குப்பைத்தரைமீது குத்திட்டிருந்தபடி
கூவித்தினசரியும் பூவிற்கும் பெண்ணவளே
அழுந்தத்தலைசீவி அழகாய்ப்பொட்டுமிட்டு
அடர்ந்தகூந்தலிலே அணிந்திடுவாள் மலர்ச்சரத்தை
மாலைப்பொழுதினிலே பணிமுடிந்துதிரும்புகிற
மாதர் அவளிடத்தில் பூவாங்கிச் சூடிடுவர்
கூடைமலர் விற்றபின்னே நடைமேடைதனிலிருக்கும்
குழாயில் முகம்கழுவி குங்குமத்தை அழித்திடுவாள்
தலையிலணிந்தபூவைத் தரைமேல்வீசிவிட்டு
தளர்ந்தநடையுடனே தன்வழியே சென்றிடுவாள்
காலிக்கூடைதனைக் கைம்பெண்சுமந்துசெல்வாள்
கனத்தமனத்துடனே கண்ணீர்மல்கிடுவாள்
Tweet |
4 comments:
இந்த சமுதாயத்த செருப்பால அடிச்சா கூட திருந்தாது.. அதனாலதான் இப்டி வைக்கரத்தும், அழிக்கறதும்
அருமையான நெஞ்சைத்தொடும் கவிதை.
//இந்த சமுதாயத்த செருப்பால அடிச்சா கூட திருந்தாது.. அதனாலதான் இப்டி வைக்கரத்தும், அழிக்கறதும்//
உண்மைதானுங்க! தாம்பரம் ஸ்டேஷனிலே நான் கண்ணாலே பார்த்தேன் இந்தக்கொடுமையை! நன்றிண்ணே!
//அருமையான நெஞ்சைத்தொடும் கவிதை.//
ரொம்ப நன்றிக்கா
Post a Comment