Wednesday, April 20, 2011

மணமகள் தேவை


"என்னாங்க இது? அத்துவானக் காடாயிருக்குதே?" மல்டிப்ளக்ஸ் தியேட்டரில் தப்பாக டிக்கெட் வாங்கி, தெலுங்குப்படம் பார்க்க உட்கார்ந்தது போல குஞ்சுமணி மலங்க மலங்க விழித்தாள்.


"கிராமம்னா அப்படித்தானிருக்கும். வந்தவேலையைக் கவனிப்போம் வா," என்று கூறிய செல்லமணி, அங்கு நின்றிருந்த பெரியவரை நெருங்கினார்.

"பெரியவரே, இங்கே கறார் கந்தசாமி வீடு எங்கேயிருக்கு?"

"நேராப்போனீங்கன்னா கந்தசாமி வீட்டு நெலப்படியிலே தான் முட்டணும்," என்று வழிசொன்னார் பெரியவர். "பொண்ணு பார்க்கவா வந்திருக்கீங்க? என்னங்க, புள்ளையைப் பெத்தவங்களுக்கு பொறுப்பு வேண்டாமா? இவ்வளவு லேட்டாவா வர்றது? அங்கே காலையிலே அஞ்சு மணியிலேருந்து எல்லாரும் கியூவிலே நிக்கிறாங்க!"

"ஐயையோ! சீக்கிரம் வா போகலாம்," என்று செல்லமணி விரைய, குஞ்சுமணியும் வேட்பாளருக்குப் பின்னால் போகும் தேர்தல் அதிகாரி போலப் பின்தொடர்ந்தாள்.

"ஐயையோ, என்னது இத்தனை க்யூ நிக்குது?" என்று மலைத்துப்போன செல்லமணி, ஏதோ ஒரு வரிசையில் இடையில் புக முயற்சிக்கவும், ஒருவர் சீறினார்.

"யோவ், பின்னாலே போய் நில்லுய்யா! மனசுக்குள்ளே பெரிய புத்திசாலின்னு நினைப்போ?"

"இல்லீங்க, நானும் உங்களை மாதிரித்தானுங்க! அதாவது, உங்களை மாதிரி பொண்ணு பார்க்க வந்தவன்னு சொல்லவந்தேனுங்க!" என்று கெஞ்சினார் செல்லமணி.

"யோவ், இந்த கியூவிலே எம்.பி.ஏ.படிச்ச பிள்ளைங்களைப் பெத்தவங்கதான் நிக்கணுமாம். உன் பிள்ளை என்ன படிச்சிருக்கான்?"

"அவன் படிக்கவெல்லாம் இல்லீங்க! ஆனா, எம்.எஸ்.சி பாஸ் பண்ணிட்டான்," என்று பரிதாபமாகக் கூறினார் செல்லமணி.

"எம்.எஸ்.சியா? யோவ், எம்.டெக், எம்.பி.ஏ, ஸி.ஏ மாதிரி பிள்ளைங்களுக்கு மட்டும் தான் கியூ!" என்று அலட்சியமாகச் சிரித்தார் அந்த நபர்.

"ஐயோ, அப்போ ஆர்ட்ஸ் குரூப், சயின்ஸ் குரூப் படிச்ச புள்ளைங்களுக்கு....?" செல்லமணி பதறினார்.

"அதுவா, கொஞ்ச நேரம் கழிச்சு பொண்ணைப் பெத்தவரு வந்து பத்து டோக்கனை வீசி எறிவாரு! எப்படியாவது முண்டியடிச்சு ஒரு டோக்கனை எடுத்திட்டீங்கன்னா, உங்க புள்ளை பெயரை வெயிட்டிங் லிஸ்டுலே வச்சிருப்பாராம்!"

"கடவுளே!" குஞ்சுமணி கண்ணீர் மல்கினார். "எப்படியாவது இந்தப் பொண்ணாவது என் புள்ளைக்குக் கிடைக்கிறா மாதிரி பண்ணினா, பழநிக்கு வந்து என் புருசனுக்கு மொட்டையடிக்கிறேன்!"

"என்னாது?" செல்லமணி சீறினார். "இப்படி ஒவ்வொண்ணுத்துக்கும் மொட்டையடிக்க என் தலைதான் கிடைச்சுதா? கடைசியா நான் எப்போ ஹேர்-கட் பண்ணினேன்னே எனக்கு மறந்து போச்சு! பேசாம வாயை மூடிட்டு வா! உன் புள்ளைக்கு விதிச்சிருந்தா கல்யாணம் ஆகும்."

"யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!" நாட்டாமை விஜயகுமார் போல வீட்டிலிருந்து கைகூப்பியபடி வெளிவந்தார் கறார் கந்தசாமி. "இன்னிக்கு என் பொண்ணுக்கு லேசா ஒத்தத்தலைவலி இருக்கிறதுனாலே பொண்ணு பார்க்கிற புரோகிராம் கேன்சல்! எல்லாரும் போயிட்டு அடுத்த வாரம் வாங்க!"

"ஐயையோ!"

"அட கடவுளே!"

கூட்டத்தில் எல்லாரும் பெருமூச்சுடன் கூறிக்கலையத் தொடங்கினர்.

"ஏனுங்க, நம்ம பிள்ளைக்குக் கல்யாணமே ஆகாதா?" யாரோ ஒரு பெண்மணி கண்களைத் துடைத்துக்கொண்டு கணவனிடம் கேட்டார்.

"ஆம்பிளையாப்பொறக்கவே கூடாது!" என்று யாரோ ஒருவர் புலம்பிக்கொண்டே போனார்.

வந்தவழியே திரும்ப நடந்து, செல்லமணியும் குஞ்சுமணியும் பஸ் நிறுத்தத்தை அடைந்தபோது, அங்கே ஒருவர் எல்லாருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு கொடுத்துக்கொண்டிருந்தார்.

"சார், இந்தப் பொண்ணு கிடைக்கலேன்னு மனசைத் தளர விடாதீங்க சார்! எப்படியும் உங்க புள்ளைக்கும் பொண்ணு கிடைச்சு, அவருக்கும் கல்யாணம் ஆகாமப் போகாது. அப்படிக் கல்யாணம் ஆகி, அவருக்கும் ஆண்குழந்தை பொறந்து, அது வளர்ந்ததும் பொண்ணுக்காக இப்படி அலையக்கூடாதில்லீங்களா? அதுனாலே இன்னும் பொறக்காத உங்க பேரனுக்கு எங்களோட ஜெயவிவாஹ் மேட்ரிமோனியல் சர்வீஸ்லே ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிருங்க சார்!" என்று சொல்லிச் சொல்லி எல்லாருடைய கைகளிலும் ஒரு விசிட்டிங் கார்டை திணித்துக்கொண்டிருந்தார்.

"கலிகாலம்!" என்று தலையிலடித்துக்கொண்டார் செல்லமணி. "நான் கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு நினைச்சபோது பொண்ணைப் பெத்தவங்க என் வீட்டு வாசலிலே கியூவிலே நின்னாங்க. இப்போ என் புள்ளைக்கு பொண்ணு தேடி நான் வீடு வீடாப்போயி க்யூவிலே நிக்க வேண்டியிருக்கு!"

"அதெல்லாம் இருபது இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாலே சார்! இப்போ 2035 நடந்திட்டிருக்கு! உங்க தலைமுறை பெண்சிசுக்களைக் கருவிலேயே கொன்னதாலே தான் இந்த கூத்தெல்லாம் நடக்குது. இன்னும் உங்க பேரன்பேத்தி காலத்துலே என்னென்ன நடக்குமோ?" என்று யாரோ ஒரு வழிப்போக்கர் கூறிச்செல்லவும் செல்லமணியும், குஞ்சுமணியும் தலைகவிழ்ந்தனர்.

30 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டும் போட்டாச்சி ஹே ஹே ஹே ஹே ஹே...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான பதிவு. 2035 க்கெல்லாம் போக வேண்டாம். இப்போதே 2011 லேயே ஆரம்பிச்சாச்சு.

இப்போவெல்லாம் பையனுக்கு பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாத்தான் இருக்கு.

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சொல்லுவார்கள்.

ஆணுக்கொரு காலம் வந்தது இப்போ பொண்ணுக்கொரு காலம் வந்துள்ளது.

வரவேற்கத்தக்க நல்லதொரு மாற்றம் தான். பெண்களும் படிக்கிறார்கள், நல்லா சம்பாதிக்கிறார்கள். மாப்பிள்ளைப்பையன் அப்படியிருக்கணும், இப்படியிருக்கணும், இந்த குவாலிபிகேஷன் வேணும், இவ்வளவு சம்பாதிக்கணும் என்றெல்லாம் நிறைய டிமாண்ட் வைக்கிறார்கள்.

பையனைப்பெற்றவன் பாடெல்லாம் வயிற்றில் புளிகரைப்பதாகவே உள்ளது.

பதிவுக்குப்பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலைப்பார்த்ததும் பயந்தே போய்ட்டேன்.. அண்ணன் 2 வது சுற்று ஏச்சு வார்த்தைக்கு அடி போடறாரோன்னு .. நல்ல வேளை. ( ஒண்ணு கிட்ட படற அவஸ்தை ...)

Chitra said...

I came across this article:
http://www.hindu.com/thehindu/mag/2003/08/31/stories/2003083100250400.htm

Even though it is about ten years old, it has few points to think about.

பொன் மாலை பொழுது said...

ஒரு காலத்தில் பெண்கள்.இப்போது ஆண்களின் முறை இது.

www.eraaedwin.com said...

அச்ச்சச்சோ, என்ன பகடி இது. அருமை அருமை

www.eraaedwin.com said...

சரியான பகடி போங்க சேட்டை.

Anonymous said...

2035 வரை போக வேண்டாம். இப்பயே நிலவரம் கலவரமாத்தான் இருக்கு.

எல் கே said...

உங்களுக்குத்தான் பெண் தேடரீங்கலோன்னு நினச்சிட்டேன். வழக்கம்போல் கருத்துடன் கூடிய பதிவு

வெங்கட் நாகராஜ் said...

இப்போதே நிலைமை இது தான் சேட்டை. ஹரியானாவின் சில கிராமங்களில் பெண்களே இல்லாத நிலையில், காசு கொடுத்து அவர்களாகவே வேறு மாநிலத்தில் இருந்தெல்லாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் - முக்கியமாய் கேரளாவிலிருந்து....

Unknown said...

சரியா சொன்னிங்க அண்ணாச்சி, அது சரி, எப்ப நீங்க தமன்னாக்கு மாறுனீங்க?
ஸ்ரேயா வாழ்க்கை என்ன ஆகுறது?

சிநேகிதன் அக்பர் said...

சரியா சொன்னிங்க அண்ணாச்சி, அது சரி, எப்ப நீங்க தமன்னாக்கு மாறுனீங்க?
ஸ்ரேயா வாழ்க்கை என்ன ஆகுறது?

ஹா.ஹா..ஹா... செம காமெடி.

கதை நல்லாயிருக்கு சேட்டை.

ம.தி.சுதா said...

////"ஆம்பிளையாப்பொறக்கவே கூடாது!" என்று யாரோ ஒருவர் புலம்பிக்கொண்டே போனார்.////

எனக்கென்னவோ பில்டப் மாதிரி இருக்குங்க... ஹ..ஹ..ஹ..

middleclassmadhavi said...

இப்ப பூஜாகுமாரியின் கதை செய்தித்தாள், புத்தகங்களில் அடிபடுகிறதே.!!

இராஜராஜேஸ்வரி said...

ஆம்பிளையாப்பொறக்கவே கூடாது!"/

கதை நல்லாயிருக்கு

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

வடை....//

வாங்க அண்ணாச்சி! :-)

//ஓட்டும் போட்டாச்சி ஹே ஹே ஹே ஹே ஹே...//

ரொம்ப நன்றி அண்ணாச்சி! கருமமே கண்ணாயினார்-னா அது நாஞ்சிலார் தான்! :-)

settaikkaran said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையான பதிவு. 2035 க்கெல்லாம் போக வேண்டாம். இப்போதே 2011 லேயே ஆரம்பிச்சாச்சு.//

ஆமாம் ஐயா. 2035-ல் இப்படியொரு நிலைமை சர்வசாதாரணமாகி விடலாம் என்று ஒரு wild guess பண்ணினேன். :-)

//இப்போவெல்லாம் பையனுக்கு பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாத்தான் இருக்கு.//

உண்மை! நானும் தொடர்ந்து கேள்விப்படுகிறேன்.

//யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சொல்லுவார்கள். ஆணுக்கொரு காலம் வந்தது இப்போ பொண்ணுக்கொரு காலம் வந்துள்ளது.//

The circle is complete! :-)

//வரவேற்கத்தக்க நல்லதொரு மாற்றம் தான். பெண்களும் படிக்கிறார்கள், நல்லா சம்பாதிக்கிறார்கள். மாப்பிள்ளைப்பையன் அப்படியிருக்கணும், இப்படியிருக்கணும், இந்த குவாலிபிகேஷன் வேணும், இவ்வளவு சம்பாதிக்கணும் என்றெல்லாம் நிறைய டிமாண்ட் வைக்கிறார்கள்.//

நியாயம் தான் ஐயா! ஒரு காலத்தில் ஆண்கள் என்னென்ன கண்டிஷன்களைப் போட்டார்கள் - "மணல்கயிறு" எஸ்.வி.சேகர் மாதிரி....? இப்போது அனுபவிக்கிறார்கள்.

//பையனைப்பெற்றவன் பாடெல்லாம் வயிற்றில் புளிகரைப்பதாகவே உள்ளது.//

ஒருவிதத்தில் நல்லது. பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போலவே வளர்ப்பார்களே?

//பதிவுக்குப்பாராட்டுக்கள்.//

ரொம்ப நன்றி ஐயா!

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

டைட்டிலைப்பார்த்ததும் பயந்தே போய்ட்டேன்.. அண்ணன் 2 வது சுற்று ஏச்சு வார்த்தைக்கு அடி போடறாரோன்னு .. நல்ல வேளை. ( ஒண்ணு கிட்ட படற அவஸ்தை ...)//

தல...! ஏற்கனவே பெரிய இடத்து சம்பந்தம்-னு கூட ஒரு இடுகை போட்டிருந்தேனே? :-))

மிக்க நன்றி தல...!

settaikkaran said...

//Chitra said...

I came across this article:
http://www.hindu.com/thehindu/mag/2003/08/31/stories/2003083100250400.htm

Even though it is about ten years old, it has few points to think about.//


இந்த விஷயம் குறித்து ஒரு இடுகை எழுதச் சொன்னவர் ஒரு பெண்மணி ( பதிவர் அல்ல!). அவருக்கும் இந்த சுட்டியை அனுப்பியிருக்கிறேன். சில தகவல்கள் வாசிக்கும்போது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மிக்க நன்றி சகோதரி!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

ஒரு காலத்தில் பெண்கள்.இப்போது ஆண்களின் முறை இது.//

அதே தான்! இப்போது ஆண்கள் எல்லாரும் கல்யாணம் பண்ணி வைக்கிற சாமியைத் தேடி கோவில் கோவிலாக அலைய ஆரம்பித்து விட்டார்கள். மிக்க நன்றி!

settaikkaran said...

//இரா.எட்வின் said...

அச்ச்சச்சோ, என்ன பகடி இது. அருமை அருமை//

வாங்க வாங்க! இது பகடியாய் இருந்தாலும், இப்படியொரு நிலைமை விரைவில் வந்தாலும் வரும் என்று தோணுது.

// சரியான பகடி போங்க சேட்டை.//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

2035 வரை போக வேண்டாம். இப்பயே நிலவரம் கலவரமாத்தான் இருக்கு.//

ம்...நானும் அப்படித்தான் கேள்விப்படுகிறேன். இங்கே பலரும் அதைத் தான் சொல்லியிருக்கிறார்கள். மிக்க நன்றி!

settaikkaran said...

//எல் கே said...

உங்களுக்குத்தான் பெண் தேடரீங்கலோன்னு நினச்சிட்டேன். வழக்கம்போல் கருத்துடன் கூடிய பதிவு//

ஹிஹி! என்னை முன்னிலைப்படுத்தி நக்கல், கிண்டல் மட்டும் தான் பண்ணுவேன் கார்த்தி! மிக்க நன்றி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

இப்போதே நிலைமை இது தான் சேட்டை. ஹரியானாவின் சில கிராமங்களில் பெண்களே இல்லாத நிலையில், காசு கொடுத்து அவர்களாகவே வேறு மாநிலத்தில் இருந்தெல்லாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் - முக்கியமாய் கேரளாவிலிருந்து....//

நீங்கள் கொடுத்திருக்கிற தகவல் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது வெங்கட்ஜீ! ஆனால், வரதட்சணை வாங்கியவர்கள், கொடுப்பது ஒரு குரூரமான சந்தோஷத்தையும் கொடுக்கிறதே பாழும் மனித புத்திக்கு...! மிக்க நன்றி!

settaikkaran said...

//ஜ.ரா.ரமேஷ் பாபு said...

சரியா சொன்னிங்க அண்ணாச்சி,//

மிக்க நன்றி!

//அது சரி, எப்ப நீங்க தமன்னாக்கு மாறுனீங்க? ஸ்ரேயா வாழ்க்கை என்ன ஆகுறது?//

என்னங்க ஸ்ரேயாவோட குடும்பம் நடத்துனா மாதிரி சொல்றீங்க? ஸ்ரேயா கிடைக்காட்டி தமன்னா...! :-))

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

சரியா சொன்னிங்க அண்ணாச்சி, அது சரி, எப்ப நீங்க தமன்னாக்கு மாறுனீங்க? ஸ்ரேயா வாழ்க்கை என்ன ஆகுறது?//

எனக்கும் சேட்டைக்கும் இடையே வெறும் நட்புதான்னு ஸ்ரேயா அறிக்கை விட்டாங்களே, வாசிக்கலீங்களா அண்ணே? :-))

//ஹா.ஹா..ஹா... செம காமெடி.//

மிக்க நன்றி அண்ணே! :-)

settaikkaran said...

//♔ம.தி.சுதா♔ said...

////"ஆம்பிளையாப்பொறக்கவே கூடாது!" என்று யாரோ ஒருவர் புலம்பிக்கொண்டே போனார்.////

எனக்கென்னவோ பில்டப் மாதிரி இருக்குங்க... ஹ..ஹ..ஹ..//

ஹிஹி, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! இப்படியும் நடக்குமோன்னுற பயம்தான்...! மிக்க நன்றி!

settaikkaran said...

//middleclassmadhavi said...

இப்ப பூஜாகுமாரியின் கதை செய்தித்தாள், புத்தகங்களில் அடிபடுகிறதே.!!//

ஆமாங்க, நான் கூட இதை எழுதின பிறகுதான் கேள்விப்பட்டேன். மிக்க நன்றி!

settaikkaran said...

//இராஜராஜேஸ்வரி said...

ஆம்பிளையாப்பொறக்கவே கூடாது!"/

கதை நல்லாயிருக்கு//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ஷர்புதீன் said...

உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
:)
மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!