01. மெர்சலாயிட்டேன்
பிரதமர் மோடியின் ‘ஸ்வச் பாரத் திட்டம்’ பேசப்பட்ட நிலையில், தமிழகத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற படம் ‘ஜோக்கர்’ (எனக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம்). அந்தப் படத்துக்கு மத்திய அரசு விருது அளித்தது. காரணம், இன்று இந்தியாவில் அப்படத்தில் சித்தரிக்கப்பட்டதுபோல பல்லாயிரம் கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே, அரசு குறித்த நேரடியானதும் மறைமுகமானதுமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், அந்தப் படத்துக்கு ‘சிறந்த படம்’ என்ற மகுடத்தைச் சூட்டுவதில் யாதொரு தயக்கமும் அரசு காட்டியதாகத் தெரியவில்லை.
‘மெர்சல்’- சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற சிலர் பரப்புகிற புரளிகளைக் கையாண்டு வசனங்கள் எழுதுவது எவ்வளவு அபத்தமான அணுகுமுறை என்பதை நடைமுறையில் நிரூபித்த ஒரு படமாகத் திகழப்போகிறது. எதையும் சரிபார்க்காமல், மிக அலட்சியமாக வசனம் எழுதுகிற தமிழ்த் திரைப்படவுலகத்தின் சில இயக்குனர்களுக்கும் வசனகர்த்தாக்களுக்கும், இந்தப் படம் எதிர்கொண்ட கண்டனங்களும், இறுதியில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட வேண்டிய அளவுக்கு ஏற்பட்ட சூழல்களும் ஒரு படிப்பினையாகத் திகழும்.
அரசாங்கங்கள் குறித்த விமர்சனங்கள் என்பதுதான் கருத்துச் சுதந்திரமே தவிர, விபரீதமான கருத்துக்களைப் பரப்புவது அல்ல. அந்த விதத்தில் வெறும் கண்டனங்களின் மூலம், படத்தயாரிப்பாளர்களுக்கு தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பளித்திருப்பதும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
வலைப்பதிவுகளிலும் சரி, முகநூலிலும் சரி, எதையாவது பிதற்றிவிட்டு, கேள்விகேட்டால் பதிலுமளிக்காமல் பதுங்கிறவர்கள் நிரம்பவே இருக்கிறார்கள். இவர்களின் பொறுப்பின்மையை திரைப்படத்துறையும் பின்பற்றாமல், முக்கியமான பிரச்சினைகள் குறித்து வசனங்களோ காட்சிகளோ அமைக்கும்போது, ஒரு சுய கட்டுப்பாட்டுடன், பாரபட்சமின்றி முயற்சி செய்தால் அது அவர்களது படத்துக்கு நிச்சயம் அதிகப்படியான சிறப்பைச் சேர்க்கும்.
தமிழக பாஜக ‘கருத்துச் சுதந்திரத்தை அடக்குகிறது’ என்று பல அரசியல் கட்சிகள் கூச்சலிடுவது வேடிக்கை. ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதற்காக, மதுரை தினகரன் அலுவலகத்துக்குள்ளே அத்துமீறிப் புகுந்து, அங்கிருந்த சில ஊழியர்களை அடித்தும் எரித்தும் கொன்ற தி.மு.க; இந்திய ஜனநாயகத்தில் எமர்ஜென்ஸி என்ற அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தி, பத்திரிகை ஆசிரியர்களைச் சிறையில் அடைத்து, பத்திரிகைகளை முடக்கிய காங்கிரஸ்; மே.வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது எண்ணற்ற பத்திரிகையாளர்களைக் கொன்ற கம்யூனிஸ்டுகள் - என கிளம்பியிருக்கிற இவர்களின் கடந்தகாலம் வரலாற்றின் கருப்புப்பக்கங்களாய் இன்னும் நிலைத்திருக்கிறது.
02. பாத்ஷாநாமா
தாஜ்மஹால் இடுகையின் முதல் மூன்று பகுதிகளை எடுத்துக் கொண்டு, ஒரு முன்னாள் வரலாற்று ஆசிரியரிடம் கொண்டுபோனேன். வாசித்துவிட்டு சற்றே புருவம் சுருக்கியவர், ’இது ரொம்ப ஸாஃப்ட்! ஷாஜஹானின் நிஜமுகம் தெரிய வேண்டுமென்றால் பாத்ஷா நாமா படிக்கணும். ரத்தம் கொதிக்கும்’ என்று அறிவுரைத்தார். அவரிடமிருந்ததோ உருதுவில் என்பதால் எனக்குப் பயனில்லை. ஒரு வழியாக ஆங்கில மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்து முதல் பத்துப் பக்கங்கள் வாசித்து முடிப்பதற்குள் ஒரு பக்கம் நிறைய குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன். இரண்டொரு நாட்கள் முன்பு அலைபேசி அழைப்பு....
‘இதை ஏன் ப்ளாகில் போடணும்? இதே நடையில் முழுமையாக எழுதியதும் ஒரு புத்தகமாகப் போடலாமே? தமிழில் புது முயற்சியாக இருக்குமே?’ என்றார்.
ஒரு நிமிடம் ‘தந்தன தந்தன தந்தன தந்தன....’ என்று பின்னணி கேட்க, வெள்ளையுடை தேவதைகள் ஆடுவதுபோல ஒரு கனா! ஆனால்....
‘முதலில் பிளாகில் எழுதுகிறேன் சார். அப்புறம் பார்க்கலாமே?”
‘உங்க விருப்பம்!’
ஆகவே, விரைவில் முதல் பகுதியை இங்கு காணலாம்.
ஒரு வேகத்தில் எழுதப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, கூகிள், சில ஆங்கிலப்புத்தகங்கள் ஆகியவற்றை வாசிக்கத்தொடங்கியபோது சில ஆச்சரியமான தகவல்களை அறிய நேர்ந்தது. அதில் ஒரு சில துளிகளை மட்டும் இங்கே பதிவிட விருப்பம்.
சில வரலாற்று ஆசிரியர்கள் அவுரங்கஜீப்பை விடவும் ஷா ஹானை கொடுங்கோலன் என்று கருதுகிறார்கள். இது முதல் ஆச்சரியம்.
மஹால் என்பது பொதுவாக அரண்மனையையே குறிக்கும் என்பதால், இது கையகப்படுத்தபட்ட ஒரு அரண்மனையாகவும் இருக்கலாம் என்பது இரண்டாவது ஆச்சரியம்.
இது தேஜோ லிங்கம் எனப்படுகிற சிவன் தலமாக இருந்ததாக சில மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே சில தரவுகளுடன் வாதிடுவது மூன்றாவது ஆச்சரியம்.
மேம்போக்காக, கேட்டறிந்த தகவல்களை சற்றே அகழ்ந்து பார்த்தால், தோண்டத் தோண்ட பல உண்மைகள் வெளிவரும் என்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது.
03. நகைச்சுவை
கிட்டாமணி- பாலாமணி வரிசையில் ‘வாராது வந்த வரதாமணி’ என்ற அடுத்த நகைச்சுவைக் கதை தயாராகிக் கொண்டிருக்கிறது.
‘இப்போதெல்லாம் நீங்கள் எழுதுகிற பொருளாதாரப் பதிவுகளே மிகவும் நகைச்சுவையாக இருக்கிறதே,’ என்று கலாய்த்தார் நான் சந்தித்த சகபதிவர். :-)
இந்த வலை எனக்கு அளித்திருக்கிற மிகப்பெரிய வரம், நான் அவர்களிடமிருந்து முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களுடன் இருக்கிறேன்; அதற்காக களத்தில் இறங்கிப் பணியும் ஆற்றுகிறேன் என்று தெரிந்தும் என்னுடன் தொடர்ந்து நட்புடன் பழகுகிற பல நல்ல நண்பர்கள்.
சிலர், பாவம், என்ன செய்வதென்பது என்று தெரியாமல், எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வந்து வசைபாடுகிறார்கள்.
அவரவர்க்குத் தெரிந்ததை, முடிந்ததைத்தானே அவரவர்கள் செய்வார்கள்? வாழ்த்துகள்.
Tweet |
19 comments:
புத்தகமாகத்தான் வரும், இங்கு இப்போ து இல்லை எண்டு சொல்லி விடப் போகிறீர்களோ என்று நினைத்தேன். இங்கு வரும் என்று சொல்லியிருப்பது மகிழ்ச்சி.
அதைவிட ஆவலாக 'வராது வந்த வரதாமணிக்கு'க் காத்திருக்கிறேன்!
+வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)
வலைப்பதிவு என்பதே அவரவர் கருத்துகளை வெளியிடத்தானே அதனால் எந்த பெரிய மாற்றமும் சம்பவிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்
தொடர்கிறேன் சேட்டைஜி...
துளசிதரன்: அட !! ரெண்டு இன்ட்ரெஸ்டிங்க் தொடர் வரப் போகுதா....சூப்பர் ஸார். ஆவலுடன் வெயிட்டிங்க்...
கீதா: சீனியர்!!! அடி பொளி போங்க!!! ரெண்டு கனஜோர் விருந்தா...ஒன்னு நார்த் இண்டியன் மத்தது ஸ்வுத் இந்தியனா அதுவும் தமிழ்நாடா...அதான் ஒன்னு தாஜ்மகால் பத்தி, அடுத்து 'வராது வந்த வரதாமணிக்கு'
தாஜ்மகால் இங்க போட்டுட்டு புக்கா போடுங்க...ஹிஹிஹிஹி
பாத்ஷா நாமா' ன்றத முதல்ல பாதுஷா நாமானு கண்ணு படிச்சுருச்சு..அட! பாதுஷா நாமாவளி எழுதியிருக்கீங்களோனு நினைச்சுட்டேன்..ஹிஹிஹிஹி
கீதா
நீங்க சொல்லியவை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன் தாஜ்மகால் பற்றி ஆனாலும் தீர்க்கமாய் ஆராய்ந்து வரும் பதிவுக்காக காத்திருக்கிறேன்
எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள்! ப்ளாக், தாஜ்மகால், வரதாமணி!
//ஸ்ரீராம்//
//புத்தகமாகத்தான் வரும், இங்கு இப்போ து இல்லை எண்டு சொல்லி விடப் போகிறீர்களோ என்று நினைத்தேன். இங்கு வரும் என்று சொல்லியிருப்பது மகிழ்ச்சி.//
அதற்கு இரண்டு காரணங்கள் ஸ்ரீராம்! முதலில், மொகலாய மன்னர்களைப் பற்றிய தொடர் என்றாலும், இது இஸ்லாமியர்களுக்கு விரோதமானது என்ற எண்ணம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. எனது நட்புவட்டம் நீங்கள் அறிந்ததே!
இரண்டாவது காரணம், ஏதேனும் தகவல்கள் தவறானது என்றால், உங்களைப் போன்றோர் சுட்டிக் காட்டுவீர்கள். திருத்திக்கொண்டு பிறகு புத்தகமாகப் போடலாம். அவ்வளவுதான்.
//அதைவிட ஆவலாக 'வராது வந்த வரதாமணிக்கு'க் காத்திருக்கிறேன்!//
ரொம்ப சீரியஸா எழுதி போரடிக்காதேன்னு நண்பர்கள் திட்டறாங்க ஸ்ரீராம்! அதான்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//Blogger Bagawanjee KA//
//+வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)//
வாங்க ஜோக்காளி சார்! நான் தான் ஓட்டுப்பட்டையையே எடுத்துவிட்டேனே! :-)
//G.M Balasubramaniam//
//வலைப்பதிவு என்பதே அவரவர் கருத்துகளை வெளியிடத்தானே அதனால் எந்த பெரிய மாற்றமும் சம்பவிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்//
உண்மை ஸார்! ஆனால், இயன்றவரை நேர்மையாகக் கருத்துக்களை வெளியிடுவது எழுதுகிறவர்களுக்கே ஒரு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அல்லவா? அதைத்தான் நம்மைப் போன்ற சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை சார்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
//நெல்லைத் தமிழன்//
//தொடர்கிறேன் சேட்டைஜி...//
வாங்க அண்ணாச்சி, வருகைக்கு நன்றி! :-)
//Thulasidharan V Thillaiakathu//
//துளசிதரன்: அட !! ரெண்டு இன்ட்ரெஸ்டிங்க் தொடர் வரப் போகுதா....சூப்பர் ஸார். ஆவலுடன் வெயிட்டிங்க்...//
ஸார் ஸார், கிட்டாமணி-பாலாமணி நான் ஏற்கனவே எழுதிட்டிருக்கிற தொடர்தான். அதுல புதுசா வரதாமணின்னு ஒரு கேரக்டர் எண்ட்ரி. அவ்வளவுதான். :-)
//கீதா: சீனியர்!!! அடி பொளி போங்க!!! ரெண்டு கனஜோர் விருந்தா...ஒன்னு நார்த் இண்டியன் மத்தது ஸ்வுத் இந்தியனா அதுவும் தமிழ்நாடா...அதான் ஒன்னு தாஜ்மகால் பத்தி, அடுத்து 'வராது வந்த வரதாமணிக்கு' //
ஒரு வித்தியாசம். முதலாவது நிறையவே Dry ஆக இருக்கும். இரண்டாவது வழக்கம்போல கிச்சுக்கிச்சுவாவது மூட்டும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.
//தாஜ்மகால் இங்க போட்டுட்டு புக்கா போடுங்க...ஹிஹிஹிஹி//
பார்க்கலாம். கடவுள் செயல்.
துளசிதரன் சார், கீதா மேம் இருவருக்கும் மிக்க நன்றி!
//Thulasidharan V Thillaiakathu//
//பாத்ஷா நாமா' ன்றத முதல்ல பாதுஷா நாமானு கண்ணு படிச்சுருச்சு..அட! பாதுஷா நாமாவளி எழுதியிருக்கீங்களோனு நினைச்சுட்டேன்..ஹிஹிஹிஹி //
கீதா மேம்! நீங்க அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் நிறைய வாசிக்கறீங்கன்னு நினைக்கிறேன். அதுலதான் இந்த மாதிரி வார்த்தையை வைச்சு நிறைய காமெடி பண்ணுவாங்க. :-)
//poovizi//
//நீங்க சொல்லியவை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன் தாஜ்மகால் பற்றி ஆனாலும் தீர்க்கமாய் ஆராய்ந்து வரும் பதிவுக்காக காத்திருக்கிறேன்//
அதான்! தீர்க்கமாக ஆராய்ந்து, பாரபட்சமில்லாமல் எழுதணும் என்பதால்தான் இவ்வளவு மெனக்கெடுகிறேன். கூடிய விரைவில் பதிவிட முடியுமென்று நம்புகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//kg gouthaman//
//எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள்! ப்ளாக், தாஜ்மகால், வரதாமணி!//
சார், எழுதாமல் இருந்தவனுக்கு போன் பண்ணி எழுதுங்க எழுதுங்கன்னு சொன்னவங்க நீங்க! உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் சார்!
Sir,
//‘வாராது வந்த வரதாமணி’// வரவேற்கப்பட வேண்டியது.
தாஜ்மகால் தேவையேயில்லாதது - எனக்கு, எங்களுக்கு, உங்களுக்கு, இந்த உலகத்தினருக்கு.
ஷாஜகான் ஒரு கொடுங்கோலர் என்று நானும் படித்திருக்கிறேன்.. அகபர் தவிர பிற முகமதிய மன்னர்கள் அனைவருமே கொடுங்கோல் தான் போலிருக்கிறது. ஆச்சரியங்களை அறிய ஆவலுடன்.
Post a Comment