Tuesday, April 20, 2010

பராசக்தி-ரிப்பீட்டேய்.....!


தமிழன்:

அரசியல் பல உட்டாலக்கிடி வேலைகளைப் பார்த்து இருக்கிறது. பல டுபாக்கூர் அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த பதிவு உட்டாலக்கிடியும் அல்ல; எழுதுகிற நான் டுபாக்கூரும் அல்ல. அரசியலில்வாதிகளிடம் அன்றாடம் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு அல்லல்படுகிற சாதாரண குடிமகன்தான்.

மனிதாபிமானத்தை இழந்தேன்; மனசாட்சியைப் புதைத்தேன்; மருத்துவத்துக்காக வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதைப் பார்த்தும் மவுனம் சாதித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று! இல்லை; நிச்சயமாக இல்லை!

மனசாட்சியைப் புதைத்தேன்- மனசாட்சி வேண்டாம் என்பதற்காக அல்ல; மனசாட்சியை வைத்துக்கொண்டு மலிவு விலைக்கடையில் மளிகை கூட வாங்க முடியாது என்பதற்காக!

வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதை வாளாவிருந்து பார்த்தேன்; அன்னை வேண்டாம் என்பதற்காக அல்ல! இந்த அன்னையை வரவேற்றால் வேறுசில அன்னைகள் வெகுண்டு எழுவார்களே என்பதற்காக!

உனக்கேன் இந்த கையாலாகாத்தனம்? உலகத்தில் யாருக்கும் இல்லாத கையாலாகாத்தனம் என்று கேட்பீர்கள்!

நானே பழக்கப்பட்டுவிட்டேன்;நன்றாகப் பழக்கப்பட்டுவிட்டேன்.

சுயநலம் என்பீர்கள்- என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது. அண்டப்புளுகர்கள் அள்ளி வழங்கும் பணத்துக்காக அவ்வப்போது வாக்குப்போட்டு ஜனநாயகக்கடமையாற்றுகிறோமே, அதைப்போல!

என்னை சொரணைகெட்டவன் என்கிறீர்களே? இந்த சொரணைகெட்டவனின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவனை குப்புறப்போட்டு குமுறியவர்கள் எத்தனை, மல்லாக்கப்போட்டு மிதித்தவர்கள் எத்தனை, நிற்க வைத்து உதைத்தவர்கள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும்.

நாங்கள் நல்லாட்சியைப் பார்த்ததில்லை; நமீதாவின் நடனத்தை நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்திருக்கிறோம். கஞ்சி குடித்ததில்லை; ஜொள்ளு வடித்திருக்கிறோம்.

கேளுங்கள் என் கதையை! எம்மை இடித்தபுளி என்று இகழ்வோரே! திட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்!

தமிழ்நாட்டிலே இந்தப்பாடாவதி மாநிலத்திலே பிறந்தவன் நான். மாநிலத்தில் ஒரு பேச்சு; மத்தியில் ஒரு பேச்சு! தமிழக அரசியல்வாதிகளின் இரட்டைவேடத்துக்கு நானென்ன விதிவிலக்கா?

தில்லி! அவர்களின் வயிறை வளர்த்தது; சிலரை ஆசியப்பணக்காரர்களின் வரிசையில் சேர்த்தது.

கனவு கண்ட தமிழகத்தைக் கண்டேன்; கண்றாவியாக! ஆம், கையாலாகாததாக!

மாநிலத்தின் பெயரோ தமிழ்நாடு! மங்களகரமான பெயர்; ஆனால் டிவியில் கூட தமிழில்லை.

நிமிர்ந்து நின்ற தமிழனின் தலை குனிந்துவிட்டது. கையிலே டாஸ்மாக் பாட்டில்; கண்ணெதிரே சினிமா போஸ்டர்! வீட்டிலே இலவச டிவி! தமிழகம் முடங்கியது; தமிழகத்தோடு நானும் முடங்கினேன்.

தமிழனுக்கு தயவு காட்டியவர் பலர். அவர்களிலே சில தறுதலைகள் அவனது தலையிலே மிளகாய் அரைத்தனர். மரத்தடியில் திருடிவிட்டு பிள்ளைகளுக்கு மாநிலத்தை வடை போல பிய்த்துக் கொடுத்து அழகு பார்த்தனர்.

கள்ளச்சாமியார்களும் தமிழனுக்குக் கருணைகாட்ட முன்வந்தனர். பிரதி உபகாரமாக பக்தைகளோடு மெத்தையிலே வித்தை காட்டினர். அதில் தலையானவன் தான் நித்தி! எங்கள் தலையிலே போட்டான் சுத்தி! முதுகிலே இறக்கினான் கத்தி! காவியின் பெயரால், அதை அணிந்த பாவியின் பெயரால்!

தமிழன் சட்டையைக் கிழித்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்காவது போயிருப்பான். ஆனால், அவனை தன் மீதே கல்லை எடுத்து எறிந்து கொள்ள வைத்தவன் அவன் தான்!

தன் வயிறு பட்டினியில் காய்வதைத் தமிழன் விரும்பவில்லை; மாதத்திற்கு நாலு சினிமா கூட பாராமல் தவிக்க விரும்பவில்லை. அவனே மனசாட்சியைக் கொன்றுவிட்டான். ஒன்றுக்கும் உதவாதத்தை உத்தரத்தில் போடுவது தமிழகத்துக்குப் புதியதல்ல: சிங்கிள் டீக்காகச் சிங்கியடித்த வட்டச்செயலாளர்கள் எல்லாம் சிகையலங்காரம் செய்ய சிங்கப்பூர் போகிறார்கள். மாடுகட்டிப் போரடித்த தமிழனுக்கு மானாட மயிலாட போரடிக்கவில்லை.இது எப்படிக் குற்றமாகும்?

தமிழனுக்கு சொரணை வந்திருந்தால் பீஹாருக்கு ஓடிப்போய் ஐந்து வருடம், உத்திரப்பிரதேசத்துக்கு உருண்டு போய் பத்துவருடம், பாகிஸ்தானுக்கு ஓடிப்போய் பதினைந்து வருடம் - இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை? அதைத் தானா எல்லாரும் விரும்புகிறீர்கள்?

பணபலம் தமிழனை மிரட்டியது; பயந்து ஓடினான்.

ஆள்பலம் மிரட்டியது; மீண்டும் ஓடினான்.

ஆன்மீகம் தமிழனை விரட்டியது.

ஓடினான், ஓடினான் டாஸ்மாக்கின் கவுன்டருக்கே ஓடினான்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்; இலவசமாய் தினமும் பாட்டிலைக் கொடுத்திருக்க வேண்டும் என்று காட்டமாய்த் திட்டுபவர்கள். செய்தார்களா, வாழ விட்டார்களா எம் தமிழரை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

தமிழன்: யார் வழக்குமல்ல! அதுவும் என் வழக்குத்தான்! தமிழனைச் சொரணைகெட்டவன் என்று எழுதுகிறவர்களுக்காக இன்னொரு சொரணைகெட்டவன் பதில் சொல்வதில் என்ன தவறு?

தமிழன் சொரணையில்லாமல் இருப்பது ஒரு குற்றம்; சொரணை வந்தாலும் வராத மாதிரி நடிப்பது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்?

தமிழனை டாஸ்மாக் வாசலில் தத்தளிக்க விட்டது யார் குற்றம்? கடையின் குற்றமா? அல்லது கடையிலே ஊசிப்போன வடையின் குற்றமா?

திரையரங்க வாசலில் தமிழனை நிறுத்தியது யார் குற்றம்? நடிக நடிகையரின் குற்றமா? அல்லது நடிக நடிகையரின் நிகழ்ச்சிகளை அன்றாடம் ஒளிபரப்பும் டிவிகளின் குற்றமா?

அரசியல் என்ற பெயரில் அப்பத்தைப் பங்குபோடும் குரங்குகளை வளர்த்தது யார் குற்றம்? குரங்கின் குற்றமா? அல்லது குரங்கு போல தாவுகிறவர்களுக்கும் கூட்டம் கூட்டமாகப் போய் ஓட்டுப்போடும் வாக்காளர்கள் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும்வரை ஹவுஸ்ஃபுல் போர்டுகளும், பீர் விலையேற்றமும் குறையப்போவதுமில்லை.

இது தான் தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக் கடைக்குப் போனாலும் கிடைக்கிற மொக்கை, அலப்பறை, மப்பில் உளறுகிற தத்துவம்.

65 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Me the first

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பர் சேட்டை.. நல்ல இருக்கு....

பனித்துளி சங்கர் said...

1 ST

பனித்துளி சங்கர் said...

////////தமிழனை டாஸ்மாக் வாசலில் தத்தளிக்க விட்டது யார் குற்றம்? கடையின் குற்றமா? அல்லது கடையிலே ஊசிப்போன வடையின் குற்றமா??//////////////

ஏலே மக்கா இப்ப அங்கே வடை எல்லாம் கிடைக்குதா ?
தெரியாம போச்சே !


நண்பரே கலக்குறீங்க !
சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் . அருமை .

தொடருங்கள் மீண்டும் வருவேன் ஊசிப்போன வடைக்கு ஊசி போட்டு சரிபண்ண .

vasu balaji said...

டாஸ்மாக் போகாமலே கிர்ருனு வருதப்பு:)) சூப்பர்.

சைவகொத்துப்பரோட்டா said...

விளாசி தள்ளிட்டீங்களே!!!

பித்தனின் வாக்கு said...

சேட்டை சும்மா சொல்லக்கூடாது குவாட்டர் போட்டுக் கும்மின மாதிரி குதறித் தள்ளிட்டீங்க. நல்ல பதிவு.

சித்து said...

*/கள்ளச்சாமியார்களும் தமிழனுக்குக் கருணைகாட்ட முன்வந்தனர். பிரதி உபகாரமாக பக்தைகளோடு மெத்தையிலே வித்தை காட்டினர். அதில் தலையானவன் தான் நித்தி! எங்கள் தலையிலே போட்டான் சுத்தி! முதுகிலே இறக்கினான் கத்தி! காவியின் பெயரால், அதை அணிந்த பாவியின் பெயரால்!*/

இதோடு "அதையும் வெட்கமில்லாமல் நாம் கண்டு கழித்தோமே அது யார் குற்றம்?? நித்தியின் குற்றமா?? ரஞ்சியின் குற்றமா?? சன் டிவியின் குற்றமா?? அல்லது சேனல் மாற்றாமல் பார்த்த நம் குற்றமா??" இதையும் சேர்த்திருக்கணும் சேட்டை. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.

மசக்கவுண்டன் said...

மசத்தைரியம்தான் தம்பி. நிச்சயம் ஆட்டோ வர்ற பதிவுதான். சாக்கிரதயா இருந்துக்கோங்க.

பிரபாகர் said...

சேட்டை என்ன சொல்ல!

நகைச்சுவையாய் நடப்பு விஷயங்களை சொல்வதில் உம்மைவிட சிறந்தவர் இந்த பதிவுலகில் இல்லை.... அசத்தலோ அசத்தல்... உங்களை எண்ணி பெருமை அடைகிறேன்... நண்பனாயிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

பிரபாகர்...

Unknown said...

இது கலைஞருக்கு உறைக்குமா. அவரு அடுத்த வாரிச பத்தி கவலைப்படுவார்

Philosophy Prabhakaran said...

சான்சே இல்லைங்க... இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு... இந்தப்பதிவின் மூலம் நீங்கள் பல மைல்கற்களை தாண்டியிருக்கிறீர்கள்... தமனாவைப் பற்றி மட்டும் தான் எழுதுவீர்கள் என்று தவறாக நினைத்திருந்தேன்... தமிழனை பற்றியும் எழுதுவேன் என்று உணர்த்திவிட்டீர்கள்...

உண்மைத்தமிழன் said...

விளாசலுங்கண்ணா..!

அதிலும் அந்த டாஸ்மாக் கதை சூப்பர்..!

Unknown said...

summaa adi pinnittingka raasa suuper- sorry tamil naattula irunthuttu tamilla type panna mudiyaathathu yaar kuRRam!!!!!!!!!!!

ஸ்ரீராம். said...

அட்டகாசம்..சரள நடை..கலக்கல்.

சிநேகிதன் அக்பர் said...

அடிச்சி, தொவைச்சி காயப்போட்டுடிங்க.

என்னத்த சொல்ல.ம்ம்ம்

Sabarinathan Arthanari said...

கலக்கிட்டிங்க சேட்டை :)

Balamurugan said...

சூப்பர். கலக்குங்க.

ராஜ நடராஜன் said...

பராசக்தி!ரிபீட்டேய்.என்கிட்டயேவா?

ராஜ நடராஜன் said...

அகிலமெங்கும் சேட்டையில் தமிழகத்தில்தான் இப்ப எரிமலை போல இருக்குது.

manjoorraja said...

நவீன பராசக்தி வசனம்.... கலக்கல்.

Unknown said...

சேட்டை, சூப்பர்

முகுந்த்; Amma said...

Good one. Continue your good work.

கண்ணகி said...

இளைய பராசக்தி வாழ்க..வாழ்க...அருமை...அருமை..

பொன் மாலை பொழுது said...

அய்யா சாமி திருவாளர் சேட்டை, கொஞ்சம் இந்த பக்கமும் வந்து போறது?
பதிவு நன்றாக உள்ளது. வளரட்டும்

சுதாகர் said...

என்னங்க சேட்டை மப்பு கொஞ்சம் ஓவராயிடிச்சோ....இருந்தாலும் தெளிவாகத்தான் எழுதி இருக்கீங்க....
என்றும் நட்புடன்
சுதாகர்.

Chitra said...

இக்குற்றங்கள் களையப்படும்வரை ஹவுஸ்ஃபுல் போர்டுகளும், பீர் விலையேற்றமும் குறையப்போவதுமில்லை.

இது தான் தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக் கடைக்குப் போனாலும் கிடைக்கிற மொக்கை, அலப்பறை, மப்பில் உளறுகிற தத்துவம்.


...... ada, ada, adada...... super!

puduvaisiva said...

"சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா"
- பாடல் - பராசக்தி.

மின்சாரமே இல்ல தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
மின்சாரமே இல்ல தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – பயிரை
காப்பாத்த காவேரி தண்ணி தாங்க என்றால்
குறுக்க தடுப்பனை கட்டரான் பாருங்க – பயிரை
காப்பாத்த காவேரி தண்ணி தாங்க என்றால்
குறுக்க தடுப்பனை கட்டரான் பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
கா கா கா

:-))

செ.சரவணக்குமார் said...

சூப்பர் நண்பா. தொடர்ந்து இதே போல அடிச்சு ஆடுங்க.

Prasanna said...

உங்க பதிவுல சரக்கு, சைடு டிஷ்ஷு எல்லாமே கிடைக்குது :))

அன்புடன் மலிக்கா said...

////////தமிழனை டாஸ்மாக் வாசலில் தத்தளிக்க விட்டது யார் குற்றம்? கடையின் குற்றமா? அல்லது கடையிலே ஊசிப்போன வடையின் குற்றமா?

ஏன்ப்பு ஏன் ஏன் இப்புடியெல்லாம்.

நீங்க உங்காந்து யோசிக்கல ஓடிண்டே யோசிச்சேலா. தாங்கமுடிய சேட்டை.

settaikkaran said...

பட்டாபட்டி.. said...

//சூப்பர் சேட்டை.. நல்ல இருக்கு....//

டபுள் தேங்க்ஸ் அண்ணே! அட்டெண்டண்ஸ் போட்டதுக்கும், அப்புறமாக் கருத்துச் சொன்னதுக்கும்....! :-)

settaikkaran said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//ஏலே மக்கா இப்ப அங்கே வடை எல்லாம் கிடைக்குதா ? தெரியாம போச்சே !//

யாருக்குத் தெரியும், முன்னே பின்னே போயிருந்தாத் தானே...? (மெய்யாலுமே...!)

//நண்பரே கலக்குறீங்க ! சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் . அருமை .//

இரட்டிப்பு நன்றிகள், முண்டியடித்துக்கொண்டு வந்து கருத்துத் தெரிவித்ததற்கு....! :-))

//தொடருங்கள் மீண்டும் வருவேன் ஊசிப்போன வடைக்கு ஊசி போட்டு சரிபண்ண .//

வாங்க வாங்க, ஊசியை நல்லா ஸ்டெரிலைஸ் பண்ணிட்டு வாங்க! :-)))

settaikkaran said...

வானம்பாடிகள் said...

//டாஸ்மாக் போகாமலே கிர்ருனு வருதப்பு:)) சூப்பர்.//

வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கியது போலிருக்கிறது ஐயா. மிக்க நன்றி!!

settaikkaran said...

சைவகொத்துப்பரோட்டா said...

//விளாசி தள்ளிட்டீங்களே!!!//

ஹிஹி! மிக்க நன்றிண்ணே!! :-)

settaikkaran said...

பித்தனின் வாக்கு said...

//சேட்டை சும்மா சொல்லக்கூடாது குவாட்டர் போட்டுக் கும்மின மாதிரி குதறித் தள்ளிட்டீங்க. நல்ல பதிவு.//

எல்லாம் ஒரு ஃபுளோவிலே வர்றது தானுங்க! ஊக்கமூட்டும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

சித்து said...

//இதோடு "அதையும் வெட்கமில்லாமல் நாம் கண்டு கழித்தோமே அது யார் குற்றம்?? நித்தியின் குற்றமா?? ரஞ்சியின் குற்றமா?? சன் டிவியின் குற்றமா?? அல்லது சேனல் மாற்றாமல் பார்த்த நம் குற்றமா??" இதையும் சேர்த்திருக்கணும் சேட்டை. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.//

எங்கெங்கு பார்க்கினும் குற்றம் தான். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது போய், சுற்றமெங்குமே குற்றமாகி விட்டது போலிருக்கிறது. :-((

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :-))

settaikkaran said...

மசக்கவுண்டன் said...

//மசத்தைரியம்தான் தம்பி. நிச்சயம் ஆட்டோ வர்ற பதிவுதான். சாக்கிரதயா இருந்துக்கோங்க.//

அப்படியா சொல்லுறீங்க கவுண்டரே? பயமாயிருக்குதே...! :-((

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

பிரபாகர் said...

//சேட்டை என்ன சொல்ல!

நகைச்சுவையாய் நடப்பு விஷயங்களை சொல்வதில் உம்மைவிட சிறந்தவர் இந்த பதிவுலகில் இல்லை.... அசத்தலோ அசத்தல்... உங்களை எண்ணி பெருமை அடைகிறேன்... நண்பனாயிருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...//

நண்பரே, ஆரம்பம் முதலே என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து, பல விடயங்கள் குறித்து என்னையும் பதிவு எழுத உற்சாகப்படுத்தியவர்களில் நீங்கள் முதன்மையானவர். அதற்காகவும், இப்பதிவுக்கான உங்களது கருத்துக்காகவும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

settaikkaran said...

jaisankar jaganathan said...

//இது கலைஞருக்கு உறைக்குமா. அவரு அடுத்த வாரிச பத்தி கவலைப்படுவார்//

சேட்டைக்காரனின் பதிவு என்ன அவ்வளவு வலிமை வாய்ந்ததா? இது ஒரு சாமானியனின் புலம்பல் தானே? மிக்க நன்றி! :-)

settaikkaran said...

philosophy prabhakaran said...

//சான்சே இல்லைங்க... இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவு... இந்தப்பதிவின் மூலம் நீங்கள் பல மைல்கற்களை தாண்டியிருக்கிறீர்கள்... தமனாவைப் பற்றி மட்டும் தான் எழுதுவீர்கள் என்று தவறாக நினைத்திருந்தேன்... தமிழனை பற்றியும் எழுதுவேன் என்று உணர்த்திவிட்டீர்கள்...//

இயல்பில் நாம் எல்லாருமே சாமானியர்கள் தானே? அவ்வப்போது நமது நகைச்சுவை முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு, உறுத்தலோடு நம்மைச் சுற்றி நடப்பவற்றை கவனிக்கிறோம் அல்லவா? அதன் ஒரு வெளிப்பாடே இது! கருத்துக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//விளாசலுங்கண்ணா..!

அதிலும் அந்த டாஸ்மாக் கதை சூப்பர்..!//

உங்கள் வருகையும் பின்னூட்டமும் எனக்குப் பன்மடங்கு அதிக ஊக்கம் தருகிறது. அடிக்கடி வருகை புரியுங்கள்!
கருத்துக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

bahurudeen said...

//summaa adi pinnittingka raasa suuper- sorry tamil naattula irunthuttu tamilla type panna mudiyaathathu yaar kuRRam!!!!!!!!!!!//

தமிழ்நாட்டில் இருந்தும் தமிழில் பின்னூட்டம் போட முடியாதது யார் குற்றம்? கணினியின் குற்றமா அல்லது விசைப்பலகையின் குற்றமா? அல்லது பழக்கத்தோஷத்தின் குற்றமா? :-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

ஸ்ரீராம். said...

//அட்டகாசம்..சரள நடை..கலக்கல்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அக்பர் said...

//அடிச்சி, தொவைச்சி காயப்போட்டுடிங்க.

என்னத்த சொல்ல.ம்ம்ம்//

ஏதோ நம்மாலே முடிஞ்சது...இவ்வளவு தான், எழுதியாச்சு! :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

Sabarinathan Arthanari said...

//கலக்கிட்டிங்க சேட்டை :)//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

பாலமுருகன் said...

//சூப்பர். கலக்குங்க.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

ராஜ நடராஜன் said...

//பராசக்தி!ரிபீட்டேய்.என்கிட்டயேவா?//

ஏன்? என்னாச்சு? நீங்க தான் பராசக்தியிலே......! சரி விடுங்க, சொல்லவா போறீங்க?

//அகிலமெங்கும் சேட்டையில் தமிழகத்தில்தான் இப்ப எரிமலை போல இருக்குது.//

எரிமலையாவது பரங்கிமலையாவது? இதையும் தாண்டிப்போயிருவோம் பார்த்திட்டேயிருங்க! :-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

மஞ்சூர் ராசா said...

//நவீன பராசக்தி வசனம்.... கலக்கல்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே! :-)

settaikkaran said...

முகிலன் said...

//சேட்டை, சூப்பர்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

முகுந்த் அம்மா said...

//Good one. Continue your good work.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

கண்ணகி said...

//இளைய பராசக்தி வாழ்க..வாழ்க...அருமை...அருமை..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-) அடிக்கடி வாங்க!

settaikkaran said...

கக்கு - மாணிக்கம் said...

//அய்யா சாமி திருவாளர் சேட்டை, கொஞ்சம் இந்த பக்கமும் வந்து போறது?//

பார்த்தீங்களா, ஒவ்வொரு நாளும் தவறாம மறக்குறதே பொழப்பாப் போச்சுங்க! கண்டிப்பா வாறேன்!

// பதிவு நன்றாக உள்ளது. வளரட்டும்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

சுதாகர் said...

//என்னங்க சேட்டை மப்பு கொஞ்சம் ஓவராயிடிச்சோ....//

ஐயையோ, பச்சப்புள்ளையைப் பார்த்து என்னா கேள்வி கேட்டுப்புட்டீங்க? அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க!


//இருந்தாலும் தெளிவாகத்தான் எழுதி இருக்கீங்க....//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

♠புதுவை சிவா♠ said...

// :-))//

என் பங்குக்கு வசனம் எழுதினா, நீங்க ஒரு முழுநீளப்பாட்டையே போட்டு தூள் கிளப்பிட்டீங்களே! தமிழ்மணத்தில் உங்களது பெயரை அடிக்கடி, நிறையப் பார்த்திருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-) அடிக்கடி வாங்க!

settaikkaran said...

Chitra said...

//...... ada, ada, adada...... super!//

தொடரும் உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

செ.சரவணக்குமார் said...

//சூப்பர் நண்பா. தொடர்ந்து இதே போல அடிச்சு ஆடுங்க.//

ஆதரவுக்கு நீங்கெல்லாம் இருக்கும்போது என்ன கவலை? ஆடிற வேண்டியது தான்.

தொடரும் உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

பிரசன்னா said...

//உங்க பதிவுல சரக்கு, சைடு டிஷ்ஷு எல்லாமே கிடைக்குது :))//

ஹூம், அனுபவம் பேசுதோ? :-))))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

அன்புடன் மலிக்கா said...

//ஏன்ப்பு ஏன் ஏன் இப்புடியெல்லாம்.

நீங்க உங்காந்து யோசிக்கல ஓடிண்டே யோசிச்சேலா. தாங்கமுடிய சேட்டை.//

ஹிஹி! நான் எப்போ யோசிப்பேன், எப்படி யோசிப்பேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, யோசிக்க வேண்டிய விஷயத்தை கரெக்டா யோசிச்சிருவேன். :-))

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

மங்குனி அமைச்சர் said...

//ஓடினான், ஓடினான் டாஸ்மாக்கின் கவுன்டருக்கே ஓடினான். ///


சேட்ட ரொம்ப டச்சிங்கான சீனு சேட்ட , எனக்கு கண்ணு கலகிருச்சு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பதிவு..

படிக்கறவங்க, அரசியல்வியாதிங்கன்னு எல்லாரையும் போட்டு வறுத்து எடுத்துட்டீங்க.

அஷீதா said...

velai alu kaaranamaa konjam lateaa padikka vendiyadhaa pochu.
indha padhivum sama kalakkal...elloraiyum thovachu edukireenga :))

ரோஸ்விக் said...

மானங்கெட்டுப் போயி நானும் அந்த கூண்டுலதான் நிக்கிறேன்... இந்தப் பக்கம் பாருங்கண்ணே... இன்னும் கொஞ்சம் திரும்புங்க... ஊதா சட்டை போட்டுகிட்டு... ஆங்... நான் தான் நான் தான்...

வெக்கமா இருக்குண்ணே... வெக்கமா இருக்கு...

settaikkaran said...

ரோஸ்விக் said...

//மானங்கெட்டுப் போயி நானும் அந்த கூண்டுலதான் நிக்கிறேன்... இந்தப் பக்கம் பாருங்கண்ணே... இன்னும் கொஞ்சம் திரும்புங்க... ஊதா சட்டை போட்டுகிட்டு... ஆங்... நான் தான் நான் தான்...//

அப்படீன்னா, அடுத்த கேசு உங்களுது தானா? நல்லதாப்போச்சு, எனக்கும் ஒரு துணையாச்சு!:-))

//வெக்கமா இருக்குண்ணே... வெக்கமா இருக்கு...//

இது என்னாது? அப்படீன்னா, உடனடியா ஒரு பதிவு போட்டுருங்க என்னை மாதிரியே! கடமை தீர்ந்தது. அம்புட்டுத்தேன்! :-)

மிக்க நன்றிண்ணே!

raja said...

மிக பிரமாதமாக யோசித்திருக்கீறிர்கள்.. வாழ்த்துக்கள்..இதுகள(தமிள்மக்கள்) எவ்ளோதான் செருப்பால அடிச்சாலும் வலிக்காத மாறியே இருக்குங்க.. ஏன்னா இவங்க.. ரொம்ப..நல்ல..