Thursday, December 23, 2010

அரசியல்லே இதெல்லாம்.......!

ஒரு ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்த செய்தியை வாசித்து விட்டு, (ஐ நோ இங்கிலீஷ்!) மிகுந்த சமூகப்பருப்போடு, அதாவது மிகுந்த சமூகப்பொறுப்போடு நான் "இந்தியா 2020" என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஸ்டைலில் ஒரு இடுகை எழுத உட்காருவதற்கு முன்பு, இன்னொரு செய்தியைப் பார்த்து வெலவெலத்துப்போய்விட்டேன்.

வேறு ஒன்றுமில்லை! நம்ம இளவரசர் ராகுல் காந்தி சென்னைக்கு வந்திருந்தபோது, ’அரசே மது விற்பனை செய்வது தவறு; எனக்கு ஏற்புடையதல்ல!’ என்று பேசியிருந்தார் அல்லவா?. அந்தச் செய்தியைப் படித்துத்தான் நான் ஒரு விநாடி குழம்பி, பிறகு சுதாரித்துக் கொண்டு, ’முதலில் வந்த செய்தியின் அடிப்படையில் இடுகையை முடித்து விட்டு, பிறகு ராகுல் காந்தி சொன்னது பற்றி யோசிக்கலாம்,’ என்று முடிவு செய்தேன்.

இந்தியா 2020- பப்பர பப்பர பாய்ங்ங்ங்க்.....!


"மாமி, இந்த மனுசனுக்கு வரவர நாக்கு ஜெயா டிவியிலே வர்ற அம்மாவோட அறிக்கை மாதிரி நீண்டுக்கிட்டே போகுது. போனாப்போகுதுன்னு ஆசையா பைன்-ஆப்பிள் ரசம் பண்ணிக்கொடுத்தா, ’அன்னிக்கு பர்வதம் மாமி கொடுத்தனுப்பினா மாதிரி அவ்வளவு டேஸ்ட்டா இல்லேன்னு சொல்றாரு! இருக்கட்டும், நாளைக்கு வேப்பம்பூ ரசமும், பாகற்காய் பொறியலும் பண்ணி பழிக்குப் பழி வாங்குறேன்!" என்று பொருமினாள் கோமதி.

"அடி அசடே! பைன்-ஆப்பிள் ரசம் பண்ணினியா? என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கப்படாதோ? அதொண்ணுமில்லேடி கொழந்தே, தாளிக்கிறச்சே ரெண்டே ரெண்டு ஸ்பூன் ஒயிட் ரம்மையும் சேர்த்தேன்னு வச்சுக்கோ! ரசம் அமர்க்களமா இருக்கும்!" என்று விக்கிலீக்ஸ் போல ’டாப் சீக்ரட்’டை வெளியாக்கினார் பர்வதம் மாமி.

"ஓஹோ! இது தெரியாமப்போச்சே? நான் நேத்துத்தான் ரங்கநாதன் ஸ்ட்ரீட்டுக்குப் போயி, ரெண்டு ஃபுல் வொயிட் ரம்மும், ஷிவாஸ் ரீகல் விஸ்கியும் வாங்கிட்டு வந்தேன்!"

"ஷிவாஸ் ரீகலா? ரெண்டு ஃபுல் விஸ்கி வாங்கினா ஒரு குவார்ட்டர் ஃப்ரீன்னு பேப்பர்லே போட்டிருந்தானே? கிடைச்சுதோ?"

"ஓ கிடைச்சுதே! அப்புறம் வொயிட் ரம் வாங்கினா, கூடவே ஒரு குவார்ட்டர் வாட்கா ஃப்ரீ மாமி!"

"இது எப்போலேருந்து? நேக்குத் தெரியவே தெரியாதேடீ?"

"எனக்கும் தெரியாது மாமி. கடைக்குப் போனதும் தான் சொன்னாங்க. அனேகமா ஆடித்தள்ளுபடின்னு நினைக்கிறேன்."

"நன்னாப்போச்சு போ! வேப்பம்பூ ரசத்துக்கு துளியூண்டு ஷிவாஸ் ரீகல் விஸ்கியும் சேர்த்துக் கலக்கி அப்புறமாக் கொதிக்க வச்சேன்னா, கசப்பே தெரியாது. கமகமன்னு மணம் தூக்கும்!"

"அப்படியா? இன்னிக்கு உங்க வீட்டுலே என்ன சமையல் மாமி?"

"வெண்டைக்காய் போட்டு ஜானக்ஷா மோர்க்குழம்பு; ஆஃபீஸர்ஸ் சாய்ஸ் அகத்திக்கீரை; காஸ்மோபாலிடன் கத்திரிக்காய்க் கூட்டு! அப்புறம் ஃபிரஷா நெப்போலியன் நெல்லிக்காய் ஊறுகாய் போட்டேன். மாமா ஒரு பிடி பிடிச்சுட்டு கேஸுவல் லீவு போட்டுட்டு சிவனேன்னு படுத்துண்டு கொறட்டை விட ஆரம்பிச்சுட்டார்னா பார்த்துக்கோயேன்!"

"என்ன இருந்தாலும் உங்க கைப்பக்குவம் மாதிரி வருமா மாமி?"

"கோமதி, ஒண்ணு சொல்லறேன் கேட்டுக்கோ! உளுந்து வடைக்கு ஊறப்போடறச்சே, அதுலே அரை தம்ளர் மானிட்டர் பிராண்டி விட்டு அரைச்சேன்னு வை; மாவு மை மாதிரி இருக்கும்."

"இதையே தான் எதிர்த்த வீட்டு அக்காவும் சொன்னாங்க மாமி! ஆனா, இங்கே ஒரு கடையிலேயும் மானிட்டர் பிராண்டி கிடைக்கவே மாட்டேங்குதே?"

"கெல்லீஸ்லே கிடைக்கிறதே! எங்காத்து மாமா நேத்து கூட ஒரு குவார்ட்டர் வாங்கிண்டு வந்தார். நாளைக்கு வடைக்கு ஊறப்போடலாம்னு இருக்கேன்!"

"உங்க வீட்டு மாமா கடைகண்ணிக்குப் போயி வீட்டுக்குத் தேவையான விஸ்கி, பிராண்டியெல்லாம் கரெக்டா வாங்கிட்டு வந்திடறாரு! எங்க வீட்டுக்காரர் இத்தனை வருசத்துலே ஒரு குவார்ட்டர் விஸ்கியோ, பிராண்டியோ கூட வாங்கிட்டு வந்தது கிடையாது. ஒவ்வொரு வீட்டுலேயும் ஆம்பிளைங்க எப்படி வீட்டுக்கு வேண்டிய சாமானெல்லாம் வாங்கிப்போடறாங்க. எனக்குன்னு இப்படி ஒருத்தர்..."

"வருத்தப்படாதே, எத்தனை நாளைக்கு ஆம்பிளையா பொறுப்பில்லாம இருக்கப்போறா? பகவானை வேண்டிக்கோ, கூடிய சீக்கிரமே உங்காத்துக்காரரும் பொட்டி பொட்டியா விஸ்கி வாங்கிண்டு வந்து அசத்தப்போறாரு பாரேன்!"

"அட நீங்க வேறே மாமி, இவரைக் கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? ஒரு பெக் பிராண்டியுண்டா, ஒரு லார்ஜ் விஸ்கியுண்டா? ஒரு பீர்தான் உண்டா?"

"அததுக்கு ஒரு நேரம் காலம் வர வேண்டாமா? மாம்பலம் போஸ்டல் காலனியிலே மதுசூதனன்னு ஒரு ஜோசியர் இருக்காரு! அவர்கிட்டே உங்காத்துக்காரர் ஜாதகத்தைக் காட்டு! அப்புறம் பாரேன், தினமும் உங்காத்துலே காக்டெயில் சமையல் தான்!"

"சரி மாமி, அப்புறம் இந்த ப்ளூ-ரிபாண்ட் ஜின்னை வச்சிக்கிட்டு என்ன பண்ணலாம்?"

"நன்னாக் கேட்டே போ, புதீனாத் துவையல், பிரண்டைத்துவையல் அரைக்கிறச்சே ரெண்டு டீ ஸ்பூன் ப்ளூ-ரிபாண்ட் ஜின்னும் சேர்த்து அரைச்சா மணம் அப்படியே தூக்கும். அடை பண்ணும்போது, கல்லுலே ஒரு ஸ்பூன் ஜின் விட்டேன்னா, விள்ளாம முழுசா வரும். டேஸ்ட்டும் பிரமாதமாயிருக்கும் தெரியுமோ?"

"புதுசு புதுசா என்னென்னமோ சொல்றீங்க மாமி! இன்னிக்கு மார்க்கெட்டுக்குப் போவீங்களா?"

"இல்லேடீ கொழந்தை, இன்னும் ஒரு வாரத்துக்கு வேண்டிய விஸ்கி, பிராண்டி, ரம், ஜின் எல்லாம் எங்காத்து மாமா வாங்கிப்போட்டுட்டார். வேணுமுன்னா ஞாயிற்றுக்கிழமை போகலாமா?"

"சரி மாமி, எனக்கு இந்த வோட்கா தான் சரியா பார்த்து வாங்கவே தெரியலே!"

"அதுக்கென்ன, நான் சொல்லித் தர்றேன். அப்புறம், என்ன சொல்றா பக்கத்தாத்து பங்கஜம்?"

"ரொம்பத் தொல்லை பண்ணுறாங்க மாமி. பொழுது விடிஞ்சாப் போதும், ஒரு பாத்திரத்தைத் தூக்கிட்டு வந்து கொஞ்சம் விஸ்கி கொடுங்கோ, ரம் கொடுங்கோன்னு ஒரே தொல்லையாப் போச்சு! மொத்தம் ரெண்டு பேர் தானே அவங்க வீட்டுலே? ரேஷனிலே வாங்குற விஸ்கி, ரம்மையெல்லாம் என்னதான் பண்ணுவாங்களோ?"

"ஆத்துலே போட்டாலும் அளந்து போடு கோமதி! நீ பாட்டுக்குக் கொடுத்துண்டேயிருந்தா, அவா பாட்டுக்குக் கேட்டுண்டேயிருப்பா! இரவல் கொடுக்கிறதும் தப்பு; இரவல் வாங்கறதும் தப்பு! விஸ்கி விக்கிற விலைக்கு இப்படி தினமும் இரவல் கொடுத்தா கட்டுப்படியாகுமா?"

"அதுவும் சரிதான். சரி மாமி! நாளைக்குப் பேசுவோம்!"

"சரி, அப்புறம் கோமதி! பைன்-ஆப்பிள் ரசத்தை ஃபிரிட்ஜிலே வைக்கிறதுக்கு முன்னாடி, ரெண்டு ஸ்பூன் வொயின் கலந்து வை. சாயங்காலமா எடுத்துக் கொதிக்க வச்சேன்னா, அப்பத்தான் பண்ணினா மாதிரி இருக்கும்!"

"ரொம்ப தேங்க்ஸ் மாமி!"

******

யோவ் சேட்டை, என்ன கொடுமை இது?-ன்னு கேட்கறீங்களா?

ஹிஹி! ஒண்ணுமில்லீங்க! இந்த இடுகையை எழுத என்னைத் தூண்டிய செய்தி:

புது தில்லியில் பெண்களுக்கென்றே சூப்பர் மார்க்கெட்களில் மதுபான விற்பனை நிலையங்களை தில்லி அரசே ஆரம்பித்திருப்பதாக வந்த செய்தியைப் படித்ததால் விளைந்த கற்பனை இது!

அப்படியென்றால், ராகுல் காந்தி சென்னையில், ’அரசே மது விற்பனை செய்வது தவறு,’ என்ற செய்தி என்ன பீலாவா?

அவரது கட்சி ஆளுகிற மாநிலத்தில், அதுவும் நாட்டின் தலைநகரத்தில், அதுவும் ஒரு பெண்மணி முதல்வராக இருக்கிற மாநிலத்தில் அரசே மதுக்கடைகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, இங்கே வந்து நீட்டி முழக்கிப் பேசுவது என்ன இரட்டை வேஷம் என்று கேட்கிறீர்களா?

அப்படியென்றால், நீங்கள் "இன்னும்" அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.

குனிஞ்சு எல்லாரும் கொக்குப் பிடிங்க பார்க்கலாம்!

13 comments:

sathishsangkavi.blogspot.com said...

//புது தில்லியில் பெண்களுக்கென்றே சூப்பர் மார்க்கெட்களில் மதுபான விற்பனை நிலையங்களை தில்லி அரசே ஆரம்பித்திருப்பதாக வந்த செய்தி//

இது தான் காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனை...

sakthi said...

விஸ்கி விக்கிற விலைக்கு இப்படி தினமும் இரவல் கொடுத்தா கட்டுப்படியாகுமா?"

gud question

sakthi said...

புதீனாத் துவையல், பிரண்டைத்துவையல் அரைக்கிறச்சே ரெண்டு டீ ஸ்பூன் ப்ளூ-ரிபாண்ட் ஜின்னும் சேர்த்து அரைச்சா மணம் அப்படியே தூக்கும். அடை பண்ணும்போது, கல்லுலே ஒரு ஸ்பூன் ஜின் விட்டேன்னா, விள்ளாம முழுசா வரும். டேஸ்ட்டும் பிரமாதமாயிருக்கும் தெரியுமோ?"


அட புது சமையல் குறிப்பு

Unknown said...

முத வெட்டு nana heheheh

சிநேகிதன் அக்பர் said...

எப்படி பிடிக்கிறது?

மாணவன் said...

//அப்படியென்றால், நீங்கள் "இன்னும்" அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள்.

குனிஞ்சு எல்லாரும் கொக்குப் பிடிங்க பார்க்கலாம்!//

வழக்கம்போலவே உங்கள் ஸ்டைலில் கலக்கீட்டீங்க ...

P.K.K.BABU said...

SOOOOOOOPPPPPPERRRRRRRRRRRRRRR................................................................................................................................................................................................MENU........................

vasu balaji said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா. கண்ண கட்டுதே:))
/குனிஞ்சு எல்லாரும் கொக்குப் பிடிங்க பார்க்கலாம்!/

:)))))))))

Philosophy Prabhakaran said...

நீங்கள் கொடுத்த சமையல் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன :)

அரசூரான் said...

//அவரது கட்சி ஆளுகிற மாநிலத்தில், அதுவும் நாட்டின் தலைநகரத்தில், அதுவும் ஒரு பெண்மணி முதல்வராக இருக்கிற மாநிலத்தில் அரசே மதுக்கடைகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, இங்கே வந்து நீட்டி முழக்கிப் பேசுவது என்ன இரட்டை வேஷம் என்று கேட்கிறீர்களா?//
ஒரு பொம்மணாட்டியோடு கஷ்டம் இன்னொரு பொம்மணாட்டிக்குத்தான் தெரியும்ன்னு நோக்கு தெரியாதோ?
ஷீலா-வுக்கு தெளிஞ்சிருக்கு... சாரி தெரிஞ்சிருக்கு அதான்... அவ்வ்வ்வ்

சேலம் தேவா said...

டாஸ்மாக்கே கதி என்று இருப்பவர்களுக்கு கூட இவ்வளவு பெயர்கள் தெரியுமா என்று தெரியவில்லை..!!கலக்கி விட்டீர்கள் சேட்டை..!!

Unknown said...

இவனுங்களுக்கு ஓட்டு போட்ட பாவத்துக்கு, எத்தனை குவாட்டர் அடிச்சாலும் பாவம் போகாது, உங்க பதிவு சும்மா கிர்ரூஊஊஊஉன்னு இருக்குதுங்க

பெசொவி said...

சும்மா சொல்லப்டாதுப்பா, உன்னோட சமையல் குறிப்பு சூப்பர்!