நம்ம பிரபாகர் "எனக்குப் பிடித்த சினிமாக்கள்," என்று ஒரு இடுகை போட்டு, அதை என்னையும் தொடரச் சொல்லியிருக்காருங்க! இதுக்கு சில நிபந்தனைகள் வேறே போட்டிருக்காரு...!
நிபந்தனைகள்
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே (தப்பிச்சேன்....!)
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும். ( சபாஷ்! நான் ஜக்குபாய் படம் வர்றதுக்கு முன்னாடியே ’நெட்’டிலே பார்த்தவனாச்சே!)
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட) (அடிவயித்திலேயே கைவச்சுட்டாரே! ஒரு ஷகீலா படத்தைப் பத்திக் கூட எழுத முடியாமப் போச்சே!)
சரி, சமாளிக்க வேண்டியது தான்....! பொதுவா, எனக்குப் பிடிச்ச திரைப்படமுன்னா எல்லாரும் டைரக்டருங்க, இசையமைப்பாளருங்க, கதாநாயகருங்களைப் பத்தியே பெரும்பாலும் எழுதறாங்க! இது பெரிய ஆணாதிக்க சதின்னு தோணுது! (பாருங்க, தாய்க்குலத்தின் பிரதிநிதிகளின் அரங்கு நிறைந்த கரகோஷத்தைக் கேளுங்க!) அதுனாலே, எனக்குப் பிடிச்ச பத்து படங்களிலே எனக்குப் பிடிச்ச பத்து கதாநாயகிகளைப் பத்தி எழுதப்போறேன்.
நிபந்தனைகள்
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே (தப்பிச்சேன்....!)
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும். ( சபாஷ்! நான் ஜக்குபாய் படம் வர்றதுக்கு முன்னாடியே ’நெட்’டிலே பார்த்தவனாச்சே!)
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட) (அடிவயித்திலேயே கைவச்சுட்டாரே! ஒரு ஷகீலா படத்தைப் பத்திக் கூட எழுத முடியாமப் போச்சே!)
சரி, சமாளிக்க வேண்டியது தான்....! பொதுவா, எனக்குப் பிடிச்ச திரைப்படமுன்னா எல்லாரும் டைரக்டருங்க, இசையமைப்பாளருங்க, கதாநாயகருங்களைப் பத்தியே பெரும்பாலும் எழுதறாங்க! இது பெரிய ஆணாதிக்க சதின்னு தோணுது! (பாருங்க, தாய்க்குலத்தின் பிரதிநிதிகளின் அரங்கு நிறைந்த கரகோஷத்தைக் கேளுங்க!) அதுனாலே, எனக்குப் பிடிச்ச பத்து படங்களிலே எனக்குப் பிடிச்ச பத்து கதாநாயகிகளைப் பத்தி எழுதப்போறேன்.
10. மின்னலே
கௌதம் மேனனுக்கு ஜே!
ஜில்லுன்னு மழைபெய்து கொண்டிருக்கையிலே, டெலிபோன் பூத்துக்குக்கு வெளியிலே, சின்னப்பசங்களோட சேர்ந்துக்கிட்டு மழைத்தண்ணீரைக் காலாலே அளைஞ்சு விளையாடுறா மாதிரி கதாநாயகியை அறிமுகப்படுத்தின விதமிருக்கே! அது கவிதை!
ரீமா சென்! பெரிய அழகுன்னெல்லாம் சொல்ல முடியாது. (கொஞ்சம் துணிச்சல் இருக்கிறவங்க அழகேயில்லேன்னு கூட சொல்லுவாங்க!) இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டுத்தான் படத்துலேயே ரீமாவுக்கு நிறைய மேக்-அப், குறைச்சலான குளோஸ்-அப்புன்னு சமாளிச்சிருப்பாங்க! ஆனா, ரீமாவைப் பார்த்ததும் பக்கத்து வூட்டுப்பொண்ணை, எதிர்த்த வூட்டுப்பொண்ணைப் பார்க்கிற ஃபீலிங் வராம, சென்னைக்கு வந்தபுதுசுலே மத்யகைலாஷ் ஸ்டாப்பு கிட்டே முதமுதலா ஜீன்ஸும் சட்டையும் போட்டுக்கினு நின்ன ஒரு பொண்ணைப் பார்த்தபோது ஏற்பட்ட பிரமிப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான்.
இன்னும் சொல்லப்போனா, ’மின்னலே’ படத்துலே ரீமாவோட தோழியா வர்ற அந்த உயரமான பொண்ணு சில காட்சிகளிலே கதாநாயகியை விடவும் அழகாத் தெரிஞ்சாங்க! (அவங்க யாரு, இப்போ எங்கே இருக்காங்க?)
படத்துலே வர்ற மாதவனோட நம்மளை அடையாளம் காணலாம். ரீமா சென் மாதிரி பொண்ணுங்களும் அசாதாரணமானவங்க கிடையாது. அது தான் அந்தப் படத்தோட வெற்றிக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். "வசீகரா" பாட்டுக் கேட்டா, டாஸ்மாக்கு போயிட்டு வந்த எஃபெக்டு கிடைக்குதா இல்லியா?
ரீமா அக்கா, எவ்வளவு வேண்ணா மேக்-அப் போட்டுக்கோங்க- அது உங்க இஷ்டம்! ஆனா, அதிகமா குளோஸ்-அப்புலே முகத்தைக் காட்டாதீங்க; பார்க்கிறவங்களுக்குக் கஷ்டம்!
9. அந்நியன்
கிராமத்துலே பொறந்து வளர்ந்தவனுக்கு, பட்டணவாழ்க்கையிலே அதிகமாப் பார்க்க முடியாத சங்கதிங்க பாவாடை-தாவணி தான்! (பின்னே, இதுக்குன்னு தினமும் நங்கநல்லூர், மயிலாப்பூர் போகவா முடியும்?) "ஜெயம்" படம் முழுக்க பாவாடை-தாவணியிலே வலம்வந்த சதா, "அந்நியன்" படத்துலே விதவிதமான காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு வந்ததுலே என்னோட அப்பள இதயம் நொறுங்கிப்போச்சுங்க! "அய்யங்காரு வீட்டு அழகே," பாட்டுலே தெரியுற நளினம் வேறே; "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாட்டுலே காட்டுற வேகம் வேறே; "அண்டங்காக்காய் கொண்டைக்காரி," பாட்டுலே இருக்கிற துள்ளலே அலாதி! ரெமோ ரோஜாப்பூ அனுப்புற காட்சியிலே டிப்பிக்கல் நடுத்தர வர்க்கப் பெண்மாதிரியே, குளிச்சு முடிச்ச ஈரத்தலையிலே துணியைச் சுத்திட்டு வந்து நிற்குறபோது, "வாவ்"ன்னு மனசுக்குள்ளேருந்து ஒரு கூச்சல் வந்தது. திருவையாறு ஆராதனைக்குப் போகிற அந்த ரயில்காட்சிகள் "அந்நியன்" படத்திலேயே மிகவும் மென்மையான, இளமையான பகுதி! அதே மாதிரி இறுதிக்காட்சியிலே திருமணம் முடிஞ்சு ரயிலில் போகிறபோது, திருவல்லிக்கேணியிலேருந்து புதுசாக் கல்யாணமாகி வெளியூர் போகிற ஒரு பெண்ணைப் பார்க்கிற நிறைவு -சதாவைப் பார்த்தபோது வந்திச்சு! சும்மா டூயட் பாடி, ஆடிட்டிருக்காம பயம்,அருவருப்பு,பரிதாபம்,சந்தோஷம்னு பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துற ஒரு கதாபாத்திரம்! "அந்நியன்" படத்தை ஷங்கருக்காக ஒருவாட்டியும், விக்ரமுக்காக ரெண்டுவாட்டியும், சதாவுக்காக மூணுவாட்டியும் பார்த்தேன். சதாப்பொண்ணு! ’தல’யே போனாலும் ’திருப்பதி’ மாதிரி படங்களிலே நடிக்காதீங்க!
8. சச்சின்
’சந்திரமுகி’ படத்துக்கு டிக்கெட் கிடைக்காமப் போய்ப் பார்த்தபடம். விஜய் ரொம்ப நாளைக்கப்புறம் இயல்பா நடிக்க முயற்சி பண்ணின படம். வடிவேலு காமெடி சூப்பர்! ஆனா, இந்தப் படத்திலேயே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம், வேறேன்ன? ஜெனிலியா தான்! பேருலே என்னங்க இருக்கு? ஹரிணியோ ஜெனிலியாவோ, க்யூட்!
அந்த மழைக்காட்சியிலே விஜய் மயங்குனதுலே என்ன ஆச்சரியம் இருக்கு? அவ்வளவு அழகாப் படம்பிடிச்ச ஒரு காட்சி அது. கண்களிலே அலாதியான ஒரு துறுதுறுப்பு! அந்த அடர்த்தியான புருவம் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டுன்னு தோணுது. ஒன்றிரெண்டு காட்சிகள் தவிர, இந்தப் படத்துலே ஜெனிலியா போட்டுக்கிட்டு வர்ற காஸ்ட்யூம் பாந்தமா, கல்லூரி மாணவி கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாயிருந்தது. உணர்ச்சிகரமான நடிப்பெல்லாம் அம்மணிக்கு வராதுங்கிறது உண்மைதான். (யாருக்கு வேணும்?). திரையிலே பார்த்ததும் மனசுக்குள்ளே பட்டாசு கொளுத்திப்போட்ட மாதிரி ஒரு பரபரப்பை ஏற்படுத்துற அழகான, கொஞ்சம் குழந்தைத்தனமான முகம்! (இந்தப் படத்துலே பிபாஷா பாசுவுக்குப் பதிலா வேறே யாரைப்போட்டிருந்தாலும் கூட ரெண்டு வாட்டி பார்த்திருப்பேன்- ஜெனிலியாவுக்காகவே!
குருவி தலையிலே பனங்காயை வச்சா மாதிரி, ஜெனிலியாவுக்கெல்லாம் சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி கதாபாத்திரத்தைக் கொடுக்காதீங்க! அம்மணி பொம்மை மாதிரி வந்திட்டுப் போறது தான் நல்லது!
7. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
கமல்,பிரகாஷ்ராஜ் ரெண்டு பேரும் தூள் கிளப்பின ஒரு படத்துலே, அதிகம் வாய்ப்பில்லாம ஃபுல் மீல்ஸ் தட்டுலே ஓரமா இருக்கிற ஊறுகாய் மாதிரி வந்து போற கதாபாத்திரம் சினேகாவுக்கு! கமலுக்கு ஜோடிங்கிறதுனாலேயே என்னமோ, இந்தப் படத்துலே முன்னைக்காட்டிலும் இளமையா இருந்தாங்க! டாக்டர் மாதிரி வரும்போதும் சரி, ’பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு,’ பாட்டிலேயும் சரி - சினேகா பளிச்சின்னு இருந்தாங்க! அளவோட சிரிச்சு, அவஸ்தைப்பட வைக்காம அருமையாக நடிச்ச ஒரு படம். காஸ்ட்யூம் டிசைனர் யாராயிருந்தாலும் சரி, கனவு சீனுலே கூட கண்ணியமா உடையலங்காரம் பண்ணி, சினேகாவைப் படம் முழுக்க ஒரு அழகுச் சித்திரமாக் காண்பிச்சதுக்கே பாராட்டணும். "சிரிச்சுச் சிரிச்சு வந்தா சீனா தானாடோய்," பாட்டு கூட சினேகாவுக்கு அப்புறம் தான் எனக்கு! புடவை சினேகாவுக்குப் பொருந்துறா மாதிரி வேறே யாருக்கும் பொருந்துதான்னு ஒப்பிடக்கூட எனக்கு விருப்பமில்லை. சினேகா அத்தை! அளவோட திறந்து மூடறதுக்குப் பேருதான் வாய் அளவுக்கதிகமா திறந்தா அதுக்குப் பேரு கால்வாய்....!
6. சண்டக்கோழி
’ரன்’ படத்துலே பெருசா ஒண்ணும் வாய்ப்பில்லேங்கிறதுனாலேயோ, ஆள் ரொம்பவே குள்ளமா இருக்காங்குறதுனாலேயோ, மீரா ஜாஸ்மினை நான் சீரியஸா எடுத்ததே கிடையாதுங்க!
ஆனா, நம்ம ரூம்-மேட் சுரேந்திரன் கூட ஏசியாநெட்டுலே ரெண்டு மூணு மலையாளப்படம் பார்த்ததுக்கப்புறம், மீரா ஜாஸ்மின் மேலே ஒரு பெரிய மரியாதையே வந்திருச்சு! அதுலேயும் "அஷுவிண்டே அம்மா,"ன்னு ஒரு படத்திலே, கிளைமேக்ஸிலே ஊர்வசியும், மீரா ஜாஸ்மினும் அவங்க அழாம நம்மளையெல்லாம் அழ வச்சிருவாங்க! சண்டைக்கோழியிலே குறும்பு மட்டுமில்லே, குணச்சித்திரத்தையும் பலவிதங்களிலே வெளிப்படுத்துற கதாபாத்திரம்! பாவாடை தாவணியிலே அழகா பொம்மை மாதிரி தெரிஞ்சதோட, சின்னச் சின்ன முகமாறுபாடுகளைக் காட்டி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பாங்க! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னுறதுக்கு மீரா ஜாஸ்மின் ஒரு நல்ல உதாரணம். லிங்குசாமி,விஷால்,ராஜ்கிரண்-ன்னு "சண்டக்கோழி" படத்திலே பல பாராட்டத்தக்க விஷயங்கள் இருந்தாலும், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், யாரை பாவாடை தாவணியிலே பார்த்தாலும் மீரா ஜாஸ்மின் ஞாபகம் வந்ததென்னமோ உண்மைதான்.
செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாம, அம்மணி கூப்பிடுற படத்துலேயெல்லாம் நடிச்சு "மரியாதை"யைக் கெடுத்துக்கிறாங்களேங்கிறது தான் ஒரே குறை!
5. சித்திரம் பேசுதடி
கானா பாட்டுன்னா எனக்கு உசுரு! "வாளமீனுக்கும் வெலாங்குமீனுக்கும் கல்யாணம்," பாட்டை எஃ.எம்மிலே கேட்டதுமே, படத்தைப் பார்க்கணுமுன்னு முடிவு பண்ணிட்டேனில்லா? ஆனா, படத்தைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே கண்ணைப் பறிச்சது பாவனா தான். அதிக ஒப்பனையில்லாமலே, படத்துலே எல்லாக் காட்சிகளிலும் ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க! முதல்லே அந்த தெத்துப்பல்லு கொஞ்சம் உறுத்திச்சு; அப்புறம் பாவனாவோட சிரிப்பழகோட சூத்திரமே அதுதான்னு புரிஞ்சதும், சரண்டராயிட்டேன்! பாவனாவைப் பார்த்தா கண்டிப்பா, இந்த மாதிரி ஒரு முகத்தை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கோமோன்னு ஒரு கேள்வி வரும் எனக்கு! (அப்புறம் தான், அந்தப் படத்தை நான் ஏற்கனவே பார்த்திட்டேன்கிறது ஞாபகத்துக்கு வரும்!) சித்திரம் பேசுதடி படத்துலே பாவனாவுக்கு அதிக வாய்ப்பில்லே! ஆனாலும், அந்தப் படத்தின் வெற்றிக்கு பாவனாவோட ஹோம்லி அழகு ஒரு முக்கியமான காரணம்கிறதை யாராலாவது மறுக்க முடியுமா? (ப்ளீஸ்..மறுத்திடாதீங்க!)
4. ஐயா
"ஒருவார்த்தை கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்,"- இந்தப் பாட்டை எங்கே, எப்போ கேட்டாலும் எனக்கு நயன்தாரா ஞாபகத்துக்கு வருவாங்க! இந்தப் படத்தைப் பார்த்திட்டு வெளியே வந்தபோது சுரேந்திரன் சொன்னது: "தமிழ்சினிமாவுக்கு அடுத்த அம்பிகா!" (இப்போ அனுராதா மாதிரி ஆயிட்டாங்கன்னுறது வேறே விஷயம்!)
பாவாடை தாவணிக்காகவே ஒரு கதாநாயகியைப் பிடிச்சதுன்னா, அதுலே "ஐயா"வும் உண்டு. குறிப்பா "ஒரு வார்த்தை..." பாட்டுலே முகத்திலே நிறையவே வெகுளித்தனம் தெரியும். ஆரம்பக்காட்சிகளிலே கிராமத்துப் பெண்களுக்கே உரித்தான அந்த குறும்பு, நக்கல் எல்லாத்தையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருப்பாங்க! தலைநிறைய பூவும், நெற்றியிலே பெரிய பொட்டும், வெகுளிச்சிரிப்புமா ஒரு தென்பாண்டிப் பெண்ணை அப்படியே கண் முன்னாலே கொண்டுவந்து நிறுத்தியிருப்பாங்க!
ஆனா, இப்போ...? ஹூம்!
ஐயா, யாரடி மோகினி போன்ற படங்களில் நான் பார்த்ததே நயன்தாரா! அடுத்தடுத்து நடிக்கிற படங்கள் எதுவும் பயன்தாரா....!
3. கிரீடம்
தல தலதான்னு நிரூபிச்ச இன்னொரு படம் இது!
த்ரிஷாவை இந்தப் படத்துலே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னா காரணம் தாவணின்னு இதுக்குள்ளே கண்டுபிடிச்சிருப்பீங்களே...?
பிள்ளையாரை தல திருடுற காட்சி, அந்த மோட்டார்சைக்கிள் ஸ்டேண்டு காட்சி, தண்ணித்தொட்டி காட்சி எல்லாமே த்ரிஷாவின் நகைச்சுவை, குறும்பு போன்று அதிகம் வெளிப்படுத்தப்படாத பரிமாணங்களை வெளிப்படுத்தின படம்! மிக மிக அழுத்தமான, இறுக்கமான ஒரு கதை கொண்ட இந்தப் படத்துலே த்ரிஷா ஒரு பெரிய ஆறுதல்! இந்தப் படத்தோட டெம்போவை விவேக் காமெடி குறைச்சிருச்சோன்னு எனக்கு ஒரு சந்தேகமுண்டு; ஆனா, விவேக்கோட மனைவியா வந்தாங்களே, அவங்க சில காட்சிகளிலே பார்க்க சூப்பராயிருந்தாங்க...ஹிஹி! நடிக்கிறதுக்கும் த்ரிஷாவுக்கு இந்தப் படத்துலே ஓரளவு வாய்ப்பிருந்ததுனாலே, இது எனக்குப் பிடித்த தல படங்களில் ஒன்று. எனக்குப் பிடித்த த்ரிஷா படங்களிலும் ஒன்று. அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும் ஊஹூம்! எனக்கு வேண்டாம், அங்கே த்ரிஷா படம் ரிலீஸ் ஆகாதே!
2. கஜினி
"சிம்ரன்" கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனதும் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. அவ்வ்வ்வ்! அதை நிரப்புறதுக்கு அசின் தான் சரின்னு நான் நினைக்கிறேன். (தமன்னா தான் நிரப்பப்போறாங்கன்னு இயக்குனர் ஷங்கர் சொல்லியிருக்காரம்; அவரு கிடக்குறாரு, சினிமாவைப் பத்தி அவருக்கு என்ன தெரியும்?)
கஜினியிலே அவங்களோட கதாபாத்திரமே ரொம்ப அழகா வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த அழகுக்கு அழகு சேர்த்தது அசின் தான். நடிப்பாகட்டும்; நடனமாகட்டும் - இல்லாட்டி அப்பப்போ ஆளைப் புடிச்சுத்தள்ளுற அந்த சிரிப்பாகட்டும்....சூப்பர்!
ஒருமாலை இளவெயில்நேரம்- பாட்டின்போது நான் மெய்மறந்து விசிலடிச்சிட்டேன்! சுட்டும் விழிச்சுடரே பாட்டுலே வர்ற நடன அசைவுகள் சூர்யா செய்யும்போது வேடிக்கையாகவும், அசின் செய்தபோதும் ரொம்ம்ப அழகாகவும் தெரிஞ்சது....
கஜினி - இந்தியையும் பார்த்தேன்-அசினுக்காகவே!
அசின் அசின் தான்! :-))
1.சிவாஜி
மேட்டருக்கு வந்திட்டேன் பார்த்தீங்களா? :-)))
ஸ்ரேயாவைப் பத்தி நிறைய எழுதிட்டேன்கிறதுனாலே இந்தப் பதிவுலே அதிகம் எழுத வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க! ’சிவாஜி’ படத்துலே ஸ்ரேயாவோட விதவிதமான காஸ்ட்யூம்களைப் பார்க்கிறதுக்காகவே பலதடவை பார்த்தேன்! ஒரு தடவை தமிழ் சிவாஜிக்கு டிக்கெட் கிடைக்காம தெலுங்கு சிவாஜி பார்த்தேன். அப்போ தான் ஒரு விஷயம் தெரிஞ்சுது! நீங்களும் ’சிவாஜி’ படக்காட்சிகளை டிவியிலே போட்டா கவனியுங்க! ’சிவாஜ்’ தமிழ்ப்படத்துலே ஸ்ரேயா மட்டும் தெலுங்கு வசனத்துக்கு ஏற்றா மாதிரி வாயசைச்சிருப்பாங்க! இதைக் கண்டுபிடிச்ச எனக்கு ஏதாவது விருது கொடுக்கிறதா இருந்தா தனிமடல் போட்டுத் தெரிவிக்கலாம்.
பாவாடை-தாவணியிலிருந்து(ஐயோ, இதை விட மாட்டேங்கிறானேன்னு முணுமுணுக்காதீங்க!), மாடர்ன் டிரஸ்லே என்னென்ன வகையுண்டோ,அத்தனையும் போட்டு ஸ்ரேயா கலக்கின படம். நான் என்ன சொல்றது, விஜய் டிவியிலே மதனே சொல்லிட்டாரு:" இந்தப் படத்துலே கதாநாயகியின் அழகை வெளிப்படுத்திய மாதிரி ஷங்கர் இதுக்கு முன்னாடி எந்தக் கதாநாயகியையும் வெளிப்படுத்தலே!"
ஸ்ரேயா, இன்னும் என்னோட ஈ-மெயிலுக்கு பதில் வர்லே! க்யா பாத் ஹை....?
இந்தத் தொடர்பதிவை யார் வேண்ணாலும் தொடரலாம். ஆனா, குறிப்பா இவங்க மூணு பேரும் கண்டிப்பாத் தொடர்ந்தே ஆகணும்.
விஸ்வாமித்திரன்
மசக்கவுண்டன்
கொன்றல்காற்று
பின்னே என்னங்க? இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத் தான் உண்டு. என்னா நான் சொல்றது?
(இதுக்கும் இவங்க மசியலேன்னா, இன்னும் வலைப்பதிவே ஆரம்பிக்காதவங்களைத் தான் அடுத்த தொடர்பதிவுக்குக் கூப்பிடுவேன்னு இந்த நேரத்தில் எச்சரிக்கிறேன்...ஆமா...!)
Tweet |
34 comments:
///////விஸ்வாமித்திரன்
மசக்கவுண்டன்
கொன்றல்காற்று
பின்னே என்னங்க? இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத் தான் உண்டு. என்னா நான் சொல்றது?/////////
ஏலே மக்கா பார்த்துல உறங்குற சிங்கங்களை குச்சிய வச்சு சொரண்டுரீரு . அம்புட்டுதான் சொல்லுவே .
மீண்டும் வருவேன்ல .
படத்தேர்வு மிக அருமை.
அதை விட ஜொள்ளு ஆறா ஓடுது. ஸ்கீரினைத்தாண்டியும்..
கலக்குறீங்க சேட்டை.
இதே டேஸ்ட் தான் எனக்கும்.
சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பா. உங்களைப் பற்றி நண்பர் சிங்கை பிரபாகர் நிறைய சொன்னார். உங்கள் எழுத்துக்கள் அவர் குறிப்பிட்டதைப் போலவே மிக அருமை.
ஹெவி மேக்கப் அழகா இருப்பது ரீமாவுக்கு மட்டும் தாங்க. அவங்க அழகே இல்லனு சொன்ன உங்களுக்கு (கல்யாணம் ஆகலன்னா) கேள் பிரண்டு கிடைக்காது என்று ரீமா மன்றம் சார்பாக சாபம் விடுகிறோம். ஜோ கூட ரீமாவுக்கு அடுத்த படி தானுங்கோய்.
சதாவுக்கு எந்த ட்ரெசும் அழகாயிருக்கும். சாதாரண ஜீன்ஸ் குர்தா போட்டா கூட அழகாத் தான் இருந்தாங்க. ஓரளவுக்கு நன்றாகவே நடிப்பாங்க. அந்நியன் பிரியசகி இரண்டும் தான் பாத்திருக்கேன். அத வைச்சு தான் சொல்றேன். சண்டைக்கு வராதீங்க.
நிறைய பேர் சந்தோஷ் சுப்ரமணியத்தில ஜெனிலியாவுக்கு ரொம்ப க்யூட்டான ரோலுனு சொன்ன ஞாபகம். இப்டி கவுக்கிறீங்களே. ஜெனிலியா மன்றம் சார்பாக என்ன சாபம் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்.
சாறின்னா எப்படி சினேஹாவோ அப்படி தான் தாவணின்னா அது மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி, கஸ்தூரி மான், அச்சுவின்ட அம்மா மூணும் தான் பாத்திருக்கேன். ரொம்ப நன்னா நடிக்கிறாங்க.
கடைசில, ஸ்ரேயானு கவுத்திட்டீங்களே. அவங்கள பாத்த குரங்கு மூஞ்சி மாதிரி இருக்குனு நிறைய பசங்க இங்க சொல்லுவாங்க. SAD!
ஷாலினியை விட்டுட்டீங்களே. Big B கூட ஷாலினி தான் அவரோட ஃபேவரிட்டுனு சொல்லி இருந்தாங்க. உங்க அட்ரஸ் என்னங்க. ஆட்டோ அனுப்பத்தான். இதுக்கு சாபம் எல்லாம் சரிவராது. ஹூக்கும்.
கடைசியா, தலைப்பை மாத்தி வைச்சுட்டீங்கனு நினைக்கிறேன். இது பிடித்த 10 படங்களில்லைங்க, நீங்க எழுதியது பிடிச்ச 10 கதாநாயகிகள்.
கவுண்ட் டவுன்ல எங்கடா நம்ம தண்ணி (அதாங்க, தம்பி பாகுற பொண்ணு பேரு தண்ணிதானே) யப்பத்தி தகவல் இல்லன்னு பரபரப்பா படிச்சிட்டு வந்தப்போ சேட்டை தம்பி நம்பர் ஒன் இடத்தை கொடுத்து அசத்திபுட்டீரு இல்ல!
சேட்டை நல்லாருக்கு...
பிரபாகர்...
சேட்டை கவுண்டவுன் ஜ்டார்ஸ்..
:-)
:) nice
நீங்கள் ஜொள்ளிய பத்து படங்கள் ! ஹா,ஹா,ஹா,ஹா....
ஏய் பத்து படங்கள் எழுத சொன்னாங்களா இல்லை பத்து பொண்ணுகளை பத்தி எழுத சொன்னாங்களா...
உங்களுக்குப் பிடித்த 10 நடிகைகளைப் பற்றி கலக்கலாக எழுதியுள்ளீர்கள்
அய்யா சேட்டைக்காரன் அவர்களே,
உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்
என் முகவரி http://cute-paruppu.blogspot.com/
அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்
என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்
நல்லாத்தான் ரசிக்கிறிங்க கதாநாயகியை....ஹி ஹி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.
Good choices of movies.
நீங்க சொல்லியிருக்கும் பிரபாகர் நான் இல்லை போல இருக்கே... ஆனா நானும் இதே பதிவை தொடரச் சொல்லி உங்களை அழைத்திருந்தேன்... கீழுள்ள இணைப்பை சொடுக்கி படிக்கவும்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/10.html
Settaikkaran illa...
Jollu-kkaran...!
Swami
//ஏலே மக்கா பார்த்துல உறங்குற சிங்கங்களை குச்சிய வச்சு சொரண்டுரீரு . அம்புட்டுதான் சொல்லுவே .//
இன்னும் சிங்கங்கள் பிடரி சிலிர்த்து முழிச்ச மாதிரித் தெரியலியே! :-))
//மீண்டும் வருவேன்ல .//
தெரியுமில்லா? :-)))
மிக்க நன்றி!!
//படத்தேர்வு மிக அருமை.//
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....! :-)
//அதை விட ஜொள்ளு ஆறா ஓடுது. ஸ்கீரினைத்தாண்டியும்..//
அப்படீன்னா, ஏதோ வைரஸ் பிரச்சினைதான் போலிருக்கு! கவனமுங்கோய்.....!
//கலக்குறீங்க சேட்டை.
இதே டேஸ்ட் தான் எனக்கும்.//
மிக்க நன்றிங்க! :-))
//சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பா. உங்களைப் பற்றி நண்பர் சிங்கை பிரபாகர் நிறைய சொன்னார். உங்கள் எழுத்துக்கள் அவர் குறிப்பிட்டதைப் போலவே மிக அருமை.//
முன்பின் தெரியாமல், முகம்பாராமல், எந்த பலனையும் எதிர்பாராமல் என்னை ஆதரிக்கிற விரல்விட்டு எண்ணுமளவே உள்ள நல்ல நண்பர்களில் ஒருவர் பிரபாகர்! அவரது பெருந்தன்மைக்கும், உங்களது வருகைக்கும், உற்சாகமான வார்த்தைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே!
//ஹெவி மேக்கப் அழகா இருப்பது ரீமாவுக்கு மட்டும் தாங்க.//
ஆஹா, இப்படியொருத்தரு இருப்பாருன்னு நான் எதிர்பார்க்கவேயில்லையே! :-))
//அவங்க அழகே இல்லனு சொன்ன உங்களுக்கு (கல்யாணம் ஆகலன்னா) கேள் பிரண்டு கிடைக்காது என்று ரீமா மன்றம் சார்பாக சாபம் விடுகிறோம்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்! சரி, போகட்டும் ரீமா மன்ற சங்கத்தாரோட சாபம் தானே? அது பலிக்காதுன்னு தாம்பரம் பக்கத்துலே பேசிக்கிறாங்க!
//ஜோ கூட ரீமாவுக்கு அடுத்த படி தானுங்கோய்.//
சூர்யா காதுலே விளுந்து கிளுந்து தொலைக்கப்போகுதுண்ணே! :-))))
//சதாவுக்கு எந்த ட்ரெசும் அழகாயிருக்கும். சாதாரண ஜீன்ஸ் குர்தா போட்டா கூட அழகாத் தான் இருந்தாங்க. ஓரளவுக்கு நன்றாகவே நடிப்பாங்க. அந்நியன் பிரியசகி இரண்டும் தான் பாத்திருக்கேன். அத வைச்சு தான் சொல்றேன். சண்டைக்கு வராதீங்க.//
ஏன் சண்டைக்கு வரணும்? உள்ளதைத் தானே சொல்லியிருக்கீங்க! வழிமொழிகிறேன்!
//நிறைய பேர் சந்தோஷ் சுப்ரமணியத்தில ஜெனிலியாவுக்கு ரொம்ப க்யூட்டான ரோலுனு சொன்ன ஞாபகம். இப்டி கவுக்கிறீங்களே. ஜெனிலியா மன்றம் சார்பாக என்ன சாபம் கொடுக்கலாம்னு யோசிக்கிறேன்.//
நீங்க மொத்தம் எத்தனை மன்றத்துலே இருக்கீங்கண்ணே? ஒருத்தரு ஒரு மன்றத்துலே தான் இருக்கணும். ஒரு கொள்கை வேண்டாமா? :-)))))
//சாறின்னா எப்படி சினேஹாவோ அப்படி தான் தாவணின்னா அது மீரா ஜாஸ்மின். சண்டைக்கோழி, கஸ்தூரி மான், அச்சுவின்ட அம்மா மூணும் தான் பாத்திருக்கேன். ரொம்ப நன்னா நடிக்கிறாங்க.//
ஆமாமுங்க! இதையும் வழிமொழிகிறேன்.
//கடைசில, ஸ்ரேயானு கவுத்திட்டீங்களே. அவங்கள பாத்த குரங்கு மூஞ்சி மாதிரி இருக்குனு நிறைய பசங்க இங்க சொல்லுவாங்க. SAD!//
எங்கள் தங்கத்தலைவி ஸ்ரேயாவின் அன்புக்கட்டளைக்கிணங்க, மறப்போம் மன்னிப்போமுன்னு சும்மா விடுறேன். இல்லாட்டா, ஆட்டோ வராது, லாரியே வருமாக்கும்!
//ஷாலினியை விட்டுட்டீங்களே. Big B கூட ஷாலினி தான் அவரோட ஃபேவரிட்டுனு சொல்லி இருந்தாங்க.//
கல்யாணம் ஆகிக் குழந்தைகுட்டிங்க பெத்தவங்களைப் பத்தி எழுதறதுக்கா, நான் வலைப்பதிவு நடத்திட்டிருக்கேன்? என்னோட லட்சியத்தையே இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலியே நீங்க? :-))))). (இப்படிப் பார்த்தா சிம்ரன் தான் நம்பர் ஒன்னுலே வந்திருக்கணும்.)
//உங்க அட்ரஸ் என்னங்க. ஆட்டோ அனுப்பத்தான். இதுக்கு சாபம் எல்லாம் சரிவராது. ஹூக்கும்.//
ஏற்கனவே நிறைய பேரு அனுப்பி அனுப்பி, என் வீட்டு வாசலிலே ஒரு பெரிய ஆட்டோ ஸ்டாண்டே இருக்குது இப்போ..நீங்க வேறேயா...? அவ்வ்வ்வ்வ்!!
//கடைசியா, தலைப்பை மாத்தி வைச்சுட்டீங்கனு நினைக்கிறேன். இது பிடித்த 10 படங்களில்லைங்க, நீங்க எழுதியது பிடிச்ச 10 கதாநாயகிகள்.//
நான் சரியாத்தான் எழுதியிருக்கேனுங்க! நீங்க முதல் இரண்டு பத்தியை இன்னொரு வாட்டி வாசிச்சிருங்க! :-))
முதல்முதலாக வருகை தந்து, இவ்வளவு அறிவுபூர்வமான விவாதத்தில் ஈடுபட்டு, அனைவரின் பொது அறிவையும் விரிவுபடுத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்கோய்!
அடிக்கடி வாங்க, நமக்கு நல்லா மேட்ச் ஆகும்போலிருக்குது! :-)))
//கவுண்ட் டவுன்ல எங்கடா நம்ம தண்ணி (அதாங்க, தம்பி பாகுற பொண்ணு பேரு தண்ணிதானே) யப்பத்தி தகவல் இல்லன்னு பரபரப்பா படிச்சிட்டு வந்தப்போ சேட்டை தம்பி நம்பர் ஒன் இடத்தை கொடுத்து அசத்திபுட்டீரு இல்ல!//
பருப்பு இல்லாத கல்யாணமா? பாட்டு இல்லாத ரஹ்மான் படமா? ஸ்ரேயா இல்லாத சேட்டையோட சினிமா பதிவா? நோ சான்ஸ்! :-)))
//சேட்டை நல்லாருக்கு...//
மிக்க நன்றிங்க!!!
//சேட்டை கவுண்டவுன் ஜ்டார்ஸ்..//
மிக்க நன்றிங்க!! :-)))
//:) nice//
மிக்க நன்றிங்க ஐயா !! :-)))
//நீங்கள் ஜொள்ளிய பத்து படங்கள் ! ஹா,ஹா,ஹா,ஹா....//
அதே! சும்மா எல்லாரும் சொன்னதையே நாமளும் சொன்னா எப்படி? அதுதான் என்னோட பாணியிலே...ஹி..ஹி!
மிக்க நன்றி!!!
//ஏய் பத்து படங்கள் எழுத சொன்னாங்களா இல்லை பத்து பொண்ணுகளை பத்தி எழுத சொன்னாங்களா...//
ஆங், இது நல்லாயிருக்கே! மத்தவங்க டைரக்டருங்களையும், கதாநாயகர்களையும் தூக்கி வச்சு எழுதலாம். நான் ஹீரோயினைப் பத்தி எழுதக்கூடாதுங்களா? :-)))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! அடிக்கடி வாங்க!!
//உங்களுக்குப் பிடித்த 10 நடிகைகளைப் பற்றி கலக்கலாக எழுதியுள்ளீர்கள்//
கரெக்டாக் கண்டுபிடிச்சீங்க! :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!
//அய்யா சேட்டைக்காரன் அவர்களே,
உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும்
சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்
என் முகவரி http://cute-paruppu.blogspot.com/
அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்
என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்//
ஆஹா, வாங்க வாங்க பருப்பு! வர வேண்டிய இடத்துக்குத் தான் வந்து சேர்ந்திருக்கீங்க! உங்கள் தோளோடு தோள் நின்று உங்களையும் எங்க பயணத்திலே சேர்த்துக்குவோமில்லே! டோண்ட் வொர்ரி...பீ ஹேப்பி...! வாழ்த்துகள்! :-)))
//நல்லாத்தான் ரசிக்கிறிங்க கதாநாயகியை....ஹி ஹி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.//
இந்தப் பதிவுக்காக மட்டும் கதாநாயகிகளை ரசிச்சிருக்கேனுங்க! :-))
மத்தபடி இந்தப் படங்கள் எல்லாமே எனக்கு இன்னும் சிலபல காரணங்களுக்காக ரொம்பப் பிடிக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!
//Good choices of movies.//
மிக்க நன்றிங்க!! :-))
//நீங்க சொல்லியிருக்கும் பிரபாகர் நான் இல்லை போல இருக்கே... ஆனா நானும் இதே பதிவை தொடரச் சொல்லி உங்களை அழைத்திருந்தேன்...//
ஆஹா! அதுனாலென்னங்க? நீங்களும் நம்ம நண்பர்தான்! விரைவில் நாமும் ஒரு தொடர்பதிவு போட்டு அசத்திரலாம். என்னா நான் சொல்றது?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க! :-)))
//Settaikkaran illa...
Jollu-kkaran...! //
ஹி..ஹி! மெய்யாலுமே.....! :-))
மிக்க நன்றிங்க!!
அருமையான லிஸ்டு சேட்டை... அட படத்தை சொன்னேன்னா நம்பவா போறீங்க??
ஷாலினி-யை விட்டதுல எனக்கும் வருத்தம் தான்...
அப்புறம்... நானும் உங்க நகைச்சுவை எழுத்துக்களின் ரசிகன். ஆனா என்ன, சில சமயங்கள்ல காலண்டர் நாட்களை விட செட்டியின் பதிவு எகிறிடுது :-)
அதனால, ரெண்டு மூணு நாளுக்கு ஒருதரம் வந்து தான் படிக்க முடியுது. இன்னும் உங்களோட பழைய பதிவுகள்ள நிறைய பாக்கி இருக்கு ராசா...
விரைவில் தொடர்புகொள்கிறேன்.... அன்புடன்.
சேட்டைக்காரன் சொன்னது:
//இந்தத் தொடர்பதிவை யார் வேண்ணாலும் தொடரலாம். ஆனா, குறிப்பா இவங்க மூணு பேரும் கண்டிப்பாத் தொடர்ந்தே ஆகணும்.
விஸ்வாமித்திரன்
மசக்கவுண்டன்
கொன்றல்காற்று
பின்னே என்னங்க? இந்த சாக்குலே இவங்களைத் தட்டி எழுப்பி எழுத வச்சாத்தான் உண்டு. என்னா நான் சொல்றது?//
அய்யய்யோ, என்னங்க இப்படி மாட்டி வுட்டிட்டீங்க. நாம்பார்த்த சினிமாவெல்லாம் வந்தப்போ நீங்க எல்லாம் பொறந்தே இருக்கமாட்டீங்க.
சரி, விதி யாரை விடுது. நான் எழுதறதைப் படிக்கோணும்னு உங்க தலைலே எழுதியிருந்தா உட்டா போயிடுமுங்க.
நடுவில கம்ப்யூட்டருக்கு பை-பாஸ் ஆபரேசனுங்க. அதனாலதான் நாலஞ்சு நாளா மொடக்குமுங்க.
//அருமையான லிஸ்டு சேட்டை... அட படத்தை சொன்னேன்னா நம்பவா போறீங்க??//
நம்பிட்டேன்..நம்பிட்டேன்! :-)))
//ஷாலினி-யை விட்டதுல எனக்கும் வருத்தம் தான்...//
கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களையெல்லாம் லிஸ்டுலேருந்து டிலீட் பண்ணிட்டேனில்லா? :-))
//அப்புறம்... நானும் உங்க நகைச்சுவை எழுத்துக்களின் ரசிகன். ஆனா என்ன, சில சமயங்கள்ல காலண்டர் நாட்களை விட செட்டியின் பதிவு எகிறிடுது :-)//
ஐயையோ, என்ன பெரிய வார்த்தையெல்லாம்...? நானு கத்துக்குட்டி! :-))
முன்னை மாதிரி இல்லீங்க, இப்பெல்லாம் அதிகபட்சம் இரண்டுநாளைக்கு ஒரு பதிவுன்னு தான் போடுறேன். :-))
//அதனால, ரெண்டு மூணு நாளுக்கு ஒருதரம் வந்து தான் படிக்க முடியுது. இன்னும் உங்களோட பழைய பதிவுகள்ள நிறைய பாக்கி இருக்கு ராசா...//
ஆற அமர நிதானமாப் படிச்சிட்டு சொல்லுங்க! என்ன அவசரம்?
//விரைவில் தொடர்புகொள்கிறேன்.... அன்புடன்//
காத்திருக்கிறேன். மிக்க நன்றிங்க!!
//அய்யய்யோ, என்னங்க இப்படி மாட்டி வுட்டிட்டீங்க. நாம்பார்த்த சினிமாவெல்லாம் வந்தப்போ நீங்க எல்லாம் பொறந்தே இருக்கமாட்டீங்க.//
அட பரவாயில்லே கவுண்டரே, எழுதுங்க, பழைய சினிமா பத்தி ஆராய்ச்சி பண்ணின மாதிரி இருக்குமில்ல..? :-))
//சரி, விதி யாரை விடுது. நான் எழுதறதைப் படிக்கோணும்னு உங்க தலைலே எழுதியிருந்தா உட்டா போயிடுமுங்க.//
சும்மா ரவுஸு பண்ணாதீங்க, புகுந்து வெளயாடுங்க! எல்லாரும் காத்திட்டிருக்கோமில்ல...? :-)))
//நடுவில கம்ப்யூட்டருக்கு பை-பாஸ் ஆபரேசனுங்க. அதனாலதான் நாலஞ்சு நாளா மொடக்குமுங்க.//
அடடே, எப்போ டிஸ்சார்ஜ் பண்ணினாங்க? :-))
மிக்க நன்றி கவுண்டரே!
Post a Comment