Saturday, September 8, 2012

நானொரு சிந்து காவடிச்சிந்து



செய்தி: இஸ்ரோவிலிருந்து 100-வது ராக்கெட் கிளம்பும்!

நானொரு சிந்து காவடிச்சிந்து

நாங்களும் இன்று ஞானமே கொண்டு
வானம் பிடிச்சிப்புட்டோம்!- நூறு
பாணம் அனுப்பிச்சிட்டோம்
நாளும்பொழுதும் நாட்டை உலுக்கும்
ஈனம் மறைச்சுப்புட்டோம்-அதை
இன்று மறந்துப்புட்டோம்!

நாங்களும் இன்று ஞானமே கொண்டு

பொல்லாத விலைவாசி ஏற்றத்தைப் போலே
போகாதே வேறெந்த ராக்கெட்டும் மேலே!
பொல்லாத விலைவாசி ஏற்றத்தைப் போலே
போகாதே வேறெந்த ராக்கெட்டும் மேலே!
பையில்தான் காசோடு சந்தைக்குப் போறார்
கையில்தான் காய்வாங்கி வீட்டுக்கு வாரார்!
உப்புப்புளியும் ஆடம்பரமோ? நாம்
உண்டுசிரிக்கும் நாளும்வருமோ..?
சொல்லுங்களேன்....!

நாங்களும் இன்று ஞானமே கொண்டு

தேசத்தின் மானத்தை வானிலே ஏத்தி
தேர்ந்தாரே நெற்றியில் நாமத்தைச் சாத்தி
தேசத்தின் மானத்தை வானிலே ஏத்தி
தேர்ந்தாரே நெற்றியில் நாமத்தைச் சாத்தி
நாட்டுக்கு நன்மைகள் வந்திடும் என்னும்
நம்பிக்கை ராக்கெட்டு மீளலை இன்னும்
எரிபொருளுக்கு நம் அடிவயிறுண்டு- வீண்
பரிதவிப்பாச்சே சுதந்திரம்கண்டு என்ன பயன்?

நாங்களும் இன்று ஞானமே கொண்டு
வானம் பிடிச்சிப்புட்டோம்!- நூறு
பாணம் அனுப்பிச்சிட்டோம்
நாளும்பொழுதும் நாட்டை உலுக்கும்
ஈனம் மறைச்சுப்புட்டோம்-அதை
இன்று மறந்துப்புட்டோம்!


17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை .... மிக அருமை.

அதே ”நான் ஒரு சிந்து” பாடல் மெட்டில் அழகாக அமைத்துள்ளீர்கள்.

சிரித்தேன், சிரிக்கிறேன், சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.


மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அசத்துங்கள்.

பிரியமுள்ள
vgk

கும்மாச்சி said...

சேட்டை, அருமை, அசத்தல்.

கலக்குங்க பாஸ்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தேசத்தின் மானத்தை வானிலே ஏத்தி

தேர்ந்தாரே நெற்றியில் நாமத்தைச் சாத்தி//

ராக்கெட் வேகத்தில் வந்து விழுந்துள்ள சூப்பர் வரிகள். ;)))))

கையைக் கொடுங்க ...... நான் உடனே முத்தாக் கொடுக்கணும்.

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கிட்டீங்க சார்... சூப்பர்...

பால கணேஷ் said...

கச்சிதமாக ப்ரேம் போட்ட மாதிரி மெட்டுக்குள் அடங்குது வரிகள். நையாண்டியின் தாக்கத்தில் சிரிக்குது மனது. ரசனைக்கு விருந்து சேட்டையண்ணாவின் பாடல்கள். தொடரட்டும்.

அனுஷ்யா said...

ஹஹா... செம்ம செம்ம...
உண்மையிலே ஒக்காந்து யோசிச்சிருக்கீங்க...

ஸ்ரீராம். said...

அருமை. நல்ல ராகம்தான் தெரிவு செய்திருக்கிறீர்கள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:-))

முத்தரசு said...

சிந்து நல்லாத்தான் கீது

சமீரா said...

ரொம்ப அழகாக நிலமைய சொல்லிடீங்க... இத தான் சொல்வாங்க "ஒய்யார கொண்டையில் தாழம்பூவாம் அது உள்ள இருப்பது ஈரும் பேனாம்" ...
எப்படி மெட்டு மாறாமல் வார்த்தை அமைக்கறீங்க... சூப்பர்.. நீங்க ரூம் போட்டு யோசிக்கறீங்க சார்....என்னோட அம்மா-வும் உங்க பாட்டுக்கு fan ஆகிடாங்க.... காலைல நல்ல உடற்பயிற்சி.. புரியலைங்களா சார்.. நல்ல வாய்விட்டு சிரிச்சோம்...

Unknown said...



வாய் விட்டுச் சிரித்தா நோய் விட்டுப்
போகும். ஆனா சிரிப்பு இன்னும் போகலையே!

பாடுவோர் பாடினால்....! ஆடத
தோன்றும்

G.M Balasubramaniam said...

முதலில் பாட்டுக்குப் பாராட்டுக்கள். இருந்தாலும் இதெல்லாம் தேவை இல்லை என்பது உங்கள் கருத்தா.?

Kannan.s Space said...

ரூம் போடாமலே யோசிச்சி எழுதியமைக்கு அதுவும் அருமையாய், வாழ்த்துக்கள். ஆனால் அரிதாக நடக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஆமா, நம்ம இந்தியாவில்தான்,நையாண்டி தேவையா? யோசிங்க, தல! ஒரு காலத்தில் ஃபிரெஞ்சு நாட்டிலிருந்துதான் நம்ம satelites அனுப்பிச்சோம். இப்ப அனுப்பியதில் அவங்க sateliteம் உண்டே. நையாண்டி பண்ண மேட்டரா இல்ல நம்ம நாட்டிலே? அதையெல்லாம் விட்டு விளாசுங்க.

ஆமா, அதென்ன 2012 பதிவு கவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கு? போன வருஷங்களை overtake பண்ண என் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு.. பாராட்டுகள் சேட்டை ஜி!.

settaikkaran said...

//@வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை .... மிக அருமை.//

மிக்க மகிழ்ச்சி ஐயா!

அதே ”நான் ஒரு சிந்து” பாடல் மெட்டில் அழகாக அமைத்துள்ளீர்கள். சிரித்தேன், சிரிக்கிறேன், சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.//

அடுத்தவர்களைப் பாராட்டுவதே ஒரு அரிய குணம். அதிலும் உங்களை மாதிரி சிக்கனமே இல்லாமல், இவ்வளவு தாராளமாகப் பாராட்டுவது என்பதெல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்கே வாய்க்கும்.

//மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்துங்கள்.//

நீங்கள் இருக்க பயமேன்? :-)
தொடரும் உங்களது ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!

//ராக்கெட் வேகத்தில் வந்து விழுந்துள்ள சூப்பர் வரிகள். ;)))))

கையைக் கொடுங்க ...... நான் உடனே முத்தாக் கொடுக்கணும்.//

இறைவன் அருளிருந்தால், விரைவில் திருச்சியில் நேரிலேயே சந்தித்துக் கைகுலுக்கலாம் ஐயா! :-)

மிக்க நன்றி!

//@கும்மாச்சி said...

சேட்டை, அருமை, அசத்தல். கலக்குங்க பாஸ்.//

மிக்க மகிழ்ச்சி! உங்க பாட்டும் நல்லா இருந்திச்சு! மிக்க நன்றி! 

//@திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கிட்டீங்க சார்... சூப்பர்...//

மிக்க மகிழ்ச்சி சார்! மிக்க நன்றி!

//@பால கணேஷ் said...

கச்சிதமாக ப்ரேம் போட்ட மாதிரி மெட்டுக்குள் அடங்குது வரிகள். நையாண்டியின் தாக்கத்தில் சிரிக்குது மனது. ரசனைக்கு விருந்து சேட்டையண்ணாவின் பாடல்கள். தொடரட்டும்.//

வாங்க கணேஷ்! உங்களது வலைப்பூவிலேயே தற்போது நீங்கள் எழுதுவதை நிறுத்திவைத்திருந்தாலும் (தற்காலிகமாக), இங்கு வந்து உற்சாகமூட்டுவது நெகிழ்ச்சியான விஷயம்! நன்றி கணேஷ்!

//@மயிலன் said...

ஹஹா... செம்ம செம்ம...உண்மையிலே ஒக்காந்து யோசிச்சிருக்கீங்க...//

வாங்க வாங்க டாக்டரே! மிக்க நன்றி! :-)

//@ஸ்ரீராம். said...

அருமை. நல்ல ராகம்தான் தெரிவு செய்திருக்கிறீர்கள்!//

மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

//@மாதேவி said...

அருமை.//

மிக்க நன்றி!

//@நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:-))//

மிக்க நன்றி!

//@மனசாட்சி™ said...

சிந்து நல்லாத்தான் கீது//

டாங்க்ஸ்பா! :-)

//சமீரா said...

ரொம்ப அழகாக நிலமைய சொல்லிடீங்க... இத தான் சொல்வாங்க "ஒய்யார கொண்டையில் தாழம்பூவாம் அது உள்ள இருப்பது ஈரும் பேனாம்" ...//

க்ரேட்! இதே பழமொழியை ஒருத்தர் சொன்னதைக் கேட்டுத்தான், இந்தப் பாட்டையே எழுதினேன். :-)

//எப்படி மெட்டு மாறாமல் வார்த்தை அமைக்கறீங்க... சூப்பர்.. நீங்க ரூம் போட்டு யோசிக்கறீங்க சார்....என்னோட அம்மா-வும் உங்க பாட்டுக்கு fan ஆகிடாங்க.... காலைல நல்ல உடற்பயிற்சி.. புரியலைங்களா சார்.. நல்ல வாய்விட்டு சிரிச்சோம்...//

ரூமெல்லாம் போட்டு யோசிக்க முடியாது சகோதரி! :-))
உங்கம்மாவையும் கட்சியில் இணைத்தது குறித்து மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//புலவர் சா இராமாநுசம் said...

வாய் விட்டுச் சிரித்தா நோய் விட்டுப்போகும். ஆனா சிரிப்பு இன்னும் போகலையே!//

ஐயாவின் தொடரும் வருகையும் பாராட்டும் மென்மேலும் உற்சாகமூட்டிக் கொண்டேயிருக்கிறது. :-)

//பாடுவோர் பாடினால்....! ஆடததோன்றும்//

அதுவும் நல்ல பாட்டுத்தான் ஐயா! என்னிடமிருந்து ரொம்ப நாள் தப்பித்து விட முடியாது அதுவும்! 

மிக்க நன்றி ஐயா!

//G.M Balasubramaniam said...

முதலில் பாட்டுக்குப் பாராட்டுக்கள். இருந்தாலும் இதெல்லாம் தேவை இல்லை என்பது உங்கள் கருத்தா.?//

நிச்சயமாக அப்படியெல்லாம் நினைக்கவில்லை! விஞ்ஞான வளர்ச்சி அவசியம் தான்! ஆனால், அன்றாடம் நாளொன்றுக்கு 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடுகிற பெருவாரியான கூட்டத்திலிருக்கிற இந்தியன் இதில் பெருமையடைவானா?

வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

///esskae59 said...

ரூம் போடாமலே யோசிச்சி எழுதியமைக்கு அதுவும் அருமையாய், வாழ்த்துக்கள். //

வாங்க கண்ணன்! யோசிச்சு எழுதினேங்கிறதே முதல்லே பெரிய விஷயம்! :-)

//ஆனால் அரிதாக நடக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஆமா, நம்ம இந்தியாவில்தான்,நையாண்டி தேவையா? யோசிங்க, தல! ஒரு காலத்தில் ஃபிரெஞ்சு நாட்டிலிருந்துதான் நம்ம satelites அனுப்பிச்சோம். இப்ப அனுப்பியதில் அவங்க sateliteம் உண்டே.//

அனைத்தும் உண்மை! இந்த வளர்ச்சியெல்லாம் அபாரமானது தான்! சாதனைகளெல்லாம் வியக்கத்தக்கவைதான்! ஆனால், இப்போ இந்தியா எதிர்கொண்டிருக்கிற பிரச்சினைகளின் மத்தியில், ’இதெல்லாம் தேவையா?’ என்று விரக்தியுடன் கேட்கிற ஒரு கூட்டமும் இருக்கே! நான் அதில் இல்லையென்றாலும், இதை அவங்க சார்பில் எழுதினதாக நினைச்சுக்கலாம்! ஆனால், அடிப்படையில் அன்றாடங்காய்ச்சிகளுக்கு இதுபோன்ற சாதனைகள் பெரிய மகிழ்ச்சியையோ எதிர்பார்ப்பையோ ஏற்படுத்துவதில்லை என்பதுதானே நிஜம்? :-)

//நையாண்டி பண்ண மேட்டரா இல்ல நம்ம நாட்டிலே? அதையெல்லாம் விட்டு விளாசுங்க.//

சொல்லிட்டீங்கல்லே? பட்டையக் கிளப்பிருவோம்!:-)

//ஆமா, அதென்ன 2012 பதிவு கவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கு? போன வருஷங்களை overtake பண்ண என் வாழ்த்துகள்.//

கண்ணன்! நடுவுலே பெரிய ‘கேப்’ விழுந்திருந்தது. போன வருஷம் மாதிரி, அதுக்கும் மேலே எழுதணும்னா, ரொம்ப உழைக்கணும். பார்ப்போம் கண்ணன்! :-)

மிக்க நன்றி!

//@வெங்கட் நாகராஜ் said...

அருமையான பகிர்வு.. பாராட்டுகள் சேட்டை ஜி!.//

வாங்க வெங்கட்ஜீ! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! :-)

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் அருமையான பகிர்வு...........


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)