Sunday, December 8, 2013

போனால் போகட்டும் போடா




போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

வைப்பது சிலைகள் நோவது தலைகள்
லாபம் எவர்க்கும் கிடையாது
வைகிற பேரின் வாய்க்கு அவல்-இந்த
வாதம் எதற்கோ புரியாது
ஊரில் ஆயிரம் கோளாறு-அதை
உடனே தீர்க்கும் ஆள்யாரு?-வெறும்
உருவச்சிலைக்கா தகராறு?

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

இறந்தும் நெஞ்சினில் வாழ்கின்றான்-சிலை
இல்லையென்றே அவன் அழுதானா?
இருக்கும் சிலைகள் படுகிறபாட்டை
க்கும் கேட்டே தொழுதானா?
காக்கைகளாலே நாள்தோறும்-சிலை
கழிவினில் ஊறி தினம்நாறும்-மழை
கடும்வெயில் தாங்கி நிறம்மாறும்

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

நடிகர்கள் வருவார் நடிகர்கள் போவார்
இவன்போல் ஒருவன் வருவானா?
நரம்பும் சதையும் உள்ளமும் இணைத்தே
திலகம் எனும்பேர் பெறுவானா?
இதற்கும் மேலே சிலையெதற்கு?-இங்கு
இன்றும் அவனின் கலையிருக்கு-எங்கள்
சிங்கத்தை நாளும் நினைப்பதற்கு

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா-இந்த
பூமியில் சிலையால் பூசல்கள் ஏனடா
போனால் போகட்டும் போடா

15 comments:

கும்மாச்சி said...

சேட்டை அற்புதம், வழக்கம் போல பின்னியிருக்கிறீர்கள்.

கும்மாச்சி said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுவிட்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

த.ம. 2

ரிஷபன் said...

இதற்கும் மேலே சிலையெதற்கு?-இங்கு
இன்றும் அவனின் கலையிருக்கு-எங்கள்
சிங்கத்தை நாளும் நினைப்பதற்கு//

உண்மைதான்..

Amudhavan said...

\\நடிகர்கள் வருவார் நடிகர்கள் போவார்
இவன்போல் ஒருவன் வருவானா?
நரம்பும் சதையும் உள்ளமும் இணைத்தே
திலகம் எனும்பேர் பெறுவானா?\\

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா

Unknown said...

வோவ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

சூப்பர் ஐயா!

Unknown said...

உங்க பாட்டை கேட்டு நானே சிலையாகிப் போனேன் ,சூப்பர் !

Thangaraj said...

tamil cinema miss the settaikkaran

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

J.Jeyaseelan said...

நடிகர்கள் வருவார் நடிகர்கள் போவார்
இவன்போல் ஒருவன் வருவானா?

super words....

this is my blog

plese visit my blog....

http://pudhukaiseelan.blogspot.in/

J.Jeyaseelan said...

நடிகர்கள் வருவார் நடிகர்கள் போவார்
இவன்போல் ஒருவன் வருவானா?

super words....

this is my blog

plese visit my blog....

http://pudhukaiseelan.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

Unknown said...

அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.