Friday, December 17, 2010

அனாமிகா! அடங்குங்க அக்கா!

பிரபல பதிவாளர் அனாமிகா துவாரகன் எனது "பெரிய இடத்து சம்பந்தம்" இடுகைக்கு போட்டிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு:

"டிஸ்கி: ஸ்ரேயா படம் போட்டு ஆம்பிளையாளை உன் பதிவு படிக்க வைக்கறதெல்லாம் ஒரு பிழைப்பா த்தூன்னு யாரும் காறிததுப்பிட்டுப் போன கம்பனி பொறுப்பேற்காது.

எப்பூடி!"

எப்பூடியா? மிகவும் அருமையாக இருக்கிறது உங்களது டிஸ்கி! ஒரு பதிவர் இதை விடவும் தனது தரத்தை எளிமையாக, வெட்ட வெளிச்சமாக மற்றவர்களுக்குப் பறைசாற்ற முடியுமா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

அனாமிகா துவாரகன் அவர்களே!

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு நடிகையின் படத்தைப் பார்த்தால் இப்படி பின்னூட்டம் இடத் தோன்றுகிறதென்றால், நீங்கள் போய் எழுத வேண்டிய வலைப்பூக்கள் எத்தனையென்று உங்களுக்குத் தெரியுமா?

ஸ்ரேயா படத்தைப் போட்டால், ஆண்கள் வந்து குவிந்து விடுவார்கள் என்று எழுதி என்னவோ ஆண்கள் எல்லாரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அது உண்மையானால், பெரும்பாலும் படுகவர்ச்சியான உடைகளை அணிகிற ஒரு நடிகையின் படு பதவிசான படத்தை போட வேண்டிய அவசியம் இல்லை.

இதோ, இன்னும் சில நாட்களில் ஒரு வருடமாகப் போகிறது எனது வலைப்பதிவுக்கு. இத்தனை நாட்களில், தரக்குறைவாக ஒரு இடுகையோ, முகம் சுளிக்க வைக்கிற மாதிரி ஒரு படமோ எனது வலைப்பூவில் இடம்பெற்றதாக யாராலும் சொல்ல முடியாது என்பதை நினைவுறுத்துகிறேன்.

அந்த நம்பிக்கை இருப்பதனால் தான் இன்னும் ஓராண்டு கூட முடியாதபோதிலும், எனது வலைப்பதிவை 230+ பேர் பின்தொடர்ந்து வாசித்து வருகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று காறித்துப்புகிற நேரம் போக, உபரி நேரம் இருந்தால் பாருங்கள் அக்கா!

உங்களைப் போல ’நாசமாகப் போக,’ என்றெல்லாம் தலைப்பு வைத்து இடுகை எழுதுபவன் நான் அல்ல. எவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமென்றாலும் அதை நக்கலாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலத் தான் எழுதிப்பழக்கமே தவிர உணர்ச்சிகளை வார்த்தையில் கொட்டி, பரபரப்புக்காக அலைகிறவன் நானில்லை.

குறுகிய காலத்தில் எனது வளர்ச்சி பொறுக்காமல், சிலர் செய்கிற வேலைகள் எனக்குத் தெரியும். இந்த வலைப்பதிவு, வலையுலகம், தமிழ்மணம், இண்டெலி தவிரவும் எனக்கு வாழ்க்கை, கடமைகள் இருக்கின்றன.

உண்மையிலேயே உலகத்தைத் திருத்துகிற உயர்ந்த நோக்கம் இருந்தால், நீங்கள் போய் காறித்துப்ப வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.

நீங்கள் பிரபல பதிவர் என்பதால் அல்ல, ஒரு பெண் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

எனவே, அனாமிகா அக்கா, அடங்குங்க அக்கா! ஓவரா படம் காட்டாதீங்க!

31 comments:

LK said...

சேட்டை என்னாச்சு ? எதுக்கு டென்சன் ??? ப்ரீயா விடுங்க தலைவா . உங்களை பத்தி எங்களுக்கு தெரியும்..

அகல்விளக்கு said...

வொய் டென்சன்...

ப்ரீயா விடுங்க தல... :)

சங்கவி said...

லூசில விடுங்க தல...

dr suneel krishnan said...

சேட்டை சார் ,ப்ரீயா விடுங்க ..

கக்கு - மாணிக்கம் said...

ஜஸ்ட் இக்னர் பண்ணுங்க . இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல ராஜா.
நீங்க எப்படி எழுதுறீங்கன்னு எங்களுக்கு தெரியும்.
காறி துப்பும் அளவுக்கு அந்த படம் ஒன்னும் மோசம் இல்லையே.
ஒரு வேலை வெங்காயம் படத்தில் உள்ளது அவங்களுக்கு பிடிக்கவில்லை போலும்.

karthikkumar said...

லூசில விடுங்க தல..///
அதேதான் சார். வடிவேலு ஸ்டைல cool down cool down cool down

மாணவன் said...

விடுங்க பாஸ் இதெல்லாம் ஒரு பிரச்சினையா... நீங்கள் வழக்கம்போல் உங்கள் பணியை தொடருங்கள்...

அவங்க பார்வையில் ஏதோ தவறாக தெரிந்துருக்கிறது இதையெல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்...

மறப்போம் மன்னிப்போம்...

வெங்கட் நாகராஜ் said...

Just ignore it my friend. அவங்களோட கருத்தினை அவங்க சொல்லட்டும். பிடிக்கலையா, லூசுல விடுங்க. சரியா சேட்டை, உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியுமே :)

ஜீ... said...

விடுங்க பாஸ்! அவ்ளோ பிரபலமான பதிவரா? எனக்கு நீங்க இந்தப் பதிவு போட்ட அப்புறம்தான் தெரியும்! இப்ப பாருங்க நீங்கதான் பதிவு போட்டு பிரபலப்படுத்திட்டீங்க! :-)

NIZAMUDEEN said...

பதிவுலகில் இதெல்லாம் சகஜம்.
விடுங்க... அடுத்த பதிவ
போடுங்க...

மங்குனி அமைச்சர் said...

சேட்ட உன் பதிவுல குழம்பிட்டேன் ............ ஸ்டார்டிங் இந்த மாதிரி போடு .........நீ போட்டு இருப்பது கேள்வி என்ன பதில் என்னன்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு .....


////பிரபல பதிவாளர் அனாமிகா துவாரகன் எனது "பெரிய இடத்து சம்பந்தம்" இடுகைக்கு போட்டிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு:

அனாமிகா துவாரகன் said...

ஐயா சாமி, இந்த பதிவுக்கு டிஸ்கி போட மறந்துட்டேளே.

நீங்க மறந்து போன டிஸ்கி இதோ

டிஸ்கி: ஸ்ரேயா படம் போட்டு ஆம்பிளையாளை உன் பதிவு படிக்க வைக்கறதெல்லாம் ஒரு பிழைப்பா த்தூன்னு யாரும் காறிததுப்பிட்டுப் போன கம்பனி பொறுப்பேற்காது.

எப்பூடி!
December 17, 2010 11:25 AM////
/////மத்தபடி ............ விடு,விடு........ வேற எவனாவது அந்தப்பக்கம் சப்போர்ட்டுக்கு வந்தான்னா சொல்லு, அப்புறம் .............

ஜெய்லானி said...

டேக் இட் ஈஸி...!! நோ டென்ஷன்...சேட்டை... :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ippathaan ungkalukku nadanthathaa?

பலே பாண்டியா said...

நண்பரே நான் இன்று தான் தங்கள் வலைப்பூவிற்கு வந்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று அனாமிகா துவாரகன் கூறியது அவர்களின் கருத்துக்கு மேலே உள்ள காளிதாஸ் அவர்களை படித்ததன் காரணமாக இருக்கலாம்.
//

Kalidoss said...

ஒரு வெங்காய சமாசாரத்தை பெரும் காயமா மாத்திப் புட்டிங்களே!என்க்கு இதிலே ஏதும் சம்பந்தம் இல்லீங்கோ ..ஏதோ ஸ்ரேயா படம் போட்டதை பாக்க வந்தேங்கோ .அம்புட்டுதான்//

எனவே நீங்கள் இவ்வளவு கோபம் கொண்டிருக்க தேவை இல்லை. அப்படியே அவர் உங்கள் பதிவை தவறாக எண்ணி இருந்தால் நீங்கள் அவரை Just Ignore செய்து இருக்கலாம். அவர் நான்கு வரி எழுதியதற்கு நீங்கள் தேவை இன்றி இப்போது ஒரு பதிவே எழுதி விட்டீர்கள். ஒன்றை நீங்கள் உணர்ந்து கொள்ளவும், "நாம் எத்தனை கற்களை மாமரத்தின் மீது வீசும் போதும் நமக்கு மரம் மாம்பழங்களை மட்டுமே தரும்".நீங்கள் மாமரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இங்கு நான் kalidoss அவர்களையும் எதுவும் தவறாக கூறவில்லை.

Mahi_Granny said...

இதையெல்லாம் பெரிது படுத்த தேவையில்லை just ignore

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

ஜீ சொன்னது கரீட்டு பாஸ்!
பத்து வருசமா குப்பை கொட்டறேன் நீங்க சொல்ற அக்கா யாருனு எனுக்கு தெரியாது..

நீங்களா பிரபலமாக்கிவிட்டுட்டாப்ல இருக்கு

சிநேகிதன் அக்பர் said...

பெரிதுபடுத்த வேண்டாம் நண்பரே.

philosophy prabhakaran said...

சேட்டை... என்னோட சப்போர்ட் எப்பவும் உங்களுக்குத்தான்... நீங்க எவளோட பதிவை போட்டாலும் உங்களுடைய பதிவில் நிச்சயம் ஒரு அர்த்தம், ஒரு படிப்பினை இருக்கும்... அந்த நடிகையின் படத்தை போடுவதால் நாலு பேர் அதிகமா வந்து படிக்கிறாங்கன்னா அதை செய்வதில் தவறில்லை...

SurveySan said...

அவிக சாதாரணமா சொன்ன மேட்டரை தப்பா அர்த்தம் பண்ணிண்டேள்.

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணே ,நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க?பொதுவா பின்னூட்டம் இப்படி வர்றது சகஜம்தான் ,டேக் இட் ஈசின்னு எடுத்துக்க வேண்டியதுதான்.உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியாதா?

அனாமிகா துவாரகன் said...

அட கடவுளே இது வேற நடந்துச்சா? நீங்க ஸ்ரேயா படம் போட்டது உங்க இஷ்டம்னு போட்டு காலை வாரினதுக்கு இப்படி டிஸ்கி போட்டிருக்கணும்னு சும்மா விளையாட்டுக்கு உங்களை கலாக்கறதுக்குச் சொன்னேன்.

நான் பிரபல பதிவரும் இல்லை. எந்த குதர்க்கமான என்னத்திலும் சொல்லவில்லை. உங்களை காயப்படுத்த வேண்டும் என்று சொல்லவும் இல்லை.

நீங்கள் நடிகைகள் பற்றி எழுதிய பதிவில் கூட கலாய்த்தே பின்னூட்டம் போட்டிருந்தேன். இப்பத்தான் புளொக் படிக்கலாம்னு வந்தா பெரிய இடியையே தலையில தூக்கிப் போடறீங்களே.

நன்றி சர்வேசன். நான் விளையாட்டாகத் தான் சொன்னேன்.

கார்த்தி சார், நான் ஏதோ விளையாட்டாத் தான் சொல்லி இருப்பேன்னு நீங்க கூட புரிந்து கொள்ளவில்லையா? கஷ்டமா இருக்கு.

அனாமிகா துவாரகன் said...

எனக்குத் தெரியாத பதிவர் ஒருவர் வந்து சேட்டைக்காரனை நோகடித்திட்டீங்க போல என்று சொன்ன போது மன்னிப்பு கேட்டகவே வந்தேன். இந்த பதிவை அரைகுறையாகப் படித்த போது கூட உங்கள் மேல் எனக்கு விசனம் வரவில்லை. ஆதனால் தான் முதல் போட்ட பின்னூட்டத்தைப் போட்டேன்.

இப்போது தான் ஆறுதலாக வாசித்த போது. பெண் என்பதால் இத்துடன் விட்டுவிட்டேன் என்ற "மிரட்டலைப்" பார்த்தேன். இந்த பயமுறுத்தலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அதனை இங்கே பதிவு செய்யவிரும்புகிறேன். பேடி மாதிரி பெண் என்பதால் விட்டுவிட்டேன் என்று பூச்சாண்டி காட்டாதீர்கள். இந்த ஒரு வரிக்காகவே கொஞ்சம் கடுமையாக என் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

இங்க நானும் ஒரு பதிவர் நீங்களும் ஒரு பதிவர். ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் பதிவர் என்றே என்னை நடாத்துவதை நான் விரும்புகிறேன்.

சேட்டைக்காரன் said...

அனாமிகா துவாரகன் அவர்களே!

உங்களது இரண்டு பின்னூட்டங்களையும் அனுமதித்திருக்கிறேன். எனக்கு மடியில் கனமில்லை! :-)

இன்னும் பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் வைத்திருப்பதற்குக் காரணமே, சில நேரங்களில் அநானிகள் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து விடுகிறார்கள் என்பதனால் தான். ஆனால், மிக மிக கடுமையான விமர்சனங்களையும் அனுமதித்து வருகிறேன் என்பதை அனைவரும் அறிவர்.

நான் ஒன்றும் பூச்சாண்டி காட்டவில்லை! நீங்கள் எழுதியது போன்ற ஒரு கருத்தை, ஒரு ஆண் பதிவர் ஒரு பெண் பதிவரின் வலைப்பூவில் எழுதியிருந்தால், இன்னேரம் என்னவாகியிருக்கும் என்பதை உங்களது ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். மேலும், இதை வளர்த்தால், சில போலிகள் பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் பத்து பேர் சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்து சர்ச்சையை மேலும் பெரிதாக்குவார்கள் என்பதால் தான் ’பெண் என்பதால்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்தேன். அதில் இன்னும் உறுதியாகவே இருக்கிறேன்.

ஆண் பதிவர்/பெண் பதிவர் என்ற வேறுபாடில்லை- என்று எனக்கும் சொல்ல ஆசைதான்! ஆனால், அது உண்மையான நிலையில்லை எனும்போது, பாசாங்காக என்னால் சொல்ல முடியவில்லை!

"த்தூ என்று காறித் துப்புவது..." போன்ற வார்த்தைகளை உபயோகித்துக் கலாய்த்தீர்களா? :-))))) இது போன்ற "கலாய்ப்பு"களை நீங்கள் சந்திக்காமல் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மிக்க நன்றி!!

சிட்டி பாபு said...

சமாதனம போங்கப்பா

பலே பாண்டியா said...

கோபப்பட்டு ஒரு பதிவு எழுதிய நீங்கள் ஏன் அனாமிகா துவாரகன் மன்னிப்பு கேட்ட பிறகும் இந்த பதிவை நீக்கவில்லை. அல்லது அனாமிகா துவாரகன் மன்னிப்பு கேட்டது பற்றி நீங்கள் தெளிவாக கூறி ஒரு பதிவு இடலாமே. (அவரே கூறி விட்டார் 'நான் எந்த உள் நோக்கோடும் அந்த கருத்தை இடவில்லை' என்று. ) நீங்கள் இந்த பதிவை நீக்குவதுதான் உங்களை போன்ற நல்ல கருத்துக்களை எழுதும்
பதிவர்க்கு அழகு என்பது என் எண்ணம். இது என் அன்பான வேண்டுகோள். நானும் எந்த உள்நோக்கோடும் இடவில்லை நண்பரே.

சேட்டைக்காரன் said...

//கோபப்பட்டு ஒரு பதிவு எழுதிய நீங்கள் ஏன் அனாமிகா துவாரகன் மன்னிப்பு கேட்ட பிறகும் இந்த பதிவை நீக்கவில்லை.//

பலே பாண்டியா அவர்களே!

"நான் எந்த உள்நோக்கோடும் அந்தக் கருத்தை இடவில்லை," என்று அவர் கூறியிருப்பதே நெருடுகிறதே! அவர் தெரிந்தோ தெரியாமலோ உபயோகித்திருக்கிற வார்த்தைகள், என்னைப் போன்ற மொக்கை எழுத்தாளனுக்கே கோபத்தை வரவழைத்திருக்கிறது என்பது புரியவில்லையா?

//நீங்கள் இந்த பதிவை நீக்குவதுதான் உங்களை போன்ற நல்ல கருத்துக்களை எழுதும் பதிவர்க்கு அழகு என்பது என் எண்ணம்.//

நண்பரே! எனது இடுகையை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரது கருத்தையும் மட்டுறுத்தாமல் அனுமதித்திருக்கிறேன். எழுதிய இடுகையை நீக்குவது இயலாது.


//இது என் அன்பான வேண்டுகோள். நானும் எந்த உள்நோக்கோடும் இடவில்லை நண்பரே//

உங்களது நல்லெண்ணத்துக்கு நன்றி! உங்கள் வேண்டுகோளை நான் ஏற்காமல் இருப்பதற்குக் காரணத்தை விளக்கி விட்டேன். மீண்டும் மீண்டும் நன்றிகள்!"

அனாமிகா துவாரகன் said...

சிலர் மொக்கை எழுதும் போது வெறுப்பேற்றிவிட்டு (இதற்கும் காரணம் கண்டு பிடிக்காதீர்கள். விளையாட்டாகவே வெறுப்பேற்றிவிட்டு) இப்படி எல்லாம் திட்டினால் / செய்தால் கம்பனி பொறுப்பேற்காது என்று போட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அதனால் தான் சும்மா விளையாட்டாகவே போட்டேன்.

வேற எந்த உள்நோக்கமும் இல்லை என்று சொல்லக் காரணம், உங்களின் இந்த வரிகளே.//குறுகிய காலத்தில் எனது வளர்ச்சி பொறுக்காமல், சிலர் செய்கிற வேலைகள் எனக்குத் தெரியும். //


ஒரு போலி ஜீ மெயில் ஓபின் பண்ணவோ அல்லது ஓபன் ஐ.டி கிரியேட் பண்ணவோ எவ்வளவு நேரம் எடுக்கும்? "இரண்டு" நிமிடங்கள் கூட எடுக்காது. அப்படி இருக்கும் போது போலி ஐ.டி உடன் போடாமல் என் புளொக் ஐ.டி உடன் கருத்து போடும் போதே நான் சும்மா தான் காலை வாரினேன் என்று உங்கள் புத்திக்குத் தெரியவில்லையா.

//எவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமென்றாலும் அதை நக்கலாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலத் தான் எழுதிப்பழக்கமே தவிர உணர்ச்சிகளை வார்த்தையில் கொட்டி, பரபரப்புக்காக அலைகிறவன் நானில்லை.//

அடங்கு என்பதற்கு கூட "விவகாரமான" கருத்து நான் எடுத்துக்கொண்டு நீங்கள் வார்த்தைகளை கொட்டுகிறீர்கள் என்றும் தேவைப்பட்டால் பரபரப்புக்காக என்னை அவமதிக்கிறீர்கள் என்றும் பதிவு போடலாம். நான் அப்படி எதுவும் போடவில்லை.

இப்போது தெரியும் பரபரப்புக்காக அலைபவர் நீங்களா நானா என்று.

நீங்கள் யார் என்று தெரியாது பலே பாண்டியன். ஆனாலும், உங்கள் நேர்மையான பேச்சுக்கு நன்றி.

அனாமிகா துவாரகன் said...

ஒரு பின்னூட்டத்திற்கு என்னிடம் விளக்கம் கேட்காமல் பரபரப்புக்காக தனி பதிவு போட்டது நீங்கள் தான். பின்னூட்டத்திலேயே உங்கள் கண்டனத்தை சொல்லி இருக்கலாம்.

எனக்காக பிரார்த்திப்பதை விட்டுவிட்டு உங்களுக்காக பிரார்த்தியுங்கள். பரபரப்புக்காக அலைய வேண்டாமே என்று. end of discussion!

சேட்டைக்காரன் said...

என்னைப் பொறுத்தவரையில் Discussion over long ago! மற்றபடி, நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு மீண்டும் மீண்டும் பதிலெழுதி நானும் வளர்க்க விரும்பவில்லை. மீண்டும் நன்றி!

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் சேட்டைக்காரன் அவர்களே பெரிய நாகரிகவாதியாக சப்பக் கொட்டும் இதே பெண்மணி ஒரு பெண்ணா சந்தேகமாயிருக்கு காரணம் நெற்று எனத பதிவில் இப்படி ஒரு கருத்து...

ஃஃஃஃஃSon of a bitch.ஃஃஃஃ

இதற்கு என்ன சொல்லப் போகிறார்.. பதிவின் தொடுப்பு இதோ..

http://mathisutha.blogspot.com/2010/12/blog-post.html?utm_source=BP_recent

எப்போதும் என் எழுத்துகளுக்கு சொந்தக்காரன் நான் தான் என் தாயல்ல ?

சேட்டைக்காரன் said...

//♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் சேட்டைக்காரன் அவர்களே பெரிய நாகரிகவாதியாக சப்பக் கொட்டும் இதே பெண்மணி ஒரு பெண்ணா சந்தேகமாயிருக்கு காரணம் நெற்று எனத பதிவில் இப்படி ஒரு கருத்து...//

இணையத்தில் பெரும்பாலான பெண்பதிவர்கள் வார்த்தைகளுக்குக் கண்ணியத்தைப் போர்த்துவது அவர்களது இயல்பான வெளிப்பாடு என்பது நிறைவு தருகிற விடயம். ஆனால், விதிவிலக்காக ஓரிரெண்டு பெண்பதிவர்கள் ஒருமையில் விளிப்பார்கள், அநாகரீமாக எழுதுவார்கள். அதைக் கண்டித்தால் பட்டம் கட்டுவார்கள்.

//ஃஃஃஃஃSon of a bitch.ஃஃஃஃ//

:-(((

//இதற்கு என்ன சொல்லப் போகிறார்.. பதிவின் தொடுப்பு இதோ..

http://mathisutha.blogspot.com/2010/12/blog-post.html?utm_source=BP_recent//

வாசித்தேன்! இவரும் ’தாய்’க்குலத்தின் இன்னொரு போராளியாகி வருகிறார் போலிருக்கிறது.

//எப்போதும் என் எழுத்துகளுக்கு சொந்தக்காரன் நான் தான் என் தாயல்ல ?//

அதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. ஒருவரை விமர்சிக்க, அவரது குடும்பத்தையே சந்திக்கு இழுக்கிறவர்களோடு துணைபோகிறவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

விட்டுத்தள்ளுங்கள் சகோதரம்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!