Friday, September 6, 2013

கிட்டாமணியும் ’கிட்நாப்’ மணியும்




ஏர்டெல் ஷோரூமுக்குப்போன ஏமாளி வாடிக்கையாளர்போல, ஏகத்துக்கும் டென்ஷனுடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி.

      கவலைப்படாதீங்க மிசஸ் பாலாமணி! இன்ஸ்பெக்டர் அய்யாவு ஆறுதலாகச் சொன்னார். “உங்க வீட்டுக்காரருக்கு ஒண்ணும் ஆகாது! கிரிமினல்ஸ் பொதுவா பெரும்புள்ளிகளைத்தான் கடத்துவாங்க! ஆனா, உங்க புருசனைக் கடத்தினதுலேருந்தே இது ஏதோ சோத்துக்குச் செத்த சோதாக்கும்பல்னு நல்லாத் தெரியுது. அவங்களே அசடுவழிஞ்சுக்கிட்டு பத்திரமா கொண்டாந்து விட்டிருவாங்க! 

      மனசு கேக்கலியே சார்? எல்லாம் என்னாலே வந்த வினை,என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் கே.ஆர்.விஜயா போல தொண்டை கம்மப் பேசினாள் பாலாமணி. “வெள்ளிக்கிழமையாச்சே, பாயாசம் பண்ணலாம்னு சேமியா வாங்கிட்டு வாங்கன்னு அனுப்பிவைச்சேன். சேமியாவும் வரலே; அவரும் வரலே!

      அப்புறம்....?

      அப்புறமென்ன? ஜவ்வரிசிப்பாயாசம்தான்.

      அதில்லேம்மா! உங்க புருசனைப்பத்தி ஏதாவது தகவல் வந்துதா?

      ஒண்ணும் வரலே! அதுக்குள்ளே புதிய தலைவலி டிவி, அம்பயர் டிவி, தொந்தி டிவி, டாட்டர் டிவின்னு எல்லாருட்டேயிருந்தும் போன் வந்திருச்சு!

      எதுக்கும்மா மீடியாவுக்கெல்லாம் தகவல் சொன்னீங்க? கோபத்தில் இன்ஸ்பெக்டர் அய்யாவுவின் மூக்கு மெரீனாவின் மிளகாய் பஜ்ஜிபோலச் சிவந்தது.

      அதில்லை சார்! எங்க வீட்டுக்காரர் தினமும் எல்லா டி.வியிலேயும் போய்ப் பேசுவாரு! பணவீக்கத்திலேருந்து பருப்பு உசிலிவரைக்கும் அவர் பேசாத விஷயமே கிடையாது; போகாத டி.வி.சேனலே கிடையாது.

      ஓஹோ! அப்போ இதுலே அரசியலும் இருக்கலாம் போலிருக்கே!என்று இன்ஸ்பெக்டர் அய்யாவு யோசனையாகத் தலையைச் சொரிந்துகொண்டிருந்தபோதே, பாலாமணியின் செல்போன் ‘காசு பணம் துட்டு மணி மணிஎன்று பாடியது. கிட்டாமணியின் நம்பரிலிருந்து அழைப்பு!

      மேடம்! கடத்தினவங்களாத்தானிருக்கும்!பரபரப்படைந்தார் அய்யாவு. “ஸ்பீக்கர் போட்டுப் பேசுங்க!

      ஸ்பீக்கர், டியூப்லைட்டெல்லாம் போட்டுப் பேசறதுக்கு நான் என்ன தண்ணித்தொட்டி திறப்புவிழாவுக்கா வந்திருக்கேன்? நானே புருசனைக் காணோம்னு பதறிட்டிருக்கேன்.

      ஐயோ மேடம்! செல்போனை ஸ்பீக்கர் மோடுலே போட்டுப் பேசுங்கன்னு சொன்னேன்,இன்ஸ்பெக்டர் அய்யாவு தலையிலடித்துக் கொண்டார். லேட்டாகப் புரிந்துகொண்ட பாலாமணி, செல்போனை ஸ்பீக்கர் மோடில் வைத்துப் பேசினாள்.

      ஹலோ! பாலாமணி பேசறேன்!

      மிசஸ் கிட்டாமணி! என் பேரு ‘கிட்நாப்மணி! உங்க புருசன் இப்போ எங்ககிட்டேதான் இருக்காரு!தொண்டைக்குள் தோசைப்புளி அடைத்ததுபோல மறுமுனையில் குரல் கேட்டது.

      அப்படியா?பாலாமணியின் கண்களில் அரசுக்குடியிருப்பின் கூரையைப் போல ஈரம்கசிந்தது. என் வயித்துலே பாலை வார்த்தீங்க! எம் புருசன் எப்படியிருக்காரு?

      பேக்கு மாதிரியிருக்காரு!

      அது தெரியும்! அவர் சௌக்கியமா இருக்காரான்னு கேட்டேன்!

      ரொம்ப சௌக்கியமா இருக்காரு! காலையிலே ரத்னா கபேயிலேருந்து பொங்கல்,மெதுவடை,பூரிகிழங்கு, டிகிரி காப்பி வாங்கிக் கொடுத்தோம். மதியத்துக்கு சரவணபவனிலேருந்து காம்போ மீல்ஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம். புது பேஸ்ட்டு, பிரஷு, டி.எஸ்.ஆர்.சந்தனப்பவுடர், வி.வி.டி.தேங்காயெண்ணை, லக்ஸ் சோப்பு, துண்டு, சீப்பு எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கோம்.

      அவர்கிட்டே நான் பேசலாமா?

      தாராளமா பேசுங்க!” மறுமுனையில்,”கிட்டாமணி சார், உங்க சம்சாரம் உங்ககிட்டே பேசணுமாம்.என்பது பாலாமணிக்குத் தெளிவாகக் கேட்டது.

      பாலாமணி!மறுமுனையில் கிட்டாமணி கிளைமேக்ஸில் குண்டடிவாங்கிய தெலுங்குப்பட வில்லன்போல அலறினார்.

      என்னங்க...?

      மலர்கொடுத்தேன்...கைகுலுங்க வளையலிட்டேன்..

      ஐயோ, இப்போ எதுக்கு திரிசூலம் பாட்டெல்லாம் பாடறீங்க? ஏற்கனவே நான் நொந்துபோயிருக்கேன்.

      பாலாமணி! இவங்க என்னை ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிறாங்க தெரியுமா? காலையிலே எக்ஸ்ட்ரா சாம்பார் சட்னியெல்லாம் வாங்கியிருந்தாங்க. கொஞ்ச முன்னாடித்தான் திருட்டு டிவிடியிலே ‘தலைவாபடம் பார்த்தேன்.

      பட்டகாலிலேயே படும்னு சும்மாவா சொன்னாங்க? போகட்டும், அதுதவிர வேறே டார்ச்சர் ஏதாவது பண்றாங்களா?

      வந்ததுலேருந்து ரெண்டு மணி நேரத்துக்கு ஒருவாட்டி டிவியிலே கரப்பான் பூச்சி பத்தின டாகுமெண்டரி படத்தைத் திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்க்கச் சொல்றாங்க. உனக்குத்தெரியாதா? கரப்பான்பூச்சின்னா எனக்கு எவ்வளவு பயம்னு..

      ஐயையோ! அப்புறம்..?

      மத்தபடி என்னைக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிறாங்க. நான் கேட்டேங்குறதுக்காக ஒருத்தரை மாம்பலம் வெங்கடேஸ்வராவுக்கு அனுப்பி வெல்லப்போளியும், ஓமப்பொடியும் வாங்கிட்டுவரச் சொல்லியிருக்காங்கன்னா பாரேன்.

      அவங்களுக்கு என்ன வேணுமாம்?

      அதை நான் சொல்றேன்!கிட்நாப் மணியின் குரல் இடைமறித்தது. “உங்க புருசனை நாங்க ஒண்ணும் பண்ண மாட்டோம். சரியா மூணு நாள் கழிச்சு அவரைப் பத்திரமா வீட்டுக்கு அனுப்பிடுவோம்.

      விருந்தும் மருந்தும்தான் மூணு நாள்! கிட்நாப்புக்குமா? ஒரு நாள் குறைச்சுக்கப்படாதா?

      இந்தக் கிட்நாப் மணிக்கு குறுக்கே போற பூனையும், குறுக்கே பேசற பொம்பளையும் அறவே பிடிக்காது! மூணு நாள் கழிச்சு மிஸ்டர் கிட்டாமணிக்கு ஆயில்பாத் பண்ணி, சகலமரியாதையோட, அங்கவஸ்திரம், ஜரிகைவேட்டி, மினிஸ்டர் வொயிட் சட்டையோட நூத்தியோரு ரூபாய் தட்சணையும் கொடுத்து அனுப்பி வைச்சிடுவோம். இதை பக்கத்திலே நின்னு கேட்டுக்கிட்டிருக்கிற இன்ஸ்பெக்டர் அய்யாவுகிட்டேயும் சொல்லிடுங்க! ஓ.கே?

      கிட்நாப் மணி!இன்ஸ்பெக்டர் அய்யாவு கூவினார். “மரியாதையா மிஸ்டர் கிட்டாமணியை ரிலீஸ் பண்ணிடு! என்னைப் பத்தி உனக்குத் தெரியாது!

      என்னைப் பத்தி எனக்கே தெரியாது!என்று பதிலுக்குப் பஞ்ச் டயலாக் பேசினான் கிட்நாப் கிட்டாமணி. “அனாவசியமா நாங்க இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீங்க! மீறினா, கிட்டாமணி யாரு கைக்கும் கிட்டாதமணியாயிடுவாரு. புரியுதா?

      வேண்டாம்,அலறினாள் பாலாமணி. “அவரை ஒண்ணும் பண்ணாதீங்க.

      கவலைப்படாதீங்க மிசஸ் பாலாமணி! அவரை நீங்க பார்த்துக்கிறா மாதிரியே பார்த்துக்கிறோம்.

      ஐயையோ! அப்படியெல்லாம் பண்ணாதீங்க! கொஞ்சம் மரியாதையாவே பார்த்துக்கோங்க. அதுசரி, நீங்கபாட்டுக்கு அவருக்கு என்னென்னமோ வாங்கிக் கொடுத்திட்டிருக்கீங்களே? இதுக்கெல்லாம் தனியா பில் போடுவீங்களா? செக் அக்ஸப்ட் பண்ணிக்குவீங்களா?

      நாங்க என்ன டெலிஷாப்பிங் நெட்வொர்க்குலே வாஸ்து எந்திரமா விக்குறோம்? எங்களுக்கு சல்லிக்காசு வேண்டாம்! பேசினபடி உங்க புருசனை மூணு நாளுலே விட்டிருவோம். அதுக்குமேலே செலவு பண்ணற அளவுக்கு எங்களுக்கு வசதியில்லை. இப்பத்தான் கடனை உடனை வாங்கி கடத்தல்பண்ணி நாலுகாசு சம்பாதிச்சிட்டிருக்கோம். இதுக்குமேலே பேசினா, அய்யாவு நாங்க இருக்கிற இடத்தை ட்ரேஸ் பண்ணிருவாரு! வச்சிடறேன்.

      அய்யய்யோ, வைச்சிட்டாங்களே!என்று பதறினாள் பாலாமணி. “எப்படியாவது என் புருசனைக் காப்பாத்துங்க இன்ஸ்பெக்டர் அய்யய்யோ சார்!

      என் பேரு அய்யய்யோ இல்லை; அய்யாவு!என்று திருத்தினார் அய்யாவு. “அவங்கதான் மூணு நாளுலே விட்டுடறதா சொல்றாங்களே! ஒரு ஆம்பிளை மூணு நாளு நிம்மதியா இருக்கிறதுகூடவா பிடிக்கலை உங்களுக்கு?

      உங்களுக்கென்ன சொல்லிட்டீங்க, அங்கே எம் புருசன் எப்படியிருக்காரோ தெரியலியே!

      பாலாமாணி புலம்பிக்கொண்டிருக்க, சென்னை நகரில் டாஸ்மாக் கடையே இல்லாத ஒரு ஆளரவமற்ற பகுதியில், இந்தியாவின் பொருளாதாரத்தைப் போல சின்னாபின்னமாகியிருந்த ஒரு கட்டிடத்தில், ஒரு சேரில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த கிட்டாமணி புலம்பிக்கொண்டிருந்தார்.

      பாலாமணி! உன்னோட பாயாசமே எனக்குப் பாய்ஸன் மாதிரி வினையா முடிஞ்சிருச்சே!

      கவலைப்படாதீங்க கிட்டாமணி!கிட்நாப் மணி கனிவோடு சொன்னான். “இங்கே பாருங்க, உங்களுக்காகக் காம்போமீல்ஸ் வாங்கிட்டு வந்திருக்கோம். அழாம அடம்பிடிக்காம சாப்பிடுங்க சார்! சமர்த்தா மம்மூ சாப்பிட்டா, உங்களுக்கு நான் ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேனாம்; சாக்லெட் வாங்கித் தருவேனாம்.

      யோவ், என்னய்யா கடத்திட்டுவந்து கட்டிப்போட்டுக் காமெடி பண்ணிட்டிருக்கீங்க,கிட்டாமணி எரிந்துவிழுந்தார். “காலையிலேருந்து நான் மூக்குப்பொடியே போடலை. வரதராஜபேட்டை முக்குக்கடையிலேருந்து கொஞ்சம் பொடிவாங்கிட்டு வரச் சொல்லுங்கய்யா!

      டேய் பிளேடு பக்கிரி,கிட்நாப் மணி உத்தரவிட்டான். “உடனே கிளம்பிப்போயி ஒரு கிலோ பொடி வாங்கிட்டு வாடா!

      ஒரு கிலோவா?அதிர்ந்தார் கிட்டாமணி. “நான் கேக்குறது மூக்குப்பொடி. தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அம்புஜ விலாஸ் காப்பிப்பொடியை வாங்கிட்டு வந்திராதீங்க!

      ஒரு கிலோ மூக்குப்பொடிதான் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். முடிஞ்சவரைக்கும் நீங்க போடுங்க. மீதியிருந்தா உங்க சினேகிதங்களுக்குக் கொடுங்களேன்.

      சரியாப்போச்சு! மாஞ்சு மாஞ்சு கொடுத்தாலும் மாம்பலத்துலே அவ்வளவு சினேகிதங்களும் கிடையாது; அவ்வளவு மூக்கும் கிடையாது.

      கிட்டாமணி சொல்லச் சொல்ல, பிளேடு பக்கிரி மூக்குப்பொடி வாங்கக் கிளம்பினான். கிட்நாப் மணி கட்டை அவிழ்த்துவிட, கிட்டாமணி பயமொரு புறமும் பசியொரு புறமுமாக காம்போ மீல்ஸை ஒரு பிடிபிடித்தார்.

      கிட்டாமணி சார்!கிட்நாப் மணியின் இன்னொரு கையாளான கால்பிளேடு கண்ணாயிரம் ஒரு பொட்டலத்தை நீட்டினான். “உங்களுக்கு கல்கத்தா பீடா பிடிக்குமா, பனாரஸ் பீடா பிடிக்குமான்னு தெரியாது. ரெண்டுமே இருக்கு! எடுத்துக்கோங்க சார்!

      கடவுளே!” கிட்டாமணியின் கண்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கரைப்போல ஒழுக ஆரம்பித்தன. “தலைதீபாவளிக்குப் போனபோது மாமனார், மாமியார் கூட என்னை இப்படி உபசரிச்சது கிடையாதே! உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க!

      கொடைவிழாவுக்கு நேர்ந்துவிட்ட ஆடு தழையை மெல்வதுபோல, கிட்டாமணி கல்கத்தா பீடாவையும், பனாரஸ் பீடாவையும் மென்று முடித்ததும், கிட்நாப் மணி ரிமோட்டை அமுத்த, டிவியில் மீண்டும் கரப்பான்பூச்சி டாக்குமெண்டரி ஓடத்தொடங்கியது.

      “அட கண்றாவியே.” அலறினார் கிட்டாமணி. “இவ்வளவு நல்ல ரௌடிங்களா இருக்கீங்க. அப்பப்போ எதுக்குய்யா இந்தக் கரப்பான்பூச்சி படத்தைப் போட்டுப் பார்க்கச் சொல்றீங்க? என் பொஞ்சாதிக்கப்புறம் நான் பயப்படறது இந்தக் கரப்பான்பூச்சி ஒண்ணுக்குத்தான்யா!

      ப்ளீஸ் கிட்டாமணி சார்!கால்பிளேடு கண்ணாயிரம் கெஞ்சினார். “உங்களுக்காக நாங்கல்லாம் எவ்வளவு சிரமப்படறோம்? தயவுபண்ணி இந்தக் கரப்பான்பூச்சி படத்தை முழுசாப்பாருங்க சார்! இதை நீங்க பார்த்தீங்கன்னா, ஷகீலாவோட ‘கின்னாரத்தும்பிகள்டிவிடி போட்டுக்காட்டுவோம் சார்! அது வேண்டாம்னா புது போஜ்பூரி படத்தோட ரெண்டு டிவிடி வைச்சிருக்கோம் சார். எல்லா படத்துலேயும் குளிக்கிற ஸீன் வரும்; போஜ்பூரிப்படத்துலே குளிக்கிற சீன் மட்டும்தான் வரும்சார்! பார்க்குறவங்களுக்கே ஜலதோஷம் வந்து, கொசு க்ரீம் மாதிரி விக்ஸை உடம்பெல்லாம் பூசவேண்டி வந்திரும் சார். ப்ளீஸ், பாருங்க சார்...இந்தக் கரப்பான்பூச்சி எவ்வளவு அழகா இருக்கு பாருங்க சார்!

      யோவ்!இரைந்தார் கிட்டாமணி. “லூசா நீங்கல்லாம்? ஒரு மனிசனைக் கடத்திட்டு வந்தா, அவனை டார்ச்சர் பண்ண எத்தனையோ வழியிருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இப்படி டிவியிலே கரப்பான்பூச்சிப் படத்தைப் போட்டுக்காட்டி சாவடிக்கறீங்களே? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? நீங்கல்லாம் அப்பா, சித்தப்பா, பெரியப்பா கூட பொறக்கலியா?

      ஷட் அப்!என்று கூவினான் கிட்நாப் மணி. “என்ன கேட்டீங்க கிட்டாமணி? மனசாட்சி இல்லையான்னா? கேவலம் ஒரு கரப்பான்பூச்சி, அதை பத்து நிமிசம் டிவியிலே பார்க்க உங்களாலே முடியலியே! பொழுது விடிஞ்சு பொழுதுபோனா, எந்த டிவி சேனலைத் திருப்பினாலும் உங்களை மாதிரி ஆளுங்க உட்கார்ந்துகிட்டுக் கலந்துரையாடல்னு கழுத்தறுக்கறீங்களே, உங்களுக்கு மனசாட்சி இருக்காய்யா?

      கிட்டாமணி அதிர்ந்தார். கிட்நாப் மணி தொடர்ந்தான்.

      புதுசா எதுனாப் பேசினாலும் பரவாயில்லை. காலைலே புதிய தலைவலியிலே பேசுனதை மத்தியானம் தொந்தி டிவியிலே பேசறீங்க. சாயங்காலம் டாட்டர் டிவியிலே பேசினதை ராத்திரி அம்பயர் டிவியிலே பேசறீங்க. பனகல் பார்க் பிளாட்ஃபாரத்துலே வாங்கின நாப்பது ரூபாய் டி-ஷர்ட்டைப்போட்டுக்கிட்டு வந்து என்ன பாடு படுத்தறீங்கய்யா! உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா?

      தொலைக்காட்சிக் கலந்துரையாடல் நெறியாளர்போல கிட்டாமணி வாயடைத்து நிற்க, கிட்நாப் மணி தொடர்ந்தான்.

      உங்க தொல்லை தாங்கமுடியாம, வீட்டுக்குப் பத்து ரூபா எல்லாரும் கூடுதல் சந்தா கலெக்ட் பண்ணி உங்களைக் கடத்தச் சொல்லியிருக்காங்கய்யா. அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணற உங்களுக்கு இது ஒரு பெரிய டார்ச்சரா?

      கிட்டாமணியின் முகம் வியர்த்தது. அவரது உடல் நடுங்கியது. அதைக் கவனித்த கிட்நாப் மணி, சுதாரித்துக் கொண்டான்.

      ஸாரி கிட்டாமணி சார்! இவ்வளவு நேரம் ஒழுங்காத்தானே பேசிட்டிருந்தேன். டிவி கலந்துரையாடலைப் பத்திப் பேசினதும் நானே உணர்ச்சிவசப்பட்டு, உங்களை மாதிரியே கத்திக் கூப்பாடு போட்டு, தலையைச் சிலுப்பிக்கிட்டு, கையை வலிப்பு வந்தவன் மாதிரி ஆட்டிக்கிட்டு, லூஸு மாதிரி நடந்துக்கிட்டேன் பார்த்தீங்களா?

      கிட்டாமணி ஆமோதித்தார். “ஆமாம்!

      விட்டிருங்க கிட்டாமணி! எல்லாத்தையும் விட்டிருங்க! பொழுதுபோகலேன்னா வயசான காலத்துலே ஒரு பார்க்குக்குப் போங்க, லைப்ரரிக்குப் போயி புத்தகம் படியுங்க. இல்லேன்னா கோவிலுக்குப் போயி சாமி கும்பிடுங்க! இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க! இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ! அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா?

      என் கண்ணைத் தொறந்துட்டீங்க!கிட்டாமணி பேசினார். “இனிமே எந்த டிவியிலே கூப்பிட்டாலும் நான் போய்ப் பேச மாட்டேன். இது அந்தக் கரப்பான்பூச்சி மேலே சத்தியம்!


************************************************************************************

31 comments:

கடுகு said...

காலையிலே எக்ஸ்ட்ரா சாம்பார் <>
இந்த இடத்தில் வாயை விட்டு சிரிக்காதவர்கள் எல்லாம் வாயில்லாத
பிராணிகள்ட்தான்! - பி எஸ் ஆர்

Unknown said...

”சரியாப்போச்சு! மாஞ்சு மாஞ்சு கொடுத்தாலும் மாம்பலத்துலே அவ்வளவு சினேகிதங்களும் கிடையாது; அவ்வளவு மூக்கும் கிடையாது.”\\\\\\\

”பேக்கு மாதிரியிருக்காரு!”\\\\

விருந்தும் மருந்தும்தான் மூணு நாள்! கிட்நாப்புக்குமா? ஒரு நாள் குறைச்சுக்கப்படாதா?”\\\\\\\\

ஹாஹா கலக்கலோ கலக்கல்

வை.கோபாலகிருஷ்ணன் said...

;)))))

முதலில் சிரித்த இடம்:

// ”அப்புறமென்ன? ஜவ்வரிசிப்பாயாசம்தான்.”//

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”விட்டிருங்க கிட்டாமணி! எல்லாத்தையும் விட்டிருங்க! பொழுதுபோகலேன்னா வயசான காலத்துலே ஒரு பார்க்குக்குப் போங்க, லைப்ரரிக்குப் போயி புத்தகம் படியுங்க. இல்லேன்னா கோவிலுக்குப் போயி சாமி கும்பிடுங்க! இப்படி டிவியிலே வந்து உங்க முகரைக்கட்டையை நாள்மூச்சூடும் காட்டி எங்க உசிரை எடுக்காதீங்க! இந்த வாட்டி கரப்பான்பூச்சி வீடியோ! அடுத்தவாட்டி ஒரு லாரி நிறைய கரப்பான்பூச்சியைப் பிடிச்சு எல்லா டிவி.ஸ்டேஷன்லேயும் விட்டிருவோம். புரிஞ்சுதா?”//

நல்லதொரு தண்டனை.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கலக்கல்....

பாராட்டுக்கள்....

Unknown said...

மொட்டை தலையும் முழங்காலும் அடுத்த தொகுப்புலே நிச்சயம் இந்த பதிவு இடம்பெறும் சேட்டைக்காரன்ஜி !
தங்களை நேரில் சந்திக்க முடிந்தது ...மகிழ்ச்சியை தந்தது !

நாய் நக்ஸ் said...

சேட்டை...சேட்டைதான்.....

:-)))))))))))))))))))

இராஜராஜேஸ்வரி said...

”கவலைப்படாதீங்க மிசஸ் பாலாமணி! அவரை நீங்க பார்த்துக்கிறா மாதிரியே பார்த்துக்கிறோம்.”

”ஐயையோ! அப்படியெல்லாம் பண்ணாதீங்க! கொஞ்சம் மரியாதையாவே பார்த்துக்கோங்க.

ஒரு கிலோ வாங்கியது மூக்குப் பொடியா சொக்குப் பொடியா??

வரிக்குவரி தூவி படிக்கும் அத்தனை பேரையும் இடைவிடாமல் தும்மல் மாதிரி சிரிக்கவைத்த அருமையான கதை..பாராட்டுக்கள்..!

சேலம் தேவா said...

அடுத்த புத்தகத்துக்கு கலக்கல் கதை ரெடி...(அவரு பாத்தா என்ன நினைப்பாரு..?!) ;)

pravinfeb13 said...

வரிக்கு வரி writer human son நினைவுக்கு வந்தது எனக்கு மட்டும்தானா??
செம காமெடி சார் நீங்க

பெசொவி said...

வழக்கம்போல் சேட்டை கலக்கல்!

புதியதலைவலி டிவி, தொந்தி டிவி, டாட்டர் டிவி இதெல்லாம் புரிஞ்சுது. ஆனா இந்த அம்பயர் டிவி மட்டும் புரியலை (ஒரு வேளை, சென்னை பகுதியில அந்த மாதிரி டிவி இருக்குதோ?)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காலையில சந்தோஷமா சிரிக்க வச்சுட்டீங்க சேட்டை சார். கடத்துனதுக்கான காரணம் சூப்பர். வரிக்கு வரி நகைச்சுவை

சசிகலா said...

உங்க புக் படிக்க படிக்க ஆர்வம் குறையாமல் மீண்டும் படிக்க எண்ணுகிறேன்.

காலைலயே எக்ஸ்டரா சாம்பார்... இது அசத்தல்..
விருந்தும் மருந்தும் தான 3 நாள் சொன்னாங்க.. இந்த இடமும் நகைச்சுவை. அதுக்காக மற்ற வரிகள் என்று யாரும் கேட்கப்படாது.

கௌதமன் said...

பல விவாத மேடைகளில், பார்த்த முகங்களையே பார்த்து, கேட்ட கருத்துகளையே கேட்டு, இவர் வந்தால் இதைத்தான் பேசுவார், இப்படித்தான் பேசுவார் என்று கணித்துவிட முடியும். அப்படி எங்கும் வந்து அரைத்த மாவையே அரைக்கின்ற மனிதர்களுக்கு, இப்படிப்பட்ட தண்டனை அவசியம்தான். நகைச்சுவையாக சொல்லப்பட்ட விஷயமாக இருந்தாலும், முழு பிளேடு முத்தண்ணாக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு இது.

ராஜி said...

ஸ்பீக்கர், டியூப்லைட்டெல்லாம் போட்டுப் பேசறதுக்கு நான் என்ன தண்ணித்தொட்டி திறப்புவிழாவுக்கா வந்திருக்கேன்?
>>
சிரிச்சு மாளலை. இந்த பதிவை ஒரே மூச்சுல படிக்கலை ஐயா! ரெண்டு மூணு தரமா படிச்சேன். ஏன்னா சிரிப்பை அடக்க தெரியலை. அதான்

Manimaran said...


அடடா என்ன ஒரு நகைச்சுவையான எழுத்து நடை... ! இதெல்லாம் வரம்..! வேறொன்னும் சொல்றதிக்கில்ல... BTW நீங்க யாரைக் கலாக்க நினைச்சீங்களோ அவர் நன்றாகவே கலாய்க்கப் பட்டிருக்கிறார் . வெல்டன் ..!

ADHI VENKAT said...

சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் வலிக்குது... பிரமாதம்.

ஒவ்வொரு வரியையும் ரசித்து சிரித்தேன். பாராட்டுகள்.

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

Unknown said...



தாங்கல! (சிரிப்பு)!

G.M Balasubramaniam said...


அன்பின் சேட்டை, நடிப்பிலும் சரி எழுத்திலும் சரி நகைச்சுவை கைவருவதுஆண்டவனின் ஆசிர்வாதம். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. கருத்துப் பொருளும் சொல்லிப்போன விதமும் அருமை. எதையும் குறிப்பிட்டுக் கூறாமல் எல்லாவற்றையும் வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுக்கள்.

middleclassmadhavi said...

Supero super!

வல்லிசிம்ஹன் said...

இப்படி ஒரு கிட்நப்பிங் இப்பத்தான் பார்கிறேன் படிக்கிறேன். :)))))))))))))))))))
நல்ல பயனுள்ள தொல்லையில்லத காட்சி!!!

ரிஷபன் said...

சிரிச்சுகிட்டே இருக்கேன்..

இந்திரன் said...

ஹாஹா சேட்டை சார்.... சிரிச்சு மாளல மனுஷ்யபுத்திரன் மாதிரி ஆளுங்க கவனத்துக்கு இத யாராச்சும் கொண்டு போனா தேவல....

Dr Joseph Rabinson, PhD. Dravidian_Scientist_Blog said...

மரண மொக்க....இதுல என்ன அப்படி பெரிய காமிடியிருக்குன்னு நேர மென கெட்டு வேற எழுதியிருக்கீங்க பாஸ்.....?

ரூபக் ராம் said...

/// ”அப்படியா?” பாலாமணியின் கண்களில் அரசுக்குடியிருப்பின் கூரையைப் போல ஈரம்கசிந்தது. ”என் வயித்துலே பாலை வார்த்தீங்க! எம் புருசன் எப்படியிருக்காரு?”

”பேக்கு மாதிரியிருக்காரு!”// ஹா ஹா ஹா


// ”கடவுளே!” கிட்டாமணியின் கண்கள், கார்ப்பரேஷன் தண்ணீர் டாங்கரைப்போல ஒழுக ஆரம்பித்தன. “தலைதீபாவளிக்குப் போனபோது மாமனார், மாமியார் கூட என்னை இப்படி உபசரிச்சது கிடையாதே! உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. சீக்கிரமே நீங்க நிறைய கிட்நாப் பண்ணி சீரும் சிறப்புமா சிரஞ்சீவியா இருப்பீங்க!”// சூப்பர்


//உங்களாலே எத்தனை பேரு டிவி பார்க்கிறதையே நிறுத்திட்டாங்க தெரியுமா?”// நானும் அதில் ஒருத்தன்

நண்பா said...

அருமையான எழுத்து நடை..
"பேக்கு மாதிரியிருக்காரு!” Timing அசத்தல்..
நீங்க கலக்குங்க சித்தப்பு.. :)

சாந்தி மாரியப்பன் said...

சேட்டை ஃபுல் ஃபார்ம் :-)))))

வரிக்கு வரி நகைச்சுவை மிளிர்கிறது.

சமீரா said...

வாவ்.... செம காமெடி டிராக்... நிஜமாவே இப்படிப்பட்ட கிட்டமணிங்க தொல்லையால தான் நான்ல டிவி பக்கமே போறதில்ல...

//இந்தக் கிட்நாப் மணிக்கு குறுக்கே போற பூனையும், குறுக்கே பேசற பொம்பளையும் அறவே பிடிக்காது! // - ஹாஹஹா.....
அசத்திடீங்க!!!

பொ.முருகன் said...

ஹா ஹா ஹா ...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் - இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

துரை செல்வராஜூ said...

உங்கள் தளம் - இன்று வலைச்சரத்தில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...

http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

வாழ்த்துக்கள்...