Wednesday, February 10, 2010
அடையாளம்
குப்பைத்தரைமீது குத்திட்டிருந்தபடி
கூவித்தினசரியும் பூவிற்கும் பெண்ணவளே
அழுந்தத்தலைசீவி அழகாய்ப்பொட்டுமிட்டு
அடர்ந்தகூந்தலிலே அணிந்திடுவாள் மலர்ச்சரத்தை
மாலைப்பொழுதினிலே பணிமுடிந்துதிரும்புகிற
மாதர் அவளிடத்தில் பூவாங்கிச் சூடிடுவர்
கூடைமலர் விற்றபின்னே நடைமேடைதனிலிருக்கும்
குழாயில் முகம்கழுவி குங்குமத்தை அழித்திடுவாள்
தலையிலணிந்தபூவைத் தரைமேல்வீசிவிட்டு
தளர்ந்தநடையுடனே தன்வழியே சென்றிடுவாள்
காலிக்கூடைதனைக் கைம்பெண்சுமந்துசெல்வாள்
கனத்தமனத்துடனே கண்ணீர்மல்கிடுவாள்
4 comments:
உங்களது பொன்னான நேரத்தில் ஒரு துளியை, இங்கே கருத்திடுவதற்காகச் செலவிட முன்வந்தமைக்கு எனது நன்றிகள்!
உங்களது பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாமல் போனால், ப்ளீஸ், கோவிச்சுக்காதீங்க! பிகாஸ், பேஸிக்கலி ஐயம் ய சோம்பேறி....!
தமிழ்மணம் ஓட்டுக்காக நானும் மெனக்கெடுவதில்லை; நீங்களும் மெனக்கெட வேண்டாம் என்று வேண்டுகிறேன். நன்றி!!
இந்த சமுதாயத்த செருப்பால அடிச்சா கூட திருந்தாது.. அதனாலதான் இப்டி வைக்கரத்தும், அழிக்கறதும்
ReplyDeleteஅருமையான நெஞ்சைத்தொடும் கவிதை.
ReplyDelete//இந்த சமுதாயத்த செருப்பால அடிச்சா கூட திருந்தாது.. அதனாலதான் இப்டி வைக்கரத்தும், அழிக்கறதும்//
ReplyDeleteஉண்மைதானுங்க! தாம்பரம் ஸ்டேஷனிலே நான் கண்ணாலே பார்த்தேன் இந்தக்கொடுமையை! நன்றிண்ணே!
//அருமையான நெஞ்சைத்தொடும் கவிதை.//
ReplyDeleteரொம்ப நன்றிக்கா