Saturday, February 5, 2011

பிரியாணி புராணம்

போன இடுகை கர்நாடக அரசியல்வாதி பற்றியது என்றால் இந்த இடுகை ஆந்திரா அல்லது தெலுங்கானா அல்லது ஆந்திரானா பற்றியது. தமிழ்நாட்டுலே ஸ்டாக் தீர்ந்து போயிடுச்சான்னு கேட்கறீங்களா? இந்த இரண்டு நாளிலே நம்மாளுங்களைப் பத்தி, ஒவ்வொருத்தரும் எழுதுற இடுகையைப் பார்த்தா, "நல்ல வேளை, நாம இவங்க வாயிலே மாட்டிக்கலே; இல்லாட்டி போதுண்டா சாமின்னு இளைஞன் படத்தை தொடர்ந்து ஒண்ணேகால் வாட்டி பார்த்து செத்துப்போயிருப்பேன்,"னு தோணுது. ஏன்னா, எனக்கு சூடு சூலாத்தா, சொரணை சொர்ணாத்தா ரொம்ப அதிகம்!

கல்வகுண்டல சந்திரசேகர் ராவ் பத்தி யாராச்சும் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவரு தான் தெலங்கானா ராஷ்டிர சமிதின்னு ஒரு கட்சி ஆரம்பிச்சு ஆந்திராவைப் பிரிச்சே ஆகணுமுன்னு பத்துப் பதினஞ்சுவாட்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்திட்டாரு! ஒருவாட்டி கூட...ஊஹும்! சரி, அதுக்கும் பிரியாணிக்கும் என்ன சம்பந்தமுன்னு கேட்கறீங்களா? சம்பந்தா சம்பந்தமில்லாம பேசறதுக்கு நானென்ன பிரணாப் முகர்ஜீயா? நிறைய சம்பந்தம் இருக்கு! என்னென்ன ஒற்றுமைன்னு பார்ப்போம்.

ஹைதராபாத் பிரியாணியோ, தெலங்கானாவோ ஒரே ஒருத்தராலே பண்ண முடியாது. ரெண்டுக்குமே சூடாயிருக்கும்போதுதான் மவுசு அதிகம். என்னை மாதிரி, ஒழுங்கா காப்பி கூட போடத்தெரியாதவன் மல்லிகா பத்ரிநாத் புத்தகத்தை வாசிச்சுக்கிட்டே ஹைதராபாத் பிரியாணி பண்ணினா எப்படியிருக்குமோ, அப்படித்தான் இன்னிக்கு ஆந்திராவுலே தெலுங்கானாவும் சொதப்பிருச்சு! எப்படி ஆரம்பிக்கணும், எப்படி முடிக்கணும்னே யாருக்கும் தெரியலே! பிரியாணிக்கு அரிசி,மட்டன்,நெய்,மசாலா சாமானெல்லாம் கரெக்டா போடுறா மாதிரி, தெலங்கானாவுக்கும் இருக்கிற எல்லா கட்சியோட பங்களிப்பும் கரெக்டா இருந்திருந்தா இன்னேரம் பிரியாணி மாதிரி தெலங்கானாவும் கமகமன்னு வந்திருக்கும்.

பிரியாணி எனப்படுவது யாது? அஃதின் பதவுரை, பொழிப்புரை எவையெவை-ன்னு யாருக்குமே தெரியாது. அதே மாதிரி தெலங்கானான்னா இன்னான்னு கேட்கிறவங்களுக்கும் தெரியலே; தரமாட்டோமுன்னு சொல்றவங்களுக்கும் தெரியலே! ஆனா, ஆந்திரான்னு சொன்னாலே இந்த ரெண்டும்தான் டக்குன்னு ஞாபகத்துக்கு வரும். எப்படி பிரியாணிக்கு மேலே டெகரேஷனெல்லாம் பண்ணுறது அவசியமோ, அதே மாதிரி தெலங்கானாவுக்கும் விஜயசாந்தி மாதிரி அலங்காரம் அவசியமாயிருச்சு!

இந்த தெலங்கானா போராட்டமெல்லாம் கொஞ்ச வருசமாத்தான் நடந்திட்டிருக்கு. ஆனா, ஹைதராபாத் பிரியாணி எத்தனை வருசமா இருக்குன்னு எந்த கொலம்பஸும் கண்டுபிடிக்கலே! ஆரம்பத்துலே நிஜாம்களோட அரண்மனையிலே செய்ய ஆரம்பிச்ச பிரியாணி, காங்கிரஸ் கட்சியோட ஊழல் மாதிரியே பரம்பரை பரம்பரையா தொடர்ந்துக்கிட்டு வருது. முதல்லே மட்டன் பிரியாணி மட்டும் தான் இருந்ததாம். அப்பாலே, சிக்கன் வந்தது. இப்போ கல்யாணி பிரியாணி, லால் பிரியாணி, ஷாஹி பிரியாணி, முகலாய் பிரியாணி, ஜஃப்ராணி பிரியாணி, காஜூ பிரியாணின்னு ஏகப்பட்ட வரைட்டி வந்திருச்சு. சமீபகாலமாக, ஆவக்காய் பிரியாணி என்ற புதுரகமும் சக்கைபோடு போடுகிறதாம். இதே பெயரில் ஒரு படமும் வெளியாகியதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

ஆனா, தெலங்கானா மட்டன் தெலங்கானாவாகவே, அதாவது வெறும் தெலங்கானாவே தானிருக்கு!

(பிரியாணியைப் பத்தி எழுதி எழுதி நாக்குலே எச்சி ஊறுது. திங்கட்கிழமை மூர் தெருவுக்குப் போயி பிஸ்மில்லாவுலே ஒரு பிளேட் வாங்கி உள்ளே தள்ளியே தீரணும்!)

ஒருவழியா, பிரியாணிக்கும் ஆந்திராவுக்கும் இருக்கிற ஒற்றுமையெல்லாம் (கொஞ்சம் அங்கங்கேயிருந்து சுட்டு) சொல்லிட்டேன். இப்போ மேட்டருக்கு வர்றேன். (யாரது ’இனிமேத்தானா?’ன்னு கேட்குறது?)

நம்ம கல்வ குண்டல சந்திர சேகர் ராவ் இருக்கிறாரே, அந்த மனுசன் பிரியாணியைப் பத்தி எதையோ சொல்லப்போக, தெலங்கானா பிரச்சினையிலே ஒரு திடுக்கிடும் திருப்பமே ஏற்பட்டிருச்சாம். கொஞ்ச நாளைக்கு முன்னாலே அவரு, "பிரியாணின்னா ஹைதராபாத் பிரியாணிதான்! பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னாயிருக்கு!!"ன்னு நரசுஸ் காப்பி விளம்பரத்துலே உசிலைமணி சொன்ன மாதிரி சொல்லியிருக்காரு. அத்தோட விட்டிருந்தா பரவாயில்லை. "ஆந்திராவுலே பண்ணுறதெல்லாம் பிரியாணியா? மாட்டுச்சாணி மாதிரியில்லே இருக்கு?"ன்னு கேட்டாரய்யா ஒரு கேள்வி. (இத்தனைவாட்டி இந்தாளு உண்ணாவிரதம் இருந்தும் எப்படி இவ்வளவு திடகாத்திரமா இருக்காருன்னு இப்போ புரியுது! இவரு வீட்டுப் பக்கத்துலே எவனும் இனிமே மாட்டை மேயக்கூட அனுப்ப மாட்டான்!)

"பிரியாணியைப் பழித்தவரை பிரியாணியே தடுத்தாலும் விடேன்," என்று தெலங்கானா விரோதக் கட்சிகளெல்லாம் பிரியாணியை ஒரு பிடி பிடிக்கிறா மாதிரியே நம்ம ராவ்காருவையும் பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க!

"எங்கள் பிரியாணி புராதனமானது; வரலாற்றுச் சிறப்பு மிக்கது," என்று ஆந்திராக்காரர்கள் கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அத்தோடு விட்டார்களா, ஆந்திராவின் குண்டூர், விஜயவாடா போன்ற பகுதிகளிலிருந்து பல பெண்கள் பிரியாணி தயாரித்து,"முதலில் இதைச் சாப்பிட்டு விட்டு அப்புறம் பேசுங்கள்," என்று கல்வ குண்டல சந்திர சேகர ராவுக்கு பார்சலில் அனுப்பி வைத்திருக்கிறார்களாம். கொரியர் இரண்டு நாட்கள் தாமதமாகப் போய், அந்தப் பார்சலை ராவ் திறந்திருந்தால் அது எவ்வளவு பெரிய விபரீதமாயிருக்கும்? நல்ல வேளை!

தெலுகு தேசக்கட்சியைச் சேர்ந்த கொரண்டலா புச்சையா என்ற பிரமுகர் (இவங்க பெயரையெல்லாம் டைப் பண்ணினா, கீ-போர்டுக்கே சுளுக்கு வந்திருது!) பிரியாணியை இழித்துப் பேசிய ராவுக்குக் கண்டனமே தெரிவித்திருக்கிறார்.

"சந்திர சேகர் ராவின் தாத்தா எங்களது பிரியாணியைத் தானே சாப்பிட்டார்? அவர் எங்களது பிரியாணியைப் பற்றி அவதூறாக ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று பழைய அரசு ஆவணங்களையெல்லாம் தேடிப்பார்த்து ஆதாரங்களோடு கேள்வி எழுப்பியிருக்கிறார். "சந்திர சேகர் ராவின் மருமகளுக்கு பிரியாணி சமைக்கத் தெரியாது என்பதற்காக, பிரியாணியைப் பற்றி அவதூறாகப் பேசுவதா?" என்று குடும்பத்தையே இழுத்து விட்டதால், சந்திர சேகர் ராவின் மருமகள் இன்றுவரையிலும் மூன்று வேளையும் பிரியாணியாகவே சமைத்துப் போட்டு இம்சித்து வருவதாக ஆதாரமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து தெலங்கானா கோரிக்கை போலவே பிரியாணி தேசம் என்ற தனிமாநிலம் வேண்டுமென்று சிலர் கோரிக்கை விட வாய்ப்பிருப்பதாக, அரசியல் சமையல்காரர்கள், அதாவது அரசியல் சமநிலைவாதிகள் கருதுகிறார்களாம். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடாமல் இருக்க, மத்திய அரசு ஒரு மூன்று நபர் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்பி, பிரியாணி குறித்த விபரமான அறிக்கையைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மாநிலம் கேட்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ஆந்திராவில் ஆடுகள் மற்றும் கோழிகள் மிகவும் கலவரமடைந்திருக்கின்றன. (அனுஷ்கா ஆந்திராவா, தெலுங்கானாவா என்று தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று முன்யோசனையோடு அவர் படத்தையும் போட்டிருக்கிறேன்.)

33 comments:

Anonymous said...

>>> பிரியாணி தேசம்.... நீங்க சி.எம். , நான் மந்திரி.

Philosophy Prabhakaran said...

பிரியா மணின்னு தப்பா படிச்சிட்டு ஓடி வந்தேன்... இங்க வந்து பார்த்தா பிரியாணியாம்... ஹூம் யாருக்கு வேணும் :(

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

(அனுஷ்கா ஆந்திராவா, தெலுங்கானாவா என்று தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று முன்யோசனையோடு அவர் படத்தையும் போட்டிருக்கிறேன்.)

இது பிள்ளைக்கு அழகு! ஓட்டுப் போட்டாச்சு கெளம்புறேன்!

shrek said...

anuskha - kannadika from bangalore

பொன் மாலை பொழுது said...

நான் படிச்சதில் இது மட்டும் தான் எனக்கு புரிஞ்சுது.

// anuskha - kannadika from bangalore //
-------------shrek said

சேலம் தேவா said...

ஞாயித்துக்கிழமையும் அதுவுமா பிரியாணிய பத்தி எழுதி கிளப்பி வுட்டுட்டீங்க..!! :)

cheena (சீனா) said...

ஆகா பிரியாணி சாப்பிடற நேரத்துல இவ்ளோ அழகா பிரியாணி பத்தி ஒரு இடுகை. சூப்பர் -

MANO நாஞ்சில் மனோ said...

//ஹைதராபாத் பிரியாணியோ, தெலங்கானாவோ ஒரே ஒருத்தராலே பண்ண முடியாது. ரெண்டுக்குமே சூடாயிருக்கும்போதுதான் மவுசு அதிகம்.//

ஏமண்டி நீரு எவரு.....

சி.பி.செந்தில்குமார் said...

(அனுஷ்கா ஆந்திராவா, தெலுங்கானாவா என்று தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று முன்யோசனையோடு அவர் படத்தையும் போட்டிருக்கிறேன்.)

haa haa kalakkal

எல் கே said...

எனக்கு பிரியாணி வேண்டாம்

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் இந்த பதிவு படிச்சுட்டு, ”தலப்பாகட்டு பிரியாணி தேசம்” வேண்டுமென போராட சிலர் முயற்சி செய்வதாக உளவுத்துறை செய்தி வந்து இருக்கு சேட்டை ஐயா!

மங்குனி அமைச்சர் said...

தெலங்கானா கோரிக்கை போலவே பிரியாணி தேசம் என்ற தனிமாநிலம்///

எனக்கு போறோட்டாதான் ரொம்ப புடிக்கும்...... அதுக்கு ஏதாவது ஒரு வழி...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு பிரியாணி வேண்டாம், அனுஷ்காவே போதும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிரியாணி சால பாகுந்தி.....

சிநேகிதன் அக்பர் said...

பிரியாணின்னா அம்புட்டு இஷ்டமா பாஸ்...

Anonymous said...

பிரியாணின்னு நம்பீஈஈஈஈஈஈ வந்தேன்

Anonymous said...

அனுஷ்கா படம் ஆறுதலா இருக்கு

Anonymous said...

தெலுங்கானா பிரிவில் தனி தமிழ்நாடு கேட்டு அதை அழகிரிக்கு கொடுத்து எல்லா பிரச்சனையும் தீர்த்து விடலாம் என நினைக்கிறாராம் மு.க

settaikkaran said...

//! சிவகுமார் ! said...

>>> பிரியாணி தேசம்.... நீங்க சி.எம். , நான் மந்திரி.//

இது நல்லாயிருக்கே! இப்படியே கடைசிவரைக்கும் மெயின்டெயின் பண்ணணும். :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

பிரியா மணின்னு தப்பா படிச்சிட்டு ஓடி வந்தேன்... இங்க வந்து பார்த்தா பிரியாணியாம்... ஹூம் யாருக்கு வேணும் :(//

பிரியா மணியா? நான் பிரியாணி பத்தி யோசிச்சா, நீங்க குஸ்காவைப் பத்தி யோசிக்கிறீங்களே?

நன்றி நண்பா! :-)

settaikkaran said...

//மாத்தி யோசி said...

(அனுஷ்கா ஆந்திராவா, தெலுங்கானாவா என்று தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று முன்யோசனையோடு அவர் படத்தையும் போட்டிருக்கிறேன்.)

இது பிள்ளைக்கு அழகு! ஓட்டுப் போட்டாச்சு கெளம்புறேன்!//

ஆஹா! உங்களை மடக்க இப்படியொரு ட்ரிக் இருக்குதா? :-)

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//shrek said...

anuskha - kannadika from bangalore//

ஓ அப்படியா? மன்னிக்கணும், நான் ஜியாகிரபியிலே கொஞ்சம் வீக்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

நான் படிச்சதில் இது மட்டும் தான் எனக்கு புரிஞ்சுது.

// anuskha - kannadika from bangalore //

யூ டோண்ட் நோ டமிலா? ஸோ ஸேட்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

ஞாயித்துக்கிழமையும் அதுவுமா பிரியாணிய பத்தி எழுதி கிளப்பி வுட்டுட்டீங்க..!! :)//

அப்புறம்...? ஒரு வெட்டு வெட்டினீங்களா இல்லியா? :-)

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//cheena (சீனா) said...

ஆகா பிரியாணி சாப்பிடற நேரத்துல இவ்ளோ அழகா பிரியாணி பத்தி ஒரு இடுகை. சூப்பர் -//

ஐயா, நீங்கள் இங்கு வந்து வெகுநாட்களாகிறதே என்று அவ்வப்போது எண்ணுவதுண்டு. வருகைக்கு மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//MANO நாஞ்சில் மனோ said...

ஏமண்டி நீரு எவரு.....//

நேனா? நாகு தெலுகு ரா லேதண்டி! :-)
மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

//haa haa kalakkal//

நன்றி தல! :-)

settaikkaran said...

//எல் கே said...

எனக்கு பிரியாணி வேண்டாம்//

ஐ நோ! ஐ நோ! நீங்க வெஜிடேரியனாச்சே! :-)
மிக்க நன்றி கார்த்தி!

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

உங்கள் இந்த பதிவு படிச்சுட்டு, ”தலப்பாகட்டு பிரியாணி தேசம்” வேண்டுமென போராட சிலர் முயற்சி செய்வதாக உளவுத்துறை செய்தி வந்து இருக்கு சேட்டை ஐயா!//

ஐயா, தலப்பாகட்டு பிரியாணி மேட்டர் ஏற்கனவே கோர்ட்டு வரைக்கும் போனதே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//மங்குனி அமைச்சர் said...

எனக்கு போறோட்டாதான் ரொம்ப புடிக்கும்...... அதுக்கு ஏதாவது ஒரு வழி...........//

அதுக்கு மைதா தான் ஒரே வழி! :-)
மிக்க நன்றி மங்குனி!

settaikkaran said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கு பிரியாணி வேண்டாம், அனுஷ்காவே போதும்.....//

பானா ராவன்னா, நீங்களுமா? சரி, எடுத்துக்கோங்க! :-)

// பிரியாணி சால பாகுந்தி.....//

ரொம்ப நன்றி பானா ராவன்னா!

settaikkaran said...

//சிநேகிதன் அக்பர் said...

பிரியாணின்னா அம்புட்டு இஷ்டமா பாஸ்...//

யாருக்குத் தான் பிரியாணின்னா இஷ்டம் இருக்காது அண்ணே? ஆனா, இது பிரியாணியாலே வந்த கஷ்டம் பத்தின இடுகையாச்சே!

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிரியாணின்னு நம்பீஈஈஈஈஈஈ வந்தேன்//

த்சு..த்சு..ஏமாத்திப்புட்டேனா...?

//அனுஷ்கா படம் ஆறுதலா இருக்கு//

தெரிஞ்சுதான் அதை போட்டதே...! :-))

// தெலுங்கானா பிரிவில் தனி தமிழ்நாடு கேட்டு அதை அழகிரிக்கு கொடுத்து எல்லா பிரச்சனையும் தீர்த்து விடலாம் என நினைக்கிறாராம் மு.க//

நடந்தாலும் நடக்கும்! மன்னர் ஆட்சி தானே? :-)
மிக்க நன்றி!