"ஹலோ! யாருங்க?"
"மேடம்! என் பேரு சேட்டைக்காரன்! சப்பைமூக்கன் வீட்டுலே இருக்காருங்களா?"
"யாருய்யா அது மரியாதையில்லாமப் பேசுறது? உங்களுக்கு எந்த நம்பர் வேணும்?" என்று சீறினார் அந்தப் பெண்மணி.
"மேடம், கோவிச்சுக்காதீங்க! பிரபல வலைப்பதிவாளர் சப்பைமூக்கன் வீடு தானுங்களே?" என்று மீண்டும் மிகவும் பணிவாய்க் கேட்டேன்.
"என்னது? வலைப்பதிவா? சரிதான், ஆன்லைன் ஷேர்-மார்க்கெட் பிசினஸ் பண்ணறேன்னு இந்த மனிசன் இதைத்தான் பண்ணிட்டிருக்காரா? வரட்டும், உண்மையிலேயே அவரு மூக்கை சப்பையாக்கிடறேன்," என்று போனைப் படக்கென்று வைத்தார் அந்தப் பெண்மணி.
ஐயையோ, என் அபிமான வலைப்பதிவாளரை மனைவியிடம் சிக்க வைத்து விட்டேனே என்ற குற்ற உணர்ச்சியோடு யோசித்துக்கொண்டிருந்தபோதே, சிறிது நேரம் கழித்து சப்பைமூக்கனிடமிருந்து போன் வந்தது.
"சேட்டை, எதுக்குய்யா வீட்டுக்கெல்லாம் போன் பண்ணுறே? அப்படியென்ன தலைபோற சங்கதி?" என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது கூடவே மளார் மளாரென்று ரீ-ரிக்கார்டிங் சத்தமும் சேர்ந்தே கேட்டது.
"அண்ணே, ஒண்ணும் அவசரமில்லை! அண்ணி கவனிச்சு முடிச்சதுக்கப்புறம் அயோடக்ஸெல்லாம் தடவிட்டு சாவகாசமா போன் பண்ணுங்க; நான் வெயிட் பண்ணுறேன்," என்று அனுதாபத்துடன் சொன்னேன்.
"அட நீ வேறே? பக்கத்து வீட்டுலே புதுசா குடிவந்திருக்கிறவங்க சுவத்துலே ஆணி அடிச்சிட்டிருக்காங்கய்யா! நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்லை; விஷயத்தைச் சொல்லு!" என்று சலிப்புடன் கூறினார் சப்பைமூக்கன்.
"அண்ணே? இந்த பார்வதி ஓமனக்குட்டன் என்ன சொல்லியிருக்காங்கன்னு படிச்சீங்களா?" என்று குரல் தழுதழுக்கக் கேட்டேன். "பிரபுதேவா- நயன்தாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் 'பலே' ஆதரவு!" படிச்சீங்களா இல்லியா?"
"யாருய்யா பார்வதி? பேரே கேள்விப்பட்டதில்லையே?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் சப்பைமூக்கன்.
"உலக அழகிப்போட்டியிலே கலந்துக்கிட்டவரு அண்ணே, இப்போ ஏதோ சினிமாவுலே கூட நடிக்கிறாராம். நடிகைங்க ஏற்கனவே திருமணமான ஆண்களைத் திருமணம் செய்தால் தப்பில்லேன்னு சொல்லியிருக்காங்க!"
"சேட்டை, அவங்க போன் நம்பர், அட்ரஸ் தெரியுமா?" என்று உற்சாகமாகக் கேட்ட சப்பைமூக்கன் மறுகணமே "ஐயோ," என்று அலறினார்.
"என்னண்ணே, பக்கத்து வீட்டுலே ஆணியடிச்சா நீங்க ஏன் ஐயோன்னு கத்தறீங்க?" நான் பதறினேன்.
"அது ஒண்ணுமில்லே சேட்டை! நான் சுவத்தோட சாய்ஞ்சு உட்கார்ந்திருந்தேனா, அவங்க அந்தப் பக்கம் அடிச்ச ஆணி இந்தப் பக்கமா வந்து முதுகுலே குத்திருச்சு! அதான் அலறிட்டேன்." என்று சப்பைமூக்கன் பதிலளித்தாலும் எனக்கென்னமோ நம்பிக்கையில்லை.
"அடடா, இரத்தம் வரப்போகுதண்ணே!" அக்கறையோடு சொன்னேன்.
"இரத்தமா? ஊஹும், எத்தனை வருஷமா அடிச்சிட்டிருக்காங்க? ஒருவாட்டி கூட இரத்தம் வந்ததே கிடையாது! நான் பாட்டுக்கு ஐயோன்னு கத்திட்டே கேட்குறேன்; நீ பாட்டுக்கு மேட்டரைச் சொல்லு சரியா?" என்று பேசுவதற்கே சற்றுத் திணறியபடி கூறினார் சப்பைமூக்கன்.
"பார்வதி என்ன சொல்றாங்க தெரியுமா? கணவர் இன்னொரு பெண்ணைக் காதலிப்பது மனைவிக்குப் பிடிக்கலேன்னா பிரிந்து போக வேண்டியதுதானேன்னு கேட்கிறாங்க அண்ணே!" என்று குண்டைத் தூக்கிப்போட்டேன்.
"சரியாத்தானே சொல்லியிருக்காங்க!" என்று கூவிய சப்பைமூக்கன் உடனே,"ஐயோ, பலமா விழுந்திருச்சே!" என்று அலறினார்.
"அண்ணே! ஒண்ணு நான் பேசறேன்; இல்லாட்டி அவங்க ஆணி அடிக்கட்டும்! என் கான்சன்ட்ரேஷன் கெடுதில்லே?" என்று கோபமாகச் சொன்னேன்.
"நீ பாட்டுக்குப் பேசு சேட்டை," என்று பதிலளித்தார் சப்பைமூக்கன். "எவ்வளவு அடிவிழுந்தாலும் என் கான்சன்ட்ரேஷன் மட்டும் கெடவே கெடாது! என் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி உனக்குத் தெரியாது."
"உங்க இஷ்டம்! நீங்க ரொம்ப அனுபவசாலியான பதிவர்! அந்தப் பொண்ணு இப்படியொரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறதைக் கண்டிச்சு ஒரு இடுகை போடுங்கண்ணே!" என்று உசுப்பி விட்டேன்.
"என்னய்யா இது? இன்னும் ஒரு படத்துலே கூட நடிக்காத ஒரு நடிகை ஏதோ சொல்லிட்டா அதுக்கெல்லாமா இடுகை போடுறது? அதுவும் இந்த பிரபுதேவா-நயன்தாரா மேட்டர் ரொம்பப் புளிச்சுப்போன சப்ஜெக்ட்டாச்சேய்யா! வேறே யாராவது அரசியல் கட்சியிலே சேர்ந்திருக்காங்கன்னா சொல்லு! அவங்க இதுவரை கொடுத்த பேட்டியெல்லாத்தையும் படிச்சிட்டு அதை வச்சு வெள்ளைத்தோலு, ஜன்னல் வைச்ச ஜாக்கெட்டுன்னு கிழிகிழின்னு கிழிச்சிடறேன். இன்னி தேதியிலே உசிரோட இருக்கிறவங்களோட படம் மட்டுமே ஒரு எண்பது ஜி.பி. இருக்கு! பொளந்து கட்டிட மாட்டேன்?" என்று விளக்கினார் சப்பைமூக்கன்.
"என்னண்ணே, ஆணியடிக்கிறதை நிறுத்திட்டாங்க போலிருக்கே?" என்று கேட்டேன் நான்.
"ஒண்ணுமில்லே! போன் பேசிட்டிருக்காங்க, அனேகமா ராங் நம்பர்னு நினைக்கிறேன். ஒரு அரைமணி நேரம் கழிச்சுத் திரும்ப ஆணியடிக்க ஆரம்பிச்சிருவாங்க! நீ கன்டின்யூ பண்ணுய்யா!" என்றார் சப்பைமூக்கன் எரிச்சலுடன். "வேறே என்னென்ன சொல்லியிருக்காங்க பார்வதி?"
"கதைக்கு முக்கியமா இருந்தா கவர்ச்சியா நடிப்பாங்களாம்!"
"ஐயோ!"
"என்னாச்சு அண்ணே? ஆணியா?"
"இல்லைய்யா! ஒரு காலத்துலே எல்லா நடிகைகளும் சொன்னதை அப்படியே சொல்லுறாங்களேன்னு அசந்து போயிக் கத்திட்டேன். நல்ல விபரமான பொண்ணாத் தான் இருக்குது இந்தப் பார்வதி! தமிழ் சினிமாவுலே ஒரு பெரிய ரவுண்டு வரும் பாரு!" என்று ஆருடம் சொன்னார் சப்பைமூக்கன். "அப்புறம் வேறென்ன சொல்லியிருக்குறாங்க?"
"தேவைப்பட்டா நீச்சலுடையிலும் நடிப்பாங்களாம்!"
"ஆஹா! அப்படீன்னா முத்தக்காட்சி?"
"அதுவும் தேவைப்பட்டா நடிப்பாங்களாம்!"
"சேட்டை, செமத்தியான மேட்டர் சொல்லியிருக்கே! இன்னிக்கு ராத்திரி ஃபிளாஸ்கு நிறைய சுக்குக்காப்பியும் ஒரு கட்டு காலேஜ்பீடியும் வாங்கி வச்சுக்கிட்டு, விடிய விடிய தூக்கம் முழிச்சாவது இந்தப் பொண்ணைக் கண்டபடி திட்டி ஒரு இடுகை போட்டிடறேன்!" என்று உற்சாகமாகச் சொன்னார் சப்பைமூக்கன்.
"இன்னிக்கேவா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
"பின்னே? மத்தவங்களை மாதிரியே இவங்களும் ஒரு அம்பது படம் நடிச்சு, என்னத்தையாவது எசகுபிசகா பேட்டி கொடுத்து, கோர்ட் வாசப்படி ஏறி இறங்கி, எங்கேயாவது ஒரு அரசியல் கட்சியிலே போய் சேர்றது வரைக்குமா காத்துக்கிட்டிருக்கிறது? சூட்டோட சூட்டா இன்னிக்கே எழுதி இடுகை போட்டுடறேன். சரியா?"
"நான் கூட இது பத்தி ஒரு இடுகை போடலாமுன்னு தாண்ணே நினைச்சேன். அப்புறம் இதையெல்லாம் யாரு படிக்கப்போறாங்கன்னு சந்தேகமாயிருந்ததுனாலே தான் உங்க கிட்டே மேட்டரை சொன்னேன்," என்று குட்டை உடைத்தேன்.
"சேட்டை, உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தாது! எதுலேயும் தமிழ்ப்பண்பாடு, கலாச்சரம் இதையெல்லாம் கருவேப்பிலை கொத்துமல்லி மாதிரி தாளிக்கணும்! நம்ம தமிழ்ப்பண்பாடுன்னா என்னா தெரியுமா? ஒருவனுக்கு ஒருத்தி!"
"என்னது?"
"ஒருவனுக்கு ஒருத்தி!"
"இன்னொருவாட்டி சொல்லுங்க!"
"ஒருவனுக்கு ஒருத்தி!" என்று எரிச்சலோடு சொன்னார் சப்பைமூக்கன். "நீ மனசுலே எதையோ வச்சுக்கிட்டு திரும்பத் திரும்பக் கேக்குறே! தமிழ்ப்பண்பாடுன்னா அது பெரிய பெரிய ஆளுங்களுக்கெல்லாம் தேவையில்லை. உன்னையும் என்னையும் மாதிரி சோத்துக்குச் செத்தவனுங்களுக்குத் தான் கலாச்சாரம், பண்பாடு, லொட்டு, லொசுக்கு எல்லாம் இருக்கணும். தெரியுதா?" என்று விளக்கினார் சப்பைமூக்கன்.
"சரி தாண்ணே!" என்று புரிந்தவன் போலக் கூறினேன்.
"எதுக்கும் அந்த நடிகையோட படம் எங்கே கிடைக்குமுன்னு லின்க் அனுப்பு! இருக்கிறதிலேயே படுகவர்ச்சியா ஒரு படத்தை எடுத்துப் போட்டு கன்னபின்னான்னு திட்டினா தான் தமிழ்ப்பண்பாட்டைக் காப்பாத்த முடியும்! நீச்சலுடையிலே இருக்கிற மாதிரி படம் இருந்ததுன்னு வை, பார்க்கிறவங்களுக்கே உடனேயே இது ஏதோ தமிழ்ப்பண்பாடு பத்தி எழுதியிருப்பான் போலிருக்குன்னு புரிஞ்சிடும். அப்புறம் என்ன, நம்ம இடுகையைப் படிச்சிட்டு அரசியல்வாதிங்க அறிக்கை விடுவாங்க, பெட்டிசன் ஆசாமீங்க கேஸ் போடுவாங்க, தினமும் பத்திரிகையிலே தலைப்புச் செய்தி வரும்! பார்வதி பேட்டி கொடுப்பாங்க, அழுவாங்க! அதை வச்சு இன்னும் பத்துப் பதிவு எழுதலாம். ஹையா! இன்னும் ஒரு வருஷத்துக்கு ஜாலிதான்!" என்று உற்சாகமாகக் கூறினார் சப்பைமூக்கன்.
"அண்ணே, அந்தப்பொண்ணு கேரளா பொண்ணுண்ணே!" என்று நினைவூட்டினேன்.
"இன்னும் நல்லதாப் போச்சு!" என்று சிரித்தார் சப்பைமூக்கன். "அந்தப்பொண்ணு தமிழச்சி இல்லேன்னு சொல்லி கூட ரெண்டு திட்டு திட்டலாம். தமிழ்ப்பண்பாடு கொஞ்சம் தூக்கலாயிருக்கும்."
"இதுலே ஒரு பிரச்சினையிருக்கண்ணே!" என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். "தேவையில்லாம அவங்களுக்கு நம்மளாலே நிறைய விளம்பரம் கிடைக்கும். இன்னும் ஒரு படம் கூட முடிக்காத அவங்களை நிறைய படத்துக்கு புக் பண்ணினாலும் பண்ணுவாங்க!"
"அதுவும் தமிழ்ப்பண்பாடு தானே?" என்று கூவினார் சப்பைமூக்கன். "நாம யாரு? வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இல்லையா? வாழ்த்தியோ, வசவுபாடியோ வந்தவங்களை வாழவைக்கணும். உப்புப்பெறாத விஷயத்தை ஊதிப்பெருசாக்கி நாம மட்டும் ஒண்ணுத்துக்கும் உதவாம இப்படியே இருக்கணும்!"
"நல்ல வேளை, உப்புப்பெறாத விஷயமுன்னதும் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது அண்ணே," என்று ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுப்படுத்திக்கொண்டு சொன்னேன். "நீங்க இந்த இடுகையை எழுதுங்க! நான் பார்சிலோனாவுலே ஸ்ரேயாவோட கைப்பை காணாமப்போனது பத்தி ஒரு இடுகை எழுதணும்."
"எழுதுங்க எழுதுங்க!" என்று உற்சாகப்படுத்தினார் சப்பைமூக்கன். "நம்மளை மாதிரி சமூகப்பொறுப்புள்ளவங்க சும்மா இருக்கவே கூடாது. எதைப் பத்தியாவது எழுதிட்டே இருக்கணும்! சரியா? ஐயோ!! அம்மா!!! ஐயோ!!!"
"என்னண்ணே? திரும்பவும் ஆணி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று பதறினேன் நான்.
"உன் கிட்டே ஏன் பொய் சொல்லணும் சேட்டை? இவ்வளவு நேரமும் அலறினேனே அது ஆணி அடிச்சதுக்காக இல்லை; என் பொஞ்சாதி ராணி அடிச்சதுக்காக! நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

Tweet |
46 comments:
haa haa,nice!!
அண்ணாத்த சேட்ட, நீங்க என்னதான் உள்குத்தா எழுதினாலும் சினிமா காரிகள பத்தி பதிவு போட ஒரு கூட்டமே இங்கே இருக்கு. அந்த கழிசடைகள படிச்சி பரவசமடையும் தத்தாரி கூடங்களும் "இவிடே உண்டல்லோ!!
காமெடி கதம்பம்.. ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்தது சேட்டை.
கலக்கல் நண்பரே சிரித்து ,சிரித்து வயிறு புன்னாய் போனது . அருமை தொடருங்கள் !
யாரையும் எதையும் விட்டு வைக்காமல் பிட்டு பிட்டு வைக்கறீங்களே! பதிவு அருமை நண்பரே.
ரேகா ராகவன்
(சிகாகோவிலிருந்து)
"எழுதுங்க எழுதுங்க!" என்று உற்சாகப்படுத்தினார் சப்பைமூக்கன். "நம்மளை மாதிரி சமூகப்பொறுப்புள்ளவங்க சும்மா இருக்கவே கூடாது. எதைப் பத்தியாவது எழுதிட்டே இருக்கணும்! சரியா? ஐயோ!! அம்மா!!! ஐயோ!!!"
"என்னண்ணே? திரும்பவும் ஆணி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று பதறினேன் நான்.
"உன் கிட்டே ஏன் பொய் சொல்லணும் சேட்டை? இவ்வளவு நேரமும் அலறினேனே அது ஆணி அடிச்சதுக்காக இல்லை; என் பொஞ்சாதி ராணி அடிச்சதுக்காக! நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரம் தான் நடிக்கிறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"
......
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல....!
Eththanai Nadigai Vanthalum innum konja Nalaikku namma thalaivi Thamannnaa thaan No.1
சேட்டை இப்பவே கேட்டுக்கோங்க அவங்க பெட் ரூமில யார் போட்டே இருக்குன்னு. அப்பதாங்க நல்லா திட்டி ரெண்டு வரி கூடுதலா எழுத முடியும்.
:-))
ha ha ha ha
this is too much...
//"நம்மளை மாதிரி சமூகப்பொறுப்புள்ளவங்க சும்மா இருக்கவே கூடாது. எதைப் பத்தியாவது எழுதிட்டே இருக்கணும்! சரியா?"//
ஆமாங்க, இல்லைன்னா சமூகம் பாளாப்போகுமுங்க.
ஆமாங்க, சமூகம்னா என்னாங்க?
சிரிச்சு சிரிச்சு வந்தா சேட்டைக்காரன் டோய். சூப்பர்
சேட்டை டீவி-யில் இது போன்ற நிகழ்சிகளுக்கா பஞ்சம் ,நன்றி
//"நீங்க இந்த இடுகையை எழுதுங்க! நான் பார்சிலோனாவுலே ஸ்ரேயாவோட கைப்பை காணாமப்போனது பத்தி ஒரு இடுகை எழுதணும்.//"
சீக்கிரம் எழுதுங்க. கைப்பை காணாம போனதை விசாரிக்கச்சொல்லி சிபிஐ விசாரணைக்கு வற்புறுத்துங்க :-))))
ஐ நா சபையில் இதைப்பத்தி காரசாரமா விவாதம் நடக்குதாம். :-))))
நல்ல அரசியல் :(
போன் நம்பர் கேட்டவர்தானே திட்டிப்பதிவெழுத் ஆசையும் படறார்..
தமிழ்பண்பாட்டை காக்கவந்தவர்கள் ஹஹ்ஹா..
செம பின்னல்
எல்லாரு பொழப்பும் இப்படித்தான் ஓடுதா
அப்ப, முற்போக்கு சிந்தனை கொண்ட இன்னோர் நடிகை
கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க!!!
ஒருத்தரையும் விடாதீங்க சேட்டை. சி.பி.ஐ. யார் யார் பார்சிலோனா போனாங்கன்னு லிஸ்ட் தயாரிச்சிட்டு இருக்காங்களாம். எதுக்கும் முன்னாடியே நீங்க உங்க பதிவுல சொல்லிடுங்க, சேட்டை மட்டும் ஸ்ரேயா கூட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமான்னு.
கலக்கல் சேட்டை.
நீங்க ரொம்ப அப்பாவி சேட்டை.
எழுதினதுல ஏதும் உள்குத்து இல்லையே.
ஆமா சமன்பாடு கேள்வி பட்டிருக்கேன் பண்பாடுன்னா இந்த அஞ்சு வருசத்துக்கு ஒருதடவை மறுமே அதுவா.
// இன்னி தேதியிலே உசிரோட இருக்கிறவங்களோட படம் மட்டுமே ஒரு எண்பது ஜி.பி. இருக்கு!//
கிளிஞ்சிது!!!! :))
கடைசி பத்தி தேவையே இல்லே.... ஆரம்பத்திலிருந்தே ஆணி அடிக்கும் சத்தம் எல்லோருக்கும் கேட்டுகிட்டுத்தான் இருக்கு.
//பார்சிலோனாவுலே ஸ்ரேயாவோட கைப்பை காணாமப்போனது பத்தி ஒரு இடுகை எழுதணும்."//
படிக்க காத்துகிட்டிருக்கோம்.
இம்ம்புட்டு தெளிவா சேட்டை பண்றீங்களே எப்படிண்ணே!
சேட்டை சார்
காமெடியாகவும் இருக்கு.அதேசமயம்
இந்த சமூகத்தின் மீது உங்களின் அக்கறையையும் அழககா சொல்லி
இருக்கிறீர்கள்.
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
சேட்டை,
ஹைய்யோ:-))))))
நீங்க என்ன சொன்னாலும், தமிழ்ப் பண்பாடை அப்படியே வுட்டுற முடியுங்களா?
காப்பாத்த நாலு பேர் வேணாம்?
சேட்டை தாங்கல.... நடிகை தும்மினாக்கூட பதிவா....
அது சரி "பார்வதி">>>>>>>>>> எந்த படத்துல நடிக்குது...
என்ன சொல்ல....சேட்டை தூள்பறக்கிறது.:)
நின்னுக்கிட்டு யோசித்த மாதிரி தெரியுதுங்க சேட்டை..
//"நம்மளை மாதிரி சமூகப்பொறுப்புள்ளவங்க சும்மா இருக்கவே கூடாது. எதைப் பத்தியாவது எழுதிட்டே இருக்கணும்!//
சும்மாவே இருக்ககூடாதுன்னு
சொல்லி இதுக்கும் ஒர் இடுகையா?
எனினும் கலக்கல்தான்!
சேட்டை, கலக்கிட்டீங்க! சொல்ல வேண்டியதை நகைச்சுவையா, உறைக்க வேண்டியவங்களுக்கு நல்லாவே உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க! :-)
Why boss?:(
டாக்டர், சமூக அவலங்களை களையும்
பொறுப்பு நன்று.
padivu ezhudharadhukku neraiya ideas vachirukkeenga pola iruke boss :)))
:)
உண்மைலேயே சேட்டைதான்...படிக்க படிக்க ரொம்ப நல்லா இருந்தது...
சேட்ட , யோவ் அவுக அரசியல்ல நுழைய திட்டம் போற்றுகாக , நம்ம குஸ்பு மாதிரி
haa சேட்ட்டை பயங்கரமா இருக்கு.
கலக்கலானா சேட்டை
Mrs.Menagasathia said...
// haa haa,nice!!//
மிக்க நன்றி! :-)
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
//காமெடி கதம்பம்.. ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்தது சேட்டை.//
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அண்ணே! :-)
கக்கு - மாணிக்கம் said...
//அண்ணாத்த சேட்ட, நீங்க என்னதான் உள்குத்தா எழுதினாலும் சினிமா காரிகள பத்தி பதிவு போட ஒரு கூட்டமே இங்கே இருக்கு. அந்த கழிசடைகள படிச்சி பரவசமடையும் தத்தாரி கூடங்களும் "இவிடே உண்டல்லோ!!//
நான் கூடத் தான் அப்பப்போ ஸ்ரேயா பத்தி எழுதுறேன்! :-)
மிக்க நன்றி! :-)
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//கலக்கல் நண்பரே சிரித்து ,சிரித்து வயிறு புன்னாய் போனது . அருமை தொடருங்கள் !//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)
KALYANARAMAN RAGHAVAN said...
//யாரையும் எதையும் விட்டு வைக்காமல் பிட்டு பிட்டு வைக்கறீங்களே! பதிவு அருமை நண்பரே.//
ஒரு இடுகையைக் கூட விடாமல் நீங்களும் வந்து பாராட்டுறீங்களே? மிக்க மிக்க நன்றி! :-)
Chitra said...
//......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல....!//
அது தானே வேணும்! மிக்க நன்றி! :-)
முகிலன் said...
//Eththanai Nadigai Vanthalum innum konja Nalaikku namma thalaivi Thamannnaa thaan No.1//
அதுனாலே தான் அவங்களைப் பத்தி அப்புறமா எழுதலாமுன்னு...ஹிஹி! மிக்க நன்றி! :-)
ஜெய்லானி said...
//சேட்டை இப்பவே கேட்டுக்கோங்க அவங்க பெட் ரூமில யார் போட்டே இருக்குன்னு. அப்பதாங்க நல்லா திட்டி ரெண்டு வரி கூடுதலா எழுத முடியும். :-))//
ஆஹா, ரொம்ப தீர்க்கமா யோசிக்கறீங்களே? மிக்க நன்றி! :-)
பிரேமா மகள் said...
//ha ha ha ha this is too much...//
நெசமாவா? மிக்க நன்றி! :-)
மசக்கவுண்டன் said...
//ஆமாங்க, இல்லைன்னா சமூகம் பாளாப்போகுமுங்க.ஆமாங்க, சமூகம்னா என்னாங்க?//
சமூகமுன்னா அது ஒரு விதமான gum-ங்க! எவ்வளவு போட்டாலும் ஒட்டாது! மிக்க நன்றி! :-)
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//சிரிச்சு சிரிச்சு வந்தா சேட்டைக்காரன் டோய். சூப்பர்//
நான் வந்தது இருக்கட்டும்; நீங்க வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க! :-)
ஜில்தண்ணி said...
//சேட்டை டீவி-யில் இது போன்ற நிகழ்சிகளுக்கா பஞ்சம் ,நன்றி//
ஆ! இதை டிவி நிகழ்ச்சியாக்கிட்டீங்களா? எப்படியோ, மிக்க நன்றி! :-)
Blogger அமைதிச்சாரல் said...
//சீக்கிரம் எழுதுங்க. கைப்பை காணாம போனதை விசாரிக்கச்சொல்லி சிபிஐ விசாரணைக்கு வற்புறுத்துங்க :-)))) ஐ நா சபையில் இதைப்பத்தி காரசாரமா விவாதம் நடக்குதாம். :-))))//
என்னது? எப்போ? நான் இல்லாமலா? அவ்வ்வ்வ்வ்!
மிக்க நன்றி! :-)
முத்துலெட்சுமி/muthuletchumi said...
// நல்ல அரசியல் :(//
அதே! அதே! அஃதே!!!!
//போன் நம்பர் கேட்டவர்தானே திட்டிப்பதிவெழுத் ஆசையும் படறார்.. தமிழ்பண்பாட்டை காக்கவந்தவர்கள் ஹஹ்ஹா..//
அது வேறே டிப்பார்ட்மெண்டுங்க! மிக்க நன்றி!! :-)
VISA said...
// செம பின்னல்//
மிக்க நன்றி! :-)
VELU.G said...
//எல்லாரு பொழப்பும் இப்படித்தான் ஓடுதா//
எல்லாரும் இல்லை; நிறைய பேரோட பொழைப்பு, இன்க்ளூடிங் மீ, இப்படித்தான் நடக்குது! மிக்க நன்றி! :-)
சைவகொத்துப்பரோட்டா said...
//அப்ப, முற்போக்கு சிந்தனை கொண்ட இன்னோர் நடிகை கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க!!!//
ஆஹா! இது அல்டிமேட் பஞ்ச்! அசத்தல்!! மிக்க நன்றி! :-)
வெங்கட் நாகராஜ் said...
//ஒருத்தரையும் விடாதீங்க சேட்டை. சி.பி.ஐ. யார் யார் பார்சிலோனா போனாங்கன்னு லிஸ்ட் தயாரிச்சிட்டு இருக்காங்களாம். எதுக்கும் முன்னாடியே நீங்க உங்க பதிவுல சொல்லிடுங்க, சேட்டை மட்டும் ஸ்ரேயா கூட இருந்திருந்தா இப்படியெல்லாம் நடக்குமான்னு.//
இதைத் தான் ஸ்ரேயாவும் என் கிட்டே அழுதுக்கிட்டே சொன்னாங்க! பாவம்!!
மிக்க நன்றி! :-)
செ.சரவணக்குமார் said...
//கலக்கல் சேட்டை.//
மிக்க நன்றி! :-)
அக்பர் said...
// நீங்க ரொம்ப அப்பாவி சேட்டை.// அட, நெசமாவா?
//எழுதினதுல ஏதும் உள்குத்து இல்லையே.//
உள்குத்தைத் தவிர வேறு எதுவுமில்லேண்ணே! :-)
//ஆமா சமன்பாடு கேள்வி பட்டிருக்கேன் பண்பாடுன்னா இந்த அஞ்சு வருசத்துக்கு ஒருதடவை மறுமே அதுவா.//
ஓஹோ, இப்பல்லாம் அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை தான் மாறுதா? சொல்லவே இல்லை? மிக்க நன்றி!! :-))
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//கிளிஞ்சிது!!!! :))//
ஹிஹி! மெய்யாலுமே....! மிக்க நன்றி!! :-))
மஞ்சூர் ராசா said...
//கடைசி பத்தி தேவையே இல்லே.... ஆரம்பத்திலிருந்தே ஆணி அடிக்கும் சத்தம் எல்லோருக்கும் கேட்டுகிட்டுத்தான் இருக்கு.//
எதுக்கும் இருக்கட்டுமேன்னு தான்...ஹிஹி!
//பார்சிலோனாவுலே ஸ்ரேயாவோட கைப்பை காணாமப்போனது பத்தி ஒரு இடுகை எழுதணும்."//
//படிக்க காத்துகிட்டிருக்கோம்.//
சீரியசாவே எடுத்துக்கிட்டீங்களா? சரி, அதையும் எழுதிட்டாப் போச்சு! மிக்க நன்றி அண்ணே! :-)
எம் அப்துல் காதர் said...
//இம்ம்புட்டு தெளிவா சேட்டை பண்றீங்களே எப்படிண்ணே!//
எல்லாம் ஒரு ஃபுளோவுலே வர்றது தானே? மிக்க நன்றி! :-)
VAAL PAIYYAN said...
// சேட்டை சார்! காமெடியாகவும் இருக்கு.அதேசமயம் இந்த சமூகத்தின் மீது உங்களின் அக்கறையையும் அழககா சொல்லி இருக்கிறீர்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜூனியர் வா.பை! உங்களது முயற்சியும் வெற்றி பெறட்டும்! :-))
துளசி கோபால் said...
//சேட்டை, ஹைய்யோ:-)))))) நீங்க என்ன சொன்னாலும், தமிழ்ப் பண்பாடை அப்படியே வுட்டுற முடியுங்களா? காப்பாத்த நாலு பேர் வேணாம்?//
நாலு பேரெல்லாம் எதுக்குங்க? நான் ஒருத்தன் போதாதா?
மிக்க நன்றி! :-))
அஹமது இர்ஷாத் said...
//சேட்டை தாங்கல.... நடிகை தும்மினாக்கூட பதிவா....அது சரி பார்வதி">>>>>>>>>> எந்த படத்துல நடிக்குது...//
ஹிஹி! படத்தோட பேரெல்லாம் ஞாபகமில்லை! அனேகமா வந்ததுக்கப்புறமும் ஞாபகமிருக்காதுன்னு நினைக்கிறேன். மிக்க நன்றி! :-))
மாதேவி said...
//என்ன சொல்ல....சேட்டை தூள்பறக்கிறது.:)//
மிக்க நன்றி! :-)
தாராபுரத்தான் said...
//நின்னுக்கிட்டு யோசித்த மாதிரி தெரியுதுங்க சேட்டை..//
கண்டுபிடிச்சிட்டீங்களே! அது தான் அனுபவம்கிறது! மிக்க நன்றி! :-)
NIZAMUDEEN said...
//சும்மாவே இருக்ககூடாதுன்னு சொல்லி இதுக்கும் ஒர் இடுகையா? எனினும் கலக்கல்தான்!//
சும்மா இருக்க வுட மாட்டங்குறாங்களே! மிக்க நன்றி! :-)
நஜீபா said...
//சேட்டை, கலக்கிட்டீங்க! சொல்ல வேண்டியதை நகைச்சுவையா, உறைக்க வேண்டியவங்களுக்கு நல்லாவே உறைக்கிற மாதிரி சொல்லியிருக்கீங்க! :-)//
தேங்க்ஸ் அக்கோவ்! உங்க இடுகையும் தூள்! :-)
வானம்பாடிகள் said...
//Why boss?:(//
Time pass! ஹிஹி! மிக்க நன்றி ஐயா!
கோமதி அரசு said...
// டாக்டர், சமூக அவலங்களை களையும் பொறுப்பு நன்று.//
அப்பப்போ இது மாதிரி வி.ப.வும் செய்யுறதுண்டு! மிக்க நன்றி! :-))
அஷீதா said...
// padivu ezhudharadhukku neraiya ideas vachirukkeenga pola iruke boss :)))//
ஒண்ணும் இல்லாட்டி ஏதாவது புதுசா சங்கதி பேப்பரிலே வந்திருதே! மிக்க நன்றி! :-)
Robin said...
// :)//
மிக்க நன்றி! :-)
கமலேஷ் said...
// உண்மைலேயே சேட்டைதான்...படிக்க படிக்க ரொம்ப நல்லா இருந்தது...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)
மங்குனி அமைச்சர் said...
//சேட்ட , யோவ் அவுக அரசியல்ல நுழைய திட்டம் போற்றுகாக , நம்ம குஸ்பு மாதிரி//
ஆமாண்ணே, நான் கூட கேள்விப்பட்டேன்! மிக்க நன்றி! :-))
Jaleela said...
//haa சேட்ட்டை பயங்கரமா இருக்கு. கலக்கலானா சேட்டை//
ஆஹா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-))
ஹா ஹா ஹா...முடியல முடியல... ஏங்க சேட்டை ....உங்க வீட்டுல ஆணி அடிக்க இன்னும் ஆளு இல்லை போல.. அது தான் இந்த சேட்டையா?
Post a Comment