Thursday, February 3, 2011

விடாது கருப்பு

ஜோதிட நிலையத்துக்குள் நுழைந்தபோது, அவர் மதிய உணவு டப்பாவுக்குள்ளிருந்த தயிர்சாதத்தை தேக்கரண்டியால் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

"வணக்கம் ஜோசியரே, என்னாச்சு, தயிர் சாப்பாட்டுக்குள்ளே புதையல் தேடறீங்களா?" என்று கேட்டவாறே நான் அமரவும், என்னுடன் வந்தவரும் உடனமர்ந்தார்.

"வா சேட்டை, சாதத்துக்குத் தொட்டுக்க ஊறுகாய் வைக்கச் சொல்லியிருந்தேன். வைச்சாளா இல்லியான்னு தேடிட்டிருக்கேன்," என்று அசடுவழிந்தார் ஜோசியர்.

"நீங்க எவ்வளவு பெரிய ஜோசியரு? டப்பாவைப் பார்த்ததுமே உள்ளே ஊறுகாய் இருக்கான்னு ஜோசியம் சொல்ல முடியாதா?" என்று நான் கேட்டதும் அவரது கண்கள் விருதகிரி விஜயகாந்த் போலச் சிவந்தன.

"சரி சரி, அப்புறமா சாப்பிட்டுக்கறேன். யாரோ வி.ஐ.பி.யைக் கூட்டிக்கிட்டு வரப்போறதா சொன்னியே? இவர்தானா?" என்று டப்பாவை மூடியபடியே என்னுடன் சென்றவரை ஏறிட்டு நோக்கினார்.

"ஆமா ஜோசியரே, இவரு யாரு தெரியுமா? கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இருக்காரே, அவரோட ஒண்ணு விட்ட தம்பி," என்று அறிமுகப்படுத்தினேன்.

"அப்படீன்னா இவரு பேரு எடியூர் சித்தப்பாவா?" என்று மொக்கையடித்தார் ஜோசியர். "ஒண்ணு விட்ட தம்பின்னு சொல்றே. முகஜாடை அப்படியே இருக்கே?"

"அது வந்து ஜோசியரே, எடியூரப்பா பொறந்து ஒரு வருஷம் கழிச்சு இவரு பொறந்தாரு, அதான் ஒண்ணு விட்ட தம்பின்னு சொன்னேன்," என்றேன் நான். "பேரு இடியூரப்பா"

"அது சரி, இவருக்கு தமிழ் தெரியுமா?"

"கொத்து!" என்றார் இடியூரப்பா.

"என்னது கொத்துன்னுறாரு? யாரைக் கொத்தணுமாம்?"

"இல்லை ஜோசியரே, கன்னடத்துலே கொத்துன்னா தெரியுமுன்னு அர்த்தம். இவருக்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்! ஆனா கன்னடத்துலே தான் பேசுவாரு!"

"எனக்கு தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி மூணு பாஷையும் தெரியும்," என்று பீற்றிக்கொண்டார் ஜோசியர். "வெயிலிலே வந்திருக்கீங்க! குடிக்கத் தண்ணி கொடுக்கட்டுமா?"

"பேக்கு!" என்றார் இடியூரப்பா.

"என்ன சேட்டை, வந்ததுலேருந்து விவகாரமாவே பேசிட்டிருக்காரு, நானா பேக்கு? கஞ்சிக்கோடு ஜோசியர் கல்யாணசுந்தரமுன்னா பாலக்காடு டிஸ்ட்ரிக்டே பதறிடும் தெரியுமா?" என்று உறுமினார் ஜோசியர்.

"அட நீங்க வேறே, கன்னடத்துலே பேக்குன்னா வேணுமுன்னு அர்த்தம் ஜோசியரே," என்று தலையிலடித்தபடி விளக்கினேன்.

"ஓ! அப்படியா?" என்று ஆசுவாசப்பட்ட ஜோசியர், "சொல்லு சேட்டை, இவருக்கு என்ன பிரச்சினையாம்?"

"இவரு அண்ணனுக்கு, அதாவது எடியூரப்பாவுக்குத் தான் பிரச்சினையாம். யாரோ அவருக்கு பில்லி சூனியம் வைச்சுக் கொல்லப்பார்க்குறாங்களாம். அறிக்கை கூட விட்டிருந்தாரே பார்க்கலியா?"

"அப்படியா? யாரு வச்சிருப்பாங்க?" என்று அதிர்ந்துபோய்க் கேட்டார் ஜோசியர்.

"இவங்களுக்கு கவர்னர் பரத்வாஜ் மேலே தான் சந்தேகம்! ஒரு நாளைக்கு இவங்க காதுலே விழுறா மாதிரியே அவரு ’பில்லி கோ சூப் பிலாவோ,’ன்னு சொன்னாராமே?" என்று எடுத்துக் கொடுத்தேன்.

"கஷ்டம்! சேட்டை, இந்தியிலே பில்லின்னா பூனைன்னு அர்த்தம். அவரு பூனைக்கு சூப்பு வைக்கச் சொல்லியிருக்காரு, இந்தப் பில்லி அந்தப் பில்லி சூனியமில்லை!" என்று விளக்கினார் ஜோசியர்.

"என்னா மனுசன், பூனைக்கு சூப்பு வைக்கிறாரு, மனுசனுக்கு ஆப்பு வைக்கிறாரு! சரி அது போகட்டும், இன்னொரு நாளைக்கு அவர் யார்கிட்டேயோ ’ஆகே சூனிய லகாக்கே நம்பர் டயல் கரோ,"ன்னு சொன்னாராமே? அதுக்கென்ன சொல்றீங்க?"

"நாசமாப்போச்சு, அவரு யாருக்கோ செல்போனிலே எஸ்.டி.டி பண்ணச்சொல்லியிருப்பாரு, ஹிந்தியிலே சூனியன்னா ஜீரோன்னு அர்த்தம். முதல்லே ஜீரோ போட்டு டயல் பண்ணுன்னு சொல்லியிருக்காரு!"

"அப்போ யாருதான் பில்லி சூனியம் வச்சிருப்பாங்க ஜோசியரே?"

"கவலைப்படாதே சேட்டை, எங்கிட்டே வந்திட்டீங்க இல்லே, நான் கவனிச்சுக்கிறேன். இவரு அண்ணனோட ஜாதகத்தைப் பார்த்து நாகதோஷம், செவ்வாய்தோஷம், சனிதோஷம், ஜலதோஷமுன்னு இருக்கிற எல்லா தோஷத்துக்கும் ஒரு சாந்தி பண்ணிரலாம்."

"பாவம், இவங்க சந்தோஷமும் அம்பேலாயிருச்சு ஜோசியரே. ஏதாவது பண்ணுங்க!"

"பண்றேன்! என்னை நல்லா கவனிச்சிப்பாங்களா? சொல்றபடி செய்வாங்களா? கேட்கிறதைக் கொடுப்பாங்களா?"

"மாடுதினி," என்றார் இடியூரப்பா.

"என்னது மாட்டுத்தீனியா? என்னைப் புண்ணாக்குன்னு சொல்லுறாரா இந்த ஆளூ?"

"ஐயோ ஜோசியரே, கன்னடத்துலே மாடுதினின்னா செய்யுறேன்னு அர்த்தம்!"

"சரி ஜாதகம் எங்கே?" என்று கேட்டு வாங்கினார் ஜோசியர். "என்னது ஜாதகம் ஜெர்மனிலே எழுதியிருக்கு?"

"அது இங்கிலீஷ்லே தானிருக்கு! நீங்கதான் தலைகீழாப் பார்த்திட்டிருக்கீங்க!"

"ஓ! மூக்குக்கண்ணாடி கொண்டுவர மறந்திட்டேன் சேட்டை!" என்று ஜாதகத்தைக் கூர்ந்து பார்த்தார் ஜோசியர். "எல்லாம் நல்லாத்தானே இருக்கு. சனிமேடு, சுக்கிரமேடு எல்லாமே அமர்க்களமா இருக்கே?"

"எதுக்கும் சூளைமேடு எப்படியிருக்குன்னு பாருங்களேன்!"

"சேட்டை, விளையாடாதே! நான் ஒரு தகடு தர்றேன். அதைக் கொண்டு போய் வீட்டுலே மொட்டை மாடியிலே மூணு அடி தோண்டி புதைச்சா ஒரு காத்து கருப்பு கூட அண்டாது."

"சரி ஜோசியரே! அப்பாலே...?"

"இந்தப் பில்லி சூனியம் பண்ணுறவங்க, தலை சீவும்போது கீழே விழுற மயிரை எடுத்திட்டுப்போயி சுடுகாட்டுலே பூஜை பண்ணி மந்திரிச்சிருவாங்க! ஜாக்கிரதையா இருக்கணும்!"

"அவர் தலையிலே கீழே விழுற அளவுக்கு பெரிசா இல்லை ஜோசியரே! சொல்லப்போனா, பெங்களூருவிலே ரெண்டாவது ஏர்போர்ட்டுக்கே இடம் லீஸ்லே விடலாம். இருந்தாலும் இனிமே அவரு தலையே சீவக்கூடாதுன்னு சொல்லச் சொல்லிடறேன்!"

"அவரு குளிக்கும்போது சோப்பு, ஷாம்பூ எதுவும் போடாமப் பார்த்துக்கோங்க! இல்லாட்டி தண்ணியோட மயிர் போச்சுன்னா பெரிய ஆபத்து!"

"கவலையை விடுங்க, இனிமே அவரு குளிக்கவே மாட்டாரு!"

"நடக்குறபோது அவரு காலடியிலே ஒட்டுற தூசியைக் கூட யாராவது எடுத்துட்டுப்போயி சூனியம் வச்சிருவாங்க!"

"இனிமே அவரு வீல்-சேரிலே தான் போகணுமுன்னு சொல்லிடலாமா ஜோசியரே?"

"அவருக்கும் வாரிசுங்க இருக்காங்களாமே, அவங்களே அவரை வீல்-சேரிலே உட்கார வச்சிருவாங்க. நீ ஏன் அவசரப்படுறே சேட்டை? இனிமே அவரு எங்கே போனாலும் யாராவது ரெண்டு பேரு தூக்கிட்டுத்தான் போகணுமுன்னு சொல்லிடு. ஒரு பில்லி சூனியம் அண்டாது."

"சரிங்க ஜோசியரே!"

"அப்புறம், தினமும் அவரு நரிமுகத்துலே விழிக்கணும். அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க சேட்டை!"

"நரி?" என்று இடைமறித்தார் இடியூரப்பா.

"யெஸ்! நரி மீன்ஸ் ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்!" என்று விளக்கிக் கூறினேன்.

"சேட்டை, உங்கலுக்கு பெங்கலூருவிலே உத்யோகம் வாங்கித்தரட்டுமா?" என்று கேட்டார் இடியூரப்பா.

"யோவ் இடியூரப்பா, போனாப்போகுதுன்னு ஒத்தாசை பண்ணினா, நரிக்கு பதிலா என் மூஞ்சியிலே முழிக்க வைக்கலாமுன்னா பார்க்குறே? ஜோசியரே, இந்தாளை சும்மா விடாதீங்க, உங்க சம்சாரம் அனுப்பின தயிர்சாதத்தைக் கொடுங்க, அப்போத்தான் இந்தாளுக்கு புத்தி வரும்...!" என்று ஆத்திரத்தோடு கூறினேன்.

"பேடா..பேடா...நானு பர்தினி...நானு பர்தினி.." என்று எழுந்து ஓடத்தொடங்கினார் இடியூரப்பா.

"என்னய்யா சொல்லிட்டே ஓடுறாரு?"

"பட்டினியே கிடந்தாலும் உங்க வீட்டு சமையலைச் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டுப்போறாரு!" என்றேன் நான்.

36 comments:

Unknown said...

சேட்டை தாங்கல.....

மதுரை சரவணன் said...

சிரிப்பு வருகிறது.. சூப்பர். வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது said...

// அது இங்கிலீஷ்லே தானிருக்கு! நீங்கதான் தலைகீழாப் பார்த்திட்டிருக்கீங்க!"//

//அவருக்கும் வாரிசுங்க இருக்காங்களாமே, அவங்களே அவரை வீல்-சேரிலே உட்கார வச்சிருவாங்க. நீ ஏன் அவசரப்படுறே சேட்டை? //

தாங்கலைய்யா ...பாவி..பாவி ....மகா பாவி... :)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

சூப்பரா இருக்கு ஸார், உங்களின் இந்தப் பதிவு. நள்ளிரவில் தூக்கம் வராமல் படித்து விட்டு ஒரே சிரிப்பு. என் மனைவு எழுந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். சிரிக்க வைக்கும் தங்களுக்கு என் நன்றி !

Philosophy Prabhakaran said...

// "நீங்க எவ்வளவு பெரிய ஜோசியரு? டப்பாவைப் பார்த்ததுமே உள்ளே ஊறுகாய் இருக்கான்னு ஜோசியம் சொல்ல முடியாதா?" என்று நான் கேட்டதும் அவரது கண்கள் விருதகிரி விஜயகாந்த் போலச் சிவந்தன. //

செம கொஸ்டின்...!

Chitra said...

"பேடா..பேடா...நானு பர்தினி...நானு பர்தினி.." என்று எழுந்து ஓடத்தொடங்கினார் இடியூரப்பா.

"என்னய்யா சொல்லிட்டே ஓடுறாரு?"

"பட்டினியே கிடந்தாலும் உங்க வீட்டு சமையலைச் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டுப்போறாரு!" என்றேன் நான்.



.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... தை மாசம், உச்சி வெயிலு மண்டையை புளக்குதுனு சொல்லிட்டாரே....

வெங்கட் நாகராஜ் said...

எல்லா இடத்திலேயும் ஒரே காமெடி பீஸா இருக்குங்க பய புள்ளங்க! சேட்டை ஐயா, நேற்று தினமலர்ல வேற ஒரு செய்திகூட படிச்சேன் இவர் பத்தி!

மங்குனி அமைச்சர் said...

"சேட்டை, விளையாடாதே! நான் ஒரு தகடு தர்றேன். அதைக் கொண்டு போய் வீட்டுலே மொட்டை மாடியிலே மூணு அடி தோண்டி புதைச்சா ஒரு காத்து கருப்பு கூட அண்டாது."////

எங்கையா உட்கார்ந்து யோசிப்ப??????

Chittoor Murugesan said...

நல்லாவே இருக்கு. கீப் இட் அப்!

சி.பி.செந்தில்குமார் said...

<<<"யெஸ்! நரி மீன்ஸ் ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்!" என்று விளக்கிக் கூறினேன்.

super

மாணவன் said...

வழக்கம்போலவே உங்க ஸ்டைலில் பதிவு கலக்கல் பாஸ்....

settaikkaran said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

சேட்டை தாங்கல.....//

ஹிஹி! நன்றி நண்பரே!

settaikkaran said...

//மதுரை சரவணன் said...

சிரிப்பு வருகிறது.. சூப்பர். வாழ்த்துக்கள்//

வாருங்கள் நண்பரே! மிக்க நன்றி!! :-)

settaikkaran said...

//கக்கு - மாணிக்கம் said...

தாங்கலைய்யா ...பாவி..பாவி ....மகா பாவி... :)))))//

ரொம்பக் கொடுமைப்படுத்திட்டேனோ? :-)
மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//VAI. GOPALAKRISHNAN said...

சூப்பரா இருக்கு ஸார், உங்களின் இந்தப் பதிவு. நள்ளிரவில் தூக்கம் வராமல் படித்து விட்டு ஒரே சிரிப்பு. என் மனைவு எழுந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். சிரிக்க வைக்கும் தங்களுக்கு என் நன்றி !//

ஆஹா! சிரிச்சது இருக்கட்டும், ஏன் சிரிச்சீங்கன்னு வீட்டுலே சொல்லிடுங்க! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Philosophy Prabhakaran said...

செம கொஸ்டின்...!//

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//Chitra said...

.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... தை மாசம், உச்சி வெயிலு மண்டையை புளக்குதுனு சொல்லிட்டாரே....//

அட, 16 வயதினிலே படத்தை இன்னும் ஞாபகத்துலே வச்சிருக்கீங்க போலிருக்கே! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//வெங்கட் நாகராஜ் said...

எல்லா இடத்திலேயும் ஒரே காமெடி பீஸா இருக்குங்க பய புள்ளங்க! சேட்டை ஐயா, நேற்று தினமலர்ல வேற ஒரு செய்திகூட படிச்சேன் இவர் பத்தி!//

அதை ஏன் கேட்கறீங்க? இவங்க பண்ணுற காமெடியைப் பார்த்தா, நானெல்லாம் எதுக்கு வலைப்பதிவு எழுதணுமுன்னு தோணுது! :-)
மிக்க நன்றி ஐயா!

settaikkaran said...

//மங்குனி அமைச்சர் said...

எங்கையா உட்கார்ந்து யோசிப்ப??????//

மொட்டை மாடியிலே தான்! மிக்க நன்றி மங்குனி! :-)

settaikkaran said...

//சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நல்லாவே இருக்கு. கீப் இட் அப்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//சி.பி.செந்தில்குமார் said...

super//

மிக்க நன்றி தல! :-)

settaikkaran said...

//மாணவன் said...

வழக்கம்போலவே உங்க ஸ்டைலில் பதிவு கலக்கல் பாஸ்...//

ஆஹா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

Admin said...

அசத்துறிங்க... நல்ல பதிவு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலக்கல்... வாழ்த்துக்கள்...

சேலம் தேவா said...

//"நீங்க எவ்வளவு பெரிய ஜோசியரு? டப்பாவைப் பார்த்ததுமே உள்ளே ஊறுகாய் இருக்கான்னு ஜோசியம் சொல்ல முடியாதா?" என்று நான் கேட்டதும் அவரது கண்கள் விருதகிரி விஜயகாந்த் போலச் சிவந்தன.//

செம கலாய்ப்பு..!! :))

இந்த பதிவிலிருந்து அறியப்படும் நீதி : சேட்டை தமிழ்,ஆங்கிலம்,கன்னடம்,ஹிந்தி எல்லாம் தலைகீழா படிப்பாரு... ஹி.ஹி..ஹி...

Anonymous said...

செம சேட்டை

Anonymous said...

கலக்கலா இருக்கு பாஸ்

Anonymous said...

நகைச்சுவை இழை தொடர்ந்து இருக்கிறது பதிவு முழுவதும்

புலிக்குட்டி said...

அப்ப உங்களுக்கு ஹிந்தி,கன்னடம்,இங்கிலிஷ் எல்லாம் தெரியும்னு சொல்லுங்க.

Madurai pandi said...

என்ன இருந்தாலும் எங்க ஊரு முதலமைச்சர கலைச்சதுக்கு எனது கண்டனங்கள்.. இதற்காக உங்களுக்கு சூனியம் வைக்கப்படும்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

settaikkaran said...

//சந்ரு said...

அசத்துறிங்க... நல்ல பதிவு//

மிக்க நன்றி நண்பரே!

settaikkaran said...

//தோழி பிரஷா said...

கலக்கல்... வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி!

settaikkaran said...

//சேலம் தேவா said...

செம கலாய்ப்பு..!! :))

இந்த பதிவிலிருந்து அறியப்படும் நீதி : சேட்டை தமிழ்,ஆங்கிலம்,கன்னடம்,ஹிந்தி எல்லாம் தலைகீழா படிப்பாரு... ஹி.ஹி..ஹி...//

தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க! தலைகீழாப் படிக்கிறவரு ஜோசியரு! நானில்லே! :-)

மிக்க நன்றி!

settaikkaran said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம சேட்டை

கலக்கலா இருக்கு பாஸ்

நகைச்சுவை இழை தொடர்ந்து இருக்கிறது பதிவு முழுவதும்//

ஆஹா! எனக்கு(ம்) நல்ல நேரம் ஆரம்பிச்சிருச்சு போலிருக்கு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//புலிக்குட்டி said...

அப்ப உங்களுக்கு ஹிந்தி,கன்னடம்,இங்கிலிஷ் எல்லாம் தெரியும்னு சொல்லுங்க.//

ஐயையோ! எனக்குத் தமிழே தகராறுங்க! ஏதோ கேட்டுக் கேட்டு ஒப்பேத்தியிருக்கேனுங்க! மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//Madurai pandi said...

என்ன இருந்தாலும் எங்க ஊரு முதலமைச்சர கலைச்சதுக்கு எனது கண்டனங்கள்.. இதற்காக உங்களுக்கு சூனியம் வைக்கப்படும்..//

எதுக்கு அவசரப்படுறீங்க, வலையுலகத்துலே சேட்டைக்காரன்னு சொன்னாலே, சொந்த செலவுலேயே சூனியம் வச்சிக்கிறவன்னு எல்லாரும் சொல்லுவாங்க! :-)

மிக்க நன்றி! :-)