Thursday, December 9, 2010

மண்-"மத" வம்பு!

(இது "கமல"ர்களுக்குப் புரியும் என்று தான் எழுதியிருக்கிறேன்!)

கவிதைகளென்றுதான் காதினில் ஈயம்
கலந்து கொட்டிடும் மாந்தரைக் கண்டால்
கண்கள் மூடிடும் பெருவரம் வேண்டும்!
ஆனையின் சாணியை மிதித்துபோலே
அருவருப்பின்றிச் சென்றிடல் வேண்டும்

அழுக்குகள் எழுத்தாய் வருகிறபோழ்தில்
அமைதியாய் ஒதுங்கிடும் பொறுமையும் வேண்டும்
இருக்கிற சரக்கை விரிக்கிற அவர்மேல்
இரக்கம்கொள்கிற ஈரமும் வேண்டும்

மேதை நானெனும் பேதையர் பேச்சை
மெத்தனமாகவே கேட்டிடல் வேண்டும்
தானே அனைத்தும் அறிந்தவனென்று
தலைக்கனம் மிகுந்தோர் தம்பட்டமிட்டால்
போய்வா என்றவர் இருப்பிடம் விலகும்
பொன்னான குணமும் வாய்த்திடல் வேண்டும்

நாளும் நடிப்பு நாவில் நெருப்பெனும்
நச்சுப் பாம்பினை ஒறுத்தல் வேண்டும்
சொல்வது ஒன்றாய் செய்வது வேறாய்
சுயநலம்பேசும் மனிதர்கள் சொல்லைச்
சுட்டுப்பொசுக்கிடும் நெருப்பும் வேண்டும்

இப்படிப் பலதும் தரவேண்டும் என
எத்தனையோ நாட்கள் நோம்பு இருந்தேன்
ரதமேறி வருவாள் ராஜலட்சுமியென
சீக்கிரமாய்ப் போனேன் சீனிவாச அய்யங்கார் ஊருக்கு

பரமக்குடியர்களைப் பழித்திடுமொருவனின் ஊராம்
பரமக்குடி எங்கும் பார்த்தேன் சுவரொட்டி
கோவணங்கட்டிய சப்பாணிகள் பலர்
கூட்டம் கூட்டமாய்ப் போவது கண்டேன்
பிட் படங்களின் போஸ்டர்கள் வீட்டில்
சட்டம்போட்டு மாட்டியிருந்தன
அண்ணனின் ஆளுயரப் போஸ்டரின் மேலே
ஆணுறைமாலைகள் போட்டிருந்தார்கள்

மூன்றோ நாலோ முடிந்தவரை மனைவியரைத் தேற்று
முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்து வாழ்க்கையை ஒப்பேற்று
ஊருக்கு இளைத்த பிள்ளையார்கோவில் ஆண்டியைத் தூற்று!

வரவர கவிதை எழுதித் தொலைப்பவர்
வகைதொகையில்லாமல் மிகமிக அதிகம்
வசூல்ராஜாவே உனக்கு மட்டும் வாட்டசாட்டமாய்
கவிதைப்பொருள் கிடைப்பதெப்படி?
ஆழ்வார்பேட்டையில் அரிசிமண்டியில்
சில்லறையாய் யாரும் விற்கிறார்களோ?
வரைமுறையின்றி வார்த்தையைச் செலவழித்து
வாழுமனிதர் தொழும் தெய்வந்தனை இகழ்ந்து
வக்கிரம்குழைத்துக் கவிதை புனைபவருமுண்டோ?
நம்பிக்கையற்றதனாலேயே நம்புவோர் மனதில்
நஞ்சம்பினைத் தொடுக்கிற கோழையருமுண்டோ?
என்னையும் அதுபோலாக்கு கமலானந்தாவே!
ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் நமோஸ்துதே!

23 comments:

சென்னை பித்தன் said...

பிரமாதம் போங்க!

ரிஷபன்Meena said...

அவருக்கு இதெல்லாம் வியாபார உத்திகளில் ஒன்று. இவருடைய மருதனாயகத்துக்கு பைனான்ஸ் பண்ணியவர் இப்போ அட்ரஸ் இல்லாது அலைகிறார்.

எல் கே said...

சேட்டை கவிதை அட்டகாசம். அவருக்கு இதென்ன புதிதா ?? கேட்டால் இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பார் இந்தப் போலி நாத்திகர்

sathishsangkavi.blogspot.com said...

சேட்டை புரிஞ்சுது புரிஞ்சுது...

அகல்விளக்கு said...

நச்....

சிநேகிதன் அக்பர் said...

பிறர் மனங்களை புண்படுத்தாமல் இருப்பது சகல கலா வல்லவருக்கு தெரியாதா என்ன?!

vasu balaji said...

ம்கும் அவருக்கு கட்டஞ்சாயாவோ என்னமோ உமக்கு சேட்டைஸ்ரேயாதான்:))

வைகை said...

ங்கொய்யால புரியுமா அவெங்களுக்கு?!!!!

ஜெய்லானி said...

அட்டகாசம் :-)

ஜெய்லானி said...

அட்டகாசம் :-)

மங்குனி அமைச்சர் said...

அசத்தல் ........
சேட்டை உனக்கு கவிதைகூட சின்னதா எழுதவராதா???? எங்க ஒரு ஹைக்கூ சொல்லு

M Arunachalam said...

Nice retort.

அறிவு GV said...

உங்க பெயர் மாதிரியே கவிதையும் செம செட்டியா இருக்கு. இத அப்படியே அந்த (ஸ்திரீ) லோக நாயகனுக்கு அனுப்பி வைங்க. உறைக்குதான்னு பாப்போம்.

Sindhan R said...

மாற்று வலைத்தளம் நல்ல விவாதத்தை துவக்கியுள்ளது. ஆனால், உங்கள் பர்வை வேறாக இருக்கிறது. இணையதளத்தில் விவதங்கள் நடத்தவேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறேன்.

maattru.blogspot.com

manuneedhi said...

vegu seekkiram, avare ezhudhi, avare pesi, avare iyakki, avare paadi, avare nadithu, AVARE PARKUM padumondru varalaam...adhuvum oscar poyi avarukku avare award koduthu avare vaangum naaL varukirathu......

manuneedhi said...

vegu seekkiram, avare ezhudhi, avare pesi, avare iyakki, avare paadi, avare nadithu, AVARE PARKUM padumondru varalaam...adhuvum oscar poyi avarukku avare award koduthu avare vaangum naaL varukirathu......

வெட்டிப்பேச்சு said...

//மூன்றோ நாலோ முடிந்தவரை மனைவியரைத் தேற்று
முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்து வாழ்க்கையை ஒப்பேற்று
ஊருக்கு இளைத்த பிள்ளையார்கோவில் ஆண்டியைத் தூற்று!//

உமக்கு ரொம்பத்தான் சேட்டை சாமி..

Anonymous said...

Aaha.. Very Nice :)

MANO நாஞ்சில் மனோ said...

கிருஷ்ணா சாமிக்கு போனை போடுலே,

ஆட்டோவை ரெடி பண்ணுலே....:]]

Unknown said...

சூப்பர் கவிதை

சமுத்ரா said...

அவரை சொல்கிறீர்கள்..உங்கள் பதிவும் அதே தரத்தில்
இருக்கிறதே

ரிஷபன் said...

வாழுமனிதர் தொழும் தெய்வந்தனை இகழ்ந்து
வக்கிரம்குழைத்துக் கவிதை புனைபவருமுண்டோ?

அவரவர் விதிப்படி!

Unknown said...

seruppadi kamalukku puriyumaa?