Monday, September 6, 2010

ஒரு பிளேட் பேல்பூரி பார்சல்.....!

5 தொகுதிகள் தந்தா யாருடனும் கூட்டணி-சுப்பிரமணிய சாமி

அது சரி, அஞ்சு வேட்பாளர்களுக்கு என்ன பண்ணப்போறீர் வோய்?

சசிதரூர் ரிசப்ஷன் பிரதமர் புறக்கணிப்பு

பிஸியா இருந்திருப்பாரு! அடுத்தவாட்டி கண்டிப்பா வருவாரு!

தனித்தோ, கூட்டணி அமைத்தோ நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவோம்-சரத்குமார்

இப்படியெல்லாம் விரக்தியாப் பேசப்படாது. எத்தனை கட்சி இருக்குது, யாராவது கூப்பிடாமலா போயிருவாங்க?

ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!

நல்லா விசாரிக்கச் சொல்லுங்க, யாராவது வலைப்பதிவரா இருக்கப் போறாங்க!

சொத்து குவிப்பு: ஜெ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அதுக்கென்ன, சொத்துக்குவிப்பு வழக்கோட ஒத்திக்குவிப்புக்குன்னு தனி வழக்கு போட்டுட்டாப் போச்சு!

கால்வாயைக் கண்டுபிடிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு

நல்ல வேளை, உயர்நீதிமன்றம் காணாமப்போகலே! இன்னிக்கு வரும்போது கூடப் பார்த்தேனே!

என் மீதான பழி உணர்ச்சியால் மார்ச்சுவரியைக் கூட மூடியுள்ளது திமுக அரசு-ஜெ.

அம்மா, "மார்ச்"வரி தானே, போகட்டும்! "ஜன"வரியும் "பிப்ரு"வரியும் இருக்கில்லே?

போதையில் ஏட்டுக்கு பளார் காலில் விழுந்து கதறிய வாட்ச்மேன்!

ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும், ஃபினிஷிங் சரியில்லையே!

வைரமுத்து சொன்னால் படம் ஓடும்-கமல்ஹாஸன்!

இதைப் படிச்சிட்டு மணிரத்னம் விழுந்து விழுந்து சிரிச்சாராம்! குட் ஹ்யூமர் கமல்! :-)

செளந்தர்யா கல்யாணம்-பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து

புளுகாதீங்க, நான் போகவேயில்லை! எப்படிப் பிரபலங்கள் திரண்டு வாழ்த்துன்னு கூசாம சொல்றீங்க?

அனைவரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் பெரிய முட்டாள்: ரஜினி

ஹையா! தலைவரு பேசிட்டாரு! அவுலு கிடைச்சிருச்சு! ஸ்டார்ட் மீஜிக்!! ரண்டணக்கா...ரண்டணக்கா...!

ஷ்ரியாவிடம் மயங்கிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி!

வேணாம்! வேணாம்!! வலிக்குது.....! அழுதிடுவேன்......!

13 comments:

Mahi_Granny said...

பிரபல பதிவாளர் சேட்டைக்காரனுக்கு வாழ்த்துக்கள்

சங்கவி said...

ரஜினி வீட்டு கல்யாணத்துக்கு போகாத பிரபலத்தின் பிரபலம் சேட்டைக்கு வாழ்த்துக்கள்....

vinu said...

saaripaa ennakku masal poori thaan pudikkum

dr suneel krishnan said...

தனித்தோ, கூட்டணி அமைத்தோ நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவோம்-சரத்குமார்

இப்படியெல்லாம் விரக்தியாப் பேசப்படாது. எத்தனை கட்சி இருக்குது, யாராவது கூப்பிடாமலா போயிருவாங்க?
செம கலாய்..

Altruist said...

This is too much

வெங்கட் நாகராஜ் said...

அருஞ்சுவையில் ஒரு பேல் பூரி. மகிழ்ந்தேன்.

வானம்பாடிகள் said...

சரவெடி:))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லா விசாரிக்கச் சொல்லுங்க, யாராவது வலைப்பதிவரா இருக்கப் போறாங்க!//
நிலைமைஅந்தளவு போயிடுச்சா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சேட்டைய ரஜினி வீட்டுக் கல்யாணத்துக்கு கூப்பிடலைய்யா? கு.மு.க.வுக்கே அவமானம்யா...தல...நீ மட்டும் ம்ம்னு சொல்லு....வரிசைய்யா தொடர்பதிவு போட்டே கொன்னுடலாம்!

Chitra said...

ஷ்ரியாவிடம் மயங்கிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி!

வேணாம்! வேணாம்!! வலிக்குது.....! அழுதிடுவேன்......


....சேட்டை.... ஸ்ரேயா ரசிக மன்ற தலைவரே இப்படி சும்மா சொல்லிட்டீங்களே? எப்படி?

சிநேகிதன் அக்பர் said...

டேஸ்ட் செம.

அச்சு said...

/*5 தொகுதிகள் தந்தா யாருடனும் கூட்டணி-சுப்பிரமணிய சாமி

அது சரி, அஞ்சு வேட்பாளர்களுக்கு என்ன பண்ணப்போறீர் வோய்?

சசிதரூர் ரிசப்ஷன் பிரதமர் புறக்கணிப்பு

பிஸியா இருந்திருப்பாரு! அடுத்தவாட்டி கண்டிப்பா வருவாரு!
*/
இரண்டும் செம கலக்கல்...

என்னது நானு யாரா? said...

இந்த பதிவும் செம காமெடிப்பா சேட்டைகாரரே! அந்த நாகேஷ் இப்போ உயிரோட இருந்தார்ன்னா ரொம்ப சந்தோஷபடுவாரு!

நமக்கு ஒரு வாரிசு கிடைச்சிட்டானேன்னு! ரொம்ப நல்லா இருக்கு! Start Music!!