Sunday, February 20, 2011

சதிபதி

"அம்மா! ஒரு நிமிஷம்," என்று பார்வதியின் காதில் கிசுகிசுத்தாள் செல்வி. "அப்பாவும் அந்த அங்கிளும் சிதம்பரமும் தங்கபாலுவும் மாதிரி என்னவோ காதுலே கிசுகிசுப்பாப் பேசிட்டிருக்காங்க!"

"நானும் கவனிச்சேன்; எனக்கு அப்பவே சந்தேகம்," என்று ஆமோதித்தாள் பார்வதி. "வழக்கமா ஊருக்குப் போகட்டான்னு கேட்டா, ஆயிரம் நொள்ளை சொல்லுற மனிசன், தாராளமாப் போயிட்டு வா, ஒரு மாசமானாலும் ஆசைதீர அம்மா வீட்டுலே இருந்திட்டு வான்னு சொல்லும்போதே எனக்கு எங்கேயோ உதைக்குதேன்னு தோணிச்சு!"

"அதுமட்டுமில்லேம்மா, அடிக்கடி குவார்ட்டர்னு வேறே பேரு அடிபடுது!"

"அப்படியா சங்கதி? நீ லீவுமுடிஞ்சு போனதும், என்னையும் ஊருக்கு அனுப்பிட்டு வீட்டுலே தண்ணிபோட திட்டம்போலிருக்கு. அந்த முனுசாமி கிளம்பிப்போகட்டும். அவரை என்ன பண்ணறேன்னு பாரு!"

"ஐயையோ, அதுக்காக நீ டென்ஷனாகி பிரண்டை பரோட்டாவெல்லாம் பண்ணிராதே அம்மா. என்னாலே லீவை எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது!" என்று கலவரத்தோடு சொன்னாள் செல்வி.

"ஆமாண்டி, ஹாஸ்டல்-லே போடுற காஞ்சுபோன தோசையைத் தின்னுவே! ஆசையா அம்மா பிரண்டை அல்வா, முட்டக்கோசு பாயாசம்னு பண்ணிக்கொடுத்தா நக்கலா?"

"கோச்சுக்காதேம்மா! பாரு..பாரு...என்னவோ திரும்பக் கிசுகிசுக்கிறாங்க! வா...ஜன்னல்பக்கத்துலே போய் ஒளிஞ்சு கேட்கலாம்..!"

மனைவியும் மகளும் தன்னையும் சினேகிதரையும் துப்பறிவது தெரியாமல், நல்லசிவமும் அவரது நண்பர் முனுசாமியும் சுவாரசியமாக, ஈனசுரத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

"இத பாரு முனுசாமி! நமக்கு எது வேணுமோ அதை மட்டும் செலக்ட் பண்ணிடுவோம். சப்பை மேட்டரெல்லாம் வேண்டாம். நம்ம டேஸ்ட்டுக்குத் தகுந்தமாதிரி இருக்கணும்." என்று நல்லசிவம் கூறக்கேட்டதும் பார்வதி அதிர்ந்தாள்.

"என்னடி? இது வெறும் தண்ணியடிக்கிற பிளானில்லை போலிருக்கே? எனக்கு அடிவயித்துலே பந்து சுத்துறா மாதிரி இருக்கே?"

"இரும்மா, என்ன பேசறாங்கன்னு கேட்க விடு!" என்று செல்வி காதைத் தீட்டிக்கொண்டாள்.

"இது பத்தொன்பது! ஓ.கேவா?"

"பத்தொன்பதா? அதுதான் ஸ்டார்ட்டிங்கா? வேறே வழி? பார்த்திரலாம்."

"ஏண்டி செல்வி? என்னடீ பத்தொன்பது, பார்த்திரலாமுன்னு பேசிக்கிறாங்க?"

"முழுசாக் கேட்கவிடும்மா! அங்கே பாரு, முனுசாமி அங்கிள் எதையோ காட்டுறாரு பாரு அப்பாகிட்டே...!"

முனுசாமி எதையோ காட்ட நல்லசிவம் அதைக்கூர்ந்து கவனித்தார்.

"இருபத்தி நாலா? சூப்பராயிருக்கும் போலிருக்குதே?"

"அடுத்ததைப் பாருங்க. இது இருபத்தி அஞ்சு!"

"இதுவும் சூப்பர்தான் முனுசாமி! ஆனா, இந்த ரெண்டை விடவும் எனக்கென்னமோ இது ஓ.கேன்னு படுது!"

"அட நம்மாளு! இருபத்தி ஏழு, பரவாயில்லையா?"

"எனக்கு ஓ.கே!"

"அடப்பாவி மனுசா!" பார்வதி பல்லைக்கடித்தாள். "அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி என்னை ஊருக்கு அனுப்பிட்டு கூத்தடிக்கவா திட்டம் போடறே? மண்டையைப் பாரு, கிண்டி ரேஸ்கோர்ஸ் மாதிரி இருக்கு. உனக்கு இருபத்தி ஏழு கேட்குதா?"

"சும்மாயிரும்மா!" செல்வி அதட்டினாள். "முழுக்குட்டும் வெளியிலே வரட்டும். அவசரப்படாதே!"

"ஏன் முனுசாமி? இதுக்கப்புறம் ஒண்ணும் நம்ம சங்கதி இல்லியே?"

"ஏன் எப்பவுமே நம்மாளுன்னே அலையுறீங்க?"

"ஹிஹி! அதுலே பாருங்க முனுசாமி, எனக்கு நம்ம ஊரு மேட்டர்தான் எப்பவுமே பிடிக்கும்."

"அட உருப்படாத மனிசா," என்று கரித்துக்கொட்டினாள் பார்வதி. "நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு வெளியூரிலிருந்தா கிடைக்கும்?"

"உஸ்ஸ்ஸ்! சும்மாயிரும்மா.....!"

அங்கே.....

"சரி, உங்க விருப்பப்படியே பார்க்கலாம். இதுக்கே மொத்தம் எத்தனை ஃபுல்லு, எத்தனை ஹாஃப் தேவைப்படுமுன்னு பார்த்து ஏற்பாடு பண்ணனும்." என்று முனுசாமி யோசனையோடு தாடியைச் சொரிந்தார்.

"ரிஸ்கே எடுக்க வேண்டாம். குவார்ட்டருக்கப்புறம் ஃபுல்லாவே எடுத்திரலாம். ஹாஃப் எல்லாம் சரிப்படாது."

"எவ்வளவு தேவைப்படும்? வீட்டுலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?" முனுசாமி சந்தேகத்துடன் கேட்டார்.

"அதுக்குத்தானே அவளை ஊருக்கு அனுப்புறேன்," என்று சிரித்தார் நல்லசிவம். "அவ திரும்பி வரதுக்குள்ளே பார்க்க வேண்டியதெல்லாத்தையும் பார்த்திருவோமில்லே?"

"பார்ப்பே ஐயா பார்ப்பே," இடுப்பில் தலைப்பை இழுத்துச் செருகியவாறு வெளிப்பட்டாள் பார்வதி.

"பார்வதி....நீ....எப்போ...?" நல்லசிவம் தடுமாறினார்.

"ஏன்யா, பேரன்பேத்தி எடுக்கிற வயசுலே உனக்கேன்யா இந்த புத்தி? உனக்கு பத்தொன்பதுலேருந்து இருபத்தி ஏழுக்குள்ளே கேட்குதா? போதாக்குறைக்கு குவார்ட்டர் என்ன, ஹாஃப் என்ன, ஃபுல் என்ன? போனாப்போகுது, புருசன் மரமண்டையா இருந்தாலும், சுத்தபத்தமாயிருக்காரேன்னு நானும் சந்தோசப்பட்டுக்கிட்டிருந்தேன். இப்படி என் தலையிலே குண்டைத்தூக்கிப் போட்டுட்டியே! சே!"

"ஐயோ பார்வதி, நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலே! நீ தப்பா நினைக்கிறே!"

"என்னப்பா தப்பு?" இப்போது செல்வியும் சேர்ந்து கொண்டாள். "இவ்வளவு நேரம் என்ன பேசிட்டிருந்தீங்க?"

"உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கப்போகுதே, அதுலே எந்தெந்தத் தேதியிலே எந்தெந்த மேட்சு பாக்கலாம்..எதெது பார்க்க வேண்டாமுன்னு பேசிட்டிருந்தோம் செல்வி. பத்தொன்பது, இருப்பத்தி ஏழு எல்லாம் இந்தியா விளையாடுற தேதிம்மா! நீயுமா அப்பாவைத் தப்பா நினைக்கிறே?"

"அப்போ ஹாஃப், ஃபுல்லுன்னு பேசிட்டிருந்தீங்களே அது....?"

"அது வேறொண்ணுமில்லே, பாதி நாள் லீவு போடுறதா இல்லை முழுநாள் லீவு போடுறதான்னு பேசிட்டிருந்தோம்..." நல்லசிவம் பரிதாபமாக விளக்கினார்.

"பொய் சொல்லாதீங்க," பார்வதி சீறினாள். "சப்பை மேட்டர், நம்ம ஊரு அயிட்டமுன்னெல்லாம் பேசினீங்களே?"

"உனக்குத்தான் கிரிக்கெட் பார்த்தாலே பிடிக்காதே. அதுனாலே தான் கேனடா, நெதர்லாண்ட்ஸ், கென்யா மேட்செல்லாம் சப்பை மேட்டர்னும், இந்தியா ஆடுற எல்லா ஆட்டத்தையும் நம்ம ஊரு அயிட்டமுன்னும் ஜாடையாப் பேசிக்கிட்டோம்."

"இன்னும் முழுசா நம்பறதுக்கில்லை அப்பா," செல்வி வினவினாள். "அது சரி, குவார்ட்டர்னு எதையோ பேசினீங்களே? அது என்ன?"

"ஐயோ நாங்க நாலு குவார்ட்டர் ஃபைனல் மேட்சையும் பார்க்கணுமுன்னு திட்டம் போட்டிருக்கோம். அதைப் பத்தித் தான் பேசினோம். நீங்க ரெண்டு பேரும் வீட்டுலே இருந்தா சீரியல் பார்த்துக் கழுத்தறுப்பீங்கன்னு தான் உங்கம்மாவை ஊருக்குப்போகச்சொன்னேன். இப்படி என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அடுக்கடுக்கா குத்தம் சுமத்தறீங்களே...? நியாயமா?"

நல்லசிவம் அழவே தொடங்கிவிட்டார்.

"என்னை மன்னிச்சிடுங்க! உங்களை சந்தேகப்பட்டேன் பாருங்க. எனக்கு என்ன தண்டனை வேண்ணா கொடுங்க!" என்று உருகினாள் பார்வதி.

"தண்டனையா?" நல்லசிவம் அழுதவாறே கூறினார். "காலையிலே டிபனுக்குப் பண்ணினியே குல்பர்கா இட்லி; அதைச் சாப்பிடாம கட்டிலுக்குக் கீழே தட்டுப்போட்டு மூடி ஒளிச்சு வச்சிருக்கேன். அதைச் சாப்பிடு போதும்!"

36 comments:

எல் கே said...

சேட்டை விழுந்து விழுந்து சிரிச்சேன்... சூப்பர் தேங்க்ஸ்
//குல்பர்கா இட்லி; அதைச் சாப்பிடாம கட்டிலுக்குக் கீழே தட்டுப்போட்டு மூடி ஒளிச்சு வச்சிருக்கேன். //

எனக்கு அப்பாவியோட இட்லின்னு தெரியுது

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

வெங்கட் நாகராஜ் said...

குல்பர்க்கா இட்லி – தொட்டுக்கொள்ள என்ன லூதியானா உருளைக்கிழங்கு சட்னியா? நல்ல கலக்கலான நகைச்சுவை சேட்டை ஐயா

பொன் மாலை பொழுது said...

குல்பர்கா இட்லி படு டாப் ! என்ன சேட்டை அடிக்கடி மும்பை போற பார்டியா?

மதுரை சரவணன் said...

கிரிக்கெட் சூரம்...கதை அருமை... வாழ்த்துக்கள்

பெசொவி said...

Settai rocks!!!!!!!!!!

:))))))))))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

HAAA....... SEMA KALAKKAL.......

சிநேகிதன் அக்பர் said...

செம காமெடி பாஸ்.

பிரபாகர் said...

ஆஹா... சீசனுக்கு ஏற்றார்போல் கலக்கலாய் காமெடி சிறுகதையினை கொடுத்திருக்கிறீரே!... அருமை...

பிரபாகர்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐயா சேட்டைக்காரரே! நல்ல காமடி விருந்து படைத்தீர் போம்!!

sathishsangkavi.blogspot.com said...

படிக்க படிக்க சிரிப்புதான்...

SriNith said...

சதிபதி எப்பவுமே காமடி தானா? சண்டையே வராதா?

settaikkaran said...

//எல் கே said...

சேட்டை விழுந்து விழுந்து சிரிச்சேன்... சூப்பர் தேங்க்ஸ்//

விழுந்ததுலே அடியோன்னும் படலியே கார்த்தி...?:-))

//எனக்கு அப்பாவியோட இட்லின்னு தெரியுது//

அது தெரியாது. ஆனா, அப்பாவிங்க சாப்பிடற இட்லி தான் ! :-)

மிக்க நன்றி..!

settaikkaran said...

//வேடந்தாங்கல் - கருன் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..//

ஆஹா! மிக்க நன்றி...என் எழுத்தால் மனது இலேசாவது எனக்கும் மகிழ்ச்சி...!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

குல்பர்க்கா இட்லி – தொட்டுக்கொள்ள என்ன லூதியானா உருளைக்கிழங்கு சட்னியா? நல்ல கலக்கலான நகைச்சுவை சேட்டை ஐயா//


நீங்க சொல்லுறதைப் பார்த்தா தில்லியிலே யார் வீட்டுலேயோ லூதியானா உருளைக் கிழங்கு சட்னி பண்ணியிருப்பாங்க போலிருக்கே...?:-))))
மிக்க நன்றி ஐயா...!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

குல்பர்கா இட்லி படு டாப் ! என்ன சேட்டை அடிக்கடி மும்பை போற பார்டியா?//

குல்பர்கா மும்பையிலா இருக்கு? நான் குஜராத்-னு நினைச்சிட்டிருக்கேன். :-))

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//மதுரை சரவணன் said...

கிரிக்கெட் சூரம்...கதை அருமை... வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-))

settaikkaran said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Settai rocks!!!!!!!!!!:))))))))))//

மிக்க நன்றி நண்பரே...! :-)))

settaikkaran said...

//ஓட்ட வட நாராயணன் said...
HAAA....... SEMA KALAKKAL.......//

மிக்க நன்றி! உங்க பேரு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...! :-))

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said..

செம காமெடி பாஸ்.//

மிக்க நன்றி அண்ணே..! :-)

settaikkaran said...

// பிரபாகர் said...
ஆஹா... சீசனுக்கு ஏற்றார்போல் கலக்கலாய் காமெடி சிறுகதையினை கொடுத்திருக்கிறீரே!... அருமை...//

ஆமாம் நண்பரே, நாளைக்கு கிரிக்கெட் பற்றி சேட்டை ஒண்ணுமே எழுதலேன்னு யாரும் சொல்ல முடியாதே...! :-)))

மிக்க நன்றி நண்பரே...!

settaikkaran said...

//ஓட்ட வட நாராயணன் said.

ஐயா சேட்டைக்காரரே! நல்ல காமடி விருந்து படைத்தீர் போம்!!//

ஆகா, தங்கள் சித்தம் என் பாக்கியம் நண்பரே..மிக்க நன்றி..!

settaikkaran said...

//சங்கவி said...

படிக்க படிக்க சிரிப்புதான்...//

மிக்க நன்றி நண்பரே...! :-))

settaikkaran said...

//பிரகாஷ் குமார் ............ உங்களுக்காக said...

சதிபதி எப்பவுமே காமடி தானா? சண்டையே வராதா?//

சண்டை போடறது ஒரு காமேடியில்லையே...! :-))
மிக்க நன்றி!

சௌமியா said...

அடுத்த கலக்கல் நகைச்சுவை பதிவு. தூள்..! :-))

Unknown said...

கதை சூப்பர் .

சக்தி கல்வி மையம் said...

see.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

duraian said...

ஹா ஹா ஹா

சரியான IPL :)))

[இதுக்குப் பேருதான் லொல்லு]

சி.பி.செந்தில்குமார் said...

>>"ரிஸ்கே எடுக்க வேண்டாம். குவார்ட்டருக்கப்புறம் ஃபுல்லாவே எடுத்திரலாம். ஹாஃப் எல்லாம் சரிப்படாது."

haa haa ஹா ஹா

உங்களுக்கு டைமிங்க் ஜோக்கும் வருது, ஜைமிங்க்கா கதை கட்டுரையும் வருது.. நீங்க ஏன் ஆனந்த விகடன் ஆசிரியர் பணீக்கு போகக்கூடாது?

ஆர்வா said...

கதை நச்'ன்னு இருக்கு. டயலாக் எல்லாம் ரொம்ப லைவ்வா இருக்கு.. அருமை நண்பா

settaikkaran said...

//சௌமியா said...

அடுத்த கலக்கல் நகைச்சுவை பதிவு. தூள்..! :-))//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கே. ஆர்.விஜயன் said...

கதை சூப்பர் .//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வேடந்தாங்கல் - கருன் said...

see., http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html//

பார்க்கிறேன் நண்பரே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//துரை. ந. உ 9443337783 said...

ஹா ஹா ஹா சரியான IPL :)))

[இதுக்குப் பேருதான் லொல்லு]//

யெம்மாடியோவ்! புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே? :-))

வருகைக்கும் கருத்துக்கும் "மிக்க" நன்றி! :-))

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா உங்களுக்கு டைமிங்க் ஜோக்கும் வருது, ஜைமிங்க்கா கதை கட்டுரையும் வருது.. நீங்க ஏன் ஆனந்த விகடன் ஆசிரியர் பணீக்கு போகக்கூடாது?//

மவுண்ட் ரோடு பக்கமே வரவுட மாட்டேங்குறாங்க! இதுலே எங்கே தல நான் போயி.....???? :-)))

மிக்க நன்றி!

settaikkaran said...

//கவிதை காதலன் said...

கதை நச்'ன்னு இருக்கு. டயலாக் எல்லாம் ரொம்ப லைவ்வா இருக்கு.. அருமை நண்பா//

ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை காதலன்! :-)