ஒரு உதாரணத்தோட ஆரம்பிக்கலாமா?
சங்கீதா ஹோட்டலுக்குப் போயி சாம்பார்-வடை சாப்பிடுறீங்க! உங்க பொஞ்சாதி வீட்டுலே பண்ணுற வடையை விடவும் மோசமாயிருக்குன்னே வச்சுக்குவோம். என்ன பண்ணுவோம்? இனிமே இங்கே சாம்பார்-வடை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டு, பில்லுக்குப் பணத்தைக் கட்டிட்டு மூச்சு காட்டாம வெளியே போறோமா இல்லியா? "என்னய்யா வடை போட்டிருக்கே, போய் இன்னொரு வடை கொண்டா,’ன்னு சொன்னா, நம்மளையே கிரைண்டர்லே போட்டு அரைச்சு வடையாப் பொரிச்சு, சாம்பாரிலே ஊறப்போட்டிர மாட்டாங்க?
பீக் அவருலே 17-Dலே ஏறுறீங்க! நிக்கவே இடமில்லேன்னு வச்சுக்குவோம். நின்னுக்கிட்டே போறீங்க, இறங்கும்போது கண்டக்டர் கிட்டே போயி, "யோவ், நான் நின்னுக்கிட்டுத்தானேய்யா வந்தேன், என் காசைத் திருப்பிக் கொடு,"ன்னு கேட்க முடியுமா? இல்லே, இன்னொருவாட்டி என்னை உட்கார வச்சு கூட்டிக்கிட்டு வான்னு சொல்ல முடியுமா?
நம்மளாலே முடியாது. ஏன்னா, நாம பொதுஜனம்! ஆனா, அதிகாரத்துலே இருக்கிறவங்களாலே முடியும். எப்படீன்னு கேட்கறீங்களா?
அக்டோபர் மாசம் தில்லியிலே காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நடக்கப்போகுது இல்லியா? (அட, ஏன்யா சிரிக்கிறீங்க? இது ரொம்ப சீரியஸான இடுகை. நடுப்புலே சிரிக்கப்படாது. கண்டிப்பா நடக்கும். எவ்வளவோ பண்ணிட்டோம்; இது பண்ண மாட்டோமா?)
அதுக்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசை அமைச்சு, சமீபத்துலே தில்லியிலே இருக்கிற ’இள’வட்டங்களெல்லாம், ஐ மீன், அரசியல்வாதிங்க முன்னாடி வெளியிட்டிருக்காரு! அதைக் கேட்டுட்டு நம்மாளுங்க என்ன சொல்றாங்களாம்: "பாட்டெல்லாம் நல்லாத் தானிருக்கு. ஆனா, ஷகீராவோட வாக்கா...வாக்கா மாதிரியில்லியே!" ஙொக்க மக்கா!!
பணியாரத்துக்கே வழியில்லாம மொத்தமா எல்லா மாவையும் வழிச்சு வழிச்சுத் தின்னதும் இல்லாம, லொள்ளைப் பாருங்கய்யா!
"அதுதான் அஞ்சு கோடி ரூபாய் கொடுத்திருக்கோமில்லே; ஆறு மாசம் டயம் கொடுத்திருக்கோமில்லே? இதை விட நல்ல டியூனாப் போடுறது தானே?"ன்னு கேள்வி வேறே! யோவ், டியூன் போடுறது என்ன பாராளுமன்றத்துலே வெளிநடப்பு பண்ணுற மாதிரி, அறிக்கை விடுறா மாதிரி, கட்சி தாவுற மாதிரி, ஊழல் பண்ணுற மாதிரி சுலபமான வேலையா?
அஞ்சு கோடி கொடுத்திட்டாங்களாம்; ஆறுமாசம் டயம் கொடுத்திட்டாங்களாம்!
உங்களை நம்பி, இந்த நாட்டோட கஜானா சாவியையே ஜனநாயகமுங்கிற பேருலே அறுபத்தி மூணு வருசமா கொடுத்தோமே சாமீ? வைகுண்ட ஏகாதசியன்னிக்கு ஸ்ரீரங்கத்து யானைக்குப் போட்ட மாதிரி நூத்தி பதினைஞ்சு கோடி மக்களோட நெத்தியிலேயும் பட்டை நாமம் சாத்தினீங்களே, அப்பல்லாம் உங்களுக்குப் காலத்தோட அருமையும், காசோட அருமையும் தெரியலியா? இருங்க வர்றேன்!
சரிங்கய்யா, ஒத்துக்கறோம்! ரஹ்மானுக்கு டியூன் போடத் தெரியலே!
அதுனாலே, நானே காமன்வெல்த் விளையாட்டின்போது, தில்லியிலே என்ன பாட்டுப்பாடலாமுன்னு சில பாட்டுக்களை செலக்ட் பண்ணியிருக்கேன். இந்தப் பாட்டு சில அரசியல்வாதிகளுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க! இதுலே ஏதாவது ஒரு பாட்டைப் போட்டு விடுங்க சரியா?
(1) நேயர் விருப்பம்: பிரதமர் மன்மோகன் சிங்
"அன்னையைப் போலொரு தெய்வமில்லை-அவர்
அடிதொழ மறப்பவர் மனிதரில்லை!
மனிதரில்லை-மண்ணில் மனிதரில்லை!"
(2) நேயர் விருப்பம்: சுரேஷ் கல்மாடி
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று!"
(3) நேயர் விருப்பம்: எம்.எஸ்.கில்-விளையாட்டுத்துறை அமைச்சர்
"அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா?
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்!"
(4) நேயர் விருப்பம்: ஷரத் பவார்- உணவுத்துறை அமைச்சர்
"கல்யாண சமையல்சாதம் காய்கறிகளும் பிரமாதம்
அந்த கௌரவப் பிரசாதம்-இதுவே எனக்குப் போதும்
ஹாஹா..ஹாஹா..ஹாஹா..ஹா
ஹாஹா..ஹாஹா..ஹாஹா..ஹா
ஹாஹா..ஹாஹா..ஹாஹா"
(5) நேயர் விருப்பம்: ஷீலா தீட்சித்-தில்லி முதல்வர்
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்."
(6) நேயர் விருப்பம்: மம்தா பேனர்ஜீ- இரயில்வே அமைச்சர்
"சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே
கலக்குதுபார் இவ ஸ்டைலே
சிக்குவாளா சிக்குவாளா மயிலே-இப்போ
ஓக்கேன்னா அடி தூளே!"
(7) நேயர் விருப்பம்: லாலு பிரசாத் யாதவ்-முன்னாள் இரயில்வே அமைச்சர்
"வந்தேண்டா பால்காரன்-அடடா-பசுமாட்டைப் பத்திப் பாடப்போறேன்
புதுப்பாட்டுக்கட்டி ஆடப்போறேன்!
புல்லுகொடுத்தா பாலுகொடுக்கும்-உன்னாலே முடியாது தம்பி
பாதிபுள்ளே பொறக்குதப்பா பசும்பாலைத் தாய்ப்பாலா நம்பி"
(8) நேயர் விருப்பம்: எஸ்.எம்.கிருஷ்ணா-வெளியுறவுத்துறை அமைச்சர்
"ஆறுமனமே ஆறு-அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன்வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு"
(9) நேயர் விருப்பம்: பிரணாப் முகர்ஜீ-நிதியமைச்சர்
"பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும் எலும்பொடு சதைநரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே என் ஐயனே"
(10) நேயர் விருப்பம்: முரளி தியோரா-பெட்ரோலியத்துறை அமைச்சர்
"நானடிச்சா தாங்கமாட்டே! நாலுமாசம் தூங்கமாட்டே!
மோதிப்பாரு வீடுபோயி சேரமாட்டே!"
இந்தப் பத்துப் பாட்டுலே ஒண்ணுகூட பிடிக்கலேன்னா, இன்னும் பத்துப் பாட்டு அனுப்பறேன்.
ஆனா, வக்கா வக்காவைப் பத்திப் பேசினீங்கன்னா, பரவை முனியம்மாவை தமிழ்நாடு எக்ஸ்பிரசிலே ஏத்தி அனுப்பி விட்டிருவேன். ஜாக்கிரத......!

Tweet |
23 comments:
அண்ணே,பின்னு பின்னுனு பின்னிட்டீங்க.இருங்க உங்களை பாராட்டி ஒரு பாட்டு யோசிச்சு டைப் பண்றேன்
நானடிச்சா தாங்கமாட்டே! நாலுமாசம் தூங்கமாட்டே!
மோதிப்பாரு வீடுபோயி சேரமாட்டே!
முடியல!
//ஆனா, வக்கா வக்காவைப் பத்திப் பேசினீங்கன்னா, பரவை முனியம்மாவை தமிழ்நாடு எக்ஸ்பிரசிலே ஏத்தி அனுப்பி விட்டிருவேன். ஜாக்கிரத......!//
காவல்காரன் படம் ரிலீசானவுடனே அதனோட டிக்கெட் குடுத்தனுப்பிருவேன்னு மிரட்டு சேட்டை...ங்கொய்யாலே தானா வழிக்கி வருவானுக..., இவனுகளுக்கு உசுரு பயம் வந்தாதான் சொல் பேச்சு கேப்பாங்க..
// பன்னிக்குட்டி ராம்சாமி said...//
பன்னி சேட்டைக்கி இருந்து ரெண்டு நாள் ட்ரைனிங் குடுத்துட்டு வா...:)
புலி உருமுது புலி உருமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
சேட்டைகாரன் பதிவ பா(ர்)த்து..
கொல நடுங்குது கொல நடுங்குது
துடி துடிகுது துடி துடிகுது
நிலகொலையுது நிலகொலையுது
சேட்டைகாரன் பதிவ படித்து..
பதிவுல பாட்டு பல பலக்க
பதிவுலகம் கல கலக்க
பதிவோடு வரான் சேட்டைகாரன்
பின்னூட்டமிடும் பாசக்காரன்
நிக்காம ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு
ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு ஒடு
வரான் பாரு சேட்டைகாரன்
பரவை ரொம்ப நல்ல சாய்ஸ்:))
அதுக்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசை அமைச்சு, சமீபத்துலே தில்லியிலே இருக்கிற ’இள’வட்டங்களெல்லாம், ஐ மீன், அரசியல்வாதிங்க முன்னாடி வெளியிட்டிருக்காரு! அதைக் கேட்டுட்டு நம்மாளுங்க என்ன சொல்றாங்களாம்: "பாட்டெல்லாம் நல்லாத் தானிருக்கு. ஆனா, ஷகீராவோட வாக்கா...வாக்கா மாதிரியில்லியே!" ஙொக்க மக்கா!!
......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...விட்டாக்க, ஷகிராகிட்டேயே tune போட சொல்லி அரசியல் தலைவர்கள் லைன்ல நிப்பாங்க போல....
kaalaiyil sirika vaithu vittergal nandri
ஆளாளுக்கு சகிரா சகிரான்றீங்களே...
ஆருங்க அது.... கேரளாவோட புது ஆக்ட்ரஸா...??
:)))))
எப்படி இப்படியெல்லாம் தோணுது சேட்டை !
பரவை முனியம்மா நிச்சயமா ந்நேட்டிவிட்டியோட செய்வாங்க..நேட்டிவிட்டி வேணும்ன்னா ஆஸ்கார் அவார்ட் வாங்கினவரை ஏன் இவங்க செய்யச்சொன்னாங்க.. எதாச்சும் ஃபோக் சாங்க் பாடறவஙக்ள விட்டுத்தானே செய்ய சொல்லனும்..
பாட்டு எல்லாம் சரியாய் மேட்ச் ஆகிறது. சரி சேட்டை நண்பா!
பிரபாகர்...
//அகல்விளக்கு says
ஆளாளுக்கு சகிரா சகிரான்றீங்களே...
ஆருங்க அது.... கேரளாவோட புது ஆக்ட்ரஸா...??.//
ஆமா அகல்...ஷகீலாவோட ஒண்ணுவிட்ட சித்தியோட பேத்திதான் ஷகீரா...
ஏம்பா சேட்டை...நம்ம ப.சி.யை மட்டும் வுட்டுட்ட....
சட்டி சுட்டதடா பாட்டு பொருத்தமா இருக்குமே....

கலக்கல் , நான் மிகவும் ரசித்தது கில் அவர்களுடைய பாடலை தான் :)
nalla iruku
அசத்திட்டீங்க சேட்டை!
என்னா லொல்லு....
haa..haa..haa..haa
அன்பின் சேட்டை
நேயர் விருப்பம் அத்தனையும் முத்துக்கள் - மிக மிக இரசிக்கும் பாடல்கள் - தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட பாடல்கள்
நன்று நன்று சேட்டை
நல்வாழ்த்துகள் சேட்டை
நட்புடன் சீனா
ஆனாலும் ஷகிராவோட வக்கா, வக்கா நல்லாருக்குங்க. கூடவே அந்தப்பொண்ணோட ஆட்டமும்.
சேட்டை....சேட்டை.....நல்லாத்தான் இருக்கு........நன்றி....மெய்மறந்து சிரிக்க வெச்சதுக்கு.........
Post a Comment