Tuesday, February 1, 2011

யாருடன் கூட்டணி?-கு.மு.க.அறிவிப்பு

குடிமக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்குழு அவசரமாகக் கூட்டப்பட்டது தெரிந்ததே! கூட்டத்தின் போது நடந்த விவாதங்கள் குறித்து விலாநோகச் சிரிக்கவைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டு என்று தமிழகத்தின் கட்சிகள் வெளியிட்டுவரும் பல அறிக்கைகள், ’த்ரீ இடியட்ஸ்’ படம்குறித்த வதந்திகளை விடவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பா.ம.க.தமிழகத்தில் 45 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால், கு.மு.க.தொண்டர்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, தலைமறைவாக இருக்குமாறு கொள்கைப்பரப்புச் செயலாளர் கோல்கொண்டா கோவிந்தசாமி ரகசியச்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. மீறுகிற கு.மு.க.தொண்டர்களை பா.ம.க.வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று வேட்பாளர்களாக நிறுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கழகம் பொறுப்பேற்காது என்று சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலூர் விழுப்புரம் திண்டிவனம் பகுதிகளில் தலையில் துண்டுபோட்டபடி டாஸ்மாக் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், கைத்தறி வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும், பா.ம.கவின் டாஸ்மாக் விரோதப்போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கு.ம.க.தொண்டர்கள் அருகிலிருக்கும் மதுபானக்கடைகளில் "ரிப்பீட்டு" போராட்டம் நடத்தவுள்ளதாக, கட்சியின் பொருளாளர் பகார்டி பக்கிரிசாமி அறிக்கை அளித்திருப்பதும், அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.எஸ். கலைஞருக்கு "வ.உ.சி" விருது வழங்குவதாக அறிவித்தது போலவே கு.மு.க தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமிக்கு "ஓ.சி" விருதோ அல்லது "டி.எஸ்.பி" விருதோ வழங்க முன்வரலாம் என்ற வதந்தி காரணமாக, தங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று திரு.கிருஷ்ணசாமி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். மேலும் கு.மு.க.தொண்டர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக டாஸ்மாக் கடைதவிர வேறெங்கும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வருகிற பொதுத்தேர்தலில் குடிமக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:


வருகிற பொதுத்தேர்தலில் கு.ம.க எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறது? மக்கள் ஆதரிப்பார்களா?

  • கண்டிப்பாக ஆதரிப்பார்கள். காரணம், அரசியல்வாதிகளைப் போல அல்லாமல், குடிகாரர்கள் குடித்தால் மட்டுமே உளறுவார்கள்.
  • அரசியல்வாதிகளைப் போல குடிகாரர்கள் அடிக்கடி ’பிராண்டை’ மாற்ற மாட்டார்கள்.
  • அரசியல்வாதிகள் தங்களது கொள்கைகளை அழித்து வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பவர்கள்; குடிகாரர்கள் அவரவர் சொத்தை கொள்கைக்காக செலவழித்து அழிப்பவர்கள்.
  • குடிகாரர்கள் தங்களது சொந்த வேட்டியைத் தான் அவிழ்ப்பார்களே தவிர, அடுத்தவர் வேட்டியை அவிழ்க்க மாட்டார்கள்.
  • குடிகாரர்களுக்கு தமிழகமெங்கும் தனிப்பெரும்பான்மை இருந்தாலும், பிரிவினை பேச மாட்டார்கள்.
  • குடிகாரர்களால் அரசின் கஜானா நிரம்புகிறது. அரசியல்வாதிகள் சுவிஸ் வங்கியை நிரப்புகிறார்கள்.
  • குடிகாரன் பேச்சும், அரசியல்வாதி பேச்சும் விடிஞ்சா போச்சு - என்பது தவிர இருவருக்கும் கிஞ்சித்தும் ஒற்றுமையில்லை. எனவே, கொள்கைரீதியில் இவ்வளவு அடிப்படை வேறுபாடுகள் உள்ள காரணத்தால், வருகிற தேர்தலில் கு.மு.க.போட்டியிட்டால், பல இடங்களைக் கைப்பற்றும் என்பது உறுதி.
இந்தத் தேர்தலில் எந்தெந்தத் தொகுதிகளில் கு.மு.க. வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூற முடியுமா?

தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கு.மு.க. வளர்ச்சியடைந்திருக்கிறது. இருந்தாலும் விஸ்கினாபுரம், பிராந்தியம்பாளையம், ரம்மாக்குடி, ஜின்னாளம்பட்டி, பீரவநல்லூர், ஒயினாப்பள்ளி, வாட்காகுளம் போன்ற ஊர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கு.மு.க.கட்சியில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் யார் யாராக இருப்பார்கள்?

கு.ம.க.தலைவர் கிங்ஃபிஷர் கிருஷ்ணசாமி ராவெல்லாம் ராவாய்க் குடிப்பவர் என்பதை அனைவரும் அறிவர். இது தவிர கோல்கொண்டா கோவிந்தசாமியும் மிகத் திறமையானவர். இதுவரை பல டாஸ்மாக்குகளில் நூற்றுக்கணக்கான கிளாஸ்களை உடைத்து சாதனை புரிந்தவர்.

நெப்போலியன் நெடுவளவன் பல்விளக்கமாலே பாட்டிலை விழுங்குபவர். இதுதவிர, பகார்டி பக்கிரிசாமி பத்தாண்டுகளாக ஓசியிலேயே குடித்துக்கொண்டிருப்பவர் என்ற நற்பெயரும் இருக்கிறது. இது போல ஓ.ஸி உலகநாதன், டி.எஸ்.பி.திருவேங்கடம் போன்ற நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் உள்ளனர்.

கு.மு.க. வெற்றிபெற்றால் தமிழகத்துக்கு என்ன நன்மை கிடைக்கும்?

தமிழகத்தில் உண்மையான குடியாட்சி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுமக்களே! கு.மு.க.வின் அரசியல் எதிர்காலம் குறித்த வதந்திகள் உண்மைதானா இல்லையா என்பதை தேர்தல் வரையிலும் பொறுத்திருந்து பார்ப்போமா? வணக்கம்!

30 comments:

beer mohamed said...

அரசியல் நையாண்டி சரியான பொருத்தமான கட்சி பெயர் தான் சூப்பர் அப்ப்ப்ப்ப்பு
http://athiradenews.blogspot.com/2011/02/blog-post.html

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சக்க லொள்ளு..

சிரித்து வகுறு வலிக்குது... ;)

test said...

கலக்கல் பாஸ்! :-))

Chitra said...

வருகிற பொதுத்தேர்தலில் கு.ம.க எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறது? மக்கள் ஆதரிப்பார்களா?


...இந்த கேள்விக்கு நீங்கள் தந்து இருக்கும் பதில் - உண்மை நிலையைத்தான் படம் பிடித்து காட்டி உள்ளது..... ம்ம்ம்ம்....
super!

Philosophy Prabhakaran said...

சேட்டையாரே... முதல் பின்னூட்டம் போட்டவறது பெயரை பார்த்தீர்களா...?

எல் கே said...

விலாநோகச் சிரிக்கவச்சிட்டீங்க

suneel krishnan said...

இந்த கட்சி நிக்குற தொகுதில ,எதிர்த்து யாராவது நின்னா அவன் அவுட் :)

sathishsangkavi.blogspot.com said...

சரியான சேட்டை...

ஒவ்வொரு பெயரும் அருமை...

பொன் மாலை பொழுது said...

பகார்டி பக்கிரிசாமி- இது சேட்டை தான் ன்னு எங்களுக்கும் தெரியும்.:)))))

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல் சேட்டை ஐயா!

Speed Master said...

சேட்டை சேட்டை

சேலம் தேவா said...

செம சேட்டை..!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>அரசியல்வாதிகளைப் போல குடிகாரர்கள் அடிக்கடி ’பிராண்டை’ மாற்ற மாட்டார்கள்.

நக்கலுக்கு நக்கல்.. சாட்டையடிக்கு சாட்டையடி.. அங்கத நடையில் எழுதடியூஷன் படிக்கனும் உங்க கிட்டே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வருகிற பொதுத்தேர்தலில் கு.ம.க எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறது? மக்கள் ஆதரிப்பார்களா?//

புட்டுபுட்டு வைத்த விவரங்களைப் படித்ததும், என் வோட்டு கு.மு.க. வுக்கே என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

நல்ல நகைச்சுவையான பதிவுக்கு என் நன்றிகள்.

Thenammai Lakshmanan said...

படிக்கபடிக்க் டாஸ்மாக்குள்ல வந்துட்டமோன்னு சந்தேக்ம் வந்துருச்சு சேட்டைக்காரரே..:))

settaikkaran said...

//beer mohamed said...

அரசியல் நையாண்டி சரியான பொருத்தமான கட்சி பெயர் தான் சூப்பர் அப்ப்ப்ப்ப்பு//

கட்சிப்பெயர் இருக்கட்டுமுங்க! இந்த இடுகைக்கு முதமுதலா உங்க பின்னூட்டம் வந்திருக்கிறது என்னா பொருத்தம்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சக்க லொள்ளு..சிரித்து வகுறு வலிக்குது... ;)//

வாங்க செந்தில்வேலன்! ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்திருக்கீங்க! மிக்க நன்றி!

settaikkaran said...

//ஜீ... said...

கலக்கல் பாஸ்! :-))//

மிக்க நன்றி ஜீ! :-)

settaikkaran said...

//Chitra said...

வருகிற பொதுத்தேர்தலில் கு.ம.க எந்த நம்பிக்கையில் போட்டியிடுகிறது? மக்கள் ஆதரிப்பார்களா?
...இந்த கேள்விக்கு நீங்கள் தந்து இருக்கும் பதில் - உண்மை நிலையைத்தான் படம் பிடித்து காட்டி உள்ளது..... ம்ம்ம்ம்....super!//

ஆமாம். அது உண்மை என்பதுதான் மிகவும் வருத்தப்பட வைக்கிற செய்தி. மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

சேட்டையாரே... முதல் பின்னூட்டம் போட்டவறது பெயரை பார்த்தீர்களா...?//

கவனித்தேன் நண்பா! உங்களைப் போலவே நானும் ஆச்சரியத்தில்...! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//எல் கே said...

விலாநோகச் சிரிக்கவச்சிட்டீங்க//

மனமாறப் பாராட்டுவது என்பது இதுதான் கார்த்தி! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//dr suneel krishnan said...

இந்த கட்சி நிக்குற தொகுதில ,எதிர்த்து யாராவது நின்னா அவன் அவுட் :)//

நெசந்தான்! டெபாசிட் கூட தேறாது அவங்களுக்கு! :-)
மிக்க நன்றி டாக்டர்!

settaikkaran said...

//சங்கவி said...

சரியான சேட்டை...ஒவ்வொரு பெயரும் அருமை...//

மிக்க நன்றி நண்பரே! எல்லாம் அப்படியே அமைஞ்சிடுது! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

பகார்டி பக்கிரிசாமி- இது சேட்டை தான் ன்னு எங்களுக்கும் தெரியும்.:)))))//

நீங்க சொன்னா சரிதான் கோல்கொண்டா கோவிந்தசாமி! மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

கலக்கல் சேட்டை ஐயா!//

மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//Speed Master said...

சேட்டை சேட்டை//

நன்றி நன்றி! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

செம சேட்டை..!!//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

நக்கலுக்கு நக்கல்.. சாட்டையடிக்கு சாட்டையடி.. அங்கத நடையில் எழுதடியூஷன் படிக்கனும் உங்க கிட்டே.//

நானே இணையத்துலே ஆன்-லைன் கோர்ஸ் மாதிரி அங்கங்கே எழுதுறவங்களைப் பார்த்து சூடு போட்டுக்கிட்டது தானே தல? மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//VAI. GOPALAKRISHNAN said...

புட்டுபுட்டு வைத்த விவரங்களைப் படித்ததும், என் வோட்டு கு.மு.க. வுக்கே என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.//

அதெல்லாம் போதாது. கூட ரெண்டு ஓட்டு பார்த்துப் போட்டு ஒப்பேத்தி விடுங்க!

//நல்ல நகைச்சுவையான பதிவுக்கு என் நன்றிகள்.//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...

படிக்கபடிக்க் டாஸ்மாக்குள்ல வந்துட்டமோன்னு சந்தேக்ம் வந்துருச்சு சேட்டைக்காரரே..:))//

வாங்க வாங்க தேனக்கா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)