Monday, September 19, 2011

கவிதையா எளுதறீங்க கவிதை...?

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

36 comments:

K said...

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!:///

வணக்கம் சார்! உவமையெல்லாம் பிச்சுக்கிட்டுப் போவுது! சூப்பர் கவிதைங்க!

SURYAJEEVA said...

காமடி கவிதையா?

வெங்கட் நாகராஜ் said...

:) ஆக்ரா என்றால் இங்கே வடக்கில் இன்னொன்றும் நினைவுக்கு வரும் சேட்டை...

மனநிலை சரியில்லாதவர்களுக்கான மருத்துவமனை இங்கே இருக்கிறது. சில நாட்கள் முன் மாயாவதி கூட சொல்லி இருந்தார் விக்கி லீக்ஸ் காரரை அங்கே அனுப்ப சொல்லி இருந்தார்... :)))

நல்ல கவிதை....

ரிஷபன் said...

சேட்டைக்கவிதை தூள்..

Unknown said...

அப்படிப்போடு!

சேலம் தேவா said...

நீங்க ஒருத்தர்தான் கவிதை எழுதாம இருந்தீங்க...பரவால்ல..இருந்தாலும் நல்லாதான் இருக்கு. :)

Anonymous said...

காதலிக்கு காதலன் மேல் மோகம் காதலனுக்கு சினிமா மீது மோகம் ...)))

MANO நாஞ்சில் மனோ said...

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?//



அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....அவ்வ்வ்வவ்வ்வ்வ்....அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கவிதை அருமை மக்கா...

கோகுல் said...

ஆஹா!ஆஹா!கவித!கவித
பைனல் கிக் சூப்பரு!!
இனி யாரும் தாஜ்மஹால்னு வாயக்கூட திறக்கமாட்டாங்க!

Anonymous said...

சேட்டைக்கவிதை-:)

Speed Master said...

கவித கவித

அன்பு நண்பர்களே உதவி தேவை
http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

கடம்பவன குயில் said...

//சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!//

அடப் பாவிகளா!!!!அப்பாவி காதலிகளை இப்படியெல்லாமா பயமுறுத்துவீங்க...ஜென்ம ஜென்மத்துக்கும் காதலியே கிடைக்காமல் கஷ்டப்படுவீர் சேட்டைக்காரரே என்று சாபமிடுகிறேன் நான்....

சத்ரியன் said...

சேட்டையண்ணே!


தாஜ்மஹாலை இடிச்சிருவோம்ணே!

கடம்பவன குயில் said...

//ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!//

கவிதை சரளமாய் வருகிறதே...கலக்குங்க...

பால கணேஷ் said...

அறியாதவன் ஷாஜகான்
தாஜ்மஹால் கட்டினான்...
அருமையாய் நான் உந்தன்
தங்கையைக் கட்டிடுவேன்!
-இது எப்படி இருக்கு?
கவிதையில் கூட உங்கள் சேட்டைத்தனம் அதகளம் பண்ணுகிறதே... சபாஷ்!

Harini Resh said...

//ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!//:P

கவிதை கலக்கல் :)

Anonymous said...

உங்க கவிதை நிஜமாவே சொல்றேன்... ரொம்ப ரொம்ப உயர்தரத்தில் இருக்கிறது... வார்த்தைகள் பல இடங்களில் மிக இலாவகமாக வந்திருக்கிறது..

உங்கள் அரசியல் கவிதைகள் பலவும் படித்ததுண்டு... நிஜமாகவே அதிகமாய் ரசித்திருக்கிறேன் உங்கள் சொல்லாடல்களை...

அவள் கேட்பதும், அவன் அதற்கு குத்தலாக பதிலளிப்பதும்..

பேச்சு வழக்கில் பேசும் நிகழ்வுகளை தரம் மாறாமல் கவிதைப்படுத்துவது எளிதல்ல..

தலைப்புதான் ஏதோ திட்டப்போறீங்களோ கவிஞர்களைன்னு நினைச்சேன்..

சூப்பர்....

Mathuran said...

அசத்தல் கவிதை

middleclassmadhavi said...

கவித.. கவித...
கலக்கல்!!

Unknown said...

ஐயா!
சேட்டைக்காரரே!
இன்றுதான் முதல் முதலாக
தங்கள் வலை வழி வந்தேன்
தலைப்பைக் கண்டு
அச்சம் கொண்டு படித்தேன்
காரணம் நான் கவிதை மட்டுமே எழுதிப் பிழைப்பவன்.
ஆனால்---?
நையாண்டி கவிதை! கலக்கல்
கவிதை அருமை ஐயா அருமை!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Sivakumar said...

வீராசாமியை சொருகியதுதான் கவிதையின் சிறப்பம்சம்!!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்
கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
வர முடியலை...

எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

மன்னிக்க வேண்டும்!

நிரூபன் said...

பாஸ்...உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான கவிதையினை முதன் முதலாக ரசிக்கிறேன்.

நிரூபன் said...

திரைப்படங்களின் பெயரினைச் சொருகி..அசத்தாலாக வித்தியாசமான ஓர் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Jayakumar Chandrasekaran said...

21st century kalamega pulavar?

முத்தரசு said...

புதிய இலக்கணம் அருமையான கவிதை - புதிய பார்வையில் - தொடரட்டும் உமது சேட்டை

காந்தி பனங்கூர் said...

அட பாவி மனுஷா, உங்க மேல உயிரா இருக்குற காதலியை சாக சொல்றீங்களே. அவங்களுக்காக தாஜ் மஹால் கட்ட வேண்டாம், வசந்த மாளிகை கட்டுங்க பா.

நகைச்சுவை நடையில் கவிதை அருமை நண்பா.

Unknown said...

அது சரி மாப்ள இந்த கவிதைக்கு காரணம் வெண்ணிற ஆடை மூர்த்தியா....சப்ஜாடா இருக்குது ஹிஹி!

இராஜராஜேஸ்வரி said...

குத்தாட்டம் போடும் குத்தல் கவிதை.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

சேட்டை தாங்கலப்பா,,,,,

settaikkaran said...

//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் சார்! உவமையெல்லாம் பிச்சுக்கிட்டுப் போவுது! சூப்பர் கவிதைங்க!//

யாப்பிலக்கணம் பாதிவிலைக்கு வாங்கிப் படிக்கிறோமில்லே..? :-))
மிக்க நன்றி!

//suryajeeva said...

காமடி கவிதையா?//

நான் கவிதை எழுதினாலே காமெடிதானே? :-)
மிக்க நன்றி!

//வெங்கட் நாகராஜ் said...

:) ஆக்ரா என்றால் இங்கே வடக்கில் இன்னொன்றும் நினைவுக்கு வரும் சேட்டை...மனநிலை சரியில்லாதவர்களுக்கான மருத்துவமனை இங்கே இருக்கிறது. சில நாட்கள் முன் மாயாவதி கூட சொல்லி இருந்தார் விக்கி லீக்ஸ் காரரை அங்கே அனுப்ப சொல்லி இருந்தார்... :))) நல்ல கவிதை....//

வெங்கட்ஜீ! இந்த மாதிரி மேட்டரை நான் விட்டு வைப்பேனா? அதான் சூட்டோட சூடா ’வாஜி..வாஜி...வாஜி,’ன்னு ஒரு இடுகை எழுதினேனே, வாசிக்கலியா? :-))

மிக்க நன்றி!

//ரிஷபன் said...

சேட்டைக்கவிதை தூள்..//

ஆஹா! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//அமிர் said...

அப்படிப்போடு!//

மிக்க நன்றி! :-)

//சேலம் தேவா said...

நீங்க ஒருத்தர்தான் கவிதை எழுதாம இருந்தீங்க...பரவால்ல..இருந்தாலும் நல்லாதான் இருக்கு. :)//

முன்னே எழுதி கலவரமே உண்டாச்சே..? :-)))
மிக்க நன்றி நண்பரே!

//கந்தசாமி. said...

காதலிக்கு காதலன் மேல் மோகம் காதலனுக்கு சினிமா மீது மோகம் ...)))//

ஒஹோ! இதுக்கு இப்படிக் கூட ஒரு அர்த்தம் இருக்கா? :-)
மிக்க நன்றி!

//MANO நாஞ்சில் மனோ said...

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?//

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....அவ்வ்வ்வவ்வ்வ்வ்....அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....//

அண்ணாச்சி..? என்னாச்சி...?


//ஹா ஹா ஹா ஹா கவிதை அருமை மக்கா...//

அதானே பார்த்தேன். பிடிக்காமலா போயிரும்..? :-)
மிக்க நன்றி!

//கோகுல் said...

ஆஹா!ஆஹா!கவித!கவித பைனல் கிக் சூப்பரு!!
இனி யாரும் தாஜ்மஹால்னு வாயக்கூட திறக்கமாட்டாங்க!//

அது பத்தாது! யாரும் கவிதை எழுதக்கூடாது. அதுவரைக்கும் நான் அப்பப்போ இந்த மாதிரி இலக்கியம் படைச்சுக்கிட்டே இருப்பேன். :-))

மிக்க நன்றி!

settaikkaran said...

//ரெவெரி said...

சேட்டைக்கவிதை-:)//

அதே! மிக்க நன்றி! :-)

//Speed Master said...

கவித கவித//

மிக்க நன்றி! :-)

//FOOD said...

ஹா ஹா ஹா. கவிதை கலக்கல்.//

நல்ல வேளை, கலக்கம் ஏற்படலை! :-)

//ஆஹா,இப்படில்லாம் வேற மிரட்டுவீங்களா!//

வேறே வழி.? தாஜ்மஹால் கட்டவா முடியும்?
மிக்க நன்றி! :-)

//கடம்பவன குயில் said...

அடப் பாவிகளா!!!!அப்பாவி காதலிகளை இப்படியெல்லாமா பயமுறுத்துவீங்க...ஜென்ம ஜென்மத்துக்கும் காதலியே கிடைக்காமல் கஷ்டப்படுவீர் சேட்டைக்காரரே என்று சாபமிடுகிறேன் நான்....//

இந்த சாபத்துக்கு ஏதாவது டிஸ்கவுண்டிலே விமோசனம் கிடைக்குமா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்! :-)

//கவிதை சரளமாய் வருகிறதே...கலக்குங்க...//

ஆஹா, இம்புட்டுத்தான் கவிதையா? அப்பசரி, கலக்கிர வேண்டியதுதான்.

மிக்க நன்றி!

//சத்ரியன் said...

சேட்டையண்ணே! தாஜ்மஹாலை இடிச்சிருவோம்ணே!//

ஆஹா, வராதவங்க வந்திருக்கீங்க! சொல்லிட்டீங்கல்லே? இடிச்சிரலாம். :-)
மிக்க நன்றி! :-)

//கணேஷ் said...

அறியாதவன் ஷாஜகான்
தாஜ்மஹால் கட்டினான்...
அருமையாய் நான் உந்தன்
தங்கையைக் கட்டிடுவேன்!

-இது எப்படி இருக்கு?//

இது பெட்டர்! கொத்தனாரை நம்ப வேண்டாம்! தூள்! :-)

//கவிதையில் கூட உங்கள் சேட்டைத்தனம் அதகளம் பண்ணுகிறதே... சபாஷ்!//

இது ஒண்ணை வச்சுத்தானே வாவாரம் பண்ணிட்டிருக்கேன். மிக்க நன்றி! :-)

//Harini Nathan said...

கவிதை கலக்கல் :)//

மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//ஷீ-நிசி said...

உங்க கவிதை நிஜமாவே சொல்றேன்... ரொம்ப ரொம்ப உயர்தரத்தில் இருக்கிறது... வார்த்தைகள் பல இடங்களில் மிக இலாவகமாக வந்திருக்கிறது..//

ஐயையோ! இதென்ன புதுக்குழப்பம்? நெசமாவா? :-)))

//உங்கள் அரசியல் கவிதைகள் பலவும் படித்ததுண்டு... நிஜமாகவே அதிகமாய் ரசித்திருக்கிறேன் உங்கள் சொல்லாடல்களை...//

அரசியல்னாலே எல்லாம் ஒரு ஃப்ளோவுலே வந்திருது! :-))

//அவள் கேட்பதும், அவன் அதற்கு குத்தலாக பதிலளிப்பதும்..பேச்சு வழக்கில் பேசும் நிகழ்வுகளை தரம் மாறாமல் கவிதைப்படுத்துவது எளிதல்ல..//

ஆஹா! நீங்க சொன்னதைக் கேட்டதும் முடிவு பண்ணிட்டேன். இத்தோட விடுறதா இல்லை. அடிக்கடி கவிதை எழுதிட்டே இருக்கப்போறேன். அப்பத்தான் நிறைய பேருக்கு நல்ல புத்தி வரும்! :-)

//தலைப்புதான் ஏதோ திட்டப்போறீங்களோ கவிஞர்களைன்னு நினைச்சேன்..சூப்பர்....//

புரியாம எழுதுறவங்களைத் திட்டி என்னாகப்போவுது? :-))

மிக்க நன்றிங்க! என்னோடதயும் கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு! :-)

//மதுரன் said...

அசத்தல் கவிதை//

மிக்க நன்றி! :-)

//middleclassmadhavi said...

கவித.. கவித...கலக்கல்!!//

மிக்க நன்றி சகோதரி! :-)

//angusamy said...

கடைசி வரி தான் நச் கலக்குங்க சேட்டை//

அதை வச்சுத்தானே ரிவர்ஸுலே வொர்க்-அவுட் பண்ணினேன். :-))
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//புலவர் சா இராமாநுசம் said...

இன்றுதான் முதல் முதலாக
தங்கள் வலை வழி வந்தேன்
தலைப்பைக் கண்டு
அச்சம் கொண்டு படித்தேன்
காரணம் நான் கவிதை மட்டுமே எழுதிப் பிழைப்பவன்.
ஆனால்---?
நையாண்டி கவிதை! கலக்கல்
கவிதை அருமை ஐயா அருமை!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்//

ஆஹா! ஐயா புலவர் இராமாநுசம் அவர்களே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாரே! சேட்டை, இனி அமாவாசைக்கு அமாவாசை ஒரு கவிதை எழுதிர வேண்டியதுதான்!

மிக்க நன்றி ஐயா! முதல்முறையாக வருகை தந்து உற்சாகமூட்டும் பின்னூட்டமிட்டு மனமகிழ்ச்சி அளித்திருக்கிறீர்கள்! :-)

//! சிவகுமார் ! said...

வீராசாமியை சொருகியதுதான் கவிதையின் சிறப்பம்சம்!!//

ஹிஹி! கவிதையென்றால் அதில் அதிரசம், அதாவது நவரசம் வேணுமில்லியா? :-))
மிக்க நன்றி நண்பரே!

//நிரூபன் said...

வணக்கம் பாஸ் கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன். வர முடியலை...//

இங்கேயும் ஆணியோ ஆணி! அடிச்சுத் துவைக்கிறாங்க அலுவலகத்துலே!


//எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன். மன்னிக்க வேண்டும்!//

அடடா, மன்னிப்பு நான்தான் கேட்கணும். (எதுக்கு என்று உங்களுக்குத் தெரியுமே!). நேரம் கிடைக்கும்போது வாங்க; என் வலைப்பதிவை காக்காயா தூக்கிட்டுப் போயிரும்..? :-))

// பாஸ்...உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான கவிதையினை முதன் முதலாக ரசிக்கிறேன்.//

நான் கவிதை எழுதறதே ஒரு பெரிய வித்தியாசம் சகோ! :-)

// திரைப்படங்களின் பெயரினைச் சொருகி..அசத்தாலாக வித்தியாசமான ஓர் கவிதையினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.//

ஹிஹிஹி! சும்மானாச்சும் ஒரு டமாசுக்குத்தான் அப்படி! :-)
மிக்க நன்றி சகோ!

//jk22384 said...

21st century kalamega pulavar?//

யாருங்க அந்த கலாமேகா புலவர்? நான் ஜியாகிரபிலே ரொம்ப வீக்கு!
மிக்க நன்றி! :-)

//மனசாட்சி said...

புதிய இலக்கணம் அருமையான கவிதை - புதிய பார்வையில் - தொடரட்டும் உமது சேட்டை//

ஆஹா! மனசாட்சி சொல்றதைக் கேட்டு நடக்கணுமுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! மனசாட்சி சொல்றதைக் கண்டிப்பா கேட்பேன்! மிக்க நன்றி! :-)

//காந்தி பனங்கூர் said...

அட பாவி மனுஷா, உங்க மேல உயிரா இருக்குற காதலியை சாக சொல்றீங்களே. அவங்களுக்காக தாஜ் மஹால் கட்ட வேண்டாம், வசந்த மாளிகை கட்டுங்க பா.//

வசந்த மாளிகையா? என்னையும் சிவாஜி மாதிரி போர்வை போத்திக்கிட்டு ’யாருக்காக?’ன்னு பாடச் சொல்றீங்களா? :-)) அஸ்குபுஸ்கு!

//நகைச்சுவை நடையில் கவிதை அருமை நண்பா.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//விக்கியுலகம் said...

அது சரி மாப்ள இந்த கவிதைக்கு காரணம் வெண்ணிற ஆடை மூர்த்தியா....சப்ஜாடா இருக்குது ஹிஹி!//

ஹிஹி! நேத்து கனவுலே வந்து ’தம்ப்ப்ரீ.....ஒரு கவிதை எழுது,’ன்னு கண்ணை உருட்டிக்கினே சொன்னாரு மெய்யாலுமே! :-)

மிக்க நன்றி! :-)

//இராஜராஜேஸ்வரி said...

குத்தாட்டம் போடும் குத்தல் கவிதை.//

வாசிக்கிறவங்க குத்துயிரும் குலையுயிருமாகாத வரைக்கும் சரி! :-)
மிக்க நன்றி! :-)

//BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

சேட்டை தாங்கலப்பா,,,,,//

மிக்க நன்றி! :-)