குதித்துச்செல்லும் நதி
குளிரடிக்கும் காற்று!
குவிந்து படர்ந்த மேகம்
குதூகலமான வாழ்க்கை!
இரவுபெய்த மழையில்
ஈரமான மரங்கள்!
இலைகள் சொட்டிய நீருடன்
மரம் வடித்த கண்ணீர்....!
நதியின் ஓட்டமும்
காற்றின் கதகதப்பும்
மேகத்தின் குவியலும்
வாழ்க்கையின் சிரிப்பும்
என்றோ ஒருநாள்
எங்கோ நிற்கும்!
இதோ...
ஒவ்வொருவரும் என்னைப்போல்
ஒளிந்திருக்கிறார்கள்!
பெரிய இருட்டுக்கு அஞ்சி
சின்ன இருட்டுக்குள்ளே
சிறையிருக்கிறோம்!
வசந்தத்துக்காகத் திறந்து வைத்தது
இதோ..!
அந்தம் வந்து கதவருகே
அழைப்புமணியடிக்கிறது!
காலிக்கோப்பைகள் கேலியாய்க்
கண்சிமிட்டுகின்றன
இன்றைக்குக் காலையில்
இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?
பறவைகளின் பள்ளியெழுச்சி...
படர்ந்த காலைப்பனி...
தூளியிலிருந்து விழுந்த பூக்கள்
தூரத்தில் கேட்ட கோவில்மணி...!
இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாமோ?
ஆசையில் வாங்கிய உடமைகள்
அன்னியமானது போல...
இன்று மட்டும் தான்
கண்ணாடியே என்னைக்
காண்பதுபோலிருக்கிறது!
எனது புகைப்படத்தை
ஏன் இத்தனை நேரம்
வாஞ்சையோடு வருடுகிறேன்?
கண்களைத் திருப்பிக்கொள்கிறேன்
கடியாரம் தெரியவில்லை!
ஆனாலும்...
முட்கள் ஒடுகிற சத்தம் மட்டும்
முன்னை விட உரக்க....உரக்க...!
Tweet |
16 comments:
கவிதை நல்லாயிருக்கு. ஆழ்ந்து படிக்கும் போது கவிதை பெரும்சோகமாக தெரிகிறது :(
நல்ல கவிதை.
அருமை. வாழ்த்துக்கள்
ஆஹா ! கவிதை அருமை.
சகலகலா வல்லவராக இருக்கிரிர்களே நண்பரே வாழ்த்துக்கள்
ம்ம். என்னாதிது:(.
சேட்டை உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன். முடிஞ்சா தொடருங்க.
பெரிய இருட்டுக்கு அஞ்சி
சின்ன இருட்டுக்குள்ளே
சிறையிருக்கிறோம்!
......எளிமையாக சொல்லி இருக்கீங்க.... உள்ளுக்குள் இருக்கும் ஆழமான அர்த்தம் ........ம்ம்ம்ம்ம்ம்ம்..... அருமைங்க!
கண்களைத் திருப்பிக்கொள்கிறேன்
கடியாரம் தெரியவில்லை!
ஆனாலும்...
முட்கள் ஒடுகிற சத்தம் மட்டும்
முன்னை விட உரக்க....உரக்க...!
..... மனதுக்குள் ஒரு திக்... திக்.... தான்!
கவிதையிலும் கலக்குறீங்க நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
அருமைங்க
நண்பரே அருமை...
கவிதை அருமை சேட்டை.
கால ஓட்டத்தில் ஓட ஓட ரசனை பின் தங்கி விடுகிறது ...
நல்ல கவிதை
இறந்த பின்னர் இப்பிடி நினைக்க வைக்குமோ...நான் இப்படித்தான் புரிந்துகொண்டேன் !
நதியின் ஓட்டமும்
காற்றின் கதகதப்பும்
மேகத்தின் குவியலும்
வாழ்க்கையின் சிரிப்பும்
என்றோ ஒருநாள்
எங்கோ நிற்கும்!
இதோ...
ஒவ்வொருவரும் என்னைப்போல்
ஒளிந்திருக்கிறார்கள்!//
சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை...
நல்ல ரசனை
அருமை
Post a Comment