வெத்துவேட்டு வெங்கிக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்பது, ரவா தோசைக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்பதற்கு ஒப்பாகும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்.
வெங்கி என்ற வெங்கடசுப்ரமணியத்தின் சொந்த ஊரு பாலக்காடு பக்கம். மயிலாப்பூரில் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பில் போட்டுக்கொண்டிருந்தவரை, எங்க முதலாளி அழைத்துக்கொண்டு வந்து வேலைபோட்டுக் கொடுத்துவிட்டார். (எனக்கே வேலை கொடுத்தவர் தானே!). அனேகமாக, வெங்கியை சிருஷ்டி செய்து கொண்டிருந்தபோது கடவுள் டிவியில் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தாரோ என்னமோ, மூளையை வைக்க சுத்தமாக மறந்துவிட்டார்.
வெங்கிக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது; கம்ப்யூட்டர் தெரியாது; இவ்வளவு ஏன், ஆபீஸில் புழங்குகிற சாதனங்களின் பெயர் கூடத் தெரியாது. அவரால் ஆபீசுக்கு சல்லிக்காசுக்கும் உபயோகமில்லை. இத்தனை தகுதிகளோடு ஏற்கனவே நான் ஒருத்தன் இருக்கிறபோது, முதலாளி ஏன் இந்த வால்யூ-அடிஷன் செய்தார் என்பது இன்றுவரை புரியவேயில்லை.
உதாரணத்துக்கு, சில முக்கியமான காகிதங்களை ஃபைல் பண்ணுவதற்காக, பஞ்ச் மெஷினைத் தேடிக்கொண்டிருந்தபோது, வெங்கி கடந்து போனார்.
"வெங்கி சார், கொஞ்சம் பஞ்ச் கொடுங்களேன்!"
"பஞ்சு இல்லை; தீக்குச்சி தரட்டுமா? காது குடையத்தானே?"
"சார், நான் பஞ்சு கேட்கலை சார்! பன்ச் மிஷின்...அதாவது ஃபைல் பண்ணுறதுக்கு, பேப்பரிலே ஓட்டையெல்லாம் போடுவாங்களே!" என்று எழும்பி நின்று பஞ்ச் மிஷினை அவருக்கு விளக்குவதற்காக, பரதநாட்டிய அடவெல்லாம் பிடித்து அபிநயமெல்லாம் செய்து காட்டவும் புரிந்து கொண்டார். இப்படியே அவருக்கு அலுவலகத்திலிருக்கும் ஒவ்வொரு பொருட்கள் குறித்தும் விளக்கி விளக்கி, பார்க்கிறவர்கள் என்னை சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யன் என்று எண்ணத்தொடங்கிவிட்டார்கள். விட்டிருந்தால் நாரதகான சபாவில் அரங்கேற்றமே நடந்திருக்கும்.
எங்கள் அலுவலகத்தில் குமாஸ்தா வாசுதேவன் தவிர மற்றவர்களுக்கு வெளியே சுற்றுகிற வேலை. நானும் மண்ணடியிலேயே ஆங்காங்கே டீ குடிப்பது, ராமபவனுக்குப் போய் தேங்காய்ச்சீடை, கீரைவடை சாப்பிடுவது போன்ற அத்தியாவசியப் பணிகளைக் கவனிக்க வெளியே போவதுண்டு. அப்போதெல்லாம் எனது கணினியை அப்படியே வைத்துவிட்டே போவது வழக்கம். (அணைத்துவிட்டுப்போனால், திரும்ப வந்து முடுக்கியதும் மிக்ஸியில் சாம்பார்பொடி அரைப்பது போன்ற சத்தம் கேட்கும்.) அப்படியொரு முறை காளிகாம்பாள் கோவிலுக்கு அருகிலிருந்த பெங்காளி ஓட்டலில் மோச்சர் சாப் மென்று கொண்டிருந்தபோது, கைபேசியில் அழைத்தார் வெங்கி!
"சேட்டை, ஓசூருலேருந்து ஈ-மெயில் அனுப்பியிருக்காங்களாம். முதலாளி உடனே பார்க்கச் சொன்னாரு!"
"சரி வெங்கிசார், ரெண்டு நிமிஷத்துலே வர்றேன்!"
"உடனே பார்க்கணுமாம்!"
"அப்படியா? சரி, கம்ப்யூட்டர் ஆன் பண்ணித்தானிருக்கு! முதல்லே என்ன பண்ணறீங்க, எல்லா விண்டோவையும் குளோஸ் பண்ணுங்க!"
"ஒரு நிமிஷம் சேட்டை!"
ஒன்று...இரண்டு...மூன்று நிமிடங்களாகியும் வெங்கட் பேசக்காணோம். "ஹலோ..ஹலோ.." என்று நான் அழைத்துக்கொண்டிருக்க, காளிகாம்பாள் தவிர மற்றவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தபடி போனார்கள்.
"குளோஸ் பண்ணிட்டேன் சேட்டை," என்று பேசினார் வெங்கி. "விண்டோவை குளோஸ் பண்ணினாப் போதுமா, கதவையும் குளோஸ் பண்ணட்டுமா?"
"ஓய், என்னவே பண்ணினீரு?"
"ஜன்னலையெல்லாம் சாத்தினேன்!"
"சுத்தம். அப்படியே ஷட்டரையும் இறக்கி விடுமய்யா! மானிட்டர்லே எத்தனை விண்டோ ஓப்பனாயிருக்கு?"
"மானிட்டரா? அது எங்கேயிருக்கு?"
"நாசமாப்போச்சு! கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பாரும் வேய்!"
"ஓ! அதுவா, அதை எப்படி குளோஸ் பண்ணறது?"
"கீழே மல்கானி அண்டு சன்ஸ் கடையிருக்கில்லே, அங்கே போயி ஒரு சுத்தியலை வாங்கிட்டு வந்து ஒரு போடு போட்டா குளோஸ் ஆயிரும்!"
"என்ன சேட்டை, இப்படிப்பேசறீங்க...?"
"சரி, ஒண்ணு பண்ணுமய்யா! முதலாளி கிட்டே போயி கிருஷ்ணகிரியிலே பவர்-கட்டாயிருச்சாம். அதுனாலே ஈ-மெயில் சென்னை வந்து சேர நேரமாகுமாம்னு சொல்லுங்க. அதுக்குள்ளே நான் வந்து சேர்றேன்!"
"அவரு நம்பிருவாரா?"
"நம்ம ரெண்டு பேரை நம்பி வேலைகொடுத்தவரு மாப்பிள்ளை நல்ல படம்னாலும் நம்புவாரு!"
ஒருவழியாக நான் அலுவலகத்துக்குப் போய், ஈ-மெயிலைப் பார்த்து மேற்படித்தகவலை முதலாளியிடம் தெரிவித்தேன். அதன்பிறகு, வெங்கிக்கு கம்ப்யூட்டரைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் என் தலையில் வந்து விழுந்தது. ஆறுமாதத்தில் தடவித் தடவி கம்ப்யூட்டரை எப்படி இயக்குவது என்று சுமாராகக் கற்றுக்கொண்டு விட்டார்.
ஒருமுறை, திருப்பதி வெங்கடாசலபதியின் ஒரிஜினல் புகைப்படத்தை முதலாளிக்கு யாரோ ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்கள். அந்த நேரம் பார்த்து நான் சரவணபவனில் மினி-மீல்ஸ் சாப்பிடப்போயிருக்கவே, வெங்கியிடம் சொல்லி அந்த மெயிலைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். நம்ம வெங்கி, மிகச் சரியாக மெயிலை திறந்து, படத்தையும் தரவிறக்கம் செய்து விட்டார். ஆனால், எக்குத்தப்பாக எதையெதையோ அழுத்தி கம்பீரமாக நின்று கொண்டிருந்த திருப்பதி வெங்கடாசலபதியின் படம், பள்ளிகொண்ட அரங்கநாதர் போல நெடுஞ்சாண் கிடையாகப் படுத்து விட்டது. நான் உள்ளே நுழையும்போது, என் முதலாளியும், வெங்கியும் இடுப்பில் கைவைத்தபடி உடம்பை ஒருக்களித்துச் சாய்த்தவாறு படுத்திருந்தபடத்தைக் கிட்டத்தட்ட படுத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தனர்.
"என்ன சார் ஆச்சு?"
"என்ன சேட்டை, படம் படுத்திருச்சு?"
"இப்ப வர்ற படமெல்லாமே படுத்திருது சார், நீங்க எந்தப் படத்தைச் சொல்றீங்க?" என்று கேட்டவாறே கம்ப்யூட்டர் மானிட்டரைக் கவனித்தபோதுதான், வாழ்க்கையிலேயே முதல்முறையாக திருப்பதி வெங்கடாசலபதியின் பள்ளிகொண்ட திருக்காட்சியைப் பார்த்தேன். பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, பெருமாளை மீண்டும் எழுப்பி நிற்கவைத்தபோது நினைத்துக்கொண்டேன்.
"நல்ல வேளை, வெங்கடாசலபதி படம் மட்டும் தலைகீழாக இருந்திருந்தால், இன்னேரம் ஆபீஸில் இரண்டு பேர் சிரசாசனம் செய்து கொண்டிருந்திருப்பார்கள்."
டிஸ்கி: இது எனது 250-வது இடுகை. தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்புள்ளங்களுக்கு நன்றி!
Tweet |
50 comments:
வெத்துவேட்டு வெங்கி//
பெயரே ஒரு மார்க்கமாக, யாரையோ, திட்டுவது போல இருக்கிறதே;-))
ஹி...ஹி...
250 அடித்த பின்னும் அசராமல் அடித்து ஆடும் ( பதிவை) அண்ணன் சேட்டைக்கு இந்த பாராட்டு மாலையை அணீவிக்கிறோம்
வெத்துவேட்டு வெங்கிக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்பது, ரவா தோசைக்கு ஏன் அந்தப் பெயர் என்று கேட்பதற்கு ஒப்பாகும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்//
ஆஹா... ஆஹா.. என்ன ஒரு விளக்கம்...
சேட்டை...கலக்குறீங்களே!
எங்க முதலாளி அழைத்துக்கொண்டு வந்து வேலைபோட்டுக் கொடுத்துவிட்டார். (எனக்கே வேலை கொடுத்தவர் தானே!)//
அப்போ, உங்களுக்கு ஒரு நண்பன் கிடைச்சிட்டான் என்று சொல்ல வாறீங்க...
ஹி...ஹி...
"சரி, ஒண்ணு பண்ணுமய்யா! முதலாளி கிட்டே போயி கிருஷ்ணகிரியிலே பவர்-கட்டாயிருச்சாம். அதுனாலே ஈ-மெயில் சென்னை வந்து சேர நேரமாகுமாம்னு சொல்லுங்க. அதுக்குள்ளே நான் வந்து சேர்றேன்!"
"அவரு நம்பிருவாரா?"
"நம்ம ரெண்டு பேரை நம்பி வேலைகொடுத்தவரு மாப்பிள்ளை நல்ல படம்னாலும் நம்புவாரு!"//
ஹி....ஹி...
ஒரு அப்பாவியை வைச்சு, அடாவடித்தனம் பண்ணுறீங்களே சேட்டை.இது நியாயமா?
டிஸ்கி: இது எனது 250-வது இடுகை. தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்புள்ளங்களுக்கு நன்றி!//
வாழ்த்துக்கள் சேட்டை, தொடர்ந்தும் நீங்கள் சேட்டை செய்து, எங்களையும் கலாய்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
உங்கள் பதிவுகளிற்கு நான் புதியவன், படித்த ஒரு சில பதிவுகளின் மூலம், நகைச்சுவைகளால் என் மனதை உங்கள் பதிவு கொள்ளை கொண்டு விட்டது சகோ.
கதையினை, கலாய்ப்பினை வெத்து வேட்டு எனும் வெங்கியில் தொடங்கி, வெங்கடாசலபதியைத் தரிசித்து, இறுதியில் இப்போ வாற படங்களின் கதையின் தரத்தினையும் கலாய்த்து நிறைவு செய்திருக்கிறீர்கள்.
250 க்கு வாழ்த்துகள் சேட்டை.
தொடர்ந்து கலக்குங்கள்.
பள்ளி கொண்ட வேங்கடாஜலபதி பெருமாள் --- :))))
நல்ல நகைச்சுவை இடுகை. 250-ஆவது இடுகைக்கு வாழ்த்துகள்.
//இத்தனை தகுதிகளோடு ஏற்கனவே நான் ஒருத்தன் இருக்கிறபோது, முதலாளி ஏன் இந்த வால்யூ-அடிஷன் செய்தார் என்பது இன்றுவரை புரியவேயில்லை.//
//"ஹலோ..ஹலோ.." என்று நான் அழைத்துக்கொண்டிருக்க, காளிகாம்பாள் தவிர மற்றவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தபடி போனார்கள்//
//"நல்ல வேளை, வெங்கடாசலபதி படம் மட்டும் தலைகீழாக இருந்திருந்தால், இன்னேரம் ஆபீஸில் இரண்டு பேர் சிரசாசனம் செய்து கொண்டிருந்திருப்பார்கள்."//
settai rocks!!!!!!!!!
Hillarious!
Congrats for 250!
சிகப்பு, நீலம், பச்சை படங்கள் அருமை. மற்றவை படித்துவிட்டு பிறகு எழுதுவேன். இப்போது ஒரு அவசர வேலையாகச் செல்கிறேன். அன்புடன் vgk
You are the branded bogger for the best satirical postings in Tamil Settai. Congratulation for 250
Congratulations Settai for 250th post! Asusual, very entertaining post!:)))
வரிக்கு வரி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கிறீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள் - 250க்கும்!
250க்கு வாழ்த்துகள். ஆமா அந்த ராமபவன் எங்கிருக்கு:))
250-வது போஸ்டுக்கு வாழ்த்துக்கள் சேட்டையாரே! வெத்துவேட்டில் தொடங்கி சிரசாசனம் வரை காமெடி தோரணம்தான் போங்க!!...:)
250 வது பதிவு!!!!!
அசத்துங்க அசத்துங்க மக்கா....
வரிக்குவரி செம சேட்டை.. :-)))
\\என்னை சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யன் என்று எண்ணத்தொடங்கிவிட்டார்கள். விட்டிருந்தால் நாரதகான சபாவில் அரங்கேற்றமே நடந்திருக்கும்.\\
\\நம்ம ரெண்டு பேரை நம்பி வேலைகொடுத்தவரு மாப்பிள்ளை நல்ல படம்னாலும் நம்புவாரு!"\\
உதாரண புருஷரய்யா நீர்..!! கலக்கல் 250வது இடுகைக்கு வாழ்த்துகள்.
250 க்கு வாழ்த்துக்கள் நண்பா
250 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். விரைவில் 1000 எட்டவும்.
சூப்பராக இருந்தது இந்தப்பதிவு.
மிகவும் ரசித்தது:
//இத்தனை தகுதிகளோடு ஏற்கனவே நான் ஒருத்தன் இருக்கிறபோது, முதலாளி ஏன் இந்த வால்யூ-அடிஷன் செய்தார் என்பது இன்றுவரை புரியவேயில்லை.//
வாழ்த்துக்கள். இன்று எனக்கு மேலும் ஒரு பேரக்குழந்தை (வால்யூ-அடிஷன்) பிறந்துள்ளதால், பின்னூட்டமிட தாமதம் ஆகிவிட்டது.
அன்புடன் vgk
250 வது பதிவுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்
பதிவு படிக்க படிக்க பழைய நாகேஷ் வீரப்பன் காமடி போல
ரசிக்கும்படியாக இருந்தது
நல்ல குஷாலான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
:)
// நானும் மண்ணடியிலேயே ஆங்காங்கே டீ குடிப்பது//
தில்லு முள்ளு ரஜினி ஞாபகம் வந்தது. மண்ணடி குடோன்.
"நம்ம ரெண்டு பேரை நம்பி வேலைகொடுத்தவரு மாப்பிள்ளை நல்ல படம்னாலும் நம்புவாரு!"//
ஹி!ஹி! ஒரே வரியில் திரைப்பட விமர்சனம்!!!
//நிரூபன் said...
வெத்துவேட்டு வெங்கி- பெயரே ஒரு மார்க்கமாக, யாரையோ, திட்டுவது போல இருக்கிறதே;-))//
சேச்சே! இந்த இணையத்துலே திட்டுறதையே பொழப்பா ஒண்ணு ரெண்டு பேருதான் வச்சிருக்காய்ங்க! நமக்கு அந்த கலையெல்லாம் வராது சகோதரம்! :-)
//ஆஹா... ஆஹா.. என்ன ஒரு விளக்கம்...
சேட்டை...கலக்குறீங்களே!//
உங்களை மாதிரி நண்பர்கள் உற்சாகப்படுத்தும்போது கலக்கறதுக்கென்ன சகோதரம்...? :-)
//அப்போ, உங்களுக்கு ஒரு நண்பன் கிடைச்சிட்டான் என்று சொல்ல வாறீங்க...ஹி...ஹி...//
ஹிஹி! அதே! அதே!
//ஹி....ஹி...ஒரு அப்பாவியை வைச்சு, அடாவடித்தனம் பண்ணுறீங்களே சேட்டை.இது நியாயமா?//
உங்களுக்கு மேட்டரே தெரியாதா? நம்மூருலே யாராவது அப்பாவின்னா அவனை வச்சுத்தான் அடாவடித்தனமே பண்ணுறது. :-)))
//வாழ்த்துக்கள் சேட்டை, தொடர்ந்தும் நீங்கள் சேட்டை செய்து, எங்களையும் கலாய்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.//
நண்பரே, ஒரு இடுகையை வாசித்து, ரசித்து ரசித்துப் பின்னூட்டமிடுகிற உங்களைப் போன்ற நண்பர்கள் தான் எனக்கு உந்துதல் தருகிறார்கள்.
//உங்கள் பதிவுகளிற்கு நான் புதியவன், படித்த ஒரு சில பதிவுகளின் மூலம், நகைச்சுவைகளால் என் மனதை உங்கள் பதிவு கொள்ளை கொண்டு விட்டது சகோ.//
அது தான் எனது நோக்கமும் கூட! நானும் மகிழ்ந்து இயன்றால், பிறரையும் ஓரளவுக்கு மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கம் ஒன்றுடனேயே எழுதுகிறேன். அம்மா உறுதுணையாக இருந்து அருள்பாலிக்கிறாள்.
//கதையினை, கலாய்ப்பினை வெத்து வேட்டு எனும் வெங்கியில் தொடங்கி, வெங்கடாசலபதியைத் தரிசித்து, இறுதியில் இப்போ வாற படங்களின் கதையின் தரத்தினையும் கலாய்த்து நிறைவு செய்திருக்கிறீர்கள்.//
நல்ல வேளை, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடியவில்லை என்று நம்புகிறேன். உங்களது கருத்து மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.
தொடரும் உங்களது உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சகோதரம்!
//சி.பி.செந்தில்குமார் said...
250 அடித்த பின்னும் அசராமல் அடித்து ஆடும் ( பதிவை) அண்ணன் சேட்டைக்கு இந்த பாராட்டு மாலையை அணீவிக்கிறோம்//
தல, 250 எல்லாம் பெரிய விஷயமில்லை. தொடர்ந்து வந்து வாசித்து, உற்சாகப்படுத்த இவ்வளவு நல்ல உள்ளங்கள் இருப்பது தான் கடவுளின் வரம் என்று கருதுகிறேன். மிக முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர் தல...! மிக்க நன்றி!
//சிநேகிதன் அக்பர் said...
250 க்கு வாழ்த்துகள் சேட்டை. தொடர்ந்து கலக்குங்கள்.//
எல்லாம் உங்களைப் போன்றோர் தரும் உற்சாகமும் ஆதரவும் தான். மிக்க நன்றி அண்ணே!
//வெங்கட் நாகராஜ் said...
பள்ளி கொண்ட வேங்கடாஜலபதி பெருமாள் --- :)))) நல்ல நகைச்சுவை இடுகை. 250-ஆவது இடுகைக்கு வாழ்த்துகள்.//
வெங்கட்ஜீ! ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ந்து எனது இடுகைகளை வாசித்துப் பின்னூட்டம் இடுபவர்கள் நீங்கள்! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது...புரியவில்லை.
//பெசொவி said...
settai rocks!!!!!!!!! Hillarious!//
வாருங்கள் நண்பரே! இடுகையை முழுமையாக வாசித்திருப்பது புரிகிறது.
//Congrats for 250!//
மிக்க நன்றி நண்பரே! தொடர்ந்து வந்து ஆதரவு தருக!
//வை.கோபாலகிருஷ்ணன் said...
சிகப்பு, நீலம், பச்சை படங்கள் அருமை.//
ஐயா, அது ’த்ரீ இடியட்ஸ்" இந்தித் திரைப்படத்தின் படம். :-)
//மற்றவை படித்துவிட்டு பிறகு எழுதுவேன். இப்போது ஒரு அவசர வேலையாகச் செல்கிறேன். அன்புடன் vgk//
சாவகாசமாக வாருங்கள் ஐயா! காத்திருக்கிறேன்! மிக்க நன்றி! :-)
//கக்கு - மாணிக்கம் said...
You are the branded bogger for the best satirical postings in Tamil Settai. Congratulation for 250//
நண்பரே, வலையுலகில் பல பிரபலங்களும் பெரிதும் மதிப்பவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் வாழ்த்து மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி!
//அநன்யா மஹாதேவன் said...
Congratulations Settai for 250th post! Asusual, very entertaining post!:)))//
வாங்கோ, வாங்கோ, நன்னாயிருக்கேளா? பார்த்து ரொம்ப நாளாயிடுத்தோன்னோ? வந்ததுலே பரமசந்தோஷம்! படுதிருப்தி! அடிக்கடி வந்துண்டு போயிண்டிருங்கோ! :-)
ரொம்ப நன்றி!
//middleclassmadhavi said...
வரிக்கு வரி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்திருக்கிறீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள் - 250க்கும்!//
மிக்க நன்றி! அண்மைக்காலமாக எல்லா இடுகைகளிலும் தவறாமல் கருத்து எழுதி உற்சாகப்படுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி!
//வானம்பாடிகள் said...
250க்கு வாழ்த்துகள்.//
ஆஹா, எவரெஸ்டை எட்டியது போலிருக்கிறது ஐயா, உங்கள் வாழ்த்துக்களைப் பார்த்து....மிக்க நன்றி ஐயா!
//ஆமா அந்த ராமபவன் எங்கிருக்கு:))//
ஐயா, தம்பு செட்டித் தெருவிலே இருக்கு. அறுபது வருடம் பழமையான ஹோட்டல். காளிகாம்பாள் கோவில் அருகில் இருக்கிறது.
//தக்குடு said...
250-வது போஸ்டுக்கு வாழ்த்துக்கள் சேட்டையாரே! வெத்துவேட்டில் தொடங்கி சிரசாசனம் வரை காமெடி தோரணம்தான் போங்க!!...:)//
அதெல்லாம் இருக்கட்டும், இத்தனை நாட்கள் கழித்து உங்களை இங்கு பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! :-)
//MANO நாஞ்சில் மனோ said...
250 வது பதிவு!!!!! அசத்துங்க அசத்துங்க மக்கா....//
அண்ணாச்சி, உற்சாகப்படுத்துறதுலே அண்ணாச்சிக்கு நிகர் அண்ணாச்சி தான்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன். திரும்ப ரிப்பீட்டிக்கிறேன். மிக்க நன்றி! :-)
//அமைதிச்சாரல் said...
வரிக்குவரி செம சேட்டை.. :-)))//
வாங்க, வாங்க! ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து!
மிக்க நன்றி!
//சேலம் தேவா said...
உதாரண புருஷரய்யா நீர்..!! கலக்கல் 250வது இடுகைக்கு வாழ்த்துகள்.//
வாங்க, வாங்க! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி! :-)
//விக்கி உலகம் said...
250 க்கு வாழ்த்துக்கள் நண்பா//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! :-)
//வை.கோபாலகிருஷ்ணன் said...
250 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். விரைவில் 1000 எட்டவும்.//
ஐயாவின் ஆசிகளும் அன்னை காளிகாம்பாளின் அருளுமிருந்தால், எல்லாம் நடக்கும்.
// சூப்பராக இருந்தது இந்தப்பதிவு. மிகவும் ரசித்தது://
மிக்க நன்றி ஐயா, வரிக்கு வரி சிலாகித்து ரசிக்கிற உங்களது பெருந்தன்மையை என்னவென்று சொல்ல...!
//வாழ்த்துக்கள். இன்று எனக்கு மேலும் ஒரு பேரக்குழந்தை (வால்யூ-அடிஷன்) பிறந்துள்ளதால், பின்னூட்டமிட தாமதம் ஆகிவிட்டது.//
ஆஹா, பிரமாதம், திருச்சி வரும்போது வந்து ட்ரீட் கேட்போமில்லே...? பேரனின் வருகையால் மகிழ்ந்திருக்கிற உங்களது இல்லத்தில் மென்மேலும் மகிழ்ச்சி பொங்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
//Ramani said...
250 வது பதிவுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்//
வருக வருக, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//பதிவு படிக்க படிக்க பழைய நாகேஷ் வீரப்பன் காமடி போல ரசிக்கும்படியாக இருந்தது. நல்ல குஷாலான பதிவு. தொடர வாழ்த்துக்கள்//
தாராளமாக பாராட்டியிருக்கும் உங்களுக்கு மீண்டும் நன்றிகள். தொடர்ந்து வருக! :-)
//ஷர்புதீன் said...
:)//
மிக்க நன்றி! :-)
//! சிவகுமார் ! said...
தில்லு முள்ளு ரஜினி ஞாபகம் வந்தது. மண்ணடி குடோன்.//
நம்ம பொழைப்பே தில்லுமுல்லு தான்; அதாவது மண்ணடியிலே தான் உத்தியோகம். ஹிஹி!
//தமிழ் மகன் said...
நம்ம ரெண்டு பேரை நம்பி வேலைகொடுத்தவரு மாப்பிள்ளை நல்ல படம்னாலும் நம்புவாரு!"// ஹி!ஹி! ஒரே வரியில் திரைப்பட விமர்சனம்!!!//
ஆமாம் நண்பரே! பெரிசா விமர்சனமெல்லாம் எழுத வரதில்லையே எனக்கு...? :-)))
மிக்க நன்றி! :-)
எப்பவும் போல கலக்கல் சேட்டை :-)
[ வேற என்ன சொல்றதுன்னே தெரில.. உங்க நகைச்சுவை நடை மைண்ட் ப்ளோயிங் ]
250-வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Very nice post.. thanks boss
அருமையான பகடி சேட்டை.
ஆமாம் 500 எப்போ?
250 க்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.. தொடர்ந்து கலக்குங்க.. உங்கள் சேட்டைக்கு நாங்க ரெடி..
Post a Comment