Friday, October 5, 2012

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது



வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது
வயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது
மின்சாரத்தைத் தேடுது
ஏறாதே பில்லு! போதாதோ சொல்லு!
கரண்ட்டில்லா ஊரு! கரையேத்த யாரு?
வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது



ஏகப்பட்ட லைட்டு மாட்டிவைத்தபோதும்
இருட்டில் நாளும் இருக்குது வீடு
சீலிங் ஃபேனும் இருக்கு! ஃபீலிங் இல்லை நமக்கு!
இரவில் புழுக்கம் பகலிலே சூடு!
சீலிங் ஃபேனும் இருக்கு! ஃபீலிங் இல்லை நமக்கு!
இரவில் புழுக்கம் பகலிலே சூடு!

வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது

கிரைண்டரிலே நாமும் மாவரைச்சு மீண்டும்
இட்டிலி தோசை தின்பதெந்த நாளோ?
மிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்
மிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ?
மிக்ஸியிலே தேங்காய் சட்டினியை அரைப்போர்
மிகவும் அதிர்ஷ்டம் இருக்கிற ஆளோ?

வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது

தீமையிலும் இருக்கு நல்லதொண்ணு நமக்கு
தொடர்கள் பார்த்து அழவில்லை யாரும்
பார்க்குப்பக்கம் போனா வாக்கிங் வரும் கூட்டம்
என்னமோ புண்ணியம் மின்வெட்டுக்குச் சேரும்
பார்க்குப்பக்கம் போனா வாக்கிங் வரும் கூட்டம்
என்னமோ புண்ணியம் மின்வெட்டுக்குச் சேரும்

வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது
வயரிங் இல்லாக் கனெக்‌ஷன் இது
மின்சாரத்தைத் தேடுது
ஏறாதே பில்லு! போதாதோ சொல்லு!
கரண்ட்டில்லா ஊரு! கரையேத்த யாரு?
வால்டேஜ் இல்லா விளக்கிது
வெளிச்சத்தைத் தேடுது