Tuesday, September 18, 2012

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா





ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா - மெட்டில்


ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!
ஒரே தீதி ஓயாமலே கிளப்பிவந்தார் பீதி!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

ஓரே புலி வருதுன்னாங்க ஒன்பதுவாட்டி!
ஓரே புலி வருதுன்னாங்க ஒன்பதுவாட்டி!யாரும்
ஓடலைன்னு விலகிப்புட்டார் கூட்டத்தைக் கூட்டி
கூட்டத்தைக் கூட்டி...!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

அடிக்கடியும் அம்மணிக்கு வருது ஜுரம்தான்!-கால்கள்
தடுக்கிப்புட்டா ஜன்பத்துக்கு ஓலைவரும்தான்!
கடுப்பிருந்தும் காங்கிரசோ ஈனசுரம்தான் நாளும்
காதில்பஞ்சை வைச்சிருக்கும் ஆளு மரம்தான்!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

கொல்கத்தாவின் ராணி தினம் கோஷம்விடுத்தார்- தினம்
பல்விளக்கி முடிஞ்சதுமே பாணம்தொடுத்தார்
குண்டைத் தூக்கிப் போட்டுப்போட்டு மண்டையுடைத்தார்-அவர்
குதுப்மினாரை ஹூக்ளியிலே கொண்டுபுதைத்தார்
கொண்டுபுதைத்தார்

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!

கூட்டு என்று பேருக்குத்தான் தர்மமுமில்லை-தினம்
கும்முகின்ற கூட்டணிபோல் கருமமுமில்லை
ஓட்டுப்போடும் கட்சியெல்லாம் கூட்டுதானய்யா-தினம்
ஓட்டுகின்ற கூட்டுருந்தா வேட்டுதானய்யா...!
வேட்டுதானய்யா...!

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!
ஒரே தீதி ஓயாமலே கிளப்பிவந்தார் பீதி!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு தீதி!
 

15 comments:

MARI The Great said...

>>>>கொல்கத்தாவின் ராணி தினம் கோஷம்விடுத்தார்- தினம்
பல்விளக்கி முடிஞ்சதுமே பாணம்தொடுத்தார்<<<<

ஹி ஹி ஹி ஹி!

Easy (EZ) Editorial Calendar said...

\\"கூட்டு என்று பேருக்குத்தான் தர்மமுமில்லை-தினம்
கும்முகின்ற கூட்டணிபோல் கருமமுமில்லை
ஓட்டுப்போடும் கட்சியெல்லாம் கூட்டுதானய்யா-தினம்
ஓட்டுகின்ற கூட்டுருந்தா வேட்டுதானய்யா...!
வேட்டுதானய்யா...!"//

உண்மையை அழகா கவிதை வடிவில் எடுத்து சொல்லலீருகிங்க......பகிர்வுக்கு நன்றி.......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பால கணேஷ் said...

நாமளும் இது மாதிரி ஒரு பாட்டாவது எழுதிடணும்னு ஆசையக் கிளப்பிடுச்சு பாட்டு. அருமைண்ணா.

சேலம் தேவா said...

ஹா..ஹா...தீதியைப் பற்றி பாதிதான் எழுதியுள்ளீர்கள்.

ரிஷபன் said...

கொல்கத்தாவின் ராணி தினம் கோஷம்விடுத்தார்- தினம்
பல்விளக்கி முடிஞ்சதுமே பாணம்தொடுத்தார்

இசையுடன் மனசுள் ஓடுது பாட்டு

திண்டுக்கல் தனபாலன் said...

தூள் கிளப்புறீங்க...

semmalai akash said...

ஆஹா! ஆஹா! அருமை ஐயா மிக மிக ரசித்தேன் ஐயா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மெட்டுக்குப் பொருத்தமா இருக்கே. சூப்பர் சார்.சினிமா பாட்டு எழுதலாம் நீங்க

சமீரா said...

நானும் ரொம்ப நாளா இப்படித்தான் நினைச்சேன்.. மம்தா மேடம் சொல்வாங்க ஆனா செய்யமட்டங்கனு.. இல்ல அவங்க மாநிலத்த கொஞ்சம் கவனிச்சலும் ஜகா வாங்கிடுவாங்கன்னு... ஆன்ட்டி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாங்க...
எப்படி சார் உங்களுக்கு இப்படி மெட்டு தோணுது.. சூப்பர் சார்

வெங்கட் நாகராஜ் said...

பட்டையைக் கிளப்பறீங்க சேட்டை அண்ணா...

settaikkaran said...

//@வரலாற்று சுவடுகள் said...

ஹி ஹி ஹி ஹி!//

மிக்க நன்றி! :-)

//@Easy (EZ) Editorial Calendar said...

உண்மையை அழகா கவிதை வடிவில் எடுத்து சொல்லலீருகிங்க......பகிர்வுக்கு நன்றி.......//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//@பால கணேஷ் said...

நாமளும் இது மாதிரி ஒரு பாட்டாவது எழுதிடணும்னு ஆசையக் கிளப்பிடுச்சு பாட்டு. அருமைண்ணா.//

உங்களாலே எல்லாம் எழுத முடியும்னு எனக்குத் தெரியும் கணேஷ்! அடிச்சு தூள் கிளப்புங்க! மிக்க நன்றி! :-)

//@சேலம் தேவா said...

ஹா..ஹா...தீதியைப் பற்றி பாதிதான் எழுதியுள்ளீர்கள்.//

மீதியையும் எழுதினால் ‘சேதியே’ வேறாகி விடுமே? :-)
மிக்க நன்றி!

//@ரிஷபன் said...

இசையுடன் மனசுள் ஓடுது பாட்டு//

மிக்க நன்றி! :-)

//@திண்டுக்கல் தனபாலன் said...

தூள் கிளப்புறீங்க...//

மிக்க நன்றி! :-)

//@Semmalai Akash! said...

ஆஹா! ஆஹா! அருமை ஐயா மிக மிக ரசித்தேன் ஐயா.//

வாங்க ஆகாஷ்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//@T.N.MURALIDHARAN said...

மெட்டுக்குப் பொருத்தமா இருக்கே. சூப்பர் சார்.சினிமா பாட்டு எழுதலாம் நீங்க//

யாரு சான்ஸ் கொடுப்பாங்க? :-)
மிக்க நன்றி! :-)

//@சமீரா said...

நானும் ரொம்ப நாளா இப்படித்தான் நினைச்சேன்.. மம்தா மேடம் சொல்வாங்க ஆனா செய்யமட்டங்கனு.. இல்ல அவங்க மாநிலத்த கொஞ்சம் கவனிச்சலும் ஜகா வாங்கிடுவாங்கன்னு... ஆன்ட்டி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாங்க...//

ஈகோ ஈகோன்னு ஒண்ணு இருக்கே! அது அந்த அம்மணிக்கு ரொம்ப அதிகம்! அதான் இத்தனை குழப்பமும்...! :-))

//எப்படி சார் உங்களுக்கு இப்படி மெட்டு தோணுது.. சூப்பர் சார்//

உட்கார்ந்து யோசிப்போமில்லே? :-))
மிக்க நன்றி சகோதரி!

//@வெங்கட் நாகராஜ் said...

பட்டையைக் கிளப்பறீங்க சேட்டை அண்ணா...//

பஹூத் ஷுக்ரியா வெங்கட்ஜீ! :-))

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ!!!!!

எப்படிங்க....... எப்படி இப்பூடி?

பாடிக்கிட்டே ரசித்தேன். ரசிச்சுக்கிட்டே பாடறேன்:-)))))

Unknown said...

ஓட்டுப்போடும் கட்சியெல்லாம் கூட்டுதானய்யா-தினம்
ஓட்டுகின்ற கூட்டுருந்தா வேட்டுதானய்யா...!
வேட்டுதானய்யா...!

இராகம் உங்களுக்கு சராகமாக வருகிறது!அதற்கேற்ற சொற்களும் தானே புயல்போல வருகிறது!

settaikkaran said...

//@துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ!!!!!எப்படிங்க....... எப்படி இப்பூடி?//

எல்லாம் ஒரு ஃப்ளோவுல வர்றதுதான்! 


//பாடிக்கிட்டே ரசித்தேன். ரசிச்சுக்கிட்டே பாடறேன்:-)))))//

ஆஹா! மிக்க மகிழ்ச்சி! நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! :-)

//@புலவர் சா இராமாநுசம் said...

இராகம் உங்களுக்கு சராகமாக வருகிறது!அதற்கேற்ற சொற்களும் தானே புயல்போல வருகிறது!//

உங்களைப் போன்ற பூக்கள் சுற்றிலும் இருந்தால், இந்த நாருக்கும் சற்றே வாசம் வந்து விடுகிறது ஐயா! மிக்க நன்றி! :-)