(எக்ஸ்கியூஸ் மீ, நீங்க சரியான அட்ரஸுக்குத்தான் வந்திருக்கீங்க!)
வத்தக்குழம்பு (அ) தேர்தல் அறிக்கைக்குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இலவசச்சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு
மொழிப்பற்று - 1 தேக்கரண்டி
சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்)
வறுமையொழிப்பு- 2 தேக்கரண்டி
ஈழம்-சிறிதளவு
இட ஒதுக்கீடு-1/2 தேக்கரண்டி
வரிக்குறைப்பு- 5 பல்
கொள்கை-சிறிதளவு
வளர்ச்சித்திட்டங்கள்-சிறிதளவு
சமூகநீதி-1/2 தேக்கரண்டி
மதச்சார்பின்மை-தேவையான அளவு
விவசாயம்-1 தேக்கரண்டி
மானியங்கள்-3 தேக்கரண்டி
சுயபிரதாபம்-1 கைப்பிடி
இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது. ஆகையால், தேவைக்கேற்ப குழம்பைச் செய்து வைத்துவிட்டால், அடுத்த சில தேர்தல்களுக்கும் இதே குழம்பை சுடவைத்து, ருசியுடன் பரிமாறி மகிழலாம்.
என்ன, உடனே வத்தக்குழம்பு செய்யக் கிளம்பிட்டீங்களா?
விரைவில் தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டசபைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்த சிறப்பு சமையல் குறிப்பு!
வத்தக்குழம்பு (அ) தேர்தல் அறிக்கைக்குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இலவசச்சலுகைகள் - 2 எலுமிச்சை அளவுக்கு
மொழிப்பற்று - 1 தேக்கரண்டி
சுயமரியாதை - 1/2 மூடி (துருவி நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்)
வறுமையொழிப்பு- 2 தேக்கரண்டி
ஈழம்-சிறிதளவு
இட ஒதுக்கீடு-1/2 தேக்கரண்டி
வரிக்குறைப்பு- 5 பல்
கொள்கை-சிறிதளவு
வளர்ச்சித்திட்டங்கள்-சிறிதளவு
சமூகநீதி-1/2 தேக்கரண்டி
மதச்சார்பின்மை-தேவையான அளவு
விவசாயம்-1 தேக்கரண்டி
மானியங்கள்-3 தேக்கரண்டி
சுயபிரதாபம்-1 கைப்பிடி
- இலவசச்சலுகைகளை 2 டம்ளர் அடுக்குமொழியில் ஊறவைத்து, நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் 1 தேக்கரண்டி விவசாயத்தை ஊற்றி, சமூகநீதி, மொழிப்பற்று, ஈழம் சேர்த்து வதக்கவும்.
- மொழிப்பற்று சிவந்தவுடன், வறுமையொழிப்பு, இட ஒதுக்கீடு சேர்த்து வதக்கிய பின், இலவசச்சலுகைகள் கரைசலை ஊற்றி மதச்சார்பின்மை போட்டு கொதிக்க விடவும்.
- வாணலியில் மானியங்களை ஊற்றி, சுயபிரதாபம் சேர்த்து, பொரிந்தவுடன், வரிக்குறைப்பை நசுக்கிப்போட்டு, அரைத்த சுயமரியாதை விழுது சேர்த்து, நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.
- வதங்கியதும், கொதித்துக் கொண்டிருக்கும் இலவசச்சலுகைகள் கரைசலில் கொட்டி, கொள்கை சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்
அவ்வளவுதான்! சுவையான தேர்தல் அறிக்கைக் குழம்பு தயார்!
இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது. ஆகையால், தேவைக்கேற்ப குழம்பைச் செய்து வைத்துவிட்டால், அடுத்த சில தேர்தல்களுக்கும் இதே குழம்பை சுடவைத்து, ருசியுடன் பரிமாறி மகிழலாம்.
என்ன, உடனே வத்தக்குழம்பு செய்யக் கிளம்பிட்டீங்களா?
Tweet |
53 comments:
VADA
WAIT..... READ AND COME
யாரும் எலெக்சன்ல சீட் தரதா சொன்னாங்களா..? இப்படி குழம்பு வைத்துக் கலக்குறீங்க... வாழ்த்துக்கள்
HAAAA..... SEMA COMEDY COOKING....
ONE DOUBT....
WHO WILL EAT THIS " VATHTHA KULAMBU "
அற்புதமான கற்பனை.
தாதாக்கள் தேவையான அளவு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்..
மானம் கெட்ட பொது ஜனங்கள் (அதாவது நாம்) இருக்கும் வரைக்கும் இதுமாதிரி வத்தகுழம்பு ரெசிப்பி வைத்திருக்கும் கருநாயும்,ஜெயா வும், சோனியாவும் , ராமதாசும், திருமாவும் இன்னும் எந்தெந்த நாய்களும், பன்னிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நாமும் பதிவு எழுதிக்கொண்டே இருக்கலாம் தலீவா!!
கொழம்பு ரொம்ப டெஸ்டு.
உங்ககிட்ட இருந்து இவ்வளவு சின்ன பதிவா... இருந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல வத்தக்குழம்பு சூப்பர்...
குசும்புதான் உங்களுக்கு..!!
முக்கியமான ஐட்டத்தை விட்டுடீங்க.. அதாண்னே.. டாஸ்மார்க் சரக்கை, 1 டீ ஸ்பூன் விட்டு, அதில் 1 துளி விஷம் போட்டு , சூடு ஆறும் வரை கலக்க வேண்டும்.. ஹி..ஹி
சூப் சேட்டை எங்க இருந்து இப்படி எல்லாம் ஐடியா வருது ?? இலவசத்துக்கு மயங்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் இப்படிதான் ஒன்னும் பண்ண முடியாது
ஹ...ஹ...ஹா......மக்களா பார்த்து இந்த வத்தக் குழம்பை தூக்கி எறியாதவரை....அவை ப்ரிட்ஜ்-லேயே இருக்கும்..
சேட்டைக்காரன்'ங்கிறது ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது. ஆனாலும் சூப்பர் குசும்பு
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது.
......வேதனையான உண்மை, சுடத்தான் செய்கிறது.
வீட்ல சமையல் யார் பாஸ்..
////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...
கடைசியில பெருங்காயத்தை சேர்க்காம விட்டுட்டீங்களே,
ஊழல் செஞ்ச பணம்கற "பெருங்காயத்"துலேர்ந்து கொஞ்சமே கொஞ்சம் எடுத்து குழம்பிலே தூவிட்டா "வெற்றி"மணம் வீசும் என்பது உறுதி!
ஏண்ணே.. இப்படி? டைட்டிலைப்பார்த்ததும் மிரண்டுட்டேன்..அப்புறம் பார்த்தா வழக்கமான அரசியல் நையாண்டி.. ஹா ஹா
காலைலயே உங்க பதிவு டைட்டிலை பார்த்தேன். ம் ம் அப்புறம் போய்க்கலாம்னு விட்டுட்டேன். காரணம் டைட்டில். அப்புறம் பார்த்தா சூடான இடுகைல சீக்கிரமா வந்து இருந்தது. அட.. என்ன மேட்டர்னு பார்த்தா...
>>>>> * வதங்கியதும், கொதித்துக் கொண்டிருக்கும் இலவசச்சலுகைகள் கரைசலில் கொட்டி, கொள்கை சேர்த்து கொதிக்க விடவும்.
* குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்
haa haa ஹா செம
கடைசியில பெருங்காயத்தை சேர்க்காம விட்டுட்டீங்களே,
ஊழல் செஞ்ச பணம்கற "பெருங்காயத்"துலேர்ந்து கொஞ்சமே கொஞ்சம் எடுத்து குழம்பிலே தூவிட்டா "வெற்றி"மணம் வீசும் என்பது உறுதி!
!!! முக்கியமான மேட்டர்: சமையல்காரர் ஐந்து வருடத்திற்கு நம் கண்ணில் பட மாட்டார்!
அண்ணே! அட்டகாசம்! கூட்டணி அவியல் அப்படின்னு ஒன்னு எலக்ஷன் முன்னாடி உங்க கிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன். ;-)
இந்தக் குழம்பை அடுத்த ஐந்தாண்டுகள் வரைக்கும் ஃபிரிட்ஜிலேயே வைத்திருந்தாலும் ஊசிப்போகாது//
ஆஹா இந்த வருட சிறப்பு அரசியல் பதிவு
இவனுக ஊழலை எதுல மறைக்கிறது...அந்த நாத்தம் தாங்க முடியலையே
What an innovative thinking Settai ?! wondering...
வத்தக்குழம்பு சாப்பிட்டு பேதியாக இருந்தா சரிதான் :)
அரசியல் சாக்கடை என்பதை வத்தக்குழம்பாக மாற்றிக்காட்டிய சேட்டை வாழ்க.
//குழம்பு கொதித்து விவசாயம் பிரிந்துவரும் வரையிலும் அடுப்பில் வைத்து பிறகு எடுக்கவும்//
ரொம்பப் பிரமாதம்க...
எத்துனை பாராட்டினாலும் தகும்..
இதைவிட நகைச்சுவையோடு நம் நிலைமையை நொந்து கொள்ள முடியாது..
Hats off to you.
God Bless YOu
அருமையான அரசியல் குழம்பு..!! நையாண்டியில் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை..!! :)
//ஓட்ட வட நாராயணன் said...
VADA//
என்னது வாடாவா? ஓ, வடையா...ஹிஹி..சரி சரி!
//WAIT..... READ AND COME//
கம்முங்க...கம்மிக் கும்முங்க! :-)
//HAAAA..... SEMA COMEDY COOKING....ONE DOUBT.... WHO WILL EAT THIS " VATHTHA KULAMBU "//
எவ்ரிபடி இஸ் ஈட்டிங் திஸ் வத்தக்குழம்பு எவர் சின்ஸ் அவர் கண்ட்ரீ காட் இண்டிபெண்டன்ஸ்! :-)))
மிக்க நன்றி!
//மதுரை சரவணன் said...
யாரும் எலெக்சன்ல சீட் தரதா சொன்னாங்களா..? இப்படி குழம்பு வைத்துக் கலக்குறீங்க... வாழ்த்துக்கள்//
சீட் தர ஆளு ரெடி, ஓட்டு தர நீங்க ரெடியா? :-))
மிக்க நன்றி!
//வேல் தர்மா said...
அற்புதமான கற்பனை. தாதாக்கள் தேவையான அளவு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்..//
தேர்தல் அறிக்கையிலேயே தாதாவா? நாடு ரொம்ப இம்ப்ரூவ் ஆயிடுச்சு போலிருக்கே? :-))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//கக்கு - மாணிக்கம் said...
மானம் கெட்ட பொது ஜனங்கள் (அதாவது நாம்) இருக்கும் வரைக்கும் இதுமாதிரி வத்தகுழம்பு ரெசிப்பி வைத்திருக்கும் கருநாயும்,ஜெயா வும், சோனியாவும் , ராமதாசும், திருமாவும் இன்னும் எந்தெந்த நாய்களும், பன்னிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நாமும் பதிவு எழுதிக்கொண்டே இருக்கலாம் தலீவா!!//
நண்பரே, எல்லாரும் அப்படித்தான் என்று நம்மால் பொதுமைப்படுத்தி விட முடியாது. நல்ல மக்களும் இருக்கிறார்கள் என்பதால் தான், அவர்கள் காதில் விழும்படியாக நம் போன்றவர்கள் இடுகையாவது எழுதுகிறோம். எல்லாரும் மானம்கெட்டவர்களாக இருந்தால், எதற்கு எழுத வேண்டும்? சுத்த வேஸ்ட்...! :-)
மிக்க நன்றி!
//தமிழ்வாசி - Prakash said...
கொழம்பு ரொம்ப டெஸ்டு.//
பாரம்பரீயம் மிக்கதாயிற்றே! :-)
மிக்க நன்றி!
//Philosophy Prabhakaran said...
உங்ககிட்ட இருந்து இவ்வளவு சின்ன பதிவா... //
சமையல் தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் பெரிசா வந்திருக்குமோ என்னமோ? :-)
//இருந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல வத்தக்குழம்பு சூப்பர்...//
வத்தக்குழம்பாச்சே, கொஞ்சம் காரம் தூக்கலாயிருந்தாத் தான் நல்லாயிருக்கும் நண்பரே! மிக்க நன்றி!
//பட்டாபட்டி.... said...
குசும்புதான் உங்களுக்கு..!!//
என்னண்ணே, இப்போத்தான் தெரியுமா? :-)
//முக்கியமான ஐட்டத்தை விட்டுடீங்க.. அதாண்னே.. டாஸ்மார்க் சரக்கை, 1 டீ ஸ்பூன் விட்டு, அதில் 1 துளி விஷம் போட்டு , சூடு ஆறும் வரை கலக்க வேண்டும்.. ஹி..ஹி//
அதெல்லாம் ஒளிவுமறைவா நடக்குற சங்கதியாச்சே, வெளிப்படையா அறிக்கையிலே சொல்ல முடியாதே! (யாரு கண்டாங்க, இந்தவாட்டி யாராச்சும் ட்ரை பண்ணினாலும் பண்ணுவாய்ங்க!)
மிக்க நன்றி அண்ணே! :-)
//எல் கே said...
சூப் சேட்டை எங்க இருந்து இப்படி எல்லாம் ஐடியா வருது ?? //
எல்லாம் ரோட்டுலே போஸ்டரிலே சிரிக்கிற புண்ணியவானுங்க கிட்டேருந்துதான் கார்த்தி! :-)
//இலவசத்துக்கு மயங்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் இப்படிதான் ஒன்னும் பண்ண முடியாது//
அதே! மிக்க நன்றி கார்த்தி! :-)
//Ponchandar said...
ஹ...ஹ...ஹா......மக்களா பார்த்து இந்த வத்தக் குழம்பை தூக்கி எறியாதவரை....அவை ப்ரிட்ஜ்-லேயே இருக்கும்..//
வத்தக்குழம்பை விடவும், அதை கொதிக்க வைக்கிறவங்களைத் தூக்கி எறியணும். :-)
மிக்க நன்றி நண்பரே!
//கவிதை காதலன் said...
சேட்டைக்காரன்'ங்கிறது ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது. ஆனாலும் சூப்பர் குசும்பு//
பெயரிலே என்னத்த இருக்கு? நக்கீரன்-னு பெயரு வச்சிருந்தா ஆற்றுப்படை எழுத முடியுமா என்ன? :-)
மிக்க நன்றி நண்பரே!
//கவிதை காதலன் said...
சேட்டைக்காரன்'ங்கிறது ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது. ஆனாலும் சூப்பர் குசும்பு//
பெயரிலே என்னத்த இருக்கு? நக்கீரன்-னு பெயரு வச்சிருந்தா ஆற்றுப்படை எழுத முடியுமா என்ன? :-)
மிக்க நன்றி நண்பரே!
//வேடந்தாங்கல் - கருன் said...
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!//
எங்கே யோசிக்க விடறாங்க? நான் ஒரு மொக்கை போடுறதுக்கு முன்னாடி அவங்கதான் புதுப்புது ஐடியாவா கொடுத்திட்டே இருக்காங்களே? :-)
//அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே.. வாழ்த்துக்கள்....//
மிக்க மிக்க நன்றி நண்பரே!
//Chitra said...
......வேதனையான உண்மை, சுடத்தான் செய்கிறது.//
ஆமாம், கசப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறதே!
மிக்க நன்றி சகோதரி!
//# கவிதை வீதி # சௌந்தர் said...
வீட்ல சமையல் யார் பாஸ்..//
இந்த ஊருலேயே பெரிய வீடு நம் வீடு! :-)
////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////
என்ன இது தெரிந்து கொள்ள கவிதை வீதி வாங்க...//
வர்றேன் கண்டிப்பா...மிக்க நன்றி நண்பரே! :-)
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
கடைசியில பெருங்காயத்தை சேர்க்காம விட்டுட்டீங்களே,
ஊழல் செஞ்ச பணம்கற "பெருங்காயத்"துலேர்ந்து கொஞ்சமே கொஞ்சம் எடுத்து குழம்பிலே தூவிட்டா "வெற்றி"மணம் வீசும் என்பது உறுதி!//
நண்பரே, இங்கே எல்லாப் பண்டங்களும் இருக்கே - பெருங்காயம் உட்பட! :-)
இன்னொருவாட்டி வாசிச்சீங்கன்னா, கண்டிபுடிச்சிருவீங்க!
மிக்க நன்றி! :-)
//சி.பி.செந்தில்குமார் said...
ஏண்ணே.. இப்படி? டைட்டிலைப்பார்த்ததும் மிரண்டுட்டேன்..அப்புறம் பார்த்தா வழக்கமான அரசியல் நையாண்டி.. ஹா ஹா//
எதுக்கு தல மிரளணும்? எனக்கு சாப்பிடமட்டும்தான் தெரியும். சமையலிலே நான் ஒரு பூஜ்யம். (சமையலிலே மட்டும்தானான்னு கேட்டுராதீங்க..ஹிஹி!)
//காலைலயே உங்க பதிவு டைட்டிலை பார்த்தேன். ம் ம் அப்புறம் போய்க்கலாம்னு விட்டுட்டேன். காரணம் டைட்டில். அப்புறம் பார்த்தா சூடான இடுகைல சீக்கிரமா வந்து இருந்தது. அட.. என்ன மேட்டர்னு பார்த்தா...//
கொஞ்சம் சந்தேகத்தோடத்தான் போட்டேன். வத்தக்குழம்பு ரசிகர்கள் யாரும் இதுவரை சண்டைக்கு வராதது ரொம்ப ஆறுதலாவும் இருக்கு தல! :-)
//..haa haa ஹா செம//
ரொம்ப நன்றி தல! :-)
//! சிவகுமார் ! said...
!!! முக்கியமான மேட்டர்: சமையல்காரர் ஐந்து வருடத்திற்கு நம் கண்ணில் பட மாட்டார்!//
ஹிஹி! அட இத எப்படி மிஸ் பண்ணினேன்? சூப்பர்! :-)
மிக்க நன்றி நண்பரே!
//RVS said...
அண்ணே! அட்டகாசம்! கூட்டணி அவியல் அப்படின்னு ஒன்னு எலக்ஷன் முன்னாடி உங்க கிட்டேர்ந்து எதிர்பார்க்கிறேன். ;-)//
எழுதலாம் தான்! ஆனா, அது அவியலாயிருக்குமா குருமாவா இருக்குமா? ரெண்டுமே கலந்திருக்குமான்னு புரியலியே? :-))
மிக்க நன்றி நண்பரே!
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா இந்த வருட சிறப்பு அரசியல் பதிவு//
ஆஹா, வாசிக்கும்போதே வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் ஒரு பிடி பிடிச்சமாதிரி இருக்குது! :-)
//இவனுக ஊழலை எதுல மறைக்கிறது...அந்த நாத்தம் தாங்க முடியலையே//
அடுக்குமொழியிலே ஊறவச்சா சரியாப்போயிரும். :-))
மிக்க நன்றி நண்பரே! :-)
//சுபத்ரா said...
What an innovative thinking Settai ?! wondering...//
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க! சத்தியமாக அவங்க ஒரு format வச்சிருப்பாங்க இல்லையா? அதைத்தான் எழுதினேன். மிக்க நன்றி! :-)
//சிநேகிதன் அக்பர் said...
வத்தக்குழம்பு சாப்பிட்டு பேதியாக இருந்தா சரிதான் :)//
ஆது ஆயிட்டுத்தானிருக்கு. (போயிட்டுத்தானிருக்கு????)
//அரசியல் சாக்கடை என்பதை வத்தக்குழம்பாக மாற்றிக்காட்டிய சேட்டை வாழ்க.//
ஊசிப்போன வத்தக்குழம்பு சாக்கடைக்குத்தானே போகும்?
மிக்க நன்றி அண்ணே! :-))
//வெட்டிப்பேச்சு said...
ரொம்பப் பிரமாதம்க...எத்துனை பாராட்டினாலும் தகும்..இதைவிட நகைச்சுவையோடு நம் நிலைமையை நொந்து கொள்ள முடியாது..Hats off to you.God Bless YOu//
இடுக்கண் வருங்கால் நகுக! தேர்தலும் வர வர தொந்தரவாயிட்டுதோன்னு ஒரு எண்ணம். வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)
//சேலம் தேவா said...
அருமையான அரசியல் குழம்பு..!! நையாண்டியில் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை..!! :)//
ஆஹா, உங்க பாராட்டுக்கு மிக மிக நன்றி! ஆனா, எனக்கு முன்னோடிகள் எக்கச்சக்கமா இருக்காங்க! இந்தப் பதிவோட பின்னூட்டத்துலே கூட அவங்க இருக்காங்க! :-)
மிக்க நன்றி!
//மானம் கெட்ட பொது ஜனங்கள் (அதாவது நாம்) இருக்கும் வரைக்கும் இதுமாதிரி வத்தகுழம்பு ரெசிப்பி வைத்திருக்கும் கருநாயும்,ஜெயா வும், சோனியாவும் , ராமதாசும், திருமாவும் இன்னும் எந்தெந்த நாய்களும், பன்னிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நாமும் பதிவு எழுதிக்கொண்டே இருக்கலாம் தலீவா!!//
நான் சொல்ல வேண்டியதை ரொம்ப டீஜெண்டா கக்கு அண்ணா சொல்லிட்டாங்க...:)
//வேண்டுகோள்
நமது நட்பு நீங்கள் போடுகிற ஓட்டை வைத்து அளவிடப்படுவதன்று.
அதற்கு மெனக்கெடுவதைக் காட்டிலும், உங்கள் கருத்துக்களை அளித்து என்னை மெருகேற்றுங்கள். //
இந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன ..:))
Post a Comment