எதிரே வெள்ளை வெள்ளையாக ஓரிரு உருவங்கள் தெரியவும், ஏதோ கனவுக்காட்சி போலிருந்தது.
"யாரு? ஸ்ரேயாவா?"
"டேய் உருப்படாதவனே!" என்று கேட்ட குரல் வைத்தியுடையது. "இது ஆஸ்பத்திரிடா! காலையிலே தீபாவளி லேகியம் சாப்பிட்டதும் நீ மயக்கம் போட்டு விழுந்திட்டே! அடிச்சுப்புடிச்சு ஆம்புலன்ஸ்லே போட்டுத் தூக்கிட்டு வந்தா, நர்ஸைப் பார்த்து ஸ்ரேயாவான்னு கேட்குறியேடா?"
"அடப்பாவீங்களா! லேகியமாடா அது? ரோட்டுக்குப் போடுற தாரை உருட்டி ஒரு உருண்டை கொடுத்து, ஆஸ்பத்திரிக்கு வரவைச்சிட்டீங்களே? உருப்படுவீங்களாடா?"
"மிஸ்டர் சேட்டை! இது ஆஸ்பத்திரி; இப்படியெல்லாம் சத்தம் போடக்கூடாது!" என்று கிட்டத்தட்ட டாக்டர் மாதிரியே, வெள்ளைக்கோட்டும் ஸ்டெதாஸ்கோப்புமாக இருந்த ஒருவர் கடிந்து கொண்டார். "நேத்து ராத்திரி என்ன சாப்பிட்டீங்க? உங்க வயித்தைப் பார்த்து டிராபிக் போலீஸோன்னு சந்தேகப்பட்டுட்டேன்."
"டாக்டர், இவன் என்ன சாப்பிடலேன்னு கேளுங்க!" இது சுரேந்திரனின் குரல். "ஒரு அடையாறு ஆனந்த பவனையே முழுங்கியிருக்கான். ஓஸியிலே கிடைச்சாலும் சாப்பிட ஒரு அளவு வேண்டாமா?"
"கவலைப்படாதீங்க, ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்திரலாம்!" என்றார் டாக்டர்.
"என்னது, ஸ்கேனா? நான் என்ன கர்ப்பமாவா இருக்கேன்?"
"மிஸ்டர் சேட்டை, உங்களுக்கு வயிறு எவ்வளவு வீங்கியிருக்கோ, அதே மாதிரி வாயும் பெரிசாயிருக்கு! நர்ஸ், இந்த ஆளுக்கு ஒரு ஊசிபோட்டுத் தூங்க வையுங்க! எல்லா நரம்பும் க்ளியராத் தெரியுது பாருங்க! வெயினிலேயே போட்டுருங்க!"
"ஊசியா? ஐயையோ....!"
என் பேச்சை அலட்சியம் செய்தபடி, ஒரு ஜாடையில் சுனைனா மாதிரியிருந்த அந்த நர்ஸ், எருமைக்கு ஜூரம்வந்தால் போடுகிற மாதிரி ஒரு பெரிய ஊசியை எனது மணிக்கட்டருகே போட, எனது கண்கள் மெல்ல மெல்ல சொருகிக்கொள்ள, மயக்கமாக வந்தது.
"பாவி நரகாசுரா....!" நான் அரைமயக்கத்தில் முணுமுணுத்தேன்.
"சேட்டை!" என்று யாரோ இருட்டிலிருந்து அழைப்பது போலிருந்தது.
"யாருய்யா அது? நானே மயக்கத்திலிருக்கேன்!"
"நான் தான் நரகாசுரன்! நீ கூப்பிட்டே, நான் வந்திட்டேன்! சொல்லு சேட்டை, எதுக்காக என்னைத் திட்டுனே?"
"திட்டாமக் கொஞ்சுவாங்களா? இதுவரைக்கும் எத்தனை அசுரர்கள் இருந்திருக்காங்க, செத்திருக்காங்க! நீ ஒருத்தன் தான்யா இந்த மாதிரி பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு வரம் வாங்கி எங்க உசிர வாங்கியிருக்கே! அதுலேயும் தீபாவளிக்குன்னு ஸ்பெஷல் லேகியம் வேற! அதைப் பார்த்ததுமே எனக்கு செத்துப்போன பாட்டி,தாத்தாவெல்லாம் ஞாபகத்துக்கு வந்திட்டாங்க தெரியுமா?"
"சேட்டை, அனாவசியமா என் மேலே பழியைப் போடாதே! பண்டிகையாக் கொண்டாடணுமுன்னு சொன்னது என்னவோ வாஸ்தவம் தான்! அதுக்காக ஊருப்பட்ட பலகாரத்தைப் பண்ணி, மூக்கு முட்டத்தின்னுங்கன்னா சொன்னேன்? அந்தக் காலத்துலே ஆஸ்பத்திரி, டாக்டர், நர்ஸெல்லாம் கிடையாதுன்னு தான் அஜீரணம் வராம இருக்க, லேகியம் பண்ணிச் சாப்பிட்டாங்க!"
"இந்த ரோஷத்த்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! எக்மோரிலேருந்து திருநெல்வேலிக்குப் போக பிரைவேட் பஸ்ஸிலே எண்ணூறு ரூபாய் வாங்குறான்! ஆடித்தள்ளுபடியிலே அம்பது ரூபாய்க்கு வித்த டி-ஷர்ட்டை ரங்கநாதன் தெருவிலே ஐந்நூறு ரூபாய்க்கு விக்குறாங்க, அதையும் ஜனம் முண்டியடிச்சுக்கிட்டுப் போய் வாங்குது! பாழாப்போன குருவி வெடிக்கு வந்த வாழ்வைப் பாருய்யா, ஒரு பாக்கெட் இருபது ரூபாய்! அவனவன் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி தீபாவளி கொண்டாடுறான்! எல்லாத்துக்கும் நீ தான் காரணம்!"
நரகாசுரன் சிரித்தான்.
"ஏன்யா இப்படி சிரிக்கிறே? நீயும் எந்திரன் பார்த்துட்டியா?"
"சேட்டை, உங்க தாத்தா, பாட்டியெல்லாம் கடன் வாங்கியா பண்டிகை கொண்டாடுனாங்க? பண்டிகைன்னா ஆடம்பரத்தைக் காட்டுறதுக்கில்லே கண்ணா! சொந்தமும் பந்தமும் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமாப் பேசி, இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, வருசத்துலே ஒரு நாளாவது முடிஞ்சவரைக்கும் பாசாங்கில்லாம இருக்கிறது தான். ஆனா, நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க? பண்டிகைன்னாலே பாசாங்குன்னு ஆக்கிட்டீங்க! பக்கத்து வூட்டுக்காரன் ஆயிர ரூபாய்க்குப் பட்டாசு வாங்குனா, நீங்க ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பட்டாசு வாங்குகுறீங்க! எதிர்வூட்டுலே காஞ்சீபுரம் பட்டு வாங்குனா, உங்க வூட்டுலே பெனாரஸ் பட்டு வாங்குறீங்க! வூட்டுலெ பலகாரம் பண்ண சோம்பல் பட்டுக்கிட்டு, கடையிலே போய் கண்டதையும் அவன் சொல்லுற விலைக்கு வாங்கித் தின்னறீங்க! அப்புறம் பத்துநாளைக்கு அஜீரணத்துக்கு மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு அவஸ்தைப்படுறீங்க! பண்ணுறதெல்லாம் நீங்க; பழி என் மேலயா?"
"யோவ் நரகாசுரா! இந்த தீபாவளியையெல்லாம் தமிழன் கொண்டாடவே கூடாதுன்னு நிறைய பேரு சொல்லிட்டிருக்காங்க தெரியுமா?"
"ஆமாய்யா, உங்க வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்தநாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா?"
"மிஸ்டர் நரகாசுரன், ’சம்சாரம் அது மின்சாரம் படத்துலே விசு சொல்லுறா மாதிரி உன்னை சம்ஹாரம் பண்ணின அன்னிக்கு திவசம் மாதிரி கொண்டாடி எள்ளுருண்டை புடிக்கணுமய்யா! இப்போ பாரு, உன்னாலே நான் தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட பார்க்க முடியாம, ஆஸ்பத்திரியிலே படுத்துக்கெடக்கேன்."
"சேட்டை, பார்த்தியா? என் பேரைச் சொல்லி எத்தனை படம் ரிலீஸ் ஆவுது? இன்னிக்குக் கூட டிவியிலே புதுப்புதுப்படமா போடுறாங்க...? உனக்குப் புரியுறா மாதிரியே சொல்லுறேன்..கேட்டுக்கோ....! இன்னிக்கு ஒரே நாளிலே ரெண்டு ஸ்ரேயா படம்...!"
"என்னது? மெய்யாலுமா....?"
"ஆமா சேட்டை! அழகிய தமிழ்மகன்! சிவாஜி! ரெண்டு ஸ்ரேயா படம் போடுறாங்களே! நரகாசுரனைத் திட்டுனியே! நான் இல்லாட்டா ஒரே நாளிலே ரெண்டு ஸ்ரேயா படம் பார்த்திருக்க முடியுமா?"
"ஐயையோ, ரெண்டு ஸ்ரேயா படமா? இது தெரியாம கண்டதையும் தின்னுட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்திட்டிருக்கேனே? யோவ் நரகாசுரா, என்னை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லுய்யா! அடேய் வைத்தி, சுரேந்திரா! யோவ் டாக்டரு! அம்மா தாயே, நர்ஸு....! ரெண்டு ஸ்ரேயா படம் பார்க்கணும்...டிஸ்சார்ஜ் பண்ணுங்கப்பா...."
"பை சேட்டை!" என்று சிரித்தபடியே நரகாசுரன் மறைந்தான்.
Tweet |
23 comments:
வழக்கம்போல் கலக்கல் சேட்டை. குறிப்பா
//சேட்டை, உங்க தாத்தா, பாட்டியெல்லாம் கடன் வாங்கியா பண்டிகை கொண்டாடுனாங்க? பண்டிகைன்னா ஆடம்பரத்தைக் காட்டுறதுக்கில்லே கண்ணா! சொந்தமும் பந்தமும் ஒண்ணா உட்கார்ந்து சந்தோஷமாப் பேசி, இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிட்டுக்கிட்டு, வருசத்துலே ஒரு நாளாவது முடிஞ்சவரைக்கும் பாசாங்கில்லாம இருக்கிறது தான். ///
இந்த இடம் கலக்கல்
/உங்க வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்தநாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா?///
முடியல செட்டியா. நெத்தி அடி
கலக்கல் காமெடி வித் குட் மெசேஜ். கடைசியில படம் பார்த்தீங்களா? இல்லையா?
=)).. கலக்கல்
கலக்கல்!
// உங்க வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்க பொறந்தநாளுக்கு சந்து,பொந்தெல்லாம் கட்-அவுட் வைக்கிறீங்க! லவுட்-ஸ்பீக்கர் போட்டு இருக்கிறவன் காதையெல்லாம் செவுடாக்கறீங்க! சினிமாக்காரனுக்குப் பொறந்தநாளுன்னு பேப்பர்லே முழுப்பக்கம் விளம்பரம் போடுறீங்க! அதையெல்லாம் தமிழன் பண்ணினாத் தப்புல்லே! வழிவழியா கொண்டாடுற தீபாவளியைக் கொண்டாடிட்டா, உங்க பண்பாடு, கலாச்சாரமெல்லாம் அப்பீட்டு ஆயிருமா//
super!
ரொம்ப நாளா ஆளை காணோமேன்னு நேத்து தான் அண்ணாச்சி நினைச்சேன்.வந்தாச்சா.
தீபாவளீ வாழ்த்துக்கள்.
வழக்கம்போல உங்க பாணில வெளாசீட்டிங்க சேட்டை!
ஸ்ரேயா படத்தைப் பார்த்து ஜொள்ளு விடறவங்களுக்கு சந்தோஷமா இருக்கும் பதிவில் உள்ள உள்குத்தை கண்டுக்காமல் படித்தால்).
ரேகா ராகவன்.
ஹா! ஹா! வழக்கம்போல் அருமை!
ஆடம்பரத்திற்காக பண்டிகை கொண்டாடுவது நடக்கிறதுதான். பிறகு செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்!
முத வடை
நீண்ட இடைவெளிக்கு பிறகு கலக்கி விட்டீர்கள்
புத்தம் புதிய திரைப்படம்னு இரண்டு ஸ்ரேயா படம் மிஸ் பண்ணீட்டிங்களே சேட்டை. என்ன ஆளையே காணோம், நிஜமாவே ஸ்ரேயா ஃபோபியா வந்து ஆஸ்பத்திரில சேர்ந்துட்டீங்களா? உடம்பை பார்த்துக்கோங்க தோஸ்த்!!
வாங்க நண்பா!...
தீபாவளிக்கு ஏற்றார்போல் சிரிப்புடன் ஒரு இடுகை...! ரொம்ப நல்லாருக்கு...
பிரபாகர்...
டிஸ்சார்ஜ் ஆனீங்களா இல்லையா? இல்லை கனவுலேயே ஸ்ரேயா படங்களை பாத்துக்கிட்டு இருக்கீங்களா?
:)).
உங்கள் எழுத்துக்களை ஒவ்வொரு முறை படிக்கும்போது என் மனதில் எழும் கேள்வி ஒன்று இருக்கிறது... ஆனால் இதையெல்லாம் கேட்பது நாகரிகம் அல்ல என்று தவிர்த்துவிடுவேன்... இன்று கேட்கிறேன், தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்... சேட்டைகாரனுக்கு என்ன வயசு இருக்கும்...? திருமணம் ஆகிவிட்டதா...?
:)தமிழர் பண்டிகையாக்கு பதில் நல்லாருக்கு..:)
"ஆமா சேட்டை! அழகிய தமிழ்மகன்! சிவாஜி! ரெண்டு ஸ்ரேயா படம் போடுறாங்களே! நரகாசுரனைத் திட்டுனியே! நான் இல்லாட்டா ஒரே நாளிலே ரெண்டு ஸ்ரேயா படம் பார்த்திருக்க முடியுமா?"
.......உங்களுக்கு கலக்கல் தீபாவளினு சொல்லுங்க!
வாங்க சேட்ட தீபாவளி வாழ்த்துக்கள் ....
தீபாவளி பண்டிகை கொண்டாத்தில் வரும் சிக்கலை சேட்டையா சொல்லிருக்கீங்க..
ha ha ha
simply superb
:-)))))))
Post a Comment