Friday, April 23, 2010

IPL ஜிந்தாபாத்

"சேட்டை! பால் தாக்கரேயைப் பார்க்கப்போயி சொதப்பினது மாதிரி பண்ணிராதீங்க," என்று எச்சரித்தான் சூடாமணி. "நான் சொல்லுறது மாதிரி சொல்லுங்க, லாலு பிரசாத் யாதவ் அப்படியே சரண்டர் ஆயிருவாரு!"

லாலுவுக்காகக் காத்திருந்தபோது, எனது நினைவலைகள் சற்றே பின்னோக்கிச் சுழன்றன. (டேய், நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ஃபிளாஷ்-பேக்கெல்லாம் ரொம்ப அவசியமா என்று கேட்பது காதில் விழுகிறது.)

கொசுவும் மூட்டைப்பூச்சியும் சசி தரூரும் லலித் மோடியும் போல போட்டி போட்டுக்கொண்டு எனது உடம்பிலிருந்த கொஞ்சநஞ்ச இரத்தத்தையும் ஸ்ட்றா போட்டு உறிஞ்சிக்கொண்டிருந்த அந்த பின்னிரவில், செல்போன் அலறவே உறக்கம் கலைந்து விழித்தேன்.

அட நம்ம ப்ரீத்தி ஜிந்தா! எதுக்கு நேரங்கெட்ட நேரத்துலே எனக்கு போன் பண்ணனும்?

"சேட்டை! எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது! வ்வ்வ்வ்வ்வே!" என்று ப்ரீத்தி சண்டிகரில் அழுத அழுகையில் சென்னையில் என் சட்டை நனைந்தது.

"க்யா பாத் ஹை?" என்று எனக்குத் தெரிந்த ஹிந்தியில் வினவினேன்.

"பகாளாபாத் ஹை!" என்று எரிச்சலோடு பதிலளித்தார் ப்ரீத்தி. "எங்க ஐ.பி.எல்லை தேசியமயமாக்கணுமுன்னு லாலு யாதவ் பாராளுமன்றத்திலே பேசியிருக்காரு! நீ சாவகாசமா க்யா பாத் ஹைன்னா கேக்குறே?"

"ஓ! அதுவா!! வேறொண்ணுமில்லை ப்ரீத்தி! லாலுவோட பையனை ஐ.பி.எல்லிலே விளையாட தேர்வு செஞ்சிட்டு, அவரை சும்மா கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு போய் கொடுக்கிறதுக்கும், முதுகு சொரிஞ்சு விடறதுக்கும் தான் உபயோகப்படுத்தினாங்களாமே, அந்தக் கோபத்திலே இப்படிச் சொல்லியிருப்பாரு ப்ரீத்தி! கவலைப்படாதீங்க, நாளைக்கே நான் நம்ம சூடாமணியோட பாட்னாவுக்குப் போயி அவரை சமாதானப்படுத்திடறேன்," என்று உறுதியளித்தேன்.

இந்த ஐ.பி.எல்.சோதனையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ப்ரீத்தி தான். முன்னெல்லாம் அவரது கன்னத்தில் ஒரு குழி தெரியும். இப்போது அவர் கன்னமே பல்லாங்குழி போலாகிவிட்டது பாவம்.

நான் ஒரு தடவை சொன்னா ஒண்ணே முக்கால் தடவை சொன்ன மாதிரிங்கிறதுனாலே, மறுநாளே சூடாமணியைக் கூட்டிக்கிட்டு பாட்னாவுக்குப் போயிட்டேன்.இது தான் நடந்தது; ஃபிளாஷ் பேக் முடிந்தது.

இப்போ லாலு பிரசாத் யாதவுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.

"சேட்டை, லாலு வர்றாரு! நான் சொன்னது மாதிரி சொல்லுங்க!" என்று என்னை முடுக்கினான் சூடாமணி.

"லாலுஜீ வாழ்க! வருங்காலப் பிரதம மந்தி வாழ்க!" என்று கோஷமிட்டேன். சூடாமணி என் மணிக்கட்டில் கிள்ளினான்.

"சேட்டை! அது பிரதம மந்தியில்லை; பிரதம மந்திரி," என்று பல்லைக்கடித்தவாறே திருத்தினான். "மந்தின்னா அர்த்தமே வேறே!"

மீண்டும் ஒரு முறை திருத்தி கோஷமிட்டு விட்டு, லாலுஜீக்கு ஒரு ஆளுயர மாலையைப்போட்டு, அவர் பக்கத்தில் கடவாய்ப்பல் தெரிய சிரித்தவாறே போஸ் கொடுத்து நின்று போட்டோவெடுத்து, விஷயத்துக்கு வந்தோம்.

"சேட்டை! வெரி ஹேப்பி சீயிங் யூ ஐ! சிட் டவுண்! சேர் டேக்கிங் யூ அண்டு சிட்டிங் ஆன் யூ!" என்று ஆங்கிலத்தில் என்னை நாற்காலியில் உட்காருமாரு கூறினார் லாலுஜீ.

"லாலுஜீ! கிரிக்கெட் போர்டை தேசியமயமாக்கணுமுன்னு நீங்க பேசினதைக் கேட்டு உங்க கிட்டே அதுவிஷயமாப் பேசலாமுன்னு வந்தேன்!" என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"அது செஞ்சிர வேண்டியதுதான் சேட்டை!" என்றார் லாலுஜீ ஆவேசமாக. "ஆயிரக்கணக்கான கோடிப்பணத்தை மோசடி பண்ணியிருக்காங்க! கறுப்புப்பணம் கப்பல் கப்பலா வந்திருக்குது. அந்நியச்செலாவணி மோசடி வேறே! பகல்கொள்ளையடிச்சிருக்கானுங்க, ஊழலோ ஊழல்!"

"அதானே, முப்பது வருஷத்துலே நீங்க செய்யாததை மூணே வருஷத்துலே பண்ணி ரிக்கார்டை ப்ரேக் பண்ணிட்டாங்க," என்று இன்னும் கொஞ்சம் உசுப்பி விட்டேன். நல்ல வேளை, லாலுஜீக்குப் புரியவில்லை.

"அது மட்டுமில்லே சேட்டை!" லாலுஜீ கண்களைத் துடைத்துக்கொண்டார். "என் பையனுக்கு புதுசா பேட்டெல்லாம் வாங்கிக் கொடுத்து அனுப்பினேன். அவனை சும்மா கோட்-ஸ்டாண்டு மாதிரி தோளுலே டவல் காயப்போடறதுக்குத் தான் யூஸ் பண்ணினாங்களே தவிர ஒரு மேட்ச் கூட ஆடவே விடலே!"

"வருத்தப்படாதீங்க லாலுஜீ!" என்று அவரை சமாதானப்படுத்தினேன். "உங்க வீட்டுலே நீங்க, ராப்ரிஜீ, அப்புறம் உங்க ஒன்பது குழந்தைங்கன்னு மொத்தம் பதினோரு பேர் இருக்கீங்க! பேசாம நீங்க எல்லாருமா சேர்ந்து புதுசா கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மாதிரி ஒரு டீம் ஆரம்பிக்கலாமே? பீஹார் பஃபல்லோஸ்னு?"

"சுத்தி வளைக்கக்கூடாது சேட்டை!" என்று இடைமறித்தார் லாலுஜீ."இந்த கிரிக்கெட்டை தேசியமயமாக்கிட்டா, அப்புறம் எல்லாம் நம்ம விருப்பம் போல தானே நடக்கும்?"

"லாலுஜீ! நான் சொல்றதைக் கேளுங்க! கிரிக்கெட்டை எதுக்கு தேசியமயமாக்கணும்? ஏற்கனவே அதுலே சரத்பவார், அருண் ஜேட்லி, நரேந்திர மோதி,நீங்கன்னு நிறைய அரசியல்வாதி இருக்கீங்க! இப்பவே பாதி தேசியமயமாயிருச்சே! இதுக்கு மேலேயும் பண்ணினா பல ஆபத்தான விளைவுகள் ஏற்படும். எல்லா அரசியல்வாதிகளும் கிரிக்கெட்டுலே குதிச்சிருவாங்க!" என்று லாலுஜீக்கு விளக்க ஆரம்பித்தேன்.

"என்ன ஆபத்து?" என்று கேட்டார் லாலுஜீ. "நான் பிரதம மந்திரியா வர்றதைத் தவிர வேறே என்ன ஆபத்து இருந்தாலும் சொல்லு!"

"அப்படி வாங்க வழிக்கு!" என்றேன் நான். "இப்போ பாருங்க லாலுஜீ! நம்மூருலே கிரிக்கெட் மேட்ச் நடக்குறபோது மைதானத்துலே அடிக்கடி நாய் நுழையுறதைப் பார்த்திருக்கோமில்லையா?"

"சேட்டை! ஒண்ணு அரசியல்வாதியைப்பத்திப் பேசு; இல்லாட்டி நாயைப் பத்திப் பேசு!" என்றார் லாலுஜீ ரோஷமாக.

"கோவிச்சுக்காதீங்க லாலுஜீ! நான் சொல்ல வர்றது என்னான்னா, மைதானத்துலே நாய் புகுந்தா, விளையாட்டை நிறுத்திட்டு போலீஸ்காரங்க நாயை விரட்டுவாங்க தானே? கிரிக்கெட்டை தேசியமயமாக்கினா அது நடக்காது. உங்களாலே நாயை விரட்ட முடியாது," என்றேன்.

"ஏன்?"

"மேனகா காந்திக்குக் கோபம் வந்திருமே? எப்படி ஒரு வாயில்லா ஜீவனை கிரிக்கெட் மைதானத்துலேருந்து விரட்டலாமுன்னு பாராளுமன்றத்துலே கேள்வி கேட்டுற மாட்டாங்க?"

"அட ஆமாம்!" ஒப்புக்கொண்டார் லாலுஜீ.

"அப்புறம் பாருங்க, இப்பெல்லாம் பேட்ஸ்மேன் அவுட்டா இல்லையான்னு பார்க்க டிவி அம்பயர் ஒருத்தர் இருக்காரில்லையா? தேசியமயமாக்கினா, அதுக்கு ஒரு உயர்மட்டக்குழு அமைச்சு, அவங்க ஆறுமாசம் கழிச்சு அறிக்கை தாக்கல் பண்ணற மாதிரி ஆயிராது? அப்புறம் ஒவ்வொரு T20 மேட்சும் அஞ்சு வருஷம் நடக்கும். இது தேவையா?"

"இது வேறயா?" தலையைச் சொரிந்தார் லாலுஜீ.

"இன்னும் இருக்கு! தப்பா அவுட் கொடுத்திட்டா கொல்கத்தா அணியும், கொச்சி அணியும் பந்த், ஸ்டிரைக், மறியல்னு ஆரம்பிச்சிடுவாங்க!"

"ஐயையோ!"

"ஹர்பஜன் சிங் யாரையாவது அடிச்சாலோ, யுவராஜ் சிங் யாரையாவது திட்டினாலோ, விசாரணைக் கமிஷன் வைப்பீங்க! அறிக்கை வெளியாகுறதுக்குள்ளே அவங்க கிரிக்கெட்டை விட்டே ரிட்டயர் ஆயிடுவாங்க!"

"சேட்டை, உண்மையிலேயே நீ உட்கார்ந்து ரொம்ப யோசிக்கிறே!"

"ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இ.எஸ்.பி.என், டென் ஸ்போர்ட்ஸ்லே வர்ணனையாளருங்க பாடு திண்டாட்டமாயிரும்."

"ஏன்?"

"மம்தா பேனர்ஜி வந்து அவங்க மட்டும் தான் கமெண்டரி கொடுப்பேன்னு சொல்லிட்டாங்கன்னா...?"

"அரே பகவான்....!"

"இது மட்டுமா? உ.பியிலே நீங்க ஒரு மேட்ச் கூட நடத்த முடியாது. மாயாவதி அம்மா, பிட்சுக்கு நட்ட நடுப்புலே அவங்களோட முப்பதடி உருவச்சிலையை வச்சிருப்பாங்க!"

"பாப்ரே பாப்...!"

"தமிழ்நாட்டுலே இராம.கோபாலன் சச்சினுக்கு சப்போர்ட் பண்ணுவாரு, சுயமரியாதைக்காரங்க சச்சினைப் பிடிச்சுக் கண்டபடி திட்டுவாங்க!"

"ஏன் சேட்டை?"

"ஏன்னா சச்சின் கிரிக்கெட்டோட கடவுளாச்சே? தமிழ்நாட்டு ஆளுங்களுக்கு கடவுள்னா பிடிக்காதே?"

"தமிழ்நாட்டு அரசியல்வாதியைப் பத்திக் கவலைப்படாதீங்க சேட்டை! அவங்க காலையிலே திட்டுவாங்க, சாயங்காலமான ஸ்டேடியத்துக்கு வந்து மேட்ச் பார்ப்பாங்க! குடும்பத்துக்கு ஒரு பாஸ் கொடுத்திட்டா கம்முன்னு இருப்பாங்க!"

"என்னது, குடும்பத்துக்கு ஒரு பாஸா? அப்படீன்னா பொதுமக்களுக்கு டிக்கெட்டே மிஞ்சாதே..?"

"அரசியலைப் பத்திப் பேசும்போது பொதுமக்களைப் பத்திப் பேசக்கூடாது சேட்டை! மேலே சொல்லு!"

"கிரிக்கெட் பிட்ச் தயார் பண்ணறதுக்காக நீங்க மண்ணைத் தோண்ட முடியாது. மேதா பட்கர் வந்து தொண்ணூத்தி ஒன்பதாவது முறையா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாங்க!"

"ஹே ராம்!"

"தமிழ்நாட்டுலே யாராவது தற்கொலை பண்ணிக்கிட்டா, சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோத்ததுனாலே தான்ன்னு ராமதாஸ் அறிக்கை விடுவாரு!"

"சேட்டை! நீ சொல்லுறதைப் பார்த்தா கிரிக்கெட்டை தேசியமயமாக்கினா நிறைய பிரச்சினை வரும்போலிருக்கே?" என்று லாலுஜீ தாவாங்கட்டையைச் சொரிந்தார்.

"ஆமாம் லாலுஜீ! இந்த செய்தியைக் கேட்டதிலேருந்து ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா எல்லாரும் பாவம் கதிகலங்கிப்போயிருக்காங்க!" என்றேன் நான்.

"அவங்க ஏன் கவலைப்படறாங்க? நாங்க கிரிக்கெட்டை மட்டும் தான் தேசியமயமாக்குவோம்!"

"அதில்லே லாலுஜீ! ஏற்கனவே அவங்கவங்க டீம் தோத்துருச்சேன்னு நொந்துபோயிருக்காங்க! இதுலே நீங்க வேறே இப்படியொரு ஸ்டேட்மெண்ட் விட்டீங்களா? அதிர்ந்து போயிட்டாங்க!"

"அதுக்காக, கிரிக்கெட்டுங்கிற பேருலே நடக்கிற பகல்கொள்ளையைப் பார்த்தும் பார்க்காமலும் இருக்க முடியுமா? அத்தனையும் தில்லுமுல்லு...!"

"லாலுஜீ! உங்க கணக்குப்படி பார்த்தீங்கன்னா, பாராளுமன்றத்தேர்தலிலேருந்து பாலிலே தண்ணி கலக்குறது வரைக்கும் எல்லாத்திலேயுமே தில்லுமுல்லுதானே நடக்குது? இதையெல்லாம் தேசியமயமாக்கினா நடக்கிற காரியமா?"

"இப்போ என்னதான் சொல்லவர்றே சேட்டை?" லாலுஜீ பொறுமையாகக் கேட்டார்.

"லாலுஜீ! கறுப்புப்பணம், வருமானவரி மோசடி, தனிமனிதவழிபாடு, தில்லுமுல்லு, மொள்ளமாறித்தனம், பொய், பித்தலாட்டம் இதெல்லாம் கிரிக்கெட்டுலே இருக்கிறதை விடவும் நூறு மடங்கு அதிகமாயிருக்கிறது உங்க அரசியல்லே தான்! முதல்லே அரசியலை தேசியமயமாக்குங்க! கிரிக்கெட்டைப் பத்தி அப்புறமாக் கவலைப்படலாம்," என்று சொல்லிவிட்டு, லாலுஜீயின் வீட்டிலிருந்து சிட்டெனப் பறந்தேன்.

பாவம், சூடாமணி! லாலுஜீ கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடு பட்டுக்கிட்டிருக்கானோ?

46 comments:

எல் கே said...

settayoda settai aramichudichu

பிரபாகர் said...

எல்லாம் அருமை. படித்துவிட்டேன், அவசரமாக அலுவலகம்... விரிவான பின்னோட்டம் பின்...

பிரபாகர்...

Unknown said...

பாவம்யா அவிங்க

Unknown said...

//"கிரிக்கெட் பிட்ச் தயார் பண்ணறதுக்காக நீங்க மண்ணைத் தோண்ட முடியாது. மேதா பட்கர் வந்து தொண்ணூத்தி ஒன்பதாவது முறையா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாங்க!"
///

sirichikkitte irukkeen

வெங்கட் நாகராஜ் said...

முதல்ல தாக்கரே தாக்கல் - இப்போ லாலுவோட ”பால்” விளையாட்டு அடுத்து என்ன முலாயம் சிங் யாதவ் கூட என்ன? நல்லா இருக்கு உங்க விளையாட்டு.

வெங்கட் நாகராஜ்

vasu balaji said...

யே தோ சேட்டைக்காரன் பேட் பாய் ஹை!ஒரு அப்பாவி மனுசன மேனகா, மேதா பட்கர், மாயாவதி, மம்தானு டெர்ரர் பண்ணா ஓ ஆத்மி க்யா கர் சக்தா? சூடாமணிய எந்த எருமை கழுத்துல தொங்கவிட்டுட்டாரோ:))

பித்தனின் வாக்கு said...

// "சேட்டை, உண்மையிலேயே நீ உட்கார்ந்து ரொம்ப யோசிக்கிறே!" //
ரூம் போட்டு குப்புற விழுந்து யோசிக்கிறாய்ன்னு யாரோ சொன்னாங்க. லல்லுஜி கிட்டப் போனாலும் உங்க சேட்டை குறையவில்லை.

// பீஹார் பஃபல்லோஸ்னு?" //
என்ன பொருத்தமான பேருப்பா,
// ப்ரீத்தி தான். முன்னெல்லாம் அவரது கன்னத்தில் ஒரு குழி தெரியும். இப்போது அவர் கன்னமே பல்லாங்குழி போலாகிவிட்டது பாவம். //
அய்யே பாவம் எங்க கனவுக்கன்னிக்கா இந்த சோதனை, இது பொறுப்பது இல்லை, மங்குனி கிட்ட சொல்லி பிளைட் புக் பண்ண சொல்லனும்.

நல்ல பதிவு,சேட்டை உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோனுது?

ஜில்தண்ணி said...

சேட்ட அடுத்தது மோடியா இல்ல தரூரா
சூப்பர் சேட்டை

பெசொவி said...

ye story bahuth achchaa hai!
(this story is very good)

தனி காட்டு ராஜா said...

Simply SUPER...........

பிரபாகர் said...

சேட்டை,

லல்லுவின் பையன் ஐ.பி.எல்-லில் கூல் ட்ரிங்க்ஸ் தூக்கிய கதை இப்போதுதான் தெரியும்...

லல்லு அணிக்கு பொருத்தமான பெயர்...

அடுத்து யாரு சாமி? ரொம்ப ஆவலாயிருக்கோம்!

வடக்க இருக்கிற ஆளுங்களையே அதிகமா வம்புக்கு இழுங்க, கண்டிப்பா ஆட்டோ வராது!

பிரபாகர்.

Aba said...

பின்னிட்ட போ.... பிரமாதம்.

Chitra said...

ha,ha,ha,ha,ha...... funny!

முகுந்த்; Amma said...

அண்ணாச்சி, என்னை பொறுத்தவரை இந்த IPL இந்திய மக்களை அடிமைகளாக ஆக்கி பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்குகிறது ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குகிறது.

எனக்கு கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீதான ஆர்வம் எப்போதோ இந்த IPL சூதாட்டத்தால் குறைந்து விட்டது.

அது தேசியமயம் ஆனா என்ன ?ஆகாட்டி என்ன?

Prasanna said...

சேட்டை தூள்

//வ்வ்வ்வ்வ்வே!" என்று ப்ரீத்தி சண்டிகரில் அழுத அழுகையில்//

அவுங்க வாந்தி எடுக்கறா மாதிரி அழுவுறாங்க :))

மசக்கவுண்டன் said...

அதெப்டீ தம்பி இந்த மாதிரி ஐடியாவெல்லாம் உங்களுக்கு வருது.

ஸ்ரீராம். said...

பல்லாங்குழி, மாயாவதி,குடும்பத்துக்கு ஒரு பாஸ், மேத்தா பட்கர்...
இந்த வரிகள் எல்லாம் ரசித்தேன்..

settaikkaran said...

LK said...

//settayoda settai aramichudichu//

ஹிஹி! அது ஆரம்பிச்சு நாலு மாசம் ஆவப்போவுதுங்களே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

A.சிவசங்கர் said...

//பாவம்யா அவிங்க//

பாவமா? எவிங்க?? :-))

ஓ! சூடாமணியைச் சொல்றீங்களா? எஸ்கேப் ஆயிட்டாரு!

மிக்க நன்றி!!

settaikkaran said...

பிரபாகர் said...

//எல்லாம் அருமை. படித்துவிட்டேன், அவசரமாக அலுவலகம்... விரிவான பின்னோட்டம் பின்...//

காலேஜுக்கு வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டு மேட்னி ஷோவுக்குப் போறவங்க மாதிரியே சொல்றீங்களே?? :-))

//லல்லுவின் பையன் ஐ.பி.எல்-லில் கூல் ட்ரிங்க்ஸ் தூக்கிய கதை இப்போதுதான் தெரியும்...//

அதை டிவியிலே பார்த்ததுக்கப்புறம் தானே பதிவுக்கு ஐடியாவே தோணிச்சு?? :-)

//லல்லு அணிக்கு பொருத்தமான பெயர்...//

ஹி..ஹி!!


//அடுத்து யாரு சாமி? ரொம்ப ஆவலாயிருக்கோம்!//

ஆளுக்கா பஞ்சம்? நான் வேணான்னு போனாலும், யாராவது சிந்தனையைத் தூண்டி விட்டுடறாங்களே??

//வடக்க இருக்கிற ஆளுங்களையே அதிகமா வம்புக்கு இழுங்க, கண்டிப்பா ஆட்டோ வராது!//

ஆமாம், ரயிலே வரும்! :-((

மிக்க நன்றி!!

settaikkaran said...

முகிலன் said...

//sirichikkitte irukkeen//

நிறுத்தினீங்களா இல்லையா? :-)))))

மிக்க நன்றி!!

settaikkaran said...

வெங்கட் நாகராஜ் said...

//முதல்ல தாக்கரே தாக்கல் - இப்போ லாலுவோட ”பால்” விளையாட்டு அடுத்து என்ன முலாயம் சிங் யாதவ் கூட என்ன? நல்லா இருக்கு உங்க விளையாட்டு.//

முலாயம் சிங்கும் காமெடி பீஸ் தானா? கவனிக்க வேண்டியது தான்! :-)

மிக்க நன்றி!!

settaikkaran said...

வானம்பாடிகள் said...

//யே தோ சேட்டைக்காரன் பேட் பாய் ஹை!//

தன்யவாத்!


//ஒரு அப்பாவி மனுசன மேனகா, மேதா பட்கர், மாயாவதி, மம்தானு டெர்ரர் பண்ணா ஓ ஆத்மி க்யா கர் சக்தா?//

ராப்ரீயை விட்டுட்டீங்களே ஐயா? :-))))

//சூடாமணிய எந்த எருமை கழுத்துல தொங்கவிட்டுட்டாரோ:))//

சூடாமணி ரெண்டு எருமையை ஒட்டிக்கிட்டு பத்திரமா வந்து சேர்ந்திட்டான்! :-)))

மிக்க நன்றி!!

settaikkaran said...

பித்தனின் வாக்கு said...

//ரூம் போட்டு குப்புற விழுந்து யோசிக்கிறாய்ன்னு யாரோ சொன்னாங்க.//

நான் இருக்கிறதே ரூம் தானுங்களே? :-)) மல்லாக்கப் படுத்துக்கிட்டுக் கூட யோசிப்பேனுங்க!!

//லல்லுஜி கிட்டப் போனாலும் உங்க சேட்டை குறையவில்லை.//

ஹிஹி! எல்லாம் சகவாச தோஷம் தான்!

//என்ன பொருத்தமான பேருப்பா,//

எவ்வளவு மூளையைக் கசக்கி எழுதின மேட்டர் இது?

//அய்யே பாவம் எங்க கனவுக்கன்னிக்கா இந்த சோதனை, இது பொறுப்பது இல்லை, மங்குனி கிட்ட சொல்லி பிளைட் புக் பண்ண சொல்லனும்.//

நல்லது, போய் ரெண்டு வார்த்தை ஆறுதலா சொல்லிட்டு வாங்க! :-)


// நல்ல பதிவு,சேட்டை உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் தோனுது?//

வழக்கமா சொல்றது தான், ஒரு ஃபுளோவிலே வர்றது தான்.

மிக்க நன்றி!!

பனித்துளி சங்கர் said...

/////////அட நம்ம ப்ரீத்தி ஜிந்தா! எதுக்கு நேரங்கெட்ட நேரத்துலே எனக்கு போன் பண்ணனும்?

"சேட்டை! எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது! வ்வ்வ்வ்வ்வே!" என்று ப்ரீத்தி சண்டிகரில் அழுத அழுகையில் சென்னையில் என் சட்டை நனைந்தது.

"க்யா பாத் ஹை?" என்று எனக்குத் தெரிந்த ஹிந்தியில் வினவினேன்./////////


ஏலே மக்கா நல்லாத்தான்ல ஹிந்தி பேசுரீரு . ஏலே பார்த்துல அந்த அக்கா ஒரு மாதிரி !
இப்ப போன் உன்கிட்ட இருக்கு ஆனா இப்படியே இதை நீயிர் தொடர்ந்தீரு அப்பறம் உம்ம கய்யில போண்டாதான்ல இருக்கும் . அனுபவத்தில சொல்றம்ல .


கலக்கல் பதிவு சேட்டை !தினம்தோரும் நிகழும் நிகழ்வுகளை மிகவும் ரசிக்கும் வகையில் பதிவிடுவதர்க்கு உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை அருமை .

ஏலே மக்கா மீண்டும் வருவேன்ல ஹிந்தி பழக உம்மக்கிட்ட இல்லை அக்காக்கிட்ட.

settaikkaran said...

ஜில்தண்ணி said...

//சேட்ட அடுத்தது மோடியா இல்ல தரூரா?//

இன்னும் முடிவாகலேண்ணே! இன்னிக்குப் பொதுக்குழு கூட்டப்போறோம். :-)))

//சூப்பர் சேட்டை//

மிக்க நன்றி!!

settaikkaran said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ye story bahuth achchaa hai! (this story is very good)//

ரொம்ப ரொம்ப தன்யவாத் ஹை! :-))

settaikkaran said...

தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி said...

//Simply SUPER...........//

மிக்க நன்றி!! அடிக்கடி வாங்க!

settaikkaran said...

கரிகாலன் said...

//பின்னிட்ட போ.... பிரமாதம்.//

ஹிஹி! மிக்க நன்றிங்க!

settaikkaran said...

Chitra said...

//ha,ha,ha,ha,ha...... funny!//

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

முகுந்த் அம்மா said...

//அண்ணாச்சி, என்னை பொறுத்தவரை இந்த IPL இந்திய மக்களை அடிமைகளாக ஆக்கி பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்குகிறது ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குகிறது.//

இதுலே இவ்வளோ மேட்டர் இருக்கா? யாருக்குங்க தெரியுது? நான் டிவியிலே கூட பார்க்குறதில்லே!!

//எனக்கு கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீதான ஆர்வம் எப்போதோ இந்த IPL சூதாட்டத்தால் குறைந்து விட்டது.//

நிறய பேரு இப்படித்தான் சொல்றாங்க!!

//அது தேசியமயம் ஆனா என்ன ?ஆகாட்டி என்ன?//

அப்படியெல்லாம் சொல்லி என் பொழைப்புலே மண்ணைப் போட்டுராதீங்க அம்மணி! பதிவுக்கு நான் எங்கே போறதாம்? :-))))

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

பிரசன்னா said...

// சேட்டை தூள்//

மிக்க நன்றிங்க! :-)))

\\//வ்வ்வ்வ்வ்வே!" என்று ப்ரீத்தி சண்டிகரில் அழுத அழுகையில்//\\

//அவுங்க வாந்தி எடுக்கறா மாதிரி அழுவுறாங்க :))//

ஐயோ, நீங்க ரொம்ம்ம்ம்ப யோசிக்கறீங்களே...?
மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

மசக்கவுண்டன் said...

//அதெப்டீ தம்பி இந்த மாதிரி ஐடியாவெல்லாம் உங்களுக்கு வருது.//

மூக்கு பொடைப்பா இருந்தா வருமாம் கவுண்டரே!

மிக்க நன்றிங்க! :-)))

settaikkaran said...

ஸ்ரீராம். said...

//பல்லாங்குழி, மாயாவதி,குடும்பத்துக்கு ஒரு பாஸ், மேத்தா பட்கர்...
இந்த வரிகள் எல்லாம் ரசித்தேன்..//


ஆஹா, உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரி தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :-)))

பிரேமா மகள் said...

சாமி ஆளை விடு.. இனி சேப்பாக்கம் ஏரியா பக்கம் கூட போக மாட்டேன்.... மெரினா போறதுன்னா.. திருவெல்லிகேனி சுத்திப் போறேன்...

ரோஸ்விக் said...

//"அவங்க ஏன் கவலைப்படறாங்க? நாங்க கிரிக்கெட்டை மட்டும் தான் தேசியமயமாக்குவோம்!"

சென்னை சூப்பர் கிங்க்ஸ் தோத்ததுனாலே தான்ன்னு ராமதாஸ் அறிக்கை விடுவாரு!"
பீஹார் பஃபல்லோஸ்னு?"
//

இது மாதிரி இன்னும் அங்கங்கே குசும்பு ஒழிஞ்சிருக்கு... ரசிச்சேன் நண்பரே!

சிநேகிதன் அக்பர் said...

என்ன சேட்டை லாலுவையே நொங்கெடுத்திட்டிங்களே.

ஆமா உங்களுக்கு மைனஸ் ஓட்டா?

settaikkaran said...

பிரேமா மகள் said...

//சாமி ஆளை விடு.. இனி சேப்பாக்கம் ஏரியா பக்கம் கூட போக மாட்டேன்.... மெரினா போறதுன்னா.. திருவெல்லிகேனி சுத்திப் போறேன்...//

சரிதான், வூட்டுக்குள்ளே பொட்டியிலே தெரியுதே, என்ன பண்ணுவீங்களாம்? :-))

சேப்பாக்கம் என்ன பாவம் பண்ணிச்சுங்க? அப்பப்போ விருந்தினர் மாளிகை முன்னாடி உண்ணாவிரதம் இருப்பாங்க, ஜாலியா இருக்கும்! அம்புட்டுத்தேன்! :-))

மிக்க நன்றி!!

settaikkaran said...

ரோஸ்விக் said...

//இது மாதிரி இன்னும் அங்கங்கே குசும்பு ஒழிஞ்சிருக்கு... ரசிச்சேன் நண்பரே!//

ஹிஹி! குசும்பு, சேட்டை இதுங்களை வச்சுத்தானே நானே வண்டியை ஓட்டிக்கினு கீறேன்? :-))))

மிக்க நன்றிண்ணே!

settaikkaran said...

அக்பர் said...

//என்ன சேட்டை லாலுவையே நொங்கெடுத்திட்டிங்களே.//

நான் அவரைக் கொஞ்சம் உஷார்ப்படுத்தினேன். அம்புட்டுத்தேன். :-)). என்ன இருந்தாலும் வருங்காலப் பிரதம் மந்தி(ரி)யாக ஆசைப்படுறவர் இல்லியா?

//ஆமா உங்களுக்கு மைனஸ் ஓட்டா?//

போயிட்டுப்போகுதுங்க! இப்படியாவது நம்மளையும் பிரபலமாக்குறாங்களே, அது வரையிலே சந்தோஷம்! :-))

மிக்க நன்றி!!

கபீஷ் said...

தூள்:-))))))))

Unknown said...

என்ன பிரீத்தி கட்டிபுடிச்சா நான் மேட்சுக்கு 10 சிக்ஸ் அடிச்சிருப்பேன்

பித்தனின் வாக்கு said...

இதப்பாரு சேட்டை ஜிம்மாயணம் பார்ட்-4 இன்னமும் வருலை. சீக்கரமா எழுதவில்லை என்றால் கார்ப்ரேஷன் குப்பை லாரி வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொல்கின்றேன் (கொள்கின்றேன்).

settaikkaran said...

கபீஷ் said...

//தூள்:-))))))))//

மிக்க நன்றிங்க! :-)

settaikkaran said...

jaisankar jaganathan said...

//என்ன பிரீத்தி கட்டிபுடிச்சா நான் மேட்சுக்கு 10 சிக்ஸ் அடிச்சிருப்பேன்//

ஹிஹி! நீங்க அடிச்சிருப்பீங்க, ஆனா, எத்தனையோ படத்துலே ப்ரீத்தியைக் கட்டிப்புடிச்சு நடிச்ச ஷாரூக் கானும் மண்ணைக்கவ்விட்டாருங்களே...! :-)

மிக்க நன்றி!!

settaikkaran said...

பித்தனின் வாக்கு said...

// இதப்பாரு சேட்டை ஜிம்மாயணம் பார்ட்-4 இன்னமும் வருலை. சீக்கரமா எழுதவில்லை என்றால் கார்ப்ரேஷன் குப்பை லாரி வரும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொல்கின்றேன் (கொள்கின்றேன்).//

ஆஹா, நீங்களே பத்துநாள் லீவு போட்டுட்டு ஊருக்குக் கிளம்பிட்டீங்க! திரும்பி வாங்க, அதுக்குள்ளாறே ஜிம்மாயணத்தை முடிச்சுப்புடறேன்.

மிக்க நன்றி!!