செ.சரவணக்குமார்
@ VAAL PAIYYAN
@ jaishankar jaganathan
@ சுதாகர்
@ மாதேவி
@ ச்சின்னப் பையன்
@ பிரபாகர்
@ பட்டாபட்டி
@ மசக்கவுண்டன்
@ கமலேஷ்
@ முத்துலெட்சுமி/muthuletchumi
@ philosophy prabhakaran
@ soundarapandiyan
@ pattasu

ஆகிய உங்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பட்டாபட்டி.. said...

ஆகிய உங்கள் அனைவருக்கும் இருகரம் கூப்பி இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
//

கண்கள் பனித்தது.. இதயம் கனத்தது..

Panneer selvam said...

padama ethu.. Mokka Naye .. waste 100 rupees .. nalla biriyani yavathu sunday saptrukalam...

in this film i like only one sceen. In that villan bunched the mokka vijay.. thats only good in this film..

More interesting see my blog

http://panneer-madurai.blogspot.com

ஷர்புதீன் said...

:)

அண்ணாமலை..!! said...

ஐயோ! இந்த சேட்டையோட சேட்டை
தாங்க முடியலையே!!
:)

அசோகன் said...

சுறா படத்தைப் பார்த்து பைத்தியமான பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற வைத்தியருக்குப் பைத்தியம் புடிச்சு அவரெந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற வைத்தியர்கிட்ட பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குறதுன்னு பைத்தியமா அலைஞ்சிகிட்டிருக்கிறார்.

மிஸ்டர் மனிதன் said...

முக்கிய அறிவிப்பு:

சென்னை மெரீனா கடற்கரையில் கூட்டம் கூட்டமாக மீன்கள் செத்து கரை ஒதுங்கின. சிபிசிஐடி போலிசார் துப்பு துலக்கியதில் உண்மை வெளிவந்தது.
.
.
.
.
.
விஜய் நடிக்கும் படத்திற்கு 'சுறா' என்று பெயர் வைத்ததால் மீன்கள் அனைத்தும் தற்கொலை செய்தது கண்டுப்பிடிப்பு..

(ஹி..ஹி..ஹி.. படம் வரதுக்கு முன்னால வந்த sms.. )

மோகன் குமார் said...

Very nice. Keep it up