Wednesday, February 9, 2011

அந்தநாய் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

களக்காடு கருமுத்து: வணக்கம் நேயர்களே! இது உங்களது அபிமான சேட்டை டிவியின் "இன்னாபா, நல்லாகீறியா?" நிகழ்ச்சி. இன்று நம்முடன் கலந்துரையாடவும், நேயர்களின் சந்தேகங்களைப் போக்கவும் டாக்டர்.பைரவன் வந்திருக்கிறார். வணக்கம் டாக்டர்!

டாக்டர்: வணக்கம் களக்காடு கருமுத்து!

களக்காடு கருமுத்து: டாக்டர், நீங்க சமீபத்துலே சென்னையிலே நாய்களுக்குன்னே ஒரு ஆஸ்பத்திரி ஆரம்பிச்சிருக்கீங்க. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

டாக்டர்: இன்னிக்கு நான் இந்த நிலைமையிலே இருக்குறதுக்குக் காரணமே ஒரு நாய் தான். எங்க மாமனார் வீட்டுலே ஒரு நாய் இருந்திச்சு! அது எனக்கு முன்னாடி என் மனைவியைப் பொண்ணு பார்க்க வந்தவங்களையெல்லாம் பார்த்து பயங்கரமாக் குரைச்சுதாம். ரெண்டு மூணு பேரைக் கடிச்சே தொரத்திருச்சாம்! ஆனா, என்னைப் பார்த்ததும் சந்தோஷமா வாலாட்டிச்சு! அடுத்த முகூர்த்தத்துலேயே எங்க மாமனாரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டாரு!

களக்காடு கருமுத்து: ஐயையோ, நாய்க்கா?

டாக்டர்: இல்லை, அவரோட பொண்ணுக்குத்தான்!

களக்காடு கருமுத்து: ஏதோ விட்டகுறை, தொட்ட குறை போலிருக்குது! இப்பவும் உங்க மாமனார் வாலாட்டுறாரா, அதாவது மாமனார் வீட்டு நாய் வாலாட்டுதா?

டாக்டர்: இல்லீங்க! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுன்னு சொல்வாங்களே! அது மாதிரி இப்போ அந்த நாய் தினமும் பிரேக்-ஃபாஸ்ட்டுக்கு அப்புறம் அரை மணிநேரம், டின்னருக்கு முன்னாடி அரை மணிநேரம் என்னைப் பார்த்து ஓவரா குரைக்க ஆரம்பிச்சிருச்சுங்க! தீபாவளி, பொங்கல்னு போனா கடிச்சுப் பிறாண்டிரும்!

களக்காடு கருமுத்து: அப்புறம் எதுக்கு நாய்க்குன்னு ஆஸ்பத்திரி கட்டினீங்க?

டாக்டர்: நாய்ங்க நல்லா இருந்தாத்தான் நாமளும் நல்லாயிருக்க முடியும். உங்க வீட்டுலே இருக்கிற நாய் ஆரோக்கியமா இருந்தாத்தானுங்களே, யாரு திருடன், யாரு மாப்பிள்ளைன்னு கரெக்டா அடையாளம் கண்டுபிடிக்கும்? நீங்களும் எத்தனை ஊசிதான் போட்டுக்குவீங்களாம்?

களக்காடு கருமுத்து: அதுவும் சரிதான்! ஆனா, அதுக்குன்னே ஆஸ்பத்திரி கட்டுறதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா?

டாக்டர்: என்ன அப்படிக் கேட்டுட்டீங்க? கொஞ்ச வருசங்களுக்கு முன்னாலே என் கம்பவுண்டர் ஒருத்தன், ஏதோ ஒரு கோபத்துலே எங்க வீட்டு நாயைக் கடிச்சு அது ஸ்பாட்டுலேயே செத்துப்போயிடுச்சு! அதுனாலே தான் மனிசங்க கிட்டேருந்து நாயைக் காப்பாத்தணுமுன்னு ஆஸ்பத்திரி கட்டினேன்.

களக்காடு கருமுத்து: என்ன டாக்டர், மனிசன் நாயைக் கடிச்சா நாய் செத்திருமா?

டாக்டர்: மனிசன் கடிச்சா மனிசனே செத்திருவான். நாய் சாகாதா?

களக்காடு கருமுத்து: எதுக்கும் கொஞ்சம் தள்ளியிருந்தே பதில் சொல்லுங்க டாக்டர். அது போகட்டும், சென்னையின் மையப்பகுதியில் பல அடுக்குமாடிக்குடியிருப்புகள் இருக்கிற பகுதியில் உங்களது நாய் மருத்துவமனை இருக்கிறதே! இதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிப்பதில்லையா?

டாக்டர்: இல்லை! சொல்லப்போனா, குடும்பச்சண்டையிலே பொஞ்சாதியைப் போட்டு உதைக்கிற ஆசாமிங்க, பார்ட்டிக்குப் போயிட்டு மோட்டார் சைக்கிள்லே ரோட்டுலே கூவிட்டுப் போற இளைஞர்கள், அர்த்தராத்திரியிலே வெஸ்டர்ன் மியூசிக் அலறவச்சுக்கிட்டு அலப்பறை பண்ணுற சின்னப்பொண்ணுங்க, இவங்களோட ஒப்பிட்டா, நாய்ங்க எவ்வளவோ மேல். "ஸ்லீப்" ன்னு சொன்னாப் போதும், படுத்துத் தூங்கிடும்.

களக்காடு கருமுத்து: எங்க எம்.டி. ஒரே விஷயத்தை பத்துவாட்டி சொன்னாலும் எனக்குப் புரிய மாட்டேங்குது. ஆனா, நாய்களுக்கு நாம போடுற உத்தரவு எப்படி டக்குன்னு புரியுது?

டாக்டர்: நாய்ங்களுக்கு ஐ.க்யூ அதிகம்! அதுங்களாலே ஆயிரம் வார்த்தைகளை ஞாபகத்துலே வச்சுக்க முடியும். அதுனாலே யாராவது ஒரு வார்த்தையை அடிக்கடி சொன்னா, என்ன செய்யணுமுன்னு புரிஞ்சுக்கிட்டு அடுத்தவாட்டி உடனே செஞ்சிடும்.

களக்காடு கருமுத்து: மகிழ்ச்சிங்க! இப்போ நேயர் தொலைபேசியிலே அழைக்கிறாங்க! பதில் சொல்லுவோமா? ஹலோ...இது சேட்டை டிவி இன்னாபா நல்லாகீறியா! உங்க கேள்வி என்னங்க?

தொ.பே.நேயர்: ஹலோ டாக்டருங்களா? எங்க வீட்டு நாய்க்கு தினமும் கறியும் மீனும் ஆக்கிப்போடறேனுங்க. இருந்தாலும், அதை வெளியே கூட்டிக்கிட்டுப்போனா, குப்பைத்தொட்டிக்குப் போயி எச்சி இலையைத் தேடுதுங்க! என்னங்க பண்ணட்டும்?

டாக்டர்: உங்க வீட்டுக்காரரு என்னம்மா பண்ணுறாரு?

தொ.பே.நேயர்: புடவையை அலசிட்டிருக்காருங்க!

டாக்டர்: அதைக் கேட்கலேம்மா, என்ன தொழில் பண்ணுறாரு?

தொ.பே.நேயர்: வட்டச்செயலாளரா இருக்காருங்க!

டாக்டர்: ஓ அரசியலா? அப்போ உங்க நாயும் அப்படித்தானிருக்கும். தேர்தல் முடிஞ்சதும் எச்சி இலை தின்னுறதை நிறுத்திடும். கவலைப்படாதீங்க!

களக்காடு கருமுத்து: டாக்டர், செகண்ட் ஷோ சினிமா பார்த்திட்டுப் போனா, தெருநாயெல்லாம் எதுக்குக் குரைக்குது? ஏன் கடிக்குதுங்க?

டாக்டர்: நாய்ங்களுக்கு பிரைவஸியே கிடையாது சார்! நம்மளை மாதிரி அதுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஹனிமூனா போவுதுங்க? மிஞ்சிப்போனா மந்தவெளி நாய் மயிலாப்பூரு டேங்க் வரைக்கும் போயி கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணும். அந்த நேரத்துலேயும் நீங்க டிஸ்டர்ப் பண்ணினா எப்புடி?

களக்காடு கருமுத்து: ஓஹோ! நாய்ங்களைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கிறா மாதிரி நாய்க்குக் கூட தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன். புதுசு புதுசா தகவல் சொல்றீங்களே!

டாக்டர்: இப்போ சமீபத்துலே சென்னையிலே இந்தியாவுலேயே முதல் முறையா ’அகில இந்திய மிருக நல்வாழ்வு மாநாடு" நடந்திச்சு தெரியுமா? அதுலே நானும் கலந்துக்கிட்டேன்.

களக்காடு கருமுத்து: அப்படியா? அங்கே நீங்க எதைப் பத்திக் குரைச்சீங்க, ஐ மீன், எதைப் பத்திப் பேசினீங்க?

டாக்டர்: நாயை வளர்க்கிறவங்க தினமும் காலையிலே வாக்கிங் போகணும். வேளா வேளைக்குச் சாப்பிடணும். காலாகாலத்துலே தூங்கப்போகணும். இல்லாட்டா உடம்புலே கொலாஸ்ட்ரல் அதிகமாயி ஹார்ட் அட்டாக் வந்திடும்.

களக்காடு கருமுத்து: இது எல்லா டாக்டரும் சொல்லுறது தானே?

டாக்டர்: நான் ஹார்ட் அட்டாக் வருமுன்னு சொன்னது நாய்க்கு! அதாவது, விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா, எஜமான் எப்படி இருக்காங்களோ, அவங்க வளர்க்குற நாய்ங்களும் அப்படியே இருக்குமாம். எஜமானுக்கு இருக்கிற எல்லா குணமும் நாய்க்கும் வருமாம். உதாரணத்துக்கு ஒரு சினிமா ஸ்டார் வீட்டுலே வளர்ற நாயின்னு வச்சுக்குவோம்....

களக்காடு கருமுத்து: அதுவும் கட்சி ஆரம்பிச்சிருமா?

டாக்டர்: இல்லை இல்லை! அது கறி கிடைக்கிறவரைக்கும் வாலாட்டிக்கிட்டே இருக்குமாம். திடீர்னு கறி கொஞ்சம் குறைஞ்சு போனாலோ, நின்னு போனாலோ, குரைக்க ஆரம்பிச்சிடுமாம்.

களக்காடு கருமுத்து: ஓஹோ! அடுத்த நேயர் தொலைபேசியிலே! ஹலோ, யாருங்க?

தொ.பே.நேயர்: ஹலோ டாக்டர், எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். எல்லா நாயும் இங்கிலீஷ் பேசுனா புரிஞ்சுக்குது; தமிழிலே பேசினா கண்டுக்கவே மாட்டேங்குதே? என்ன காரணமுங்க?

களக்காடு கருமுத்து: ஆமா டாக்டர், இப்பல்லாம் மனிசங்களே தமிழிலே பேசினா கண்டுக்க மாட்டேங்குறாங்களே, ஏன்?

டாக்டர்: அதாவது இதுக்கு விஞ்ஞானபூர்வமான காரணம் சொல்றதை விடவும், வரலாறுபூர்வமா ஒரு காரணம் சொல்றேன். நம்ம நாட்டை வெள்ளைக்காரன் ஆண்டபோது அவன் அங்கங்கே போர்டு வச்சிருந்தான். ’நாய்களும் இந்தியர்களும் உள்ளே வரக்கூடாது,’ன்னு....! இப்போ வெள்ளைக்காரன் இல்லை; நாயும் அவன் விட்டுட்டுப்போன இங்கிலீஷும் தானிருக்கு! அதுனாலே அவன் மேலேயிருக்கிற கோபத்தை நாயோட இங்கிலீஷ்லே பேசி மக்கள் தீர்த்துக்கிறாங்க!

களக்காடு கருமுத்து: உண்மை தான் டாக்டர், நன்றியுள்ள பிராணி மட்டுமில்லை; நாய் புத்திசாலியும் கூட! எத்தனை கொலை கேசுலே நாயை வச்சுத் துப்புக் கண்டுபிடிச்சிருக்காங்க! அதோட மோப்பசக்தி மாதிரி வருமா?

டாக்டர்: கரெக்ட்! நாய்ங்க போலீஸ்காரங்களுக்கு மட்டும்தான் மோப்பம் பிடிச்சு உதவுமுன்னு தானே கேள்விப்பட்டிருக்கீங்க? இப்பல்லாம் எங்களை மாதிரி டாக்டருங்களுக்கும் ஒத்தாசை பண்ண ஆரம்பிச்சிருச்சு தெரியுமா?

களக்காடு கருமுத்து: எப்படி டாக்டர், பிரைவெட் ஆஸ்பத்திரிங்களிலே பணம் கட்டாதவங்க வேட்டியை உருவ நாயை பயன்படுத்தறீங்களா?

டாக்டர்: சேச்சே! அந்த வேலைக்கெல்லாம் நாயை விட சீப்பா மனிசங்க தாராளமா கிடைக்கிறாங்களே! நான் சொல்றதே வேறே...!

களக்காடு கருமுத்து: என்ன டாக்டர்?

டாக்டர்: நாயோட மோப்ப சக்தியாலே ஒரு விதமான புற்றுநோயைக் கூட கண்டுபிடிக்க முடியுமுன்னு இப்போ சமீபத்துலே கண்டுபிடிச்சிருக்காங்க!

களக்காடு கருமுத்து: பிரமாதம் டாக்டர்! உண்மையிலேயே நாய் மனிதனின் உற்ற நண்பன் தான். இதோ, அடுத்த நேயர் தொலைபேசியிலே....ஹலோ...

தொலைபேசியில்: லொள்...லொள்...லொள்...லொள்!லொள்...லொள்ளோ லொள்...

களக்காடு கருமுத்து: ஐயையோ, என்ன டாக்டர் லைனிலே நாயே வந்திருச்சு!

டாக்டர்: யூ டோண்ட் வொர்ரி! நான் டீல் பண்ணுறேன் பாருங்க! ஹலோ....!

தொலைபேசியில்: லொள்...லொள்...லொள்...லொள்....!

டாக்டர்: லொள்? லொள்லொள்..லொள்??

தொலைபேசியில்: லொள்...லொள்...லொள்!

டாக்டர்: லொள்? லொள்லொள்??

களக்காடு கருமுத்து: ஆஹா, குரைக்கிற நாய் கடிக்காதும்பாங்க! இந்த டாக்டரு குரைக்கிறதோட நிறுத்திக்குவாரா இல்லாட்டிக் கடிப்பாரா தெரியலியே! இதுக்கா இம்புட்டு நாள் கழிச்சு டிவியை தூசி தட்டி ஆரம்பிச்சோம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

51 comments:

idroos said...

Vadai

suneel krishnan said...

டாக்டர்: நாய்ங்களுக்கு பிரைவஸியே கிடையாது சார்! நம்மளை மாதிரி அதுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு ஹனிமூனா போவுதுங்க? மிஞ்சிப்போனா மந்தவெளி நாய் மயிலாப்பூரு டேங்க் வரைக்கும் போயி கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணும். அந்த நேரத்துலேயும் நீங்க டிஸ்டர்ப் பண்ணினா எப்புடி?
//
தல வாய்ப்பே இல்ல :)
ஆங்காங்கு -வெறும் நகைச்சுவையோடு நின்று விடாமல் -ப்ரிய சுட்டியை கொடுத்து பொது அறிவையும் வளக்குறீங்க:)கலக்கல்

MANO நாஞ்சில் மனோ said...

//இன்னிக்கு நான் இந்த நிலைமையிலே இருக்குறதுக்குக் காரணமே ஒரு நாய் தான்.//

சேட்டையை ஆரம்பிட்டாங்கய்யா................

எல் கே said...

சேட்டையின் சேட்டை

அகல்விளக்கு said...

வாவ்.....

சூப்பர் தல....

Ram said...

ஹி ஹி ஹி.. டாக் டாக்..

பொன் மாலை பொழுது said...

அப்டி வா ராஜா வழிக்கு!
இனி சேட்டை டி. வி. ய எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.
இனி தினமும் சேட்டை டி.வி ஒளிபரப்பாகும் என்று நம்புவோம்.
.

புலிக்குட்டி said...

ஒரு சந்தேகம் சேட்டை,நாய் நன்றி உள்ளதுனு சொல்றாங்க.அப்பறம் நன்றி கெட்ட நாயினு திட்டுறாங்க.எது சரி.

Chitra said...

லொள்...லொள்...லொள்...லொள்....!

....ha,ha,ha,ha,ha .

Chitra said...

லொள்...லொள்...லொள்...லொள்....!
லொள்ளு..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

குரைக்கிற நாய் கடிக்காதுன்னு என் நண்பன் சொன்னான்.
நான் சொன்னேன்: ”அது உனக்குத் தெரியும், எனக்குத் தெரியும் ஆனால் அந்த நாய்க்குத் தெரியணுமே; அது தானே முக்கியம்; இந்தப் பழமொழி தெரியாத அது ஒரு படிக்காத நாயாக இருந்து கடித்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது?” என்றேன்.

vasu balaji said...

அட! மீண்டும் சேட்டை டி.வியா:))

rajamelaiyur said...

Wow . . Super joke . . Keep it up . . Try to visit www.kingraja.co.nr

சேலம் தேவா said...

//உதாரணத்துக்கு ஒரு சினிமா ஸ்டார் வீட்டுலே வளர்ற நாயின்னு வச்சுக்குவோம்....

களக்காடு கருமுத்து: அதுவும் கட்சி ஆரம்பிச்சிருமா?//

உங்க டிவி சன் டிவி மாதிரி வளர வாழ்த்துகள்..!!சான்சே இல்ல...சூப்பர் காமெடி...!! :)

தமிழ்வாசி பிரகாஷ் said...

கடி டிவி நம்ம சேட்டைகாரனில்

Philosophy Prabhakaran said...

சேட்டை டிவியின் மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் சேட்டை...

goma said...

சரியான லொள்ளு பார்ட்டி

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. சேட்டை டி வி மறுபடியும் ஸ்டார்ட்டட்?

சி.பி.செந்தில்குமார் said...

குடிகாரன் கான்செப்ட்டும், டாக்டர் கான்செப்ய்யும் உங்களூக்கு நல்லா வருது அண்ணே

sathishsangkavi.blogspot.com said...

Nice Joke.....

சிநேகிதன் அக்பர் said...

அட்டகாசம். அசத்துறீங்க.

Anonymous said...

நாய்ங்களுக்கு ஐ.க்யூ அதிகம்! அதுங்களாலே ஆயிரம் வார்த்தைகளை ஞாபகத்துலே வச்சுக்க முடியும்///
இப்பதான் தெரியும் .. நாயா உழைச்சி (சும்மா தமாஷ்)அருமையான பதிவு தேத்திட்டீங்க தல...

ஆனந்தி.. said...

நகைச்சுவையோடு..நாய்களை பற்றிய தெளிவான தகவல்களும்..superb

சும்மா பேசலாம் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். நன்றி.

Anonymous said...

>>> சேட்டை நன்றாக இருந்தது!

சக்தி கல்வி மையம் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா.....

settaikkaran said...

//ஐத்ருஸ் said...

Vadai//

:-)

settaikkaran said...

//dr suneel krishnan said...

தல வாய்ப்பே இல்ல :)
ஆங்காங்கு -வெறும் நகைச்சுவையோடு நின்று விடாமல் -ப்ரிய சுட்டியை கொடுத்து பொது அறிவையும் வளக்குறீங்க:)கலக்கல்//

உண்மையிலேயே இது போன்ற செய்திகளை வாசிக்கிறபோது தான் ’அட, இதை வைத்து மொக்கை போடலாம் போலிருக்குதே,’ என்று தோன்றுகிறது. மிக்க நன்றி டாக்டர்! :-)

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

சேட்டையை ஆரம்பிட்டாங்கய்யா................//

அது ஆரம்பிச்சு ஒரு வருசத்துக்கு மேலாச்சுதே! நன்றி!

settaikkaran said...

//அகல்விளக்கு said...

வாவ்.....சூப்பர் தல....//

வாங்க வாங்க, என்ன ரொம்ப நாளாக் காணோம் இந்தப் பக்கம்?
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//தம்பி கூர்மதியன் said...

ஹி ஹி ஹி.. டாக் டாக்..//

யெஸ்..யெஸ்! தேங்க்ஸ்! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

அப்டி வா ராஜா வழிக்கு!//

வந்திட்டோமில்லே...?

// இனி சேட்டை டி. வி. ய எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. இனி தினமும் சேட்டை டி.வி ஒளிபரப்பாகும் என்று நம்புவோம்.//

தினமுமா? அப்புறம் மெயின் சேனலை என்ன பண்ணுறதாம்? :-))

அப்பப்போ சேட்டை டிவி வந்துக்கினே இருக்கும். நன்றி நண்பரே!

settaikkaran said...

//புலிக்குட்டி said...

ஒரு சந்தேகம் சேட்டை,நாய் நன்றி உள்ளதுனு சொல்றாங்க.அப்பறம் நன்றி கெட்ட நாயினு திட்டுறாங்க.எது சரி.//

உங்க கேள்வியை டாக்டர்.பைரவனுக்கு forward பண்ணிட்டேன். :-)
மிக்க நன்றி புலிக்குட்டி!

settaikkaran said...

//Chitra said...

லொள்...லொள்...லொள்...லொள்....!
லொள்ளு..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//

சேட்டையோட சிங்கிள் லொள்ளே தாங்காது; இதுலே டபுள் வேறயான்னு கேட்கறீங்களா? :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//VAI. GOPALAKRISHNAN said...

குரைக்கிற நாய் கடிக்காதுன்னு என் நண்பன் சொன்னான். ன் சொன்னேன்: ”அது உனக்குத் தெரியும், எனக்குத் தெரியும் ஆனால் அந்த நாய்க்குத் தெரியணுமே; அது தானே முக்கியம்; இந்தப் பழமொழி தெரியாத அது ஒரு படிக்காத நாயாக இருந்து கடித்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது?” என்றேன்./

நியாயமான கேள்விதான். இதுலே கவனிக்க வேண்டிய விஷயம் என்னான்னா, படிக்கத் தெரிஞ்ச நாயாயிருந்தாலும் தமிழ் தெரிஞ்சிருந்தாத்தானே பழமொழி புரியும். சே, இதை சேர்த்திருக்கலாம். மிஸ் பண்ணிட்டேன்.

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வானம்பாடிகள் said...

அட! மீண்டும் சேட்டை டி.வியா:))//

ஆஹா! மீண்டும் இங்கே ஐயா! (கொஞ்ச நாளாச்சு உங்களை இங்கே பார்த்து!)
மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//rajatheking said...

Wow . . Super joke . . Keep it up . . Try to visit www.kingraja.co.nr//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//சேலம் தேவா said...

உங்க டிவி சன் டிவி மாதிரி வளர வாழ்த்துகள்..!!சான்சே இல்ல...சூப்பர் காமெடி...!! :)//

அந்த அளவுக்கு வளரும்னா சொல்றீங்க? ’நிதி’ வேணுமே? :-))
மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//மாதேவி said...

:))//

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

கடி டிவி நம்ம சேட்டைகாரனில்//

சேட்டைக்காரன்-னாலே கடிதானே? :-))
மிக்க நன்றி!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

சேட்டை டிவியின் மீள் வருகைக்கு வாழ்த்துக்கள் சேட்டை...//

எல்லாம் நம்ம கக்கு-மாணிக்கம் கட்டிக்கிட்ட புண்ணியம் தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//goma said...

சரியான லொள்ளு பார்ட்டி//

வாங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு!
வருகைக்கு நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. சேட்டை டி வி மறுபடியும் ஸ்டார்ட்டட்?//

ஆமாம், பம்பாயிலேருந்து ஒருத்தர் இருநூறு கோடி கடன் கொடுத்து உதவுனாரு தல! :-)

// குடிகாரன் கான்செப்ட்டும், டாக்டர் கான்செப்ய்யும் உங்களூக்கு நல்லா வருது அண்ணே//

ஆஹா! இதுலே நான் ரெண்டுமே இல்லைங்கிறதுனாலே இருக்குமோ? :-))
மிக்க நன்றி தல!

settaikkaran said...

//சங்கவி said...

Nice Joke.....//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

அட்டகாசம். அசத்துறீங்க.//

மிக்க நன்றி அண்ணே! :-)

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

இப்பதான் தெரியும் .. நாயா உழைச்சி (சும்மா தமாஷ்)அருமையான பதிவு தேத்திட்டீங்க தல...//

மிக்க நன்றி! என் இடத்துலே தொடர்ந்து நல்ல நேரம் இருக்குறது மகிழ்ச்சியா இருக்கு! :-)

settaikkaran said...

//ஆனந்தி.. said...

நகைச்சுவையோடு..நாய்களை பற்றிய தெளிவான தகவல்களும்..superb//

மிக்க நன்றி! உங்கள் வருகையும் கருத்தும் உற்சாகமூட்டுகிறது.

settaikkaran said...

//Summa pesalam said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வருகை தாருங்கள்!

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

>>> சேட்டை நன்றாக இருந்தது!//

மிக்க நன்றி நண்பரே! :-)

settaikkaran said...

//sakthistudycentre-கருன் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....//

ஓ! அப்பவே பார்த்து கருத்தும் போட்டுட்டேனே!

//நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா.....//

வாங்க வாங்க, ஜோதியிலே ஐக்கியமாயிடுங்க! மிக்க நன்றி! :-)